Tuesday, July 29, 2008

இன்றைய விமர்சகர்களின் பரிதாப நிலை!

அன்று, வலைபூக்களும் கருத்துக்களங்களும் இல்லாத காலத்தில் விமர்சகர்கள் எல்லாம் என்ன வேண்டுமானால் பேசலாம்,எழுதலாம். அவர்கள் எழுதுவதே வேதவாக்குபோல் இருந்தது –உண்மைக்கு புறம்பானதை எழுதினாலும் கூட. அவர்கள் கருத்தில் உள்ள தவறுகளை படித்துவிட்டு ஒரு சிலர் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சொல்லி புலம்புவதுதான் வழக்கம். அவர்கள் தவறை அந்த பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினால் அதை கண்டுகொள்வதும் இல்லை, அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடுவது அந்த பத்திரிக்கை நிர்வாகத்தின் வழக்கம். இது அந்த காலத்து “பத்திரிக்கைச் சுதந்திரம்” என்றும் கொள்ளலாம்!

ஆனால் இன்று இதெல்லாம் மலையேறி போய்விட்டது. விமர்சகர்களை விமர்சிக்க வந்துவிட்டார்கள் பொதுமக்களும், வம்பு பேசுபவர்களும், மற்றும் விமர்சகர்கள் விமர்சித்த சப்ஜெக்ட்டில் உள்ள எக்ஸ்பர்ட்களும்! அதனால், இன்றைய விமர்சகர்களின் நிலைமை பரிதாபத்திற்கு உரியதாகிவிட்டது. தன்னை “ஞாநி” என்று சொல்லிகொள்பவர்கள் ஞாநியும் அல்ல. “பைத்தியக்காரன்” என்று சொல்லிக்கொள்பவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம். உண்மையே வெல்லும் என்பதே இன்றைய பேச்சுச் சுதந்திர உலகம்!

• சமீபத்தில் திரு ஞாநி அவர்கள் எழுதிய “அணு ஆயுதம் தேவை இல்லை” பற்றி பலவிதமான expert களும், சாதாரண குடிமக்களும், அவரையும், அவர் கட்டுரையில் உள்ள குறைபாடுகளையும் இஷ்டத்துக்கு விமர்சித்து உள்ளார்கள். அது மட்டுமல்லாமல், அணு சக்தி பற்றி தீவிர ஆராய்ச்சி செய்பவர்களும், பல விஞ்ஞானிகளும் வந்து குறை நிறைகளை சொல்கிறார்கள். இதுபோல் வரும் விமர்சனங்களை பொது மக்கள் படிக்கிறார்களோ இல்லையோ, இதை திரு. ஞாநி அவர்கள், மற்றும் அவரைப்போல் விமர்சகர்கள் படிப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகம். அவர்கள் மனம் நிச்சயம் புண்படும் என்பது உண்மைதான். என்ன செய்வது? இதுவும் பேச்சு சுதந்திரம்தான்!

• ஒரு வம்பு பேசுகிறவர் சொல்கிறார், திரு மதன் அவர்களின் மதன் திரைப்பார்வையில், தசாவதாரம் படத்திற்கு மதன் விமர்சனம் பண்ணவில்லை, காசு வாங்கிக்கொண்டு ஒரு “கமர்சியல்” பண்ணுகிறார் என்று. பல படங்களுக்கு திரு மதன் விமர்சனம் செய்யும்போது குறைகளையும், நிறைகளையும் அழகாக விமர்சித்தார், ஆனால் இது என்ன ஒருபக்கமான விமர்சனமாக இருக்கிறது என்று பலர் வியக்கிறார்கள் இன்று. மேலும் “ஹாய் மதனில்” இவர் கொடுக்கிற பலவிதமான பதில்கள் முட்டாள்தனமாக இருக்கிறது என்று சொல்லி பலரும் நகையாடுகிறார்கள்! கருத்துக்களங்களிலும் மற்றும் வலை பூக்களிலும் இன்று இவர் தலை உருளுகிறது என்னவோ உண்மைதான்.

• சமீபத்திய, திரு. சாரு நிவேதிதாவின் ஒரு விமர்சனத்தில், ஒர் பாடல் பழைய “எங்கவிட்டுப்பிள்ளை” படத்தில் இடம் பெற்றதாக இவர் தவறுதலாக எழுதியதும், ஒரு கமல் ரசிகர் சொல்கிறார், “இவர் இன்னும் இந்திய, தமிழ் சினிமாக்களே சரியாக இன்னும் பார்க்கவில்லை, உலகத்தரம் அது இதுனு எதுக்கு பேசுகிறார்?” என்கிறார்.

