Friday, July 25, 2008

ப்ராஜெக்ட் மீட்டிங் : தூங்காமல்/தூங்கினாலும் தப்பிப்பது எப்படி?

சாப்ட்வேர் AKA பொட்டி தட்டும் வேலையில் காலை நேரம் பரவாயில்லை எப்படியோ ஓடிவிடும். கம்பனி உணவகத்துக்கு சென்று, ஒரு காஞ்சிப்போன பர்கரையோ அல்லது தீஞ்சிப்போன பீட்சாவையோ சாப்பிட்டு திரும்ப க்யூபிகல் வரும் போது தான் பிரச்சினையே! அடுத்து கொஞ்ச நேரத்தில் ப்ராஜெக்ட் மீட்டிங் என்ற 2 மணி நேர ப்ளேடு ஆரம்பிக்கும். முதல் அரைமணி நேரம் ஏதாவது உற்சாகமா கவனிச்சாலும் அப்புறம்? நம்ம டேமேஜர் அடிக்குரலில், ஒரே தொனியில் ஏற்ற இறக்கம் இல்லாமல் பேசிக்கொண்டேஏஏஏ இருக்கும் போது, நமக்கு நம் அம்மா தொட்டிலில் போட்டு தாலாட்டிய பூர்வ ஜென்ம ஞாபகம் எல்லாம் வந்து தொலைக்கும்!

அந்த சோதனையான நேரத்தில் புத்திசாலியாகவும் தெரியனும், அதே சமயம் தூக்க கலகத்தில் இருந்தும் தப்பிக்கனும். வலைப்பதிவர்களுக்கு ஏதோ என்னால் முடிந்த சிறு உதவிகள். இதை எல்லாம் செய்து டேமேஜர்களிடம் நல்ல பெயர் வாங்கவும். அரையாண்டு ரிவ்யூ வேறு அருகில் வருகிறது.

1. தூக்கம் வருவதை தவிர்க்கவே முடியாத பார்ட்டி என்றால் கண்ணில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு தூங்கலாம். படத்தில் இருக்கும் மனிதர் செய்வதைப்போல








இதை நான் இன்னும் ட்ரை பண்ணிப்பார்த்தது இல்லை. உங்களில் யாரையாவது சோதனை எலியாக பயன்படுத்த ஆவல். எனி வீரத்தமிழ் வாலண்டியர்ஸ்?

2. தூக்கத்தை விரட்ட என்ன பண்ணலாம்? டேமேஜர் அனுப்பிய பவர் பாயிண்ட் ப்ரெசெண்டேஷனை பார்ப்பது மாதிரி மற்றொரு விண்டோவில் சைலண்டாக தமிழ் மணம் படிக்கலாம். யாராவது புது பதிவு போட்டிருப்பார்களா?

வழக்கமாக என் பிற்பகல் நேரத்தில் புது பதிவு போடும் அப்பாவி துளசி டீச்சர். அவர்கள் அறிமுகப்படுத்தும் அறிவியல் தொழில்நுட்ப கருவிகளான பூண்டு உரிக்கும் கருவி, காய்கறி நறுக்கும் கருவி போன்றவற்றை பார்த்து புளங்காகிதமடையலாம், இல்லைனா ஃபிஜி பயணக்கட்டுரை படித்து மகிழலாம், அதுவும் இல்லைனா சமையல் ரெசிபி பார்க்கலாம். ஒரு முறை டீச்சர் போட்டிருந்த பர்பிள் நிற உருளைக்கிழங்கை(மொய் மொய்) பார்த்து அலறிட்டேன். அப்புறம் தூக்கம் எல்லாம் போயே போச்!

அப்புறம் லதானந்த் சித்தருடைய வலைப்பூ போய் அவர் அறிமுகப்படுத்தும் இலக்கியச்சொற்களான ஒரம்பரை, ஓரியாட்டத்துக்கு எல்லாம் என்ன மீனிங் இருக்கும் என்று உட்கார்ந்து சிந்திக்கலாம். முடிந்தால் கூகிளாண்டவரிடம் கேட்டுப்பார்க்கலாம்.

