Friday, May 30, 2008

காதல் கல்வெட்டு -1

இது நான் எழுதிய கதை என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன், சொல்லவும் முடியாது(ஏனென்றால் வருண் படிப்பாரே :)). இது வருண் எழுதிய கதை. வலைப்பூ எழுத ஆரம்பித்தவுடன் முதல் வேலையாக இதை போஸ்ட் பண்ண வேண்டும் என்பது ஐயாவின் அன்பு உத்தரவு :) - கயல்

கயல்விழி வரும் நேரமென்று வருண் தயாராகி அவள் வருகைகாக காத்திருந்தான். அவனுக்கு அவள் ஒரு அற்புதமான பெண். வாழ்க்கையில் அவளை சந்தித்ததில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம். காலிங் பெல் சத்தம் கேட்டவுடன் வருண் கதவை திறந்தான். வெளியே கயல் ஆலீவ் க்ரீன் கலரில் சேலை கட்டி நின்றிருந்தாள். அதற்கு மேட்சிங்காக ஆலிவ் க்ரீனில் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் போட்டிருந்தாள். அவள் சேலையில் மிகவும் கவர்ச்சியாக தெரிந்தாள். அவளுடைய மார்பகங்கள் எடுப்பாகவும் கவர்ச்சியாகவும் இருந்ததை வருணால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை . "ஹாய் கயல் , உள்ளே வாங்க!" என்றான். கயல் உள்ளே வந்தவுடன், அவளுடைய காலணிகளை கழட்டினாள். காலணிகளை கழட்ட அவள் குனியும்போது அவள் பின்னழகுகளை பார்த்து ரசித்து மனதுக்குள் பாராட்டினான். அவள் அவனுக்கு கொள்ளை அழகாக தோன்றினாள். "இந்த சாண்டல்ஸ் போட்டு நடப்பதே ரொம்ப கஷ்டமாக இருக்கு வருண், கால் லேசாக பிசகிவிட்டது" என்றாள். கவலைப்படாதே கயல், லாப் டாண்ஸ் எல்லாம் ஆட சொல்லி வற்புறுத்த மாட்டேன்! அதற்காகத்தானே இந்த லேம் எக்ஸ்க்யூஸ் எல்லாம்" என்றான் அவளை குறும்பாக பார்த்தப்படி.

"அதெல்லாம் இல்லை, உங்க முன்னாலே ஆட எனக்கொண்ணும் பயமில்லை, உங்களுக்குத்தான் பயம் போல தோன்றுகிறது" என்றாள் கயல்!
"எனக்கென்ன பயம்?" என்று கேள்வியுடன் பார்த்தவனை நோக்கி, "என் டாண்ஸ் பார்த்து மயங்கி விழுந்துவிடுவீங்களோனு பயமோ என்னவோ" என்று கவர்ச்சியாக சிரித்தாள். அவள் சொல்வதில் உண்மையிருக்கத்தான் செய்தது. அவன் உண்மையிலேயே அவள் அழகில் மயங்கிப்போய்தான் இருந்தான். அவளை சேலையில் பார்த்ததில் இருந்து அவனுக்கு என்னென்னவோ தோன்றியது.

"என்ன யோசனை"? என்றாள் கயல், அவள் அழகான உதடுகளை விரித்து. "சேலையில் நீ ரொம்ப அழகாயிருக்கிறாய், கயல்" என்று மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லியே விட்டான், மரியாதையை வார்த்தையில் தவிர்த்து. "நன்றி வருண்" என்று சொல்லும்போது வெட்கத்தால் கயலின் முகம் சிவந்தது. வருண் அவளை புகழ்வது, அவனின் நேர்மை , அவளிடம் காட்டும் அன்பு எல்லாமே அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அவன் கேலி செய்யும்போதுகூட அதில் அர்த்தம் நிறைந்து இருக்கும்.

வருணை அவள் சந்தித்தவிதமே வித்தியாசமானது. முதலில் அவன் பேசுவது கேலியா உண்மையா, உண்மை கலந்த கேலியா என்று அவளுக்கு புதிராக இருந்தது. பழக பழக அவன் இனிமையாகவும் இருந்தான். கயல் அவனை அளவுக்கதிகமாக நம்பினாள். தன்னைப்பற்றி அவன் பேசுவதை வைத்து அவன் கேரக்டரை புரிந்துக்கொள்ள முயற்சித்தாள். வருண் ஒரு எமோசனல் கேரக்டர், கோபம் அதிகமாக வரும் அவனுக்கு. ஆனால், அவளிடம் மிகவும் அன்பாக இருப்பான். அவள் நட்பை மதிப்பான், அவள் உணர்ச்சிகளை புரிந்துகொள்வான்.

"மயங்கி விழ மாட்டேன், ஆனா உன்னை ஏதாவது செய்துவிடுவேனோ" என்ற பயம்தான், என்றான். அவள் லேசாக சிரித்த மாதிரி இருந்தது. "சரி, நான் உனக்காக, சுமாரான டீ போட்டு வைத்திருக்கேன், எவ்வளவு சுகர் போடனும்" என்று கேட்டான் உபசரிப்புடன். "எனக்குத்தான் இனிப்புனா ரொம்ப பிடிக்குமே, இரண்டு ஸ்பூன் போடுங்க" என்றாள் கயல். டீயை எடுத்து கொண்டுவந்து சோஃபாவில் அமர்ந்திருந்த அவள் கையில் கொடுத்தான். அவள் பருகிக்கொண்டு இருக்கையில் மறுபடியும் அவள் கால்களை வலியுடன் அசைத்தாள். இதை கவனித்த வருண், அவள் கால்கள் அருகில் ஒரு சின்ன ஹர்ட்வுட் தரையில் அமர்ந்து, "சரி, நான் உன் கால்வலியை சரி செய்கிறேன்" என்று அவள் வலது காலை கைய்யில் எடுத்தான்.

"நீங்க என்ன பெரிய ஃபிசிக்கல் தெரப்பிஸ்டா" என்றாள் கயல், கேலியாக. அவள் காலை அவன் கைகளில் எடுத்து, அவள் விரல்களை, மெதுவாக பிரித்தான். அவள் பாதத்தை லேசாக தடவி விட்டான். அவனுடைய ஸ்பரிசம் அவளுக்கு இதமாக இருந்தது. அவளுடைய நிலைமை வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மோசமாகிக்கொண்டு இருந்தது. அவன் தெரிந்தே தான் செய்கிறானா என்று அவளால் சொல்ல முடியவில்லை. சிறிது நேரம் சென்று, அவள் தனது இன்னொரு காலைக்கொடுத்தாள். "இந்த காலுமா பிசகிவிட்டது?" என்றான் அவன். "இல்லை, அந்த கால்லதான். இப்போ சரியான மாதிரி இருக்கு" என்றாள். "அப்போ எதுக்கு இந்த கால்" என்று அவள் காலை ஆசையுடன் கைய்யில் எடுத்துக்கொண்டு, அவள் விரல்களில் சொடக்குப்போட்டு விட்டான்! அவள் பாதத்தை இதமாக தடவி விட்டான்.

திடீரெனெ ஏதோ ஞாபகம் வந்தவனாக எழுந்து போய், "உனக்கு ஒண்ணு ஸ்பெசலா வைத்திருக்கேன்" என்று வேகமாக உள்ளே சென்றான். திரும்பியவன் கையில் ஒரு சின்ன மல்லிகை சரத்துடன் வந்தான். உனக்காக என் தோட்டத்தில் பூத்ததை கோர்த்து வைத்திருக்கேன், என்றான், அன்புடன். "நீங்களே என் தலையில் வைத்து விடுங்களேன்" என்று எழுந்து அவனுக்கு முதுகைக்காட்டி நின்றாள். அவள் தலை பின்னவில்லை. லேசாக கூந்தலை விரித்துவிட்டு கட்டியிருந்தாள், அவளுக்கு அடர்த்தியான கூந்தல். வருண், அவள் கூந்தலில் மல்லிச்சரத்தை வைத்தான். அவனால் அவள் கூந்தல் இடையில் விரலைவிட்டு கோதிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. தலையில் வைத்துவிட்டு அதை முகர்ந்து பார்த்தான். அவளுடைய சங்கு கழுத்தை பார்த்தான். அவனையே அறியாமல், அவள் கழுத்தில் அவன் உதடுகளைப்பதித்தான். கயல், சிலையாக நின்றாள். அவனுடைய முத்தத்தால், அவள் கால்கள் பலவீனமாகி, அவன் மார்பில் லேசாக சாய்ந்தாள். அவன் கைகள் அவள் இடையை மெதுவாக பிடித்திருந்தன. இன்னும் கொஞ்ச நேர்ம் போயிருந்தால் என்ன நடந்திருக்குமோ. திடீரென்று கயலின் செல்ஃபோன் ஒலித்தது. இருவருமே மீண்டும் இவ்வுலகத்துக்கு வந்தார்கள். கயலின் தங்கை கால் பண்ணி இருந்தாள். "என்ன இன்னும் வரக்க்காணோம்? எனக்கு ஹோம்வொர்க் ஹெல்ப் வேணும்" என்றாள். "இதோ வந்துவிட்டேன்" என்று புறப்பட்டாள், கயல்! "சாரி வருண், ஐ ஹேவ் காட் டு கோ", என்று கிளம்பினாள். போகும்போது, "தாங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்", என்று ஒரு புன்னகயுடன் சென்றாள். அந்த புன்னகையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன!

6 comments:

மங்களூர் சிவா said...

எதோ மலையாளபடம் ப்ரிவியூ பாத்த மாதிரி இருக்கு

கயல்விழி said...

//எதோ மலையாளபடம் ப்ரிவியூ பாத்த மாதிரி இருக்கு//
credit goes to Varun.

Anonymous said...

Sensitive writing!!!

வருண் said...

**** மங்களூர் சிவா said...
எதோ மலையாளபடம் ப்ரிவியூ பாத்த மாதிரி இருக்கு***

மலையாளப்படம்லாம் பார்ப்பீங்களா? அதுவும் ப்ரிவியூவெல்லாமா கட்டுறாங்க?

எனக்கு மலையாளம் தெரியாதுங்க, அதனால் மலையாளப்படம் பார்ப்பதில்லைங்க!

Thanks anyway! :)

வருண் said...

///Anonymous said...
Sensitive writing!!!///

நன்றி! :)

வருண் said...

**** கயல்விழி said...
//எதோ மலையாளபடம் ப்ரிவியூ பாத்த மாதிரி இருக்கு//
credit goes to Varun.****

நீ ரொம்ப நல்ல பொண்ணு, கயல். :-)

யார் யாருக்கு எதைக்கொடுக்கனுமோ அதை சரியா கொடுத்துடற, கயல்! :-P