Thursday, July 17, 2008

அறிவியலில் நாம் ஏன் வளரவில்லை?

அறிவியலில் நாம் வளராததற்கு காரணம் என்ன?


ஃ இந்தியா ஒரு ஏழை நாடு என்பதாலா?

ஃ நம் ஊரில் உள்ள பெரியவர்கள், நல்ல சிந்தனை மற்றும் போராடக்கூடிய திறமைமிக்க சின்னவர்களை, தன்னை மதிக்கவில்லை என்கிற சுயநலத்தால் வளர விடக்கூடாது என்று நினைப்பதாலா?

ஃ நம்மிடம் திறந்த மனப்பான்மை இல்லாததாலா?

ஃ நம்மிடம் ப்ரொஃபசனலிஸம் இல்லாததாலா?

ஃ இல்லை நமக்கு அறிவு இயற்கையிலேயே கம்மியா?


* அறிவியலில் சிறந்து விளங்குவதற்கு பணம் கட்டாயம் வேணும். நாம் ஏழை நாடுதான். அதற்கு ஜனத்தொகை ஒரு பெரிய காரணம். அறிவியலில் நாம் மின்னாததற்கு இது ஒரு மிகப்பெரிய காரணம்.

* வசந்த மாளிகையில் சிவாஜி ஒரு வசனம் சொல்வார்: இந்த வீட்டில் பெரியவங்க சின்னவங்களை பெரியவர்கள் ஆகவிடுவதில்லை. சினிமாவில் மட்டுமல்ல. அது நம் அறிவியல் கம்யுனிட்டியிலும் இது உண்மைதான்.

ஒரு “ஆமாம் சார்” போடாமல், எதையும் தனியாக யோசித்து மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் நேர்மையாக இருக்கிற இளம் (மாணவன்/மாணவி) விஞ்ஞானிகளை நம் பெரிய விஞ்ஞானிகள் வளரவே விடுவதில்லை. அவர்களை ஒரு வழி பண்ணிவிட்டு, தனக்கு போட்டியாக யார் வரமுடியாதோ, யார் எது சொன்னாலும் சரி சரி என்று சொல்கிறார்களோ, அவர்களைத்தான் மேலே கொண்டு போகிறார்களென்பது உண்மை. அவர்கள் சுயநலம் நாட்டுக்கு செய்யும் துரோகம் என்பதை அவர்கள் உணராத முட்டாள்கள்! திறமைமிக்க மாணவ மாணவிகள் இந்த தேசதுரோகிகளால், மேலே போக முடியாமல், எதையும் சாதிக்க வாய்ப்பு கிடைக்காமல் ஃப்ரெஸ்ட்ரேட் ஆகி “புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை”னு தத்துவப்பாடல்பாடிக்கொண்டு அறிவியலைவிட்டு ஒதுங்கி விடுகிறார்கள். நம்ம “ஆமாம் சாமிகள்” எதையோ நாமும் பண்ணுவோம்னு மீடியாக்கர் அறிவியல் செய்து குப்பையை கூட்டுகிற்றார்கள். “ஆமாம் சாமிகள்” எதுவும் பெரிதாக சாதிக்க முடியவே முடியாது.

* நிச்சயம் நம்மில் 95% மக்களிடம் திறந்த மனப்பான்மையோ, தன் தவறை ஒத்துக்கொள்ளும் பெரிய மனப்பாங்கோ கிடையாது. தெரியாததை தெரியாதுனு சொன்னால் அன்றாவது தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. தெரிந்ததுபோல் நடித்தால், வாழ்நாள் முழுவதும் தெரிந்துகொள்ளாமல் சாக வேண்டியதுதான். அப்படித்தான் நம்மில் நிறையப்பேர் வாழ்ந்து சாகிறோம். இதில் வயதில் மூத்தவர்கள் ரொம்ப மோசம்!

* அறிவியலை திரிக்கமட்டும் கூடவே கூடாது. நமக்கு வரும் முடிவுகள் முன்பு அதே பரிசோதனையை செய்தவர்களின் முடிவுகளை விட சம்மந்தமே இல்லாமல் வந்தாலும், அவர்கள் விளைவுகள்போல் வந்ததாக திரிக்க கூடாது. நம்ம எல்லாம் பிறந்த தேதியை கூட மிகச்சாதாரணமாக திரிப்பவர்கள்!
ஒருவருக்கு “ரெக்கமண்டேஷன்” எழுதும்போது பொதுவாக மேலை நாட்டை சேர்ந்தவர்கள், அவர்கள் தொழில் திறமையை வைத்தே எழுதுவார்கள். தனிப்பட்ட முறையில் தன்னிடம் நல்லா நடக்கவில்லை என்பதை மனதில் வைத்து கீழ்தரமாக அவர்களைப்பற்றி குறைத்து பொய் சொல்ல மாட்டார்கள்!

* அறிவு நமக்கு இயற்கையில் கொஞ்சம் குறைவா என்னனு எனக்கு தெரியவில்லை! நம்மில் தேவையில்லாத வரட்டு கெளரவம், அகம்பாவம், நம்மை முட்டாளாக்குவது உண்மைதான்.

99 comments:

லதானந்த் said...

உன்னைப் போன்ற முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண்கள் நிறைய முன் வரவேண்டும்.

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் நீ என் கண்களுக்குத்தெரிகிறாய்.

உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை.

நீடூழி வாழ்க.
எங்கிருந்தாலும் வாழ்க!

Selva Kumar said...

//உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை.

நீடூழி வாழ்க.
எங்கிருந்தாலும் வாழ்க!
//

ரீப்பீட்டேய்......

Selva Kumar said...

//வசந்த மாளிகையில் சிவாஜி ஒரு வசனம் சொல்வார்://

ப்ளீஸ்..நாங்க இருக்கறது 2008..
சிவாஜி..நாகேஷ் எல்லாம் 1978..

எதுவுமே எனக்கு தெரியாது...

Selva Kumar said...

ஃஃஅப்படித்தான் நம்மில் நிறையப்பேர் வாழ்ந்து சாகிறோம். இதில் வயதில் மூத்தவர்கள் ரொம்ப மோசம்!
ஃஃ

சரி!! ஈகோ வந்துருதில்ல...

Selva Kumar said...

அடுத்த தேவையான விவாதம்.

ஆனா இதுக்கு நிறைய பேரு பின்னூட்டம் போட மாட்டாங்கனு நினைக்கிறேன்..
:((

Selva Kumar said...

இதனாலதான் அப்பவே கேட்டேன் நீங்க முழுநேர பதிவரா ??

(இதற்கு அர்த்தம் நீங்க ஆபிசுல வேலை செய்றீங்களா என்பது அல்ல)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அனைத்துமே சிறிதளவு காரணம்..

Pl do think changing the template..comments need to be seen only in separate window.This is not good.

கயல்விழி said...

ஆனந்த் சித்தர், வழிபோக்கன்,

வருண் எழுதிய பதிவுக்கு என்னை புகழ்கிறீர்கள் :)

கயல்விழி said...

வருண்.

உபயோகமான தலைப்பு.

உங்களது கடைசி பாயிண்டான, "நமக்கு அறிவு குறைவு" என்ற் ஒன்றைத்தவிர மற்ற அனைத்தையுமே ஒப்புக்கொள்கிறேன்.

இந்தியர்களுக்கு அறிவில் எந்த குறைவும் இல்லை. சொல்லப்போனால் மற்ற நாட்டினரை விட ப்ரில்லியண்டாகவே இருக்கிறார்கள்.அறிவை சரியாக பயன்படுத்தும் வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்.

