Wednesday, July 2, 2008

நீங்க பார்க்க யார் மாதிரி இருப்பீங்க?
80-பதுகளில் நான் சிறுமியாக இருந்த காலக்கட்டத்தில் பேபி ஷாலினிக்கு பயங்கர க்ரேஸ் இருந்தது. எனக்கு ரோல் மாடல் பேபி ஷாலினி தான்.ஷாலினி 80களின் டோரா என்றால் மிகையில்லை. ஷாலினி மாதிரியே ஹேர் ஸ்டைல் வேண்டும் என்று அம்மாவிடம் அழுது அடம் பிடித்திருக்கிறேன். என் அடம் பொறுக்க முடியாமல் ப்யூட்டி பார்லர் அழைத்து போய் பேபி ஷாலினி மாதிரியே முடி வெட்டி விட்டார்கள். தாங்க முடியாத மகிழ்ச்சி எனக்கு. ஷாலினி மாதிரியே ஒரு ஃப்ராக் போட்டு, அவரை மாதிரியே வீடெல்லாம் வேண்டுமென்றே ஒரு துள்ளலுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து என் சகோதரரை எரிச்சல்ப்பட வைத்திருக்கிறேன். "மம்மி, டேடி! இவளை ஏன் பெத்தீங்க? என்னோட நிறுத்தி இருக்க கூடாதா? பாருங்க மானத்தை வாங்கறா!"

வளர்ந்த பிறகு டீன் ஏஜில் பல நடிகைகளுடன் ஒப்பிடப்பட்டிருக்கிறேன். யாராவது, "நீ இந்த நடிகை மாதிரியே இருக்கே" என்றால் போதும். அந்த நடிகை மாதிரியே உடை அணிந்து, அவருடைய மேனரிசம்களை காப்பி பண்ண ட்ரை பண்ணி இருக்கிறேன். என் அண்ணன் தலையில் அடித்துக்கொள்வான், ஆனால் "ஏன் பெத்தீங்க" என்ற கேள்வியை விட்டுவிட்டான்(ஐயா வளர்ந்துவிட்டாராம்!). அந்த சமயத்தில் அழகு என்பதும், அழகா இருப்பதும் எனக்கு ரொம்ப முக்கியமாகப்பட்டது.

அண்டர் க்ராஜுவேஷன் முடித்து மேல் படிப்புக்காக அமரிக்கா வந்த பிறகு நிறைய கற்றுக்கொண்டேன். அதில் முக்கியமானது, "அழகென்பது தோலில் அல்ல, குணத்தில்,புத்திசாலிதனத்தில், நடந்துக்கொள்ளும் விதத்தில் இருக்கிறது". மேலும் அழகென்பது காலத்தால் அழியக்கூடியது இல்லையா? எனவே என் மனம் காலத்தால் அழியாத அறிவை தேடியது. விதம் விதமான புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன், என் சப்ஜெக்டுக்கு துளியும் சம்மந்தமில்லாத புத்தகங்களைக்கூட! கம்யூனிசம், பெரியாரிசம்,அமரிக்க வரலாறு, நாத்தீகம், ஆத்தீகம், செக்ஸ் எஜுகேஷன் என்று எதையும் விட்டுவைக்கவில்லை. உலகத்தை நான் பார்க்கும் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.

இப்போதெல்லாம் "நீ அந்த நடிகை மாதிரி இருக்கே" என்றால் மகிழ்ச்சியடைவதில்லை- ஒரு புன்சிரிப்போடு மறந்துவிடுவேன். புத்திசாலிப்பெண், நல்ல மனதுடைய பெண் போன்ற காம்ப்ளிமெண்டுகளுக்கு பூரித்துப்போகிறேன். ஒரு நாள் என் தோழியுடைய அப்பா கூட "அந்த மல்லு நடிகை, அவள் பேரென்னமா? புல்புல்தாராவா? அவளை மாதிரியே இருக்க"

"அது நயன்தாரா அங்கிள்"

என்னுடைய நல்ல நண்பரொருவர் ஒருநாள், "என் மனைவி நீங்க சில்க் சுமிதா மாதிரியே இருப்பதா சொல்றாங்க" என்று சொன்னதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.

சமீபத்தில் எனக்கும் வருணுக்கும் இடையே ஒரு உரையாடல்.

"உங்களுக்கு எந்த நடிகை பிடிக்கும் வருண்?"

"ஏன் கேட்கற?"(பெண்கள் என்றால் மனிதர் உஷாராகி ரொம்ப கவனமாக தான் பதில் சொல்லுவார். அவர் மூளையில் அடிக்கும் வார்னிங் சிக்னல் எனக்கு வரைக்கும் கேட்கும். எங்கேயோ நல்ல அனுபவம் போல!!)

"இல்லை சும்மா தான் சொல்லுங்க"

"எனக்கு உன்னை தான் பிடிக்கும். நீ தான் உலகத்திலேயே ரொம்ப அழக்.."(இந்த ஹைதர் அலி காலத்து டயலாக்கை விடவே மாட்டீங்களா?)

"சரி சரி போதும், அப்படியே நம்பிட்டோம். நடிகைகளில் எந்த நடிகை பிடிக்கும் சொல்லுங்க"

"அப்படி ஏதும் பர்டிகுலரா கிடையாது"(எஸ்கேப், எஸ்கேப்!!)

"சும்மா சொல்லுங்க! நான் கோச்சுக்கமாட்டேன்"

"நிஜமாவே தான். எந்த நடிகையையும் குறிப்பிட்டு பிடிக்காது. நடிகைகள் எல்லாம் உன்னை மாதிரி இண்டெலிஜெண்டா பேசுவாங்களா, பதில் சொல்லுவாங்களா? உன்னிடம் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம்"

"சரி பொழைச்சுப்போங்க"


P.S: இதை படிப்பவர்கள் நீங்கள் பார்க்க யாரை மாதிரி இருப்பீர்கள்(நடிகை, நடிகன், அரசியல்வாதி வேறெதாவது பிரபலம்?) என்று தெரிவிக்கவும்.

79 comments:

தமிழன்... said...

///அண்டர் க்ராஜுவேஷன் முடித்து மேல் படிப்புக்காக அமரிக்கா வந்த பிறகு நிறைய கற்றுக்கொண்டேன். அதில் முக்கியமானது, "அழகென்பது தோலில் அல்ல, குணத்தில்,புத்திசாலிதனத்தில், நடந்துக்கொள்ளும் விதத்தில் இருக்கிறது".///

ஆக இத தெரிஞ்சுக்கறதுக்கு இவ்வளவு படிச்சு அமெரிக்கா வரைக்கும் வரவேண்டியிருந்திருக்கு :)

தமிழன்... said...

///நிஜமாவே தான். எந்த நடிகையையும் குறிப்பிட்டு பிடிக்காது. நடிகைகள் எல்லாம் உன்னை மாதிரி இண்டெலிஜெண்டா பேசுவாங்களா, பதில் சொல்லுவாங்களா? உன்னிடம் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம்"///

வருண் எப்படி இவ்வளவு அழகா பொய்சொல்ல கத்துக்கிட்டிங்க...:)

தமிழன்... said...

///சரி பொழைச்சுப்போங்க"///

வருண் பாவம்க நீங்க...:(

வருண் said...

கயல்:

எல்லாம் சரிதான் இதை ஏன் "மொக்கை" என்று லேபெல் பண்ணி இருக்க? :)

கயல்விழி said...

நல்வரவு திரு.தமிழன்.

நீங்க யாரை மாதிரி என்பதை பற்றி சொல்லவே இல்லையே?(வருணைப்பார்த்து அப்புறம் பரிதாபப்படலாம்)

வருண் said...

*** வருண் எப்படி இவ்வளவு அழகா பொய்சொல்ல கத்துக்கிட்டிங்க...:) ***

இல்லைங்க, என் பொய் கூட கயல் மாதிரி ஒரு தனி அழகாத்தான் இருக்கும்! :-)

கயல்விழி said...

//கயல்:

எல்லாம் சரிதான் இதை ஏன் "மொக்கை" என்று லேபெல் பண்ணி இருக்க? :)//

வேறென்ன லேபிள் போடுவது? இது சும்மா ஜாலி பதிவு. :)

தமிழன்... said...

///*** வருண் எப்படி இவ்வளவு அழகா பொய்சொல்ல கத்துக்கிட்டிங்க...:) ***

இல்லைங்க, என் பொய் கூட கயல் மாதிரி ஒரு தனி அழகாத்தான் இருக்கும்! :-)///

:))

இது சூப்பரு...

கயல்விழி said...

//இல்லைங்க, என் பொய் கூட கயல் மாதிரி ஒரு தனி அழகாத்தான் இருக்கும்! :-)//

பொய் சொல்றதிலும் ஒரு பொய்யா??? உலகம் தாங்காது சாமி!

வருண் said...

மொக்கைனா ஜாலினு அர்த்தமா?
அப்ப சரிதான்! :)

தமிழன்... said...

///நல்வரவு திரு.தமிழன்.

நீங்க யாரை மாதிரி என்பதை பற்றி சொல்லவே இல்லையே?(வருணைப்பார்த்து அப்புறம் பரிதாபப்படலாம்///

நன்றி கயல்விழி,வருண்...

நான் என்னை மாதிரியேதாங்க இருப்பேன் இதிலென்ன சந்தேகம்...!

தமிழன்... said...

வருண் இவங்களுக்கு யாருங்க கயல்விழின்னு பெயர் வச்சது...???

பரிசல்காரன் said...

நான் பார்க்க திருப்பூர் கிருஷ்ணகுமார் மாதிரியே இருக்கேனாம்! எல்லாரும் சொல்றாங்க!

கயல்விழி said...

//நன்றி கயல்விழி,வருண்...

நான் என்னை மாதிரியேதாங்க இருப்பேன் இதிலென்ன சந்தேகம்...!
//

இதை நான் எதிர்ப்பார்த்தேன்.

கயல்விழி said...

வாங்க பரிசல். சரி திருப்பூர் கிருஷ்ணகுமார் எப்படி இருப்பார்?

நந்து f/o நிலா said...

வருண் கல்யானம் ஆகி பட்டுத்தெரிஞ்ச பின்னாடித்தான் நாங்கள்ளாம் உஷாரானோம்.
இப்பவே இப்படி வெவரமா பதில் சொல்றீங்க.பரவாயில்ல பொழச்சுப்பீங்க

கயல்விழி said...

வாங்க நந்து. நிலா எப்படி இருக்கிறார்?

கயல்விழி said...

//வருண் இவங்களுக்கு யாருங்க கயல்விழின்னு பெயர் வச்சது...???

//

அதுக்கு நீங்க ஏன் இத்தனை வருத்தப்படறீங்க தமிழன் அவர்களே? :)

rapp said...

நீங்கள் மிக நல்ல மனதுடைய பெண்:):):)

இப்பப் பாருங்க இந்தப் பதிவினால எனக்கும் என்னோட ரங்கமணிக்கும் பிரச்சினயாகிடுச்சி:( நான் பார்க்க யார் மாதிரி இருக்கேன்னு கேட்டா பேய் முழி (இல்ல சிம்பாலிக்கா தான் சொல்ல வர்றதை சொல்றாரானு தெரியலை)முழிக்கறார். இங்க பஞ்சாயத்த முடிச்சிட்டு உங்களுக்கு பதில் போடறேன்:):):)

கயல்விழி said...

//நீங்கள் மிக நல்ல மனதுடைய பெண்:):):)

இப்பப் பாருங்க இந்தப் பதிவினால எனக்கும் என்னோட ரங்கமணிக்கும் பிரச்சினயாகிடுச்சி:( நான் பார்க்க யார் மாதிரி இருக்கேன்னு கேட்டா பேய் முழி (இல்ல சிம்பாலிக்கா தான் சொல்ல வர்றதை சொல்றாரானு தெரியலை)முழிக்கறார். இங்க பஞ்சாயத்த முடிச்சிட்டு உங்களுக்கு பதில் போடறேன்:):):)//

எனக்கு நல்ல மனதா? எல்லாம் வருணிடம் இருந்த கற்ற டிப்ஸா வெட்டி ஆஃபிசர்?

ரங்கமணி யார்??

உங்களுடைய "கும்ப்ளே
நீ ஒரு ஆம்ளே உங்க அம்மா ஒரு பொம்ப்ளே" - இது என் ப்ரெண்ட்ஸ் மத்தியிலும் பாப்புலராகிவிட்டது.

தமிழ்ப்பறவை said...

