Monday, August 11, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 6

நம் குடும்பத்தில் மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடந்தது? என்று சுயபச்சாதாபத்தில் மூழ்கி இருந்த எனக்கு, டிலோரிஸின் வாழ்க்கை ஒரு நல்ல eye opener. ஒரு சிறு பெண்ணுக்கு என்னென்ன துன்பம் வரக்கூடாதோ அத்தனையும் அனுபவித்தவர். அவர் தொடர்ந்து சொன்னவை அதிர்ச்சி ரகம், என்னால் முடிந்ததை மொழிபெயர்த்து எழுதுகிறேன், மீதி உங்கள் கற்பனைக்கு.

"அப்பா குடித்துக்கொண்டே இருக்கும் போது பக்கத்து வீட்டு பெண் வருவாள், அவளும் திருமணமானவள் தான். கணவன் வேலைக்கு போன பின் எங்க வீட்டுக்கு வந்துவிடுவாள்"

லேசாக தயங்கியப்படி, "பிறகு அப்பாவும், அந்த பெண்ணும் என் கண் முன்னாலயே..."
சொல்லும்போதே டிலோரிஸின் கண்கள் கலங்கியது.

"அருவருப்பினால் பொறுக்கமுடியாமல் தான் தலையை வேறு பக்கமாக திருப்பிக்கொள்வேன். அப்பா என் முகத்தை தன் பக்கம் வலுக்கட்டாயமாக திருப்பி அந்தக்காட்சியை பார்க்க சொல்லி வற்புறுத்துவார். 'இது தான் உனக்கு ஹோம்ஸ்கூல் பாடம்' என்று கோணலாக சிரிப்பார்"

"இவர்கள் இந்த நிலையில் இருக்கும் போதே அந்த பெண் குடிபோதையில் மயங்கிவிடுவாள். அவருக்கு அடங்காமல் வெறிப்பிடித்த மிருகம் மாதிரி என்னை சேரில் உட்கார வைத்து, வலுக்கட்டாயமாக என் வாயை திறந்து...."

"முடிந்த பிறகு மட்டுமே அப்பா என்னிடம் கொஞ்சம் அன்பாக இருப்பார். என் கையில் இரண்டு டாலர் கொடுப்பார், என்னுடைய நீல கண் தேவதையே(My blue eyed angel) என்று கொஞ்சுவார். அந்த பணத்தை வாங்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த மிக்டானல்ட்ஸுக்கு ஓடிப்போய் பர்கர் வாங்கி சாப்பிடுவேன். உணவை மெல்லும் போது வாயெல்லாம் ரொம்ப வலிக்கும்"

இப்போது டிலோரிஸ் குலுங்கி, குலுங்கி அழத்தொடங்கினார். என்ன செய்வது என்று தெரியாமல் அவரை என்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டே கேட்டேன்- "நீ ஏன் அம்மாவிடம் சொல்லவில்லை?"

டிலோரிஸ் சுதாரித்துக்கொண்டு விரக்தியாக, "எத்தனையோ முறை சொல்ல முயற்சி பண்ணினேன், அம்மாவுக்கே அரைகுறையாக நடப்பதெல்லாம் தெரியும். ஆனால் அவளுக்கு கணவனை எதிர்க்க பயம். இயலாமையில் என்னை தான் "ஹோர்(விபச்சாரி)" என்று திட்டுவாள், அடிப்பாள். அம்மாவும் என்ன செய்வாள், பாவம்! கடுமையான வேலை, குடும்ப கஷ்டம், இடையில் நான் வேறு".

ஒரு அம்மா இப்படி எல்லாம் செய்வாளா என்று எனக்கு வியப்பாக இருந்தது. பின்னர் நான் படித்து தெரிந்துக்கொண்டது: ஒரு குடும்பத்தில் பாலியல் அத்துமீறல் நடப்பது எப்படியும் அந்த குடும்பத்தலைவிக்கு தெரிந்துவிடுமாம், தெரிந்தும் தெரியாதது போல இருப்பார்களாம்(Enablers). எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. கணவனைப்பற்றிய பயமும், குடும்ப கட்டமைப்பை குலைக்க விரும்பாமையும் காரணமாக இருக்கலாம். அதற்காக சொந்த மகளையே பலிகொடுக்க துணிகிறார்கள். வெளிநாட்டிலேயே இப்படி என்றால், நம் நாட்டில் பெண்களின் நிலையை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது!