கயல்விழி said...

அறிவன்

உங்கள் கருத்துக்கு நன்றி.

டெம்ப்ளேட் ஃபார்மேட் மாற்ற வேண்டுமா?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

In your basic screen,comments cannot be seen with their's author name.
I guess only template change can solve this issue..

கையேடு said...

தேவையான (அருமையான) இடுகை.

rapp said...

இதில் நீங்க கூறியுள்ளவைகள் எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும். இங்கு கூறியுள்ள குறைகளைக் கூட நல்ல தன்னம்பிக்கயுடைய மனநிலையை உடையவர்கள் கடந்து முன்னேறி, நாட்டையும் முன்னேற்றி விடுவார்கள். ஆனால் நம் நாட்டில் அறிவியலின் அனைத்து துறைகளையும் பிடித்து ஆட்டுவது மாநில, மொழி வேறுபாடுகளும் எல்லாவற்றையும் விட மிக மிக மோசமான ஜாதி வித்தியாசங்களும்தான். இவ்விஷயத்தில் சிலரின் அனுபவங்களை நேரிலேயே நான் பதிவு செய்துள்ளேன். அதை விட கொடூரம் இல்லை எனும் அளவுக்கு இருக்கும்.

வருண் said...

*** கயல்விழி said...
வருண் எழுதிய பதிவுக்கு என்னை புகழ்கிறீர்கள் :) ***

பரவாயில்லை, கயல். நான் உன்னிடம் இருந்து அதையெல்லாம் வாங்கிக் கொள்கிறேன்! LOL!

வருண் said...

*** rapp said...
இதில் நீங்க கூறியுள்ளவைகள் எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும். ***

உண்மைதான், ராப். இது எல்லா துறைகளுக்கும் பொருந்தும்!

ஆனால், அரசியல்வாதிகள், மதவாதிகள், சாதரண தொழிலாளிகள், வியாபாரிகள் செய்வதற்கும், உண்மையை மட்டுமே முதலாக/அடிப்படையாக வைத்து தொழில் நடத்தவேண்டிய விஞ்ஞானிகளும் ஒன்றல்லவே.

அவர்கள் மிகமிகப் பொறுப்பாகவும், பொதுநோக்கோடும், தன் நலனைவிட நாட்டின் எதிர்காலத்தை, நலனை பெரிதாகக்கருத வேண்டும் இல்லையா?

மேல் கூறப்பட்ட மற்றவர்களுக்கு எல்லாம் பொதுவாக உலகை சுற்றிப்பார்த்து மேலை நாட்டில் உள்ளவர்களிடம் உள்ள நல்லவைகளை நேருக்கு நேர் பார்த்து அவைகளை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் இவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தும் அதை பார்த்த பிறகும், கிணற்றுதவளைபோல் வாழ்வது மிகவும் நகைப்புக்குரியது என்பது என் எண்ணம்!

வருண் said...

*** கையேடு said...
தேவையான (அருமையான) இடுகை. ***

மிக்க நன்றி, கையேடு அவர்களே! :-)

VIKNESHWARAN ADAKKALAM said...

எல்லாவற்றுக்கும் நண்டுக் கதை தான் காரணம்.

முன்பு சுவர்ண பூமி என்ற மலாயா இந்தியர்களின் வசம் இருந்தது.
இன்றே மலேசியாவில் மாற்றானின் ஆட்சி... பாட்டன் சொத்து பேரனுக்கு என்பதை நாம் உணர வேண்டும்... அதாவது... இன்றய சித்தனை நாளைய பாதிப்பாய் அமையும். அது சாதகமான பாதிப்பாகவும் இருக்கலாம் பாதகமான பாதிப்பாகவும் இருக்கலாம்...

பதிவுக்கு வாழ்த்துக்கள் வருண்...

கோவை விஜய் said...

அறிவு நிரம்ப இருந்தும் அறிவுலகில் ஒரு உன்னத நிலை அடையாததற்கு காரனத்தை தைரியாமாகச் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 14 மறுமொழிகள் | விஜய்

தென்றல்sankar said...

super post!continue

வருண் said...

**** பாட்டன் சொத்து பேரனுக்கு என்பதை நாம் உணர வேண்டும்... அதாவது... இன்றய சித்தனை நாளைய பாதிப்பாய் அமையும். அது சாதகமான பாதிப்பாகவும் இருக்கலாம் பாதகமான பாதிப்பாகவும் இருக்கலாம்...****

உண்மை, விக்னேஷ்! :-)

வருண் said...

*** விஜய் said...
அறிவு நிரம்ப இருந்தும் அறிவுலகில் ஒரு உன்னத நிலை அடையாததற்கு காரனத்தை தைரியாமாகச் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் ****

நீங்களும் அழகா அதை விமர்சித்து உள்ளீர்கள், விஜய்! :-)

வருண் said...

*** தென்றல்sankar said...
super post!continue

18 July, 2008 9:13 AM***

நன்றி, தென்றல் சங்கர்! :-)

Selva Kumar said...

ஃஃஃஇந்தியர்களுக்கு அறிவில் எந்த குறைவும் இல்லை. ஃஃஃஃ

100 ரிப்பீட்டேய்ஸ்..

Selva Kumar said...

ஃஃஃஆனந்த் சித்தர், வழிபோக்கன்,

வருண் எழுதிய பதிவுக்கு என்னை புகழ்கிறீர்கள் :)

ஃஃ

மன்னிக்கவும்..

யாரைச் சொன்னால் என்ன இருவரும் ஒன்றுதானே..சமாளிப்பு :)

வருண் said...

*** யாரைச் சொன்னால் என்ன இருவரும் ஒன்றுதானே..சமாளிப்பு :)***

அதானே?! LOL!!!

கயல், ஏதோ பெண்களை ஆண்கள் டிஸ்க்ரிமினேட் பண்ணுவதாகவும், மட்டம் தட்டுவதாகவும் கொஞ்சம் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தபோது, இந்த மாதிரி, பெண்களுக்கு "ஒரு சில ஊக்குவிப்புகள்" கிடைப்பதில் எனக்கு ஆறுதல்! :-)

Take it easy, vazhippOkkan! I myself have done such mistakes several times! So, I can understand! ;-)

கயல்விழி said...

//In your basic screen,comments cannot be seen with their's author name.
I guess only template change can solve this issue..

//

நன்றி அறிவன்.

I will try to change it sometime soon.

கயல்விழி said...

//அறிவியலின் அனைத்து துறைகளையும் பிடித்து ஆட்டுவது மாநில, மொழி வேறுபாடுகளும் எல்லாவற்றையும் விட மிக மிக மோசமான ஜாதி வித்தியாசங்களும்தான்//
அறிவியலை மட்டும் அல்ல, விளையாட்டுத்துறையையும் இந்த பாலிடிக்ஸ் விட்டு வைக்கவில்லை. கிரிகெட் தவிர வேறு எந்த விளையாட்டுமே ஒரு பொருட்டாக கருதப்படுவதில்லை.

இதனால் தான் படித்து முடித்ததும் பலர் வெளிநாடுகளுக்கு வேலை செய்ய போகிறார்கள்.

ஜி said...

//அறிவியலில் நாம் வளராததற்கு காரணம் என்ன?//

அறிவியலில் நாம் பெரிதாக‌ வளராததற்கு காரணம் என்ன? ன்னு இருந்திருக்கனுமோ??

:)))

வருண் said...

என்னைக்கேட்டால், அறிவியலில், நம்ம எதுவுமே பெருசா சாதிக்கவில்லைங்க!

