ஆனால் பதிவர்கள் காமெண்ட் மாடெரேசன் செய்து வெளியிடுவது தப்புனு நான் ஒரு போதும் சொல்ல மாட்டேன்.
பல பாடங்களுக்குப் பிறகு, தேவையில்லாமல், அவமானப்படுவதை தவிர்க்க பல தரமான பதிவர்கள்தான் கமெண்ட் மாடெரேசன் செஞ்சி காமெண்ட்ஸை வெளியிடுறாங்க.
எதுக்கு பதிவெழுதி நம்மை நாமே அவமானப்படுத்திக்கனும்? தவறில்லை.
ஆனால் பதிவு விவாதம் செய்ய வேண்டிய ஒண்ணாயிருந்தால்?
அப்படியிருக்கும்போது, விவாதம் செய்ய இலகுவாக இல்லை என்ற குறைபாட்டை யாரும் இல்லைனு சொல்ல முடியாது!
நான், "ஜெயமோகனும் பிச்சைக்காரர்களும்" காரசாரமான ஒரு பதிவு போட்டேன். நான் கடவுள் படத்தில் பிச்சைக்காரர்கள் வாழ்க்கையை ரசித்து ரசித்து எடுத்து, அஹோரிகளை என்னவோ பெரிய இவனுகள் என்பதுபோல காட்டி..
சுத்தமாகப் பிடிக்கலை.. பிச்சைக்காரர்களே இருக்கக்கூடாதுனு நெனைக்கிறவன் நான்.
அந்தப் பதிவில் "முத்து" என்பவரிடம் இருந்து வந்த பின்னூட்டம் இது, (இதை ஏற்கனவே எழுதியிருக்கேன்)
Muthu said...
ஏதோ கடலை கார்னர் போட்டோமா, பதிவுலக பரபரப்பான விஷயத்தை பத்தி ரெண்டு மூணு பதிவு எழுதினோமா-னு இல்லாம நமக்கெதுக்குங்க ஜெயமோகன் பத்தில்லாம் ?
நான் காமெண்ட்களை மாடெரேசன் செய்து வெளியிடுவதில்லை என்பதால், யாரு இந்த "முத்து"னு கொஞ்சம் தேடிப் பார்த்தேன். நான் கண்டுபிடிச்சது அவரு யாராயிருந்தாலும், ஒரு சுமாரான "அனானிமஸ்" ப்ளாகர்.
சரி நம்மள இப்படி விமர்சிக்கிறாரே இவரு மட்டும் பெரிய கொம்பனா என்னனு தெரிஞ்சிக்க, "முத்து" எதுவும் "முத்து" என்கிற ஐ டியிலே உயர் தரமான பதிவு எழுதியிருக்காரா?னு போயிப் பார்த்தால், "முத்து" என்கிற பேரில் ஒண்ணுமே எழுதவில்லை!
யாருடா இது? நம்ம தளத்துக்கு வந்து, நம்ம தகுதியை இவரே எடைபோட்டு, இவரே முடிவு செய்து, ஜெயமோகனைப் பத்தி விமர்சிக்க நீ தகுதியில்லாதவன்னு இந்தாளு எப்படி என் தளத்தில் வந்து சொல்லலாம்?
ஆமா, ஏன் இப்படி வரிந்துகட்டிக்கொண்டு "ஜெயமோஹன்"க்கு வக்காலத்து?
இந்த முத்து ஒரு சாதாரண ஜெயமோஹன் ஜால்ராவா? இல்லைனா ஒருவேளை இது மாறுவேடத்தில் வந்திருக்கும் "பெரிய பிரபலமா" இருக்குமோ? என்ற கேள்விகள் என்னுள் எழாமல் இல்லை!
இப்படியெல்லாம் யோசிச்சு பார்த்துப்புட்டு, யாராயிருந்தால் என்ன?
" உனக்கு செயமோஹன் பெரிய ஆள்னா அவர் தளத்தில் போயி அவருக்கு ஆராதணை செஞ்சுக்கோ! நான் யாருடைய படைப்பையும் எப்படி வேணா என் தளத்தில் விமர்சிப்பேன்" னு சண்டை ஆரம்பிச்சு, ரெண்டு பேரும் கட்டிக்கிட்டு உருண்டோம் (ஒரு 30 பின்னூட்டங்கள்).
இப்போது அந்த பின்னூட்டங்கள் எல்லாம் இன்னும் வெளிக்காட்டாமல் மறைந்து இருக்கு.