3. மீட்டிங் போறத்துக்கு முன்னால் அந்த ப்ராஜெக்ட் பற்றிய டாக்யுமெண்டோ அல்லது பவர் பாயிண்ட் ஸ்லைடுகளோ, எது கிடைத்தாலும் ஒவ்வொரு பத்தியின் முதல்வரியும், கடைசி வரியும் மட்டும் படிச்சீங்கனா விஷயம் புலப்பட்டுப்போகும். அப்புறம் மீட்டிங்கில் கண்ணை திறந்து வச்சுட்டே கனவு காணலாம்(கலாம் அங்கிள் இதை தான் சொல்லி இருப்பாரோ?). திடீர் திடீர்னு கனவு கலையும் போதெல்லாம்,"போன ப்ராஜெக்டில் so and so bugs இருந்ததே, அதே bug இந்த ப்ராஜெக்டிலும் வருமா?", "இது எத்தனையாவது வர்ஷன்? எவ்வளவு டைம் ஸ்லாட்ல முடிக்கனும்?" போன்ற டெக்னிகல் கேள்வியாக்கேட்டு அனைவருக்கும் பீதியை கிளப்பி விட்டுட்டு(முக்கியமா நம்ம டேமேஜருக்கு) நாம கனவை விட்ட இடத்தில் இருந்து கண்டின்யூ பண்ணலாம்.

4. ப்ரேக் அல்லது டிஸ்கஷன் நேரத்தில் போரடிக்குமே, என்ன செய்யறது? பொழுதுபோக்குக்காக கண்ணுக்கெட்டிய தூரம் வரை தேடி பாருங்க, ஏதாவது ஆன் சைட் வொர்க்கர் இந்தியாவில் இருந்து வந்திருக்காரா? கிடைப்பது கஷ்டமே இல்லை, ஆளை அடிக்கிற நியான் கலரில் ஒரு ஷர்டுடன், முகத்தில் கேலன் கேலனா(லிட்டர் லிட்டரா?) அசடு வழிய, சீட் நுனியில் அசெளகரியமா உட்கார்ந்திருப்பார், அவரிடம் க்ளைமேட் பற்றி ஏதாவது கேட்டு கடலைப்போடவும். நமக்கு ஜான் ஆபிரகாம், மாதவன் அல்லது ஒரு குறைந்த பட்சம் அஜீத் மாதிரியான குட் லுக்கிங் பார்ட்டிகளிடம் மட்டுமே கடலைப்போட விருப்பம், இருந்தாலும் என்ன பண்றது? ஜெகே ரித்தீஷ் போன்ற பார்ட்டிகள் தான் கிடைக்கும்!

ஆண்களாக இருந்தால்: சம்கி வைத்த சுடித்தார், தங்க நகைகளோடு, குனிந்த தலை நிமிராமல் கம்ப்யூட்டரையோ அல்லது டேமேஜரையோ அக்கறையோடு உற்று நோக்கியவாறே இருந்தால் அது ஆன்சைட் பார்ட்டி(உங்களுக்கு சொல்லியா தரனும்?)
இந்தியாவில் பொட்டி தட்டுபவராக இருந்தால் sky is the limit, நிறைய சாய்ஸ் கிடைக்கும்.
மீட்டிங் திரும்ப ஆரம்பிக்கும் போது, மறக்காமல் கடலையை நிறுத்தவும்.

4. மண்ணு மாதிரி இருக்கும் ஆபீஸ் காஃபியை குடிக்கவும், ஓரளவுக்கு தூக்கம் போகும்.

உங்களுக்கு தெரிந்த ஐடியாக்களை நீங்களும் பகிர்ந்துக்கொள்ளவும்.
மொக்கை

63 comments:

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//ஜெகே ரித்தீஷ் போன்ற பார்ட்டிகள் தான் கிடைக்கும்!//
ஜெ கே ரித்திஷ் ரசிகர் மன்றம் சார்பாக rapp கண்டனம் தெரிவிக்கும் முன்னே நான் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் !!!

சின்னப் பையன் said...

நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தால் போதும் என்றால், தமிழ்மணம்தான் என் சாய்ஸ்;

என்னை அந்த மீட்டிங்கில் நோட்ஸ் எடுக்கச் சொல்லிவிட்டால், சுடோகுதான். சுடோகுவுக்கு டைப் அடிச்சா - மத்த எல்லாரும் பையன் நல்லா நோட்ஸ் எடுக்கறான்னு நினைச்சிப்பாங்க!!!

வல்லிசிம்ஹன் said...

இப்படியெல்லாம் வழியிருக்குன்னு தெரியாமப் போச்சே:)

சூப்பர் ஐடியா அந்த இமை ஸ்டிக்கர்தான்.

