Friday, June 20, 2008

நீங்கள் தமிழரா?

நீங்கள் தமிழரா?

ஆமாம்.

எப்படி சொல்றீங்க?

நான் தமிழ்லதான் பேறேன், எழுதுறேன், படிக்கிறேன்.

தமிழ்ல பேசினாலென்ன,படித்தாலென்ன?

நீங்கள் ஆரியராகக்கூட இருக்கலாம் இல்லையா?

அப்படினா? என்னனு எனக்குத்தெரியாது.

திராவிடர்கள் மட்டும்தான் தமிழர்கள்னு சொல்றாங்களே?

சரி, நான் அப்போ சுட்த்தமான தமிழர் இல்லைனு வைத்துக்கொள்வோம்.
------------------

நீங்க சார்?

எனக்கு ழ, ள, ல உச்சரிப்பு எல்லாம் வராதுங்க. ஆனால் அப்பா அம்மா பேசுறமொழி தமில்தான். நானும் பிறந்ததிலிருந்து தமில் லதான் பேசுறேன். நான் தமிலர் இல்லைனா யாருங்க?

தமிழ் னுகூட சொல்லத்தெரியவில்லை, நீங்களெல்லாம் என்ன சார் தமிழர்?

உண்மைதான் நான் கிராமத்தில் வயல், காட்டில் உழைப்பவன் சார். அம்மா அப்பா பேசுற உச்சரிப்புதானங்க எனக்கு வரும்? அவர்கள் உடல் வளைய வேலை செய்யும்போது,நாக்கு வளைய ஒழுங்கான தமிழ்ல எப்படி பேசமுடியுங்க? "கலோக்கியல்" தமிழலதானே பேசமுடியும்?

நான் ஒண்ணும் சொல்லவில்லைங்க, ஆனால் ஒரு சில பேர் தமிழ்லகூட ஒழுங்கா பேசத்தெரியலை இவர்லாம் தமிழர்னு மார்தட்டிக்கிறார் என்பார்கள்.

அப்போ நான் சுத்தமான தமிழர் இல்லைனு வைத்துக்கொள்வோம்.
----------------------------

நீங்க சார்?

நான் தமிழர் தாங்க.ஆனால் என்னுடைய நாடு இந்தியாங்க. எனக்கு நாட்டுப்பற்று ஜாஸ்திங்க.

அப்போ ஈழ தமிழருக்காக உங்கள் சப்போர்ட் இல்லையா? நம்ம சகோதரர்கள்தானே அவர்கள்?

நிச்சய்மாக உண்டு.ஆனால் நாட்டுக்கு எதிராப்போய் எப்படீ சப்போர்ட் செய்வதுங்க? அது நம்ம நாட்டுக்கு செய்யும் துரோகம் இல்லையா?

அப்போ தமிழர்களுக்க்கு துரோகம் செய்யலாமா? நீங்களும் நல்ல தமிழர் இல்லைங்க.

அப்போ நானும் சுத்தமான தமிழர் இல்லைனு வைத்துக்கொள்வோம்?

----------------------------------

அப்போ யார்தாங்க சுத்தமான தமிழர்?

எனக்குத்தெரியவில்லை! உங்களுக்கு?

24 comments:

Athisha said...

இல்லைங்க நான் தெலுங்கு

ஆனா பிறந்து வளர்ந்து சம்பாரிக்கிறது எல்லாமே தமிழ்லதான்

மோகன் கந்தசாமி said...

அடடா! ரொம்ப மெனக்கெடாதீங்க வருண்,
தமிழன் என்பவன் ஒரு கற்பனை பாத்திரம் -ன்னு வச்சிக்குங்க.
அந்த கற்பனையை பற்றி தினமும் இரவில் கெட்ட கனா கண்டு காலையில் எழுந்ததும் பக்கங்களை நிரப்பும் பார்டிகளை கேளுங்கள் "தமிழனை எவ்வாறு அடையாளம் காண்கிறீர்கள், ஆப்படிக்க?" என்று. தெளிவான பதில்களை தருவார்கள்.

துளசி கோபால் said...

சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாச்சா? :-)

கயல்விழி said...

என்ன இது வருண், இப்படி எல்லாம் சந்தேகம் வருது உங்களுக்கு? :)

வருண் said...

***அதிஷா said...
இல்லைங்க நான் தெலுங்கு***

அதிஷா: நீங்க உண்மையிலேயே லக்கி!

வருண் said...

****துளசி கோபால் said...
சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாச்சா? :-) ***

அப்படியா நினைக்கிறீர்கள்?

புரியாததை புரிந்துகொள்ள ஒரு சின்ன முயற்சி.

சரி, சங்கை விட்டுவிட்டு சொல்லுங்களேன், யார்தாங்க சுத்தமான தமிழர்கள்? :)

வருண் said...

***கயல்விழி said...
என்ன இது வருண், இப்படி எல்லாம் சந்தேகம் வருது உங்களுக்கு? :)***

நான் ஒரு சரியான மக்கு, கயல்! அதான் இந்த மாதிரி சில்லியான சீரிஸான சந்தேகம்லாம் வருது போலும் :) :)

Athisha said...

\\நீங்க உண்மையிலேயே லக்கி\\

ஐய்யயோ நான் லக்கி இல்ல அதிஷா

அப்பறம் உண்மைல நான் தெலுகில்ல
தமிழுனு சொன்னா யாரும் மதிக்க மாட்டேன்றாங்க அதான்

வருண் said...

உண்மைதான் அதிஷா!