"என் உயிர் நீ,உடல் நீ,தென்றல் நீ
.........
.........
கூறிவிட்டு
கடைசியில் **** எனும் நடிகனின் பெயரைச் சொல்லி அவன் போல் இருக்கிறாய் என்ற ஒரு வார்த்தையில் செத்துப்போனேன்"

ஆனந்த விகடனில் படித்த ஆதி என்பவரின் கவிதை.. வார்த்தைகள் மறந்துவிட்டன..ஆனால் பொருள் மறக்கவில்லை.

rapp said...

//ரங்கமணி யார்??//
இங்க எல்லாரும் மனைவிகள தங்கமணின்னும்(உபயம் ஜனகராஜ், படம்:அக்னி நட்சத்திரம்), கணவர்களை ரங்கமணின்னும் சொல்றது வழக்கம். ஆரம்பிச்சது டுபுக்கண்ணன் என்று நினைக்கிறேன்.
http://dubukku.blogspot.com/

rapp said...

//உங்களுடைய "கும்ப்ளே
நீ ஒரு ஆம்ளே உங்க அம்மா ஒரு பொம்ப்ளே" - இது என் ப்ரெண்ட்ஸ் மத்தியிலும் பாப்புலராகிவிட்டது//
ஆஹா, இதை பாராட்டுன்னு எடுத்துக்கறதா இல்ல கலாசல்னு எடுத்துக்கறதான்னு புரியலயே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

கயல்விழி said...

//இங்க எல்லாரும் மனைவிகள தங்கமணின்னும்(உபயம் ஜனகராஜ், படம்:அக்னி நட்சத்திரம்), கணவர்களை ரங்கமணின்னும் சொல்றது வழக்கம். ஆரம்பிச்சது டுபுக்கண்ணன் என்று நினைக்கிறேன்.
http://dubukku.blogspot.com///

உங்க ரங்கமணியிடம் கேட்டு தெளிஞ்சாச்சா? யாரை மாதிரி இருக்கீங்களாம்?

கயல்விழி said...

மீண்டும் பறந்து வந்ததுக்கு நன்றி தமிழ்ப்பறவை.

கயல்விழி said...

//ஆஹா, இதை பாராட்டுன்னு எடுத்துக்கறதா இல்ல கலாசல்னு எடுத்துக்கறதான்னு புரியலயே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
//

கண்டிப்பா பாராட்டு தான்.

எத்தனையோ பேர் கவிதை எழுதறாங்க, நானும் படிக்கிறேன். ஆனால் எத்தனை நினைவில் இருக்கும்?

உங்க கவிதை நினைவில் இருக்கிறது. வாசகர் கருத்தை கவர்வது தான் எழுத்தாளரின் மிகப்பெரிய வெற்றி.

இவன் said...

///சரி பொழைச்சுப்போங்க"//
வருண் பாவம்க நீங்க...:(//


ரிபீட்டேடேடேடே

நான் என் அப்பா மாதிரி இருப்பேன்.... இவன் in safer side

கயல்விழி said...

//ரிபீட்டேடேடேடே

நான் என் அப்பா மாதிரி இருப்பேன்.... இவன் in safer side//

எல்லாம் ரொம்ப முன் ஜாக்கிரதையா தான் இருக்கீங்க

rapp said...

நைசா எனக்குத் தெரியாத பிரஞ்சு நடிகை பேர சொல்லிட்டுப் போயிட்டாருங்க. எனக்கு வேற பிரஞ்சுப் பேருங்க இவ்வளவு நாளாகியும் புடிபட மாட்டேங்குது.
நாளைக்கு 'தெளியவெச்சு தெளியவெச்சு' அன்பை பொழிஞ்சு விஷயத்தை வாங்கிடறேன்.

கயல்விழி said...

என்ன நடிகை சொல்லுங்க வெட்டி ஆஃபிசர், நான் கண்டுபிடிக்கிறேன்.

வருண் said...

*** நந்து f/o நிலா said...
வருண் கல்யானம் ஆகி பட்டுத்தெரிஞ்ச பின்னாடித்தான் நாங்கள்ளாம் உஷாரானோம்.***

:-)

rapp said...

