என்ன திரும்பவும் கேள்விகளா? என்று யாரும் பயந்து ஓட வேண்டாம். இந்த தலைப்பை 'தமிழ் மணத்தில் சில கேள்விகள்' என்று வைக்கட்டுமா என்று தீவிரமாக சிந்தித்து கடைசி நேரத்தில் மாற்றிக்கொண்டேன்(முறைக்காதீங்க, சும்மா ஜோக். கொஞ்சம் சிரிங்க தாய்/தந்தை குலங்களே. ரிலாக்ஸ் ப்ளீஸ்! :):)). இது நேற்று கேட்ட கேள்விகள் போல இல்லை.
நேற்று என்னுடைய இரவு நேரத்தில் நிறைய அனானிகள் வாய்க்கு(கைக்கு) வந்தமாதிரி எதேதோ கிறுக்கி வைக்க, காலையில் பார்த்தால் என்னுடைய பதிவு சூடான இடுகையில் முதல் இடத்தில் இருந்தது. மற்றவர்களின் பதிவுகள் சூடான இடுகையிலும், வாசகர் பரிந்துரையிலும் வரும் போது நம்முடைய பதிவும் அப்படி வராதா என்று நினைத்திருக்கிறேன். இன்று என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.
காலையில் பார்த்ததும் சர்ச்சையான அனானி பின்னூட்டங்களை நீக்கியும், என்னை வேறு ஒரு பதிவர் என்று சந்தேகப்பட்டு எழுதி இருந்த பதிவர்களுக்கு "நீங்கள் நினைக்கிற மாதிரி ஏதும் இல்லை, உங்களை Disappoint செய்யப்போவதற்காக மன்னியுங்கள்" என்று எழுதியவுடன் ஒரு அதிசயம் நடந்தது. என்ன தெரியுமா? என் பதிவு சூடான இடுகையில் இருந்து 1 மணி நேரத்தில் மறைந்தது. அதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நான் ஏதாவது உருப்படியான, சமுதாயத்துக்கு உதவுகிற மாதிரி(டாக்டர் புரூனோ எழுதுகிறாரே, அது போல) பதிவெழுதி அது சூடான இடுகையில் வந்திருக்குமானால் மிகவும் மகிழ்ந்திருப்பேன். ஆனால் இந்த நெகடிவ் அட்டென்ஷன், எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
உடனே "கமெண்ட் மாடரேஷன்", "அனானி ஆப்ஷன் டிஸேபிளிங்" போன்றவற்றை பரிந்துரைக்கும் முன், சில கேள்விகள். நமக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் செய்கிறோம்? அனைவரும் படித்தவர்கள் இல்லையா? ஒருவர் ஆண் பதிவராக இருந்தால் என்ன, பெண் பதிவராக இருந்தால் என்ன? அவர்கள் எழுதும் விஷயம் தான் முக்கியமே தவிர, அவரின் பாலினம் அல்ல. மேலும், ஆபாசமாகவோ அல்லது ஆபாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலோ அல்லது ஒருவரை சிறுமைப்படுத்தும் வகையிலும், பழி போடும் வகையிலும் ஏதாவது பின்னுட்டமோ அல்லது பதிவோ இருந்தால் தான் அடிக்கடி படிப்போமா?(சூடான இடுகைக்கு அது தான் அர்த்தம் இல்லையா?).
