Thursday, August 30, 2012

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!!

நானும் அவரும் ஒரே இடத்தில்தான் வேலை செய்றோம். ரொம்ப நாளா அவரோட பேரு கூட எனக்கு சரியாத் தெரியாது. அவருக்கு வயது ஒரு 45-50 இருக்கலாம்.  தலையில் நெறையா முடியிருக்கும், பெரிய தொப்பை இருக்கும். அப்புறம் ரொம்ப நாளைக்குப் பிறகு அவர் பெயர் "ஸ்டீவ்"னு தெரிஞ்சுக்கிட்டேன்.   ஏனோ தெரியலை, "ஹால்வே"ல அவரைப் பார்க்கும்போது, அவரிடம் நான் பேசுவதுண்டு. "பேஸ் பால்" பத்தி பேச ஆரம்பிச்சுட்டா அவர்  பேசிக்கிட்டே இருப்பாரு. ஏதாவது ஆரம்பிச்சுவுட்டுட்டு அவரைப் பேச விட்டுட்டு கேட்டுக்கிட்டே இருக்கலாம். ஆமா "ஸ்டீவ்"  ஒரு "வைட் அமெரிக்கன்" தான். அவரை ஹாலில் பார்த்துவிட்டால் ஏதாவது "பேஸ் பால்" பத்தி நிச்சயம் பேச ஆரம்பிப்பேன். அவர், எனக்கு கரண்ட் அப்டேட் கொடுத்துருவாரு!

இந்தவாட்டி பேசும்போது  "ஸ்டீவ்" க்கு,  ஒரு கல்லூரியில் படிக்கும் பெண்ணும், ஹைஸ்கூல் சீனியர் படிச்சுக்கிட்டு இருக்கும் ஒரு பையனும் உண்டு என்றார். அந்த பையனை நான் பார்த்து இருக்கேன், "உங்க பொண்ணு என்ன பண்றா?' என்று கேட்டதும், "பொண்ணு  கல்லூரியில் ஃப்ரெஷ்மேன்,  "ஆக்ர்க்கிடெக்ட் படிக்கிறா" அவ "ரொம்ப ஸ்மார்ட்" நல்ல கல்லூரில படிக்கிறாள் என்றார் பெருமையுடன். "பையன் கொஞ்சம் வேற மாதிரி இருக்கான் . "கார், ஆட்டோமொபில்" ல இண்டெரெஸ்ட் ஜாஸ்தியா இருக்கு. மெக்கானிக்கா வந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு $70 சம்பாரிக்கலாம். என்ன வேலைனா என்ன? பிடிச்சு பண்ணனும்"னு சொன்னார், ஸ்டீவ்.

அடுத்து திடீர்னு  "உனக்கு என் எக்ஸ் மனைவி தெரியும்ல?" என்றார். "இல்லையே, தெரியாது"னு சொன்னேன். இங்கேதான் "பார்மக்காலஜி" டிவிஷன்ல இருக்கா இல்ல? லாரென்? தெரியாது? நீ கட்டாயம் பார்த்து  இருப்ப" என்றார்.  எனக்கு  "யாருனு தெரியலை"னு அதோட விட்டுட்டேன்.

இவரோட "எக்ஸ் வைஃப்பும்" இங்கேதான் பக்கத்திலேயே இருக்காரா!னு ஆச்சர்யத்துடனும் யோசனையுடனும்  போயி  "வெப் சைட்" ல தேடிப்பார்த்தேன்.  அவங்க படம் வந்தது. ஆமா நான் அவங்களப் பார்த்து இருக்கேன். "ஓ இவங்கதான் அவரோட "எக்ஸ்"ஸா!" னு அதிசயமா இருந்துச்சு. இந்தம்மா, லாரென்,  ஒரு மாதிரி வித்தியாசமா இருப்பாரு. யாரோடையும் ரொம்ப பேசுறமாரித் தெரியாது. ஆக, கணவர், ஸ்டீவு ம், எக்ஸ் ஃவைப் லாரெனும் பக்கதிலேயே வேலை செய்துகொண்டு இருக்காங்களா?னு அதிசயமா இருந்துச்சு.

****

இதுக்கிடையில் கெமிக்கல் எல்லாம் டெலிவர் பண்ணுறதுக்குனு "ஸ்காட்"னு ஒருத்தர் இருப்பாரு. பயங்கர குண்டா, தலையை கம்ப்ளீட்டா ஷேவ் பண்ணி இருப்பாரு நம்ம ஸ்காட்.இவருக்கும் ஸ்டீவ் வயசுதான் இருக்கும்.  சும்மா இவரோடயும் ஏதாவது ஃபுட்பால், பேஸ் பால் பத்தி பேசுவதுண்டு.

