அதைவிட்டுப்புட்டு, சின்னப்புள்ளத்தனமா "நான் ஏன் தவறு செய்தேன்? நான் சொன்னதுதான் தமிழ் உச்சரிப்பு முறைப்படி சரி! நீங்க எல்லாரும் யோக்கியமா? இத்யாதி இத்யாதினு ஒரு பெரிய கட்டுரை எழுதி கடைசியில் நான் எழுதியதுதான் சுத்தமான தமிழ் உச்சரிப்புனு முடிச்சு..
தான் சொல்வது, தான் செய்வதுதான் எப்போவுமே சரினு ஒரு பெரிய விளக்கம்..
அதற்கு ஒரு சிறு பின்னணி உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் பிழையாகவே ஒரு கட்டுரையில் ஈவேரா என்று எழுதியிருந்தேன். என்ன காரணம் என்றால் தமிழில் திருப்பதியின் பெயர் வேங்கடம்தான். வெங்கடம் அல்ல. அந்த அடிப்படையில்தான் கி.வேங்கடசுப்ரமணியன் என்றும் ஆ.இரா.வேங்கடாசலபதி என்றும் எழுதுகிறார்கள். ஈவேரா அவரது பெயரை அப்படித்தான் எழுதுவார் என்று ஓர் அனிச்சையான நம்பிக்கையால் அப்படி எழுதினேன்.
ஆனால் எனக்கு ஆக்ரோஷமான நாலைந்து கடிதங்கள் வந்தன. ஈவேரா அவர்களின் தந்தைபெயர் வெங்கிட்ட நாயக்கர் என்றும் ஆகவே அவரது பெயரை ஈவெரா என்றுதான் எழுதவேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். ஆனால் என் பெயரை செயமோகன் என்று எழுதியிருந்தனர். அத்தனை பெயரையும் தமிழ்ப்படுத்தி எழுதக்கூடியவர்கள் அவர்கள். சுந்தர இராமசாமி என்று எழுதக்கூடியவர்கள். இன்றைக்கும் தமிழ் விக்கிபீடியாவில் இந்தக்கொள்கை உடையவர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்.
நான் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஒரு பெயரை அப்பெயருக்குரியவர் எப்படி எழுதுகிறாரோ அப்படி எழுதவேண்டும் என்பதுதான் மரபு. உலகளாவிய ஒரு நாகரீகம் அது. ஆனால் நீங்கள் பிறர் பெயரை உங்கள் கொள்கைப்படி மாற்றி எழுதுகிறீர்கள். அதற்கு மொழிசார்ந்த நியாயங்களைச் சொல்கிறீர்கள். அந்த நியாயம் உங்கள் தலைவருக்குச் செல்லுபடியாகாதா என்ன? அவரது பெயரை ஏன் தமிழ்முறைப்படி எழுதக்கூடாது? ஈ.வே.இராமசாமி என்றுதானே அவரை எழுதவேண்டும்? ஏன் தெலுங்கு உச்சரிப்பைத்தான் எழுதவேண்டும் என்கிறீர்கள்?
’சரி, கொள்கையளவில் ஒரு பொதுமுடிவுக்கு வருவோம். பெயர்களை மாற்ற பிறிதொருவருக்கு உரிமை இல்லை. தன் பெயரை ஒருவர் எப்படி எழுத விரும்பினாரோ அப்படித்தான் அனைவரும் எழுதவேண்டும். ஏனென்றால் அது ஓர் ஆவணம், ஓர் அடையாளம், அவ்வளவுதான். அது உங்களுக்கும் எனக்கும் பொருந்தும் விதி, ஆனால் ஈவேரா அவர்களுக்கு விதிவிலக்கு என்றால் அதை நான் ஏற்கமாட்டேன்’ என அவர்களுக்கு எழுதினேன். அதற்கு 16 பக்க வசைதான் பதிலாக வந்தது. நான் பிடிவாதமாக ஈவேரா என்று –தமிழ் மரபுப்படி – எழுத ஆரம்பித்தேன். அப்படியே கை பழகிவிட்டது.
இப்போதுகூட ஈவெரா என்று தெலுங்கு உச்சரிப்பையே எழுதத்தயார். பிற பெயர்களில் கைவைப்பது பிழை என இதைச் சுட்டிக்காட்டுபவர்கள் கொள்கையடிப்படையில் ஒத்துக்கொள்ளட்டும்.பிற தெலுங்கு, இந்தி பெயர்களையும் அவர்களின் மொழிமரபுப்படியே எழுதட்டும்.ஆக, இவர் என்ன தப்பு செய்தாலும், அது இவர் தமிழ்மரபை மனதில் கொண்டு தமிழுக்காக அவர் செய்த தவறு!! ! :))) ஈ வெ ரா என்பது தெலுகு உச்சரிப்பு! இவரு செய்ததுதான் சரியான தமிழ்! அதுதான் சரி சரி சரி!
ஈ வெ ரா பெயர் தெலுகு உச்சரிப்பில்தான் இருக்கு. அதனால என்ன இப்போ? அவரு வீட்டிலே எல்லாரும் தெலு(ங்)குலயோ இல்லை கன்னடத்திலேயோதான் பேசி இருப்பாங்க. அதானே அவர்களுக்குத் தாய்மொழி?
பின்னால் தன்னை ஒரு தமிழன் னு மார்தட்டிய பெரியார், கன்னடத்திலே, தன் தாய்மொழியில் இளமையில் பேசியிருக்கக்கூடாதுனு சொல்வாரா?
