Thursday, July 1, 2010

எந்திரன்! தீபாவளியை முந்துகிறது!


ராவணன் படம் வந்து ஓரளவுக்கு ஆடி, அடங்கி, ஓய்ந்துவிட்ட இந்த நிலையில் போஸ்ட் ப்ரடக்ஷனில் உள்ள அடுத்த மிகப்பெரிய தமிழ்ப்படம் என்னனா, நம்ம ரஜினி-ஐஸ்-ஷங்கர்-ஏ ஆர் ஆர் சேர்ந்து வரும் எந்திரன் தான்!

ரஜினியின் எந்திரன் தீபாவளிக்கு வெளிவருவதாக ஒரு பக்கம் தமிழ் மீடியா சொல்லிக்கொண்டிருக்கிறது. தீபாவளி நவம்பர் 5 தேதி வருகிறது. அவ்வளவு நாள் ஆகுமானு எல்லாரும் ரொம்ப கவலையுடன் இருக்கும் இந்த நிலையில்,

ரசூல் பூக்குட்டியின் ட்விட்டரில் ஆகஸ்ட் மூனாவது வாரம் வெள்ளித்திரைக்கு கொண்டுவர எந்திரன் டீம் கடின உழைப்பு உழைப்பதாக சொல்லப்படுகிறது!

For all the anxious Endhiran followers, we are trying our level best to get it to theatres towards the third week of August,love.

இராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய் என்னையும் மற்றும் பலரையும் இம்ப்ரஸ் பண்ணவில்லை! ஆனால் அடுத்து வரும் எந்திரனில் நம்ம சூப்பர் ஸ்டாருடன் வந்து தமிழ் சினிமாவை ஒரு கலக்குக் கலக்குவார் என்று நம்புவோம்!

எந்திரன் 180 கோடி பட்ஜெட்னு ஆளாளுக்கு கதை விடுறாங்க! இவ்வளவு பெரிய பட்ஜெட்ல ஒரு தமிழ்ப்படம் வந்தால் போட்ட காசை எப்படி எடுப்பாங்கனு தெரியலை. 5000 பிரதிகள் உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணினாலும், படம் ஹிட் ஆனால்த்தான் போட்ட காசை எடுக்க முடியும். படம் விழுந்துச்சுனா என்ன ஆகும்னு நெனச்சுப் பார்க்கவே பயம்மாத்தான் இருக்கு!

180 கோடிய செலவழிச்சு என்ன எழவைத்தான் இந்த ஷங்கர் எடுத்து இருக்கார்னு பார்க்க ரொம்ப ஆசையாத்தான் இருக்கு! ராவணன் டிக்கட் விலை இங்கே $7 டாலர்தான்! எந்திரன் டிக்கட் விலை அனேகமாக $25 இருக்குமா? இல்லை $30? ஹூ கேர்ர்ஸ்! :)))

ஆகஸ்ட் 3 வது வாரம்னா இன்னும் 7 வாரங்கள் தான் இருக்கு! இல்லை இன்னும் ரெண்டு மாதங்கள் கூட இல்லை! பார்க்கலாம் அண்ணன் பூக்குட்டி சொன்னது எந்த அளவுக்கு உண்மை னு!

9 comments:

Chitra said...

எந்திரன் டிக்கட் விலை அனேகமாக $25 இருக்குமா? இல்லை $30? ஹூ கேர்ர்ஸ்! :)))


.......அது!

OMNIMAX theater ல எவ்வளவு சார்ஜ் பண்ண போறாங்க தெரியல....

வருண் said...

***Chitra said...

எந்திரன் டிக்கட் விலை அனேகமாக $25 இருக்குமா? இல்லை $30? ஹூ கேர்ர்ஸ்! :)))


.......அது!

OMNIMAX theater ல எவ்வளவு சார்ஜ் பண்ண போறாங்க தெரியல....***

OMNIMAX theater ல இதுவரை எந்தத் தமிழ்ப்படமும் பார்த்ததில்லைங்க! :)

கிரி said...

//180 கோடிய செலவழிச்சு என்ன எழவைத்தான் இந்த ஷங்கர் எடுத்து இருக்கார்னு பார்க்க ரொம்ப ஆசையாத்தான் இருக்கு//

:-)))

விரைவில் எதிர்பார்க்கிறேன்..

எந்திரன் பற்றிய பதிவை பாதி எழுதி இருக்கிறேன்.... ;-)

வருண் said...

கிரி said...
//180 கோடிய செலவழிச்சு என்ன எழவைத்தான் இந்த ஷங்கர் எடுத்து இருக்கார்னு பார்க்க ரொம்ப ஆசையாத்தான் இருக்கு//

:-)))

விரைவில் எதிர்பார்க்கிறேன்..

எந்திரன் பற்றிய பதிவை பாதி எழுதி இருக்கிறேன்.... ;-)

3 July 2010 12:01 AM***

வாங்க கிரி!

பாடல்களாவது சீக்கிரம் வெளிவரும்னு நம்புவோம்! :)

Sinna said...

hi varun, kayal

this is a general question. since u guys r based in usa, i thought of posting it here. recently i came to know that people were offended by someone seeing ravanan online. I thought it was a common practice in the US to see tamil and other movies on the internet, though the dvds are coming out fast. my own friends used to see movies on internet but i lack the current info. so, my question is, in us, do you think people still see movies on the web?

Sinna.

வருண் said...

s***o, my question is, in us, do you think people still see movies on the web?

Sinna.**

Yeah, they do watch in some sites for a while and then some other sites for a while. The sites come and go but the movies can be watched in some new sites, always. Dont ask me to give me the links. I dont know :)

Sinna said...

hey.. i am not asking for the links.. i can google it.. its that simple.. i was surprised by people's reaction as though it was the news of the century.. seeing movies on the web i mean. so, i wanted to know that its not just in my area people are watching movies on internet. i live in the southeast of us btw. thanx!

வருண் said...

***hey.. i am not asking for the links..**

Sinna: I was only kidding. Take it easy. :-)

Sinna said...

yeah.. reading your blog for the past couple of weeks should have taught me to take things easy and relax.. but the reactions to that movie incident made me a little jumpy!! thanx varun and u hv a good day.