Monday, July 7, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 2



முன்பே ஒரு விஷயம் தெளிவாக எழுதிவிடுகிறேன், தமிழ்ப்பெண்கள் என்றால் சில விஷயங்களைப்பற்றியே பேசக்கூடாது, எழுதக்கூடாது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 1.அரசியல் 2.பாலியல்(அந்தப்பெண் அரசியல்வாரிசாகவோ அல்லது மருத்துவராகவோ இல்லாதபட்சத்தில்). தமிழ்சினிமாவில் கூட பொதுவாக பெண்களை ஏதோ அரை லூசுகள் ரேஞ்சுக்கு காட்டுகிறார்கள். உதாரணமாக மனிஷா கொய்ராலா(முதல்வன்), லைலா(ஏறக்குறைய எல்லா படத்திலும்), சமீபத்தில் ஜெனிலியா(சந்தோஷ் சுப்பிரமணியம்) போன்றவர்களை குறிப்பிடலாம். கதாநாயகி வாயாடியாக இருந்தாலும் பரவாயில்லை, விஷயம் தெரிந்த அறிவாளியாக மட்டும் இருக்கவே கூடாது(சில விதிவிலக்குகளைத்தவிர).

தமிழ்பெண்கள் என்ன அரைலூசுகள் என எண்ணும் அளவுக்கு அப்பாவிகளா? இல்லவே இல்லை, சினிமா பெண்களுக்கும் நிஜ உலக பெண்களுக்கும் சம்மந்தமில்லை. தமிழ்ப்பெண்களுக்கு காம உணர்வு இருக்காதா? நிச்சயம் உண்டு. காமத்தைப்பற்றி படிக்கவும், எழுதவும், பார்க்கவும் பிடிக்கும். அரசியலைப்பற்றி திறனாயவும் பிடிக்கும். ஆனால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள தயக்கம். சமுதாயம் நம்மைப்பற்றி என்ன நினைக்குமோ என்ற பயம். நான் அந்த வட்டத்தை எல்லாம் தாண்டி பாலியல் பற்றியும், அரசியல் பற்றியும் முடிந்தவரை எழுதப்போகிறேன். என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை, ஏனெனில் நான் யார் என்பது எனக்கு மிகத்தெளிவாக தெரியும். I don't need reassurance, even though I don't mind having some.

கற்பு பற்றிய என் முதல் நினைவுக்கு சில வருடங்கள் முன்னால் பயணிக்க வேண்டும். அப்போது எனக்கு ஒரு 15 வயதிருக்கும். எதிர்பாலினரால் முதன்முறையாக கவனிக்கப்பட்டு வந்த காலமது, எனக்கும் அப்படி சில க்ரஷ்கள் இருந்தது. பாய்ஸ் என்றால் எதிரிகளாக கருதிவந்தது கொஞ்சம் கொஞ்சமாக மறையத்தொடங்கிய பருவம். இதில் குறிப்பாக விக்கி என்ற கூடப்படித்த மாணவன் என் கருத்தை கவர்ந்தான், எனென்றால் அவன் தான் என்னில் மற்றவர்களை விட அதிக கவனம் செலுத்தினான். அந்த பரவச தினங்களில் அன்றொருநாள், ட்யூஷன் விட்டு வந்த என்னை பிக்கப் பண்ண வந்த அப்பாவின் முகத்தில் என்றும் காணாத இறுக்கம். எப்போதும் "ஏதாவது வாங்கித்தரட்டுமா, சாப்படறியாமா" என்றெல்லாம் அன்பாக கேட்கும் அப்பாவின் முகத்தில் சிந்தனையுடன் கலந்த கவலை ரேகைகள். சாலைவிதிகளை மீறாத அப்பா அன்று வாகனம் ஓட்டுவதில் நிறையவே தப்பு செய்தார். "வூட்ல சொல்லிட்டு வந்தியா" போகிற போக்கில் ஒரு ஆட்டோக்காரன் திட்டினான்.

