என்னவோ தான் பெரிய யோக்கியன், தன் சாதியை எல்லாம் எங்கேயுமே சொல்வதில்லை என்பதுபோல் பிதற்றல் எல்லாம் எதுக்கு ஜெயமோகன்???
உலகத்திலே எத்தனையோ பேரு அறியாமையில் வாழ்றாங்க. வயதாக ஆக அறிவு வளரும் என்றோ, வயதானவங்க எல்லாரும் பண்போட நடந்துகொள்வார்கள் என்றோ நினைத்தால் நீங்கள் ஒரு அடி முட்டாள்!Biography
Nanjil Nadan was born in Veera Narayanamangalam in Kanyakumari District to Ganapathiya Pillai and Saraswathi Ammal
Biography
1962–1991
Jeyamohan was born on 22 April 1962 to S.Baguleyan Pillai and B.Visalakshi Amma in Arumanai, Nagercoil, Tamil Nadu. Baguleyan Pillai was an accounts clerk in the Arumanai registrar's office.
அதுவும் 70 வயதாகிடுச்சுனா தன்னைவிட வயதில் சிறியவர்களைவிட தனக்கு அனுபவம் ஜாஸ்தினு நினைத்துக்கொண்டு எகத்தாளமாகப் பேசுபவர்களை நம்ம சொந்த பந்தங்களிலேயே எளிதாகப் பார்க்கலாம். ஏன் நமக்குப் பாடம் எடுத்த அறிவில் சிறந்த பேராசிரியர்கள்கூட நாம் அவர்களைவிட வளர்ந்தபின்னும் அவர்களுக்குத்தான் அதிகம் தெரியும்னு சொல்லி பிதற்றுபவர்களை நாள்தோரும் பார்க்கத்தான் செய்றோம, சகிச்சுக்கிட்டுத்தான் போறோம். ஏன் நம்ம ஜெயமோகனின் தூரத்து சொந்தத்திலும் ஏன் பக்கத்து சொந்தத்தில்கூட இதுபோல் வயதான முட்டாள்கள் இருக்கத்தான் செய்றாங்க. இதெல்லாம் சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும்! ஆனால்தன்னைப் பெரிய மேதைனு நெனச்சுக்கிட்டு இருக்கவாக்குத்தான் தெரியமாட்டேன்கிறது!
முட்டாள்னு சுட்டிக்காட்ட இந்த மேதாவிக்கு எப்போவும் கெடைக்கிறது எவனாவது தி மு க காரன் தான். இதிலிருந்தே இந்த ஆள் என்ன ஒரு விசமினு தெரிந்துகொள்ளலாம்! வயதாக ஆக பித்தம் ஏறி மத வெறி பிடித்து அலையும் இந்துத்தவாக் காரன், வயசான பர்வெர்ட்டட் மலையாளிகள், பண்டாரங்கள், பக்திமான்கள் எல்லாம் இவரிடம் வந்து பிதற்றினால் அவர்களை, அவர்கள் அநாகரிக செயல்களை எல்லாம் கவனமாக வடிகட்டி ஒதுக்கிவிட்டு அதுபோல் எதுவும் நடக்காதமாரி ஊரை ஏமாற்றும் அறிவுஜீவிதான் இந்த ஜெயமோகன்!
ஒரு வயதான ஒரு ஆளு என்னத்தையோ கேள்வினு கேட்டு தனக்கு நெறையாத் தெரியும்னு காட்டியிருக்காரு. சரி, இந்தாளு ஏதோ பிதற்றுகிறான்னு பேசாமல் ஒதுங்கிப் போறதை விட்டுப்புட்டு தான் அவனை கிழிச்ச கிழிய ஒரு பதிவாப்போட்டு தன்னைப் பெரிய மேதை, கோவக்காரன், னு பெருமையாகக் காட்டிக்கிறார் இந்த மேதாவி. இதுக்கெல்லாம் மேதைகளுக்கு எப்படிப்பா நேரம் கெடைக்கிது!
இவரு வெட்டி முறிச்சதைப் பார்த்து ரசிங்கப்பா!