அப்புறம் கொஞ்ச நாளானதுக்கு அப்புறம்.. இந்த எண்ணத்தை சரி என்பதுபோல, கலகலப்ரியா தளத்தில், கலகலப்ரியா ஜெயமோஹனை விமர்சனம் செய்தபோது (அங்கே காமெண்ட் மாடெரேசன் உண்டு!, அதனால இஷ்டத்துக்கு எழுத முடியாது),
இதே முத்து ஜெயமோஹன் விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவர் என்பதுபோல தொடர்ந்து வாதாடினார், .. கலகலப் ப்ரியா தளத்திலிருந்து சில பின்னூட்டங்கள்..
////Muthu said... அரவிந்தன் கன்னையன் என்பவருக்கு (அவருடையதை நேர்மையான விமர்சனம் என்று வேறு சொல்கிறீர்கள் பாருங்கள் ... அடடா ....) அளித்த பெரும் விளக்கக் கட்டுரையிலேயே உங்களது கேள்விகள் பெரும்பாலானவற்றுக்கு தெளிவான பதில் இருக்கிறது. அதை படித்த பிறகும் இப்படி ஒரு பதிவா என்று சற்று வியப்பாகவே இருக்கிறது.
அன்புடன் முத்துக்குமார்//// -------------------
///சமூகம் ஏற்றுக்கொண்டபடியே ஒரு உறவுக்கான ஒப்பந்தம் புரிந்து அந்த உறவை (பாலியல் சார்ந்த என்பது முக்கியமானது) வெளிப்படையாக பேணிகொண்டிருக்கும்போதே சமூகம் ஏற்றுக்கொள்ளாத - ரகசியமான - ஏற்கனவேயான ஒப்பந்தத்திற்கெதிராக கொள்ளும் ஒரு உறவை (இதுவும் பாலியல் சார்ந்த என்பது வெளிப்படை) கள்ள உறவென்று அழைக்காமல் வேறெப்படி அழைப்பது ? உமது உடமையை உமக்குத்தெரியாமல் அபகரிப்பதை கள்ளம் / திருட்டு என்ற வார்த்தைகளில்தானே அழைப்பீர்கள் ? உங்கள் அகராதியில் இல்லை - உங்களுக்கு உவப்பாக இல்லை என்பதற்காக அந்த வார்த்தையை நீக்கி விட முடியுமா என்ன ? அந்த கள்ள உறவு விவகாரத்தை ஏன் குறிப்பிட நேர்ந்தது என்பதற்கும் முன் சொன்ன கட்டுரையிலேயே விளக்கம் உள்ளது. அயன் ராண்ட்-ஐ மட்டம் தட்டவோ கீழ்மைப்படுத்தவோ அல்ல என்பது முக்கியமாக குறிப்பிடப்படவேண்டியது. கள்ள உறவு என்ற பதம் உங்களுக்கு அசூயையை ஏற்படுத்தினால் நேர்மையற்ற உறவு, நெறியற்ற உறவு, முறையற்ற உறவு என்றெல்லாம் கூட பாலிஷாக சொல்லிக்கொள்ளலாம். விஷயம் என்னவோ ஒன்றுதான்.
அன்புடன் முத்துக்குமார்////
----------------------
இந்த முத்து யாரு என்பது இங்கே முக்கியமல்ல! ஒருவேளை என் பதிவில் நான் கமண்ட் மாடெரேசன் வச்சிருந்தால் இந்தத் தொல்லையே வந்திருக்காது என்பதை கருத்தில் கொள்ளனும்.
நான் பின்னூட்டங்களை மாடெரேசன் செய்து வெளியிட்டு இருந்தால் கப்பு சிப்புனு இந்த முத்து என்கிற மேதாவியுடைய பின்னூட்டத்தை டெலீட் செஞ்சுட்டு ரொம்ப நல்லவனாவே இருந்து இருக்கலாம். அதுக்கப்புறம் முத்து எங்கேயாவது போயி முட்டிக்க வேண்டியதுதான். இல்லைனா, அவர் "தளத்தில்" என் பதிவையும் என்னையும் விமர்சிக்கலாம்! அந்த உரிமை அவருக்கு நிச்சயம் உண்டு!
அதனால காமெண்ட் மாடெரேசன் செய்றவங்க எல்லாம் செய்றது தப்பு , ஜால்ரா பின்னூட்டங்கள்தான் வெளியிடுறாங்க என்பதுபோல் வாதம் செய்வதும் ஒரு தவறான ஒரு புரிதல்தான்.
15 comments:
முத்து யாரோ இருக்கட்டும், யாரு வருண் இந்த ஜெயமோகன், உங்களை ரொம்ப டார்ச்சர் பண்றாரே??
