Tuesday, June 17, 2008

Sex and the Cityஉங்களுக்கு கூடுதலாக ஒரு எக்ஸ் க்ரோமோசோம் இருக்குமானால் உங்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். :) முழுக்க முழுக்க பெண்கள் ரசிக்க மட்டும் எடுக்கப்பட்ட படம் என்பதால் திரையரங்கு முழுவதும் பெண்கள் கூட்டம். திருவிழாவுக்கு பலி கொடுக்கப்படும் ஆடுகள் போல ஒரு டைப்பாக முழித்துக்கொண்டே தங்கள் கேர்ள்ப்ரெண்டுகளுக்கு காவலாக மொத்தம் 4 ஆண்கள் தான் இருந்தனர். HBO-வில் சூப்பர் ஹிட் தொடராக வந்த செக்ஸ் அண்ட் த சிட்டி தான் முழு நீள(ல?) படமாக வெளி வந்து இருக்கிறது.

நாற்பது வயதுக்கு மேலாகியும் திருமணமாகாத, நிறைய படித்த, தைரியம் மிக்க நாலு நியூயார்க் பெண்களைப்பற்றிய கதை இது. நவீன கால பெண் பிரம்மச்சாரிகள். எதை பற்றியும் கவலைப்படாத இதை போன்ற பெண்கள் இந்தியர்களுக்கு மட்டுமல்ல, அமரிக்கர்களுக்கும் ரொம்ப புதுசு.

கதையின் கதாநாயகி கேரி ப்ராட்ஷா(சாரா ஜெசிகா பார்க்கர்)ஒரு எழுத்தாளர். இவருடைய கம்ப்யூட்டர் திரையில் தோன்றும் பன்ச் வரிகளுக்காகவே இந்த தொடரை பார்த்தவள் நான். நிறைய ஆண்களை டேட் பண்ணிவிட்டு கடைசியில் தன் நீண்டகால ஆண் நண்பரான மிஸ்டர்.பிக்(ஆமாம், நீங்கள் நினைக்கும் அதே காரணப்பெயர் தான் :))-கையே திருமணம் செய்துக்கொள்கிறார். அவர்கள் திருமணம் கடைசி நேரத்தில் நின்று போகிறது. பிக் பின்வாங்கிவிடுகிறார்.

அடுத்த தோழியான சமாந்தா(கிம் கெட்ரால்) தன்னுடைய ஹாலிவுட் பாய்ப்ரெண்டுடன் செட்டில் ஆகிறார். இப்படி செட்டில் ஆவது சமாந்தாவை பொறுத்தவரை அதிசயம். சமாந்தா ஒரு ப்ளே கேர்ள், ஒரே ஆணுடன் செட்டில் ஆவது அவருக்கு பிடிக்காது.

பிறகு நம்ம ஸ்வீட் சார்லட்(க்ரிஸ்டின் டேவிஸ்)யூதரான ஹாரியை திருமணம் செய்துக்கொண்டு பிறகு குழந்தை இல்லாத காரணத்தால் ஒரு சைனீஸ் குழந்தையை தத்தெடுக்கிறார். ஆனால் குழந்தை ஆசை மட்டும் இவரை விடவில்லை.

நான்காவதாக மிராண்டா(சிந்தியா நிக்சன்)தன் கணவர் ஸ்டீவ் மற்றும் 1 வயது குழந்தை ப்ரேடியுடன் மன்ஹாட்டனில் வாழ்ந்து வரும்போது எதிர்பாராத ஒன்று நடக்கிறது. இவருடைய அன்பு கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொள்ளுகிறார். ஆவேசமாகும் மிராண்டா தன் கணவரை பிரிந்துவிடுகிறார்.