இதே துறையிலிருக்கும் என் மருமகன்,மருமகளுக்கு இந்த லின்க் அனுப்புகிறேன்:)

புதுகை.அப்துல்லா said...

//ஜெகே ரித்தீஷ் போன்ற பார்ட்டிகள் தான் கிடைக்கும்!//

மன்றத்தின் சார்பில் இதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.அண்ணனை நீங்க தொடர்ந்து வம்புக்கு இழுப்பதால் இனிமேல் மன்ற உறுப்பினர்கள் உங்க வலைப்பூ பக்கம் வர ஆயுட்காலத் தடை விதிப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறோம்.

ராப்- தலைவர்
சின்னப் பையன்- துணைத் தலைவர்
புதுகை.அப்துல்லா- பொருளாளர்
வழிப்போக்கன்- கொ.ப.செயளாளர்

அகிலாண்ட நாயகன் அன்ணன் ரித்தீஷ் இரசிகர் மன்றம்.

ராஜ நடராஜன் said...

ஐடியாக்கள் நல்லாவே இருக்குது.எனக்கு நானே சபாஷ் சொல்லிக்கணுமுன்னு இப்பத்தான் தோணுது.எதிர்த்தாப்ல எனக்குப் புடிக்காத விசயம் பேசுபவர் மனசு கோணாதபடியும் அதே சமயத்தில அவர் பேச்சை நான் ரொம்ப தீவிரமாக கவனிக்கிறேன்னு சந்தோசப் படுற மாதிரி ஒரு டெக்னிக் வச்சிருக்கேன்.5 நிமிசத்துக்கு அல்லது 10 நிமிசத்துக்கு ஒரு ம் கொட்டுவது,கண்ணு மட்டும் அவர நேராப் பார்த்துகிட்டு இருக்கும்.மனசுக்கற்பனைக் குதிரையத் தட்டிவிட்டு பறந்து ஓடி விட வேண்டியது.

jokes apart, போர்க்கால போர்வீரர்கள் எதிரிக்கு காத்துகிட்டு புதர்மறைவில் உட்காரும்போது இந்த தூங்கினாலும் தூங்காத முறையை உண்மையிலேயே உபயோகிக்கிறார்கள்.

rapp said...

////ஜெகே ரித்தீஷ் போன்ற பார்ட்டிகள் தான் கிடைக்கும்!//

மன்றத்தின் சார்பில் இதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.அண்ணனை நீங்க தொடர்ந்து வம்புக்கு இழுப்பதால் இனிமேல் மன்ற உறுப்பினர்கள் உங்க வலைப்பூ பக்கம் வர ஆயுட்காலத் தடை விதிப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறோம்.

ராப்- தலைவர்
சின்னப் பையன்- துணைத் தலைவர்
புதுகை.அப்துல்லா- பொருளாளர்
வழிப்போக்கன்- கொ.ப.செயளாளர்

அகிலாண்ட நாயகன் அன்ணன் ரித்தீஷ் இரசிகர் மன்றம்.

//

அகிலாண்ட நாயகன் மன்றத்தின் அகில உலகத் தலைவி எனும் முறையில் இதை நான் கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்

rapp said...

அதேப் போல எங்கள் தலயின் தலையெழுத்தையே மாற்ற உங்களுக்கு எங்கிருந்து துணிவு வந்ததென்று கேட்கிறேன். என்ன புரியலயாங்க கயல்விழி, அவரோட இனிஷியல் (ஜே கே) நெடில் ஆகும், ஆனா நீங்க அவரோட புகழ்ல கலக்கமடைஞ்சு அவற்றை குறிலாக்கப் பாக்கறீங்க. இதை நாங்க பயங்கரமா கண்டிக்கறோம்

தமிழன்-கறுப்பி... said...

நிறைய தமிழ் பதிவுகள் படிக்கிறிங்கபோல...;)

தமிழன்-கறுப்பி... said...

பல பாஷைகள் உங்களுக்கு புரிய ஆரம்பிச்சிடுச்சு....;)

தமிழன்-கறுப்பி... said...

வந்த கொஞ்ச நாள்ள பரபபரப்பாயிட்டிங்க...

தமிழன்-கறுப்பி... said...

