Wednesday, July 2, 2008

காதல் கல்வெட்டு-4

வால்மார்ட் சென்ற வருண் ஷாப்பிங் எல்லாம் முடித்தான்.கடைசியில் கயலின் அருகாமை இன்று அவனை மயக்கியது ஞாபகம் வந்தது. "செல்ஃப் செக் அவுட்"டிலேயே செக் அவுட்பண்ணியதும் தன் டிஸ்கவரில் பே பண்ணிவிட்டு காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தான். அவன் கயலை பின்னால் இருந்து தழுவிய இடத்தை மறுபடியும் கடக்கும்போது மல்லிகை வாடை அடித்தது. அவனுக்கு கயலின் கழுத்து மற்றும் அவள் உடல் தன் மேல் உரசியது ஞாபகம் வந்தது. இந்த நினைவிலிருந்து தப்பிக்க இந்தியாவில் அப்பா அம்மாவிற்கு கால் பண்ணினான். அவன் வாரமொருமுறை சனிக்கிழமை அப்பா அம்மாவுடன் பேசுவதுவழக்கம்.

அம்மா பேசும்போது, வழக்கம்போல் அவனுக்கு நல்ல வரன்கள் வருவதாக சொன்னார்கள். மேலும் அப்பா வழக்கம்போல் பி பி இருப்பதைமறந்து, ஊறுகாய் வற்றல் எல்லாம் நிறைய சேர்த்துக்கொள்கிறார். நான் சொல்வதை கேட்பதே இல்லை. நீ சொன்னால்தான் கேட்பார் நீதான் அவரை திட்ட வேண்டும் என்று அம்மா புகார் பண்ணினார்கள்.

சிறுவயதில் இருந்து அப்பா- அம்மா இது போல் சண்டை போடுவதைப்பார்த்து வருகிறான், வருண். அப்பா ரொம்ப நல்ல மனிதர்தான், ஆனால் சாப்பாடு விசயத்தில் அவரால் கட்டுப்பாடாக இருக்க முடியாது. நல்லவேளையாக அவருக்கு டயபட்டிஸ், கொலஸ்டிரால் எதுவும் இல்லை. அவரின் ஹைப்பர் டென்ஷனும் அவர் 55 வது வயதில் தெரிய வந்தது. ஒருநாள் திடீரென்ன அப்பாவிற்கு மூக்கிலிருந்து இரத்தம் வர ஆரம்பித்தது. அவசர சிகிச்சைக்கு சென்று என்னவென்று பார்க்கும்போது அவர் இரத்த அழுத்தம் 180/120 இருந்தது. அன்றிலிருந்துதான் அவருக்கு பி பி இருந்ததும் தெரிய வந்தது. பி பி அதிகமானதால், ஒரு வீக்கான நரம்பு உடைந்து அது மூலம் ப்லீடிங் ஆகி இருக்கு என்றார் டாக்டர். டாக்டரிடம் ரெகுலர் செக்-அப் பண்ணி இருந்தால் இது போல் கவனக்குறைவாக விட்டிருக்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். மேலும் டாக்டர் சொன்னார், இதே நரம்புமூளையில் வெடித்து இருந்தால், அவருக்கு ஸ்ட்ரோக் வந்து கோமா ஸ்டேஜ்க்கு போயிருக்கும் பயங்கரம் இருந்தது என்றார் டாக்டர். கொஞ்சநாள் பத்தியமாகவும், ரெகுலர் செக்கப்பும் செய்து கொண்டிருந்தார் அப்பா. மாத்திரை ரெகுலராக சாப்பிடுவதால், பி பி கண்ட்ரோலில் இருந்தது. ஹைப்பர் டென்ஷன் கண்ட்ரோலுக்கு வந்தவுடன் இவர் கண்ட்ரோலிழந்தார். தன் சாப்பாட்டில் மறுபடியும் உப்பு காரம் அதிகமாக்கிக்கொண்டார். அம்மா அவருடன் எவ்வளவு சண்டை போட்டாலும், அவரை திருத்த முடியவில்லை. உப்பு காரம் குறைத்து சமைத்தால், வந்து ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு அப்படியே சாப்பாடை வைத்துவிட்டு எழுந்துவிடுவார். வெளியில்போய் ஏதாவது ஹோட்டலில் போய் வாய்க்கு ருசியாக ஸ்னாக்ஸ் சாப்பிட்டு சமாளிப்பார். இந்த விசயத்தில் அப்பா அம்மாவிடம் கூசாமல் பொய் சொல்லுவதும் உண்டு. ஆனால் அமெரிக்காவிலிருந்து வருண் அவர் டயட்டை கண்ட்ரோல் பண்ணுவது சாத்தியமே இல்லை என்று அம்மாவுக்குப்புரியாது. அவர் என்ன பச்சைக்குழந்தையா? படித்தவர். அவருக்கே இதெல்லாம் தெரியனும் என்று நம்பினான் வருண்.

அம்மாவிடம் பேசி முடித்தபிறகு, “அப்பாவிடம் ஃபோனைக்கொடுங்கம்மா!” என்றான்.

