Wednesday, October 6, 2010

தேச துரோகி சாரு! மலிவு விலையில் எந்திரன் டிக்கட்!


என்னங்க, திருவாளர் சாரு நிவேதிதாவை, தேச துரோகியாக்கிவிடீங்கனு என்னோட சண்டைக்கு வராதீங்க! நான் இல்லைங்க, அவருடைய அரைகுறை எந்திரன் விமர்சனத்தில் எந்திரன் அவரை தேசதுரோகியாக மாற்றி விட்டதாக அவரேதான் சொல்லியிருக்காரு. அவரே அவருக்குக் கொடுத்துக் கொண்ட பட்டம்தான் இந்த தேச துரோகி! விபரம், அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்! இப்படியெல்லாம் "எந்திரனை" வைத்து பொழைப்பு நடத்துனுமானு கேட்டுறாதீங்க!

அதென்னங்க அது? ரஜினிகாந்த் படம் ரிலீஸ் பண்ணும்போது மட்டும்தான் இவர்களுக்கு சாமி வருது! என்னமோ சினிமாவை வச்சுதான் இவர்கள் உலகத்தையும் சமுதாயத்தையும் திருத்தப் போற மாதிரியும், அதுக்கு ரஜினிதான் குறுக்கே நிக்கிற மாதிரி ஒரே நாடகமா இருக்கு! என் நண்பன் சுரேஷூ சுரேஷுனு ஒருத்தன் இருக்கான், ரஜினி படம் வந்தா அவனுக்கு தூக்கம் வராது! ரத்தக்கொதிப்பு தொடர்ந்து 180/110 லயே நிக்கும்! ஏன் ன்னா என் நண்பர் தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்கு கொண்டு செய்ய முயற்சி செய்கிறவர் அது இதுனு னு ஏதோ ஒளறிக்கிட்டு திரிவாரு! சாருநிவேதிதாவும் இவரும்தான் தமிழ் சினிமாவை உலக சினிமாவாக்கி தமிழ் சமுதாயத்தை உயர்த்தப் போறாங்களாம்! இப்படி எதையாவது உளறிக்கிட்டு எதையாவது எந்திரன் பத்தி எழுதிக்கிட்டு திரிவார்கள்!

சரி, மலிவு விலையில் எப்படி எந்திரன் பார்க்கிறதுனு பார்ப்போம்! அமெரிக்காவில் முதல் நாள் முதல் ஷோ டிக்கட் $30 டாலர். அப்புறம் அந்த வீக் எண்ட் டிக்கட் $20 டாலர்! ஓரளவுக்கு போட்ட காசை எடுத்துவிட்டார்கள் பணத்தைப் போட்டு படப்பொட்டி எடுத்தவங்க! தியேட்டர் ஹவ்ஸ் ஃபுல் ஆகுதோ இல்லையோ, டிக்கட் விலையை குறைக்கவில்லை! அந்தா இந்தானு நெறைய ஷோக்களைப் போட்டு 2 .1 மில்லியன் டாலர்களை அள்ளிட்டாங்க. முதல் வாரம் முடிந்த பிறகு இப்போ வீக் டேஸ் டிக்கெட் விலை 10 டாலர் னு மலிவுவிலையில் எந்திரன் பார்க்கிறவங்க பார்க்கலாம்னு சொல்றாங்க! "என்னங்க இப்படி அநியாயத்துக்கு டிக்கட் வெலையை ஏத்தி வச்சிருக்காங்க?" னு திட்டுறவங்க எல்லாருக்கும் தேவையானது கொஞ்சம் பொறுமை! ரெண்டு வாரம் இல்லை நாலு வாரம், இல்லைனா தீபாவளி வரை பொறுமையாக இருந்தால் "நியாயமான" விலையில் டிக்கட் வாங்கிப் படம் பார்க்கலாம்! நீங்க ரொம்ப கோவப்படாம கொஞ்சம் பொறுமையாக இருங்கப்பா! அவனுக ரெண்டு பேரு இல்லை நாலுபேரை வச்சு ஓட்டிட்டுப் போகட்டும்! ந்ல்லதுதானே? இதுக்குப் போயி ஏன் அலட்டிக்கிறீங்க?

