Friday, August 17, 2012

கிருஷ்ணனை அழச்சுண்டு வந்து ஒப்பாரிவைக்கும் ஓசை!

என்னவோ ஓசைனு வலைதளம் வச்சு நடத்துற இவரு யாருனு தெரியலை! பாவம் இவரை தி க காரங்க ரொம்பத்தான் பதபதைக்க வச்சுப்புட்டாங்க போலயிருக்கு, படுபாவிகள்! சரி, ரொம்பவும் தி க காரர்கள் அடாவடித்தனத்தால் பாதிக்கப்பட்டு புலம்பும் இவரு என்னதான் சொல்ல வர்ராரு, இவருக்கு நியாயம் எதுனு தெரியுதானு கவனமாகப் பார்ப்போம்!

---------------------------------------------------
வெண்ணை திருடியவனும் தேனை நக்கியவனும்..

///* கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தின தினம், பகுத்தறிவு ஏடு விடுதலை - குழந்தைகள் கிருஷ்ணனை போல  வேடமிட்டிருந்த படத்தை போட்டு, "சென்னையில் ஒரு பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி கிருஷ்ணன் - ராதை வேடம் அணிந்து ஊர்வலமாம்! அட மோசக்காரர்களே! சிறுவயதில் வெண்ணெய்யைத்  திருடி, வாலிப வயதில் பெண்ணைத் திருடும் கயவன் கிருஷ்ணன். அவனைப்போல பள்ளிப் பிள்ளைகளும் கேடு கெட்டுப் போக வேண்டுமா? இதற்கா பள்ளிக் கூடங்களுக்குப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைப்பது?

ஒழுக்கக் கேடு விளைவதற்கு விதை போடாதீர்கள்!" என்று சொல்லி இருந்தது. நல்ல கருத்தாக இருந்தாலும் குழந்தை பருவத்தில் விளையாட்டாய் வெண்ணெய் திருடியதை பெரிது படுத்தும் பகுத்தறிவு "ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட்டோம்" என்கிற அகந்தையில் - தங்களின் ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டும் விதமாக "தேனை எடுத்தவன் நக்காமலா இருப்பான்" என்று திருட்டு தேனை நக்கியவரை - பாதிக்கு பாதி சிந்திக்கும் மோசக்கார பகுத்தறிவு - திருட்டை செய்தவனின் பாசக்கார நட்பில் ​மறந்துவிட்டதோ?

வெண்ணெய் திருடியவனை பற்றி பேசும்போது தேனை நக்கியவரையோ அல்லது திருடியவரையோ பற்றியும் பேசி தான் ஆக வேண்டும். சரியான தீர்ப்பு வழங்க வேண்டாமா? கடவுள் அயோக்கியனே. அதை எடுத்து சொல்பவன் - எம் பார்வைக்கு நேர்மையாளனாக இருக்க வேண்டும். கடவுளை விட அவன் பெரிய பித்தலாட்டக்காரனாக இருக்கிறானே..  வெண்ணெய் திருடியவன் தெரிகிற கண்ணுக்கு, புறங்கையால் திருட்டு தேனை நக்கியவரை தெரியவில்லையா?

பகுத்தறிவு கண்ணாடி பழுது பட்டுவிட்டதா? பார்வையில் கோளாறா... அல்லது மண்டையிலேயே கோளாறா... கடவுள் செய்த அதே தப்பை பகுத்தறிவாளனும் செய்தால்...///

சரி, ஓசை, வெண்ணை திருடியதும் தப்புத்தான். புறங்கையால் திருட்டுத்தேனை நக்கியதும் தப்புத்தான்.

* ஆனால் புறங்கையால் திருட்டுத்தேனை நக்கியவர்களை சட்டத்தின் முன்னால நிறுத்தலாம்!

* பத்திரிக்கையில் போட்டு, வலைதளத்தில் எழுதி கேவலப்படுத்தலாம்.

உங்க "திருடர்" பகவான் கிருஷ்ணரை எந்தச் சட்டத்தின் முன்னால நிறுத்துறது?!!

பகவான் வெண்ணை திருடினார்னு குழந்தைகள்ட்ட சொன்னால், "அது தப்பு இல்லையா?" னு குழந்தை கேட்க்குமே! அதுக்கு என்ன  பதில் சொல்லுவீங்க?

"பகவான் செய்தால் தப்பில்லை!"  "அவரு பகவான்! பகவான் என்ன வேணாலும் செய்யலாம்!" னா??

