Tuesday, November 5, 2013

பதிவெழுத சரக்கு தீர்ந்து போயிடுச்சா? இல்ல செத்துட்டானா?!

ஒரு காலத்தில் பெரும்புள்ளியா இருந்தவங்க எல்லாம் பதிவுலகைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா கழண்டு காணோமாப் போயிடுறது பதிவுலகில் சாதாரணம்.  பதிவுலகில் ரொம்ப நாள் குப்பை கொட்டுறவங்களுக்குத் தெரியும் இந்த "ட்ரெண்ட்". இன்னொரு பக்கம் புதுசா வர்ர திறமைமிக்க பதிவர்கள் எல்லாம் வந்த கொஞ்ச நாளில், அவர்களுக்கு கிடைக்கும் "வரவேற்பில்", "மரியாதையில்"  நாந்தான் இங்கே ராஜா னு ஒரு நெனைப்போட திரிவதையும் பார்க்கலாம். இது போல் புதிய ராஜாக்கள்  வருவதும், கொஞ்சநாள் ஆள்வதும், பிறகு அழிவதும் பதிவுலகிலும் காலங்காலமா நடந்துகொண்டுதான் இருக்கு.  ஒரு சில ராஜாக்கள் ஆண்டபிறகு காணோமாப் போறது  மட்டுமல்ல! அவங்க தளமும் பதிவுகளும்கூட அவர்களோட சேர்ந்து காணோமாப் போயிடுது! இவனுக செத்துத் தொலையிறானுக! இவனுக பதிவும் ஏன் இவனுகளோட சாகணும்னு எனக்கு விளங்குவது இல்லை! தமிழன் செதுத்துக்கிட்டுதான் இருக்க்கான் ஆனால் தமிழ் ஒரு நாளும் சாகாது! இல்லையா?

ஏன் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவங்க, திறமைமிக்க பதிவர்கள்  எல்லாம் ஏனோ ஒதுங்கி ஓடிறாங்க. இந்த "ராஜாக்கள்" ஏன் திடீர்னு "துறவரம்" போயிடுறாணுக? என்ன காரணம்? செத்துட்டாணுகளா? னு யோசித்துப் பார்த்தால்..

வாழ்க்கைச் சக்கரம் சுழலும்போது, ஒவ்வொருவருடைய தேவைகள், ஆசைகள், இண்டெரெஸ்ட் எல்லாம் மாறிக்கொண்டே வருது. நேற்று முக்கியமாக தோன்றிய பதிவுலக பிரவேஷம் இன்னைக்குத் தோன்றுவதில்லை! வேலைப் பளு காரணமாக சில பதிவர்கள் ஒதுங்கிடுவாங்க! குடும்ப சூழல்களில் ஏற்படும் மாற்றங்களால் சிலர்! உடல்நலக்குறைவு காரணமாக ஒரு சிலர்! காதல், கல்யாணம், குழந்தைகுட்டி னு ஒரு சிலர் போயிடுறாங்க. திடீர்னு "இளவரசர்" புத்தனுக்கு வந்தமாரி ஞானோதயம்!  என்னைத்த பதிவெழுதி என்னத்தக் கிழிக்கப் போறோம்? னு திடீர்னு ஒரு  ஞானோதயம் ஒரு சிலருக்கு. இந்த பதிவெழுதுற நேரத்தில் கொஞ்சம் பகுதி நேரம் வேலை பார்த்தாலாவது, கொஞ்சம் பணமாவது சம்பாரிக்கலாம். பதிவெழுதி, கதை எழுதி, தளத்தில் விளம்பரப்படுத்தி சம்பாரிக்கிறதுல வர்ர காசை வச்சு   நாக்கு வழிக்கக்கூட முடியாது! எதுக்கு இப்படி நேரத்தை செலவழிச்சு.. இவனுகளோட கட்டி உருண்டு.. கடைசியில் அவன் அவன் கருத்தோட திரும்பிப் போயி.. நாந்தேன் ஜெயிச்சேன்னு லூசுமாரி சொல்லிக்கிட்டு திரிய? இது வெட்டி வேலைனு புரிஞ்சு ஒதுங்கிக்கிறவங்க ஒரு சிலர். இப்படிப் பல காரணங்கள் சொல்லலாம்.

