Monday, July 28, 2008

காதல் கல்வெட்டு-8


"என்ன கயல், ரொம்ப நேரமாக காத்திருக்கீங்களா? நான் ஒண்ணும் லேட் இல்லையே?" என்று மணி பார்த்தான் வருண்.

"இல்லை வருண், நீங்க ரொம்ப பங்க்சுவல்தான் வருண். நான் வந்து ஒரு 5 நிமிடம் இருக்கும்"

"உட்கார்ந்து என்ன நினைத்துக்கொண்டிருந்தீர்கள் கயல்?"

"அதெல்லாம் சொல்ல முடியாது. நீங்களே முடிந்தால் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்"

"எனக்கு நல்லாவே தெரியும்."

"என்ன தெரியும்?"

"நீங்க என்ன இவ்வளவு நேரம் யோசிச்சீங்கனு தெரியும்"

"எப்படி வருண் அது?"

" எப்படி எது?"

"ஒண்ணுமே விசயமும் இல்லாமல், ஒரு விசயத்தையும் விடாமல் பேசிக்கிட்டே இருக்கீங்க?"

"என்ன கிண்டலா? சரி கயல், நான் சீரியஸா பேசுறேன்! இந்த அவுட் ஃபிட்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!"

கயலின் முகம் சிவந்தது.

"நீங்களும்தான் இந்த சாட்ஸ்லயும் டி-ஷிர்ட்லயும் ரொம்ப நல்லாயிருக்கீங்க, வருண்"

"என்ன casual-ஆக வந்து இருக்கிறேன் என்று கேலியா?"

"ஆமாம், என்னைப்பாருங்க! ஒரு 2 மணி நேரம் மேக்-அப் பண்ணி வந்து இருக்கேன். ஆனால் நீங்க.."

"அழகா இருக்கவங்கதான் மேக்-அப் போட்டால் இன்னும் கொஞ்சம் அழகா ஆவாங்க , கயல். சரி, நான் சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்க இல்ல கயல்?"

"சொல்லுங்க!"

"உங்களுக்கு ரொம்ப அழகான பெரிய உதடுகள், கயல்!"

இரண்டாவது முறையாக அவள் முகம் சிவந்தது. அதை சமாளிக்க,

"இப்போ எதுக்கு இந்த ஐஸ், நான் காஃபி வாங்கி தரனுமா, வருண்?"

"இல்லை Let me be the host today. Shall we go get the coffee? சரி, கயல், நீங்க என்ன சாப்பிடுவீங்கனு கெஸ் பண்ணி நானே ஆர்டெர் பண்ணுறேன், சரியா?"

"டீல், வருண்"

"இருவரும் நடந்து lineக்கு நடந்து சென்றார்கள். கயல் முன்னால் சென்று நின்றாள், வருண் அவள் அருகில் பின்னால் அவள் முதுகைப்பார்த்து நின்றான். கயல், என்ன நினைத்தாளோ என்னவோ, புன்னகையுடன் அவனை நோக்கி திரும்பி நின்றாள்.

"Line பெருசா இருக்கு, வருண்" என்றாள் புன்னகையுடன்

"The longer the line, the better for me, Kayal" வருண் ஒரு மாதிரியாக சிரித்தான்.

"ஏன்?"

"I can check you out as I promised, you see!"

"இதெல்லாம் அதிகமா இல்லை, வருண்?" என்று சிரித்தாள் கயல்.

"எனக்கு இல்லையே. ஆமா, ஏன் தமிழ் தடவி தடவி பேசுறீங்க, கயல்?"

"நானா?" உங்க தமிழ் ரொம்ப நல்லா இருக்காக்கும்?"

"என்னது கொஞ்ச்ம் கலோகியல் தமிழ் தான், ஆனால் என்னால் சரளமா தமிழ்ல பேசமுடியும் உங்களைப்போல் 75% ஆங்கிலம், பிறகு கொஞ்சம் தமிழ்ல பேசலையே, நான்"

"படித்தெதெல்லாம் காண்வெண்ட், அதனாலதானோ என்னவோ? அது சரி, வருண், எனக்கு என்ன காஃபி பிடிக்கும்னு எப்படி தெரியும் உங்களுக்கு?"