மேலும் ராமசாமி என்பதே "பகவான்" ராமன் பேரை தழுவியது. ஆக இவரும் "பகவானின்" சுமார் 42வது அவதாரம்தான்னு ஏதாவது விளக்கம் சொன்னாலும் சொல்லுவா!
நான் அப்போவே சொன்னேன். ஜெயமோகனைப் பிடிச்சுக் கொண்டுபோயி ஏர்வாடில கட்டிப்போடுங்கப்பானு! எவன் கேக்கிறான்! இப்போ எல்லாரையும் ஏர்வாடிக்கு அனுப்பிரும்போல இந்த ஒரு மேதாவி! :)
5 comments:
ஜெயமோகன் பண்ற அலப்பறைகளைப் பார்த்தால் சாருவே தேவலை எனத் தோன்னுது. ஈ வெ ரா என்பது தான் சரி. சுருக்கங்களில் தமிழ் இலக்கணம் எப்படி செல்லும். ஜெயமோகன் என்பதை செயமோகன் என எழுதக் கூடாது தான். ஆனால் தமிழ் நெடுங்கணக்கில் உண்மையில் ஜ கிடையாது, விக்கிபீடியாவில் அச்சு எழுத்து முறைகளை பின்பற்றுவதில்லை. ஆய ஜ-வுக்கு இணையான ச, ய தான் எழுத வேண்டும். இப்போ ஈ வெ ரா என்பதில் உள்ள வெ என்பது தெலுகு உச்சரிப்ப மட்டுமில்லை. தமிழில் வெ வே இரண்டும் உண்டு. வலிந்து போய் வெ போட மாட்டேன் வே தான் போடுவேன் என்பது சுத்த மர கழன்ற கேசே! இப்போது BABAR என்பதை தமிழில் பாபர், வாவர் என்றே எழுத வேண்டும். தமிழில் இல்லை என்பதால் ஆங்கில B என்பதை தமிழ் எழுத்தோடு பிணைக்க முடியுமா?! ஜெயமோகன் ஏன் இப்படி ஒன்றும் தெரியாதது போல் உளறுகின்றாரோ. அவாக்களின் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் கிரந்தத்தை தமிழோடு பிணைக்க வேண்டும், வடமொழியை தமிழோடு கோர்த்து மணியாட்ட வேண்டும்.
தவறாக எழுதியிருந்தால் ஒத்துக்கொள்வதுதான் பெருந்தன்மை.
ஷய மோகன் பெரியாரை எப்படி கூப்பிட்டாலும் கூப்பிடட்டுமே. இது ஷய மோகன் பிறப்புரிமை!
அதே மாதிரி, நாம் இவரை
ஷய மோகன்
அல்லது
ஷயம் மோகன்
அல்லது
ஒரிஜினல் லூஸு மோகன்
..என்று எப்படி இஷ்டப் படுகிரீர்களோ அப்படி கூப்பிட்டு விட்டு போகவேண்டியது தானே!
//நான் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஒரு பெயரை அப்பெயருக்குரியவர் எப்படி எழுதுகிறாரோ அப்படி எழுதவேண்டும் என்பதுதான் மரபு. உலகளாவிய ஒரு நாகரீகம் அது. ஆனால் நீங்கள் பிறர் பெயரை உங்கள் கொள்கைப்படி மாற்றி எழுதுகிறீர்கள். //
வணக்கம் மச்சான் நலமா?
நம்ம செயமோகன் அண்ணனுக்கு என்ன்மோ ஆகிவிட்டது. ஒரு மொழிப் பெயரை இன்னொரு மொழியில் இலக்கணத்திற்கு ஏற்ப எழுதும் போது ஒலி மாறும் என்பதே உலக நியதி. இது தெரியாமல் அண்ணன் இருப்பதும், இவருக்கு பல சீடர்கள் இருப்பதும் வியப்யையே தருகிறது.
பாருங்கள் ஆங்கிலத்தில் ஜீசஸ் என்பது அரபியில் ஈசா, தமிழில் இயேசு…இத்ர மொழிகளுக்கு சுட்டி பாருங்கள்!!!
http://en.wikipedia.org/wiki/Jesus_(name)
அதே போல் இராம் என்னும் சம்ஸ்கிருதத்தை தமிழில் இராமன் என்போம். கீதா என்பதை கீதை என்போம்.
அரபியில் குரான் என்ப்படுவது ஆங்கிலத்தில் இருவிதமாக Koran, Quran குறிப்பிடப்படுகிறது!!!,
http://en.wikipedia.org/wiki/Language_change
மொழி மாறினால் உச்சரிப்பு எப்படி மாறும் என்பதன் விக்கி சுட்டி!!!
http://en.wikipedia.org/wiki/Language_change
பல தமிழ் சொற்கள் கூட சமஸ்கிருதத்தில் உருமாறி இருக்கிறதே.
http://aruniyan.wordpress.com/2012/04/21/words-claimed-to-be-sanskrit-origin/
ஒரு சொல் வெவ்வேறு விதமாக உச்சரிக்கும் போது திரிந்துதானேபுதிய மொழிகள் உருவாகின!!!
http://en.wikipedia.org/wiki/Word_formation
அண்ணனின் சரக்கு இவ்வளவுதான் என்பதை சீடர்கள் புரிந்து ஒதுங்குவது நல்லது!!!
நன்றி!!!
நன்றி!!!
நல்ல பகிர்வு...
பகிர்வுக்கு நன்றி.
Post a Comment