‘சரிப்பா வருண், உன் உடம்பை நல்லாப்பார்த்துக்கோ. அம்மாவுக்கு எந்நேரமும் உன் நினைவுதான்' என்று சொல்லி வழக்கம்போல் குரல் தழுதழுக்க முடித்தார்கள் அம்மா.

‘சரிம்மா! நீங்கள் அப்பாவிடம் சண்டைபோடாமல் தன்மையாக சொல்லுங்கள். இதெல்லாம் அவருக்கே தெரியனும் அம்மா!”

“வருண், எனக்கு பி பி எல்லாம் நார்மலாயிருக்குப்பா!” என்றார் அப்பா, டிஃபென்ஸிவாக.

“சரிப்பா, உடம்பைப்பார்த்துக்கொங்க! ரெகுலரா மாத்திரை சாப்பிடுங்கள். அந்த பி பி மிஷின் வைத்து ரெகுலர் ஆக வீட்டிலேயே செக் பண்ணுங்க!

“ரெகுலரா செக் பண்ணூறேன், வருண்! இப்போலாம் நார்மலாத்தான் இருக்குப்பா!”

“சரி, நான் வச்சுடுறேன்ப்பா. அடுத்த வாரம் பேசுறேன்” என்று முடித்தான் வருண்.

ஃபோன் வைத்தவுடனே மறுபடியும் ரிங் வந்தது.

“ஹல்லோ”

“என்ன ஃபோன் ரொம்ப நேரம் பிஸியா இருந்தது வருண்?”

“ஆமாம், கயல், அப்பா-அம்மாவிடம் பேசினேன்”

“எப்படி இருக்காங்க வருண்? என்ன சொன்னாங்க ஆண்ட்டி அங்கிள்?”

“எல்லாம் பழைய பல்லவிதான், கயல். நிறைய வரன் வருதாம், அப்பா உப்பு காரம் குறைக்கவே மாட்டேன்கிறாராம்”

“யாருக்கு வரன்?”

“எனக்குத்தான். வேற யாருக்கு?”

“உங்களுக்கு பொண்ணு பார்க்கிறார்களா, வருண்?”

“ஆமாம். அதுதான் 2 வருடமா பார்க்கிறாங்களே!”

“ஏன் உங்களை யாரும் கட்டிக்க மாட்டேன்கிறாங்களா, வருண்?”

“ஆமாம். என் ஃபோட்டோவைப்பார்த்து எல்லோரும் பயந்து விடுகிறார்களாம். ஆனால், அதை சொல்லாமல் வேறு ஏதோ காரணம் சொல்லி தட்டிக்கழிக்கிறாங்களாம்.”

“அதெல்லாம் இருக்காது”

'உனக்கெப்படித்தெரியும்?”

“இப்படி எல்லாம் பேசினால் எனக்குப்பிடிக்காது, வருண்”

“சரி, அப்பா, அம்மாவை கஷ்டப்படுத்தக்கூடாதுனு பேசாமல் இருக்கிறேன், கயல்!”

“ஏன் வாழ்நாள் முழுவதும், பிரம்மச்சாரியா இருக்கப்போறீங்களா?”

“தெரியவில்லையே, கயல். டு யு மைண்ட்?”

“ஆஃப் கோர்ஸ் ஐ டு. சரி, என் வீட்டு கதை கேக்குறீங்களா?”

“என்ன சொல்றாங்க ஆண்ட்டி?”

“போனவாரம் ஒரு அழையா விருந்தாளி வந்தாங்க! உங்க ஆண்ட்டியோட க்ளாஸ் மேட்டாம்! இந்தப்பக்கம் கடந்து போவதால், தோழி மகளைப்பார்க்க வருவாங்கனு உங்க ஆண்ட்டி சொன்னாங்க. அவங்க பேரு லக்ஷ்மி”

“எப்படிப் பேசினாங்க ஆண்ட்டியின் அன்புத்தோழி? போரா? ”

“அவங்க மகன் ஒரு ஃபிஸிஷியனாம். அவரைப்பற்றி நிறைய சொன்னாங்க. அப்போத்தான் புரிந்தது எனக்கு அவங்க விஜயம் எதுக்குனு”

“எதுக்கு, கயல்?”

“உங்க ஆண்ட்டி பேய் இருக்கே, அது உண்மையை மறைத்து இவர்களை அனுப்பி வைத்துள்ளது என்னை பெண் பார்க்க”

“பாவம் ஆண்ட்டி, உனக்கு நல்ல படித்த மாப்பிள்ளைதானே பார்த்து இருக்காங்க?”

“என்னிடம் உண்மையை சொல்லாமல் ஏன் மறைத்தது, உங்க ஆண்ட்டி?”

“சொன்னால், நீ வேணாம்னு சொல்லி இருப்ப, இல்லையா?”

“ஆமாம், அதுக்காக?”

“மாப்பிள்ளை ஃபோட்டோ பார்த்தியா?”

“பார்த்து வச்சேன், பேருக்கு”

“பிடிச்சதா?”

“இதென்ன கேள்வி வருண்? ஒருவர் டாக்டரா இருக்கிறார், அதிகம் சம்பாதிக்கிறார் என்பதற்காக மட்டும் ஒருவரை கல்யாணம் பண்ணிக்க முடியுமா?"