நான் முடிவுசெய்தேன். இனி இந்த ஆளை இப்படி விடக்கூடாது. நான் இங்கே விருந்தினர் என்பதல்ல முக்கியம். இந்த மொண்ணைத்தனத்தை எங்கே நிறுத்துவது என்பதுதான். என் கோபம் தலைக்குள் அமிலம்போல நிரம்பியது. நாஞ்சில்நாடன் எழுந்து செல்லும்போது அவர் முகத்திலிருந்த கசப்பை நினைவுகூர்ந்தேன். சடென்று என் கட்டுப்பாடு அறுந்தது
‘வாய மூடுங்க..என்னய்யா நினைச்சிருக்கே நீ? நீ யாரு? ஒரு புத்தகம் ஒழுங்கா படிச்சிருப்பியா? உன்னோட வாழ்க்கையிலே ஒரு எழுத்தாளன நேரில பாத்திருக்கியா? உன் எதிர்ல உக்காந்திருந்தது நாஞ்சில்நாடன்… அவரு யாருன்னு தெரியுமா உனக்கு? தெரியுமாய்யா? அவருக்கு நீ கைய நீட்டி கிளாஸ் எடுக்கிறே…அவர் சொல்ற ஒரு வார்த்தைய நீ கேக்க ரெடியா இல்ல…ஆனா நீ கொண்டுவந்து அவர் மேல போடுற குப்பைய அவர் சகிச்சிட்டிருக்கணும் இல்ல?’ என்றேன்
அவர் எதிர்பார்க்கவில்லை. வாயடைந்துபோய் ‘நீ பாத்துப்பேசணும்…நான் …நான் பேசத்தான் வந்தேன்’ என்றார்
‘என்னய்யா பேசணும்? பேச நீ யாரு? நாஞ்சில்நாடன் முன்னாடி இப்டி உக்காந்து பேச நீ யாருய்யா? வாய அளக்கிறியா? ஒருத்தர் முன்னாடி வந்து உக்காருறதுக்கு முன்னாடி அவரு யாருன்னு தெரிஞ்சுக்கிடமாட்டியா? ஒரு ஸ்காலர் முன்னாடி வந்து வாயத்திறக்கிறதுக்கு முன்ன உனக்கு என்ன தெரியும்னு ஒரு நிமிஷம் யோசிக்கமாட்டியா? நம்ம நாட்டில மட்டும் ஏன் இப்டி வடிகட்டின முட்டாளுங்க கூச்சநாச்சமில்லாம திரிய முடியுது..’
‘ஆமா நான் முட்டாள்தான்…நீ பெரிய புத்திசாலி’
‘ஆமாய்யா நான் புத்திசாலிதான்… நீ வெத்துமுட்டாள். ஏன்னா நான் என்னோட எடம் என்னன்னு தெரிஞ்சவன். அந்த எல்லைய மீறி எங்கயும் போயி அவமானப்பட மாட்டேன்…ஒரு அறிஞன் முன்னாடி என்ன பேசணும் எப்டி பேசணும்னு எனக்கு தெரியும்… உன்னை மாதிரி முட்டாளுக்குத்தான் தான் ஒரு முட்டாளுன்னுகூட தெரியாது….இப்ப நாஞ்சில் எந்திரிச்சு போனாரே, அவரு உன்னை முட்டாள்னு மனசுக்குள்ள திட்டிட்டுதான் போனார். அவரை விட எனக்கு உன் மேல கொஞ்சம் இரக்கம் ஜாஸ்தி. அதனால நான் உங்கிட்ட சொல்றேன். நீ ஒரு முட்டாள். அந்த ஒண்ணை மட்டுமாவது தெரிஞ்சுக்கிட்டேன்னா மேற்கொண்டு அவமானப்படாம இருப்பே…’
‘எனக்கு எழுபது வயசாச்சு…அதை நீ நினைக்கலை’
‘எந்திரிச்சு போய்யா…. எழுபது வயசுவரை மூளைய காலிச்சட்டி மாதிரி வச்சிருந்தா நீ பெரியாளாயிடுவியா? போய்யா” என்றேன்
நமக்கும் 50 க்கு மேலே வயசாகிப்போச்சு! இன்னும் இருபது ஆண்டுகளில் அந்த எழுபது வயதுக்காரர் போல நமக்கும் மரைகழண்டு போகும் முன்னால இலக்கியம் மண்ணாங்கட்டினு எதையாவது எழுதறதைவிட்டுப்புட்டு முட்டாள்களை தேடி அலையாதிங்கப்பா, உங்களை அறிவாளியா காட்டிக்க!
இதெல்லாம் ஒரு பதிவுனு போட்டு ஒரு வயதான ஆளை இரக்கமே இல்லாமல் திட்டிப்புட்டேன்னு கொஞ்சம்கூட அதற்காக வருத்தமடையாமல், அதை உலகறியச் சொல்லி கேவலப்படுத்தும் ஒரு மிருககுணமுள்ள எழுத்தாளன்தான் இந்த ஜெயமோகன் னு எல்லாரும் தெரிஞ்சுக்கோங்கப்பா!