ராமன் நோபல் பரிசு வாங்கி எத்தனை ஆண்டுகள் ஆகுதுங்க?

அதுவும் அவர் ஒரு "கண்வென்ஷனல் ரிசேர்ச்சர் இல்லை". முறைப்படி பி எச் டி எல்லாம் பண்ணவில்லை. எப்படியோ வந்து இந்த ராமன் எஃபக்ட் னு ஒரு தமிழர்/இந்தியர் பேரில் செய்டுவிட்டு போனார்.

அதுக்கப்புறம்? வளர்ந்து இருந்தால் ஒரு இருபது நூற்றாண்டுக்கு ஒரு முறையாவது ஏதாவது பெரிய அளவில் சாதித்து இருக்கனும். நோபல் பரிசு இல்லனாலும், ஏதாவது ப்ரேக் த்ரு பண்ணி இருக்கோமா? இல்லையே

வளரத்தான் செய்றோம்? ஆனால் ரொம்ப ரொம்ப கம்மியான வளர்ச்சி! :(

கயல்விழி said...

//வளரத்தான் செய்றோம்? ஆனால் ரொம்ப ரொம்ப கம்மியான வளர்ச்சி! :(
//
ஒரு முக்கியமான விஷயம் வருண், நாம மற்ற நாடுகளுக்கு வேலைக்காரர்களாக இருந்தே நம் திறமைகளை வீணாக்குகிறோம். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், படிக்கும் போதே நிறைய மாணவர்கள் வெளிநாட்டு கனவோடு தான் இருக்கிறார்கள்( நாம் இருவரும் கூட அதில் அடக்கம் :()

வருண் said...

நானும்,நீயும் guilty தான் நான் இல்லைனு சொல்லவில்லை கயல்.

நம்ம அங்கேயே இருந்து இருந்தால், இந்தியாவை மாற்றி இருக்கலாம்னு சொல்றியா, கயல்.

அங்கே இருக்கிற talents பற்றாதா?

என்னவோ போ! நம்ம மாதிரி attitude உள்ளவங்க எல்லாம் அங்கே மேலே வரவே முடியாது.

நம் திறமை இங்கே வீணாகுதுனே வைத்துக்கொள்வோம், இதே திறமை அங்கே இருந்தால் எப்படி அதை பயன்படுத்தி இந்தியாவை முன்னேற்றி இருப்போம்னு சொல்லு?

You are going to tell me that here!

First of all, நீ "ஆமாம் சார்" போடுற type இல்லைனா, எங்கே மேலே வர? எங்கே ஒரு "change" ஐ உண்டாக்க?

We would have tried and failed and given up and wasted our talents too or NOT?

புதுகை.அப்துல்லா said...

இந்தியர்களுக்கா அறிவு இல்லை? ஆரம்ப கட்டங்களில் நம் அளவிற்கு அறிவியலில் சாதனை புரிந்தது உலகில் வேறு எந்த சமூகமும் இல்லை. அணுவின் உட்கூறைப் பற்றி உலகிலேயே முதலில் சொன்னவர்கள் நம்முடைய சித்தர்கள்.ஆனால் பெரும்பாலும் மறைபொருள் விளக்கமாகவே சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.(அதன் பின்னர் வந்த திருக்குரானில் அவை இன்னும் சற்று எளிமையாக உள்ளதே தவிர பெரும்பாலும் மறைபொருளாகவே உள்ளது.சொல்லித் தெரிவதை விட மக்கள் உணர்ந்து புரியட்டும் என இறைவன் எண்ணி இருக்கலாம்). இப்படி ஆரம்பத்தில் அசத்திய நம்மவர்களுக்கு பின் ஏன் தன்னம்பிக்கை இல்லாமல் போனது என்று தெரியவில்லை. நமக்கு அறிவெல்லாம் அதிகம் இருக்கிறது,தன்னம்பிக்கையும், சுயநலமற்ற தலைமையும் தான் இல்லை.

Muthu said...

மிக நல்ல கேள்வி. B.Sc படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் இயற்பியல் ஆசிரியர் சொன்னார் :

We are lagging behind the developed nations by atleast 20 years in the scientific R&D

புரிந்து சற்று வேதனையாக இருந்தது. என் புரிதலில் :

- பெரும்பான்மையான இந்திய மனமானது introvert (என் தனிப்பட்ட அபிப்ராயம் மட்டுமே - என்ன ஆதாரம் என்றெல்லாம் ஆரம்பித்தால் நான் அம்பேல்)

எதையும் ஆன்மீகக்கண்ணோட்டத்தோட அணுகி பழக்கமான பல தலைமுறைகள் கொண்டது நமது சமூகம். ஏன் என்ற கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொண்ட சமூகம் நம்முடையது.

- குடும்ப அமைப்பில் பார்த்தால் படித்து வேலைக்குப்போதல் என்பதோடு குறிக்கோள் நின்றுவிடுகிறது. எத்தனைபேர் குறைந்தபட்சம் கல்லூரி அளவிலாவது தன் விருப்பத்துறையை இனங்கண்டு அதில் உயர்கல்வி, ஆராய்ச்சி என்று குறிக்கோளோடு செயல்படுகிறார்கள் ? அல்லது அங்ஙனம் பழக்கப்படுத்தப்பட்டார்கள் முன்னாட்களில் ?

கிட்டத்தட்ட சுதந்தரம் அடைந்த காலத்தில் நம் தேசம் சந்தித்த பிரச்சினைகள் சிக்கல்களும் பல பரிமாணங்களும் கொண்டவை. எனவே 'தேச முன்னேற்றம், அதற்கு அறிவியல் ஆராய்ச்சி ஒன்றே துணை' என்று நமது வேற்றுமைகளை பின்தள்ளி பாய்ச்சலோடு முன்செல்ல நமக்கு இயலாமல் போனது பெரிய துரதிர்ஷ்டம். (அங்கங்கே சில சாதனைகள் இருப்பினும் - பசுமைப்புரட்சி போன்ற - ஒரு தொலைநோக்குப்பார்வையோ ஒருங்கிணைந்த அணுகுமுறையோ நம்மிடம் இல்லை)

- தற்போது அப்துல் கலாம் போல தமது வாழ்நாளில் சாதித்துக்காட்டின முன்னோடி/வழிகாட்டி என்று நிறைய பேர் இல்லை (இவரும் தன்னையே காணிக்கையாக்கித்தான் இந்த நிலைக்கு உயரவேண்டியிருந்திருக்கிறது)

- ஆராய்ச்சி கண்ணோட்டத்தில் நமக்கு வசதி வாய்ப்புகள் (நல்ல கல்விசாலைகள், தகுதியான ஆசிரியர்கள், ஆய்வுக்கூடங்கள் இன்னபிற) மிக மிக குறைவு.

கடைசீயாக :

ஞாநி சொன்ன அதே பாயிண்ட் :

தனுஷ் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் அப்துல் கலாமே இத்தனை ஆண்டுகளாக மொத்தமாக வாங்கி இருக்கமாட்டார்.

அன்புடன்
முத்துக்குமார்

Anonymous said...

Good one !

"How many people from developing countries are getting Nobel prize in Science every year?"

This one question can help us to analyze basic reasons.

Unknown said...

//தனுஷ் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் அப்துல் கலாமே இத்தனை ஆண்டுகளாக மொத்தமாக வாங்கி இருக்கமாட்டார்.//


True... where we are giving respect or good package for the scientist ? peoples are running where they can earn. we cant blame anyone... its happening everywhere... nice post.

--Mastan

வருண் said...

நன்றி திரு. எம் எம் அப்துல்லா, திரு. முத்துக்குமார், திரு. மஸ்தான்!

