எனக்கு மட்டும் ஏன் இப்படி தோனுதுனு தலைப்பு வைத்திருக்கலாமோ? மேலே படிங்க, புரியும்!
நான்தான் இங்கே பிரபலம்! இல்லை நாந்தான் இங்கே உன்னைவிட பிரபலம்னு அடிச்சுக்கிட்டு இருந்தவர்கள் எல்லாம் செத்து சுடுகாட்டுக்குப் போயாச்சு! கூகிள் பிளஸ் இல்லைனா முகநூல், இல்லைனா ட்விட்ட னு போயிட்டார்கள் இந்த பிரபலம்னு பிதற்றிக்கொண்டு அலைந்தவர்கள்.
ஒரு காலத்தில் எப்படி இருந்த த மி ழ் ம ண ம் இன்று தானியங்கியாக அனாதையாக ஆகி நிற்கிறது. ஒரு பிரச்சினையைச் சொல்லி இதை த மி ழ் ம ண ம் நிர்வாகம் சரி செய்தால் என்னனு கேள்வி ஏதாவது கேட்டால்.. உடனே..ஏன் தமிழ்மணத் திரட்டியையே கட்டி அழுறீங்க? புதுசா ஒரு திரட்டி ஆரம்பித்தால் என்ன? என்று சில தமிழ்மண நிர்வாகிகளிடம் இருந்து இப்படி ஒரு பதில் வரும். அதன்னனு தெரியவில்லை. எத்தனையோ திரட்டிகள் ஆரம்பித்தார்கள். அவைகள் எதுவுமே தமிழ்மணத்திற்கு இணையாக வரமுடியவில்லை. திரட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு வேகமாக வளர்ந்து சீக்கிரமே அழிந்து விடுகின்றன. அதனால் தமிழ்மணத்தை ஓரளவுக்கு சிறப்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படி செய்யவில்லை யென்றால் அது தமிழுக்கு அவர்கள் செய்யும் இழுக்கு! தமிழ் செத்தால் என்ன? தமிழ்மணம் செத்தால்தான் என்ன?னு ஏன் போயிவிட முடியவில்லை?னு எனக்குப் புரியவில்லை!
எனக்கு மட்டும் ஏன் இப்படி தோனுது?
--------------------------
வராத ஒரு பின்னூட்டம்! சிரடி சாய்பாபா பற்றி திருமதி உஷா ஷ்ரிகுமார் ஒரு பதிவு எழுதி இருக்கிறார். அதாவது அவர் ஒரு கடவுள். வாழ்ந்து செத்த கடவுள். செத்து உயிரோட வாழும் கடவுள்னு. நல்லவர்களை எல்லாம் கடவுள் ஆக்குவது நம் கலாச்சாரம். ஒருவர் வாழும்போது நாலு பேருக்கு உதவி செய்துவிட்டு செத்தால் அவரை நாம் கடவுளாக்கி விடுவோம். இப்படிதான் நாம், விஷ்ணு, சிவன், முனியசாமி, மாரியம்மன்னு ஏகப்பட்ட கடவுளை உருவாக்கி இன்னைக்கும் சாய்பாபா, நிதயானந்தானு கடவுளை உருவாக்கிக்கொண்டே போகிறோம். இந்த உண்மையச் சொல்லி ஒரு பின்னூட்டம் எழுதி அவர் தளத்தில் வைத்தால் அது இன்னும் வெளிவரவில்லை. என்னவோ போங்க! எல்லாம் கடவுள் செயல். ஒரு கடவுள் என்னைப் பின்னூட்டம் எழுதச்சொல்லி தூண்டிவிட்டார். இன்னொரு கடவுள் அதை வெளியிட வேண்டாம் என்று தடுத்துவிட்டார் போலும். இப்படி கடவுளக்ளுக்குள்ளேயே கருத்து வேறுபாடு இருந்தால், கடவுள் மனிதனைப்போல் தன் தரத்தைக் குறைப்பதுபோல் தோனுது..
எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் தோனுதுனு தெரியலை..
-------------------------------
ரிலாக்ஸ் ப்ளீஸ்!
Isn't she the prettiest girl in the Earth today?
 |
| தீபிகா படுகோனே! சாமுவேல் ஜாக்ஷனுடன். |
Note! Just today she is the prettiest! Not after 5 or10 years! ஏன் எனக்கு மட்டும் இப்படித் தோனுது?
--------------------------
பதிவெழுதவோ பின்னூட்டம் இடவோ நேரமில்லை. வேலை அதிகம்னு சொல்லலாம். என்ன அப்படி வேலை? வர வர ஒரு காம்ப்ளெக்ஸ் வந்துடுச்சு. என்ன காம்ப்ளெக்ஸ் அது? காலங்காலமாக படித்த சப்ஜக்ட்லயும் ஏகப்பட்ட சந்தேகங்கள்..புதிதாக ஒரு சப்ஜெக்ட் எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் கேக்கவே வேணாம். அதுவும் இதுனா என்ன? இதுனா என்ன?னு உள்ளே நுழைந்து நுழைந்து போனால், போயிக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. எந்த இடத்தில் நிறுத்தணும் என்பதே விளங்க மாட்டேன் என்கிறது. என் நேரமெல்லாம் இப்படித்தான் "வீணாகிறது"! .எவ்வளவு நேரம் படித்தாலும் இன்னும் புரியாதவை ஏகப்பட்ட விசயங்கள் இருக்குனு அடிக்கடி உணருகிறேன். நான் இப்படி இருக்கும்போது.. ஒரு சிலர், "நான் எல்லாத்தையும் கரைத்துக் குடிச்சுட்டேன்" "எனக்கு தெரியாததே இல்லை" என்பதுபோல் எப்படிப் பேசுறாங்கனு விளங்கவில்லை! புதிராகவே இருக்கு. அப்படிப் பேசுபவர்கள் மேல் மரியாதை வருவதற்கு பதிலாக.."உளறுகிறான் பாரு முட்டாள்"னுதான் தோனுது.
ஏன் எனக்கு மட்டும் இப்படித் தோனுது?
----------------------------