என் நண்பன் சாமி வசிக்கும் தெருவில் வாழும் அம்மா அது. ஒரு 46 வயது இருக்கும். எதிர்த்தாப்பிலே நடந்து வந்தது. அது பேரெல்லாம் எதுக்கு?"
"அந்த அம்மா ரொம்ப மோசம்டா" என்று என் காதைக் கடித்தான் சாமி.
"ஆமா யாரைத்தான் நல்ல அம்மானு நீ சொல்லியிருக்க சாமி?"
"இப்பப்பாரு என்னைப்பார்த்தால் பயந்து நடுங்கும் பாரு !" என்றான். அத்துடன் அந்தம்மா இவனை தவிர்க்க முடியாத படி நின்றான். அவன் சொன்னதுபோலவே சாமியைப் பார்த்தவுடன் ஏதோ பேயறைந்தது போல் அது பயந்து ஒதுங்கியது போலதான் எனக்கும் தோணுச்சு.
"என்னடா சாமி? ஏன் இப்படி உனைப்பார்த்து பேயைப் பார்த்ததுபோல் பயப்படுது?" என்றேன் நான்.
"அதை ஏன் கேக்கிற? அதுக்கு நம்ம வயதில் பையன் இருக்கான்டா. ஓர் பொண்ணைக் கட்டிக் கொடுத்துட்டு இருக்கு. ஆனால் தரங்கெட்டதனமா நடந்துகொள்கிறது.."
"என்னடா சொல்ற? எதுவும் தெருச் சண்டையில் இஷ்டத்துக்குப் தாறுமாறாப் பேசுமா? உங்க தெருலதான் பொன்மொழியெல்லாம் அதுலதானே வரும்? "நீ அவனை வச்சிருக்க, இவனை கூட்டி கொடுத்தது தெரியாதா?" னு இஷ்டத்துக்கு திட்டுவாங்களே? அது மாரிப்பேசுமா சண்டையிலே?" என்றேன் நான்.
"அதாவது பரவாயில்லை. இது அதைவிட மோசம்"னு மறுபடியும் புதிர் மேலே புதிர் போட்டான் சாமி.
"என்னனு சொல்லித் தொலைடா, சாமி"
"இதைக்கேளு! ஒரு நாள் சக்கண்ட் ஷோ முடிஞ்சு வந்து இங்கே நின்னு வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு இருந்தோம். ஒரு 20 வயதுப்பையன் இந்த சந்துலயிருந்து வெளியே வந்தான். அவன் யாருனு கவனிச்சுப் பார்ததேன். அவன் யாருனு தெரியும் எனக்கு. அவன் இந்தத் தெரு இல்லை. என்னடா இன்னேரத்திலே ஏண்டா லேடீஸ் பொது டாய்லெட் பக்கம் இருந்து வருகிறான்? னு நாங்க பேசிட்டு விட்டுட்டோம். ஆனால் நான் அதோட விடலை சரினு அவன் மேலே ஒரு கண்ணு வச்சிட்டு இருந்தேன். இன்னொரு நாள் நைட் இதே மாரி நைட் ஒரு மணி இருக்கும் அங்கேயிருந்து வெளிய போனான். அவன் போன அப்புறம் கொஞ்ச நேரத்தில் அதே சந்திலிருந்து இந்தம்மாவும் வெளிய வந்து அவங்க வீட்டுக்குப் போச்சு..இதில் இன்னொரு விசயம் என்னனா இந்த அம்மா புருஷனிடம்தான் இந்தப் பையன் ஏதோ வேலை செய்றான். அடிக்கடி அவங்க வீட்டுக்கு வருவான். எனக்கு என்னடா எதோ நடக்குது போல னு சந்தேகம் வந்துச்சு"
"நாசமாப் போச்சு போ."
"அப்புறம் ஒரு நாலு நாள் இருக்கும், அன்னைக்கு தெருல ஏதோ கோயில் திருவிழா நடந்துச்சு. திருவிழா எல்லாம் முடிஞ்ச பிறகு நைட் அதே பையன் அந்த சந்துக்குள்ள சுத்திப் பார்த்துட்டு யாருக்கும் தெரியாமல்ப் போனான். கொஞ்ச நேரத்திலே அந்தம்மாவும் அதே சந்துக்குள்ள் போச்சு. நானும் என் ஃப்ரெண்டும் போய் ரெண்டு பேரையும் கையும் களவுமா பிடிச்சாச்சு!"