///நமக்கு ஜான் ஆபிரகாம், மாதவன் அல்லது ஒரு குறைந்த பட்சம் அஜீத் மாதிரியான குட் லுக்கிங் பார்ட்டிகளிடம் மட்டுமே கடலைப்போட விருப்பம்,///

வருண் கவனிச்சுக்கப்பு...! ;)

தமிழன்-கறுப்பி... said...

///இருந்தாலும் என்ன பண்றது? ஜெகே ரித்தீஷ் போன்ற பார்ட்டிகள் தான் கிடைக்கும்!///

அவரு யாருன்னே தெரியாதுன்னு சொன்னவங்கல்லாம் அவரை வம்புக்கிழுக்கிற அளவுக்கு போயிடுச்சு அதுதான் ரித்திஷ் புகழ்...

Thamiz Priyan said...

வலைச்சரத்தில் பதிவர்

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்க! ஆனா நம்மளுக்கு இந்த வாதம் விவாதம்லாம் தெரியாதுங்க அதனால...;)

முரளிகண்ணன் said...

\\டெக்னிகல் கேள்வியாக்கேட்டு அனைவருக்கும் பீதியை கிளப்பி விட்டுட்டு(முக்கியமா நம்ம டேமேஜருக்கு) நாம கனவை விட்ட இடத்தில் இருந்து கண்டின்யூ பண்ணலாம்\\
\\சம்கி வைத்த சுடித்தார், தங்க நகைகளோடு, குனிந்த தலை நிமிராமல் கம்ப்யூட்டரையோ அல்லது டேமேஜரையோ அக்கறையோடு உற்று நோக்கியவாறே இருந்தால் அது ஆன்சைட் பார்ட்டி\\

அசத்தலா இருக்கு இரண்டாம் பாகம் வருமா?

வெண்பூ said...

சூப்பர் கயல்...நேரடி கால்னா பரவாயில்ல, ஆன்சைட் / ஆஃப்சோர் கான்ஃபரன்ஸ் கால் வெப்பாங்க பாருங்க அதுவும் ஃபோன்ல (VoIp).. அதுல இன்னும் அதிகமா தூக்கம் வரும்...

லதானந்த் said...

நான் சொல்லித் தந்த எக்ஸர்ஸைஸ் ப்ண்ணிட்டு இருக்கலாமே மீட்டிங்கின்போது?

மங்களூர் சிவா said...

/
மீட்டிங் திரும்ப ஆரம்பிக்கும் போது, மறக்காமல் கடலையை நிறுத்தவும்.
/

முடியலை.......
முடியலை.......

:((((((((

நிறுத்த முடியலை

:)))))))

மங்களூர் சிவா said...

//ஜெகே ரித்தீஷ் போன்ற பார்ட்டிகள் தான் கிடைக்கும்!//
கண்டனத்தை தெரிவித்து "கொல்லு"கிறேன் !!!

மங்களூர் சிவா said...

///நமக்கு ஜான் ஆபிரகாம், மாதவன் அல்லது ஒரு குறைந்த பட்சம் அஜீத் மாதிரியான குட் லுக்கிங் பார்ட்டிகளிடம் மட்டுமே கடலைப்போட விருப்பம்,///

வருண் கவனிச்சுக்கப்பு...! ;)

ஜோசப் பால்ராஜ் said...

நல்ல யோசனைகள், என் குழுல இருக்க எவனும் உங்க பதிவ பார்க்ககூடாதுன்னு வேண்டிக்கிறேன். ஏன்னா, எங்க ஆபிஸ் மீட்டிங்குல அதிகம் என்னதான் பேச சொல்லுவாய்ங்க, எங்க டேமேஜருக்கு நல்ல தெரியும், இவன் சத்தம் போடாம இருந்தா தூங்கிருவான்னு, அதுலயும், மீட்டிங் ரூம்ல லைட் எல்லாம் ஆப் பண்ணிட்டு மல்டிமீடியா ப்ரொஜெக்டர் போட்டு ஏதாவ்து படம் காட்டிக்கிட்ட்டே மீட்டிங் போட்டா, இவன் சவுகரியமா தூங்கிருவான்னு எங்க டேமேஜருக்கு நல்லா தெரியும். ஒரு தடவ என்னைய பார்த்து என் டேமேஜர் சொன்ன வார்த்தை "நீ தூங்குனாலும் பிரச்சனை, முழிச்சிருந்தாலும் பிரச்சனை".