"எனக்கு கொஞ்சம் ஜோசியம் தெரியும்"

"கை பார்த்து ஜோசியம் சொல்வீங்களா?"

"இல்லை உதடு பார்த்து சொல்லுவேன்" அவள் உதடுகளை ஒரு வினாடி பார்த்தான் வருண். அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது அவன் அப்படிப்பார்ப்பது. இருந்தாலும் பிடித்து இருந்தது.

"அப்படி கேள்விப்பட்டதே இல்லையே?"

"நான் சொல்லித்தர்றேன் கவலைப்படாதீங்க"

"இதுலயும் டுயூட்டரிங்கா, வருண்?"

"உங்களுக்கு இந்த பாடத்துக்கு charge கிடையாது, கயல்!"

"எனக்கு ஏதாவது ஆச்சுனா நஷ்ட ஈடு கொடுப்பீங்களா?"

"உதடுக்கு ஏதாவது டேமேஜ் ஆச்சுனா கொடுப்பேன். ஆனால் மனசு டேமேஜ் ஆச்சுனா நான் பொறுப்பல்ல"

"என் மனசுக்கு என்ன ஆகுதுனு உங்களுக்கு எப்படி தெரியும்?"

"எனக்கு உங்க மனசு தெரியும் கயல்!"

கயல் ஒரு நிமிடம் அமைதியானாள். அவனுக்கு உண்மையிலேயே அவள் மனது தெரியுமா? இல்லை, வெறும் வார்த்தை ஜாலமா? என்று யோசித்தாள். வருண் அமைதியை கலைத்தான்.

"ஆண்ட்டி, அங்கிள் எப்படி இருக்காங்க, கயல்?"

"ஓ, என் அம்மா, அப்பாவா? அவங்களுக்கென்ன? நல்லாத்தான் இருக்காங்க"

"உங்களை ரொம்ப "மிஸ்" பண்ணுறாங்களா?"

"ஆமாம், அவங்க ரெண்டு பேருக்கும் இந்த ஊர் "விசிட்" பண்ணும்போது இங்கே எதுவுமே பிடிக்கவே இல்லை, வருண்"

"எனக்கும்தான் வந்த புதிதில் பிடிக்கவில்லை, இப்போ ரொம்ப பிடிக்குதே"

"ஏன்?"

"உங்களை பார்த்ததில் இருந்து பிடிக்குது"

"நான் நம்பிட்டேன், வருண். Thanks Varun for saying that whether you mean it or not" என்று சொல்லி புன்னகைத்தாள், கயல்.

அதற்குள், அவர்கள் கவுண்டர் பக்கத்தில் போய்விட்டார்கள். "டெல்லரி"டம். ஒரு cappuccino Tall, caramel macchiato grande ஆர்டர் பண்ணி, அவளிடம் தன் பெயரை சொல்லிவிட்டு, தன் visa வில் பே பண்ணினான், வருண்.

"உங்களுக்கு "caramel macchiato" பிடிக்கும்தானே?"

"ஆமாம் வருண். பரவாயில்லை உங்க ஜோஸ்யம் ஓரளவு fluke-ல work out ஆகுது"

"You deserve part of the credit, Kayal! More beautiful the lips are, the better results I will get from my "analysis"!"

" I can't believe, myself, Varun" Never mind!"

கயல், வருணுக்கு சற்று முன்னால் side- ல நடந்து போய் காஃபி pick up பண்ணும் இடத்திற்கு நடந்தாள். கயல், ஹை ஹீல்ஸ் போட்டிருந்ததால் தீடீரென்று பாலன்ஸ் தவறி பக்கத்தில் இருந்த வருண் மீது விழுந்தாள். அதன் பின் கையை ஊன்றி சமாளித்து உடனே எழுந்துவிட்டாள்.

அவளை தாங்கிப்பிடித்த வருண், அன்பாக அவளிடம் "Are you all right, sweetheart?" என்று கேட்டான்.

"எப்படி பேலன்ஸ் தவறியதென்றே தெரியல வருண்"

"சரி வா, இந்த டேபிளில் உட்காரலாம். நான் உன் காஃபியை எடுத்து வர்றேன்"

கயல் போய் அமர்ந்தாள். வருண் காஃபி இரண்டையும் பிக அப் பண்ணி வந்து அவளிடம் "caramel macchiato" கொடுத்து விட்டு அவள் எதிரில் அமராமல் அவள் அருகிலேயே அமர்ந்தான்.