"எத்தனை முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன் தெரியுமா? ஏதோ கடவுள் அருளால் ஒவ்வொரு முறையும் தப்பித்தேன்". தன் கழுத்தில் இருந்த மதச்சின்ன டாலரை இரண்டு கையாலும் கெட்டியாக பிடித்துக்கொண்டார். மெக்சிகன் ஆரிஜினில் வருபவர்கள் பெரும்பாலும் தீவிர மத நம்பிக்கையாளர்கள்.

"அப்பா பார்க்காத போது நானும் குடிக்க ஆரம்பித்தேன். உணர்வுகள் மரத்துப்போகும் அளவு குடித்தால் அப்பாவின் வக்கிர செயல்கள் உறைக்கவில்லை, வலிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மதுவுக்கு நானும் அடிமையாகிவிட்டேன்! இப்படியே காலம் ஓடிவிட்டது. எனக்கு 17 வயது, ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் அம்மாவின் கைப்பையில் இருந்து கொஞ்சம் பணம் திருடிக்கொண்டு ஒரு பாருக்கு போனேன், அங்கே தான் என் கணவரை சந்தித்தேன்". டிலோரிஸ், தன் கணவரை பற்றி சொல்லும்போது, அவர் முகம் உடனடியாக பிரகாசமடைந்தது.ஆயிரம் வாட்ஸ் பல்ப் போட்டமாதிரி!

"அவர் ஒரு பிஸ்னஸ் மேன், மனைவியை இழந்தவர். அவரை பார்த்தவுடனே எனக்கு பிடித்துவிட்டது. அவரோடு பேசும் சுவாரஸ்யத்தில் குடிக்க கூட மறந்துவிட்டேன். அவர் கூட இருந்தால் என் துன்பமெல்லாம் மறைந்துவிடும் என்று தோன்றியது. என்னைக்காப்பாற்ற கடவுள் அனுப்பிய தேவதை என் கணவர். என்னை வீட்டுக்கு கொண்டு போய் விடும்போது என்ன சொன்னார் தெரியுமா?"

"என்ன சொன்னார்?"

"'இன்று உலகத்திலேயே மிக அழகான,அன்பான பெண்ணை சந்தித்தேன்' என்றார். இத்தனைக்கும் அன்று நான் துளி மேக்கப் போடவில்லை, ஹைஸ்கூல் கூட முடித்திருக்கவில்லை!".இதை சொல்லும் போது டிலோரிஸின் முகத்தில் வெட்கம், பெருமிதம் எல்லாம் கலந்த உணர்வுகள்.

"திருமணத்துக்கு பிறகு எல்லாம் சரியாப்போச்சா டிலோரிஸ்?"

"அது தான் இல்லை, திருமணத்துக்குப் பிறகும் என் கடந்த காலம் என்னை விடாமல் துரத்தியது"


- நினைவுகள் தொடரும்

52 comments:

கயல்விழி said...

சோதனை

துளசி கோபால் said...

me the first ன்னு வேற யாரும் சொல்லக் கூடாதாக்கும்?


நல்லவேளை. அந்தம்மாவுக்கு அன்பான கணவர் கிடைச்சார்.

இன்னும் மீட்பர் வராமக் கிடக்கும் பெண்களை நினைச்சா......

வருத்தமாத்தான் இருக்கு.(-:

ஜி said...

:(((

வருண் said...

பயங்கர சோகமா இருக்கு கயல்! :-(

கயல்விழி said...

நன்றி துளசி மேடம். இந்தியாவில் இது போன்ற நிறைய வெளியே வராமல் அமுக்கப்படுகிறது. :(

ஏழைப்பெண்கள் தெரப்பிக்கெல்லாம் என்ன செய்வார்கள்?

கயல்விழி said...

நன்றி ஜி மற்றும் வருண்

babu said...

யாருக்கும் இது போல் வேதனை வரக்கூடாது.படிப்பதற்கே நமக்கு வேதனையாக இருக்கும்போது பாவம் அவருக்கு எப்படி இருந்திருக்கும்.என்ன சொல்வதென்றே தெரியவில்லை .இது போல மிருகங்கள் நம்மிடையே இருக்கின்றன என்பதை நினைத்து பார்க்க கூட வெறுப்பாக இருக்கிறது

இவன் said...

கனமான மனது மட்டும்தான் மிச்சம்

raman - Name said...