என்னங்க, ஜெயவேல், ஜெயமோஹன் தெரியாமல் இருக்கீங்க? :-)))
அவரு, அவரைத் தெரியாதுனு சொல்றதையே பெரிய அவமானமா எடுத்துக்குவாருங்க, அம்புட்டுப் பெரிய ஆளு!!! :)))
//அவரு, அவரைத் தெரியாதுனு சொல்றதையே பெரிய அவமானமா எடுத்துக்குவாருங்க, அம்புட்டுப் பெரிய ஆளு!!! :)))//
:-)
முத்து ஜெயமோகனுக்கு உறவாகவே இருக்கட்டும்... ஜால்ரா அடிப்பவர்கள் எல்லாம் கீழ விழுந்து கிடக்க வேண்டியதுதான் என்பதை புரிந்து பேச வரட்டும்,
***சுவனப் பிரியன் said...
//அவரு, அவரைத் தெரியாதுனு சொல்றதையே பெரிய அவமானமா எடுத்துக்குவாருங்க, அம்புட்டுப் பெரிய ஆளு!!! :)))//
:-)
15 August 2012 9:08 AM***
வாங்க, சுவனப் பிரியன்! :-)
***சே. குமார் said...
முத்து ஜெயமோகனுக்கு உறவாகவே இருக்கட்டும்... ஜால்ரா அடிப்பவர்கள் எல்லாம் கீழ விழுந்து கிடக்க வேண்டியதுதான் என்பதை புரிந்து பேச வரட்டும்,
15 August 2012 10:35 AM***
பின்னூட்ட சுதந்திரம் கொடுப்பது, பதிவில் உள்ள தவறைச் சுட்டிக்காட்ட! பதிவில் சொன்ன விசயம் சரியல்ல என்று விமர்சிக்க. அதையெல்லாம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளனும்.
அதை விட்டுப்புட்டு, "உன் தகுதி இதுதான், நீ ஜெயமோகன் பத்தி பேச தகுதியில்லாதவன்" னு சொன்னால், அது என்ன ஒரு திமிரு!!
சரி, நான் அடாவடியா எழுதியிருக்கேன்னு வச்சுக்கிட்டா, கலகலப் ப்ரியாவின் ஜெயமோஹன் விமர்சன்ப் பதிவில் ஒவ்வொரு வரியையும் தாந்தான் ஜெயமோஹன் என்பது போல விளக்குறாரு!!!
சரி, எனக்குத் தகுதியில்லை, உன் தகுதியை உன் எழுத்தில் பார்க்க ஆவாலாயிருக்கு, எழுது பார்க்கலாம்னு சொன்னா, அவர் வலைதளம் ஆரம்பிச்சு அப்படியே நிக்கிது!
இவரால நாலு வரி இவரு வலைதளத்தில் எழுத முடியலை,
http://karaiveli.blogspot.com/
அப்புறம் எதுக்கு ஊர்ல உள்ளவன் தகுதியப் பத்தி எல்லாம் பத்தி பேசுற??
கொஞ்சநாள் முந்தி ஆய்வுக் கட்டுரை என்ற பெயரில் ஒரு முனைவர் ஒரு இடத்தைப்பற்றி எழுதி இருந்ததை வாசிக்க நேர்ந்தது.
சில பல தகவல்கள் சரி இல்லை. ஏன்னா அது நான் 6 வருசமா குப்பை கொட்டிய இடம்.
இதை அப்படியே சொல்லாம ஒரு சுட்டி மட்டும் கொடுத்து மேலதிகத்தகவல்கள் இங்கே இருக்குன்னு பின்னூட்டம் அனுப்பினேன்.
மனுசர் கப்சுப் ன்னு இருந்துட்டார். வெளியிட்டால்.... வம்புன்னு நினைச்சுருப்பார்.
இதிலிருந்து எனக்கொரு படிப்பினை(யும்) கிடைச்சுருச்சு!
***துளசி கோபால் said...
கொஞ்சநாள் முந்தி ஆய்வுக் கட்டுரை என்ற பெயரில் ஒரு முனைவர் ஒரு இடத்தைப்பற்றி எழுதி இருந்ததை வாசிக்க நேர்ந்தது.
சில பல தகவல்கள் சரி இல்லை. ஏன்னா அது நான் 6 வருசமா குப்பை கொட்டிய இடம்.
இதை அப்படியே சொல்லாம ஒரு சுட்டி மட்டும் கொடுத்து மேலதிகத்தகவல்கள் இங்கே இருக்குன்னு பின்னூட்டம் அனுப்பினேன்.
மனுசர் கப்சுப் ன்னு இருந்துட்டார். வெளியிட்டால்.... வம்புன்னு நினைச்சுருப்பார். ***
தெரியலை டீச்சர், உண்மையை எத்தனை நாளைக்கு மறைக்க முடியும்? நீங்க கொடுத்த தொடுப்பை வெளியிட்டு, "என்னை சரி செய்ததற்கு நன்றி"னு அவர் சொல்லியிருக்கலாம்னுதான் எனக்கு தோணுது. :-)
நன்றி எல்லாம் சொல்ல வேணாம்.