அடுத்த நாளோ என்னமோ  நான்  "ஸ்காட்"டிடம் பேசும்போது, "நம்ம ஸ்டீவோட எக்ஸ் வைஃப் இவர்தானாமில்லை?. எனக்கு இவ்ளோ நாளாத் தெரியாது. நல்லவேளை அவரே சொல்லிட்டாருனு " சொன்னேன்.
உடனே, ஸ்காட், "ஆமா, வருண், ரொம்ப கவனமாகத்தான் யாரைப்பத்தியும் பேசனும். யாருக்கு யாரு சொந்தம்னு நமக்கு தெரியாது"னு சொல்லிட்டு, You know who she ( லாரென்) is married to now?னு கேட்டாரு. "இல்லையே தெரியாது, ஸ்காட்" னு சொன்னேன். உடனே ஸ்காட், "நம்ம "மாத்யூ(மேட்)" தெரியுமில்லை? நைட்ரஜன், ஹைட்ரஜன் சிலிண்டர் எல்லாம் டெலிவெர் பண்ணுவாருல்ல? அவரைத்தான் இந்தம்மா, லாரென்,  இப்போ கல்யாணம் பண்ணியிருக்கு!" என்றார்.  அப்போ ஸ்டீவ்? னு கேட்டேன். இல்லை ஸ்டீவ் மறுகல்யாணம் செய்யலை! னு சொன்னாரு.

மேத்யூ என்கிற "மேட்"டையும் எனக்கு நல்லாத் தெரியும். "மேட்"டும் அதே "ஏஜ் க்ரூப்"தான் ஆனால் ரொம்ப "ஃபிட்"ட்டா பார்க்க கொஞ்சம்  "ரஃப்"பா இருப்பாரு. இவரும் தலையை முழுவதும் ஷேவ் பண்ணிட்டு நம்ம சிவாஜி மொட்டை பாஸ் ரஜினி மாரித்தான் இருப்பாரு!

பொதுவாக என்  கோ-வொர்க்கர்ஸ் தவிர்த்து பேசுற அளவுக்கு  தெரிஞ்சவங்களே ரொம்ப ரொம்ப கம்மி. என்ன காரணம்னு தெரியாது, இவங்க மூனு பேரோடையும் (ஸ்டீவ், ஸ்காட் & மேட்)  தனித்தனியா ஏதாவது ஸ்போர்ட்ஸ் பத்தி பேசுவேன்.  எனக்குத் தெரிந்த அந்த மூனு பேருல,  ஒருவர் (ஸ்டீவ்) மனைவியை இன்னொருவர் (மேட்) மணந்து (மறுமணம்) இருப்பதாக மூனாமவர் (ஸ்காட்) சொல்றாரு!!! அதிர்ச்சிக்கு மேலே அதிர்ச்சியடைந்தேன்.

 "Small world"(மிகச்சிறிய உலகம் இது) னு இதைத்தான் சொல்லுவாங்க. :)

17 comments:

Thekkikattan|தெகா said...

Varun, I do NOT understand what is there to be surprised!!

Indian said...

இந்த நிகழ்வு எம் அலுவலகத்திலும் நடைபெற்றது.
It becomes sad when 2 doting families split and remarry. Of course they should have their own reasons.

And there was single mother through a relationship with a colleague. We had baby shower for her too :)

Another live-in couple that got married after 15 years in their 50+ years.

Another divorcee colleagues that got married over weekend and came back to work on Monday.

Also seen a doting mother from eastern Europe who lives in joint family with son and daughter-in-law and treats her DIL more like her daughter.

ILA (a) இளா said...

இந்த நிகழ்வுல ஆச்சர்யப்படறதுக்கு என்ன இருக்கு?

வருண் said...

***Thekkikattan|தெகா said...

Varun, I do NOT understand what is there to be surprised!!

30 August 2012 9:44 PM***

I understand. It was shocking for me because I knew them (both mat and steve) for years. I did not know that they knew each other and they were "related". :)

வருண் said...

***Indian said...

இந்த நிகழ்வு எம் அலுவலகத்திலும் நடைபெற்றது.
It becomes sad when 2 doting families split and remarry. Of course they should have their own reasons. ***

I was feeling like this..

I am kind of good friend to Steve. I used to talk to and cut jokes with Mat which could be noticed by Steve. I suspect very much that they like each other. I kind of felt "guilty" for my "ignorance" when I learnt the truth. :)

வருண் said...

*** ILA(@)இளா said...

இந்த நிகழ்வுல ஆச்சர்யப்படறதுக்கு என்ன இருக்கு?