நெஜம்மாவே யாருக்கு மண்டையில் கோளாறுனு தெரியலை எனக்கு இப்போ?!


//உண்டியலில் மக்கள் தானாக போடும் பணத்தையே தவறு என்று சொல்லும் நாத்திகம் - மக்களின் வரி பணத்தை கொள்ளையிடும் தேனை நக்கும் கழக வியாதிகளை பற்றி பேச வேண்டாமா? கண்ணனின் காம விளையாட்டுக்களை பேசுவோர் - பகுத்தறிவாளர்கள் விளையாடிய விளையாட்டுகளை பேச வேண்டாமா?//

கட்டாயம் பேசனும், பேசுங்க! என்ன பேசுறீங்கனு பார்ப்போம். 

///அண்ணாவே ஒளிவு மறைவில்லாமல் சொன்னாரே "நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல" என்று. அண்ணா "எல்லாவற்றிலும் அண்ணா" தான் போலும். பெரும்பாலான பகுத்தறிவுகள் - அந்த காலத்தில் ஸ்டெப்னி வைத்திருந்தவர்கள் தானே. அத்தகைய புள்ளிகள் தான் கண்ணனின் விளையாடல்கள் பற்றி பேசுவது. ஒரு சந்தேகம். "பகுத்தறிவால் அப்படி பேசுகிறார்களா - அல்லது பொறாமையால் பேசுகிறார்களா". பகவான் யோக்கியனா? பகுத்தறிவாளன் யோக்கியனா? என்கிற ஒரு சிறு பட்டிமன்றத்தை நமக்குள்ளாகவே நடத்தி பார்ப்போம்.///

பகவானையும், பகுத்தறிவாளனையும் பத்தி பிறமனை நோக்குகிறவனுகனு விமர்சிச்சாச்சு! இருக்கட்டும்!


 ///ஏன் எனில் கடவுள் செய்த அயோக்கியத்தனம் அனைத்தையும் - கடவுளை எதிர்த்தவனும் செய்திருக்கிறான். "பகவான் திருடினானா? இதோ பகுத்தறிவாளனும் அல்லவா திருடி இருக்கிறான்". பகவான் பல பெண்களோடு விளையாடி இருந்தானா? இதோ பகுத்தறிவு பேசிய பெரிய மனுஷன்களும் பல பெண்களாடு விளையாடி தான் இருந்து இருக்கிறார்கள். அதனால் இருவரையும் உண்மையான பகுத்தறிவு தராசு தட்டில் உட்கார வைத்து "எவன் உயர்ந்தவன் (குணத்தால்)" என்றோ, "எவன் தாழ்ந்தவன் (பொறுக்கித்தனத்தால்)" என்றோ பார்த்து விடுவோம்.//

* ஆக பகவானும் அயோக்கியன்! பகுத்தறிவாளனும் அயோக்கியன்!  
* சரி, உங்கள மாதிரி பகவானுக்கு வக்காலத்து வாங்கும் ஆத்திகர்கள் எல்லாரும்  பத்தினிகளும், ஏக பத்தினி விரதர்களும்னு சொல்றீங்களா? 

* இல்லைனா அவனுகளும் "பிறமனை நோக்கும்" அயோக்கினுக தானா?

விபரம் சொல்லவும்!


//ஏன் எனில் தராசையே ஒழுங்காக பிடிக்க தெரியாத இன்றைய பகுத்தறிவால் - எடை மட்டும் சரியாக போட வருமா என்ன? //

உங்களுக்கும் தராசு ஒழுங்கா பிடிக்கத் தெரியிறமாதிரி தெரியலையே!  உங்களை மொதல்ல பரிசோதிக்கனும்- தராசு பிடிக்கத் தெரியுதான்னு..

எடுங்க தராசை!

எடுத்தாச்சா?

பிடிங்க!

தொடருங்க!

 ///அதோடு முன்னுதாரணமாக கொள்ள தகுதியானவன் "பகவானா... பகுத்தறிவாளனா..." என்றும் பார்ப்போம்.

பள்ளி ஆண்டு விழா மேடையில் சில குழந்தைகள் கடவுள் வேடமிட்டும், சில குழந்தைகள் பகுத்தறிவு தலைவர்கள் வேடமிட்டும் நிற்கிறது. பார்வையாளர்கள் பகுதியில் ஆத்திக பெற்றோர்களும், நாத்திக பெற்றோர்களும் அமர்ந்திருக்கிறார்கள்.???