"அடப்பாவி! ரெண்டுபேரை நிம்மதியா சந்தோஷமா இருக்க விடமாட்டியா? "
"அவனை ஒரு அறை அறைஞ்சி. "இந்தப்பக்கம் உன்னை இனிமேல் பார்த்தேன் கொன்னேபுடுவேன்!" னு அனுப்பிட்டு. இந்த அம்மாவ, "ஏய் உனக்கு வயசு என்ன? இந்த வயசுல என்ன இதெல்லாம்?" னு கேட்டேன். என்னத்தை சொல்ல போ! கையெடுத்து என்னை கும்பிடுதுடா! "யார்ட்டையும் சொல்லிராதே" னு கெஞ்சுது. சரி, "இனிமேல் இப்படி செய்யாதே! வயசுக்கேத்தாப்பிலே நடந்துக்கோ" னு திட்டி, அறிவுரை சொல்லி அனுப்பிவிட்டு வந்துட்டேன். என்ன பொம்பளைடா இதெல்லாம்?" என்றான் சாமி வருத்தமும் கோபமுமாக.
"ஏண்டா டே! பாவம் அவங்க சந்தோஷத்தைக் கெடுத்து, அந்தமம்மாவை சாகிறவரைக்கும் உன்னை மறக்க முடியாத அளவுக்கு ஆக்கிப்புட்ட!" என்று கேலியாக அவனிடம் நான் சொல்லி சமாளிச்சாலும் உள்மனதில் "ஏன் இப்படி நடந்துக்கிறாங்க? அதுவும் இந்த வயதில்?" னு மனதில் ஒரு சோகமான பரிதாபமான உணர்வுதான் வந்தது எனக்கும்.
"விட்டுத் தொலைடா! உன் மிரட்டலில் "தூக்குக் கீக்கு போட்டு செத்திறப்போது பாவம்!" என்றேன் உண்மையான பயத்துடன்.
*****************
அந்த நினைவுகள், அந்த அம்மாவின் பரிதாப முகம், சாமியைப் பார்த்து அது மிரண்ட பார்வை எல்லாம் பல ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் அப்படியே நிற்கிறது, எனக்கு.
சினிமாக்கள் (அவள் ஒரு தொடர்கதை), கதைகள் (தி ஜா ரா வின் அம்மா வந்தாள்) போன்ற புனைவுகளில் மட்டுமல்லாமல், இதுபோல் அம்மாக்கள் தகாத உறவுகளில் மாட்டிக்கொண்டு பிடிபட்டு முழிப்பது எல்லாம் காலங்காலமாக நமது கலாச்சாரத்தில் கிராமங்கிளில் கூட நடக்கத்தான் செய்யுது.
இதுபோல அம்மாக்கள் ஒரு சில விழுக்காடுகள்தான் என்றாலும் "ஒரு சிலர் காமத்திற்காக, ஏன் இப்படி தன் வயது, தன் நிலமை, தன் தரம் என்பதை எல்லாம் யோசிக்காமல் தன்னிலை மறந்து தவறாக நடந்துக்கிறாங்க? என்கிற கேள்விக்கு என்ன பதில் இருக்கிறதென்று தெரியவில்லை.
"அவள் தேவைகளை ஆம்படையான் ஒழுங்காத் தீர்த்து வைக்கவில்லை! இதிலென்ன பெரிய தப்பு?" என்று பெண்ணியவாதியாக வாதிடலாம். "அவங்க புருசன் எப்படியோ? அவன் ஒழுங்காயிருந்தால் ஏன் இப்படி அந்தம்மா அலையுது?" என்றும் வாதம் மற்றும் விதண்டாவாதம் பேசலாம்தான்.
நம்மூர்களில் வாழும் மெஜாரிட்டி "அறிவுகெட்ட ஆண்கள்" கோடிக்கணக்கான "பெண் என்னும் பேதையர்கள்" எல்லாம் இதை எல்லாம் பார்த்து, கேள்விப்பட்டு, "தேவடியாள் ஊர் மேயிறாள்" னு இதுபோல் அம்மாக்களை ஜாடையில், மற்றும் சண்டைகளில் திட்டுவதுதான் கிராம வழக்கம். ஆனால் இதில் சிந்திக்க வேண்டியதும், இதுபோல் நடப்பவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்ளவும் நாம் கற்றுக்கொண்டால்தான் நாம் மனிதாபிமானிகளாகவும், பண்பாடு தெரிந்தவர்களாகவும் ஆகிறோம்.
மேலை நாகரீகத்தில் இதையெல்லாம் மன்னிக்கக் கற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். ஆனால் நாம் எப்படி??
