Showing posts with label தமிழ். Show all posts

Thursday, May 25, 2017
அ ரு வ ரு ப் பு என்பதுதான் சரி!
தமிழில் அதிகப் பிழையுடன் எழுதும் மிகச்சிலரில் அடியேனும் ஒருவன் (சாரு ஞாபகம் வருது இங்கே!) என்பதை எந்தவித வெட்கமோ, கூச்சமோ இல்லாமல் சொல்லுகிறேன். உண்மையை எடுத்துரைக்க என்றுமே பயப்படக் கூடாது. அப்படிப்பட்ட எனக்கு அழகான தமிழில் எழுதும் தமிழ் மேதைகள் தமிழ்ப் பிழை செய்வதைப் பார்க்கும்போது ரொம்பவே கஷ்டமாக இருக்கும். சமீபத்தில் வாசித்த பதிவுகளில், தமிழ் நன்றாகத் தெரிந்த இரண்டு பதிவர்கள் இவ்வார்த்தையை அருவெறுப்பு என்று எழுதியிருக்கிறார்கள். முன்பொருமுறை நண்பர் சத்யப்பிரியன் பதிவில் அது "அருவருப்பு"னுதான்னு சொல்றாங்கனு (தமிழ் நன்கறிந்த அவரிடம்) இதைச் சுட்டிக் காட்டினேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது இவ்வார்த்தையை பலரும் தவறாகவே எழுதுகிறார்கள் என்று. இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படி எழுதும்போதுகூட "அருவெறுப்பு" தான் சரியோ என்கிற குழப்பம் எனக்கு வருகிறது. அப்படி வருவதால், இன்று இதை ஒரு பதிவாகவே வெளியிட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடுவது என்ற முடிவுடன் இப்பதிவை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன் . நன்றி. வணக்கம்.
Thursday, April 7, 2016
இன்னும் உயிரோடதான் இருக்கேன்! அனாதையான தமிழ்!
எனக்கு மட்டும் ஏன் இப்படி தோனுதுனு தலைப்பு வைத்திருக்கலாமோ? மேலே படிங்க, புரியும்!
நான்தான் இங்கே பிரபலம்! இல்லை நாந்தான் இங்கே உன்னைவிட பிரபலம்னு அடிச்சுக்கிட்டு இருந்தவர்கள் எல்லாம் செத்து சுடுகாட்டுக்குப் போயாச்சு! கூகிள் பிளஸ் இல்லைனா முகநூல், இல்லைனா ட்விட்ட னு போயிட்டார்கள் இந்த பிரபலம்னு பிதற்றிக்கொண்டு அலைந்தவர்கள்.
ஒரு காலத்தில் எப்படி இருந்த த மி ழ் ம ண ம் இன்று தானியங்கியாக அனாதையாக ஆகி நிற்கிறது. ஒரு பிரச்சினையைச் சொல்லி இதை த மி ழ் ம ண ம் நிர்வாகம் சரி செய்தால் என்னனு கேள்வி ஏதாவது கேட்டால்.. உடனே..ஏன் தமிழ்மணத் திரட்டியையே கட்டி அழுறீங்க? புதுசா ஒரு திரட்டி ஆரம்பித்தால் என்ன? என்று சில தமிழ்மண நிர்வாகிகளிடம் இருந்து இப்படி ஒரு பதில் வரும். அதன்னனு தெரியவில்லை. எத்தனையோ திரட்டிகள் ஆரம்பித்தார்கள். அவைகள் எதுவுமே தமிழ்மணத்திற்கு இணையாக வரமுடியவில்லை. திரட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு வேகமாக வளர்ந்து சீக்கிரமே அழிந்து விடுகின்றன. அதனால் தமிழ்மணத்தை ஓரளவுக்கு சிறப்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படி செய்யவில்லை யென்றால் அது தமிழுக்கு அவர்கள் செய்யும் இழுக்கு! தமிழ் செத்தால் என்ன? தமிழ்மணம் செத்தால்தான் என்ன?னு ஏன் போயிவிட முடியவில்லை?னு எனக்குப் புரியவில்லை! எனக்கு மட்டும் ஏன் இப்படி தோனுது?
வராத ஒரு பின்னூட்டம்! சிரடி சாய்பாபா பற்றி திருமதி உஷா ஷ்ரிகுமார் ஒரு பதிவு எழுதி இருக்கிறார். அதாவது அவர் ஒரு கடவுள். வாழ்ந்து செத்த கடவுள். செத்து உயிரோட வாழும் கடவுள்னு. நல்லவர்களை எல்லாம் கடவுள் ஆக்குவது நம் கலாச்சாரம். ஒருவர் வாழும்போது நாலு பேருக்கு உதவி செய்துவிட்டு செத்தால் அவரை நாம் கடவுளாக்கி விடுவோம். இப்படிதான் நாம், விஷ்ணு, சிவன், முனியசாமி, மாரியம்மன்னு ஏகப்பட்ட கடவுளை உருவாக்கி இன்னைக்கும் சாய்பாபா, நிதயானந்தானு கடவுளை உருவாக்கிக்கொண்டே போகிறோம். இந்த உண்மையச் சொல்லி ஒரு பின்னூட்டம் எழுதி அவர் தளத்தில் வைத்தால் அது இன்னும் வெளிவரவில்லை. என்னவோ போங்க! எல்லாம் கடவுள் செயல். ஒரு கடவுள் என்னைப் பின்னூட்டம் எழுதச்சொல்லி தூண்டிவிட்டார். இன்னொரு கடவுள் அதை வெளியிட வேண்டாம் என்று தடுத்துவிட்டார் போலும். இப்படி கடவுளக்ளுக்குள்ளேயே கருத்து வேறுபாடு இருந்தால், கடவுள் மனிதனைப்போல் தன் தரத்தைக் குறைப்பதுபோல் தோனுது..எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் தோனுதுனு தெரியலை..
ரிலாக்ஸ் ப்ளீஸ்!
Isn't she the prettiest girl in the Earth today?
Note! Just today she is the prettiest! Not after 5 or10 years! ஏன் எனக்கு மட்டும் இப்படித் தோனுது?