“சரி, அப்புறம் ஆண்ட்டியை கால் பண்ணி பேசினயா?”

“இதுவே கடைசித்தடவையா இருக்கட்டும்னு சொன்னேன்”

“ஆண்ட்டி என்ன சொன்னாங்க?”

“அது ஏதோ புரிந்த மாதிரி நடிச்சது”

“சரி, "பெட்" லயா இருக்க?”

“ஆமாம்”

“என்ன போட்டிருக்கே?”

மெளனம்

"என்ன போட்டு இருக்கனு கேட்டேன்"

“நைட் ட்ரெஸ்தான்”

“பொய் சொல்லாதே!, யு ஆர் நாட் எ குட் லையர், கயல்”

“சரி, தூக்கம் வரலையா உங்களுக்கு, வருண்?”

“இன்னைக்கு வராது, கயல்”

“ஏன்?”

“இன்னைக்கு மனது ஒரு மாதிரியா இருக்கு”

“எனக்கும்தான், வருண்”

“சரி ட்ரை டு ஸ்லீப், கயல்! குட் நைட்”

“குட் நைட், வருண்”

வருண் அவளிடம் ஏதோ ஒண்ணு சொல்லத்துடித்தான். கயலும் அதை கேட்கத்துடித்தாள். ஆனால் அது அவனுடைய மனநாக்கோடு நின்றுவிட்டது.


-தொடரும்

14 comments:

தமிழன்-கறுப்பி... said...

;))

தமிழன்-கறுப்பி... said...

வருண் எத்தனை வருசமா இருக்கிங்க இந்த ஊருல...?

வருண் said...

ரொம்ப வருஷமா இருக்கிறேன், தமிழன்! :-)

லதானந்த் said...

மன நாக்கு! ஆஹா! அருமையான coining of word!

Syam said...
This comment has been removed by the author.
Syam said...

கலக்குங்க... :-)

வருண் said...

****லதானந்த் said...
மன நாக்கு! ஆஹா! அருமையான coining of word!***

ரொம்ப நன்றி, திரு.லதானந்த்.

நீங்கள் கல்வெட்டுக்களை தொடர்ந்து வாசிப்பது பெருமையாக இருக்கிறது.

வருண் said...

<<<< Syam said...
கலக்குங்க... :-) >>>>>

நன்றி, ஷியாம்! :-)

Selva Kumar said...

// ஆனால் அது அவனுடைய மனநாக்கோடு நின்றுவிட்டது.
//

அதென்ன மனநாக்கு...
????

பதிவினால் கூட தமிழ் வளரும்.

Selva Kumar said...

வருண்,

Hancock Review எப்போ எழுதறீங்க ??

வருண் said...

***Syam said...

Hi Varun,

First of all my wishes to you and Kayal

Your narration is really wonderful,but if you could censor some areas it would be much better as lot of female bloggers too reading your blog,hope you understand what I mean,but still its your page and you can write what ever you want, this is just my opinion,apologies for entering in your privacy, just wanted your writing to reach more people as I liked it a lot

Regards,
Syam ****

Thanks for ur comments, syam. I will do so. :-)

வருண் said...

வழிப்போக்கன்!

மனநாக்குனா நம் மனதுக்குள் இருக்கும் நாக்கு. அதை பயன்படுத்தி நம் மனதில் நாம் என்னவேணா பேசலாம்!

ஏனென்றால் நாம் மனநாக்கு வைத்து பேசுவது யார் காதுக்கும் கேட்காது!

ஜி said...

Ippathaan I've read all the 4 parts...

//Your narration is really wonderful,but if you could censor some areas it would be much better as lot of female bloggers too reading your blog,hope you understand what I mean,but still its your page and you can write what ever you want, this is just my opinion,apologies for entering in your privacy, just wanted your writing to reach more people as I liked it a lot
//

I also felt the same. When I started the first part, my view about the story completlty went into a different direction... If you do as Syam suggested, it would reach lot of audiences. :))) //apologies for entering in your privacy// mine too :)))

வருண் said...

ஜி: நீங்கள் மற்றும் ஷியாம் சொல்வது நன்றாகப்புரிகிறது. ஓரளவு செண்சார் பண்ணி இருக்கிறேன். இனிமேல் என்னால் முடிந்த அளவு கவனமாகவும் எழுதுகிறேன்.

ஒண்ணு கவனித்தீர்களா?

இந்த மாதிரி சிருங்கார ரசத்தை சேர்த்து எழுதினால் பெண்களுக்கு பிடிக்காது, அவர்களுக்கு எரிச்சல் வரும், வாசகிகளை நீங்கள் இழப்பீர்கள் என்பதை நல்லெண்ணத்துடன் ஆண்கள்தான் வந்து எடுத்துச்சொல்ல வேண்டி இருக்கிறது!

இதே விமர்சனத்தை அவர்கள் சொல்ல தயங்குகிறார்கள்! We are in the 21st century. There is freedom of speech for both men and women. But, women are still being humble and hestitating to express their feelings! :-)

Absolutely no offense meant!