வெளியிட்டு இருந்தால் சரியான தகவல்கள் அவருடைய வாசகர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும்தானே?
கொஞ்சம் அடி மடில கை வைக்கற சமாசாரம்தான். பொது இடம்னு வந்துட்டா நாலு பேர் நாலு விதமா சொல்லத்தான் செய்வாங்க. இருந்தாலும் நம்மளுக்கும் ஒரு பாதுகாப்பு கவசம் வேணுமில்லையா? அதுதான் கமென்ட் மாடரேஷன்.
அது இருப்பது தேவைதான் என்று நினைக்கிறேன். ஆனா, இந்த வேர்டு வெரிபிகேஷன் வச்சிருக்காங்களே, அதுதான் கொடுமையிலும் கொடுமை.
****துளசி கோபால் said...
நன்றி எல்லாம் சொல்ல வேணாம்.
வெளியிட்டு இருந்தால் சரியான தகவல்கள் அவருடைய வாசகர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும்தானே?
15 August 2012 3:58 PM ****
சரியான தகவல்கள் மட்டும்தான் வாசகர்களுக்குப் போய் சேரனும் டீச்சர். நாகரிகமாக எடுத்துச் சொன்ன உங்க பின்னூட்டத்தையே வெளியிடலைனா, அவரை நெனச்சு பரிதாபப்படவேண்டியதுதான்.
நேரிடையாகக் கேட்டால் அந்த "பின்னூட்டம் வரலையே", "ஏதோ க்ளிட்ச்சா இருக்கலாம்" னு கதைகூட விடுவாங்க ஒரு சில "பெரிய மனிதர்கள்".
என்னைக் கேட்டால் பின்னூட்டத்தை வெளியிட்டுவிட்டால் அதோட அந்தப் பிரச்சினை முடிஞ்சது. அப்படி செய்யாதனால அவர் மனசாட்சிக்கு அவர் பதில் சொல்லனும். எப்படி பதில் சொல்லுவார்னு தெரியலை.
"Honesty is the best policy"னு சிறுவயதிலேயே கற்று இருக்கனும். இனிமேல் எங்கே அவர் கற்று... என்னவோ போங்க, All kind of people to make the world!
***பழனி.கந்தசாமி said...
கொஞ்சம் அடி மடில கை வைக்கற சமாசாரம்தான். பொது இடம்னு வந்துட்டா நாலு பேர் நாலு விதமா சொல்லத்தான் செய்வாங்க. இருந்தாலும் நம்மளுக்கும் ஒரு பாதுகாப்பு கவசம் வேணுமில்லையா? அதுதான் கமென்ட் மாடரேஷன்.
அது இருப்பது தேவைதான் என்று நினைக்கிறேன். ஆனா, இந்த வேர்டு வெரிபிகேஷன் வச்சிருக்காங்களே, அதுதான் கொடுமையிலும் கொடுமை.***
வாங்க, சார்! ஒரு சில அனுபவமில்லாத பதிவர்கள்தான் வேர்ட் வெரிஃபிகேசன் பெரிய உபத்திரவம்னு தெரியாமல் அதை அப்படியே விட்டுறாங்கனு நெனைக்கிறேன்.
உங்க கருத்துக்கு நன்றி சார். :)
பின்னூட்டம் என்பதே பிரச்சனை தான் சகோ. சிலர் நமக்கு அட்வைஸ் பண்ணுவாங்க, சில பேர் திட்டுவாங்க, சில பேர் ஏன் இதை எல்லாம் எழுதுற என்று மிரட்டுவாங்க.. கண்டுக்காதிங்க.. சொல்றவங்க சொல்லிட்டு போகட்டும். அவங்க சொல்ற விசயம் நல்லது என்றால் ஏற்போம் ! இல்லையா கண்டுக்காம நீங்க உங்க எழுத்தை தொடருங்கள் ... !!!
:)
***இக்பால் செல்வன் said...
பின்னூட்டம் என்பதே பிரச்சனை தான் சகோ. சிலர் நமக்கு அட்வைஸ் பண்ணுவாங்க, சில பேர் திட்டுவாங்க, சில பேர் ஏன் இதை எல்லாம் எழுதுற என்று மிரட்டுவாங்க.. கண்டுக்காதிங்க.. சொல்றவங்க சொல்லிட்டு போகட்டும். அவங்க சொல்ற விசயம் நல்லது என்றால் ஏற்போம் ! இல்லையா கண்டுக்காம நீங்க உங்க எழுத்தை தொடருங்கள் ... !!!
:)
15 August 2012 7:46 PM***
வாங்க, இக்பால் செல்வன்!
உங்க, கருத்துக்கு நன்றிங்க! :)
சரி ரெண்டு பாரும் சண்டை போடாம இங்க போய் நில்லுன்ங்க :))
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment