Friday, October 24, 2008

நான் ஒரு தர சொன்னா 100 தர சொன்ன மாதிரி!

(-: (-: மன்னிக்கவும்! இது சும்மா சினிமா தொடர் பதிவுதான். சும்மா கூட்டம் சேர்க்க இப்படி ஒரு சினிமாவசனத் தலைப்பு! :-) :-)
--------------------------------------

நான் ஒண்ணும் சினிமா பைத்தியம் இல்லை. தமிழ் படங்கள் பார்ப்பதுண்டு. நிறையப்படம் பிடிக்காது. ஒரு சில படங்கள் பிடிக்கும். நான் ஒரு பழமை விரும்பி.
கயலுக்கும் எனக்கும் ரொம்ப டேஸ்ட் வேறுபடும் என்பது உங்களுக்குப் புரியும்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்

நான் சிறுவயதில் இருந்து பார்க்கிறேன்.யாரோடாவது போயிருப்பேன் ஒண்ணும் புரியாமல் வந்து இருப்பேன்.

அ) நினைவு கண்ட முதல் சினிமா?

நெஜம்மாவே தெரியலை!

2. கடைசியில் அரங்கில் பார்த்த சினிமா?

குசேலன்! ஒளிப்பதிவு, மற்றும் க்ளைமேக்ஸ் ரொம்ப நல்லா இருந்தது. படம் சுமார்தான்.

3. அரங்கிலன்றி பார்த்த சினிமா?

சுப்பிரமணியபுரம். அந்த ஹீரோவுக்கு, மதுரைத்தமிழ் வரலை! அது எரிச்சலா இருந்தது.

மதுரையை பற்றி தெரியாத ஒரு தற்பெருமை பேசும் விமர்சகர், சுப்பிரமணியபுரம் ஒரு ஊர் நு சொல்லி எழுதிய விமர்சனம் சிரிப்பை உண்டாக்கியது.

ஓரளவுக்கு நல்ல படம் அதுனு சொல்லலாம். போர் அடிக்கவே இல்லை. ஆனால், கடைசில கஞ்சா கருப்பு துரோகியாவெதெல்லாம் நம்ம மதுரை மக்களிடம் நடக்காத ஒண்ணு. ஏதோ ஆங்கிலப்படத்தைப் பார்த்து இது மாதிரி எடுக்கிறாங்க! அப்போத்தானே இந்த மாதிரி புதுமையைக் கண்டு நம்ம "க்ரிடிக்கள்" மயங்குவாங்க!

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பருத்திவீரன்- இன்று

முள்ளும் மலரும்-அன்று ( டி வி டி யில் பார்த்தலில்). ரசினியும் மறைந்த நடிகைகள் ஷோபா மற்றும் ஃபடாப்பட்டும் என்னம்மா நடிச்சிருக்காங்க! ரசினி நடிப்புல எல்லோரையும் மிரட்டி இருக்காருங்க!!!

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

நம்ம ரசினி என்ன பேசினாலும் அரசிலாக்குவது, வேடிக்கையா இருக்கும்.

அது அண்ணாமலை முதல் குசேலன் வரைக்கும்!

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஜீன்ஸ் படத்தில் காட்டிய பிரஷான்ந்தின் டபுள் ஆக்ஷன்.
சிவாஜியில் காட்டிய வெள்ளை ரசினி.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எக்கச்சக்கமாக!

7.தமிழ்ச்சினிமா இசை?

இசை நல்லாயிருந்தால் பிடிக்கும். இவர்தான் பெரிய ஆள் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.

எனக்கு உத்தமபுத்திரனில் ஜீ ராமநாதன் இசை, பாலும் பழமும் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் படங்களில் எம் எஸ் விஸ்வனாதன் இசை, வசந்த மாளிகை, மற்றும் அடிமைப்பெண் படங்களில் கே வி மஹாதேவன் இசை, முதல் மரியாதை இல் இளையராஜா இசை, பாஷா/அண்ணாமலை யில் தேவா இசை, ஒருதலை ராகத்தில் டி ராஜேந்தர் இசை, முதல்வன் இல் ஏ ஆர் ரகுமான் இசை , கஜினி யில் ஹரீஸ் ஜெயராஜ், 7G ரெயின்போ காலனி யில் யுவன் சங்கர் ராஜா இசை, எல்லாமே பிடிக்கும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தமிழ் தவிர ஆங்கிலப்படங்கள் மட்டும்தான் பார்ப்பது.