பதிவெழுதவோ பின்னூட்டம் இடவோ நேரமில்லை. வேலை அதிகம்னு சொல்லலாம். என்ன அப்படி வேலை? வர வர ஒரு காம்ப்ளெக்ஸ் வந்துடுச்சு. என்ன காம்ப்ளெக்ஸ் அது? காலங்காலமாக படித்த சப்ஜக்ட்லயும் ஏகப்பட்ட சந்தேகங்கள்..புதிதாக ஒரு சப்ஜெக்ட் எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் கேக்கவே வேணாம். அதுவும் இதுனா என்ன? இதுனா என்ன?னு உள்ளே நுழைந்து நுழைந்து போனால், போயிக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. எந்த இடத்தில் நிறுத்தணும் என்பதே விளங்க மாட்டேன் என்கிறது. என் நேரமெல்லாம் இப்படித்தான் "வீணாகிறது"! .எவ்வளவு நேரம் படித்தாலும் இன்னும் புரியாதவை ஏகப்பட்ட விசயங்கள் இருக்குனு அடிக்கடி உணருகிறேன். நான் இப்படி இருக்கும்போது.. ஒரு சிலர், "நான் எல்லாத்தையும் கரைத்துக் குடிச்சுட்டேன்" "எனக்கு தெரியாததே இல்லை" என்பதுபோல் எப்படிப் பேசுறாங்கனு விளங்கவில்லை! புதிராகவே இருக்கு. அப்படிப் பேசுபவர்கள் மேல் மரியாதை வருவதற்கு பதிலாக.."உளறுகிறான் பாரு முட்டாள்"னுதான் தோனுது. ஏன் எனக்கு மட்டும் இப்படித் தோனுது?

--------------------------

-------------------------------
ரிலாக்ஸ் ப்ளீஸ்!
Isn't she the prettiest girl in the Earth today?
![]() |
தீபிகா படுகோனே! சாமுவேல் ஜாக்ஷனுடன். |
Note! Just today she is the prettiest! Not after 5 or10 years! ஏன் எனக்கு மட்டும் இப்படித் தோனுது?
--------------------------
பதிவெழுதவோ பின்னூட்டம் இடவோ நேரமில்லை. வேலை அதிகம்னு சொல்லலாம். என்ன அப்படி வேலை? வர வர ஒரு காம்ப்ளெக்ஸ் வந்துடுச்சு. என்ன காம்ப்ளெக்ஸ் அது? காலங்காலமாக படித்த சப்ஜக்ட்லயும் ஏகப்பட்ட சந்தேகங்கள்..புதிதாக ஒரு சப்ஜெக்ட் எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் கேக்கவே வேணாம். அதுவும் இதுனா என்ன? இதுனா என்ன?னு உள்ளே நுழைந்து நுழைந்து போனால், போயிக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. எந்த இடத்தில் நிறுத்தணும் என்பதே விளங்க மாட்டேன் என்கிறது. என் நேரமெல்லாம் இப்படித்தான் "வீணாகிறது"! .எவ்வளவு நேரம் படித்தாலும் இன்னும் புரியாதவை ஏகப்பட்ட விசயங்கள் இருக்குனு அடிக்கடி உணருகிறேன். நான் இப்படி இருக்கும்போது.. ஒரு சிலர், "நான் எல்லாத்தையும் கரைத்துக் குடிச்சுட்டேன்" "எனக்கு தெரியாததே இல்லை" என்பதுபோல் எப்படிப் பேசுறாங்கனு விளங்கவில்லை! புதிராகவே இருக்கு. அப்படிப் பேசுபவர்கள் மேல் மரியாதை வருவதற்கு பதிலாக.."உளறுகிறான் பாரு முட்டாள்"னுதான் தோனுது. ஏன் எனக்கு மட்டும் இப்படித் தோனுது?
----------------------------
Friday, April 10, 2015
ஜெயகாந்தன் மறைவு! சமஸ்கிரதத்திற்கு பேரிழப்பு?!
தமிழில் சிறுகதைகள், புதினங்கள் எழுதிப் புகழின் உச்சியை அடைந்தவர் அமரர் ஜெயகாந்தன். ஆனால் இவரை ஒரு தமிழன் என்று சொல்லக்கூட நா கூசுகிறது. இவர் மறைவால் தமிழுக்கு அதிக இழப்பா? இல்லை சமஸ்கிரதத்துக்கு அதிக இழப்பா? என்னும் கேள்வியை முன்வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ஒரு சமஸ்கிரதக் கூட்டத்தில் இவர் பேசியது..
பாரதீய ஞான பீட பரிசைப் பெற்றபோது இவர் உலகறியப் பேசுகிறார்..
நான் ஏன் தமிழில் பேசுகிறேன்? தமிழ் என் தாய்மொழி. எனக்கு நன்றாகப் பேசத் தெரிந்த மொழி தமிழ். என்னைப் போலவேதான் ஜெயகாந்தனும். அவருக்குத் தாய் மொழி தமிழ். தமிழில்தான் அவரால் கதை எழுத முடிந்தது. சமஸ்கிரதத்தில் "நந்தவனத்தில் ஓர் ஆண்டி" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" எல்லாம் எழுதியருந்தால், யாரு இந்தாளு? னு எனக்கு மட்டுமில்லை கோடிக்கணக்கான தமிழர்களுக்கே தெரிந்து இருக்காது. பேசுவது தமிழ், சிந்திப்பது தமிழில். இருந்தும் தமிழை ஒருபடி கீழிறக்கி, சமஸ்கிரதத்தை உயர்த்தி இவர் பேசியது எல்லோருக்கும் எரிச்சலைக் கிளப்பியது.
இது சம்மந்தமாக பலவருடங்கள் முன்பு பதிவுலகில் நடந்த விவாதங்கள் பற்றி பார்க்கணும்னா..
நம்மைப்போல் தமிழர்களுக்கு சமஸ்கிரதமும் ஒரு அன்னிய மொழிதான், ஆங்கிலமும் அன்னிய மொழிதான். இதில் சமஸ்கிரதம் மட்டும் எப்படி உயர்வானதாகும்? அதை மட்டும் நாம் நம் மொழியாகக் கருதி ஏன் போற்றிப் புகழணும்? இப்படியெல்லாம் யோசித்துப் பார்த்தால், ஜெயகாந்தன் தமிழர்களுக்கு அன்னியமாகத் தான் தோன்றுவார். தமிழினத் துரோகியாய்த்தான் தோன்றுவார்.
அவரைப் புகழ்ந்து புகழ்ந்து அயர்ந்துபோன மேதைகள் கவனிக்க.. ஜெயகாந்தனின் இதுபோன்ற செயல்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதென்ன?
* எவனோ ஒருவன் தமிழ் தமிழ் என்று எதற்கெடுத்தாலும் தமிழை உயர்வாகப் பேசுகிறான் என்கிற எரிச்சலில், நாம் தமிழைத் தாழ்த்திப் பிறமொழியை உயர்த்திப் பேசுவதைத் தவிர்க்கணும். என்னதான் இருந்தாலும் தமிழ் நம் தாய்மொழி. நம் தாய்மொழியை நாமே இழிவுபடுத்தினால் மற்றவன் எப்படி மதிப்பான்?
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதானதை எங்கும் காணோம்" என்று சொன்ன பாரதி எங்கே? ஜெயகாந்தன் எங்கே?
* சாதீய அடையாளங்கள் தேவையில்லை என்பதே என்றுமே என் நிலைப்பாடு. அது பெருமாள் முருகனாக இருக்கட்டும், இல்லைனா செயகாந்தனாக இருக்கட்டும், இல்லைனா ஜெயமோவனாக இருக்கட்டும், சாதீய அடையாளங்களை இவர்கள் தவிர்த்தே ஆகணும். பாரதிய ஞானபீட விருது பெறும்போதும், சாகித்ய அகாதமி விருது பெறும்போதும் இவர்கள் தன் சாதீய அடையாளங்களை வீட்டுக்குள்ளேயே வைத்துவிட்டு வர வேண்டும். பொது இடங்களின் தன் சாதீய அடையாளங்களைப் பற்றி இவர்களே குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லவே இல்லை! அது எழுத்துலக மேதை ஜெயகாந்தனின் சிறுபுத்தியையும், குறுகியமனதையும்தான் காட்டியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துண்டா? இருந்தால் பரவாயில்லை! அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். I have made up my mind on this. So, Dont even try, convince me! Thanks.

‘‘வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். ‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது.’ பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும், பேசவேண்டும் என்கிற தமிழறிஞர்கள், தம்மைத் தாமே நக்கிக் கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது.’’அவர் இதுபோல் பேசியும், அதில் தவறேதும் இல்லை என்று விவாதித்தவர்கள் பலர். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்கிற வசனத்தை எல்லாம் மறந்துவிடுவார்கள். ஜெயகாந்தன், இவரை வாழவைத்தத் தமிழின்மீது செருப்புக்காலுடன் ஏறி மிதித்துக் கொண்டு, சமஸ்கிரதத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும்போதுதான் இவருடைய இலக்கியப் படைப்புகளை எல்லாம் தோண்டி எடுத்துப் பார்த்து இவருக்கு ஞானபீடப் பரிசை வழங்கினார்கள் ஹிந்தியர்கள்!
பாரதீய ஞான பீட பரிசைப் பெற்றபோது இவர் உலகறியப் பேசுகிறார்..
இதற்குமுன்னே தமிழர்களில் இவ் விருதைப் பெற்றவர், அகிலாண்டம் (சித்திரப் பாவை) என்னும் அகிலன். அவரும் என்னைப் போல, சைவ வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதில் இன்னும் பெருமையடைகிறேன் ...ஜெயகாந்தன் எத்தனை பெரிய எழுத்தாளன்! கேவலம், தன் சாதிப் பற்றைக் காட்டி தன்னை எவ்வளவு கீழிறக்கிக்கொண்டான்? என்று பலரும் வருந்துமளவுக்கு ஆகிவிட்டது அவர் நடந்துகொண்டது.
நான் ஏன் தமிழில் பேசுகிறேன்? தமிழ் என் தாய்மொழி. எனக்கு நன்றாகப் பேசத் தெரிந்த மொழி தமிழ். என்னைப் போலவேதான் ஜெயகாந்தனும். அவருக்குத் தாய் மொழி தமிழ். தமிழில்தான் அவரால் கதை எழுத முடிந்தது. சமஸ்கிரதத்தில் "நந்தவனத்தில் ஓர் ஆண்டி" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" எல்லாம் எழுதியருந்தால், யாரு இந்தாளு? னு எனக்கு மட்டுமில்லை கோடிக்கணக்கான தமிழர்களுக்கே தெரிந்து இருக்காது. பேசுவது தமிழ், சிந்திப்பது தமிழில். இருந்தும் தமிழை ஒருபடி கீழிறக்கி, சமஸ்கிரதத்தை உயர்த்தி இவர் பேசியது எல்லோருக்கும் எரிச்சலைக் கிளப்பியது.
இது சம்மந்தமாக பலவருடங்கள் முன்பு பதிவுலகில் நடந்த விவாதங்கள் பற்றி பார்க்கணும்னா..
நம்மைப்போல் தமிழர்களுக்கு சமஸ்கிரதமும் ஒரு அன்னிய மொழிதான், ஆங்கிலமும் அன்னிய மொழிதான். இதில் சமஸ்கிரதம் மட்டும் எப்படி உயர்வானதாகும்? அதை மட்டும் நாம் நம் மொழியாகக் கருதி ஏன் போற்றிப் புகழணும்? இப்படியெல்லாம் யோசித்துப் பார்த்தால், ஜெயகாந்தன் தமிழர்களுக்கு அன்னியமாகத் தான் தோன்றுவார். தமிழினத் துரோகியாய்த்தான் தோன்றுவார்.
அவரைப் புகழ்ந்து புகழ்ந்து அயர்ந்துபோன மேதைகள் கவனிக்க.. ஜெயகாந்தனின் இதுபோன்ற செயல்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதென்ன?
* எவனோ ஒருவன் தமிழ் தமிழ் என்று எதற்கெடுத்தாலும் தமிழை உயர்வாகப் பேசுகிறான் என்கிற எரிச்சலில், நாம் தமிழைத் தாழ்த்திப் பிறமொழியை உயர்த்திப் பேசுவதைத் தவிர்க்கணும். என்னதான் இருந்தாலும் தமிழ் நம் தாய்மொழி. நம் தாய்மொழியை நாமே இழிவுபடுத்தினால் மற்றவன் எப்படி மதிப்பான்?