நேற்று ஒரு அனானி பெண்மணியின் கமெண்டுக்கு முழுக்க முழுக்க எதிர்பதமாக எழுதினேன். இன்று அவர் சொல்வதிலும் சில உண்மைகள் இருப்பது புரிகிறது. தெரிந்தோ, தெரியாமலோ பெண் வலைப்பதிவர்கள் டிஸ்க்ரிமினேட் செய்யப்படுகிறார்கள். வருண் ஒரு முற்போக்கு சிந்தனையாளராக இருப்பதால் பரவாயில்லை. "தான் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, மனைவி/காதலி மட்டும் பத்தினி தெய்வமாக இருக்க வேண்டும், யாரும் எதுவும் சொல்லிவிடக்கூடாது" என்று எதிர்ப்பார்க்கும் சராசரி ஆண்களுக்கு முன்னால் இந்த பெண் பதிவர்கள் தங்கள் வலைப்பூ கமெண்டுகளை, எப்படி தைரியமாக திறக்க முடியும்? Scary situation! மற்ற நாடுகளில் இருக்கும் பாப்பராசி கலாச்சாரத்துக்கு தமிழர்களும் முற்றிலுமாக மாறிவிட்டனர் என்பதையே இது உணர்த்துகிறது. அப்புறம் என்ன 'தமிழ் கலாச்சாரம்' எல்லாம்? இப்போதெல்லாம் தமிழ் கலாச்சாரம் கூட சர்ச்சைக்கு மட்டும் தான் பயன்படுகிறது என்பது வேதனையான உண்மை!
பின்குறிப்பு : இவர்கள்(அனானிகள்) இன்று செய்வது நாளைக்கு இவர்களுக்கே தொல்லையாக முடியும். சாபமெல்லாம் இல்லை, எனக்கு அந்த மூட நம்பிக்கையில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இணையதளமும் நம்முடைய சுற்றுச்சூழல் மாதிரி. நம்மவர்கள் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருப்பார்கள், ஆனால் வெளியே மாசுப்படுத்துவதைப்பற்றி கவலைப்படமாட்டார்கள். வெளியே கிருமிகள் பெருகினால், காற்று மூலமாகவும், தண்ணீர் மூலமாகவும் திரும்ப அவர்களையே பாதிக்கும் என்ற தொலைநோக்கு சிந்தனை இல்லாதவர்கள். இங்கேயும் ஏறக்குறைய அது தான் நடக்கிறது, இன்று இவர்கள் பரப்பும் இந்த மோசமான இணையத்தள ட்ரெண்ட் நாளை அவர்கள் வாரிசுகளையும், குடும்பத்தினரையும் பாதிக்காதா? What Goes Around Always Comes Back Around. Always!
27 comments:
முதல் கமென்ட் என்னுடையது என்பதில் மகிழ்ச்சி!
என் ஆலோசனை.
பதிவர்களின் குணாதிசயம் தொடர்பான உனது எதிர்பார்ப்பு நிறைவேறும் வரை கமென்டுகளை மாடரேட் செய்வதில் தப்பில்லை. மேலும் கழிவறைச் சுவர் கிறுக்கிகளை டிஸேபிள் பண்ணுவதும் தவறில்லை
ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் முதல் கமென்ட் வந்துவிட்டதால் அதை ரிமூவ் செய்தது நான்்தான்
பதிவர்சந்திப்புகளில் இதை பற்றி விவாதித்து நடமுறைப் படுத்தலாம்.
1. Anonymous தெரிவை நீக்கிவிடலாம்.
2.பின்னுட்டங்களை மட்டுறுத்துதலை
கடைபிடிப்பது(நிரந்திரமாக)
3.கருத்துகளை மறுக்கும் போது வார்த்தை பிரயோகத்தை மிகக் கவனத்துடன் கையாள்வது
4. வார்த்தைகள் தவறாக பயன் படுத்தியதாக ,அடுத்தவர்க்கு பட்டல் பரஸ்பர மன்னிப்பு கேட்பது
5.தொடந்து தொல்லை ( அநாகிரிக முறையில்)கொடுப்பவர்களை சட்டரீதியாக சந்திப்பது ,இறுதி எச்சரிக்கை விட்டபிறகு.
லதானந்த் சார்
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. :)
தனியாக குணாதிசியங்களை நான் எதிர்பார்க்க்கவில்லை. ஒரு மனிதர் மற்றொரு மனிதரோடு பேசுவது போல பேசினாலே போதுமானது:)
நன்றி எழிலரசு :)
சட்டரீதியாக என்றால் தமிழ் மணத்தின் மூலமாகவா?