நல்லது

///நாத்திக பெற்றோரில் ஒருவர், "வெண்ணெய் திருடியவனின் வேடமிட்டு இருக்கு அந்த குழந்தை" என்று கூற, பதிலுக்கு பக்கத்தில் இருந்த இன்னொரு குழந்தையின் பெற்றோர், "அதோ அந்த குழந்தை தேனை திருடி நக்கியவரின் வேஷம் போட்டு இருக்கு" என்று சொல்கிறார்.

மேடையில் தீராத விளையாட்டு பிள்ளை வேடமிட்டிருந்த ஒரு குழந்தையை பார்த்து, ஒரு பகுத்தறிவு பெற்றோர் "ஈவ் டீசிங் பண்றவனை உள்ள தூக்கி போடணும்" என்றதும், ஒரு ஆத்திக தகப்பன் - தாடி வைத்து  பெரியவர் போல வேடமிட்டிருந்த சிறுவனை பார்த்து, "கேலி பண்ணினதுக்கே ஈவ் டீசிங்கன்னா காலம் போன கடைசில கொள்ளுப்பேத்தி வயசுல பெண்ணை மணந்தது ஆயிரம் பலாத்காரத்துக்கு சமம். இவரை என்ன பண்ணலாம்" என்று கூறுகிறார் . அதை கேட்டு கடுப்படையும் ஒரு தந்தை - வில்லும் அம்புமாக உள்ள ஒரு சிறுவனை காட்டி, "மறைஞ்சிருந்து வாலியை கொன்றவன். ஆனால் கடவுளாம். கொடுமைடா. " என்று கூற, இன்னொரு தந்தை -ரத்தக்கண்ணீர் நாயகனை போல வேடமிட்டிருக்கும் சிறுவனை பார்த்து,

"கொடுத்து கொடுத்து சிவந்த கரம் கொண்ட, எங்கள் பொன்மனச்செம்மலை - புண்மனச்செம்மலாக்கி சிவந்த கரங்களை ரத்த சிவப்பாக, சின்னாபின்னப் படுத்தி சுட்டது அவன் தான். கொலையும் செய்வானா பகுத்தறிவாளன். என்ன கொடுமைடா" என்று கேட்க - ஆத்திகமும், நாத்திகமும் ஒன்றை ஒன்று முறைக்க - குழந்தைகள் மேடையில் ஆடுவதையும், பெற்றோர் கீழே பேசி கொள்வதையும் பார்க்கும் ஆண்டு விழா ஒருங்கிணைப்பாளர்///

என்ன கற்பனையோ என்ன எழவோ இது!!!

ஆனா ஒண்ணு நான் சொல்லியே ஆகனும். 
உமக்கு தராசு  ஒழுங்கப் பிடிக்கத் தெரிலைனு நல்லாத் தெரியுது!  

இந்திய சட்டத்தின் படி ஒரு பெண் "மேஜர்" ஆக இருந்தால், அவளா விரும்பி "தாத்தா" வையும் மணக்கலாம். அதுதான் சட்டம்! நம்ம ஆத்திகர்கள் ஜெமினி கணேசன், ராஜேஷ் கண்ணா இவங்களாம்கூட அப்படி இப்படி செஞ்சாங்களே?

* வயது வித்தியாசத்தில் திருமணம் செய்வதை ஆயிரம் பலாத்காரத்துக்கு சமம்னு பச்சைப் பொய் சொன்ன உங்களை உள்ள தூக்கிப் போடனும்!

* அப்புறம் அது ஏன் எம் சி யாரு ஏதோ ஏகபத்தினி விரதர், அப்பாவிங்கிற மாரி ஒரு ஒப்பாரி? நீங்க தராசு பிடிக்கிற லட்சணத்துல ஆத்திகன் எல்லாம் ஏகபத்தினி விரதனாயிடுவானுகளே?  அதனாலதானோ? :)