//கனமான மனது மட்டும்தான் மிச்சம்//

வேதனையுடன் வழிமொழிகிறேன்!

கயல்விழி said...

நன்றி பாபு, இவன் மற்றும் ராமன்

உங்களை வருத்தப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.

பெண் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது முக்கியமாக அவர்களுக்கு ரொம்ப பழக்கமான குடும்பத்து ஆண்களாம். முக்கியமாக குடிகாரர்கள்.

அடுத்த முறை நம் வாழ்க்கையை நினைத்து நாமே நொந்து போவதற்கு முன் டிலோரிஸ் போன்றவர்களின் வாழ்க்கையை நினைத்துப்பார்க்கலாம், பிரச்சினைகளை சமாளிக்க தானே தைரியம் வரும்.

கயல்விழி said...

அனைவருக்கும்,

இந்த தொடர் யாரையாவது ரொம்ப அபெண்ட் பண்ணினால் தயவு செய்து தெரிவிக்கவும். நிறைய பேரை அபெண்ட் பண்ணும் பட்சத்தில் இந்த தொடரை நிறுத்திவிடுகிறேன்.

கோவை ராஜா said...

பாவம்.

Amudha said...

"வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு" என்று அடிக்கடி பெண்பிள்ளை பெற்றவர் கூறுவதைக் கேட்கலாம். அவர்கள் எப்பொழுதிலிருந்து வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இன்று இது போல் விஷயங்கள் படிக்கும் பொழுது குழந்தை பிறந்ததில் இருந்தே அப்படித் தான் இருக்கிறது.

Amudha said...

"வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு" என்று அடிக்கடி பெண்பிள்ளை பெற்றவர் கூறுவதைக் கேட்கலாம். அவர்கள் எப்பொழுதிலிருந்து வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இன்று இது போல் விஷயங்கள் படிக்கும் பொழுது குழந்தை பிறந்ததில் இருந்தே அப்படித் தான் இருக்கிறது.

அவனும் அவளும் said...

******இந்த தொடர் யாரையாவது ரொம்ப அபெண்ட் பண்ணினால் தயவு செய்து தெரிவிக்கவும். நிறைய பேரை அபெண்ட் பண்ணும் பட்சத்தில் இந்த தொடரை நிறுத்திவிடுகிறேன்****

அந்த பெண்ணுக்கு அவங்க வாழ்க்கைய பத்தி இன்னொருத்தர் எழுதறது offend பண்ணாம இருந்தா சரி.

இது வேறு யாரையும் offend பண்ணாது கயல்விழி. carry on.

ஜோசப் பால்ராஜ் said...

நான் விரும்பி படிக்கும் வலைப்பூக்களில் உங்களுடையதும் ஒன்று. இது போன்றவற்றை ஆண்கள் கூட எழுத தயங்கும்போது,நீங்கள் எழுதுவது ஆச்சரியமளிக்கிறது. இது போன்ற வேதனையான பக்கங்களும் பெண்களின் வாழ்வில் இருக்கின்றன என்பது கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள்.

எனக்கு தெரிந்தவரை நீங்கள் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து அங்கு வேலை பார்பவர், உங்கள் சொந்த வாழ்வின் வேதனையான தருணங்களை நீங்கள் எப்படி கடந்து வந்தீர்கள் என்பதை நீங்கள் எழுதினால் அது கட்டாயம் பிறருக்கு உதவும் என்பது என் நம்பிக்கை.

கட்டாயம் என் பார்வையில் நீங்கள் ஒரு சாதனையாளர்தான்.

ராஜ நடராஜன் said...

வணக்கம் மேடம்.நான் உங்கள் முந்தைய பதிவுகளைப் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.தற்சமயம் எனது மூளைக்கு பளிச்சின்னு ஒண்ணும் சொல்லத் தோணவில்லை.

சுந்தர் said...

படிக்கவே இவ்வளவு கஷ்டமாக இருக்கு. இந்த மாதிரி துன்ப நினைவுகளை சுமர்ந்து வாழ முயல்பவர்களை நினைத்தால் - இத்தனை கோடி ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி பெற்று என்ன பயன், இந்த மனித இனத்தில், இன்னும் மிருக இனத்தை பிரித்து விலக்க முடியவில்லையே என்று கோபம் வருகிறது.
இதுப்போல கனமான விஷயங்களை பற்றி தொடர்ந்து எழுவதற்கு நன்றி. இதைப்படித்து சிலர் திருந்தவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருக்கவோ வாய்ப்புண்டு.