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதானதை எங்கும் காணோம்" என்று சொன்ன பாரதி எங்கே? ஜெயகாந்தன் எங்கே?
* சாதீய அடையாளங்கள் தேவையில்லை என்பதே என்றுமே என் நிலைப்பாடு. அது பெருமாள் முருகனாக இருக்கட்டும், இல்லைனா செயகாந்தனாக இருக்கட்டும், இல்லைனா ஜெயமோவனாக இருக்கட்டும், சாதீய அடையாளங்களை இவர்கள் தவிர்த்தே ஆகணும். பாரதிய ஞானபீட விருது பெறும்போதும், சாகித்ய அகாதமி விருது பெறும்போதும் இவர்கள் தன் சாதீய அடையாளங்களை வீட்டுக்குள்ளேயே வைத்துவிட்டு வர வேண்டும். பொது இடங்களின் தன் சாதீய அடையாளங்களைப் பற்றி இவர்களே குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லவே இல்லை! அது எழுத்துலக மேதை ஜெயகாந்தனின் சிறுபுத்தியையும், குறுகியமனதையும்தான் காட்டியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துண்டா? இருந்தால் பரவாயில்லை! அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். I have made up my mind on this. So, Dont even try, convince me! Thanks.
Thursday, January 9, 2014
ஈழத்தமிழர்களின் ஆங்கில வார்த்தைகள் உச்சரிப்பு!
அவருடைய பதிவில் கொம்ப்யூட்டர்னு எழுதி இருக்கிறார் ஈழத்தமிழர் கானா பிரபா. இதேபோல் ஈழத்தமிழர்கள் ஆங்கிலவார்த்தைகள் பலவற்றை, ஆங்கில அகராதி சொல்வதுபோல் சொல்லாமல் அவர்கள் இஷ்டத்துக்கு உச்சரிக்கிறார்கள். இவர்கள் ஆங்கிலம் பேசும்போதும் இதுபோல்தான் ஓஃபிஸ், கொம்ப்யூட்டர்னுதான் உச்சரிப்பார்களா? இல்லைனா ஆங்கிலம் பேசும்போது மட்டும் கம்ப்யூட்டர், ஆஃபிஸ் என்று பொதுவாக எல்லோரும் உச்சரிப்பதுபோல் உச்சரிப்பார்களா? என்கிற கேள்வி என்னுள் எழுகிறது.
ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன்... ஏன் இப்படி இவர்கள் வேறு மாதிரி ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கிறார்கள்? ஒரு வேளை இதுபோல் ஒரு ஈழத் தமிழர் ஐடெண்டிட்டி வைத்துக்கொண்டு இவர்கள் ஆங்கில உச்சரிப்பு முறையிலிருந்து இவர்களை ஈழ்த்தமிழ்கள் என்று அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமென்று இப்படி வேண்டுமென்றே செய்கிறார்களா?
நம்ம ஊரில் கேரளாக் காரர்களும் இதுபோல் ஓஃபிஸ் என்று பேசுவதை கண்டிருக்கிறேன்.
It could just be traditionally carried over from older to younger generation. Who is going to get that straightened out? Or it is going to be like that for ever? :)

Thursday, November 14, 2013
ஈ வே ரா, ஈ வெ ரா, ஈ வெ இரா, செயமோகன்!
பொதுவாக பெரியார் பெயரை ஈ வே ரா னு எல்லோரும் தவறாக எழுதுவாங்க, சொல்லுவாங்க. ஈ வே ரா னா ஒரு ராகத்தோட சொல்லலாம் என்பதாலோ என்னவோ. பலர் இந்தத் தவறைச் செய்ததால், நம்ம ஜெயமோகனும் இந்தத் தவறைச் செய்து இருக்கிறார். நம்மைச் சுற்றி உள்ள சூழல்கள் நம்மை ஓரளவுக்கு பாதிக்கத்தான் செய்யும். இது இயற்கை. சரி, நம்ம செய்வதால் அது சரி என்று இல்லை. ஒருவர் அதைத் தவறுனு சுட்டிக்காட்டும்போது, ஒரு பெரிய மனுஷன் என்ன செய்யணும்? தான் செய்த ஒரு சின்ன தவறைத் தவறுதான் னு ஏற்றுக்கொண்டு ஒரு சிறு மன்னிப்பை சொல்லிவிட்டால் அதோட வேலை முடிந்தது.
அதைவிட்டுப்புட்டு, சின்னப்புள்ளத்தனமா "நான் ஏன் தவறு செய்தேன்? நான் சொன்னதுதான் தமிழ் உச்சரிப்பு முறைப்படி சரி! நீங்க எல்லாரும் யோக்கியமா? இத்யாதி இத்யாதினு ஒரு பெரிய கட்டுரை எழுதி கடைசியில் நான் எழுதியதுதான் சுத்தமான தமிழ் உச்சரிப்புனு முடிச்சு..
தான் சொல்வது, தான் செய்வதுதான் எப்போவுமே சரினு ஒரு பெரிய விளக்கம்..
ஈ வெ ரா பெயர் தெலுகு உச்சரிப்பில்தான் இருக்கு. அதனால என்ன இப்போ? அவரு வீட்டிலே எல்லாரும் தெலு(ங்)குலயோ இல்லை கன்னடத்திலேயோதான் பேசி இருப்பாங்க. அதானே அவர்களுக்குத் தாய்மொழி?
பின்னால் தன்னை ஒரு தமிழன் னு மார்தட்டிய பெரியார், கன்னடத்திலே, தன் தாய்மொழியில் இளமையில் பேசியிருக்கக்கூடாதுனு சொல்வாரா?
மேலும் ராமசாமி என்பதே "பகவான்" ராமன் பேரை தழுவியது. ஆக இவரும் "பகவானின்" சுமார் 42வது அவதாரம்தான்னு ஏதாவது விளக்கம் சொன்னாலும் சொல்லுவா!