• இதில் பரிதாபத்திற்குரியது என்னவென்றால், இப்படி விமர்சகர்களை தாக்குபவர்கள் அந்த அந்த துறையில் உள்ள மேதாவிகள் என்பது. நிறைய நேரங்களில் உண்மையையேதான் இவர்கள் சொல்கிறார்கள். ஒவ்வொரு விமர்சனத்தையும் விமர்சிக்கும் பொதுஜனங்களும் வேறு வேறு நபர்கள் என்பதும் உண்மை. அதேபோல் விமர்சக்ர்கள் விமர்சிக்கும் எல்லா விசயத்திலும் “ஞாநி களாக” இருக்க முடியாது என்பதை நாம் மனதில் கொள்ளுவோம்! அவர்களுடய “லிமிடேஷன்ஸை” நாம் மனதில் கொள்ள வேண்டும்! அதே சமயத்தில் விமர்சகர்களுக்கு ஒரு திறந்த மனப்பான்மை வந்தே ஆக வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது இன்று என்பதும் உண்மைதான்!

35 comments:

ARUVAI BASKAR said...

//திரு மதன் அவர்களின் மதன் திரைப்பார்வையில், தசாவதாரம் படத்திற்கு மதன் விமர்சனம் பண்ணவில்லை, காசு வாங்கிக்கொண்டு ஒரு “கமர்சியல்” பண்ணுகிறார் என்று. ,//
இவ்விஷயத்தில் மதன் மட்டுமல்ல மொத்த media வுமே அது போல் தான் செயல்பட்டது என்பது எனது கருத்து !

கயல்விழி said...

// ஒரு வம்பு பேசுகிறவர் சொல்கிறார்//

அந்த வம்பு பேசுகிறவர் யார், நீங்களா? :) :)

ஞானியையும், குஷ்புவையும் நீங்க விடறதா இல்லையா வருண்?

கயல்விழி said...

//மொத்த media வுமே அது போல் தான் செயல்பட்டது என்பது எனது கருத்து !//

குருவி படத்துகெல்லாம் நல்ல விமர்சனம், மார்க் கொடுத்த மீடியா, தசாவதாரத்துக்கு அப்படி செய்வதில் வியப்பு இல்லை. தசாவதாரத்தில் குறைந்த பட்சம் பிரம்மாண்டமாவது இருந்தது.

வருண் said...

என்னை வம்புல மாட்டி விடுறியே, கயல்! இது நியாயமா? :-)

வழிப்போக்கன் said...

//"பைத்தியக்காரன்” என்று சொல்லிக்கொள்பவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம். //

யார் இது ??

வருண் said...

நான் சும்மா பொதுவாத்தான் சொன்னேன்ங்க, வழிப்போக்கன்! :-)

Anonymous said...

\\//திரு மதன் அவர்களின் மதன் திரைப்பார்வையில், தசாவதாரம் படத்திற்கு மதன் விமர்சனம் பண்ணவில்லை, காசு வாங்கிக்கொண்டு ஒரு “கமர்சியல்” பண்ணுகிறார் என்று. ,//
இவ்விஷயத்தில் மதன் மட்டுமல்ல மொத்த media வுமே அது போல் தான் செயல்பட்டது என்பது எனது கருத்து !\\

Lucky look including!!!!!!!!!!!!!!!!!!!!

நம்ப முடியலே அப்பு ! :(

வருண் said...

*** Lucky look including!!!!!!!!!!!!!!!!!!!!

நம்ப முடியலே அப்பு ! :(

29 July, 2008 11:57 AM ***

திரு. மதன் ஆக இருந்தாலும், அல்லது திரு லக்கி லுக் ஆக இருந்தாலும் சரி, ஒரு பக்கமாக விமர்சனம் செய்தால், பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகித்தான் ஆகனும்! இதுதான் இன்றைய நம் உலகம்!

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கருத்து/பேச்சுச் சுதந்திர உலகம்!

உங்களுக்கு? :)

rapp said...