"கையில ஏதாவது அடிப்பட்டதா கயல்?"

அவள் வலது கையை தன் கையில் எடுத்து வைத்து பார்த்தான். விழப்போனபோது அவள் கை தரையில் ஊன்றியிருக்க வேண்டும். அவள் உள்ளங்கை சிவந்து இருந்தது. அவள் உள்ளங்கையை தன் விரல்களால் மெதுவாக தடவிவிட்டான், வருண்.

"ரொம்ப வலிக்குதாடா, கயல்?"

"இல்லை வருண், வலியெல்லாம் ரொம்ப இல்லை .கொஞ்சம் எம்பாரசிங்கா ஆயிட்டது"

"It is not a big deal, darling. Accidents happen"

"I am all right now Varun. Thanks for the care"

வருண் அவளை இத்தனை அன்பாக கவனித்தது. ரொம்ப இண்டிமேட்டாக அவளை அழைத்தது அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது.

"நீ நல்ல உயரமா தானே இருக்கே? அப்புறம் ஏன் ஸ்டூல் மேல ஏறி நிக்கனும், கயல்?"

"ஸ்டூலா?"

"ஆமாம், உன் ஹீல்ஸ்"

கயலால் ரொம்ப நேரம் சிரிப்பை நிறுத்த முடியவில்லை. சிரித்ததில் பேலன்ஸ் தவறியதை சுத்தமாக மறந்துவிட்டாள். வ்ருணுடைய அன்பும், அக்கறையும், குறும்பும் அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது.

அப்போது உள்ளே நுழைந்த ஒருவர், கயலின் அருகில் வந்து,

"Hi Kayal! How is it going?" என்றார்.

"Fine" என முடித்தாள், கயல்.

வந்தவர், காஃபி லைனை நோக்கி போனார். வந்தவரை பார்த்தவுடன் கயல் முகத்தில் இருந்த சிரிப்பு மாறிவிட்டதை கவனித்தான் வருண்.

-தொடரும்

35 comments:

rapp said...

ஆஹா, நீங்க ரெண்டு பேரும் நிஜமாவே பேசிப்பீங்களா?

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................................

வருண் said...

***rapp said...
ஆஹா, நீங்க ரெண்டு பேரும் நிஜமாவே பேசிப்பீங்களா?***

நிஜத்தில் கொஞ்சம்! :)

கனவிலும், கற்பனையிலும், கதைகளிலும் ரொம்ப அதிகமாகவே!

-----------------

***rapp said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........***

LOL!!!

ஜியா said...

:))) intha part konjam izuvai maathiri irunthathu.... 8 part aagiyum innum intro laiye poi kittu irukurathunaala konjam aluppu thattuthunnu nenakiren...

வருண் said...

உண்மைதான், ஜீ, 8 ஆகியும் ஒரு ஜவ்வாதான் போகுது! LOL!!!

வாசிக்கிறவங்களுக்குத்தான் தெரியும். எனக்கு, அதை உணர முடியாது.

9 ல் ஏதாவது மாற்றம் உண்டாக்க முடியுமானு பார்க்கிறேன்!

Thanks for your honest, critical remark, ஜி! :-)

MSK / Saravana said...

superappu..

நல்ல காதல் கதை..

:)

Selva Kumar said...

ennanga oru rendu naalle 3 post pottuteenga..

I was out of station for last 3 days, just back..



(Some update has taken away tamil font :((. Need to fix it today)

Selva Kumar said...

//உண்மைதான், ஜீ, 8 ஆகியும் ஒரு ஜவ்வாதான் போகுது! LOL!!!
//


Repeatuuuuuuuuuuuuuuu

மொக்கைச்சாமி said...

This is the first time I am visiting your blog. You both have a good writing style. keep it up!!!

NewBee said...

ஓகே! இது 8 வது பாகம். எல்லாப் பாகமும் முழுசாப் படிச்சுட்டு வரேன் வருண்.