31 August 2012 4:04 AM***

வாங்க, இளா! :)

ஒரு சிலருக்கு இயல்பா தெரிகிற ஒரு விசயம் இன்னொருவருக்கு ஆச்சர்யமாகத் தெரிவதும் இயற்கைதான். :)

சார்வாகன் said...

வணக்கம் சகோ வருண்,

இது அதிர்ச்சி அல்ல அநாகரிகம். உங்களின் நண்பர்கள் நம்பிக்கை வைத்து பகிர்ந்த விடயத்தை பெயர்களுடன் பொது தளத்தில் பகிர்தல்தான் அதிர்ச்சி!!!.இதே போல் நம் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் இன்னொருவருக்கு அதிர்ச்சியாக தெரிந்து பதிவிட்டால் சும்மா இருப்போமா!!!. பதிவுக்கு கடும் கண்டனம்!!.

நன்றி

குட்டன்ஜி said...

இதை ஒரு பதிவாக்கியிருக்க வேண்டாம் என்பதே என் கருத்தும்!

வருண் said...

சார்வாகன் மற்றும் குட்டன்:

இதில் பெயர்கள் மாற்ற்ப்பட்டு இருக்கு, . இதில் என்ன அநாகரீகம் இருக்குனு தெரியலை எனக்கு? யாரை அவமானப் படுத்தி இருக்கேன்?னு சொல்றீங்க???

வருண் said...

இதைல் நடப்பது எதுவுமே அசிங்கப் படவோ, அவமானப் படவோ எதுவும் இல்லை. சாதாரணமான விசயம்தான். ஏன் சும்மா போட்டுக்கிட்டு..

வருண் said...

What happened to intli (tamilish)? Because of their maintenance it slows down loading of this blog! :(

I dont have that much patience! :(

வருண் said...

Stop posting your nonsense here. Go ahead and contact the people whose privacy is affected and TM. YOu understand? Thanks!

suvanappiriyan said...

சார்வாகன் ரொம்பவும் டென்ஷனாயிட்டாரே! ஏன்?

தணல் said...

சார்வாகன் சகோ, இதில் டென்ஷன் ஆவதற்கு என்ன இருக்கிறது? தம்முடன் வேலை செய்த, தான் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்த இருவரிடையே இப்படியான ஒரு உறவுமுறை இருப்பது இப்போது தான் தெரிய வந்தது என்று ஆச்சர்யப்பட்டு பகிர்ந்திருக்கிறார். மேலும் அது அதிகாரப்பூர்வமான உறவுமுறையே. யாரையும் புண்படுத்தக் கூடியது அல்ல.

தணல் said...

அவரது ஆச்சர்யம் அந்த உறவுமுறையினால் அல்ல, அது தாமதமாகத் தெரிய வந்ததால் என்பதே எனது புரிதல்.

வருண் said...

****சுவனப் பிரியன் said...

சார்வாகன் ரொம்பவும் டென்ஷனாயிட்டாரே! ஏன்?

31 August 2012 11:35 AM***

வாங்க சுவனப்பிரியன்: இந்து முஸ்லிம் கலவரம் பதிவால நெறியப்பேரு டென்ஷனாகிட்ட மாதிரி தெரியுது. நான் உண்மையத்தான் எழுதினேன். உண்மை பிடிக்கலைனா நான் எதுவும் செய்ய முடியாது!

வருண் said...

***தணல் said...

சார்வாகன் சகோ, இதில் டென்ஷன் ஆவதற்கு என்ன இருக்கிறது? தம்முடன் வேலை செய்த, தான் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்த இருவரிடையே இப்படியான ஒரு உறவுமுறை இருப்பது இப்போது தான் தெரிய வந்தது என்று ஆச்சர்யப்பட்டு பகிர்ந்திருக்கிறார். மேலும் அது அதிகாரப்பூர்வமான உறவுமுறையே. யாரையும் புண்படுத்தக் கூடியது அல்ல.

31 August 2012 12:18 PM***

வரும்போதே என்ன குறை சொல்லலாம் இவன் பதிவில். இவன் எல்லாரையும் விமர்சிக்கிறான்.. இவன் என்ன யோக்கியமா? இவனை விமர்சிக்கனும்.. இவனை ரிப்போர்ட் பண்ணனும்னு வந்தா என்ன பண்ணுறது?

இவர் மிரட்டலுக்கு எல்லாம் பயந்தா வாழவே முடியாது!

***தணல் said...

அவரது ஆச்சர்யம் அந்த உறவுமுறையினால் அல்ல, அது தாமதமாகத் தெரிய வந்ததால் என்பதே எனது புரிதல்.

31 August 2012 12:19 PM***

உங்களுக்காவது நான் சொல்ல வந்தது புரியுதே! சந்தோஷம்! :)