எங்க அப்பாவுக்கு அரந்தப் பழசான பத்திரிகைகள், புத்தகங்களை கூட சேர்த்து வைக்கும் பழக்கம் உண்டுங்க. அதில் ஒரு விமர்சனத்தை எடுத்து வெச்சுக்கிட்டு அதன் எதிர்கருத்துடயவர்கள் கும்மி இருப்பதை படித்தால், தலையே சுத்துங்க. இவங்களா இப்படின்னு அசந்துடற மாதிரி சிலர் ரெட்டை அர்த்தத்தோட ஒரு சர்வ சாதாரண சின்ன விமர்சனத்துக்கு தைய்யா தக்கான்னு குதிச்சிருப்பாங்க. இன்னைக்காவது பெரும்பான்மையானோர் ஓரளவுக்கு சபை நாகரிகத்தை கருத்தில் கொண்டு எதிர் கருத்தை பதிகிறார்கள்னு தோணும். ஆனா அப்போ அச்சு ஊடங்கங்கள் மட்டுமே பெரும்பான்மையா ஆதிக்கம் செலுத்தினதால இவ்வகை கும்மி விஷயங்கள் பலருக்கும் பரவாம போயிடுச்சின்னு நினைக்கிறேன் :):):)

rapp said...

//சமீபத்திய, திரு. சாரு நிவேதிதாவின் ஒரு விமர்சனத்தில், ஒர் பாடல் பழைய “எங்கவிட்டுப்பிள்ளை” படத்தில் இடம் பெற்றதாக இவர் தவறுதலாக எழுதியதும், ஒரு கமல் ரசிகர் சொல்கிறார், “இவர் இன்னும் இந்திய, தமிழ் சினிமாக்களே சரியாக இன்னும் பார்க்கவில்லை, உலகத்தரம் அது இதுனு எதுக்கு பேசுகிறார்?” என்கிறார்//

கலக்கலான நக்கல் :):):)

SK said...

இந்த ஞாநி அவர்கள் விமர்சனம் எந்த பத்திரிகையில் வருகிறது. அதுனுடைய எதிர் விமர்சனத்திற்கு எதாவது லிங்க் இருந்தால் கொஞ்சம் கொடுங்க வருண். நானும் ரொம்ப நாளா அதுக்கு தான் காத்துகிட்டு இருக்கேன்.

அருமையான பதிவு. விமர்சகர்கள் ஒரு நடுநிலையுடன் எழுத வேண்டும். சமீபத்தில் திரு. சாரு நிவேதிதா எழுதிய தசாவதார விமர்சனம் படித்து மிகவும் நொந்து போனேன். இப்படி எல்லாம் கூட எப்படி யோசிகறாங்க. இவங்க எல்லாம் பெரிய விமர்சகர்கள் அப்படின்னு தன்னை சொல்லிகறாங்க சொல்லி ரொம்ப கோவமும் இருந்தது.

VIKNESHWARAN said...

:)

வருண் said...

***ராப் சொன்னார்கள்!
\\கலக்கலான நக்கல் :):):)/// ***

நக்கல் எல்லோருடைய சொத்தும்தானே?
விமர்சகர்களுக்கு மட்டும் சொந்தமான தல்லவே, ராப்! :-)

வருண் said...

**** நானும் ரொம்ப நாளா அதுக்கு தான் காத்துகிட்டு இருக்கேன்.****

நிறைய கருத்துக்களங்களில் இவரை கன்னா பின்னானு தாக்குவாங்க, எஸ் கே! எனக்கே ஒவ்வொரு சமயம் பாவமாக இருக்கும்! :-(

வருண் said...

**** ஆனா அப்போ அச்சு ஊடங்கங்கள் மட்டுமே பெரும்பான்மையா ஆதிக்கம் செலுத்தினதால இவ்வகை கும்மி விஷயங்கள் பலருக்கும் பரவாம போயிடுச்சின்னு நினைக்கிறேன் :):):) ***

உண்மைதாங்க, ராப், நீங்க யாராயிருந்தாலும் (பெரிய ஆளா இருக்க வேண்டியதில்லை) உங்கள் உணர்வுகளை இன்று பலரிடமும் ஷேர் பண்ணிக்கலாம். இதுதான் இன்றைய மீடியா! :)

SK said...

Varun,

Where does this Gnani write these days ?? in Kumudam, then in which section.

கயல்விழி said...

sk,

வருணுக்கு குமுதம் படிக்கும் பழக்கமில்லை என்று நினைக்கிறேன். நான் தொடர்ந்து படிக்கிறேன், இங்கே குறிப்பிட்ட லிங்க் சென்று பார்க்கவும். :)

http://kumudam.com/magazine/Kumudam/2008-07-30/pg13.php

வருண் said...