கதைக்கு வாழ்த்துகள் :))

கயல்விழி-க்கும் 'ஹாய்' :))))

பி.கு.:இது என் முதல் விசிட்.

வருண் said...

***M.Saravana Kumar said...
superappu..

நல்ல காதல் கதை.. :)

28 July, 2008 12:54 PM***

நன்றி, சரவணக்குமார்! :-)

வருண் said...

*** வழிப்போக்கன் said...
ennanga oru rendu naalle 3 post pottuteenga..

I was out of station for last 3 days, just back..

(Some update has taken away tamil font :((. Need to fix it today)***

வாங்க வழிப்போக்கன்! :-)

ஏதோ கொஞ்சம் ஜவ்வா இழுக்க நேரம் இருந்தது! LOL!

வருண் said...

*** மொக்கைச்சாமி said...
This is the first time I am visiting your blog. You both have a good writing style. keep it up!!! ***

நன்றி, மொக்கைச்சாமி அவர்களே!

உங்கள் வரவு நல்வரவாகுக! :-)

வருண் said...

*** NewBee said...
ஓகே! இது 8 வது பாகம். எல்லாப் பாகமும் முழுசாப் படிச்சுட்டு வரேன் வருண்.

கதைக்கு வாழ்த்துகள் :))

கயல்விழி-க்கும் 'ஹாய்' :))))

பி.கு.:இது என் முதல் விசிட்.***

வாங்க "newbee"! :)

Welcome to this blog! :)

28 July, 2008 2:06 PM

manikandan said...

ஏனுங்க, அவரு மனசுல உள்ளத அழகா எழுதிகிட்டு இருக்காரு, அத போய் இழுக்குதுன்னு சொல்லிக்கிட்டு..

வருண். பிரமாதமா இருக்கு....தினமும் எழுதுங்க.....இது எல்லாம் அடுத்த வருஷமும் எழுதனும் ! அதுனால எப்போதும் எழுதிகிட்டே இருக்காதீங்க...அனுபவம் கிடைக்காம போய்டபோவுது.

வருண் said...

****அவனும் அவளும் said...
ஏனுங்க, அவரு மனசுல உள்ளத அழகா எழுதிகிட்டு இருக்காரு, அத போய் இழுக்குதுன்னு சொல்லிக்கிட்டு..

வருண். பிரமாதமா இருக்கு....தினமும் எழுதுங்க.....இது எல்லாம் அடுத்த வருஷமும் எழுதனும் ! அதுனால எப்போதும் எழுதிகிட்டே இருக்காதீங்க...அனுபவம் கிடைக்காம போய்டபோவுது.

28 July, 2008 4:55 PM****

You have got a good vision! :-)

லதானந்த் said...

கீழே விழுந்தப்பக் காப்பி மேலே சிந்தியிருக்கணுமே?

கைல எப்பூமே கர்ச்சீப் வெச்சுக்கிறது நல்லது!

வருண் said...

திரு. லதானந்த்:

நன்றிங்க!

காஃபி ஆர்டெர் பண்ணிவிட்டு பிக் பண்ண (கொஞ்சம் தள்ளிப்போய்) இன்னொரு இடம் போகும்போதுதான் இந்த ஸ்லிப்.:-)

அதனால் கைய்யில் இன்னும் காஃபி வரவில்லை. நான் அதை தெளிவாக சொல்லாமைக்கு மன்னிக்கவும் :)

லதானந்த் said...

அய்யய்யோ! அதுக்காக சொல்லலை.
கர்சீப் பல விதத்திலேயும் யூஸாவும்னு சொல்ல வந்தேன்.

SK said...

அழகா இருக்கு வருண். எனக்கு ரொம்ப இழுத்தா போல தெரியலை. அனுபவிச்சு படிச்சா தெரியாதுன்னு நினைக்குறேன்.

தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள். கலக்குங்க

லதானந்த் said

// அய்யய்யோ! அதுக்காக சொல்லலை.
கர்சீப் பல விதத்திலேயும் யூஸாவும்னு சொல்ல வந்தேன். //

லதானந்த்

ஏதோ புரியறா போல இருக்கு ஆனா புரியலை.

ஜி said...