 ///"வாயை மூடுங்கய்யா முட்டா பசங்களா. தெரிஞ்சு போச்சு ரெண்டு பேரின் லட்சணங்களும். நிச்சயம் அடுத்த வருஷம் ஆண்டு விழாவுக்கு பூனை, கிளி ன்னோ இல்ல மிக்கிமௌஸ், டாம் அன் ஜெரி மாதிரி வேஷங்கள் போட்டு குழந்தைகளை மேடை ஏற்றுவேனே ஒழிய - இனி கடவுள் வேஷமும் வேண்டாம். எந்த பெரிய மனுஷனின் வேஷமும் வேணாம். குழந்தைகள் மாறு வேஷமிட்டு பெருமை படுத்துற அளவுக்கு யாருக்கும் தகுதி இல்லை.  குழந்தைகளை நாங்க ஒழுங்கா வளர்க்கணும்" என்றார். அவர் தொல்வதில் இருநூறு சத உண்மைகள் இருந்தது.//

அடுத்தவருடம் கடவுளையும் பகுத்தறிவாளனையும் தூக்கி எறிந்துவிட்டு, ஆத்திகர் உங்களுடைய  வேஷம் போடச் சொல்லலாம்!

நீங்க எப்படி?  

நல்ல ரோல் மாடல்தானே? :)))

-------------------------------

ஆமா எதுக்கு இந்த பட்டிமன்றம் என்கிற பேரில் நடத்துற இந்த ஒப்பாரியெல்லாம்?

உங்க திருட்டு பகவானை, பொம்பள பொறுக்கினு   தி க காரனுக கேவலப்படுத்திப்புட்டானுகளேனு ரொம்ப கோபமாகி இப்படி ஒப்பாரி வைக்கிறீங்களாக்கும்?

பகுத்தறிவாளன் அயோக்கியன்னு சொல்வதால், பகவான் செஞ்ச அயோக்கியத்தனம் எல்லாம் சரியாகிவிடாது! அது ஏன் உங்களுக்கு புரியமாட்டேன்கிது?

அப்புறம் உங்கள மாரி ஆத்திகர்கள் மட்டும்தான்  யோக்கியர்கள் என்பதுபோல் அவர்களை மட்டும் விட்டு விட்டு பகுத்தறிவாளன்னு சொல்றவனுக செய்ற அயோக்கியத்தனத்தை மட்டும் பேசுவது நீங்க செய்ற பச்சை அயோக்கியத்தனம்!

உங்க மேலே தப்பில்லை! உங்க பதிவை நான் வாசிக்க வந்தேன் பாருங்க என்னை என்ன செய்யலாம்?

என்ன ஓசையோ என்ன எழவோ ஒரே ஒப்பாரி ஓசையாத்தான் இருக்கு!

18 comments:

Ponniyinselvan said...

super post.Brahmins will never change.Their haughtiness and superiority complex will never decrease.
karthik[ponniyinselvan]+amma

வருண் said...

வாங்க, பொன்னியின் செல்வன்!

தி க காரர்கள் பகவான் கிருஷ்ணரை அவரு லீலைகளை எல்லாம் சொல்லி கேலி செய்றாங்கனு, இவரு பகுத்தறிவாதிகள் எவனும் யோக்கியர்கள் இல்லைனு "பட்டி மன்றம்" நடத்திச் சொல்றாராம்!

எப்படியோ சுத்தி வளைச்சு பகவான் அயோக்கியன்னு ஒத்துக்கிட்டாரு!!! இவரோட நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு:-)))

Jayadev Das said...

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தவறாக விமர்சனம் செய்திருந்தால், தத்துவ ரீதியான காரணங்களைச் சொல்லி, அவர்கள் விமர்சனத்தில் என்ன தவறு என்று காட்டியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீயும் செய்தாய், பகவானும் செய்தார் என்று கோடான கோடி சனம் கும்பிடும் சாமியை ஓட்டு பொறுக்கீங்களுக்கு சமமா வச்சு கேவல படுத்திபுட்டாய்ங்க .....:(( இவரு டேமேஜ் பண்ணியது தி.க. வையோ அல்லது அதிலிருந்து வந்த கட்சி ஆரம்பித்த ஓட்டு பொறுக்கீங்களையோ அல்ல, மக்கள் வழிபடும் தெய்வத்தைத்தான். பகவான் வெண்ணெய் திருடியதால் அந்த குடும்பம் வறுமையில் வாடி சோத்துக்கு வழி இல்லாமல் தவித்ததாக எங்கேயாவது இவர்கள் படித்திருக்கிறார்களா? தினமும் வெண்ணை திருட வரும் கண்ணன் ஒரு நாள் வராவிட்டாலும் இன்றைக்கு வரவில்லையே என்று ஆயர்குல மக்கள் தவிப்பார்களே, அதெப்படி? அல்லது பகவான் பெண்களுடன் நடமாடியதால் அவர்கள் கர்ப்பமாகி கருக்கலைப்பு நடந்ததாகத்தான் ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? கட்டைப் பிரமாச்சரியான பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும்போது, நான் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடை பிடித்திருந்தாலும் என்னை விடவும் சிறந்த கட்டுப் பாடுடையவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, ஏனெனில் ஆயிரம் பெண்கள் மத்தியில் இருந்த போதிலும் அவர் சஞ்சலமடையாமல் இருந்தார், என்னால் அவ்வாறு இருந்திருக்க மடியாது என்று சான்று வழங்கியது எப்படி?
இறைவனின் லீலைகளைப் படிக்கும் போது மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் விலகியோடி மனம் சுத்தமாகிறதே அதெப்படி?