//கயல்விழி said...
நன்றி எழிலரசு :)
சட்டரீதியாக என்றால் தமிழ் மணத்தின் மூலமாகவா?//
தமிழ்மணம் தனது தளத்துக்குள் வந்து செல்வர்களின் ஐ.பிவிலாசங்களை(computer i.p address) பதிவு பண்ணுவதா சொல்லியுள்ளது. சட்ட ,வரம்பு மீரல் களை இதன் மூலம் அடையாலம் க்ண்டு கொள்ளலாம். ( ம்ன்பு தொலைபேசியில் அநாகரி மொழியில் அழைப்போரை பிடிப்பது மாதிரி)
இது என்ன பிரமதம் ஒரு சில மென் பொருட்கள் உபயோகத்தில் உள்ளது. ஒருவர் வலையில் நுழைந்தவுடன் அவர் உபயோகப் படுத்தும் கணனி, தொலைபேசி எண்,பற்றிய தகவல்களை லட்டு மாதிரி தூக்கி கையில் கொடுத்துவிட்ம்
இது மாதிரி கண்காணிக்கப் படுவது தெரிந்தாலே மாயமாய் மறைவர் மர்மயோகிகளும், மலை கள்ளன்களும், காத்தவராயன்களும்,மலையூர் மம்பட்டியான்களும்( ஒரு உதாரனத்திற்குத் தான் சொன்னேன்- யாரும் சண்டைக்கு வந்திடவேண்டாம்))
சூப்பர்ங்க, கயல்விழி. அனாகரீக அனானி கமன்ட் பிரச்சினை எனக்கும் வந்துச்சு, ஆனா வினோதமா என்னோட கவுஜ பதிவுல வந்திச்சு. அதிலையும் கூட பெருந்தன்மையா என்னை திட்டி வராம, என் ப்ளாகுக்கு வந்து பின்னூட்டம் போடறவங்களை திட்டி வந்துச்சி. டைம், அப்புறம் எழுதுற ஸ்டைல், எழுத்துப் பிழைகள்னு எழுதனவரோட ஸ்டைல வெச்சே யார்னு கண்டுபிச்சிட்டேன், ஆனாலும் அவர் ப்ளாகரா வந்து கமன்ட் போடும்போது இன்றுவரைக்கும் பெருசா ஒன்னும் சொல்லிக்கலை. அவர் புண்ணியத்தில காலேஜ் படிச்சதில இருந்து கத்துகிட்ட கெட்ட வார்த்தைகள எல்லாம் பயன்படுத்திக்க முடிஞ்சுது. திரும்பவும் அனானி ஆப்ஷன திறந்து வெக்கலாம்னா, பின்னூட்டம் போடறவங்கள திட்டற அதிபுத்திசாலிங்க திரும்பவும் இம்சை கொடுக்குமோன்னு தோனுது
**** இது மாதிரி கண்காணிக்கப் படுவது தெரிந்தாலே மாயமாய் மறைவர் மர்மயோகிகளும், மலை கள்ளன்களும், காத்தவராயன்களும்,மலையூர் மம்பட்டியான்களும்( ஒரு உதாரனத்திற்குத் தான் சொன்னேன்- யாரும் சண்டைக்கு வந்திடவேண்டாம்))****
LOL!
*** திரும்பவும் அனானி ஆப்ஷன திறந்து வெக்கலாம்னா, பின்னூட்டம் போடறவங்கள திட்டற அதிபுத்திசாலிங்க திரும்பவும் இம்சை கொடுக்குமோன்னு தோனுது
18 July, 2008 3:17 AM ***
உண்மைதான் அனானி ஆப்ஷனை திறந்துவைத்தால், நிறைய பின்னூட்டங்கள் வரும், நமது பதிவு "சூடான" பதிவாக வாய்ப்பு அதிகம். ஆனால் பலவிதாமான தாக்குதல்களையும் சமாளிக்கனும்!