நான் அப்போவே சொன்னேன். ஜெயமோகனைப் பிடிச்சுக் கொண்டுபோயி ஏர்வாடில கட்டிப்போடுங்கப்பானு! எவன் கேக்கிறான்! இப்போ எல்லாரையும் ஏர்வாடிக்கு அனுப்பிரும்போல இந்த ஒரு மேதாவி! :)

அதற்கு ஒரு சிறு பின்னணி உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் பிழையாகவே ஒரு கட்டுரையில் ஈவேரா என்று எழுதியிருந்தேன். என்ன காரணம் என்றால் தமிழில் திருப்பதியின் பெயர் வேங்கடம்தான். வெங்கடம் அல்ல. அந்த அடிப்படையில்தான் கி.வேங்கடசுப்ரமணியன் என்றும் ஆ.இரா.வேங்கடாசலபதி என்றும் எழுதுகிறார்கள். ஈவேரா அவரது பெயரை அப்படித்தான் எழுதுவார் என்று ஓர் அனிச்சையான நம்பிக்கையால் அப்படி எழுதினேன்.
ஆனால் எனக்கு ஆக்ரோஷமான நாலைந்து கடிதங்கள் வந்தன. ஈவேரா அவர்களின் தந்தைபெயர் வெங்கிட்ட நாயக்கர் என்றும் ஆகவே அவரது பெயரை ஈவெரா என்றுதான் எழுதவேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். ஆனால் என் பெயரை செயமோகன் என்று எழுதியிருந்தனர். அத்தனை பெயரையும் தமிழ்ப்படுத்தி எழுதக்கூடியவர்கள் அவர்கள். சுந்தர இராமசாமி என்று எழுதக்கூடியவர்கள். இன்றைக்கும் தமிழ் விக்கிபீடியாவில் இந்தக்கொள்கை உடையவர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்.
நான் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஒரு பெயரை அப்பெயருக்குரியவர் எப்படி எழுதுகிறாரோ அப்படி எழுதவேண்டும் என்பதுதான் மரபு. உலகளாவிய ஒரு நாகரீகம் அது. ஆனால் நீங்கள் பிறர் பெயரை உங்கள் கொள்கைப்படி மாற்றி எழுதுகிறீர்கள். அதற்கு மொழிசார்ந்த நியாயங்களைச் சொல்கிறீர்கள். அந்த நியாயம் உங்கள் தலைவருக்குச் செல்லுபடியாகாதா என்ன? அவரது பெயரை ஏன் தமிழ்முறைப்படி எழுதக்கூடாது? ஈ.வே.இராமசாமி என்றுதானே அவரை எழுதவேண்டும்? ஏன் தெலுங்கு உச்சரிப்பைத்தான் எழுதவேண்டும் என்கிறீர்கள்?
’சரி, கொள்கையளவில் ஒரு பொதுமுடிவுக்கு வருவோம். பெயர்களை மாற்ற பிறிதொருவருக்கு உரிமை இல்லை. தன் பெயரை ஒருவர் எப்படி எழுத விரும்பினாரோ அப்படித்தான் அனைவரும் எழுதவேண்டும். ஏனென்றால் அது ஓர் ஆவணம், ஓர் அடையாளம், அவ்வளவுதான். அது உங்களுக்கும் எனக்கும் பொருந்தும் விதி, ஆனால் ஈவேரா அவர்களுக்கு விதிவிலக்கு என்றால் அதை நான் ஏற்கமாட்டேன்’ என அவர்களுக்கு எழுதினேன். அதற்கு 16 பக்க வசைதான் பதிலாக வந்தது. நான் பிடிவாதமாக ஈவேரா என்று –தமிழ் மரபுப்படி – எழுத ஆரம்பித்தேன். அப்படியே கை பழகிவிட்டது.
இப்போதுகூட ஈவெரா என்று தெலுங்கு உச்சரிப்பையே எழுதத்தயார். பிற பெயர்களில் கைவைப்பது பிழை என இதைச் சுட்டிக்காட்டுபவர்கள் கொள்கையடிப்படையில் ஒத்துக்கொள்ளட்டும்.பிற தெலுங்கு, இந்தி பெயர்களையும் அவர்களின் மொழிமரபுப்படியே எழுதட்டும்.ஆக, இவர் என்ன தப்பு செய்தாலும், அது இவர் தமிழ்மரபை மனதில் கொண்டு தமிழுக்காக அவர் செய்த தவறு!! ! :))) ஈ வெ ரா என்பது தெலுகு உச்சரிப்பு! இவரு செய்ததுதான் சரியான தமிழ்! அதுதான் சரி சரி சரி!
ஈ வெ ரா பெயர் தெலுகு உச்சரிப்பில்தான் இருக்கு. அதனால என்ன இப்போ? அவரு வீட்டிலே எல்லாரும் தெலு(ங்)குலயோ இல்லை கன்னடத்திலேயோதான் பேசி இருப்பாங்க. அதானே அவர்களுக்குத் தாய்மொழி?
பின்னால் தன்னை ஒரு தமிழன் னு மார்தட்டிய பெரியார், கன்னடத்திலே, தன் தாய்மொழியில் இளமையில் பேசியிருக்கக்கூடாதுனு சொல்வாரா?
மேலும் ராமசாமி என்பதே "பகவான்" ராமன் பேரை தழுவியது. ஆக இவரும் "பகவானின்" சுமார் 42வது அவதாரம்தான்னு ஏதாவது விளக்கம் சொன்னாலும் சொல்லுவா!
நான் அப்போவே சொன்னேன். ஜெயமோகனைப் பிடிச்சுக் கொண்டுபோயி ஏர்வாடில கட்டிப்போடுங்கப்பானு! எவன் கேக்கிறான்! இப்போ எல்லாரையும் ஏர்வாடிக்கு அனுப்பிரும்போல இந்த ஒரு மேதாவி! :)
Tuesday, October 15, 2013
நமது தமிழ்க்கலாச்சாரப் பெருமைகள் பேசுவோமா?!!
"ஈ" படத்தில் ஜீவாவின் பிறப்பு.. ஒரு புத்திசுவாதினமில்லாத பிச்சைக்காரியை யாரோ ஒரு "புண்ணியவான்" கெடுத்து அவளுக்கு பிறந்த செல்லப்புத்திரனாக, ஒரு அனாதையாகக் காட்டுவார்கள்.
அதேபோல் தளபதி படத்தில் சூர்யா (ரஜினி), ஒரு கல்யாணம் ஆகாத ஒரு தாய்க்கு பிறந்த மகனாகக் காட்டுவார்கள்.
சமீபத்தில் வந்த கடல் திரைப்படத்தில் தாமஸ் ( கெளதம் கார்த்திக்) என்கிற கதாநாயகன் பாத்திரம்.. அந்த அப்பாவிப் பையன் பாத்திரத்தை ஒரு கேவலமான அப்பனால் உருவாக்கப்பட்டவனாக காட்டி..அவனின் தந்தை, அவனைத் தந்தையாக ஏற்றுக்கொள்ளக் கெஞ்சிக் கூத்தாடியும் (டி என் எ அனாலிஸிஸ் எல்லாம் பற்றி தெரியாத சமுதாயம்) மறுப்பதையும் காட்டிவிட்டு, கடைசியில் அந்தப் பொறுக்கி சாகும்போது அவனுக்காக எந்தத் தவறுமே செய்யாத இந்தப் பையன் ஏங்கி ஏங்கி அழுவதுபோலவும் காட்டுறாரு நம்ம மணிரத்னம்..(அதெப்படி இவன் இழிநிலைக்குக் காரணமான ஒரு பொறுக்கி மேலே இவனுக்கு பாசம் பொங்குதுனு எனக்கு இன்னும் புரியலைங்க மணி??)
நமது சமுதாயத்தில், "தமிழ் கலாச்சாரத்தில்" இதுபோல் உருவாக்கப்பட்ட அப்பாவிகளும், அவர்களை உருவாக்கிய "பெரிய மனிதர்களும்" இருக்காங்க. இதுபோல் பொறுக்கிகளால் உருவாக்கப்படும் அப்பாவிகள் மனநிலை பாதிக்கப்பமளவுக்கு பலவிதமான இன்னல்களையும், அவலங்களையும் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நம்மைப்போன்றோர் பொதுவாக சினிமாலதான் காண்கிறோம். ஆனால் இது போல் நிகழ்வுகள், நடைமுறையில் நம்மைச் சுற்றி நமது உயர்தரத் தமிழ் கலாச்சாரத்தில் காலங்காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதுபோல் எந்தத்தவறும் செய்யாத "தவறானவர்களாக பிறந்தவர்கள்" நம்முடன் இவ்வுலகில், நம்மைச்சுற்றி வாழ்ந்துகொண்டுதான் இருக்காங்க. ஏன், புத்திசுவாதினமில்லாத பிச்சைக்காரி ஒருத்தி கற்பமாக ஆகி அலைவதை நானே எங்க ஊரில், நமது திருநாட்டில் பார்த்து இருக்கேன். தளபதி சூர்யாக்களும், கடல் தாமஸ்களும், ஈ க்களும் தூக்கி எறியப்பட்ட அனாதைகளாக நம் கலாச்சாரத்தில் நம்மைச்சுற்றி இருக்கத்தான் செய்றாங்க. அவர்களைப் பற்றியெல்லாம் சிந்திக்க நமக்கு நேரம் எங்கே இருக்குது?
இதுபோல் ஆட்களை கற்பனைப்பாத்திரமாக சினிமாவில் நாம் பார்க்கும்போது அந்தக் கேரக்டராக நம்மை ஒரு நிமிடம் வைத்து, "நான் அந்த நிலையில் இருந்தால் என்ன ஆகியிருப்பேன்???" என்று யோசித்துப் பார்த்தால்கூட "அப்படி யோசித்த ஒரு சிந்தனையை" வெளியே சொல்லத் தயங்குபவர்கள்தான் தமிழன் தமிழன் என்று வெட்டிப் பெருமை பேசிக்கொண்டு அலையும் நாம் எல்லோருமே.
இதுபோல் பிறக்கும் குழந்தைகள் எந்தத் தவறுமே செய்யாதவர்கள் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காதுனு நம்புறேன். "கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" இதெல்லாம் போன ஜென்மத்தில் செய்த பாவம், கர்மா னு என்ன எழவையாவது சொல்லிச் சமாளிப்பார்கள். ஆனால் அதுபோல் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு?? ஏதோ ஒரு அறியாமையில் வாழும் பொறுக்கி ஆண் செய்ததன் விளைவே இவர்கள் உருவானத்துக்குக் காரணம் என்பதைத் தவிர வேறு விளக்கம் எதுவும் இல்லை!
இதுபோல் அனாதையாக உருவாக்கப்பட்ட அப்பாவிகளை நாம் சக மனிதனாக, சகோதரனாக, சகோதரியாக, காதலனாக, காதலியாக அல்லது மனைவியாக, கணவனாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நம்மிடம் மனப்பக்குவம் இருக்கிறதா? அல்லது தைரியம் இருக்கிறதா? என்று யோசித்துப் பார்த்தால்... நம்மைப் பற்றி நமக்கு என்ன புரியும்?? நாம் சினிமாப் பார்த்து அவர்களுக்காக அழுவதைத் தவிர்த்து வேறெதும் "பெரிய தியாகம்" செய்யத் தாயாராக இல்லாத சாதாரண ஒரு கோழைத்தமிழன்தான் என்று நம்மைப் பற்றி நாம் புரிந்துகொள்வோம்!
இப்படி நம்மில் 99% விழுக்காடுகள், கோழைகளாகவும், இதுபோல் பிரச்சினைகளை எதிர்கொள்ள அல்லது கையாள வழி தெரியாதவர்களாகவும், இதுபோல் பிரச்சினைகளை சமாளிக்க சரியான மனப்பக்குவமில்லாதவர் களாகவும்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். உண்மை நிலவரம் இந்த லட்சணத்தில் இருக்கும்போது நமக்கு, தமிழன், தமிழ் கலாச்சாரம், செம்மொழி மண்ணாங்கட்டினு எதுக்கெடுத்தாலும் தமிழன் பெருமை என்ன வேண்டிக்கெடக்கு?

Labels:
அரசியல்,
அனுபவம்,
சமூகம்,
சிந்தனைகள்,
தமிழ்,
தமிழ் கலாச்சாரம்
Wednesday, October 3, 2012
மத உணர்வு தப்பு! இன உணர்வு சரியா? ஏன்?