நீங்க 2 வருசத்துக்கு முன்னாடியே இந்த பதிவ எழுதியிருந்தீங்கன்னா, நான் சமாளிச்சிருப்பேன்.

வருண் said...

////மங்களூர் சிவா said...

வருண் கவனிச்சுக்கப்பு...! ;)////

நான் கவனிச்சேனே, சிவா! :-)

நீங்கள் இதை கவனியுங்கள்!!!


காற்றுக்கென்ன வேலி?
கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

:-)

Anonymous said...

அந்த ஸ்டிக்கர் கிடைக்கும் கடை மட்டும் சொல்லுங்க. உங்களுக்கு கமிஷன் வேணும்னாலும் தர்றேன். ரொம்ப பயனுள்ளதா இருக்கு

SK said...

கயல்விழி சொன்னது

// சம்கி வைத்த சுடித்தார், தங்க நகைகளோடு, குனிந்த தலை நிமிராமல் கம்ப்யூட்டரையோ அல்லது டேமேஜரையோ அக்கறையோடு உற்று நோக்கியவாறே இருந்தால் அது ஆன்சைட் பார்ட்டி... //

இது மாதிரி எல்லாம் இன்னும் பொண்ணுங்க இருக்காங்களா. சும்மா தமாஷு தானே செஞ்சீங்க. இல்ல தசாவதாரம் படம் பாத்துட்டு பன்னிரண்டாம் நூன்றண்டுளையே இருக்கீங்களா. கொஞ்சம் இருபத்தி ஓராம் நூற்றாண்டுக்கு வாங்க.

வருண் என்னை காப்பதுவீங்கன்னு நம்பிக்கைல எழுதிட்டேன்

கோவை விஜய் said...

ஐடியாக்கள் நல்ல இருக்கு.
இதை ப்ராஜெக்ட் மேலாளர்களும் படித்திருந்தால்...............

"திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆகிவிடுமே!"


திவிஜய்
http://pugaippezhai.blogspot.com

வருண் said...

**** இது மாதிரி எல்லாம் இன்னும் பொண்ணுங்க இருக்காங்களா. சும்மா தமாஷு தானே செஞ்சீங்க. இல்ல தசாவதாரம் படம் பாத்துட்டு பன்னிரண்டாம் நூன்றண்டுளையே இருக்கீங்களா. கொஞ்சம் இருபத்தி ஓராம் நூற்றாண்டுக்கு வாங்க.

வருண் என்னை காப்பதுவீங்கன்னு நம்பிக்கைல எழுதிட்டேன் ****

எஸ் கே:

கயல் வந்து என்னைவிட லிபெரல். கயல் தோழிகள் என்னைவிட 10 மடங்கு லிபெரல்.

எனக்கு என்னவோ கயல் "ஆண்ட்டி" யை மனதில் வைத்து எழுதினாளோ என்னவோனு தோணுது! :-)

கிரி said...

//நமக்கு ஜான் ஆபிரகாம், மாதவன் அல்லது ஒரு குறைந்த பட்சம் அஜீத் மாதிரியான குட் லுக்கிங் பார்ட்டிகளிடம் மட்டுமே கடலைப்போட விருப்பம், இருந்தாலும் என்ன பண்றது? ஜெகே ரித்தீஷ் போன்ற பார்ட்டிகள் தான் கிடைக்கும்!//

ஹா ஹா ஹா செம நக்கலு :-)

//சின்ன அம்மிணி said...
அந்த ஸ்டிக்கர் கிடைக்கும் கடை மட்டும் சொல்லுங்க. உங்களுக்கு கமிஷன் வேணும்னாலும் தர்றேன். ரொம்ப பயனுள்ளதா இருக்கு//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நல்லா எழுதி இருக்கீங்க

துளசி கோபால் said...

முக்கியமான ஒன்னைக் கோட்டைவிட்டுட்டீங்க.

ஸ்டிக்கர் ஓக்கே. ஆனா மறந்தும் குறட்டை விட்டுறக்கூடாது:-)

கயல்விழி said...

//
ஜெ கே ரித்திஷ் ரசிகர் மன்றம் சார்பாக rapp கண்டனம் தெரிவிக்கும் முன்னே நான் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் !!!//

வாங்க அருவை பாஸ்கர். நீங்களும் அந்த வீணாப்போன ரித்தீஷ் ரசிகர் மன்றத்துல சேர்ந்தாச்சா?

