Friday, June 20, 2008

மேலும் எங்களைப்பற்றி...

எங்களுக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் ரொம்ப நன்றி. :) முக்கியமாக இங்கே லதானந்த் சாரை குறிப்பிட வேண்டும், அவர் தான் முதன் முதலில் வரவேற்பளித்து இந்த வலைப்பூவை அவருடைய வலைப்பூவில்:lathananthpakkam.blogspot.com அறிமுகப்படுத்தினார். ஆனந்த் சாரின் வலைப்பூவை படித்து தான் எங்களுக்கும் இப்படி ஒரு வலைப்பூவை தொடங்கும் எண்ணம் வந்தது. மேலும் நான் எழுதிய பல பதிவுகளுக்கு டிப்ஸ் கொடுத்ததும் லதானந்த் சார் தான். அவர் மீண்டும் எழுத ஆரம்பித்தால், அவருடைய வாசகி என்ற முறையில் ரொம்ப மகிழ்ச்சியடைவேன்.

இங்கே காதலர்கள் எழுதுகிறோம் என்பதால் சில பேருக்கு சந்தேகம் வந்திருக்கிறது, அப்படி வருவது இயல்பு தான். அனைவர் சந்தேகத்தையும் உடனடியாக தீர்ப்பது கடினம், ஏனென்றால் இது வலையுலகம். வலையுலக கருத்து சுதந்திரம் தந்த தைரியத்தில் நாங்களும் எங்களைப்பற்றி எழுத வலைப்பூவை தேர்ந்தெடுத்தோம். பிறகென்ன, காதல் அனுபவங்களை வீட்டிலா சொல்ல முடியும்? நண்பர்களிடமும் முழுவதுமாக பகிர்ந்துக்கொள்வது கடினம். காதலைப்பற்றி மட்டும் அல்ல, எங்களை பாதித்த அனைத்து எண்ணங்களைப்பற்றியும் எழுதலாம் என நினைக்கிறோம்.

எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்தீர்கள் என்றால் நிச்சயம் எங்கள் இரண்டு பேரையோ அல்லது என்னை மட்டுமோ(வழக்கமா வருணை விட என்னை தான் நிறைய பேருக்கு பிடிக்கிறதாம் - ஒரு மரத்தடி ஜோசியர் சொன்னார் :)) பிடிக்கும். மேலும் எங்களுடைய தனித்துவம் புரியும். நாங்கள் இருவருமே ஒருவர் கருத்தை மற்றொருவர் மீது திணிப்பதில்லை. அவருக்கென்று தனி கருத்துக்களும் எனக்கென்று தனி கருத்துக்களும் இருக்கின்றன.

எனவே, கொஞ்சம் தயவு செய்து பொறுமை தேவை வலையுலக மகாஜனங்களே!பொறுமை எருமையை விட பெரியது. எங்களுடைய பதிவுகள் இதுவரை நீங்கள் படித்த யார் சாயலிலும் இல்லாமல் யூனிக்காக இருக்கும், அது மட்டும் உறுதி. முதலில் வாய்ப்பு கொடுத்துவிட்டு பிறகு விமர்சனம் செய்யலாமே? எங்களை தொடர்ந்து கவனியுங்கள் பிடிச்சிருந்தால் பழகலாம் இல்லை என்றால் விட்டுவிடலாம் :) என்ன சொல்றீங்க?

11 comments:

லதானந்த் said...

அன்புள்ள கயல் மற்றும்வருண் ஆகியோருக்கு!

என்னைக் குறிப்பிட்டமைக்கு நன்றி.

சிறப்பாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

மீண்டும் பிளாக்கில் எழுதுகிறேன். ஆனால் ஒன்று!
எப்போது எழுதக் கூடாது எனத் தோன்றுகிறதோ அப்போது நிறுத்தி விடுவேன்.

கயல்விழி said...

நன்றி ஆனந்த் சார்.

அது ஏன் எழுதக்கூடாது என்று உங்களுக்கு தோணும்?

நந்து f/o நிலா said...

//எங்களுடைய பதிவுகள் இதுவரை நீங்கள் படித்த யார் சாயலிலும் இல்லாமல் யூனிக்காக இருக்கும்,//

அப்படியே ஆகட்டும், காதலர்கள் எழுதும் ப்ளாக்கை படிக்கும் போதே ஒரு சந்தோஷத்தைத்தான் கொடுக்கிறது.இது உண்மையில் ஒரு வித்தியாசம்தான்,

தொடர்ந்து எழுதுங்கள் கயல்

வருண் said...

லதானந்த் said...

**அன்புள்ள கயல் மற்றும்வருண் ஆகியோருக்கு!

என்னைக் குறிப்பிட்டமைக்கு நன்றி.**

நன்றி லதானந்த் அவர்களே! :) எனக்கு கயல் அளவுக்கு "ப்ளாக் கல்ட்சர்" அவ்வளவு பரிச்சயம் இல்லை. நான் கொஞ்சம் "ஸ்லோ ஸ்டார்ட்" தான். கயல் அளவுக்கு ஐ க்யு வும் கிடையாது, பக்குவமும் இல்லை. அதனால் என்னைப்புரிந்துக் கொண்டமைக்கு நன்றி :)

கயல்விழி said...

//அப்படியே ஆகட்டும், காதலர்கள் எழுதும் ப்ளாக்கை படிக்கும் போதே ஒரு சந்தோஷத்தைத்தான் கொடுக்கிறது.இது உண்மையில் ஒரு வித்தியாசம்தான்,

தொடர்ந்து எழுதுங்கள் கயல்//

மிக்க நன்றி நந்து அவர்களே :)

Divya said...

தொடரட்டும் உங்கள் காதல் வலைதளம்!!

கயல்விழி said...

//தொடரட்டும் உங்கள் காதல் வலைதளம்!!//

மிக்க நன்றி திவ்யா அவர்களே. :)

கயல்விழி said...
This comment has been removed by the author.
ஜி said...

:))) Enakku actual reason ethuvum puriyala.. But unga blog nalla irukkuthu.. so continue maadi.. and keep giving us good writings :))

கயல்விழி said...

//:))) Enakku actual reason ethuvum puriyala.. But unga blog nalla irukkuthu.. so continue maadi.. and keep giving us good writings :))//

என்னது புரியல? சொன்னால் விளக்கம் தருவேன்.

நன்றிஜி. :) :)

ஜி said...

//என்னது புரியல? சொன்னால் விளக்கம் தருவேன்.

நன்றிஜி. :) :)//

Illa.. Silarukku santhegam appadi ippadinu soneengale... appadi santhega padurathukaana reason ethuvume enakku puriyalainu solla vanthen :)))

Neenga yaarukkume vilakkam kodukka vendiyathillainnu nenakiren