Jayadev Das said...

\\இந்திய சட்டத்தின் படி ஒரு பெண் "மேஜர்" ஆக இருந்தால், அவளா விரும்பி "தாத்தா" வையும் மணக்கலாம். \\ சிலர் மூணு கல்யாணம் செய்து, முப்பது குட்டிகளை பண்ணி மாதிரி பெத்து போட்டு, அதுங்களுக்கு தமிழ் நாட்டையே அடிச்சு காவு வாங்கிகிட்டு இருக்காங்களே, அதுக்கு பரிகாரம் இருக்கா? மூணு பெண்டாட்டி கட்டியது சட்டப் படி சரியா, தப்பு என்றால் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?

Robin said...

ஓசை என்ற பெயரில் எழுதும் பார்ப்பனர் முன்பு திருச்சிக்காரன் என்ற பெயரில் எழுதியவர். பொது நியாயம் பேசுவதுபோல எழுதி கடைசியில் பார்ப்பனீயத்துக்கு வக்காலத்து வாங்குவார். இவர் தி.க, தி.மு.கவை எதிர்ப்பது அவர்கள் ஊழல்வாதிகள் என்பதால் அல்ல, அவர்கள் பார்ப்பனீயத்தை எதிர்த்தார்கள் என்பதால் மட்டுமே.

வருண் said...

***Jayadev Das said...

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தவறாக விமர்சனம் செய்திருந்தால், தத்துவ ரீதியான காரணங்களைச் சொல்லி, அவர்கள் விமர்சனத்தில் என்ன தவறு என்று காட்டியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீயும் செய்தாய், பகவானும் செய்தார் என்று கோடான கோடி சனம் கும்பிடும் சாமியை ஓட்டு பொறுக்கீங்களுக்கு சமமா வச்சு கேவல படுத்திபுட்டாய்ங்க .....:((***

உங்களுக்கு இதுபோல் கூறுகெட்ட பார்ப்பான் பத்தி பரிச்சயம் இல்ல போல இருக்கு! பார்ப்பான் யோக்கியன்னு சொல்ல பகவானையும் கேவலப்படுத்தும் சுயநலம்பிடிச்ச கூமுட்டைகள் இவர்கள்!

வருண் said...

***Jayadev Das said...

\\இந்திய சட்டத்தின் படி ஒரு பெண் "மேஜர்" ஆக இருந்தால், அவளா விரும்பி "தாத்தா" வையும் மணக்கலாம். \\ சிலர் மூணு கல்யாணம் செய்து, முப்பது குட்டிகளை பண்ணி மாதிரி பெத்து போட்டு, அதுங்களுக்கு தமிழ் நாட்டையே அடிச்சு காவு வாங்கிகிட்டு இருக்காங்களே, அதுக்கு பரிகாரம் இருக்கா? மூணு பெண்டாட்டி கட்டியது சட்டப் படி சரியா, தப்பு என்றால் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?

17 August 2012 11:10 PM***

இதுபத்தி நான் ரொம்பவே யோசிப்பதுண்டு. உண்மை என்னனா, ஒரு மனைவிதான் சட்டப்பட் மணக்கப்பட்டு அரசாங்க "பேப்பர்"ல இருப்பாங்க.

பின்னால வர்றவங்க எல்லாம் இவ்ங்க "கேர்ல் ஃப்ரெண்ட்" என்பதுபோல்தான்.

அவங்களுக்கு பிறக்கும் குழந்தையை மகள்/மகன் னு சொல்லிக்கலாம்.