சும்மா நான் வெற்றிவேல் தியேட்டர் போனேன், விலை அநியாயமா இருந்தது ஒரு பயலும் சீந்தவில்லை, அதனால நான் படம் பார்க்கலை னு சும்மா ஒரு பதிவைப்போட்டு பொழப்பை ஓட்டக்கூடாது! சென்னையிலே 3 நாளு வசூல் 2 கோடினு படிக்கலையா? நீங்க படம் பார்க்கலைனு எவன் வருத்தப்பட்டான்? தியேட்டருக்கு உள்ளே ஒருத்தருமே இல்லை னு சின்னப்பிள்ள்ளைத்தனமா பிரச்சாரம்லாம் எதுக்கு? உங்க தகுதிக்கு ஏற்ப என்ன படத்துக்கு போய் படம் பார்த்தீங்களோ அந்தப் படத்தை பத்திப் பேசுங்கோ! என்ன புரியுதா? சும்மா கரைச்சல் பண்ணப்படாது! பெரியமனுசன் மாதிரி நடந்துக்கனும்!

ஸ்டேடியத்திலே ஃபுட்பால் அல்லது பேஸ் பால் கேம் பார்க்கப் போகும்போது போய் ஒரு பாட்டில் பியர் வாங்கினால் அதன் விலை எட்டு டாலர்! அதே பியரை வெளியே வால்மார்ட் ல வாங்கினால் 75 செண்ட்ஸ் தான். இல்லை எனக்கு ஸ்டேடியத்தில் 75 செண்ட்க்கு கொடுக்கனும்னு நம்ம ஊர் அம்பி போய் சண்டைபோட்டால் கழுத்தைப் பிடிச்சு வெளியதான் தள்ளுவானுக! அவன் செலவழிச்ச காசை எடுக்கனும்! எட்டு டாலருக்கு வாங்க ஆள் இருக்கு! நீ எட்டுடாலருக்கு வாங்கியேதான் ஆகனும்னு சொன்னாத்தான் தப்பு! அதேபோல் எந்திரன் டிக்கட்டை நீங்க 150 ரூபாய்க்கு வாங்கித்தான் ஆகனும்னு வெற்றிவேல் தியேட்டர்ல சொன்னா அவனை நானே அறைவேன்!

அப்புறம் தினமணியில் ஒரு வீணாப்போன ஆர்ட்டிக்கிள் ஒண்ணு வந்திருக்கு! ரஜினி பெரிய ஸ்டாராம் அதனால அவர் நடிச்ச எந்திரனை தீபாவளி இல்லை பொங்கலுக்குத்தான் வெளியிடனுமாம்! இப்படி ஒரு லூசுத்தனமான ஆலோசனை! ரஜினி நடிக்கிறதே 3 வருசத்துக்கு ஒரு படம்! இதிலே தீபாவளிக்குத்தான் ரிலீஸ் பண்ணனும், பொங்கலுக்குத்தான் ரிலீஸ் பண்ணனும்னு னு பேசுறது கேணத்தனமா இல்லை? இதையெல்லாம் ஒரு ஆர்ட்டிக்கிள்னு ஏதோ ஆளாளுக்கு "காப்பி- பேஸ்ட்" பண்ணிக்கிட்டு திரிகிறார்கள். என்னவோ தினமணி உலகத்திலே இல்லாத தத்துவத்தை சொன்னதுபோல!

9 comments:

பழமைபேசி said...

அப்பவே சொன்னேன்.... நாம் கேட்டது கிடைக்காட்டி பரவாயில்ல... நீர் அந்த தினமணி தலையங்கம் படிக்காதீருன்னு.... இதுல வேற இந்த குதிரைகளையும் சேர்த்துப் பாக்குறாராம்ல?! அது அந்த Shepardக்கே வெளிச்சம்!!!

பாலா said...

அட நீங்க வேற, அவர் டிக்கட் வாங்கி கொடுக்க யாரும் இல்லைங்கற வயிதெரிச்சல்ல சொல்லிட்டாரு.

வருண் said...

***பழமைபேசி said...

நீர் அந்த தினமணி தலையங்கம் படிக்காதீருன்னு.... இதுல வேற இந்த குதிரைகளையும் சேர்த்துப் பாக்குறாராம்ல?! அது அந்த Shepardக்கே வெளிச்சம்!!!
6 October 2010 3:21 PM ***

தினமணி தலையங்கம், குதிரை, செஃபேர்ட் எல்லாரும் வெளிச்சத்துக்கு வரட்டும்! :)

வருண் said...

