Monday, November 12, 2012

பெண்கள் கவர்ச்சி உடைகள் அணியக்கூடாது- சாரு நிவேதிதா!

நம்ம கோபியண்ணனோட நீயா நானா? வில் இந்த நாகரிக காலத்தில் வட இந்திய மற்றும் தென் இந்திய இளம் பெண்கள் உடைபற்றி ஒரு உப்புச் சப்பு இல்லாத, சுவையில்லாத ஒரு விவாதம் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக நம்ம சாருவையும், ஆரோகனம்  பட இயக்குனர் மற்றும் நடிகை, லக்ஷ்மி ராமகிருஷ்ணனையும் அழச்சுண்டு வந்திருந்தா!

வட இந்திய, தென் இந்திய இளவட்டங்கள், இளம்பெண்கள் (தமிழே தெரியாதவாகூட) எல்லாம் இதைப் பத்தி பேசினா. இவங்க எல்லாருமா  விவாதிச்சு ஒரு முடிவுக்கு வந்து இவங்க சொன்ன கருத்து  இதுதான்..

* வட இந்தியப் பெண்கள் அதிகக் கவர்ச்சியாக உடை அணிவதாகவும், அவங்களுக்கு உடை அலங்காரம் பற்றி தென் இந்தியப் பெண்களைவிட நல்லாத் தெரியுது என்பதுபோல் சொல்றாங்க..

* வட இந்தியப் பெண்கள்னு இவங்க சொல்றது டெல்லி, மும்பை, புனே போன்ற பெரிய ஊர்களில் வாழ்ற கல்லூரியில் படிக்கும் பெண்கள் பத்தி சொல்றமாரித் தெரியுது. மேலும் பாலிவுட் ஹீரோயின்களையும் சேர்த்துக்குவாங்கனு நெனைக்கிறேன்.

* இவங்கள பொருத்தவரையில் தென் இந்தியானா சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத், போன்ற ஊர்களை சேர்த்துச் சொன்ன மாரித் தெரியலை. பொதுவா சென்னையைத்தான் எடுத்துக்கொண்டு பேசினாங்கனு சொல்லலாம்.

சிறப்பு விருந்தினாராக அழைத்து வந்திருந்த நம்ம சாரு என்னத்தையோ உளறித் தள்ளினார்னுதான் சொல்லனும்..அவரோட எழுத்தில் உள்ள கூர்மையோ, "ஃப்ளோவோ" அவர் பேச்சில் இல்லை! ஏதோ பல்லைப் புடுங்கிய பாம்புபோல ரொம்ப கவனமாகப் பேசியதால் இவர் பேசுவதெல்லாம் ஒரே உளறல் போலதான் இருந்துச்சு எனக்கு..

இணையத்தில் இருந்து.. சாரு சட்டை எப்படி இருக்கு?

* அந்தக் காலத்தில் பெண்கள் மேலாடைகூட அணியாமல் இருந்தாங்க. போராடித்தான்  அந்த உரிமையை பெற்றார்கள் என்று சாரு பெண்களுக்கு ஞாபகப்படுத்துகிறார்..அதையெல்லாம் இன்றைய பெண்கள் மார்பகங்களை மறைத்து உடை அணியும்போது மனதில் கொண்டு வரணும்னு சொல்றாரா??

இதைச் சொல்லி என்ன எழவைச் சொல்ல வர்றாரு இந்த மனுஷன்னு யாருக்கும் வெளங்கவில்லை! இவர் கணக்குப் படிப் பார்த்தால் அதுக்கும் முன்னால ஆம்பளைகளும் பொம்பளைகளும் அம்மனமாத்தான் திரிஞ்சிருப்பாங்க! கீழேயும் மறைக்காமல்.. அதையும் ஆம்பளைங்க எல்லாரும் ஆடை அணியும்போது நெனச்சுப் பார்க்கலாமே, சாரு? எதுக்கு இதை மட்டும் சொல்லிக்கிட்டு? 

*  அப்புறம் இவரு வெளிநாடு போயிருந்தப்போ..தாய்லாந்துலயோ எங்கயோ ஒரு நம்மூரு ஆளை பார்த்தாராம். அவனைப் பார்த்ததும் அவன் நம்ம ஊர்க்காரன்னு சாருவுக்குப்  உடனே புரிஞ்சிருச்சாம்.. எப்படினா? அவன் "அசிங்கமா" ஒரு ட்ரெஸ் செண்ஸே இல்லாமல் ஒரு கட்டம்போட்ட சட்டை போட்டிருந்தானாம்! கட்டம் போட்ட சட்டை போடாமல் வேற டிசைன் சட்டை போட்டவனுக  லட்சம் பேரு இவரு கண்ணுல மாட்டாமல் போயிருப்பானுக. இந்த ஒரு ஆள் போட்ட  கட்டம்போட்ட சட்டையவச்சு இவரு அங்கே எல்லாத் தமிழனும் கட்டம்போட்ட சட்டை போட்டுக்கிட்டு ட்ரெஸ் சென்ஸே இல்லாமல் அலையிறான்னு ஏதோ தியரி விட்டு இன்னொரு ஒளறல்..

இணையத்தில் இருந்து.. சாரு கட்டம்போட்ட சட்டைலயா இருக்காரு?
* அப்புறம் டெல்லில இளம் பெண்கள் எல்லாம், சின்ன "ஷாட்ஸ்" இல்லைனா "மிடி" போட்டுக்கொண்டு தொடை தெரிகிறார்ப்போல, பேண்டிஸ் தெரிகிறார்போல, மார்பகம் க்ளிவேஜ் தெரியுறாப்பிலே உடை அணியுறாங்களாம்.. அது எல்லாம் வரம்பு மீறல்னு நம்ம சாரு சொல்றாருப்பா!!! சாரு ரொம்ப கன்செர்வேட்டிவா எப்ப ஆனாருனு எனக்குத் தெரியலை. பின் நவீன எழுத்தாளர் சாரு, பெண்கள் நல்லா  உடம்பை மறைத்து உடை அணியனும்னு சொல்றதென்னவோ எனக்குக் காமெடியாத்தான் தெரிஞ்சது.