எனக்கு ஏதோ ஒன்று ரொம்ப சரி இல்லை என்பது மட்டும் தெரிந்தது, ஆனால் அது என்னவென்று கேட்டு தெரிந்துக்கொள்ள பயம். அப்பா என்பவர் என்னைப்பொறுத்தவரையில் ரொம்ப மரியாதைக்குரிய மற்றும் அன்புக்குரிய ஜீவன். "உடம்புக்கு ஏதும் சரி இல்லையோ, ஒருவேளை ஹேமாவுடைய அப்பா மாதிரி ஹார்ட் அட்டாக் ஏதும்.." நினைப்பே என்னை கலக்கியது. "அப்பாவுக்கு ஏதும் ஆகக்கூடாது கடவுளே!"

"இன்று பெப்சி உங்கள் சாய்ஸ் வரும் டேடி" அவர் கவனத்தை கலைக்க ஏதோ என்னாலான முயற்சி செய்து பார்த்தேன். செய்திகளுக்குப்பிறகு அப்பா கொஞ்சமும் மிஸ் பண்ணாமல் பார்க்கும் நிகழ்ச்சி இந்த பெப்சி உங்கள் சாய்ஸ். எங்களுடைய படிப்பு கெடும் என்பதற்காக வீட்டில் கேபிள் டிவி கனெக்ஷன் போடவில்லை. ஒரு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு போயிருந்த போது தான் முதன்முதலில் பெப்சி உங்கள் சாய்ஸ் பார்க்க நேர்ந்தது.

"ஹலோ நான் தான் பெப்சி உமா பேஷ்றேன், பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ஷிக்காக. நீங்க யார் பேஷறது?" - பட்டுப்புடவையும், விரித்துப்போட்ட ஹேர்ஸ்டைலும், நல்ல குரல்வளமும், அழுத்தமான மேக்கப்புமாக இருந்த பெப்சி உமாவை அப்பாவுக்கு பார்த்தவுடனே பிடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். "யார் இந்த பொண்ணு, நல்லா பேசறாளே?" என்று கேட்டு விசாரித்து தெரிந்துக்கொண்டார். வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக வீட்டுக்கு கேபிள் கனெக்ஷன் கொடுக்கப்பட்டது. பிறகு பெப்சி உமாவின் நிகழ்ச்சியாக இருந்தால் வாரம் தவறாது எங்களுடைய மறைமுக கிண்டல்களையும் பொருட்படுத்தாது ஏதோ தெய்வத்தைப்பார்ப்பது மாதிரி ஒருவித பரவச நிலையில் பார்ப்பார். பார்ப்பாரே தவிர எங்களுக்கு முன்னால் பெப்சி உமாவுக்கு ஃபோன் பண்ணி பேச முயற்சி பண்ணியதில்லை. ஒருவேளை நாங்கள் பார்க்காதபோது செய்திருக்கலாம். பெப்சி உமாவுக்கு கல்யாணம் ஆனபோது வருத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களில் என் அப்பாவும் ஒருவர்.

ஆனால் அன்று, பெப்சி உமாவும் அவருடைய கவனத்தை ஈர்க்கவில்லை. வீடு வந்தவுடன் அவர் மெளனம் கலைந்தது, "அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை, தொந்தரவு பண்ணாதே. நீயே டேபிள் மேல் இருக்கிறதை சாப்பிட்டு உன் ரூமுக்கு போய் நல்ல பிள்ளையா ஹோம்வொர்க் பண்ணு, சரியா?". எனக்கு எதோ புரிந்தது மாதிரி இருந்தது. "இந்த பிரச்சினை அம்மாவுடன் சம்மந்தப்பட்டதா?". முன்பு இருந்ததை விட கலக்கம் பலமடங்கு அதிகரித்தது.

- நினைவுகள் தொடரும்

28 comments:

தமிழன்-கறுப்பி... said...

அட நீங்கள்லாம் ரொம்ப பெரிய ஆளுங்கப்பா பெரிய பெரிய மாட்டரெல்லாம் பேசுறிங்க...

கயல்விழி said...

//அட நீங்கள்லாம் ரொம்ப பெரிய ஆளுங்கப்பா பெரிய பெரிய மாட்டரெல்லாம் பேசுறிங்க...//

வாங்க தமிழன். :)

இது பெரிய மேட்டரா என்ன?

தமிழன்-கறுப்பி... said...