Sorry Varun for diverting the topic... :(((

That was just what I felt :)))

But, don't be biased based on readers comments like mine... you carry on with your own usual style of writing.... :))

வருண் said...

***லதானந்த் said...
அய்யய்யோ! அதுக்காக சொல்லலை.
கர்சீப் பல விதத்திலேயும் யூஸாவும்னு சொல்ல வந்தேன்.

29 July, 2008 12:59 AM***

பெண்களா? இல்லை ஆண்களா?!

வருண் said...

****ஜி said...
Sorry Varun for diverting the topic... :(((

That was just what I felt :)))

But, don't be biased based on readers comments like mine... you carry on with your own usual style of writing.... :))

29 July, 2008 6:15 AM ****

அய்யோ, ஜீ, நிச்சயம் நீங்கள் மனதில் தோன்றியதை ஹாணஸ்டாக சொல்லி இருக்கீங்க.

என்னுடைய ஸ்டயிலை மாற்றுவது கடினம்தான் ஆனால் நிச்சயம் உங்க "காமெண்ட்ஸ்" அதை "இம்ப்ரூவ்" பண்ண உதவும்!

No harm done!

Cheers! :-)

வருண் said...

*** SK said...
அழகா இருக்கு வருண். எனக்கு ரொம்ப இழுத்தா போல தெரியலை. அனுபவிச்சு படிச்சா தெரியாதுன்னு நினைக்குறேன்.

தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள். கலக்குங்க ***

நன்றி எஸ் கே! :)

எனக்கு ரெண்டு மாதிரி (ஜீ, மற்றும் நீங்கள்) க்ரிடிக்ஸும் நிஜமாகவே வேணும்! :-)

SK said...

ஜீ

இப்படி இரண்டு விதமான கருத்துக்கள் இருக்கிறது தான் நல்லது. நீங்க உங்களுக்கு தோன்றத்தை வெளிபடைய சொல்றதுலே ரொம்ப சந்தோசம்.

கயல்விழி said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................................//

எதுக்காக நம்ம கவிதாயினி அழறாங்க?

கயல்விழி said...

ஒரு நாள் அவுட் ஆஃப் ஸ்டேஷனாக இருந்தேன், திரும்பி வருவதற்குள் இரண்டு பதிவு எழுதிட்டீங்க :)

கயல்விழி said...

//intro laiye poi kittu irukurathunaala konjam aluppu thattuthunnu nenakiren...//

இது கரண்ட் சிச்சுவேஷன் என்பதால் இனிமேல் வருண் கற்பனை பண்ணி வேண்டுமானால் எழுதலாம் :) :)

கயல்விழி said...

//கயல்விழி-க்கும் 'ஹாய்' :))))
//

வணக்கம் நியூபீ. உங்க ப்ளாகில் அந்த விவாதம் என்ன ஆனது? கூடிய விரைவில் வருகிறேன்

வருண் said...

*** கயல்விழி said...
ஒரு நாள் அவுட் ஆஃப் ஸ்டேஷனாக இருந்தேன், திரும்பி வருவதற்குள் இரண்டு பதிவு எழுதிட்டீங்க :)

29 July, 2008 9:47 AM ***

நீயில்லாமல் பொழுது போகலை, அதான்,கயல்! :-)

வருண் said...

***கயல்விழி said...
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................................//

எதுக்காக நம்ம கவிதாயினி அழறாங்க?**

இது அழுகையா? நல்லவேளை இப்போவாவது சொன்ன! LOL!!

கயல்விழி said...

//இது அழுகையா? நல்லவேளை இப்போவாவது சொன்ன! LOL!!/

வடிவேலு காமெடி பார்க்கிறதில்லையா நீங்க?

வருண் said...

கயல்:

ஓ, அந்த எக்ஸ்ப்ரெஷனா இது??

இப்போ கற்பனையில் அந்த எக்ஸ்ப்ரெஷன் பார்க்கிறேன் LOL!

கயல்விழி said...

ட்யூப்லைட்!!!

:) :)

வருண் said...

நான் ட்யூப்-லைட் மாதிரி ப்ரிடெண்ட் பண்ணினால்தானே, நீ ரொம்ப பிரகாஷமாக, தெரிவாய், கயல்? ;-)

எல்லாம் உனக்காகத்தான்! ;-?