-முற்றும்
Friday, November 22, 2013
Thursday, November 14, 2013
ஈ வே ரா, ஈ வெ ரா, ஈ வெ இரா, செயமோகன்!
பொதுவாக பெரியார் பெயரை ஈ வே ரா னு எல்லோரும் தவறாக எழுதுவாங்க, சொல்லுவாங்க. ஈ வே ரா னா ஒரு ராகத்தோட சொல்லலாம் என்பதாலோ என்னவோ. பலர் இந்தத் தவறைச் செய்ததால், நம்ம ஜெயமோகனும் இந்தத் தவறைச் செய்து இருக்கிறார். நம்மைச் சுற்றி உள்ள சூழல்கள் நம்மை ஓரளவுக்கு பாதிக்கத்தான் செய்யும். இது இயற்கை. சரி, நம்ம செய்வதால் அது சரி என்று இல்லை. ஒருவர் அதைத் தவறுனு சுட்டிக்காட்டும்போது, ஒரு பெரிய மனுஷன் என்ன செய்யணும்? தான் செய்த ஒரு சின்ன தவறைத் தவறுதான் னு ஏற்றுக்கொண்டு ஒரு சிறு மன்னிப்பை சொல்லிவிட்டால் அதோட வேலை முடிந்தது.
அதைவிட்டுப்புட்டு, சின்னப்புள்ளத்தனமா "நான் ஏன் தவறு செய்தேன்? நான் சொன்னதுதான் தமிழ் உச்சரிப்பு முறைப்படி சரி! நீங்க எல்லாரும் யோக்கியமா? இத்யாதி இத்யாதினு ஒரு பெரிய கட்டுரை எழுதி கடைசியில் நான் எழுதியதுதான் சுத்தமான தமிழ் உச்சரிப்புனு முடிச்சு..
தான் சொல்வது, தான் செய்வதுதான் எப்போவுமே சரினு ஒரு பெரிய விளக்கம்..
ஈ வெ ரா பெயர் தெலுகு உச்சரிப்பில்தான் இருக்கு. அதனால என்ன இப்போ? அவரு வீட்டிலே எல்லாரும் தெலு(ங்)குலயோ இல்லை கன்னடத்திலேயோதான் பேசி இருப்பாங்க. அதானே அவர்களுக்குத் தாய்மொழி?
பின்னால் தன்னை ஒரு தமிழன் னு மார்தட்டிய பெரியார், கன்னடத்திலே, தன் தாய்மொழியில் இளமையில் பேசியிருக்கக்கூடாதுனு சொல்வாரா?
மேலும் ராமசாமி என்பதே "பகவான்" ராமன் பேரை தழுவியது. ஆக இவரும் "பகவானின்" சுமார் 42வது அவதாரம்தான்னு ஏதாவது விளக்கம் சொன்னாலும் சொல்லுவா!
நான் அப்போவே சொன்னேன். ஜெயமோகனைப் பிடிச்சுக் கொண்டுபோயி ஏர்வாடில கட்டிப்போடுங்கப்பானு! எவன் கேக்கிறான்! இப்போ எல்லாரையும் ஏர்வாடிக்கு அனுப்பிரும்போல இந்த ஒரு மேதாவி! :)

அதற்கு ஒரு சிறு பின்னணி உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் பிழையாகவே ஒரு கட்டுரையில் ஈவேரா என்று எழுதியிருந்தேன். என்ன காரணம் என்றால் தமிழில் திருப்பதியின் பெயர் வேங்கடம்தான். வெங்கடம் அல்ல. அந்த அடிப்படையில்தான் கி.வேங்கடசுப்ரமணியன் என்றும் ஆ.இரா.வேங்கடாசலபதி என்றும் எழுதுகிறார்கள். ஈவேரா அவரது பெயரை அப்படித்தான் எழுதுவார் என்று ஓர் அனிச்சையான நம்பிக்கையால் அப்படி எழுதினேன்.
ஆனால் எனக்கு ஆக்ரோஷமான நாலைந்து கடிதங்கள் வந்தன. ஈவேரா அவர்களின் தந்தைபெயர் வெங்கிட்ட நாயக்கர் என்றும் ஆகவே அவரது பெயரை ஈவெரா என்றுதான் எழுதவேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். ஆனால் என் பெயரை செயமோகன் என்று எழுதியிருந்தனர். அத்தனை பெயரையும் தமிழ்ப்படுத்தி எழுதக்கூடியவர்கள் அவர்கள். சுந்தர இராமசாமி என்று எழுதக்கூடியவர்கள். இன்றைக்கும் தமிழ் விக்கிபீடியாவில் இந்தக்கொள்கை உடையவர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்.