பெரிய மாட்டரில்லைன்னா இவ்வளவு விவாதம் தேவையில்லையே... பெரிய மாட்டரோ என்னவோ பலர் அதனை அரசியலாக்கவும் பிரபல்யம் தேடிக்கொள்ளவும் தான் பயன் படுத்தியிருக்கிறார்கள் அதனால நான் இதனை பேச விரும்புவதில்லை...

கயல்விழி said...

//பெரிய மாட்டரில்லைன்னா இவ்வளவு விவாதம் தேவையில்லையே... பெரிய மாட்டரோ என்னவோ பலர் அதனை அரசியலாக்கவும் பிரபல்யம் தேடிக்கொள்ளவும் தான் பயன் படுத்தியிருக்கிறார்கள் அதனால நான் இதனை பேச விரும்புவதில்லை...

//

இந்த தொடர் நிச்சயம் இதை அரசியலாக்கும் முயற்சி இல்லை. போக போக தெரிந்துக்கொள்வீர்கள்.

rapp said...

அடுத்த பகுதிக்காக ஆவலோட காத்திருக்கேன், நாளைக்கு எதிர்பார்க்கலாமா?

கயல்விழி said...

//அடுத்த பகுதிக்காக ஆவலோட காத்திருக்கேன், நாளைக்கு எதிர்பார்க்கலாமா?//

ஆவலோடவா? முயற்சி செய்கிறேன் திருமதி.ராப். இதைப்பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?

தமிழன்-கறுப்பி... said...

@ கயல்விழி...

//
இந்த தொடர் நிச்சயம் இதை அரசியலாக்கும் முயற்சி இல்லை. போக போக தெரிந்துக்கொள்வீர்கள்.
//

அது எனக்கும் தெரியும்...
பார்க்கலாம்...

rapp said...

நீங்க இன்னைக்கு எழுதினதை வெச்சு எப்படிங்க கயல்விழி கருத்து சொல்ல முடியும், இந்த நினைவு அல்லது கதையின் முடிவையும், அதில் நீங்க சொல்ற விஷயத்தையும் வெச்சுத்தானே நான் எதையுமே சொல்ல முடியும்:) அதனால்தான் இதோட அடுத்த பகுதிக்காக ஆவலோட காத்திருக்கேன்னு சொன்னேன்:):):)

கயல்விழி said...

//நீங்க இன்னைக்கு எழுதினதை வெச்சு எப்படிங்க கயல்விழி கருத்து சொல்ல முடியும், இந்த நினைவு அல்லது கதையின் முடிவையும், அதில் நீங்க சொல்ற விஷயத்தையும் வெச்சுத்தானே நான் எதையுமே சொல்ல முடியும்:) அதனால்தான் இதோட அடுத்த பகுதிக்காக ஆவலோட காத்திருக்கேன்னு சொன்னேன்:):):)//

Very valid point. I completely agree.

Selva Kumar said...

//தமிழ்பெண்கள் என்ன அரைலூசுகள் என எண்ணும் அளவுக்கு அப்பாவிகளா? இல்லவே இல்லை, சினிமா பெண்களுக்கும் நிஜ உலக பெண்களுக்கும் சம்மந்தமில்லை.//

Selva Kumar said...

//தமிழ்பெண்கள் என்ன அரைலூசுகள் என எண்ணும் அளவுக்கு அப்பாவிகளா? இல்லவே இல்லை, சினிமா பெண்களுக்கும் நிஜ உலக பெண்களுக்கும் சம்மந்தமில்லை.//

I agree..

மற்றபடி நீங்க தொடர்ந்து எழுதுங்க..யார் என்ன சொன்னாலும் கவல பட தேவயில்ல..

கயல்விழி said...

//I agree..

மற்றபடி நீங்க தொடர்ந்து எழுதுங்க..யார் என்ன சொன்னாலும் கவல பட தேவயில்ல..//

நிச்சயமா வழிப்போக்கன். உங்க வருகைக்கு நன்றி.

வருண் said...

கயல்:

பாலசந்தர் படங்களில்

* அவர்கள் (சுஜாதா)

* அவள் ஒரு தொடர்கதை (சுஜாதா)

* மனதில் உறுதி வேண்டும் (சுஹாஷினி)

கயல்போல் மிகவும் துணிச்சலான பெண்களைத்தான் காட்டியிருப்பார். ஆண்கள்தான் அரைலூசாக காட்சியளிப்பார்கள்!