உண்மைதான் ""செலிப்ரிட்டிகள் பல 1000 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள்!

இது மேலை நாடுகளிலும் தானே நடக்கிறது, நம் நாட்டில்மட்டும் அல்லவே? :)

Voice on Wings said...

//Pl do think changing the template..comments need to be seen only in separate window.This is not good.//

///In your basic screen,comments cannot be seen with their's author name.
I guess only template change can solve this issue..//

மேற்கூறிய அறிவனின் கருத்துகள் குறித்து - இதற்கு templateஐ மாற்ற வேண்டியதில்லை. Templateஇலுள்ள சில பிழையான வரிகளை மாற்றினால் போதும். காண்க: இது குறித்து எனது நேற்றைய பதிவு. இந்தப் பிரச்சனை லதானந்த், நாமக்கல் சிபி ஆகியவர்களின் பதிவிலும் உள்ளது . ஆகவே, அவர்களையும் இதைச் செய்து கொள்ளுமாறு 'அன்புடன்' கேட்டுக் கொள்கிறேன்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

எல்லாவற்றுக்கும் சந்தர்ப்பமும் கிடைக்கவேண்டும்.

இப்பொழுது எங்களுக்கு சந்தர்ப்பமும் சூழலும் பொருந்தி வருவதாகவே எனக்குப் படுகிறது.

அறிவியலில் நாம் ஏன் வளரவில்லை என்பதைவிட ஏன் வேகமாக வளர்கிறோமில்லை என்பது பொருத்தமானதாக இருக்கும்.

மதுவதனன் மௌ.

மகேஷ் said...

people like u why cant resign ur it jobs go in to basic research instead of typing like this ..............
any way everyone needs pay.........

வருண் said...

*** Ph.D. in Physics said...
Good one !

"How many people from developing countries are getting Nobel prize in Science every year?"

This one question can help us to analyze basic reasons.****

Thanks for ur 'input' ! :-)

வருண் said...

****மகேஷ் said...
people like u why cant resign ur it jobs go in to basic research instead of typing like this ..............
any way everyone needs pay.........

19 July, 2008 2:33 PM ****

Well, thanks for ur high esteem on us! I did try and flunked and so typing now ;-)

வருண் said...

*** அறிவியலில் நாம் ஏன் வளரவில்லை என்பதைவிட ஏன் வேகமாக வளர்கிறோமில்லை என்பது பொருத்தமானதாக இருக்கும்.

மதுவதனன் மௌ. ***

நன்றி, மது! :)

பெத்தராயுடு said...

கேள்வி கேட்பது. தன்னுள்ளும், அடுத்தவரிடமும்.

கேள்வி கேட்காமல், மூத்தோர் மற்றும் அடுத்தவர் சொல்லை மறு பேச்சின்றி ஏற்றுக் கொள்வது. இதில் நல்லது கெட்டது இரண்டும் உள்ளது. இந்த பழக்கம் குடும்ப உறவுகள், நட்பு வட்டாரம் அதிகம் சிதையாமல் பார்த்துக் கொள்கிறது. ஆனால், சமூக அளவில் கேள்வி கேட்பதை, தட்டிக் கேட்பதை மழுங்கடித்து விடுகிறது.

இந்தச் சூழ்நிலையில் இருப்பதை ஏற்றுக் கொள்ளவும், மாற்றத்திற்கான எதிர்ப்பும் இந்திய மனதில் இயல்பாக வந்துவிடுகிறது. அப்புறம் எங்கே மாற்றம், புதியன பற்றி சிந்திப்பது?

வருண் said...

****அப்புறம் எங்கே மாற்றம், புதியன பற்றி சிந்திப்பது?****

புதியன பற்றி சிந்திப்பதே இல்லையா?

அப்ப்டி இருந்தால் பரவாயில்லை.

அப்படி சிந்திப்பவர்களை நம் பெரியவர்கள் "தலையெடுக்க" விடுவதில்லையா?

இது மாபெரும் தவறு!

கயல்விழி said...

வருண்,
ஒரு முக்கியமான விஷயம், நமக்கு சமூக கட்டுப்பாடுகளும் அதிகம். உதாரணத்துக்கு இந்த வயதில் சம்பாதிக்க ஆரம்பிக்க வேண்டும், இந்த வயதில் திருமணம் செய்யவேண்டும், குழந்தை பெற வேண்டும் என்ற விதிகள் இருக்கிறது. இந்த விதிகளை மீறுபவர்கள் கலகக்காரர்களாகவும், குடும்பத்துக்கு பெருமை சேர்க்காதவர்களாகவும், கடமை தவறியவர்களாகவும் கருதப்படுகிறார்கள். எனவே நமக்கு சோதனை முயற்சிகள் செய்ய நேரமும், தைரியமும் இருப்பதில்லை. ரிஸ்க் எடுக்க முடிவதில்லை.

பெண்ணாக இருந்தால் இந்த சமுதாய சட்ட திட்டங்கள் இன்னும் கடுமையாக அவரை தாக்கும்.

கயல்விழி said...

நன்றி Voice on Wings. :)

டெம்ப்ளேட்டையே மாற்றலாமா என்று நினைத்திருந்தேன், தகவலுக்கு மீண்டும் நன்றி. :)

புருனோ Bruno said...

1. முவுருளி கணக்குகருவியில் (ஆட்டோ மீட்டர்) சூடு வைப்பது

2. தேர்வு எழுத புத்தகத்தை ”மைக்ரோ செராக்ஸ்” செய்வது
(செய்து அதை வைத்து தேர்வில் பார்த்து எழுதுவது)

3. திரையரங்கில் ஒளிப்படக் கருவியில் (வீடியோ கேமராவில்) திரைப்படத்தை படம் பிடித்து அதை குறுந்தகட்டில் விநியோகிப்பது (ஒரு 15 வருடம் முன் கேமரா பிரிண்ட் என்று ஒரு பதம் கேள்விப்பட்டீருக்கிறீர்களா)

4. மூன்று அல்லது நான்கு நபர்களுடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் செல்வது

5. அலைபேசியில் ”மிஸ்டு கால்” அளிப்பது

6. HP நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கண்டுபிடிக்கும் அச்சு மையுறைகளை (cartridge) மறுநிரப்பு (மீள்நிரப்பு) செய்வது

போன்ற நமது அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து உங்கள் கருத்தென்ன

சிரிக்கவும், சிந்திக்கவும் :) :)

Unknown said...

///இந்தியர்களுக்கா அறிவு இல்லை? ஆரம்ப கட்டங்களில் நம் அளவிற்கு அறிவியலில் சாதனை புரிந்தது உலகில் வேறு எந்த சமூகமும் இல்லை. அணுவின் உட்கூறைப் பற்றி உலகிலேயே முதலில் சொன்னவர்கள் நம்முடைய சித்தர்கள்.ஆனால் பெரும்பாலும் மறைபொருள் விளக்கமாகவே சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.(அதன் பின்னர் வந்த திருக்குரானில் அவை இன்னும் சற்று எளிமையாக உள்ளதே தவிர பெரும்பாலும் மறைபொருளாகவே உள்ளது.சொல்லித் தெரிவதை விட மக்கள் உணர்ந்து புரியட்டும் என இறைவன் எண்ணி இருக்கலாம்). ///இப்படி ஆரம்பத்தில் அசத்திய நம்மவர்களுக்கு பின் ஏன் தன்னம்பிக்கை இல்லாமல் போனது என்று தெரியவில்லை. நமக்கு அறிவெல்லாம் அதிகம் இருக்கிறது,தன்னம்பிக்கையும், சுயநலமற்ற தலைமையும் தான் இல்லை.///

மறுக்கா சொல்லேய்

வருண் said...