கடைசியாக என்ன நடந்தது? கேரியின் கல்யாணம் நடந்ததா, சமாந்தாவால் ஒரே பாய்ப்ரெண்டுடன் வாழ முடிந்ததா, சார்லட்டுக்கு குழந்தை பிறக்குமா மற்றும் மிராண்டாவுக்கும் ஸ்டீவுக்கும் சமாதானமாகுமா போன்றவை மீதி கதை. கடைசியில் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமாக நினைப்பவர்கள் உண்மையான காரணமே இல்லை, நம்முடைய பிரச்சினைகளுக்கு எப்படி நாமே காரணமாக மாறுகிறோம் என்பதை அழகாக விளக்கி இருக்கிறார்கள்.

இந்த படம் கடைசியில் தேவதைக்கதைகளில் வரும் முடிவு போல முடிகிறது "And they lived happily ever after". கூடவே பெண்களைக்கவரும் எல்லா விஷயமும் உண்டு. செக்ஸ், fashion, ஸ்டைல், திருமண உடை மற்றும் ப்ளானிங். ஆனால் ஆண்களுக்கும் இந்த படம் பிடிக்கும்(நிறைய ஜில்பான்ஸ் மேட்டர் இருப்பதால்)

படத்தில் நீல நிற ட்ரெஸ் - மிராண்டா
கருப்பு - சார்லட்
மணப்பெண் - கேரி ப்ராட்ஷா
சிகப்பு - சமாந்தா

பின்குறிப்பு: இங்கே வருண், ஆண்களைக்கவரும் இண்டியானா ஜோன்ஸ் போன்ற லொள்ளு பட விமர்சனம் எழுதி வருவதால், பழிக்கு பழியாக "செக்ஸ் அண்ட் த சிட்டி" போன்ற chick flicks பட விமர்சனம் எழுதுகிறேன் என்று தெரிவித்துக்கொள்ளுகிறேன். இவர் தன் போக்கை கைவிடாவிட்டால் நான் கோலங்கள் சீரியலுக்கு எல்லாம் விமர்சனம் எழுதவேண்டி இருக்கும் என்பதையும் தாழ்மையாக தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

26 comments:

varuN said...

****பின்குறிப்பு: இங்கே வருண், ஆண்களைக்கவரும் இண்டியானா ஜோன்ஸ் போன்ற லொள்ளு பட விமர்சனம் எழுதி வருவதால், பழிக்கு பழியாக "செக்ஸ் அண்ட் த சிட்டி" போன்ற chick flicks பட விமர்சனம் எழுதுகிறேன் என்று தெரிவித்துக்கொள்ளுகிறேன். இவர் தன் போக்கை கைவிடாவிட்டால் நான் கோலங்கள் சீரியலுக்கு எல்லாம் விமர்சனம் எழுதவேண்டி இருக்கும் என்பதையும் தாழ்மையாக தெரிவித்துக்கொள்ளுகிறேன்***

என்ன கயல், இப்படியெல்லாம் என்னை நீ மிரட்டனுமா?

சரி, நான் காட்ஃபாதர் (1972) படம் பற்றி எழுதவா?

ரொம்ப நல்ல படம், கயல்! :)

பரிசல்காரன் said...

//உங்களுக்கு கூடுதலாக ஒரு எக்ஸ் க்ரோமோசோம் இருக்குமானால் உங்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.//

இந்த வரிகளை மிக ரசித்தேன் கயல். (என் வூட்டுப்பக்கம் வந்ததற்கு தேங்ஸூங்கோ!.. தெனத்துக்கும் வாங்க)

ஜி said...

Romba iZuththuttaangannu sonaanga... Muzukka muzukka ladieskaana subject nu sollitteenga... so ini kandippa paaka mudiyaathu :)))

கயல்விழி said...

//இந்த வரிகளை மிக ரசித்தேன் கயல். (என் வூட்டுப்பக்கம் வந்ததற்கு தேங்ஸூங்கோ!.. தெனத்துக்கும் வாங்க)//

வரேன். :)

நீங்களும் நம்ம வூட்டுப்பக்கம் தவறாம வாங்கோ.