நான் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஒரு பெயரை அப்பெயருக்குரியவர் எப்படி எழுதுகிறாரோ அப்படி எழுதவேண்டும் என்பதுதான் மரபு. உலகளாவிய ஒரு நாகரீகம் அது. ஆனால் நீங்கள் பிறர் பெயரை உங்கள் கொள்கைப்படி மாற்றி எழுதுகிறீர்கள். அதற்கு மொழிசார்ந்த நியாயங்களைச் சொல்கிறீர்கள். அந்த நியாயம் உங்கள் தலைவருக்குச் செல்லுபடியாகாதா என்ன? அவரது பெயரை ஏன் தமிழ்முறைப்படி எழுதக்கூடாது? ஈ.வே.இராமசாமி என்றுதானே அவரை எழுதவேண்டும்? ஏன் தெலுங்கு உச்சரிப்பைத்தான் எழுதவேண்டும் என்கிறீர்கள்?
’சரி, கொள்கையளவில் ஒரு பொதுமுடிவுக்கு வருவோம். பெயர்களை மாற்ற பிறிதொருவருக்கு உரிமை இல்லை. தன் பெயரை ஒருவர் எப்படி எழுத விரும்பினாரோ அப்படித்தான் அனைவரும் எழுதவேண்டும். ஏனென்றால் அது ஓர் ஆவணம், ஓர் அடையாளம், அவ்வளவுதான். அது உங்களுக்கும் எனக்கும் பொருந்தும் விதி, ஆனால் ஈவேரா அவர்களுக்கு விதிவிலக்கு என்றால் அதை நான் ஏற்கமாட்டேன்’ என அவர்களுக்கு எழுதினேன். அதற்கு 16 பக்க வசைதான் பதிலாக வந்தது. நான் பிடிவாதமாக ஈவேரா என்று –தமிழ் மரபுப்படி – எழுத ஆரம்பித்தேன். அப்படியே கை பழகிவிட்டது.
இப்போதுகூட ஈவெரா என்று தெலுங்கு உச்சரிப்பையே எழுதத்தயார். பிற பெயர்களில் கைவைப்பது பிழை என இதைச் சுட்டிக்காட்டுபவர்கள் கொள்கையடிப்படையில் ஒத்துக்கொள்ளட்டும்.பிற தெலுங்கு, இந்தி பெயர்களையும் அவர்களின் மொழிமரபுப்படியே எழுதட்டும்.ஆக, இவர் என்ன தப்பு செய்தாலும், அது இவர் தமிழ்மரபை மனதில் கொண்டு தமிழுக்காக அவர் செய்த தவறு!! ! :))) ஈ வெ ரா என்பது தெலுகு உச்சரிப்பு! இவரு செய்ததுதான் சரியான தமிழ்! அதுதான் சரி சரி சரி!
ஈ வெ ரா பெயர் தெலுகு உச்சரிப்பில்தான் இருக்கு. அதனால என்ன இப்போ? அவரு வீட்டிலே எல்லாரும் தெலு(ங்)குலயோ இல்லை கன்னடத்திலேயோதான் பேசி இருப்பாங்க. அதானே அவர்களுக்குத் தாய்மொழி?
பின்னால் தன்னை ஒரு தமிழன் னு மார்தட்டிய பெரியார், கன்னடத்திலே, தன் தாய்மொழியில் இளமையில் பேசியிருக்கக்கூடாதுனு சொல்வாரா?
மேலும் ராமசாமி என்பதே "பகவான்" ராமன் பேரை தழுவியது. ஆக இவரும் "பகவானின்" சுமார் 42வது அவதாரம்தான்னு ஏதாவது விளக்கம் சொன்னாலும் சொல்லுவா!
நான் அப்போவே சொன்னேன். ஜெயமோகனைப் பிடிச்சுக் கொண்டுபோயி ஏர்வாடில கட்டிப்போடுங்கப்பானு! எவன் கேக்கிறான்! இப்போ எல்லாரையும் ஏர்வாடிக்கு அனுப்பிரும்போல இந்த ஒரு மேதாவி! :)
Tuesday, November 5, 2013
பதிவெழுத சரக்கு தீர்ந்து போயிடுச்சா? இல்ல செத்துட்டானா?!
ஒரு காலத்தில் பெரும்புள்ளியா இருந்தவங்க எல்லாம் பதிவுலகைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா கழண்டு காணோமாப் போயிடுறது பதிவுலகில் சாதாரணம். பதிவுலகில் ரொம்ப நாள் குப்பை கொட்டுறவங்களுக்குத் தெரியும் இந்த "ட்ரெண்ட்". இன்னொரு பக்கம் புதுசா வர்ர திறமைமிக்க பதிவர்கள் எல்லாம் வந்த கொஞ்ச நாளில், அவர்களுக்கு கிடைக்கும் "வரவேற்பில்", "மரியாதையில்" நாந்தான் இங்கே ராஜா னு ஒரு நெனைப்போட திரிவதையும் பார்க்கலாம். இது போல் புதிய ராஜாக்கள் வருவதும், கொஞ்சநாள் ஆள்வதும், பிறகு அழிவதும் பதிவுலகிலும் காலங்காலமா நடந்துகொண்டுதான் இருக்கு. ஒரு சில ராஜாக்கள் ஆண்டபிறகு காணோமாப் போறது மட்டுமல்ல! அவங்க தளமும் பதிவுகளும்கூட அவர்களோட சேர்ந்து காணோமாப் போயிடுது! இவனுக செத்துத் தொலையிறானுக! இவனுக பதிவும் ஏன் இவனுகளோட சாகணும்னு எனக்கு விளங்குவது இல்லை! தமிழன் செதுத்துக்கிட்டுதான் இருக்க்கான் ஆனால் தமிழ் ஒரு நாளும் சாகாது! இல்லையா?
ஏன் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவங்க, திறமைமிக்க பதிவர்கள் எல்லாம் ஏனோ ஒதுங்கி ஓடிறாங்க. இந்த "ராஜாக்கள்" ஏன் திடீர்னு "துறவரம்" போயிடுறாணுக? என்ன காரணம்? செத்துட்டாணுகளா? னு யோசித்துப் பார்த்தால்..
வாழ்க்கைச் சக்கரம் சுழலும்போது, ஒவ்வொருவருடைய தேவைகள், ஆசைகள், இண்டெரெஸ்ட் எல்லாம் மாறிக்கொண்டே வருது. நேற்று முக்கியமாக தோன்றிய பதிவுலக பிரவேஷம் இன்னைக்குத் தோன்றுவதில்லை! வேலைப் பளு காரணமாக சில பதிவர்கள் ஒதுங்கிடுவாங்க! குடும்ப சூழல்களில் ஏற்படும் மாற்றங்களால் சிலர்! உடல்நலக்குறைவு காரணமாக ஒரு சிலர்! காதல், கல்யாணம், குழந்தைகுட்டி னு ஒரு சிலர் போயிடுறாங்க. திடீர்னு "இளவரசர்" புத்தனுக்கு வந்தமாரி ஞானோதயம்! என்னைத்த பதிவெழுதி என்னத்தக் கிழிக்கப் போறோம்? னு திடீர்னு ஒரு ஞானோதயம் ஒரு சிலருக்கு. இந்த பதிவெழுதுற நேரத்தில் கொஞ்சம் பகுதி நேரம் வேலை பார்த்தாலாவது, கொஞ்சம் பணமாவது சம்பாரிக்கலாம். பதிவெழுதி, கதை எழுதி, தளத்தில் விளம்பரப்படுத்தி சம்பாரிக்கிறதுல வர்ர காசை வச்சு நாக்கு வழிக்கக்கூட முடியாது! எதுக்கு இப்படி நேரத்தை செலவழிச்சு.. இவனுகளோட கட்டி உருண்டு.. கடைசியில் அவன் அவன் கருத்தோட திரும்பிப் போயி.. நாந்தேன் ஜெயிச்சேன்னு லூசுமாரி சொல்லிக்கிட்டு திரிய? இது வெட்டி வேலைனு புரிஞ்சு ஒதுங்கிக்கிறவங்க ஒரு சிலர். இப்படிப் பல காரணங்கள் சொல்லலாம்.
ஆமா ரொம்ப நாள் குப்பை கொட்டிய வருணை எங்கப்பா காணோம்? செத்துட்டானா? எல்லாரு எழவைப்பத்தியும் ஒப்பாரி வைப்பானே? கடைசியில் இவனும் செத்துட்டானா? னு எவனாவது எழவுச் செய்தி சொல்றதுக்கு முன்னால இப்படி ஒரு பதிவைப் போடுறதுக்கு நேரம் ஒதுக்கி எப்படியோ ஒளறிக்கொட்டி உயிருடன் வந்துவிட்டான் வருண்! :)

Subscribe to:
Posts (Atom)