***Bruno said

போன்ற நமது அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து உங்கள் கருத்தென்ன

சிரிக்கவும், சிந்திக்கவும் :) :)***

LOL!

Well, when I think about this, I arrive at a conclusion, "After all we are not completely skill-less"! :-)

வருண் said...

புதுகைச் சாரல் said...

****மறுக்கா சொல்லேய் ****

இதுக்கு என்ன அர்த்தம்?

REPEAT-ஆ???? ;-s

புருனோ Bruno said...

//Well, when I think about this, I arrive at a conclusion, "After all we are not completely skill-less"! :-)//

நமக்கு எது தேவையோ, அது எளிதாக கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதில் நம்மவர்கள் கில்லாடிகள் !!! (அது சட்டத்திற்கு உட்பட்டதா, சட்ட விரோதமா என்று கவலைப்படுவதில்லை)

நாம் பல புதிய விஷயங்களை கண்டுபிடித்துள்ளோம். ஆனால் Documentation கிடையாது. பல கண்டுபிடிப்புகளை அவற்றின் சிறப்பு அறியாமலேயே அன்றாடம் பயன் படுத்துகிறோம். உதாரணங்கள்

1. அருவாமனை !!!
2. கரும்பு சாறு பிழியும் இயந்திரம்.
3. இட்லிதட்டு, பாத்திரம்

இதற்கெல்லாம் யாரும் பேடண்ட வாங்க வில்லை

வருண் said...

**** நாம் பல புதிய விஷயங்களை கண்டுபிடித்துள்ளோம். ஆனால் Documentation கிடையாது. ****

ஆமாம், இது நம்மிடம் உள்ள மிகவும் மோசமான பழக்கம்! :-(

manikandan said...

"நமக்கு சமூக கட்டுப்பாடுகளும் அதிகம். உதாரணத்துக்கு இந்த வயதில் சம்பாதிக்க ஆரம்பிக்க வேண்டும், இந்த வயதில் திருமணம் செய்யவேண்டும், குழந்தை பெற வேண்டும் என்ற விதிகள் இருக்கிறது. இந்த விதிகளை மீறுபவர்கள் கலகக்காரர்களாகவும், குடும்பத்துக்கு பெருமை சேர்க்காதவர்களாகவும், கடமை தவறியவர்களாகவும் கருதப்படுகிறார்கள்"

இது எனக்கு காரணமா தெரியல. ஒவ்வொரு நாடும் அறிவியலுக்கு செலவு செய்யற பணத்தோட மதிப்பீடு செஞ்சு பாருங்க. அப்ப தான் உண்மையான நிலைமை தெரியும்.

manikandan said...

" HP நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கண்டுபிடிக்கும் அச்சு மையுறைகளை (cartridge) மறுநிரப்பு (மீள்நிரப்பு) செய்வது "

இது பற்றி நான் எழுத நினைத்து இருந்தேன். HP மற்றும் Dell நிறுவனம் செய்து வருவது அட்டூழியம். மறுநிரப்பு செய்ய தகுதியான மையுறைகளை தருவது எளிதானது.

In european countries, there are shops that specializes in selling the needles to refill the catridge. So, you just can't snatch all the credits for this invention.

manikandan said...

1. அருவாமனை !!!
2. கரும்பு சாறு பிழியும் இயந்திரம்.
3. இட்லிதட்டு, பாத்திரம்

நமக்கு ப்ராஜெக்ட் செய்ய போதிய அனுபவம் இல்லை. அதுவும் உணவில் நம் கண்டுபிடிப்புக்கு அளவே இல்லை !

manikandan said...

நமக்கு ப்ராஜெக்ட் செய்ய போதிய அனுபவம் இல்லை.

it should sound "project" !!

வருண் said...

***** இது எனக்கு காரணமா தெரியல. ஒவ்வொரு நாடும் அறிவியலுக்கு செலவு செய்யற பணத்தோட மதிப்பீடு செஞ்சு பாருங்க. அப்ப தான் உண்மையான நிலைமை தெரியும். *****

அப்போ நம்மிடம் பணம் இல்லை. அதனால்தான் சாதிக்க முடியவில்லை என்கிறீர்கள்?

புரூனோ சொல்கிற

* "lack of proper documentation"

கயல் சொல்கிற மாதிரி,

* "lack of encouragemnt of new thoguhts and suppressing the younger generations who comes up with novel ideas "

அதெல்லாம் ஒண்ணுமே இல்லைனு சொல்றீங்களா?!

சரி, அப்படிப்பார்த்தால், நாம் ஏன் "ஏழை"?

நம்மிடம் உள்ள ஜனத்தொகைதான் அதற்கு காரணம்.

நம்ம வாழக்கையை நம் தகுதிக்கேற்றவாறு/வசதிக்கேற்ரவாறு அமைத்துக்கொள்ள நமக்கு தெரியலை.

ஏதோ ஒரு வயதானா கல்யாணம் செய்யனும். ஆண்டவன் அருளால் நல்ல மனைவி அமையனும்.

குழந்தை கடவுள் கொடுப்பது பெற்றுக்கொண்டே இருக்கனும் என்று வாழ்ந்த வாழக்கைதானே நம்மை இந்த நிலைமைக்கு கொண்டுவந்தது??

இல்லையா???

manikandan said...

Research Funding மிகவும் கம்மி வருண். நாம் செய்யும் செலவுக்கு ஏற்ற அளவு நமது அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளும் இருக்கின்றன. ஆதலால் நாம் உண்மையில் வளரவில்லை என்று கூறமுடியாது.

"புரூனோ சொல்கிற
* "lack of proper documentation"
கயல் சொல்கிற மாதிரி,
* "lack of encouragemnt of new thoguhts and suppressing the younger generations who comes up with novel ideas "
அதெல்லாம் ஒண்ணுமே இல்லைனு சொல்றீங்களா?"

நான் சொல்ல வந்தது முக்கிய காரணத்தை. we need to institutionalize the innovations. தற்பொழுது இந்தியாவில் நடக்கும் கண்டுபிடிப்புக்கள் தனி ஒருவனின் முயற்சி சான்றாதாகவே இருந்து வருகிறது இல்லையேல் வெகு சில நிறுவனங்கள் வழியாக வருகிறது. இதற்கு முக்கிய காரணம் funding தான். ப்ருனோ சொல்லும் lack of proper documentation funding சம்பந்தப்பட்டதே.


சரி, அப்படிப்பார்த்தால், நாம் ஏன் "ஏழை"?
நம்மிடம் உள்ள ஜனத்தொகைதான் அதற்கு காரணம்.
நம்ம வாழக்கையை நம் தகுதிக்கேற்றவாறு/வசதிக்கேற்ரவாறு அமைத்துக்கொள்ள நமக்கு தெரியலை.
ஏதோ ஒரு வயதானா கல்யாணம் செய்யனும். ஆண்டவன் அருளால் நல்ல மனைவி அமையனும்.
குழந்தை கடவுள் கொடுப்பது பெற்றுக்கொண்டே இருக்கனும் என்று வாழ்ந்த வாழக்கைதானே நம்மை இந்த நிலைமைக்கு கொண்டுவந்தது??

இல்லையா???