***பாலா said...

அட நீங்க வேற, அவர் டிக்கட் வாங்கி கொடுக்க யாரும் இல்லைங்கற வயிதெரிச்சல்ல சொல்லிட்டாரு.

7 October 2010 5:36 AM***

இதுபோல் "ஏழைகளுக்கு" "இல்லாதவர்களுக்கு" ரஜினி ரசிகர்கள் ஏதாவது செய்யனும். ஏன் டிக்கட் வாங்கி கொடுக்கலாமே? அதுவும் கலைச்சேவைதானே?

ஆனா இன்னொண்ணு, அப்படியே இனாம டிக்கட் வாங்கிக் கொடுத்தாலும், "இப்படித்தான் படத்தை ஓட்டுறானுக"னு சொல்கிற நன்றிகெட்ட உலகம் இது! :(

அமுதன் said...

Very correct. I too have similar thoughts.

வருண் said...

***அமுதன் said...

Very correct. I too have similar thoughts.
7 October 2010 8:30 AM ***

Thanks, Amudhan! :)

தெய்வமகன் said...

அமெரிக்காவின் எந்த ஊரில் எந்திரன் டிக்கெட் இரண்டாம் வாரத்திலிருந்து $10 க்கு கிடைக்கிறது என்று சொன்னால் உங்களுக்கு புண்ணியமாக போகும்... நான் நியூஜெர்சியில் இருக்கிறேன்... டிக்கெட் விலை குறைந்ததும் படம் பார்க்கலாம் என்று காத்திருக்கிறேன்... ஆனால் நான் தேடி பார்த்தவரை இரண்டாம் வாரத்தில் எல்லா நாட்களுமே $18க்கு தான் டிக்கெட் விற்கிறார்கள்... இன்னும் நிறைய நாள் காத்திருக்க வேண்டுமென நினைக்கிறேன்...

வருண் said...

*** தெய்வமகன் said...

அமெரிக்காவின் எந்த ஊரில் எந்திரன் டிக்கெட் இரண்டாம் வாரத்திலிருந்து $10 க்கு கிடைக்கிறது என்று சொன்னால் உங்களுக்கு புண்ணியமாக போகும்... நான் நியூஜெர்சியில் இருக்கிறேன்... டிக்கெட் விலை குறைந்ததும் படம் பார்க்கலாம் என்று காத்திருக்கிறேன்... ஆனால் நான் தேடி பார்த்தவரை இரண்டாம் வாரத்தில் எல்லா நாட்களுமே $18க்கு தான் டிக்கெட் விற்கிறார்கள்... இன்னும் நிறைய நாள் காத்திருக்க வேண்டுமென நினைக்கிறேன்...
7 October 2010 11:50 AM ***

நெஜம்மாத்தாங்க சொல்றேன் ஒரு சில இடத்தில் "வீக் டேஸ்" (மண்டே - தர்ஸ்டே), 10 டாலர் னு ரெண்டு ஷோ நடத்துறாங்க!

நிச்சயம் நியூ ஜேர்ஸியிலும் குறையும். இன்னும் ஒரு வாரம் போல நீங்க பொறுமை காக்கவும்! :)

R.Gopi said...

ஹா...ஹா...ஹா...

படம் ரிலீஸாகி 25 நாள் ஆவுது.. இன்னும் இந்த பொகைச்சல் நிக்கலியா..

பழிக்கவும் ரஜினி
பிழைக்கவும் ரஜினி

ந்னு சும்மாவா சொன்னாங்க...

தூற்றுவோர் எண்ணிக்கை அதிகமாகும் போது, தலைவரின் புகழ் மேலும் கூடுகிறது...

இது தெரியாத நாதாரிகளை என்ன தான் செய்வது!!??

அடுத்ததா ஒரு “நசுங்குன சொம்பு” வருதாம்... அதையும் பெரிய இடத்து சின்னவர் தான் தயாரிச்சு இருக்காராமாம்.. அப்போ அவனுங்க போடப்போற ஆட்டத்த பார்த்துட்டு, இந்த கலாசார காவலர்கள் (கயவர்கள்) என்ன சொல்றாய்ங்கன்னு பார்ப்போம்..