//உங்க கவிதை நினைவில் இருக்கிறது. வாசகர் கருத்தை கவர்வது தான் எழுத்தாளரின் மிகப்பெரிய வெற்றி//
அப்படி போடுங்க அருவாள. இதே மாதிரித்தான் நானும் எங்க தல ஜே.கே.ரித்தீஷ் பத்தி சொன்னா, ஏத்துக்காம அவர சின்ன சின்ன உப்புமா ஹீரோக்களோட(அதாங்க கமல், அஜீத், ரஜினின்னு) கம்பேர் பண்ணி ஒரு மார்கமா திரியறாங்க.

வருண் said...

***தமிழன்... said...
வருண் இவங்களுக்கு யாருங்க கயல்விழின்னு பெயர் வச்சது...???**

ரொம்ப பொருத்தமா இருக்குனு ஆச்சர்ய படுறீங்களா, தமிழன் ? :-)

கயல்விழி said...

//அப்படி போடுங்க அருவாள. இதே மாதிரித்தான் நானும் எங்க தல ஜே.கே.ரித்தீஷ் பத்தி சொன்னா, ஏத்துக்காம அவர சின்ன சின்ன உப்புமா ஹீரோக்களோட(அதாங்க கமல், அஜீத், ரஜினின்னு) கம்பேர் பண்ணி ஒரு மார்கமா திரியறாங்க.//
ஜே.கே ரித்தீஷ் என்று ஒரு நடிகரா?

rapp said...

அத ஞாபகம் வெச்சுக்க முடிஞ்சா நான் கூகிளில் போட்டு தேடி இருக்கமாட்டானா:( அவரு இதுல உஷாருங்க, என்னோட பிரஞ்சு நேம் வீக்நேஸ்ஸ தெரிஞ்சிகிட்டு அடிச்சி விட்டுருப்பாரு:):):)

rapp said...

//ஜே.கே ரித்தீஷ் என்று ஒரு நடிகரா?//
என்னங்க தமிழ்நாட்டு நிலவரம் உங்களுக்குத் தெரியாதா? பெரிய பெரிய டைரக்டர்களான பாரதிராஜா போல ஆட்களே இவரப் பார்த்து மெரண்டு போயிருக்காங்க. இவரைத் திட்டி பாரதிராஜா தனி பிரஸ் மீட்டே வெச்சாரு தெரியுங்களா?

கயல்விழி said...

//அத ஞாபகம் வெச்சுக்க முடிஞ்சா நான் கூகிளில் போட்டு தேடி இருக்கமாட்டானா:( அவரு இதுல உஷாருங்க, என்னோட பிரஞ்சு நேம் வீக்நேஸ்ஸ தெரிஞ்சிகிட்டு அடிச்சி விட்டுருப்பாரு:):):)

//

ஐயோ பாவம் இந்த சின்ன வயதில் இத்தனை நியாபக மறதியா? :) :)

Just kidding வெட்டி ஆஃபீஸ்ர்.

கயல்விழி said...

//என்னங்க தமிழ்நாட்டு நிலவரம் உங்களுக்குத் தெரியாதா? பெரிய பெரிய டைரக்டர்களான பாரதிராஜா போல ஆட்களே இவரப் பார்த்து மெரண்டு போயிருக்காங்க. இவரைத் திட்டி பாரதிராஜா தனி பிரஸ் மீட்டே வெச்சாரு தெரியுங்களா?//

என்ன வச்சு ஏதோ காமெடி பண்றீங்க. நடத்துங்க நடத்துங்க :)

rapp said...

//என்ன வச்சு ஏதோ காமெடி பண்றீங்க. நடத்துங்க நடத்துங்க//

நான் பண்றது உங்களுக்கு இப்ப காமடி மாதிரி தெரியும். நீங்க வேணா
http://www.cinesouth.com/masala/hotnews/new/05022007-6.shtml
போய் பாருங்க. பார்த்து பயந்துடாதீங்க. முடிஞ்சா இதை பத்தி ஒரு காமடி அல்லது அமானுஷ்ய பதிவு போடுங்க.

வருண் said...

rapp said...
//ஜே.கே ரித்தீஷ் என்று ஒரு நடிகரா?//


நானும் இப்போத்தான் கேள்விப் படுறேன் :(

எதுவும் நாடக நடிகரோ? :-I

தமிழன்... said...

@ கயல்விழி...

\\\//வருண் இவங்களுக்கு யாருங்க கயல்விழின்னு பெயர் வச்சது...???
//
அதுக்கு நீங்க ஏன் இத்தனை வருத்தப்படறீங்க தமிழன் அவர்களே? :)///

?? :)

கயல்விழி said...