எஸ் கே: அவர், விகடனில் "ஓ பக்கங்கள்" னு எழுதினார்.

அவங்களோட சண்டை போட்டுவிட்டு இப்போ வந்து குமுதத்தில் "ஓ பக்கங்கள்" னு எழுதுகிறார். முன்னால இண்டியன் எக்ஸ்ப்ரெஸில் இருந்தார்னு நினைக்கிறேன்.

நீங்கள் குமுதம்.காம் ஆண்லைன்ல படிக்கலாமே? :)

வருண் said...

*** கயல்விழி said...
sk,

வருணுக்கு குமுதம் படிக்கும் பழக்கமில்லை என்று நினைக்கிறேன். ***

உண்மைதான் கயல்! :-)

வருண் said...

***ARUVAI BASKAR said... இவ்விஷயத்தில் மதன் மட்டுமல்ல மொத்த media வுமே அது போல் தான் செயல்பட்டது என்பது எனது கருத்து !***

பாஸ்கர்:

உங்களை பாதித்த வேற மீடியா நியூஸ் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்!

கவனம்!!! நிறையவே கமல்/தசா அபிமானிகள் இங்கு உண்டு! ;-)

வாசகன் said...

விமர்சிப்பதற்கு இன்று நிறைய homework செய்யவேண்டும். ஆரோக்கியமானது தான். தகவல் பிழைகள் குறையும். பலதுறை வல்லுனர்களும் பங்கெடுக்கும் போது மிகச்சறந்த பயனுள்ள விவாதமாக இருக்கம். பலகோணங்கள் தெரியவரும்.
------------------------------
ஆமா, இன்னும் நீங்க ஞாநிய விடரதா இல்லையா ?!!!!!

தவிர, அணுசக்தி பற்றி இணையத்தில் நல்லவிவாதம் நடந்தது என இந்தவார ஓ பக்கங்களில் ஞாநி எழுதியிருந்தார் ;)

கயல்விழி said...

போன முறை அணுசக்தி பதிவில் சந்தித்தது. மீண்டும் வருகை தந்ததுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வாசகன்.

Paithiyam said...

//அன்று, வலைபூக்களும் கருத்துக்களங்களும் இல்லாத காலத்தில் விமர்சகர்கள் எல்லாம் என்ன வேண்டுமானால் பேசலாம்,எழுதலாம். அவர்கள் எழுதுவதே வேதவாக்குபோல் இருந்தது –உண்மைக்கு புறம்பானதை எழுதினாலும் கூட. அவர்கள் கருத்தில் உள்ள தவறுகளை படித்துவிட்டு ஒரு சிலர் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சொல்லி புலம்புவதுதான் வழக்கம். அவர்கள் தவறை அந்த பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினால் அதை கண்டுகொள்வதும் இல்லை, அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடுவது அந்த பத்திரிக்கை நிர்வாகத்தின் வழக்கம்.//

Well Said....Nalla pathivu. :-)

SK said...

Thank you kayal and Varun.

Will check that link. I have heard about Gnani. Just want to see how harsh he will go in writing.

வருண் said...

*** வாசகன் said...
விமர்சிப்பதற்கு இன்று நிறைய homework செய்யவேண்டும். ஆரோக்கியமானது தான். தகவல் பிழைகள் குறையும். பலதுறை வல்லுனர்களும் பங்கெடுக்கும் போது மிகச்சறந்த பயனுள்ள விவாதமாக இருக்கம். பலகோணங்கள் தெரியவரும்.
------------------------------
ஆமா, இன்னும் நீங்க ஞாநிய விடரதா இல்லையா ?!!!!!

தவிர, அணுசக்தி பற்றி இணையத்தில் நல்லவிவாதம் நடந்தது என இந்தவார ஓ பக்கங்களில் ஞாநி எழுதியிருந்தார் ;)

30 July, 2008 6:34 PM ***

வாங்க, வாசகன்! உங்களை நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்! :-)

* ஆமாம், நிறைய ஹோம்வொர்க் செய்ய வேண்டும்தான். :-) விமர்சகர்களை விமர்சிக்கக்கூட!

* ஞாநிமேலே எனக்கு அப்படி ஒரு அன்பு, பிடிப்பு போல இருக்கு!
அதான் விடமாட்டேன் என்கிறேன்!

அவர் எழுதியதை (இணையதள விவாதம் பற்றி) நான் இன்னும் வாசிக்கவில்லை. நன்றி, வாசகன்!