இவன் said...

எப்போ அடுத்த பகுதி... மீதிக்கதை என்ன ஆச்சுது??

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\முன்பே ஒரு விஷயம் தெளிவாக எழுதிவிடுகிறேன், தமிழ்ப்பெண்கள் என்றால் சில விஷயங்களைப்பற்றியே பேசக்கூடாது, எழுதக்கூடாது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது//
:))

வருண் சொல்வது போல பாலச்சந்தர் காட்டி இருப்பார் தான் ஆனால் கடைசியில் தூக்கி கீழே போட்டு மிதிக்கிறாமாதிரி தான் இருக்கும்.. அத மறைமுகமா தான் சொல்லி இருப்பார்..

லதானந்த் said...

தமிழ்ப் பெண்கள் அரை லூசுகளா என்றேன் தமிழய்யா அப்பநாய்க்கம்பாளையம் அரங்க முத்துச்சாமியிடம்.
ரொம்பக் கோபமாயிட்டாரு.
கயல் மாதிரி ஒண்ணு ரெண்டு அறிவுப் பெண்களைத்தவிர மத்ததெல்லாம் முழு லூசுங்க என்கிறார்.

VIKNESHWARAN ADAKKALAM said...

விவாதத்திற்கு இது சரி வரலாம்.. ஆனால் நடைமுறைக்கு சரிவருமா என்பது கேள்விதான்... அடுத்த பதிவை பார்க்கலாம்...

தொடருங்கள்.... வாழ்த்துக்கள் :)

வருண் said...

*** கயல்விழி முத்துலெட்சுமி said...
வருண் சொல்வது போல பாலச்சந்தர் காட்டி இருப்பார் தான் ஆனால் கடைசியில் தூக்கி கீழே போட்டு மிதிக்கிறாமாதிரி தான் இருக்கும்.. அத மறைமுகமா தான் சொல்லி இருப்பார்..

8 July, 2008 8:09 AM****

நீங்கள் சொல்லியுள்ளதை முழுமனதாக ஏற்றுக்கொள்கிறேன்! ஆமாம் அதைத்தான் அவர் செய்து இருக்கிறார்!

கயல்விழி said...

//கயல்:

பாலசந்தர் படங்களில்

* அவர்கள் (சுஜாதா)

* அவள் ஒரு தொடர்கதை (சுஜாதா)

* மனதில் உறுதி வேண்டும் (சுஹாஷினி)

கயல்போல் மிகவும் துணிச்சலான பெண்களைத்தான் காட்டியிருப்பார். ஆண்கள்தான் அரைலூசாக காட்சியளிப்பார்கள்!//

பாலச்சந்தர் கடைசியாக படமெடுத்தது எப்போது வருண்? அப்படி சில படங்கள் இருக்கிறது என்பது உண்மை தான். அதை தான் என் பதிவில் 'விதிவிலக்குகள்' என்று குறிப்பிட்டு இருக்கிறேன். வர வர தமிழ் சினிமாவில் பெண்களின் நிலை மோசமாகிக்கொண்டே வருகிறது. தமிழ் சினிமாவில் ஆபாசம் அதிகரித்ததும்,வடநாட்டு இறக்குமதி நடிகைகளும் காரணமாக இருக்கலாம்.

கயல்விழி said...

//எப்போ அடுத்த பகுதி... மீதிக்கதை என்ன ஆச்சுது??//

ராப்புக்காகவும் உங்களுக்காகவும் சீக்கிரமே எழுதுகிறேன்.

கயல்விழி said...

//எப்போ அடுத்த பகுதி... மீதிக்கதை என்ன ஆச்சுது??//

ராப்புக்காகவும் உங்களுக்காகவும் சீக்கிரமே எழுதுகிறேன்.

கயல்விழி said...

//தமிழ்ப் பெண்கள் அரை லூசுகளா என்றேன் தமிழய்யா அப்பநாய்க்கம்பாளையம் அரங்க முத்துச்சாமியிடம்.
ரொம்பக் கோபமாயிட்டாரு.
கயல் மாதிரி ஒண்ணு ரெண்டு அறிவுப் பெண்களைத்தவிர மத்ததெல்லாம் முழு லூசுங்க என்கிறார்.
//

வருக லதானந்த் சித்தரே.
அ.அ.முத்துசாமியை விரைவில் தமிழ்ப்பெண்கள் அடிக்கவருகிறார்கள் என்ற இனிப்பான செய்தியை தெரிவிக்கவும் :)

கயல்விழி said...