//நான் பண்றது உங்களுக்கு இப்ப காமடி மாதிரி தெரியும். நீங்க வேணா
http://www.cinesouth.com/masala/hotnews/new/05022007-6.shtml
போய் பாருங்க. பார்த்து பயந்துடாதீங்க. முடிஞ்சா இதை பத்தி ஒரு காமடி அல்லது அமானுஷ்ய பதிவு போடுங்க.
//

எனக்கு இப்படி ஒரு நடிகர் இருப்பது இப்போ தான் தெரியும். அவரென்ன உங்களுக்கு வேண்டியவரா?

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... இன்னைய தேதிக்கு தமிழ் சினிமாக்கே டப் பைட் கொடுக்கறவர பத்தி இப்படியா கேக்குறது?

தமிழன்... said...

@ வருண்...

///***தமிழன்... said...
வருண் இவங்களுக்கு யாருங்க கயல்விழின்னு பெயர் வச்சது...???**

ரொம்ப பொருத்தமா இருக்குனு ஆச்சர்ய படுறீங்களா, தமிழன் ? :-)//

வருண் பின்றிங்க
வாழ்க உங்கள் காதல்...

கயல்விழி நீங்க கொடுத்து வச்சிருக்கிங்க...

கயல்விழி said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... இன்னைய தேதிக்கு தமிழ் சினிமாக்கே டப் பைட் கொடுக்கறவர பத்தி இப்படியா கேக்குறது?//

சரி சரி அழாதீங்க.

இப்போ தான் தெரிஞ்சுகிட்டோம் இல்லையா?

தமிழன்... said...

என்ன நடக்குது இங்க...:)???!!!

கயல்விழி said...

//கயல்விழி நீங்க கொடுத்து வச்சிருக்கிங்க...//

ஆமாம் :)

வருண் said...

ஏதோ ஒரு நடிகரை எங்கக்களுக்கு தெரியலை.

அவர் ஏதொ பெரிய மார்லன் ப்ராண்டோ மாதிரி பில்ட் அப் கொடுக்கிரார் ஒருவர்!

கயல்விழி said...

//என்ன நடக்குது இங்க...:)???!!!

//

ஜே.கே ரித்தீஷ் யாரென்று தெரியுமா உங்களுக்கு?

தமிழன்... said...

//என்ன நடக்குது இங்க...:)???!!!
//
ஜே.கே ரித்தீஷ் யாரென்று தெரியுமா உங்களுக்கு?///

அவரைத்தெரியாமலா!!!!!!!
என்னங்க நீங்க இந்த காமெடியவா இவ்வளவு நேரமா மொக்கை போட்டிருக்கிங்க...

தமிழன்... said...

அவரைப்பாத்து யாருன்னு கேட்ட முதல் ஆக்கள் நீங்க தான் :)

????!

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

**** வருண் பின்றிங்க
வாழ்க உங்கள் காதல்...

கயல்விழி நீங்க கொடுத்து வச்சிருக்கிங்க...***

இல்லை நான்தான் the luckiest one! :-)

லதானந்த் said...

கயல்!
1)நீங்கள் சில்க் ஸ்மிதா போல இருப்பதாகத் தன் மனைவி சொன்னதாகச் சொன்ன நல்ல நண்பரின் பெயரை வெளியிடுங்கள். எனக்கு ஆட்சேபணை இல்லை.

2)நான் வருண் மாதிரி இருப்பேன்

3) பரிசல்காரன் திருப்பூர் கிருஷ்ணகுமார் மாதிரி தான் இருப்பேன் என்கிறார். நீங்கள் திருப்பூர் கிருஷ்ணகுமார் எப்படி இருப்பார் என்கிறீர்கள்.
இதில் என்னோட தீர்ப்பு. திருப்பூர் கிருஷ்ணகுமார் பரிசல்காரன் மாதிரி இருப்பார்.
4)கரெக்டா க்ளாஸ் அட்டண்ட் பண்ணணும்.சரியா?

Syam said...

//"நீ இந்த நடிகை மாதிரியே இருக்கே" என்றால் போதும். அந்த நடிகை மாதிரியே உடை அணிந்து, அவருடைய மேனரிசம்களை காப்பி பண்ண ட்ரை பண்ணி இருக்கிறேன்//

ஒ அவுங்களா நீங்க?... :-)

Syam said...