கயல்விழி said...

//Romba iZuththuttaangannu sonaanga... Muzukka muzukka ladieskaana subject nu sollitteenga... so ini kandippa paaka mudiyaathu :)))//

அதெல்லாம் முடியாது, கண்டிப்பா நீங்க இந்த படம் பார்த்து தான் ஆகனும்.

சென்ஷி said...

:))

கயல்விழி said...

சென்ஷியின் சிரிப்புக்கு என்ன அர்த்தம்? :)

கயல்விழி said...

//என்ன கயல், இப்படியெல்லாம் என்னை நீ மிரட்டனுமா?

சரி, நான் காட்ஃபாதர் (1972) படம் பற்றி எழுதவா?

ரொம்ப நல்ல படம், கயல்! :)//

தொலைக்காட்சிகளில் சித்தி என்ற புரட்சிகரமான சீரியல் ஒரு காலத்தில் வெளிவந்துக்கொண்டிருந்தது. அந்த காவியத்தை பற்றி நானும் எழுதவா?

varuN said...
This comment has been removed by the author.
varuN said...

சித்தியா??

ராதிகா நடித்த சீரியல்?

நீயே அதை ரசித்துப்பார்த்து இருக்க மாட்டாய்! உனக்கே பிடிக்காததை அடுத்தவர்களை ஃபோர்ஸ் செய்து பார்க்க/படிக்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்?

இந்ஹ மாதிரி எல்லாம் அநியாயம் செய்றியே, உனக்கு மன்சாட்சியெல்லாம் இல்லையா? ஒருவேளை இதயமே இல்லையா, கயல் ?

என்னிடம் ரெண்டு இதயங்கள் இருக்கு, ஒண்ணு உனக்கு வேணுமா?

உன்னிடம் இருந்து திருடிய உன் இதயத்தை நான் தர முடியாது. பதிலாக என் இதயத்தை வேணா தர்ரேன்! வேணுமா? :)

கயல்விழி said...

பேசாமல் நீங்க மெகா சீரியலுக்கு வசனம் எழுதலாம் வருண். தாய்குலங்களின் ஆதரவை அள்ளுவீர்கள்.

பரிசல்காரன் said...

Varun said..
//என்னிடம் ரெண்டு இதயங்கள் இருக்கு, ஒண்ணு உனக்கு வேணுமா?

உன்னிடம் இருந்து திருடிய உன் இதயத்தை நான் தர முடியாது. பதிலாக என் இதயத்தை வேணா தர்ரேன்! வேணுமா? :)//


யோவ்.. என்னய்யா நடக்குது இங்க?

varuN said...

அய்யோ கயல்!

அவ்வளவு மோசமாவா இருக்கு இந்த வசனம்?

ஒரே ஒரு தாய்க்குலத்தின் ஆதரவை அள்ளினால் போதும்!

Shwetha Robert said...

Flow of your review is good:)

முழு நீள(ல?)

bracket message??? LOl:))

சென்ஷி said...

//பரிசல்காரன் said...
Varun said..
//என்னிடம் ரெண்டு இதயங்கள் இருக்கு, ஒண்ணு உனக்கு வேணுமா?

உன்னிடம் இருந்து திருடிய உன் இதயத்தை நான் தர முடியாது. பதிலாக என் இதயத்தை வேணா தர்ரேன்! வேணுமா? :)//


யோவ்.. என்னய்யா நடக்குது இங்க?
//

:)))

என்ன பரிசலண்ணே.. ப்ரோபைல் வியுல டீம் மெம்பர்ல ஒரே ஒரு பேர்தான் இருக்குது. அது வருண்.

ஒரு வேள அவரே அவருக்கு இதயத்த தந்துக்குறாரோ...

ஸ்பிலிட் பர்சனாலிடி மாதிரி ஏதும் புதுவியாதியா இருக்கும்ன்னு நெனைக்குறேன் :))

கயல்விழி said...