இருக்கலாம். எனக்கு பதில் தெரியவில்லை. நீங்கள் கூறிய அனைத்துமே மற்ற சமூகத்தினரும் செய்து வருவனவே.

lack of encouragemnt of new thoguhts and suppressing the younger generations who comes up with novel ideas

இதற்கான காரணமும் பொருளாதார சம்பந்தப்பட்டதே. எனது பெற்றோர்கள் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களை நான் சந்தித்துவிட கூடாதே என்பதில் தான் குறியாக இருந்தனர். ஆதலால் அவர்கள் சில சமயம் நமது விருப்பங்களுக்கு குறுக்கே நிற்க வாய்ப்புக்கள் அதிகம். Retrospectively we can treat that as suppression. But to me it looks more like "lack of financial freedom"

வருண் said...

*** ப்ருனோ சொல்லும் lack of proper documentation funding சம்பந்தப்பட்டதே.***

இல்லைங்க, அவர் சொல்வதை நான் வேறு மாதிரி புரிந்துகொண்டுள்ளேன்.

நம்ம எதையுமே சீரியஸாக பதிவு செய்து வைப்பதில்லை.

நம்முடைய பிறந்த நாளை க்கூட பள்ளிக்கு சீக்கிரம் அனுப்ப வேண்டும் என்று சாதாரணமாக மாற்றி கொடுக்கிறதைப்பார்க்கலாம்.

நம் பிறந்த தேதி என்பதை மாற்றுவது படு முட்டாள்தனம்!

இதற்குக்கெல்லாம் நாம் ஏழை பணக்காரன் என்பதை சொல்லி சமாளிக்க முடியாது!

வருண் said...

****Retrospectively we can treat that as suppression. But to me it looks more like "lack of financial freedom" ***

I can accept that to certain extent. If it has happened in the family settings then what you are saying is right.

When it happens in the scientific community, it only suggests our lack of open mind and lack of looking at issues in a broader picture. I mean two people can be competitors but when we are looking at in a bigger picture, we both are Indians. No matter who achieves, it is an Indian's achievment. Suppressing each other is equalent to putting your own country down!

கயல்விழி said...

//அனைத்துமே சிறிதளவு காரணம்..

Pl do think changing the template..comments need to be seen only in separate window.This is not good.//

மாத்தியாச்சு அறிவன் :)

கயல்விழி said...

//மேற்கூறிய அறிவனின் கருத்துகள் குறித்து - இதற்கு templateஐ மாற்ற வேண்டியதில்லை. Templateஇலுள்ள சில பிழையான வரிகளை மாற்றினால் போதும். காண்க: இது குறித்து எனது நேற்றைய பதிவு. //

மீண்டும் நன்றி Voice on wings.

கயல்விழி said...

//அலைபேசியில் ”மிஸ்டு கால்” அளிப்பது//

ROFTL

கயல்விழி said...

//இது எனக்கு காரணமா தெரியல. ஒவ்வொரு நாடும் அறிவியலுக்கு செலவு செய்யற பணத்தோட மதிப்பீடு செஞ்சு பாருங்க. அப்ப தான் உண்மையான நிலைமை தெரியும்.//

மற்ற நாடுகளில் ஆணோ/பெண்ணோ தனியாக வாழ முடிவு எடுத்தாலோ, குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்தாலோ அவர்களை யாரும் தொல்லைப்பண்ணுவதில்லை.

இந்தியாவில், முக்கியமாக தமிழகத்தில் இத்தகைய முடிவுகளுக்கு முகம் தெரியாதவர்களால் கூட விமர்சிக்கப்படுவோம். குடும்பம் என்றால் கூடவே பொறுப்புகள் வரும், நேரம் குறையும்.

பல புகழ்பெற்ற அறிவியல் சாதனையாளர்கள் கல்யாணம் ஆகாதவர்களாகவோ, அல்லது மனைவி/கணவனை பிரிந்தவர்களாகவோ இருப்பார்கள்.

Anyways, This is just one of the reasons, not 'the reason'. நிதி பற்றாக்குறையே முக்கியமான காரணம் என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு இருக்கிறது.

கயல்விழி said...

//நமக்கு ப்ராஜெக்ட் செய்ய போதிய அனுபவம் இல்லை. அதுவும் உணவில் நம் கண்டுபிடிப்புக்கு அளவே இல்லை !
//

அவள் விகடனில் வரும் விதவிதமான சமையல் ரெசிப்பிகளைப்பார்த்தால், நாம் எத்தனை பெரிய கண்டுபிடிப்பாளர்கள் என்று தெரிந்துவிடும். முக்கியமாக பெண்கள். 50 வகை ராகி ரெப்பிகள், 60 வகை அவல் ரெசிப்பிகள் என்று edible பொருட்கள் என்னென்ன இருக்கிறதோ அதை எல்லாம் வித விதமாக கலந்து உணவு தயாரிக்கிறார்கள். இதே ஆர்வத்தை வேறு எதிலாவது காட்டினால் நன்றாக இருந்திருக்கும்.

கயல்விழி said...

//No matter who achieves, it is an Indian's achievment. Suppressing each other is equalent to putting your own country down!//

ஹிஸ்பானிக்ஸ், யூதர்கள் போன்றவர்களிடம் இருக்கும் ஒற்றுமை நம்மிடம் இருப்பதில்லை. ஒரு இந்தியர் முன்னேறுவது மற்ற இந்தியர்களுக்கு பிடிப்பதில்லை.

கயல்விழி said...

அவனும்-அவளும்,

உங்களுடைய வருகைக்கும், விவாதங்களுக்கும் மிக்க நன்றி :)

வருண் said...

*** இதே ஆர்வத்தை வேறு எதிலாவது காட்டினால் நன்றாக இருந்திருக்கும்.***

LOL!

கையேடு said...

மீண்டுமொரு அருமையான தொடர் விவாதம்..

உங்கள் பார்வையில் அறிவியலில் வளர்ச்சி என்றால் என்ன?

கயல்விழி said...

//உங்கள் பார்வையில் அறிவியலில் வளர்ச்சி என்றால் என்ன?//

வாங்க கையேடு.

புதிய அறிவியல் தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பது வெற்றிகரமாக அதிக பின்விளைவுகள்/பாதிப்புகள் இல்லாமல் உபயோகிப்பதும், மற்ற நாடுகளுக்கு அறிமுகப்படுத்ததலும் என்னுடைய பார்வையில் அறிவியல் முன்னேற்றம்/வளர்ச்சி.

மற்றவர்களின் கண்டுபிடிப்புகளை உபயோகிப்பதை நான் அறிவியல் வளர்ச்சியாக கருதவில்லை.

வருண் said...

சரி,

* ஒரு இண்ஸ்ட்ருமெண்ட் நாமா தயாரிக்க முடிந்து உள்ளதா?

* ஏதாவது கேன்சர் எயிட்ஸ், அல்லது வயாகரா மாதிரி நாமா கண்டு பிடித்து பெரிய ராயல்ட்டி நம்ம கண்ட்ரிக்கு கொண்டு வந்துள்ளோமா?

* ஏதாவது "கயல் விழி ரியாக்சன்" இல்லை அந்த மாதிரி ஏதாவது கெமிஸ்ட்ரியில் இருக்கா? சாதித்து இருக்கோமா?

* ராமன் எஃபக்ட்க்கு அப்புறம் ஏதாவது பெருசா ஃபிசிக்ஸ்ல சாதித்து இருக்கோமா?

எல்லாமே வெஸ்ட்ல இருந்து தானே காசு கொடுத்து வாங்குறோம்? சயண்ஸும் சரி டெக்நாலஜியும் சரி.

இல்லையா?

கயல்விழி said...

//வயாகரா//

இது போன்ற கண்டுபிடிப்புகள் தேவையே இல்லை.

வருண் said...