//"அப்படி ஏதும் பர்டிகுலரா கிடையாது"//

வருண் என்ன மாதிரியே ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர் போல இருக்கு....ஒரு நடிகைய மட்டும் சொன்னா பாவம் மத்தவங்க மனசு சங்கட படும்னுதான் சொல்லல போல... :-)

Syam said...

//என்ன நடக்குது இங்க...:)???!!!

ஜே.கே ரித்தீஷ் யாரென்று தெரியுமா உங்களுக்கு?//

எங்கள் தானை தலைவனை பார்த்து யார்ணு கேட்டுட்டீங்களே....இதை எதிர்த்து சென்னையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவிக்கிறோம்... :-)

Thamizhmaangani said...

//அது நயன்தாரா அங்கிள்//

என்னது நயன்தாரா அங்கிள் மாதிரியா?? அவ்வ்வ்....

வருண் said...

****இராமநாதபுரம் மக்களின் மனசுக்குள் சாமியாக குடியிருக்கும் முகவை குமார்தான் ரித்திஷாக பெயர் மாற்றிக்கொண்டு நடிகராக அறிமுகமாகிறார்.***

ஓ இவர் (j j Rithesh) முகவையை சேர்ந்தவரா?

நம்ம கமலுக்கு அப்புறம் இவர்தான் முகவையிலிருந்து வருகிறார்!!! :-)

வருண் said...

***கயல்!
1)நீங்கள் சில்க் ஸ்மிதா போல இருப்பதாகத் தன் மனைவி சொன்னதாகச் சொன்ன நல்ல நண்பரின் பெயரை வெளியிடுங்கள். எனக்கு ஆட்சேபணை இல்லை.***

LOL :-)

வழிப்போக்கன் said...

//P.S: இதை படிப்பவர்கள் நீங்கள் பார்க்க யாரை மாதிரி இருப்பீர்கள்(நடிகை, நடிகன், அரசியல்வாதி வேறெதாவது பிரபலம்?) என்று தெரிவிக்கவும்.//

எதுக்கு இந்த கேள்வி ??

காரணம் ??

வழிப்போக்கன் said...

//கம்யூனிசம், பெரியாரிசம்,அமரிக்க வரலாறு, நாத்தீகம், ஆத்தீகம், செக்ஸ் எஜுகேஷன் என்று எதையும் விட்டுவைக்கவில்லை. உலகத்தை நான் பார்க்கும் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.//

இதப்பத்தியெல்லாம் அப்பப்ப எழுந்துங்க..நாங்களும் கொஞ்சமாவது அறிவ வளத்துகறம்...

வழிப்போக்கன் said...

//1)நீங்கள் சில்க் ஸ்மிதா போல இருப்பதாகத் தன் மனைவி சொன்னதாகச் சொன்ன நல்ல நண்பரின் பெயரை வெளியிடுங்கள். எனக்கு ஆட்சேபணை இல்லை.
//

யாரு அந்த அங்க்கிள் ???

வருண் said...

***வழிப்போக்கன் said...
யாரு அந்த அங்க்கிள் ??? ***

வழிப்போக்கன்:

உண்மையிலேயே இன்னும் புரியவில்லையா?:-)

வல்லிசிம்ஹன் said...

இப்பப் பாருங்க இந்தப் பதிவினால எனக்கும் என்னோட ரங்கமணிக்கும் பிரச்சினயாகிடுச்சி:( நான் பார்க்க யார் மாதிரி இருக்கேன்னு கேட்டா பேய் முழி (இல்ல சிம்பாலிக்கா தான் சொல்ல வர்றதை சொல்றாரானு தெரியலை)முழிக்கறார். இங்க பஞ்சாயத்த முடிச்சிட்டு உங்களுக்கு பதில் போடறேன்//

ஹ்ம்ம் இன்னும் எத்தனை ரங்கமணி மண்டை உருளப் போறதோ:)

ராமலக்ஷ்மி said...

//"அழகென்பது தோலில் அல்ல, குணத்தில்,புத்திசாலிதனத்தில், நடந்துக்கொள்ளும் விதத்தில் இருக்கிறது". மேலும் அழகென்பது காலத்தால் அழியக்கூடியது இல்லையா?//

அழகிய வரிகள்!