முதல் மனைவிதான் "கேர்ல் ஃப்ரெண்ட்" வைத்திருப்பது தப்புனு இதைப் பத்தி பிரச்சினையை கிளப்ப முடியும். அவங்க ஒண்ணும் சொல்லலைனா, சட்டம் ஒண்ணும் செய்யாது.

Jayadev Das said...

ROFL......... :)))

வருண் said...

***Robin said...

ஓசை என்ற பெயரில் எழுதும் பார்ப்பனர் முன்பு திருச்சிக்காரன் என்ற பெயரில் எழுதியவர். பொது நியாயம் பேசுவதுபோல எழுதி கடைசியில் பார்ப்பனீயத்துக்கு வக்காலத்து வாங்குவார். இவர் தி.க, தி.மு.கவை எதிர்ப்பது அவர்கள் ஊழல்வாதிகள் என்பதால் அல்ல, அவர்கள் பார்ப்பனீயத்தை எதிர்த்தார்கள் என்பதால் மட்டுமே.

18 August 2012 4:15 AM***

ரொம்ப சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க, ராபின்! பார்ப்பானுக்கு வக்காலத்து வாங்குறேன்னு இந்தாளு செய்ற கூத்து கூறுகெட்டதனமா ஒரே ஒளறலாயிருக்கு.

வருண் said...

***Jayadev Das said...

ROFL......... :)))

18 August 2012 4:39 AM***

நெஜம்மாவே உண்மை அதாங்க. நெறையா நடிகர் நடிகைகள் எல்லாம் உலகத்துக்குத்தான் கணவன் - மனைவி! அரசாங்க டாக்குமெண்ட்ஸ் பார்த்தீங்கன்னா ஒரு மண்ணும் இருக்காது. நம்மாளு அதையெல்லாம் பார்த்து கண்ஃபர்ம் பண்ணியா கணவன் - மனைவினு சொல்றான்னு நெனச்சீங்க?

Jayadev Das said...

பாதிக்கப் பட்டவர் புகார் தெரிக்காதவரை ஒருத்தன் சட்டப் படி குற்றமற்றவனா? அப்போ, நிறைய கொலைகள். ரெப்புகள் செய்துவிட்டு மேடை போட்டு கூட நான் இதெல்லாம் செஞ்சேன் என்று கூட சொல்லலாம் யாரும் கேட்கமாட்டார்களா? ஏனெனில் இவரோட பெண்டாட்டிகள் யாரு, அதுங்க போட்ட குட்டிகள் யாரு, அவங்க செஞ்ச ஊழல்கள் எத்தனை, அப்புறம் அதுங்களுக்கு பொறந்த பேரனுங்க எவன் எங்க படம் தயாரிச்சுகிட்டு இருக்கான்/நடிச்சுக்கிட்டு இருக்கான்னு தினமும் டி.வி யில காட்டுறானே?

வருண் said...

***Jayadev Das said...

பாதிக்கப் பட்டவர் புகார் தெரிக்காதவரை ஒருத்தன் சட்டப் படி குற்றமற்றவனா? அப்போ, நிறைய கொலைகள். ரெப்புகள் செய்துவிட்டு மேடை போட்டு கூட நான் இதெல்லாம் செஞ்சேன் என்று கூட சொல்லலாம் யாரும் கேட்கமாட்டார்களா?***

கற்பழிப்பு வந்து பலவந்தப் படுத்துவதுங்க. ரெண்டு பேரு புரிந்துகொண்டு உடலுறவு வச்சிகிறது பலவந்தம் இல்லை. அதில் பாதிக்கப் படுபவர்தான் அதை கேக்கமுடியும்.


***ஏனெனில் இவரோட பெண்டாட்டிகள் யாரு, அதுங்க போட்ட குட்டிகள் யாரு, அவங்க செஞ்ச ஊழல்கள் எத்தனை, அப்புறம் அதுங்களுக்கு பொறந்த பேரனுங்க எவன் எங்க படம் தயாரிச்சுகிட்டு இருக்கான்/நடிச்சுக்கிட்டு இருக்கான்னு தினமும் டி.வி யில காட்டுறானே?***

இப்போதைக்கு உண்மையான மனைவி, தயாளம்மாதான். அவருக்கு முந்திய மூத்த மனைவி இறந்துவிட்டார்.

வருண் said...