இந்த ஒரு ட்ரக்கை வைத்து ஃபைஷர் என்ன என்ன சாதித்தார்கள் தெரியுமா, கயல்?!

Selva Kumar said...

இப்படிச் சொல்றனேனு கோவிச்சுக்காதீங்க. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள், ராயல்டீஸ், IPR, இவையனைத்தையும் விட முக்கியமானது....

Ability to Market the Innovations to People.

எனக்கென்னவோ நம் நாட்டில் கண்டுபிடிக்க பட்ட கருவிகள், தொழில்நுட்பங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை என்றே தோன்றுகிறது.

கயல்விழி said...

//இந்த ஒரு ட்ரக்கை வைத்து ஃபைஷர் என்ன என்ன சாதித்தார்கள் தெரியுமா, கயல்?!

//

பணத்தை தவிர வேறென்ன சாதித்தார்கள்? வயதான ஆண்கள் இதை சாப்பிட்டு மாரடைப்பு வந்து அவதிப்பட்டார்கள்.

கயல்விழி said...

//இப்படிச் சொல்றனேனு கோவிச்சுக்காதீங்க. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.//

நீங்க சொல்லி இருக்கும் கருத்துக்கு என்னுடைய கடுமையான கண்டனங்கள்! LOL

இதுக்கெல்லாம் ஏன் கோவிக்க போகிறோம்? :) :) வருக வழிப்போக்கன்

கையேடு said...

வருண் மற்றும் கயல் உங்களது கருத்துக்களை நான் மறுக்கவில்லை. மிகவும் ஏற்புடையதே.

ஆனால், நாம் தற்போது பேசும் வளர்ச்சி என்பது நாம் வளர்த்தெடுத்தல்ல.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக (தற்போதும்) நமது சமூகத்தில் நடந்த வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் அனைத்தும் நாமாக நமது தேவையினடிப்படையில், நமது உழைப்பு மற்றும் சிந்தனையில் உருவாக்கியதில்லை.

பெரும்பாலும் திணிக்கப்பட்டது அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதிலே நவீன அறிவியலும் அடக்கம்.
இதனது தாக்கம் இன்னுமொரு நூற்றாண்டுகூட தொடரலாம்.

Selva Kumar said...

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் We are bad business people so we look small in Innovation also.

கயல்விழி said...

//நமது உழைப்பு மற்றும் சிந்தனையில் உருவாக்கியதில்லை.

பெரும்பாலும் திணிக்கப்பட்டது அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதிலே நவீன அறிவியலும் அடக்கம்.//

இதை தான் நானும் குறிப்பிட்டு இருந்தேன். நன்றி கையேடு.

கையேடு said...

//புதிய அறிவியல் தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பது வெற்றிகரமாக அதிக பின்விளைவுகள்/பாதிப்புகள் இல்லாமல் உபயோகிப்பதும், மற்ற நாடுகளுக்கு அறிமுகப்படுத்ததலும் என்னுடைய பார்வையில் அறிவியல் முன்னேற்றம்/வளர்ச்சி. //

இது உங்கள் பார்வையில் வளர்ச்சி.

//
கயல்விழி said...
//நமது உழைப்பு மற்றும் சிந்தனையில் உருவாக்கியதில்லை.

பெரும்பாலும் திணிக்கப்பட்டது அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதிலே நவீன அறிவியலும் அடக்கம்.//

இதை தான் நானும் குறிப்பிட்டு இருந்தேன். நன்றி கையேடு.
//

இப்போடு இரண்டையும் சேர்த்து வாசித்துப் பாருங்கள். அப்படியானால், நமது தேவையை அடுத்தவர் தேவையாக மாற்றினால் மட்டுமே நீங்கள் குறிப்பிட்டுருக்கும் வளர்ச்சி சாத்தியம்.

ஆனால், நாம் வளர்ச்சியின் அளவுகோலாக மேற்குலகையும், அதன் தேவைகளை நமது தேவைகளாகவும் மாற்றிக்கொண்டு சில நூற்றாண்டுகள் ஆகிவிட்டது.. :)

அதனால், இனி போட்டியில் நமக்கு முன்னர் இருப்பவருடனான இடைவெளியை குறைப்பதற்கே நாம் இன்னும் பல ஆண்டுகள் அயராது ஓடவேண்டும், ஆனால், முன்னாலிருப்பவரும் ஓடிக்கொண்டிருக்கிறார், நம்மைவிட வேகமாக.. :)

ஒரு நகைச்சுவைக்காக..
முன்னாலிருப்பவருக்கு எப்போது எங்கே நிறுத்துவது என்பதில் குழப்பமிருக்கிறது, பின்னாலிருக்கும் நமக்கு எந்தத் திசையில் தற்போது ஓடுவது என்பதிலேயே குழப்பம் இருக்கிறது.. :)

அதனால்தான், இவ்வளவு சமூக இன்னல்களைச் சந்திக்க நேர்கிறது ஒவ்வொரு துறையிலிருப்பவரும்.

கயல்விழி said...

//ஆனால், நாம் வளர்ச்சியின் அளவுகோலாக மேற்குலகையும், அதன் தேவைகளை நமது தேவைகளாகவும் மாற்றிக்கொண்டு சில நூற்றாண்டுகள் ஆகிவிட்டது.. :)

அதனால், இனி போட்டியில் நமக்கு முன்னர் இருப்பவருடனான இடைவெளியை குறைப்பதற்கே நாம் இன்னும் பல ஆண்டுகள் அயராது ஓடவேண்டும், ஆனால், முன்னாலிருப்பவரும் ஓடிக்கொண்டிருக்கிறார், நம்மைவிட வேகமாக.. :)//

முற்றிலும் உண்மை.

//ஒரு நகைச்சுவைக்காக..
முன்னாலிருப்பவருக்கு எப்போது எங்கே நிறுத்துவது என்பதில் குழப்பமிருக்கிறது, பின்னாலிருக்கும் நமக்கு எந்தத் திசையில் தற்போது ஓடுவது என்பதிலேயே குழப்பம் இருக்கிறது.. :)//

நகைச்சுவைக்காக எழுதி இருந்தாலும் இதை படித்து சிரிப்பு வரவில்லை. வருத்தமான உண்மை இது :(. இத்தனை அறிவுத்திறமை நம்மிடம் இருந்தும் என்ன பயன்?

வருண் said...

கயல்:

உண்மைதான் நிறைய பேர் இந்த ட்ரக் கை தேவையில்லாமல் எடுத்து அப்யூஸ் பண்ணுகிறார்கள் என்பது.

ஆனால் டாக்டர் அப்ரூவல் இல்லாமல் இதை எடுக்க முடியாதுனு நினைக்கிறேன்.

பை தி வே, கயல், இந்த ட்ரக், viagara, ஒரு ஆக்ஸிடெண்டல் டிஸ்கவெரினு நினைக்கிறேன்.

"ஆஞ்சினா" என்கிற நெஞ்சுவலிக்கு க்ளினிக்கல் ட்ரயல் செய்யும்போது, அந்த நோயாளிகளின் என்ஹாண்ஸெட் செக்ஷுவல் ஆக்டிவிட்டியை கவனித்து, அதையே பிறகு "இதற்கு" ட்ரக் ஆக்கிவிட்டார்கள்.

Observation is the most important part in science. Most of the greatest discoveries are accidental including penicillin! ;-)

கயல்விழி said...