கயல்விழி said...

//நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தால் போதும் என்றால், தமிழ்மணம்தான் என் சாய்ஸ்;

என்னை அந்த மீட்டிங்கில் நோட்ஸ் எடுக்கச் சொல்லிவிட்டால், சுடோகுதான். சுடகுவுக்கு டைப் அடிச்சா - மத்த எல்லாரும் பையன் நல்லா நோட்ஸ் எடுக்கறான்னு நினைச்சிப்பாங்க!!!

வணக்கம் ச்சின்னப்பையன்.

நாங்க நோட்ஸ் எடுப்பது மாதிரி கமெண்ட்ஸ் எழுதுவோமாக்கும்.

கயல்விழி said...

//இப்படியெல்லாம் வழியிருக்குன்னு தெரியாமப் போச்சே:)

சூப்பர் ஐடியா அந்த இமை ஸ்டிக்கர்தான்.

இதே துறையிலிருக்கும் என் மருமகன்,மருமகளுக்கு இந்த லின்க் அனுப்புகிறேன்:)

//

வாங்க வல்லி சிம்ஹன்.

மகள் - மருமகனுக்கு இந்த ரூட்டை எல்லாம் சொல்லித்தரும் முதல் மாமனார்-அப்பா இப்போ தான் பார்க்கிறேன் JK :)

கயல்விழி said...

//இப்படியெல்லாம் வழியிருக்குன்னு தெரியாமப் போச்சே:)

சூப்பர் ஐடியா அந்த இமை ஸ்டிக்கர்தான்.

இதே துறையிலிருக்கும் என் மருமகன்,மருமகளுக்கு இந்த லின்க் அனுப்புகிறேன்:)

//

ண்ணா, அப்துல்லாணா, தெரியாம சொல்லிட்டேன், அதுக்கு இந்த குழந்தைக்கு இத்தனை பெரிய தண்டனையா? :(

கயல்விழி said...

வாங்க ராஜ நடராஜன்

பேசும் போதும் கனவு காணுவது எப்படி என்ற புது ஐடியா சொல்லி இருக்கீங்க. உண்மையை சொல்லவும், உங்க மிசஸ் பேசும் போது இந்த டெக்னிக் தானே யூஸ் பண்றீங்க? :) JK

கயல்விழி said...

வாங்க கவுஜாயினி ராப்

ஏதோ உங்க தலைவர் பேரை தப்பா எழுதிட்டேன், அதுக்காக ஏதோ நெடில், குறில் என்று சமஸ்கிருதத்தில் பேசி குழப்பக்கூடாது!

கயல்விழி said...

வாங்க தமிழன்.

வந்த உடனே என்னை போடுத்தருவதில் குறியா இருக்கீங்களே, நியாயமா இது?

கயல்விழி said...

நன்றி தமிழ் பிரியன்.

நாங்க நெசமாவே ஹாட் டாப்பிக்குங்களா? எங்க பதிவு தமிழ் மணத்தில் வரும் போதெல்லாம் புகையும் போதே நினைச்சேன் :)

கயல்விழி said...

வாங்க முரளிக்கண்ணன்
இந்த மொக்கைக்கு இரண்டாம் பாகமா? :) சரி ட்ரை பண்றேன். நாம பண்ற எல்லா தில்லு முள்ளுகளையும் பதிவாக எழுத ஆசை தான்.

கயல்விழி said...

நன்றி வெண்பூ.

ஆஃப் ஷோர்ல இருந்து வர போன் கால்ஸ், ஆங்கிலம் 'மாதிரி' அவங்க ஏதோ ஒரு மொழி பேசும் போது வர தூக்கம் இருக்கு பாருங்க! எந்த தாலாட்டுக்கும் அது ஒப்பாகாது.

கயல்விழி said...

வருக ஜோசப் பால்ராஜ்.

டேமேஜருக்கு நீங்க தான் மனதின் குரலா? டேமேஜர்'ஸ் பெட்?

கயல்விழி said...

நன்றி லதானந்த் சார்.

உடற்பயிற்சியா? நல்ல பழக்கம் எல்லாம் நமக்கு கிடையாது

கயல்விழி said...

வருக மங்களூர் சிவா.

நீங்களும் நம்மை போட்டுக்கொடுக்கவே வெயிட் பண்றீங்கனு புரியுது! ரொம்ம்ம்ப நல்லெண்ணம்

கயல்விழி said...