The Godfather 1 & 2, Unforgiven, Shawshank Redemtion, Sixth sense, American beauty, Departed etc.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை! இல்லவே இல்லை!

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அமீர், பாலா, சங்கர், தங்கர்பச்சான், சேரன் எல்லாம் இருக்காங்களே? நிறைய இசையமைப்பாளர்களும் முன்னேறிக்கொண்டு வர்றாங்க. நல்லா வரும் என்றுதான் தோனுது.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நம்ம ஊர்ல தெருச்சண்டை, கோயில் திருவிழா, கல்யாண கொண்டாட்டம் எல்லாவற்றிலும் இதைவிட 10 மடங்கு ஈடுபாடு உண்டாகும்னு நினைக்கிறேன்.

தொடர்பதிவு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி, இவன், அது சரி, அணிமா மற்றும் கயல்! :-)

ஆமா அடுத்து யாரை அழைப்பது?


1) எஸ் கே


2) சுந்தர் :-)

17 comments:

குடுகுடுப்பை said...

என்னத்த சொல்றது.

கயல்விழி said...

//கயலுக்கும் எனக்கும் ரொம்ப டேஸ்ட் வேறுபடும் என்பது உங்களுக்குப் புரியும்.
//

பழமை விரும்பி, கலாச்சாரக்காவலர் வருண் வாழ்க, வாழ்க :)

வருண் said...

***கயல்விழி said...
//கயலுக்கும் எனக்கும் ரொம்ப டேஸ்ட் வேறுபடும் என்பது உங்களுக்குப் புரியும்.
//

பழமை விரும்பி, கலாச்சாரக்காவலர் வருண் வாழ்க, வாழ்க :)***

நான் எதுவுமே சொல்லவில்லை! :)

ராஜ நடராஜன் said...

//அமீர், பாலா, சங்கர், தங்கர்பச்சான், சேரன் எல்லாம் இருக்காங்களே? நிறைய இசையமைப்பாளர்களும் முன்னேறிக்கொண்டு வர்றாங்க. நல்லா வரும் என்றுதான் தோனுது.//

வருண்.வணக்கம். நான் இதுக்கு மட்டும் ஓட்டுப் போட்டுக்குறேன்.அப்புறம் நான் கயல்விழியின் பக்கம்.காரணம் அன்பே சிவம்.

வருண் said...

**** ராஜ நடராஜன் said...
//அமீர், பாலா, சங்கர், தங்கர்பச்சான், சேரன் எல்லாம் இருக்காங்களே? நிறைய இசையமைப்பாளர்களும் முன்னேறிக்கொண்டு வர்றாங்க. நல்லா வரும் என்றுதான் தோனுது.//

வருண்.வணக்கம். நான் இதுக்கு மட்டும் ஓட்டுப் போட்டுக்குறேன்.அப்புறம் நான் கயல்விழியின் பக்கம்.காரணம் அன்பே சிவம். ****

அன்பே சிவம் னு சொன்னவர் இப்போ நாராயணன் பக்தர் ஆகிவிட்டார்!

சும்மா ஜோக்கு! :-)

ராமலக்ஷ்மி said...

முள்ளும் மலரும்-
எனக்கும் மிகப் பிடித்தது.

//அன்பே சிவம் னு சொன்னவர் இப்போ நாராயணன் பக்தர் ஆகிவிட்டார்!

சும்மா ஜோக்கு! :-)//

ரசித்தேன்:))!

வருண் said...

*** ராமலக்ஷ்மி said...
முள்ளும் மலரும்-
எனக்கும் மிகப் பிடித்தது.

//அன்பே சிவம் னு சொன்னவர் இப்போ நாராயணன் பக்தர் ஆகிவிட்டார்!