ஒண்ணு கவனிங்க, இதுபோல் உதாரணங்கள், என்னைப்போல் பகுத்தறிவு பேசும் கூட்டத்தைத்தான் ரொம்பவே பாதிக்குது. இதை சரி என்றெல்லாம் சொல்லுமளவுக்கு நான் "ஓசை" அல்ல!

Jayadev Das said...

\\கற்பழிப்பு வந்து பலவந்தப் படுத்துவதுங்க. ரெண்டு பேரு புரிந்துகொண்டு உடலுறவு வச்சிகிறது பலவந்தம் இல்லை. அதில் பாதிக்கப் படுபவர்தான் அதை கேக்கமுடியும்.\\ நான் அதைச் சொல்லவில்லை . ஒருத்தன் நாலஞ்சு பேரை நாசம் பணித்தான் . அவங்க கம்பிளைன்ட் குடுக்கவில்லை, ஆனால் அவன் டி.வியில வந்து இதெல்லாம் நான் செய்தேன் என்றால் அவன் குற்றவாளியாக மாட்டானா?

\\இப்போதைக்கு உண்மையான மனைவி, தயாளம்மாதான். அவருக்கு முந்திய மூத்த மனைவி இறந்துவிட்டார்.\\ அதுதான் இல்லை. முதலில் தாலி கட்டியவர் மட்டும் தான் இன்னமும் சட்டப் படி மனைவி, ஒரு வேலை செத்தப்புறம், இன்னொரு பெண்டாட்டி கட்டினா என்னவாகுமோ தெரியலை, அவர் இருக்கும்போதே திருட்டு தாலி கட்டி பெண் by default அடுத்த மனைவியா promote ஆக மாட்டார்.

thequickfox said...

ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியில் ஒரு kafir பகுத்தறிவாளரான ஓசையிடமே அரபுகளிடம் கூலிக்கு பணி செய்யும் உனது புத்தியை காட்டி விட்டாய்.
யாராவது கொடுமைகார அரபியனை இங்கு அழைத்து வந்து தமது பிரதேசத்தில் ஒப்பாரிவைத்தார்களா?

வருண் said...

***thequickfox said...

ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியில் ஒரு kafir பகுத்தறிவாளரான ஓசையிடமே அரபுகளிடம் கூலிக்கு பணி செய்யும் உனது புத்தியை காட்டி விட்டாய்.
யாராவது கொடுமைகார அரபியனை இங்கு அழைத்து வந்து தமது பிரதேசத்தில் ஒப்பாரிவைத்தார்களா?****

வழக்கம்போல காபிர், அரபுனு எதையாவது ஒளறு. ஆட்டைக் கடிச்சி, மாட்டைக் கடிச்சி, இப்போ நரியைக் கடிக்கப்போறேன். :)))

வருண் said...

***Jayadev Das said...

\\கற்பழிப்பு வந்து பலவந்தப் படுத்துவதுங்க. ரெண்டு பேரு புரிந்துகொண்டு உடலுறவு வச்சிகிறது பலவந்தம் இல்லை. அதில் பாதிக்கப் படுபவர்தான் அதை கேக்கமுடியும்.\\ நான் அதைச் சொல்லவில்லை . ஒருத்தன் நாலஞ்சு பேரை நாசம் பணித்தான் . அவங்க கம்பிளைன்ட் குடுக்கவில்லை, ஆனால் அவன் டி.வியில வந்து இதெல்லாம் நான் செய்தேன் என்றால் அவன் குற்றவாளியாக மாட்டானா?***

நல்ல கேள்வி. இதுக்கு பதில் என்னனு தெரியலைங்க!

வருண் said...


***\\இப்போதைக்கு உண்மையான மனைவி, தயாளம்மாதான். அவருக்கு முந்திய மூத்த மனைவி இறந்துவிட்டார்.\\ அதுதான் இல்லை. முதலில் தாலி கட்டியவர் மட்டும் தான் இன்னமும் சட்டப் படி மனைவி, ஒரு வேலை செத்தப்புறம், இன்னொரு பெண்டாட்டி கட்டினா என்னவாகுமோ தெரியலை, அவர் இருக்கும்போதே திருட்டு தாலி கட்டி பெண் by default அடுத்த மனைவியா promote ஆக மாட்டார். ***

எனக்கு தெரியவில்லைங்க. ஆனால் சட்டப்படி ஒரு மனைவிதான் வச்சுக்கலாம். மத்தவங்கள "துனைவியார்"னு வேணா சொல்லலாம். :)