//:)))

என்ன பரிசலண்ணே.. ப்ரோபைல் வியுல டீம் மெம்பர்ல ஒரே ஒரு பேர்தான் இருக்குது. அது வருண்.

ஒரு வேள அவரே அவருக்கு இதயத்த தந்துக்குறாரோ...

ஸ்பிலிட் பர்சனாலிடி மாதிரி ஏதும் புதுவியாதியா இருக்கும்ன்னு நெனைக்குறேன் :))//

உங்களுக்கு லதானந்த் தெரியுமா? அவரிடம் கேட்டு வெரிஃபை பண்ணிக்கொள்ளவும். :)

என்னுடைய ப்ளாகை நேற்று மாற்றி வடிவமைத்ததால் கொஞ்சம் குழப்பம்.

ஒரு தாழ்மையான கோரிக்கை: எதையும் முதலில் உறுதிபடுத்திக்கொண்டு பிறகு கருத்து எழுதலாமே?

varuN said...

பரிசல்காரரே:

கொஞ்சம் வசனம் சினிமா நடையில் அதிகமாக எழுதிவிட்டேன் தான் மன்னிக்கவும்!

--------------------

சென்ஷி:

ஸ்பிலிட் பர்சனாலிட்டி, அன்னியன், அம்பி எல்லாம் இல்லைங்க! சும்மா ஒரு வசன நடையில் எழுதினேன். அது என்னென்னவோ டேர்ன் எடுக்குது!

-----------------

சாரி கயல் ஃபார் ஆல் தீஸ் மெஸ்! :(

கயல்விழி said...

No problem :)

கயல்விழி said...
This comment has been removed by the author.
varuN said...

சென்ஷியின் கற்பனைத்திறன் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.

கயலையும், வருணையும் ஒரே ஆள் னு கற்பனை பண்ணிவதில் இருந்து அவரின் யுனீக்னெஸ் தெரிகிறது! :)

கயல்விழி said...

//Flow of your review is good:)

முழு நீள(ல?)

bracket message??? LOl:))//

நன்றி ஸ்வேதா ராபர்ட். :)

லதானந்த் said...

உங்க சண்டை சாடியிலே என்னை ஏஞ் சாமி இழுக்கிறீங்க. நாம் பாட்டுக்குத் தரமான சிறுகதை பத்தி நினைச்சு எலும்பும் தோலுமா இருக்குறேன்.

கயல்விழி said...

//எலும்பும் தோலுமா //

இதெல்லாம் உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியலயா?:)

உங்களுக்கே சிறுகதை எழுதுவது கஷ்டம் என்றால் எங்க நிலையை நினைச்சுப்பார்க்கவும்.

மங்களூர் சிவா said...

/
இவர் தன் போக்கை கைவிடாவிட்டால் நான் கோலங்கள் சீரியலுக்கு எல்லாம் விமர்சனம் எழுதவேண்டி இருக்கும் என்பதையும் தாழ்மையாக தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
/

தெரிவித்து கொன்னுட்டீங்க!!

:)))

rapp said...

//இவர் தன் போக்கை கைவிடாவிட்டால் நான் கோலங்கள் சீரியலுக்கு எல்லாம் விமர்சனம் எழுதவேண்டி இருக்கும் என்பதையும் தாழ்மையாக தெரிவித்துக்கொள்ளுகிறேன்//
சூப்பர் பன்ச்

rapp said...

////என்ன கயல், இப்படியெல்லாம் என்னை நீ மிரட்டனுமா?

சரி, நான் காட்ஃபாதர் (1972) படம் பற்றி எழுதவா?

ரொம்ப நல்ல படம், கயல்! :)//

தொலைக்காட்சிகளில் சித்தி என்ற புரட்சிகரமான சீரியல் ஒரு காலத்தில் வெளிவந்துக்கொண்டிருந்தது. அந்த காவியத்தை பற்றி நானும் எழுதவா?

////

இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்.