சும்மா ஜோக்கு! :-)//

ரசித்தேன்:))!***

வாங்க ராமலக்ஷ்மி அவர்களே! உங்களை சந்தித்து கொள்ளை நாட்களாச்சுங்க! :-)

உங்கள் அர்த்தமிக்க காமெண்ட்ஸ்க்கு நன்றிங்க! :-)

கயல்விழி said...

ராமலக்ஷ்மி மேடம்

வருண் உங்களுடைய கவிதைக்கு விசிறி. வருகைக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

//கயல்விழி said...
ராமலக்ஷ்மி மேடம்

வருண் உங்களுடைய கவிதைக்கு விசிறி.//

இவர் போன்ற விசிறிகள் அமைவது எனக்குக் கிடைத்த 'கிஃப்ட்' என உணருகிறேன் கயல்விழி.

மிகையல்ல வருண்:)!

கயல்விழி said...

//இவர் போன்ற விசிறிகள் அமைவது எனக்குக் கிடைத்த 'கிஃப்ட்' என உணருகிறேன் கயல்விழி.

மிகையல்ல வருண்:)!//

You made his weekend!!!
மீண்டும் நன்றி :)

கூடுதுறை said...

//தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை! இல்லவே இல்லை!//

இது பொய்....தமிழ் சினிமா நடிகருக்கு உதவி செய்துள்ளீர்கள்....

ஆனால் அதனால் தமிழ்சினிமா மேம்படாது...

வருண் said...

****கூடுதுறை said...
//தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை! இல்லவே இல்லை!//

இது பொய்....தமிழ் சினிமா நடிகருக்கு உதவி செய்துள்ளீர்கள்....

ஆனால் அதனால் தமிழ்சினிமா மேம்படாது...***

நீங்க என்ன சொல்றீங்கனு புரியலை சார்! நான் கேள்வியை தவறாக புரிந்துகொண்டேனா இல்லை நீங்கள் என் பதிலை வேறு மாதிரி அர்த்தம் கொண்டீர்களா என்று தெரியவில்லை

இவன் said...

:) பருத்திவீரன் பாதிக்க காரணம் என்ன எங்கிறத த்னிப்பதிவா போட்டிடலாமே வருண்??

வருண் said...

**** கயல்விழி said...
//இவர் போன்ற விசிறிகள் அமைவது எனக்குக் கிடைத்த 'கிஃப்ட்' என உணருகிறேன் கயல்விழி.

மிகையல்ல வருண்:)!//

You made his weekend!!!
மீண்டும் நன்றி :) ****

:-)))))

வருண் said...

***இவன் said...
:) பருத்திவீரன் பாதிக்க காரணம் என்ன எங்கிறத த்னிப்பதிவா போட்டிடலாமே வருண்??***

பார்க்கலாம், இவன்! :-)

Sundar சுந்தர் said...

மன்னிக்கவும் வருண்! சினிமா தேடி பார்க்கிற பழக்கம் இல்லை. கிடைத்ததை பார்த்ததில் பிடித்தவை குறைவு. அதை பற்றி சொல்வதை விட எனக்கு பிடித்த புத்தகங்களில் சில பற்றி ஒரு பதிவு போடுகிறேன். இப்ப கொஞ்சம் பிஸி - பெங்களூருக்கு ஊர் மாறியிருக்கிறேன். விரைவில் போட்டுவிட்டு உங்களுக்கு சொல்கிறேன். சில வாரங்களுக்கு முன் ஒரு அனுபவப் பதிவு போட்டேன். வந்து பாருங்க.

வருண் said...

நோ ப்ராப்ளம், சுந்தர்.;-)

உங்க அனுபவப்பதிவை வந்து பார்க்கிறேன்.

ஆமாம், பெங்களூருக்கு ரிலொக்கேட் செய்து இருப்பதை உங்கள் ப்ளாக்கில் பார்த்தேன்!

குட் லக் வித் யுவர் நியூ ஜாப் சுந்தர்!