சுந்தர் said...

// கயல்விழி said... பெண் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது முக்கியமாக அவர்களுக்கு ரொம்ப பழக்கமான குடும்பத்து ஆண்களாம். முக்கியமாக குடிகாரர்கள். //
உண்மைதான் - சில காலம் நான் பகுதி நேர counsellor ஆக இருந்தப்போது CSA (child sex abuse) பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ள நேர்ந்ததால், தனித்து, மிரண்டு, தயங்கி நிற்கும் குழந்தைகளை பார்க்கும் போதெல்லாம் மனம் கனத்துப்போவது உண்டு :(

சுந்தர் said...

இன்னும் நிறைய பதிவுகள் படிக்க ஆரம்பித்ததால், நீங்கள் அடுத்த பாகம் போட்டதை கவனிக்க வில்லை. இப்போதுதான் பார்த்தேன். சாரி தாமதத்திற்கு.

uthira said...

kodumaya iruku kayal antha penirku enudoya azhntha anuthapangal intha mathiri manitha miruhangala kadumaya thandikanum

ithai vida koduma antha penin thaiku therinthum avarhal kandu kolamal irunthathu

ethai kapatra avar thai kandu kolamal irunthal thanathu pennuku nadakum kodumayai thadupathai vida vazhkayil edai kapatra, munnera mukiyamaha irunthal enbathu enaku oru periya vinavaha irukirathu???:(

வால்பையன் said...

இதுவும் ஒரு வகையான காமகதையாடல் தான்!

ஆனால் அனைவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் முடியும்!
கற்பு என்பது உடல் மட்டும் சம்பந்தபட்டது அல்ல

Dr.Sintok said...

//அனைவருக்கும்,

இந்த தொடர் யாரையாவது ரொம்ப அபெண்ட் பண்ணினால் தயவு செய்து தெரிவிக்கவும். நிறைய பேரை அபெண்ட் பண்ணும் பட்சத்தில் இந்த தொடரை நிறுத்திவிடுகிறேன்.//

இது உங்கள் பதிவு நீங்கள் எழுத நினைப்பதை எழுதுங்கள்...........

பிறரை பற்றி கவலை வேண்டாம்.....

கயல்விழி said...

//பாவம்.//

வருகைக்கு நன்றி கோவை ராஜா

கயல்விழி said...

//வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு" என்று அடிக்கடி பெண்பிள்ளை பெற்றவர் கூறுவதைக் கேட்கலாம். அவர்கள் எப்பொழுதிலிருந்து வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இன்று இது போல் விஷயங்கள் படிக்கும் பொழுது குழந்தை பிறந்ததில் இருந்தே அப்படித் தான் இருக்கிறது.//

அமுதா

வருகைக்கு மிக்க நன்றி. பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தை வைத்திருப்பவர்களும் இந்தக்காலக்கட்டத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

கயல்விழி said...

//அந்த பெண்ணுக்கு அவங்க வாழ்க்கைய பத்தி இன்னொருத்தர் எழுதறது offend பண்ணாம இருந்தா சரி.

இது வேறு யாரையும் offend பண்ணாது கயல்விழி. carry on.
//

அந்த பெண்மணி இன்று வரை எனக்கு நெருக்கமான தோழி. அவரிடம் அனுமதி வாங்கியே எழுத ஆரம்பித்தேன். அவர் தன்னை மாதிரியே பாதிக்கப்பட்ட பெண்களுக்குஇ கவுன்சிலிங்கும் கொடுக்கிறார். தன் வாழ்க்கை நிறைய பேருக்கு பாடமாக இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அவருடைய லட்சியம். இருந்தாலும் பிரைவசி கருதி கடைசி பெயர்(Last name) பயன்படுத்தாமல் எழுதி இருக்கிறேன்.

கயல்விழி said...

வருகைக்கு நன்றி அவனும் - அவளும்.

கயல்விழி said...

ஜோசப் பால்ராஜ்

நானும் உங்களுடைய வலைப்பூவை தொடர்ந்து படிக்கிறேன்(என் கமெண்டுகளை கவனித்து இருப்பீர்கள்). அரசியல், சமீகத்தில் உங்களுக்கு ஆழ்ந்த அறிவு, பார்வை இருப்பதை கண்டு வியப்படைந்திருக்கிறேன்.