***************************

* இன்னொரு சிறப்பு விருந்தினர் இந்தம்மா லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கொஞ்சம் பரவாயில்லை.. இவர் பேசும்போது எதையும் அடித்து சரி, தவறுனு சொல்லாமல் ஒரு மாதிரி நடுநிலைமையுடன் உண்மையா, எதார்த்தமா வட மற்றும் தென் இந்தியப் பெண்கள் உடையலக்க்காரம் பத்தி  பேசுறாப்பிலே இருந்தது.

சரி, இவருக்கு என்னமாரி "ட்ரெஸ் செண்ஸ்" இருக்குனு அவர் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க!

இணையத்திலிருந்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் படம் 1




இணையத்திலிருந்து எடுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் படம்2


இணையத்திலிருந்து எடுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் படம் 3


ஆக மொத்தத்தில் இந்த நீயா நானா? எப்பிசோட் படு மொக்கை! ஏதோ தீபாவளி சமயத்தில் சேலை விக்கிற வியாபாரிகளுக்கு ஒரு "கமர்ஷில்" கொடுத்தமாரி இருந்துச்சு! Better luck next time Gopinath!

10 comments:

ப.கந்தசாமி said...

ஸ்கிரீன் துணியில சட்டை எந்தக் கடைல சாரு வாங்கறாரு

வருண் said...

வாங்க சார்!

உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! :)

Anonymous said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! வருண்

suvanappiriyan said...

இனிய வாழ்த்துக்கள்!

mathuran said...

சரியாகச் சொன்னார் கந்தசாமி ஐயா, எங்க நாட்டிலும் சாரு போடும் துணிகளில் உள்ள வடிவமுடையவை யன்னல் துணி, படுக்கை விரிப்பு, மேசை விரிப்பு போன்றவற்றுக்கே!
அவற்றை அணிந்து தனக்கு உடுப்புப் பற்றிய விபரம் தெரியுமெனப் பிசத்துவது அலட்டலே! இது ரெமி மாட்டின் அடிப்பதால் வரும் உளறல்!
பெண்களை நிர்வாணமாகப் பார்ப்பதைப் பொழுது போக்காகக் கொண்ட இந்தப் பெருமகனிடம் பெண்கள்
ஆடை பற்றி விசாரித்தது கொடுமை!
கோபிநாத் குசும்புக்காரனய்யா?
இவர் ஏன்? தாய்லாந்துக்குப் போனாராம்? அதை இன்னும் சொல்லிகிறாரில்லை.

'பரிவை' சே.குமார் said...

ஸ்கீரீன் துணியில் சட்டை தைத்துப் போட்டால் பிரபலமாக இருந்தாலும் நல்லா இருக்கும்.

கஷ்டப்படுபவன் உடம்பை மறைக்க கட்டம் போட்ட சட்டை போட்டிருந்தால் கண்றாவியா இருக்காமா...

எல்லாம் காலத்தின் கோலம்.

வருண் said...

வாங்க ஏலியன் & சுவனப்பிரியன்!

நன்றிங்க. உங்களுக்கும் என் இனிய தீவாளி வாழ்த்துக்கள்! :-)

வருண் said...

***mathuran said...

சரியாகச் சொன்னார் கந்தசாமி ஐயா, எங்க நாட்டிலும் சாரு போடும் துணிகளில் உள்ள வடிவமுடையவை யன்னல் துணி, படுக்கை விரிப்பு, மேசை விரிப்பு போன்றவற்றுக்கே!
அவற்றை அணிந்து தனக்கு உடுப்புப் பற்றிய விபரம் தெரியுமெனப் பிசத்துவது அலட்டலே! இது ரெமி மாட்டின் அடிப்பதால் வரும் உளறல்!
பெண்களை நிர்வாணமாகப் பார்ப்பதைப் பொழுது போக்காகக் கொண்ட இந்தப் பெருமகனிடம் பெண்கள்
ஆடை பற்றி விசாரித்தது கொடுமை!
கோபிநாத் குசும்புக்காரனய்யா?
இவர் ஏன்? தாய்லாந்துக்குப் போனாராம்? அதை இன்னும் சொல்லிகிறாரில்லை.***

வாங்க மதுரன்! :)

சாரு, தன்னையும் சேர்த்துத்தான் விமர்சிச்சு இருப்பார் போல! :)))

வருண் said...

***சே. குமார் said...

ஸ்கீரீன் துணியில் சட்டை தைத்துப் போட்டால் பிரபலமாக இருந்தாலும் நல்லா இருக்கும்.

கஷ்டப்படுபவன் உடம்பை மறைக்க கட்டம் போட்ட சட்டை போட்டிருந்தால் கண்றாவியா இருக்காமா...

எல்லாம் காலத்தின் கோலம்.***

வாங்க, குமார்! :)

அவரு ஒரு கண்ணாடி எடுத்து தன் சட்டையை எப்படியிருக்குனு பார்க்காமல் ஊரில் உள்ளவன் சட்டையை எல்லாம் "அளவெடுத்து" இருக்காரு பாவம்! :)

புத்தக பிரியன் said...

charu va konjam kadupethi tension yethi irundha avar vaayilirundhu evlo" kavarchi"yana vaarthaigal varum nu gopi ku therinjirukum