//ஆனால் டாக்டர் அப்ரூவல் இல்லாமல் இதை எடுக்க முடியாதுனு நினைக்கிறேன்.//

இல்லை, கனடாவில் மெக்சிகோவில் இருந்தெல்லாம் இணையதளம் வழியாக ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் இந்த மருந்தை பலர் வாங்கி பயன்படுத்துகிறார்கள். அந்த காலத்தில் சிட்டுக்குருவி லேகியத்திலிருந்து இந்த கால வயாகரா வரைக்கும் செக்ஷுவல் என்ஹான்ஸ்மெண்டுக்கான மருத்துக்களை மக்கள் தொடர்ந்து வாங்கிக்கொண்டு தான் இருப்பார்கள், விலையைப்பற்றி கவலைப்படாமல். எனவே இது போன்ற கண்டுபிடிப்புகளை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம்.

நீங்கள் எழுதிய மற்ற தகவல்கள் எனக்கு புதியவை, Thanks for the info.

வருண் said...

*** இல்லை, கனடாவில் மெக்சிகோவில் இருந்தெல்லாம் இணையதளம் வழியாக ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் இந்த மருந்தை பலர் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.****

அப்போ கஷ்டம்தான் கயல்!

I think for some crazy people, "It is worth going for it, and dying"

கயல்விழி said...

//அப்போ கஷ்டம்தான் கயல்!

I think for some crazy people, "It is worth going for it, and dying"//

Esp, if it has anything to do with sex.

வருண் said...

Yes, but the fact is no one is going to be completely sexually satisfied until they die- no matter what they do, or how they try! :)

கயல்விழி said...

//Yes, but the fact is no one is going to be completely sexually satisfied until they die- no matter what they do, or how they try! :)//

Is it my imagination or you are really that depressed? :) :)

வருண் said...

*** Is it my imagination or you are really that depressed? :) :)***

Do I sound depressed? LOL!

I really dont know, kayal, LOL!

I was thinking about some people! :-)

Selva Kumar said...

விவாதம் திசை மாறுவதை போல் தோன்றுகிறதே...

It is hightime for Stoneவெட்டு - 7

Jk...LOL!!!

வருண் said...

கல்வெட்டு-7 லை தோண்டி எடுக்கனுமாக்கும், வழிப்போக்கன்! LOL!

தருமி said...

நிகழ்காலத்துக்கான உங்கள் கேள்வியோடு பழைய காலத்துக்கான என் கேள்வி ஒன்றையும் சேர்த்துக்கொள்கிறேனே...

Anonymous said...

////No matter who achieves, it is an Indian's achievment. Suppressing each other is equalent to putting your own country down!//

ஹிஸ்பானிக்ஸ், யூதர்கள் போன்றவர்களிடம் இருக்கும் ஒற்றுமை நம்மிடம் இருப்பதில்லை. ஒரு இந்தியர் முன்னேறுவது மற்ற இந்தியர்களுக்கு பிடிப்பதில்லை.

//

Perhaps the unity stops at linguistic/state/community level?

வருண் said...

If you want to be a citizen of Isreal, you must have served in their defense for at least 2 years!

You cant run your life by saying some manthra in a daily basis and and saying that "war is not for me" and "let me dedicate myself praying God" and/or of that BS. There is big price for being/earnig a citizen of that country!

Anonymous said...

//எப்படியோ வந்து இந்த ராமன் எஃபக்ட் னு ஒரு தமிழர்/இந்தியர் பேரில் செய்டுவிட்டு போனார். அதுக்கப்புறம்? வளர்ந்து இருந்தால் ஒரு இருபது நூற்றாண்டுக்கு ஒரு முறையாவது ஏதாவது பெரிய அளவில் சாதித்து இருக்கனும். நோபல் பரிசு இல்லனாலும், ஏதாவது ப்ரேக் த்ரு பண்ணி இருக்கோமா? இல்லையே//

Just wanted to note :-

"BOSE"–Einstein statistics - An excellent work by Satyendra Nath BOSE (January 1, 1894 – February 4, 1974)

"CHANDRASEKHAR" Limit & The Nobel Prize in Physics 1983 -- Subramanyan CHANDRASEKHAR (October 19, 1910 – August 21, 1995)

வருண் said...

உண்மைதான் பி எச் டி!!

"டிஸ்காட்டிக் லிக்விட் க்ரிஸ்டல்" டிஸ்கவரி க்ரிடிட் டும் காலம் சென்ற பேராசிரியர் எஸ். சந்திரசேகரை சேரும்.

ஆனால் இதெல்லாம் பற்றாதுங்க! :-(

ராஜ நடராஜன் said...

// இந்தியர்களுக்கு அறிவில் எந்த குறைவும் இல்லை. சொல்லப்போனால் மற்ற நாட்டினரை விட ப்ரில்லியண்டாகவே இருக்கிறார்கள்.அறிவை சரியாக பயன்படுத்தும் வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்.//

எனது பார்வைகூட இதனுடன்.எனக்கு இந்தப் பதிவை படிக்கும்போது திடீரென்று தோன்றும் எண்ணம் மேற்கத்திய சார்ந்த வாழ்க்கையை ஒட்டி எழுதும் பிளாக்கர்களின் எழுத்துக்கள் எப்படி இருக்கின்றது என்று பார்வையிடவேண்டுமென்று.

ராஜ நடராஜன் said...

//வளர்ந்து இருந்தால் ஒரு இருபது நூற்றாண்டுக்கு ஒரு முறையாவது ஏதாவது பெரிய அளவில் சாதித்து இருக்கனும். நோபல் பரிசு இல்லனாலும், ஏதாவது ப்ரேக் த்ரு பண்ணி இருக்கோமா? இல்லையே

வளரத்தான் செய்றோம்? ஆனால் ரொம்ப ரொம்ப கம்மியான வளர்ச்சி! :(//

வருண்!இந்த சிந்தனையின் ஆதங்கமாவது இருக்குறதேன்னு சந்தோசப்படுங்க:)

புருனோ Bruno said...

// இந்தியர்களுக்கு அறிவில் எந்த குறைவும் இல்லை. சொல்லப்போனால் மற்ற நாட்டினரை விட ப்ரில்லியண்டாகவே இருக்கிறார்கள்.அறிவை சரியாக பயன்படுத்தும் வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்.//

இது குறித்த எனது முதல் இடுகை
http://www.payanangal.in/2008/09/blog-post_4592.html

வனம் said...

வணக்கம்

ஏற்கனவே பின்னூட்டிய கீழ்கண்ட கருத்துக்களை நான் சரி என நிணைக்கின்றேன்

\\உங்களது கடைசி பாயிண்டான, "நமக்கு அறிவு குறைவு" என்ற் ஒன்றைத்தவிர மற்ற அனைத்தையுமே ஒப்புக்கொள்கிறேன்


ஏதோ ஒரு வயதானா கல்யாணம் செய்யனும். ஆண்டவன் அருளால் நல்ல மனைவி அமையனும்.

குழந்தை கடவுள் கொடுப்பது பெற்றுக்கொண்டே இருக்கனும் என்று வாழ்ந்த வாழக்கைதானே நம்மை இந்த நிலைமைக்கு கொண்டுவந்தது??
\\

மேலூம் நம் குடும்ப பெரியவர்கள் அவர்கள் இருக்கும்வரை அவர்களின் முடிவுகளுக்கு நாம் எப்போதுமே கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று கட்டுறுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்

இதையொத்தே நமது குடும்ப அமைப்பு, புராண, இதிகாசம் எல்லாம் மீண்டும் மீண்டும் முன்னிருத்துபவை

'' கேள்வி கேட்காதே, எல்லோரும் எப்படி இருக்கின்றனறோ, அப்படியே நீயும் இரு'' என்பதே

நன்றி