என்ன செய்வது? தமிழர்களில் எல்லா வகையானவர்களும் இருக்கிறார்களே! :(
ரிலாக்ஸ் ப்ளீஸ் :D
// நான் ஏதாவது உருப்படியான, சமுதாயத்துக்கு உதவுகிற மாதிரி(டாக்டர் புரூனோ எழுதுகிறாரே, அது போல) பதிவெழுதி அது சூடான இடுகையில் வந்திருக்குமானால் மிகவும் மகிழ்ந்திருப்பேன். ஆனால் இந்த நெகடிவ் அட்டென்ஷன், எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
//
சரியான கருத்து வரவேற்கிறேன்...
பின்னூட்ட மட்டுறுத்தலைக் கடைப்பிடியுங்கள்..பாதையில் சேறும் இருக்கும், சந்தனமும் இருக்கும்..பார்த்துப்போவதில்தான் நமது புத்திசாலித்தனம் உள்ளது..
மற்றபடி என்னைப் பொறுத்தவரை இந்த அநாகரீக அனானி பின்னூட்டங்கள் எல்லோருக்கும் வருவதுதான்..ஆண்,பெண் வேறுபாடு கிடையாது..(நக்குகிற நாய்க்கு....)
//
ezhil arasu said...
பதிவர்சந்திப்புகளில் இதை பற்றி விவாதித்து நடமுறைப் படுத்தலாம்.
1. Anonymous தெரிவை நீக்கிவிடலாம்.
//
சில பதிவுகளுக்கு அநாமதேய பின்னூட்டங்கள் தேவைப்படுகின்றன.
உதாரணத்துக்கு, இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரம் என்பது முற்றாக மறுக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை இராணுவம் சம்மந்தமாகவோ புலிகள் சம்மந்தமாகவோ பின்னூட்டங்கள் இட அநாமதேய போர்வை தேவைப்படும். இங்கே அது பிழையான செயல்லலல எனபது எனது கருத்து.
//இது மாதிரி கண்காணிக்கப் படுவது தெரிந்தாலே மாயமாய் மறைவர் மர்மயோகிகளும், மலை கள்ளன்களும், காத்தவராயன்களும்,மலையூர் மம்பட்டியான்களும்( ஒரு உதாரனத்திற்குத் தான் சொன்னேன்- யாரும் சண்டைக்கு வந்திடவேண்டாம்))
//
LOL!!!
//இது மாதிரி கண்காணிக்கப் படுவது தெரிந்தாலே மாயமாய் மறைவர் மர்மயோகிகளும், மலை கள்ளன்களும், காத்தவராயன்களும்,மலையூர் மம்பட்டியான்களும்( ஒரு உதாரனத்திற்குத் தான் சொன்னேன்- யாரும் சண்டைக்கு வந்திடவேண்டாம்))
//
LOL!!!
//சூப்பர்ங்க, கயல்விழி. அனாகரீக அனானி கமன்ட் பிரச்சினை எனக்கும் வந்துச்சு, ஆனா வினோதமா என்னோட கவுஜ பதிவுல வந்திச்சு//
எனக்கு நேரடியாவே என்னை திட்டியே வந்தது. அதுவும் இரவு நேரம் என்பதால் கண்காணிக்க முடியவில்லை. நான் ரொம்ப சென்சிடிவ் விஷயங்கள் சிலது எழுதுவதால் யாராவது அனானிமஸாக கருத்தை சொல்ல நினைக்கலாம் இல்லையா? அதற்காக தான் அனானி ஆப்ஷனை வைத்திருக்கிறேன்.கருத்துக்கு ரொம்ப நன்றி ராப் :) :)
பின்குறிப்பு : இவர்கள்(அனானிகள்) இன்று செய்வது நாளைக்கு இவர்களுக்கே தொல்லையாக முடியும். சாபமெல்லாம் இல்லை, எனக்கு அந்த மூட நம்பிக்கையில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இணையதளமும் நம்முடைய சுற்றுச்சூழல் மாதிரி. நம்மவர்கள் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருப்பார்கள், ஆனால் வெளியே மாசுப்படுத்துவதைப்பற்றி கவலைப்படமாட்டார்கள். வெளியே கிருமிகள் பெருகினால், காற்று மூலமாகவும், தண்ணீர் மூலமாகவும் திரும்ப அவர்களையே பாதிக்கும் என்ற தொலைநோக்கு சிந்தனை இல்லாதவர்கள். இங்கேயும் ஏறக்குறைய அது தான் நடக்கிறது, இன்று இவர்கள் பரப்பும் இந்த மோசமான இணையத்தள ட்ரெண்ட் நாளை அவர்கள் வாரிசுகளையும், குடும்பத்தினரையும் பாதிக்காதா? What Goes Around Always Comes Back Around. Always!