என் வேதனையான நிகழ்வுகளை எப்படி கடந்து வந்தேன் என்பதை நிச்சயம் எழுதுவேன், சில உதாரணங்களுக்கு பிறகு. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

கயல்விழி said...

வணக்கம் ராஜ நடராஜன். நேரம் இருக்கும் போது மற்ற பதிவுகளையும் படிக்கவும்.

கயல்விழி said...

//இதுப்போல கனமான விஷயங்களை பற்றி தொடர்ந்து எழுவதற்கு நன்றி. இதைப்படித்து சிலர் திருந்தவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருக்கவோ வாய்ப்புண்டு.//

ரொம்ப நன்றி சுந்தர். அது தான் என்னுடைய முக்கியமான நோக்கம். கூடவே இப்படி எழுதுவது மனதில் பூட்டி வைத்திருக்கும் உணர்வுகளுக்கு ஒரு நல்ல வடிகாலாக இருக்கிறது.

கயல்விழி said...

//kodumaya iruku kayal antha penirku enudoya azhntha anuthapangal intha mathiri manitha miruhangala kadumaya thandikanum
//

உத்ரா,

வருகைக்கு நன்றி.

ஒரு முக்கியமான விஷயம், குழந்தைகள் பாலியல் வன்முறை புகார்கள் இந்தியாவில் அதிகம் வெளிவருவதில்லை. முக்கியமாக குடும்பத்தில் உள்ள ஒருவரே குற்றவாளியாக இருக்கும் போது.

அப்படியே வெளிவரும் குற்றங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை ரொம்ப ரொம்ப குறைவு. குழந்தை பாலியல் வன்முறையாளர்களுக்கு எந்த தனி அடையாளமும் கொடுக்கப்படுவதில்லை, மீண்டும் சமுதாயத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். சரியான தெரப்பி கொடுக்கப்படாததால் திரும்ப திரும்ப குற்றங்கள் செய்து, நிறைய முறை பிடிபடாமல் தப்பி விடுகிறார்கள்.

கயல்விழி said...
This comment has been removed by the author.
கயல்விழி said...

//இதுவும் ஒரு வகையான காமகதையாடல் தான்!

ஆனால் அனைவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் முடியும்!
கற்பு என்பது உடல் மட்டும் சம்பந்தபட்டது அல்ல//

இது காமக்கதையாடல்? நான் இங்கே உடல் உறுப்புக்களுக்கோ அல்லது உடல் உறவுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்போவது இல்லை.

உணர்வுகளுக்கும், காமத்தால் உண்டான விளைவுகளுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்தேன்/கொடுப்பேன்.

கருத்துக்களுக்கு நன்றி வால்பையன்.

வருண் said...

***வால்பையன் said...
இதுவும் ஒரு வகையான காமகதையாடல் தான்!***

அப்படியா நீங்கள் நினைக்கிறீர்கள். நான் இதை மனித மிருகங்கள் பற்றிய ஒரு உண்மைச்சம்பவம் என்று நினைத்தேன்!

எல்லாம் பார்ப்பவர்கள் மனநிலையை பொறுத்தது!

கயல்விழி said...

Dr. Sitnok,

விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை, தனிப்பட்ட விமர்சனமாக இல்லாத வரைக்கும், விமர்சனங்களை வரவேற்கிறேன்

வால்பையன் said...

"வன்முறை கலந்த தனிநபர் இன்பகாமம்!"(சாடிஸ்ட்)

மகளுக்கு வன்கொடுமை
அப்பனுக்கோ அது இன்பமாக இருக்கிறது.
பின்னாளில் அவள் குடிக்கு அடிமையாகி அந்த வன்கொடுமையை ஏற்று கொள்கிறாள்.
ஆகவே தான் அதில் அனைவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லியிருந்தேன்.

அப்பன் மகளுக்கு செய்த கொடுமை என்ற தலைப்பில் வந்திருந்தாள்.
வன்மையாக கண்டிக்கிறேன் என்று பின்னூட்டியிருப்பேன்.

கற்பு பற்றிய தலைப்பினால் இதை ஒரு பாலியல் கல்வி சார்ந்த பதிவென்று நினைத்தேன், காமசூத்த்ராவும் ஒரு பாலியல் கல்வி நூல் தான்.
அதனால் தான் காமக்கதையாடல் என்று குறிப்பிட்டேன்.