நீங்க தெலுகு னு சொன்னால், உங்கள் தமிழ்ப்பற்றை பார்த்து உங்களுக்கு சிலை வைத்து விடுவார்கள்!

பேசாமல் தெலுகு நான். ஆனால் தமிழ்தான் பிடிக்கும், தமிழ்ப்பற்று அதிகம்னு சும்மா "கதை" விடுங்களேன்! :)

கயல்விழி said...

//நான் ஒரு சரியான மக்கு, கயல்! அதான் இந்த மாதிரி சில்லியான சீரிஸான சந்தேகம்லாம் வருது போலும் :) :)//

ஒத்துகிட்டா சரி :)(JK)

கயல்விழி said...

இப்போ எதுக்காக யார் சுத்த தமிழர் என்று தெரியனும்? கலப்பட தமிழராக இருந்தால் என்ன தவறு?

தமிழ் படிக்க, பேச, எழுத பிடிப்பவர்கள் அனைவருமே தமிழர் தான்.

கயல்விழி said...
This comment has been removed by the author.
வருண் said...

இல்லை கயல், சில அடிப்படைக் கேள்விகள், மிகவும் முக்கியம்.

நமக்குப்புரிந்த மாதிரி இருக்கும், ஆனால் அதையே கேள்வியாகக்கேட்டு பதில் சொல்ல முயன்றால், அது மிகவும் கடினமாக இருக்கும். உனக்கெப்படியோ?? ஆனால் என்னை மாதிரி மக்குகளுக்கு. :) :)

உன்னுடைய மேலோட்டமான பதில்:

"தமிழ் பேச, எழுதத்தெரிந்தவர்கள் எல்லாம் தமிழர்தான்" நல்லாயிருக்கு. ஆனால்... :)

கயல்விழி said...

மேலோட்டமான கருத்தா? ஏன் என்னுடைய கருத்தை மேலோட்டமானது என்று நினைக்கிறீர்கள்?

வருண் said...

ஆமாம், கயல், இதோடு நிறுத்திக்கொண்டால், நம்முள் எந்த பிரச்சினையும் வராது.

ஆனால் நிறையப்பேர் இதோடு நிறுத்தமாட்டார்கள்! :(

கயல்விழி said...

எத்தோடு நிறுத்தனும்? என்ன பிரச்சினை வரும்? யார் நிறுத்தமாட்டார்கள்? நீங்க சொல்வது ஏதுமே புரியவில்லை!

துளசி கோபால் said...

ஒன்னும் சொல்லத்தெரியலை.நான் யாருன்னு எனக்கே தெரியலை. வேணுமுன்னா இந்தியன்ன்னு சொல்லிக்குவேன்.

நான் தமிழ்நாட்டுலே பிறந்தவள். தெலுங்குக் குடும்பத்தைச்சேர்ந்தவள்.

தமிழ்நாட்டில் பிறந்துக் கன்னடம் பேசும் ஆளைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு, இப்ப இன்னொரு நாட்டுக் குடியுரிமை வச்சுருக்கேன்.

வருண் said...

தமிழர்னு உணர்வு வேணும்னு சொல்லுவாங்க!

தமிழர்னா "அயோக்கியர்களுக்கு" கூட சப்போர்ட் பண்ணனும்னு சொல்லுவாங்க!
நியாமே இல்லாமல் பேசனும்னு சொல்லுவாங்க!

அப்படி நீங்க செய்யலைனா, உங்கள் "தமிழ்ப்பற்றை" "தமிழ் இனப்பற்றை" "தமிழ் ஐடெண்டிடியை" கேள்விக்குறியாக்குவார்கள்!

வருண் said...

துளசி கோபால் said...

*** நான் தமிழ்நாட்டுலே பிறந்தவள். தெலுங்குக் குடும்பத்தைச்சேர்ந்தவள்.

தமிழ்நாட்டில் பிறந்துக் கன்னடம் பேசும் ஆளைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு, இப்ப இன்னொரு நாட்டுக் குடியுரிமை வச்சுருக்கேன்.***


அய்யோ!! நீங்க அழகான திராவிட மொழிக் கலவையாக இருக்கீங்க, திருமதி துளசி கோபால்! :)

நனக்கு சொல்பா கன்னடா கொத்துறீ :)

துளசி கோபால் said...

//அழகான திராவிட மொழிக் கலவையாக//

அப்ப இதையும் சேர்த்துக்கலாமே. எனக்கு மலையாளம் எழுத, படிக்க, பேசவும் வரும்:-))))


ஆனால் தாய்மொழி பேசமட்டுமே(-:

கயல்விழி said...

//
ஆனால் தாய்மொழி பேசமட்டுமே(-://

என்னது? பேசமட்டும் தான் தெரியுமா?

உங்களுக்கு இத்தனை தெரிகிறது, எனக்கெல்லாம் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் தான் தெரியும். நானே சிரிச்சிட்டு இருக்கும் போது நீங்க அழலாமா? :)

வருண் said...

கயல்!!

திருமதி கோபால் அவர்கள் தாய்மொழி என்று சொல்வது "தெலுகு" னு நினைக்கிறேன்!

நம்ம ஊரில் நிறையப்பேர் தெலுகு (ரொம்ப கல்லோக்கியல்) வீட்டில் பேசுவாங்க இல்லை? ஆனால் எழுதத்தெரியாது. அதைத்தான் சொல்றாங்கனு நினைக்கிறேன்!

சொல்லுங்க திருமதி கோபால்! நான் சரிதானே? :)

துளசி கோபால் said...

அவுனு:-))))

வருண் said...

துளசி கோபால் said...
***அவுனு:-))))***

That means "YES" in Telugu! :-)

Thanks :-)