வருக சின்னம்மணி

இதென்ன ராக்கெட் சயன்ஸா? சும்மா ஒரு வெள்ளை ஸ்டிக்கர் பேப்பரில் உங்க கண்ணு மாதிரியே வரைஞ்சு கட் பண்ணு இமையில் ஒட்டிக்கோங்க, சிம்பிள்!

கயல்விழி said...

SK,

இந்தியாவில் ஜீன்ஸோட சுத்தினாலும், இங்கே வந்ததும் FOB பெண்கள் சுடிதார் போடுவாங்க. ஜம்கி, எம்ப்ராய்யட்ரி, கண்ணாடி எல்லாம் வைத்து. அப்போ தானே அமரிக்கர்கள் நாலு பேர் இந்தம்மா க்யூப் முன்னால் நின்னு. "Oh, this outfit looks so cute!! I love Indian women" என்று ஜொள்ளு விட முடியும்?

கயல்விழி said...

நன்றி விஜய். :)

கயல்விழி said...

நன்றி துளசி மேடம், ஆமாம் குறட்டை எல்லாம் விட்டு மாட்டிக்க கூடாது!

ராஜ நடராஜன் said...

//பேசும் போதும் கனவு காணுவது எப்படி என்ற புது ஐடியா சொல்லி இருக்கீங்க. உண்மையை சொல்லவும், உங்க மிசஸ் பேசும் போது இந்த டெக்னிக் தானே யூஸ் பண்றீங்க? :) JK //


தங்ஸ் பெரும்பானமையான நேரத்துல சாது.மற்றபடி சிலசமயம் வாயத்திறந்தாப் போச்சு.நேத்தைக்கு இப்படித்தான் பப்படத்த அடுப்புல போட்டு சுட்டுகிட்டு இருந்துச்சு.அதப்பார்த்த எனக்கு பப்படத்தோட கொஞ்சம் கஞ்சி குடிச்சா எப்படி இருக்குமுன்னு பழைய காலத்து யோசனை.கண்ணு கொஞ்சம் கஞ்சி குடும்மான்னுட்டு சொல்லிட்டுவந்து வீட்டுல இருக்கிற வாண்டுகிட்ட குதிர விளையாடிட்டு இருந்தேன்.அம்மிணி இருக்குற பசுமதி சோத்துல தண்ணியக் கலந்து கொண்டுவந்துச்சு.பசுமதிய விட பிரிட்ஜ்ல இருக்குற நேத்தைக்கு ஆக்குன மோட்டா சோறு நல்லாயிருக்குமேன்னு சொன்னதுதான் மிச்சம்.தங்ஸ்க்கு பத்ரகாளி சாமி வந்துடுச்சு:( அப்புறம் என்ன வழக்கம்போல் நம்ம டெக்னிக்குதான்:)

(நல்ல மூடுல இருக்கும்போது தங்ஸ்க்கு இந்தப்பின்னூட்டத்தையும் காண்பிக்கோணும்)

VIKNESHWARAN ADAKKALAM said...

:))

நல்லா யோசிக்கிறாங்கப்பா...

rapp said...

கயல்விழி புதுப் பதிவு போட்டிருக்கேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க

கயல்விழி said...

//நல்லா யோசிக்கிறாங்கப்பா...//

வாங்க விக்னேஷ்வரன், என்னை தானே சொல்றீங்க? நாங்க எல்லாம் அப்ப்டித்தான் ரொம்ப இண்டெலிஜெண்ட். சில சமயம் என்னாலயே நம்ப முடியறது இல்லை. :P

கயல்விழி said...

//பசுமதிய விட பிரிட்ஜ்ல இருக்குற நேத்தைக்கு ஆக்குன மோட்டா சோறு நல்லாயிருக்குமேன்னு சொன்னதுதான்//

சொல்லும் போதே எது வேண்டும் என்று தெளிவா சொல்லி இருந்தீங்கனா, தங்க்ஸுக்கு கோபம் வந்திருக்குமா?(காலவரையன்றி வெறும் தங்கமணிகளுக்கே இங்கே சப்போர்ட் செய்யப்படும் :) :))

கயல்விழி said...

//கயல்விழி புதுப் பதிவு போட்டிருக்கேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க//

நிச்சயம் பார்க்கிறேன் ராப்.

அது சரி said...