காமம் என்ற வார்த்தைக்கு நான் வைத்திருக்கும் அர்த்தம் வேறு

வால்பையன்

கயல்விழி said...

நன்றி வால்பையன்.

வழிப்போக்கன் said...

:)

வழிப்போக்கன் said...

தொடர்ந்து சிறப்பான முறையில் இந்த பிரச்கனையை விவாதிப்பதற்காக அந்த ஸ்மைலி..

தொடர்ந்து எழுதுங்க!!

அவர்கள் சொன்னது புரிந்த சோகத்தை காட்ட offend செய்ததாக அல்ல என நான் நினைக்கிறேன்.

பிரபு said...

என்ன எழுதுவதென்று தெரியவில்லை
சில வலிகளை வார்த்தை குறைத்து விடாது.இனியாவது நல்லதே நடக்கட்டும்

கயல்விழி said...

உங்களுடைய தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி வழிப்போக்கன். இப்படி பாலியல் வன்முறைகளைப்பற்றி எழுதும் போது கத்தி மேல் நடப்பது போல கவனமாக இருக்கவேண்டும். இல்லை என்றால் வல்கராக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

கயல்விழி said...

நன்றி பிரபு. :)

இந்த தொடருக்கு வந்த பின்னூட்டங்களில் நிறைய பேர் உங்களை மாதிரி தான் எழுதி இருக்கிறார்கள்.

சூர்யா said...

நமது நாளிதழ்களில் இது மாதிரி நிறைய செய்திகள் படிக்கிறோம். ஆனால் இந்த பதிவிலிருப்பது போல் நாம் சந்தித்த நபர்களின் அனுபவமாக படிக்கும்போதுதான் அந்தக் கொடுமைகளின் தாக்கம் புரிகிறது.

King... said...

உலகம் பல மாதிரி இருக்கிறது...
அனுபவம் அதனை கற்றுத்தருகிறது...
தெளிவை நாங்கள் பெற வேண்டி இருக்கிறது...

Karuppiah said...

Enna solradhu inu theiyala ma. Edhai ellam paarkum poadhum illea edhu mathiri keatkum poadhum...
Avanghalaiya ellam konnu podanum inu thoonuthu.

குடுகுடுப்பை said...

இப்படி எல்லாம் நடக்குமா ?

என் முதல் பதிவு வந்து பாருங்கள்.

http://kudukuduppai.blogspot.com/2008/08/blog-post_14.html

YILAVEANIL said...

வணக்கம் சகோதரி..

எப்படியோ தற்செயலாக தங்களின் வலைபதிவுக்கு வந்து சேர்த்தேன்..

தோழர் ஸ்ரீ பதிவுக்கு கருத்து பதிவு செய்த பின்னே தங்கள் கருத்தையும் வாசித்து பின் வந்து சேர்ந்தேன்..

மனம் கொதித்து, நொந்து போனேன்...

தங்களுக்கு இருந்த உறுதியான மனம் பல சகோதரிகளுக்கு இருப்பதில்லை..

நிற்க.

நான் ஏதோ உங்களை புகழ வந்தேன் என்று தயவு செய்து எண்ணிவிடவேண்டாம்..

மாறாக பெருமை கொள்கிறேன்.. பாரதி கண்ட புதுமை பெண் உணர்வோடு வாழ்வது கண்டு...

தங்கள் கூறியுள்ள ஒரு கருத்து முற்றிலும் உண்மையே..

பலர் வாழ்வில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதும், அந்த குடும்பம் சிதைந்து அழிவதும் நடக்கின்ற விஷயம்தான்..

இன்று தினந்தோறும் காலையில் படிக்கும் செய்தி தாளில் எவ்வளவு முறையற்ற உறவு கதைகள், பின் விளைவு கொலைகள்..

இந்த உலகத்தில் சில சமயம் உடல் பசிக்காய் பெண் இணையைத் தேடி போகும் விலங்குகள் கூட மனிதன் அளவுக்கு கீழ்தரமாய் நடந்து கொள்வதில்லை..

திருமதி. டிலோரிஸ் அனுபவித்த கொடுமைகளுக்கு அந்த வயதில் அந்த பிஞ்சு மனம் என்ன பாடு பட்டிருக்கும்???

எண்ணிப் பார்க்கவே நெஞ்சம் பொறுக்கவில்லை...