//வருண் சொல்வது போல பாலச்சந்தர் காட்டி இருப்பார் தான் ஆனால் கடைசியில் தூக்கி கீழே போட்டு மிதிக்கிறாமாதிரி தான் இருக்கும்.. அத மறைமுகமா தான் சொல்லி இருப்பார்..//

வாங்க திருமதி. கயல்விழி முத்துலட்சுமி.
:)

கயல்விழி said...

//நீங்கள் சொல்லியுள்ளதை முழுமனதாக ஏற்றுக்கொள்கிறேன்! ஆமாம் அதைத்தான் அவர் செய்து இருக்கிறார்!//

நீங்களும் கயல்விழி முத்துலட்சுமியும் எழுதுவது எனக்கு சரியாக புரியவில்லை.

கயல்விழி said...

//விவாதத்திற்கு இது சரி வரலாம்.. ஆனால் நடைமுறைக்கு சரிவருமா என்பது கேள்விதான்... அடுத்த பதிவை பார்க்கலாம்...

தொடருங்கள்.... வாழ்த்துக்கள் :)

//

நன்றி விக்னேஷ்வரன்.

ஏன் நடைமுறைக்கு சரிவராது என்று நினைக்கிறீர்கள்?

வருண் said...

****நீங்களும் கயல்விழி முத்துலட்சுமியும் எழுதுவது எனக்கு சரியாக புரியவில்லை.

8 July, 2008 12:49 PM***

கயல்: நீ என்ன சொன்னவென்றால், பெண்களை அரைலூசாக காட்டுகிறார்கள் என்று (சந்தோஷ் சுப்ரமனியம் ஹீரோயின்)

நான் சொன்னேன், அந்தக்காலப்படங்களில் கே பி புரட்சி பெண்களையும் புதுமைப்பெண்களையும் உருவாக்கியிருக்கிறார் னு.

கயல்விழி முத்துலட்சுமி என்ன சொல்றாங்கனா, அவங்க ஒரு படி மேலே போயி, அப்படிக்காட்டினாலும் அந்தப்படங்களில் இதுபோல் புதுமைப்பெண்கள் கடைசியில் தோல்வியை தழுவதாக காட்டியுள்ளார் கே பி என்கிறார்!

VIKNESHWARAN ADAKKALAM said...

//நன்றி விக்னேஷ்வரன்.
ஏன் நடைமுறைக்கு சரிவராது என்று நினைக்கிறீர்கள்?//

வராது என நான் சொல்லவில்லை நண்பரே... :)

யாத்ரீகன் said...

தமிழ்பெண்கள் என்றில்லை கயல் , பெண்கள் என்றாலே பாலியல் பேச்சு பேசினால் தவறானவள் / அலைபவள் (இந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும் ஆனால் இது உண்மை என்பது வருத்தமான விஷயம் ) என்ற மிகக்கடுமையான தவறான பார்வை பெரும் சதவிகித ஆண்களில் உண்டு .. ஆரம்ப காலங்களில் எனக்கும் அத்தகைய எண்ணம் இருந்திருந்தது (இதை ஒப்புக்கொள்வதில் தவறில்லை) காரணம் நம் சமூகம் இளம் வயதினரிடம் விதைக்கும் எண்ணம் அப்படி.. படிக்கும் தவறான புத்தகங்கள் என அப்படித்தான் ஆரம்பகால எண்ணங்கள் இருக்கின்றன .. அதன் பிறகு வரும் நட்புகளும், கண்களின் முன் விரியும் உலகமும் தான் எண்ணத்தை மாற்றுகின்றன .. இதுதான் நிதர்சனம் .. இது எவ்வளவு தூரம் மாறி வருகின்றது என்பது சந்தேகமாவே இருக்கின்றது.. ஆண்கள் இளவயதில் இன்னும் அதே ஆண்களாகவே இருக்கின்றார்கள் என்று தோன்றுகின்றது...

பெண்கள் என்றுமே அப்பா செல்லங்கள் தானே :-)