ஒருவர் அவருடைய ஊர், நாடு, கண்டம் எதாயிருந்தாலும் பரவாயில்லைனு விட்டுவிட்டு அவர் தன் மதத்தை சேர்ந்தவர் என்பதால், தன் ஊருக்கு எதிராக, தன் நாட்டுக்கு எதிராக அவர் செய்த "தவறு"களை நியாயப் படுத்த முயற்சித்தல், அவருக்கிழைத்த "அநீதி"யை எடுத்து விமர்சித்தல், அவருக்காக வரிந்துகொண்டு வருதல், என்கிற மத அடிப்படையான செயலை தவறு என்பதுபோல்தான் நாம் வாதிடுகிறோம். ஆமாம், யாரு இந்த நாம்? பொதுநோக்குப் புத்தியுள்ள, நம்மைப்போல நல்லவர்கள்! :-)
* மத உணர்வு என்பது நல்லதல்ல என்கிறோம்!
* மதத்தால் ஒன்றுபடுவது தவறென்கிறோம்!
* ஒருவனே தேவன் என்றால் எல்லாமதத்தவரும் இறைவன் குழந்தைகள்தானே? என்கிறோம்
* "ஐயா வருண்! நான் அப்படியெல்லாம் சொல்வதில்லை" என்றால் நீங்கள் இங்கே விமர்சிக்கப்படவில்லை! தயவு செய்து இதை கண்டுக்காதீங்க!
இறைவன் ஒருவனே என்றால், எல்லோரும் அந்த இறைவனை வணங்கவே, திருப்திப்படுத்தவே பல மதங்களும் உருவாக்கப்பட்டது என்கிற போதும் தன் மதம்தான் உயர்ந்தது என்று சொல்வதுகூட இறைவனுக்குக்கூட நகைப்பை உண்டாக்கலாம்.
நாம் இப்படி சொல்வதை
* "மத உணர்வு கொண்டர்வர்கள்",
* "தன் மதம்தான், வழிதான் சரியானது என்று மதத்தால் ஒன்று சேர்பவர்கள்",
"இந்த மதவுணர்வு தவறானது என்கிற நம்முடைய நிலைப்பாட்டை" ஏற்றுக்கொள்ளத் தயங்குறாங்க. மத உணர்வில் தவறென்ன? என்கிறார்கள். இருந்தாலும் இவர்கள், தம்முடைய இந்த நிலைப்பாடை "சரி" என்று வெளிப்படையாக வாதிடுவதில்லை!
ஏன் மத உணர்வு நல்லதல்ல என்பதற்கு சில காரணங்கள் நாம் சொல்லலாம்.
* சூழ்நிலை 1) நீங்க வக்காலத்து வாங்கும் அவர் அயல் நாட்டவராக இருக்கும்போது, அந்த நாடு நம் நாட்டுக்கு எதிரியாக இருக்கும்போது, உங்க மத உணர்வு, உங்களை "தேச துரோகி" யாக்குதுபோல் ஒரு சூழ்நிலை உருவாகும் ஒரு அபாயம் இருக்கு!
* சூழ்நிலை 2) மதச்சார்பற்ற நாட்டில் வாழும் நீங்க நாட்டுப்பற்று உள்ளவராக இருக்கனும்னு எதிர்பார்க்கப்படுது. மத அடிப்படையில் நீங்கள் போகும்போது உங்கள் நாட்டுப்பற்று கேள்விக்குறியாகிற ஒரு அபாயமும் இருக்கு.
இப்படியெல்லாம் பிரச்சினைகள் இருக்குனு சொல்லி நாம் விவாதிக்கலாம். ஆனால்.. என்ன ஆனால்.. இதை எப்படி "நியாயப் படுத்தலாம்" னு பிறகு பார்ப்போம்.
அதாவது மதப்பற்று உள்ளவங்க,
* சூழ்நிலை 3) சூழ்நிலை 4) என்று பலவகைகளை காட்டி இதுபோல் சூழ்நிலைகளில் என்னுடைய மதவுணர்வு தப்பில்லை என்று வாதிடுவார்கள்
இன உணர்வு பத்தி பேசுவோம்..
இங்கே நாம் அனைவரும் தமிழர்கள்! ஒரே இனம்!
சரி, நாம், " தமிழா! இன உணர்வு கொள்!" னு சொல்றோம். நாம் திராவிடர்கள் எல்லாம் ஒண்ணு சேரனும் என்கிறோம்!
சில நேரங்களில் பார்ப்பனர்களை ஆரியர்கள் என்று சொல்லிப் நம்மைவிட்டுப் பிரிக்கிறோம்!
காரணம்?
* வீடு வாடகைக்கு விடப்படும்! பார்ப்பனர்களுக்கு மட்டும்! (இதுபோல் விளம்பரம்)
* மாமிசம் சாப்பிடுறவா ஆத்துக்கெல்லாம் எப்படி போகுறது? அவா ஆத்துல கவிச்சு வாடை இல்ல அடிக்கும்ண்ணா! (இதுபோல் எண்ணங்களுடன் திரியிறவங்க)
இவர்கள்தான் இதற்கு காரணம்!
சரி இனவுணர்வு பத்தி தொடருவோம்..
இனவுணர்வு மட்டும் சரியா? ஏன் சரி??
* அ) ஒரு பிரச்சினை....அதில் நம் மொழிபேசுபவர் தவறாக நடக்கிறார். மாற்று மொழி பேசுபவர் ஒரு அப்பாவி. நியாயம் நம் இனத்தவர், தமிழரிடம் இல்லை. பிறமொழி பேசுறவர் சொல்வதில், செய்வதில்தான் நியாயம் இருக்கு. இந்த சூழலில் இன உணர்வு கொள்ளனுமா? இல்லைனா நியாயமாக நல்லவரான பிறமொழி பேசுறவர் பக்கம் சேரனுமா?
* ஆ) ஒரு பார்ப்பனர் வீட்டு அப்பாவி பெண்ணிடம் ஒரு திராவிடர் தவறா நடந்துகொள்கிறார். அந்தப்பொண்ணு பாவம், எந்தத் தப்பும் செய்யவில்லை!