கயல்விழி said...

//இதில் என்னோட தீர்ப்பு. திருப்பூர் கிருஷ்ணகுமார் பரிசல்காரன் மாதிரி இருப்பார்.//

சரி பரிசல்காரன் எப்படி இருப்பார் திரு லதானந்த சித்தர்? :)

கயல்விழி said...

//அழகிய வரிகள்!//

நன்றி ராமலக்ஷ்மி :)

கயல்விழி said...

//இதப்பத்தியெல்லாம் அப்பப்ப எழுந்துங்க..நாங்களும் கொஞ்சமாவது அறிவ வளத்துகறம்...//

எழுதுகிறேன், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்.

எனக்கு தெரிந்தவரை இந்த கான்செப்டுகளுக்காகவே சில ப்ளாகுகள் இயங்குகின்றன என்று நினைக்கிறேன். அவர்கள் எழுதாதது எதையும் புதிதாக நான் எழுதிவிடப்போவதில்லை. பார்க்கலாம்.

கயல்விழி said...

//ஒ அவுங்களா நீங்க?... :-)//

ஆமாம் அதே தான். :)

கயல்விழி said...

//வருண் என்ன மாதிரியே ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர் போல இருக்கு....ஒரு நடிகைய மட்டும் சொன்னா பாவம் மத்தவங்க மனசு சங்கட படும்னுதான் சொல்லல போல... :-).//

ஆமாம் உங்களை மாதிரியே அவரும் ரொம்ப நல்லவர்.

தமிழன்... said...

அட இது இன்னுமா முடியலை...;)

தமிழன்... said...

@ கயல்விழி...
\\\\
//கயல்விழி நீங்க கொடுத்து வச்சிருக்கிங்க...//

ஆமாம் :)
////

@ வருண்...

\\\
**** வருண் பின்றிங்க
வாழ்க உங்கள் காதல்...

கயல்விழி நீங்க கொடுத்து வச்சிருக்கிங்க...***

இல்லை நான்தான் the luckiest one! :-)
///

என்னப்பா இது இரண்டு பேரும் இப்படி கலக்குறிங்க உங்க இரண்டு பேரையும் நான் பாக்கணுமே...

ஈர வெங்காயம் said...

நீ நானகவும் நான் நீயாகவும் மாற
வரமொன்று கிடைத்தாலும்,
அப்படி மாறித்தான் போனாலும் ; மறுபடி நான் நீயாகவும் நீ நானகவும்
மாறவே ஆசை...
( எப்படி நம்ம மொக்கை...? )

கயல்விழி said...

//நீ நானகவும் நான் நீயாகவும் மாற
வரமொன்று கிடைத்தாலும்,
அப்படி மாறித்தான் போனாலும் ; மறுபடி நான் நீயாகவும் நீ நானகவும்
மாறவே ஆசை...
( எப்படி நம்ம மொக்கை...? )//

எங்க மொக்கையை விட நல்லாவே இருக்கு திரு ஈரவெங்காயம்.

கயல்விழி said...

//நீ நானகவும் நான் நீயாகவும் மாற
வரமொன்று கிடைத்தாலும்,
அப்படி மாறித்தான் போனாலும் ; மறுபடி நான் நீயாகவும் நீ நானகவும்
மாறவே ஆசை...
( எப்படி நம்ம மொக்கை...? )//

எங்க மொக்கையை விட நல்லாவே இருக்கு திரு ஈரவெங்காயம்.

ஜி said...

//80-பதுகளில் நான் சிறுமியாக இருந்த காலக்கட்டத்தில் //

Hi Aunty... :)))

//ஆக இத தெரிஞ்சுக்கறதுக்கு இவ்வளவு படிச்சு அமெரிக்கா வரைக்கும் வரவேண்டியிருந்திருக்கு :)//

Gud one...

கயல்விழி said...

//Hi Aunty... :)))//


Hello Uncle!!(பின்ன என்னவாம், நீங்க என்ன 2000யிரத்திலா சிறுவனாக இருந்தீர்கள்?)

Anonymous said...

humourous :)
btw tips got to change with life stage - courtship tips dont work with post courtship beyond some min situations - then it vl be time for action - I mean good behaviour that cuts the ice. Good luck to Varun. ...Sundar.