கொலை என்றும் எல்லா கொடுமைக்கும் முடிவாகாது என்று பல முறை உள்ளம் சொன்னாலும், இது போன்ற ஒரு ஜந்துவை கொன்றால் அது எல்லையில் ராணுவ வீரன் செய்யும் கடமை போன்றதே என்று புத்தி சொல்கிறது
மனது..

இப்படி ஒரு கொடுமையான இளம் பிரயாத்திற்குப் பின்பு, வாழ்வில் போராடி வென்ற

அந்த மாதர் குல மாணிக்கத்திற்கு என் பணிவான வணக்கங்களை தெரிவியுங்கள்...

வாழ்வில் போராடி வெற்றி பெற்ற பலரையும் விட இவரின் வெற்றிக்குதான் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்

என் சார்பாக அதையும் தெரிவியுங்கள்...

உங்கள் வாழ்வின் வலியை எங்களோடும் பகிர்ந்து கொள்ளும் தங்கள் உள்ளத்து உறுதிக்கு என் வணக்கங்கள்..

கற்பு பற்றி எனக்கு சில கருத்துக்கள் உண்டு...

பெண்ணுக்கு கற்பு நெறி வகுத்த தமிழ் குடி, ஆண்களுக்கும் நெறி வகுத்தது...

ஒருவனுக்கு ஒருத்தி..

ஒரு முறை தான் காதல் வரும் தமிழர் பண்பாடு..

பிறன் மனை நோக்கா பேராண்மையே ஆண்களுக்கான கற்பு நிலை...

இவற்றில் பிறழ்ந்த ஆண்கள், பெண்களின் கற்பு நிலை பற்றி எண்ணவும் தகுதியற்றவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து..

உடல் சார்ந்த கற்பு நிலை பற்றி கவலைப் படும் ஆண்கள், மனதளவில் பிற பெண்களை காம பார்வை பார்க்காமலா இருக்கிறார்கள் ???

எவன் ஒருவன் மற்ற பெண்களை மனத்தால் தீண்டாமல் இருக்கிறானோ
அவன் கற்பை பற்றி கவலைப்படட்டும்..

மற்றவர்க்கேன் அந்த வேலை / கவலை ???

Do write more...

Take Care...

வணக்கம்

இளவேனில்

YILAVEANIL said...

Sorry Ma'am..

I Made 1 mistake..

Instead of Thozhar ஜி , I mentioned, I navigated from Shri's page..

Sorry About That..

கயல்விழி said...

இளவேனில், '

உங்களின் விளக்கமான பின்னூட்டத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி :)

sriram said...

மனசு ரொம்ப பாரமா இருக்கு.I sincerely pray that this is not truth but just a story.மதிப்பீடுகள் அற்ற காட்டுமிராண்டி உலகில் வாழ்கிறோம்.

Chandravathanaa said...

கயல்விழி

உங்கள் பதிவு என்னை ஒரு உலுக்கு உலுக்கி விட்டது.
எத்தனையோ நாட்களாக வாசிக்க நினைத்து நினைத்து விடுபட்டு மீண்டும் இன்று
முதல் பாகத்தை மட்டும் வாசிக்கலாம் எனத் தொடங்கினேன்.

எந்த விடயங்களும் ஆச்சரியமாகத் தெரியவில்லை ஆறாவது பாகத்தை வாசிக்கும் வரை.
எத்தனையோ விடயங்களைக் கேள்விப் பட்டிருக்கிறேன். அப்பாக்களின் சபலங்கள் பல ரூபங்களில் அம்மாக்களை வதைத்திருப்பதை பல இடங்களில் வாசித்திருக்கிறேன். சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஆனால் சொந்த மகளோடு... ஒரு தந்தை நடந்து கொண்ட விதம்... கொடுமை. அந்தப் பெண்ணுக்கு அன்பான கணவன் கிடைத்தது அதிசயமான சந்தோசம்.

இத்தனையையும் எழுதத் துணிந்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள். தொடர்ந்தும் எழுதுங்கள்.

Mathi said...

யாருக்கும் இது போல் வேதனை வரக்கூடாது.இது போல மிருகங்கள் நம்மிடையே இருக்கிறது .பார்க்க கூட வெறுப்பாக இருக்கிறது .கனமான மனது மட்டும்தான் மிச்சம்.
வேதனையுடன் நான். நான்விரும்பி படிக்கும் வலைப்பூக்களில் உங்களுடையதும் ஒன்று.