அந்த ஐ ஸ்டிக்கர் ஐடியா நல்லா இருக்கு.

வருண் said...

//கயல்விழி புதுப் பதிவு போட்டிருக்கேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க//

இதெல்லாம் அநியாயம், ராப். எனக்கெல்லாம் ஒரு அழைப்பும் இல்லையா?;-)

கயல்விழி said...

//அந்த ஐ ஸ்டிக்கர் ஐடியா நல்லா இருக்கு.//

:)

வாங்க அது சரி :)

கயல்விழி said...

//இதெல்லாம் அநியாயம், ராப். எனக்கெல்லாம் ஒரு அழைப்பும் இல்லையா?;-)//

எல்லாம் நீங்க வரமாட்டீங்கனு ஒரு நம்பிக்கை தான். சரி அழைத்தால் போய் கமெண்ட் எழுதுவீங்களா?

வருண் said...

அழைக்காமலே எழுதுவேனே, கயல்!
:-?

SK said...

வருண்,

அங்கே அவுங்க பேசுறது நமக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் அதுனாலே தான் உங்களை கூப்பிட்டு இருக்க மாட்டாங்க.

என் பக்கத்துலே இருக்கறவன் நல்ல நாள்ளையே கொறட்டை விட்டு தூங்கறான். இது போல ஐடியா எல்லாம் அவன் படிச்சான் அவளோ தான்.

Anonymous said...

6 இலிருந்து 2 வரை வேலை செய்யறேன் என்று நேரத்தை மாத்திக்கலாம். நீங்கள் 7 மணிக்கு வந்தாலும் யாருக்கும் தெரியாது.

வீட்டிலிருந்து கூட்டத்தில் பங்கு பெறலாம். டெலிபோனில் mute அழுத்திவிட்டு sofa வில் கால் நீட்டி உட்கார்ந்து கையில் ஐஸ்க்ரீமுடன் டிவி பார்க்கலாம். நீங்கள் கூட்டத்தை கவனித்ததாக காட்டிக்கொள்ள இடையில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதையாவது ஒரு கேள்வி கேட்கணும்.
-aathirai

கயல்விழி said...

//என் பக்கத்துலே இருக்கறவன் நல்ல நாள்ளையே கொறட்டை விட்டு தூங்கறான். இது போல ஐடியா எல்லாம் அவன் படிச்சான் அவளோ தான்.
//

LOL

அப்புறம் குறட்டை விடாமல் சாமர்த்தியமாக தூங்குவார் :) :)

கயல்விழி said...

//வீட்டிலிருந்து கூட்டத்தில் பங்கு பெறலாம். டெலிபோனில் mute அழுத்திவிட்டு sofa வில் கால் நீட்டி உட்கார்ந்து கையில் ஐஸ்க்ரீமுடன் டிவி பார்க்கலாம். நீங்கள் கூட்டத்தை கவனித்ததாக காட்டிக்கொள்ள இடையில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதையாவது ஒரு கேள்வி கேட்கணும்.
//

இருந்தாலும் கான்ஃப்ரென்ஸ் ரூமில் அனைவர் முன்னாலும் சாமர்த்தியாக செய்யும் 'வேலைகளில்' இருக்கும் திரில்லே தனி! அது வீட்டில் இருக்கும் போது வருவதில்லை. :) :)

நன்றி ஆதிரை

Swami said...

அக்கா
நீங்களே demager ஆனா என்ன பண்ணுவீங்க ? மத்தியானம் 2.30 க்கு meeting போட்டு அதில clientaium நம்ம teamaium கவனிக்க வைக்கிற மாதிரி presentation குடுக்கிறது இருக்கே ரொம்ப கஷ்டமான வேலைங்க. "PM or PL" ஆ இருந்து பாருங்க அப்புறம் தெரியும் கஷ்டம்.

கயல்விழி said...

சுவாமி

உங்களுக்கு தெரியாதா, நான் ஒரு பாசிச சிந்தனையாளராம். அதனால் டேமேஜராகும் போது "ப்ராஜெக்ட் மீட்டிங்கில் தூங்குபவர்களை எழுப்பும் டெக்னிக்குகள்" என்ற பதிவினை போடுவேன் :) :) JK

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

கயல்விழி said...

அவனும் - அவளும்(நீங்கள் இதை கவனித்தால்)

பழைய பதிவுகளை படிக்க ஆரம்பித்துவிட்டார்கள் :) :)