SK said...

நேத்து ராமன் தேடிய சீதை பட பாடல் வெளியீட்டு விழாவில் சேரன் திரும்ப பிரச்சனைல மாட்டிகிட்டு இருக்காரு. மீடியா மேல சேரன் சொன்னது உண்மைனாலும் கொஞ்சம் கோவமா பேசினதை புடிச்சு ரொம்ப பிரச்சனை பண்ணிடாங்க. பாவம் சேரன்.

வருண் said...

அவர் கொஞ்சம் இமோஷனல் போல இருக்கு.

எனக்கு என்ன புரியலைனா, சினிமானா சாக்கடைனு உலகம் முழுவதும் சொல்றாங்க. இதை யாரும் மறுப்பதும் இல்லை

நடிகர் நடிகை வாழ்க்கையெல்லாம் படுமோஷம்னு சொல்றாங்க. நடிகை களிடம் பலவிதமாக பலரும் அனுகுவார்கள் என்றும் சொல்றாங்க.

இப்படி இருக்கும்போது, இவர்கள் ஏன் இப்படி உணர்ச்சிவசப்படுகிறார்கள்? சரி, இவர்களும் சாதாரண மனிதர்கள்தாம். நான் மறுக்கவில்லை ஆனால் இவர்கள் கொஞ்சம் கம்மியா உணர்ச்சிவசப்படலாமில்லையா?

இவருக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது, சில கிசு கிசு களைக்கேட்டு??

"ஆமாம், உண்மை உங்களுக்கு தெரியாது! எப்படிவேணா நினைத்துக்கொள்ளுங்கள்னு" சொல்லிவிட்டுப்போகலாம் இல்லையா?

வருண் said...

*** Paithiyam said..

Well Said....Nalla pathivu. :-)

31 July, 2008 12:17 AM***

நீங்கள் புத்திசாலிங்க! :-)

Paithiyam said...

//வருண் said...
*** Paithiyam said..

Well Said....Nalla pathivu. :-)

31 July, 2008 12:17 AM***

நீங்கள் புத்திசாலிங்க! :-)//

வருண்,

எப்படிங்க புத்திசாலினு சொல்லுறீங்க?

என்ன புத்திசாலினு சொன்ன முதல் ஆளு நீங்க தான். கொஞ்சம் Reason சொன்னா நல்லா இருக்கும் . :-P

வருண் said...

*** Paithiyam said...

வருண்,

எப்படிங்க புத்திசாலினு சொல்லுறீங்க?

என்ன புத்திசாலினு சொன்ன முதல் ஆளு நீங்க தான். கொஞ்சம் Reason சொன்னா நல்லா இருக்கும் . :-P

31 July, 2008 11:37 AM ****

சரி, முதலில் எல்லோரையும் உங்களை "பைத்தியம்னு" அட்ரெஸ் பண்ண சொல்லி ரொம்பவே கஷ்டப்படுத்துறீங்க, இல்லையா?

பைத்தியத்தோட யாரு பேசுவா? இன்னொரு பைத்தியம்தான் பேசும்!!! ஆக, இப்படி ஒரு பெயரை வைத்துக்கொண்டு எல்லோரையும் பைத்தியமாக்கி விட்டீங்க, நீங்கள்! LOL!

அதனால்தான் நீங்க புத்திசாலியா தோன்றுகிறீர்கள்னு நினைக்கிறேன்! :-)

Paithiyam said...

வருண்,

உங்கள் புத்திசாலித்தனமான பதிலால் நீங்கள் மிகவும் புத்திசாலி என்பதை நிரூபித்து விட்டீர்கள். LoL :-)

வருண் said...

***வருண்,

உங்கள் புத்திசாலித்தனமான பதிலால் நீங்கள் மிகவும் புத்திசாலி என்பதை நிரூபித்து விட்டீர்கள். LoL :-)***

உங்களுக்கு பெரிய மனதுங்க! :-)

கோவை விஜய் said...

விமர்சகர்கள் விமர்சனத்துக்கும்,கண்டனத்துக்கும் ஆளாவது காலத்தின் கட்டாயம்.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

வருண் said...

உண்மைதான் கோவை விஜய்! :-)

இது ஒரு நல்ல முன்னேற்றம்தான்!

அவனும் அவளும் said...

அவங்க பரிதாப நிலைய என்னோட கண்ணோட்டத்துல நான் ஒரு பதிவுல எழுதி இருக்கேன். பாருங்க.