Monday, October 24, 2011

ஒரு ஓட்டுக்கு ஐநூறுல இருந்து ஆயிரம் வரை!

600 ஓட்டுக்கள் ஒரு வார்டில் ஆளுங்கட்சியை சேர்ந்த வேட்பாளர் 500 முதல் ஆயிரம் கொடுத்து ஓட்டுக்களை (சுமார் 300 ஓட்டுக்களுக்கு மேலே) விலைக்கு வாங்கியதாக எங்க தெருவில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சொல்லுறாங்க! ஆமா அ தி மு க காரன் எல்லாம் புத்தன் னு நெனச்சுக்கிட்டு இருக்காதீங்கப்பா! எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்.

என்னங்க சொல்றீங்க? எம் சி எலக்ஷனுக்கா இப்படி னு கேட்டால், ஏதோ நெறைய ரோடு காண்ட்ராக்ட் அது இதுனு வருமாம். ஆளுங்கட்சி எம் சி தான் ஈஸியா சம்பாரிக்க முடியும்னு தெரிஞ்சு "இன்வெஸ்ட்" பண்ணினார்களாம். வெற்றி வாகையும் சூடியுள்ளார்களாம். ஆனால் நம்ம ஆளு காசு வாங்கிட்டா கரெக்ட்டா உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாமல் ஓட்டைப் போட்டுருறானுகளாம்.

என்னத்தைச் சொல்ல? தமிழ்நாட்டில் இந்த விசயத்தில் அழகிரியை மட்டும் குற்றம் சொல்லுவது, இல்லைனா அழகிரிதான் இதை எல்லாம் ஆரம்பிச்சு வச்சாருனு சாக்கு சொல்வதெல்லாம் அர்த்தமற்றது.

நம்மாளு காசு வாங்கிட்டு ஓட்டுப்போடுற அளவுக்கு முட்டாளாகி நிக்கிறான். இல்லை புத்திசாலியாகிவிட்டானா?

8 comments:

Shanmugam Rajamanickam said...

எல்லா ஊருலயும் அப்படிதான்.

வருண் said...

வாங்க ஷண்முகம்! பகிர்தலுக்கு நன்றிங்க! :)

லதானந்த் said...

கயல்!
நெஞ்சார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள். 2 வருடம் முன் நிகழ்ந்தவை நிழலாடுகிறது.

கயல்விழி said...

வணக்கம் லதானந்த் சார், உங்களுக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள்!!
நீங்க எழுதறத பார்த்தா யாராவது எடக்கு மடக்கா ஏதாவது நினைக்க போறாங்க, நல்ல வேளை எங்க வீட்டுக்காரருக்கு தமிழ் படிக்க வராது :) :)

admin said...
This comment has been removed by the author.
கயல்விழி said...

நண்பர் வருணுக்கு என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

தீபாவளி வாழ்த்துக்கள் வருண்!வாழ்த்துக்கள் கயல்விழி!

வருண் said...

லதானந்த், கயல், ராமலக்ஷ்மி, admin &சண்முகம்!

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! :)