இந்த சூழலில் தமிழா நீ "இன உணர்வு" கொள்வியா? பாவம் தவறு செய்யாத ஒருவருக்கு கை கொடுப்பியா?
நம்ம பொதுக்கட்டுரை எழுதுறோம். பலரையும் பலவாறு விமர்சிக்கிறோம். தமிழர் என்கிறோம். திராவிடர் என்கிறோம். இந்தியர் என்கிறோம். இன உணர்வு கொள் என்கிறோம். நாட்டுப்பற்று வேண்டும் என்கிறோம். ஆனால் தனிப்பட்ட ஒரு மனிதனாக ஒரு சூழ்நிலையில் எப்படி நடக்கிறோம்? என்பது வேறு விசயம்.
அதாவது தனிப்பட்ட ஒரு மனுஷனாக
* மேலே உள்ள சூழ்நிலை அ) ல நான் அந்த மாற்று மொழி பேசுபவனுக்குத்த்தான் ஆதரவு கொடுப்பேன்! நீங்க எப்படி வேணா இருந்துட்டுப் போங்க!
* மேலே உள்ள சூழ்நிலை ஆ) ல நான் அந்த அப்பாவிப் பெண்ணுக்குத்தான் ஆதரவு கொடுப்பேன்.
அப்படி நான் செய்வதால் இப்போ நான் தமிழ் இன உணர்வு மொழியுணர்வு இல்லாதவனாகவும். திராவிட உணர்வு இல்லாதவனாகவும் ஆகிறேன். ஆமாம் நான் இனி துரோகிதான்.
முடிவுரை:
இங்கேதான் நீங்க இன உணர்வுனு நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை புரிந்து கொள்ளனும்.
* நாம் நியாயமான பிரச்சினைக்குத்தான் நம் இன உணர்வை, மொழி உணர்வை காட்டனும்.
* தமிழனுக்கு அநியாயம் நடக்கும்போதுதான் நாம் தமிழா இன உணர்வு கொள் என்கிறோம்!
* தீண்டாமை, உயர்சாதி என்று வரும்போதுதான் திராவிடன் என்று நம்மை ஒன்று சேர்க்கிறோம்.
* தமிழ் மொழியை இகழும்போதுதான் நாம் இனவுணர்வு கொள்ளனும்!
அதேபோல், மதவுணர்வு கொள்பவர்களும் இதேபோல் நாங்க எம்மதத்தில் அப்பாவிகள் பாதிக்கப் படும்போதுதான் எம்மதத்தவருக்கு குரல் கொடுக்கிறோம். இதில் தவெறன்ன? என்று கேட்டால், அவர்களுக்கு நம் பதிலென்ன?
நீங்களே சொல்லுங்கள்! :)
நன்றி, வணக்கம்!

************************************

Friday, October 31, 2008
ரஜினி-கமல்!!! இது உண்மையா?!
கீழே உள்ள செய்தி உண்மையா என்று தெரியவில்லை!
-----------------------------------
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ரஜினி-கமல், நடிகர்கள் 'பேசா' உண்ணாவிரதம்?
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2008, 10:02.05 AM GMT +05:30 ]
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவழியாக சம்மதம் தெரிவித்துள்ளனர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும், ஒரு நிபந்தனையோடு!.
உண்ணாவிரத்தில் மைக் கட்டி பேசக்கூடாது என்பதே அந்த நிபந்தனை. கிட்டத்தட்ட இதே நிபந்தனையை தமிழ அரசும் விதித்துள்ளது!!. இந்த நிபந்தனையின் நோக்கம் யாரும் புரிந்து கொள்ளக் கூடியதே. சில மாதங்களுக்கு முன் ஓகேனக்கல் பிரச்சனை தொடர்பான உண்ணாவிரததில் பங்கேற்ற நடிகர்கள் பலர், குறிப்பாக சத்யராஜ் உணர்ச்சி வசப்பட்டு, கட்டுப்பாடில்லாமல் சில வார்த்தைகளைப் பிரயோகிக்க, அதனால் டென்ஷனான ரஜினி 'உதைக்கணும்' என்றெல்லாம் பேசப்போய், அதற்கு குசேலன் என்ற படமே பலியானதும் அனைவருக்கும் தெரிந்த சமாச்சாரங்கள்.
இன்னொரு பக்கம் ராமேஸ்வரம் பேரணியில் வரம்பு மீறிப் பேசியதற்காக இயக்குநர்கள் சீமானும், அமீரும் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. தமிழக அரசுக்கும் இதனால் சில சங்கடங்கள் உருவாயின. பெரிய நடிகர்கள் என்ன பேசினாலும் அது அரசியலாக்கப்படுவதால், இந்த முறை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மைக் வைத்துப் பேசுவதையே அடியோடு தவிர்த்துவிட்டால் என்ன? என நடிகர் சங்கத் தலைவர் சரத் குமாருக்கு யோசனை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
ரஜினிக்கும் இந்த யோசனை சரியாகப் படவே, பேசச் சொல்லி வற்புறுத்தாதீர்கள் என்ற நிபந்தனையோடு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கச் சம்மதித்துள்ளதாக, நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அஜீத், விஜய் போன்ற நடிகர்களும் இந்த வகை 'பேசா உண்ணாவிரதப் போராட்டம்' பிரச்சனை இல்லாதது என நடிகர் சங்க நிர்வாகிகளிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதைவிட முக்கியமான விஷயம், நடிகர் சத்யராஜை அடக்கி வாசிக்குமாறு தமிழக முதல்வரிடமிருந்தே அறிவுரை வந்திருப்பதாக நடிகர் சங்கம் தரப்பில் கூறப்படுகிறது. பிரச்சினைக்குரிய எந்த விவகாரம் குறித்தும் நடிகர்கள் பேசவேண்டாம் என்றும், உணர்வைத் தெரிவித்தால் மட்டும் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் இனி தமிழக அரசு நடந்து கொள்ளாது என சமீபத்தில் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதைத் தொடர்ந்தே இந்த 'அறிவுரை' அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நடக்கும் உண்ணாவிரதத்துக்காக நடிகர் சங்க வளாகத்தில் பிரமாண்டமான மேடை போடப்பட்டுள்ளது.
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Subscribe to:
Posts (Atom)