//ரிலாக்ஸ் ப்ளீஸ் :D//
வருக சஞ்சய், ரிலாக்ஸ்டாக இருப்பதால் தான் யோசிக்கிறேன். கோபமாக இருந்தால் எனக்கு யோசிக்க தோன்றாது.
//இந்த அநாகரீக அனானி பின்னூட்டங்கள் எல்லோருக்கும் வருவதுதான்..ஆண்,பெண் வேறுபாடு கிடையாது..(நக்குகிற நாய்க்கு....)
//
நன்றி தமிழ்பறவை. இதுவரை வந்த அனானிகளின் தாக்குதல் என்னைப்பற்றியதே. வருணை நோக்கி அல்ல.
//இங்கே அது பிழையான செயல்லலல எனபது எனது கருத்து.
//
கருத்துக்கு நன்றி மெள. நான் சில சென்சிடிவான விஷயங்களை எழுதுவதால் சிலர் அனானிமஸாக கமெண்ட் எழுதலாம். அதனால் தான் அனானிமஸ் ஆப்ஷனை வைத்திருக்கிறேன்.
**** நன்றி தமிழ்பறவை. இதுவரை வந்த அனானிகளின் தாக்குதல் என்னைப்பற்றியதே. வருணை நோக்கி அல்ல.
18 July, 2008 12:48 PM ***
என்னைப்பார்த்தால் ரொம்ப அப்பாவியாகத் தெரிகிறதோ என்னவோ, கயல்! ;-I
//என்னைப்பார்த்தால் ரொம்ப அப்பாவியாகத் தெரிகிறதோ என்னவோ, கயல்! ;-I
//
நீங்க அப்பாவியா??? நீங்க ஒரு அடப்பாவி. இந்த உண்மை யாருக்குமே தெரியமாட்டேங்குதே!!!
**** கயல்விழி said...
நீங்க அப்பாவியா??? நீங்க ஒரு அடப்பாவி. இந்த உண்மை யாருக்குமே தெரியமாட்டேங்குதே!!! ****
LOL! ;-)
****What Goes Around Always Comes Back Around. Always! ***
ஜஸ்டின் டிம்பெர்லேக் பாட்டா?
I thought I told ya, hey!
:):):)
relax please :) guess writing it out was your way of relaxing. btw, most people who enjoy dont leave a comment - so u r bound to get more negative/unwanted comments. I enjoyed the realistic experiences - that makes reading ur blog a pleasure ...Sundar.
மிக்க நன்றி சுந்தர்.
ஆமாம், நிறைய பேர் கமெண்ட் எழுதுவதில்லை தான், இருந்தாலும் உங்களைப்போல சிலர் எழுத தான் செய்கிறீர்கள். என்னுடைய பதிவுகளைப்படித்ததுக்கு ரொம்ப நன்றி :)
//realistic experiences //
எந்தெந்த பதிவுகள் உங்களை கவர்ந்தது, எது எதெல்லாம் பிடிக்கவில்லை/சுமார் ரகம் என்று எழுதினீர்கள் என்றால் உங்களுக்கெல்லாம் பிடித்த பதிவுகளை அதிகமாக எழுத வசதியாக இருக்கும்.
Post a Comment