ஆமா ரொம்ப நாள் குப்பை கொட்டிய வருணை எங்கப்பா காணோம்? செத்துட்டானா? எல்லாரு எழவைப்பத்தியும் ஒப்பாரி வைப்பானே? கடைசியில் இவனும் செத்துட்டானா? னு எவனாவது எழவுச் செய்தி சொல்றதுக்கு முன்னால இப்படி ஒரு பதிவைப் போடுறதுக்கு நேரம் ஒதுக்கி எப்படியோ ஒளறிக்கொட்டி உயிருடன் வந்துவிட்டான் வருண்!  :)

12 comments:

Avargal Unmaigal said...

குப்பை கொட்டிய வருண் அல்ல எல்லோர் தலையிலும் கொட்டிய வருண் எங்கே என்று நான் கூட நினைத்தேன். ஒரு வேளை இந்தியாவிற்கு வெகேஷனுக்கு போய் இருப்பீர்களோ என்று கூட நினைத்தேன்

mahesh said...

mm ninga solurathu ellam correct tan. nanum pala pathivarkala pathu iruken. ana ippo blog vidavum facebook la eluthuna instant replys and athika pera reach akumnu ninaikkuranga. ennathan analum blog vera fb la eluthurathu vera. ningalachum monthly once achum ippadi onno irando . eluthunga. ungaloda palaya pathivakala time kidaikkurappo padithu kondu tan irukkuren sir

கிரேஸ் said...

ஹா ஹா

சே. குமார் said...

ஏன் இப்படி?
தொடர்ந்து எழுதுங்க வருண்...

புகைப்படபிரியை புனிதா said...

மீண்டும் எழுதியமைக்கு நன்றி..

பழனி. கந்தசாமி said...

//என்னைத்த பதிவெழுதி என்னத்தக் கிழிக்கப் போறோம்?//

தோழர் வலிப்போக்கன் said...

எனக்கு வந்த ஞானோதயம் என்னைத்த பதிவெழுதி என்னத்தக் கிழிக்கப் போறோம்?

Amudhavan said...

பொதுவாகவே எந்த ஒரு விஷயத்திலும் அளவுக்கதிகமாக தீவிரம் காட்டுபவர்கள் வெகு சீக்கிரத்திலேயே சோர்ந்துபோவது நடக்கும்தான். குறிப்பிட்ட நிதானத்துடன் போகிறவர்கள் அவ்வளவு சீக்கிரமாகச் சோர்ந்துவிடுவதில்லை. பதிவுலகிலும் இதுதான் நடக்கிறது.கூடவே நீங்கள் சொன்ன காரணங்களும் அடங்குகின்றன.
வருண் எழுதி நீண்ட நாட்களாகின்றனவே என்று நானும் தேடினேன். விடுமுறைக்கு வேறு ஊருக்கோ நாட்டிற்கோ சென்றிருக்கவேண்டும் என்றுதான் நினைத்தேன்.
மறுபடி எழுத ஆரம்பித்திருப்பதற்கு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

என்னைத்த பதிவெழுதி என்னத்தக் கிழிக்கப் போறோம்?ஆஹா அப்படிப்போடுங்க கேள்வியை:)))

Jayadev Das said...

நீங்களும் நம்ம கேசுதானா? நான் கொஞ்ச நாலா பதிவு ஏதும் படிக்கலை, நீங்க எஸ்கெப் ஆனது தெரியாது. ஹி ................ஹி ................ஹி ................

ஜோதிஜி திருப்பூர் said...

குறிப்பிட்ட நிதானத்துடன் போகிறவர்கள் அவ்வளவு சீக்கிரமாகச் சோர்ந்துவிடுவதில்லை.

இன்ட்லியில் தலைப்பை பார்த்ததும் நீங்க தான் எழுதியிருப்பீங்கன்னு உள்ளே வந்தேன்.

அமுதவன் சரியா சொல்லியிருக்காரு வருண்.

துளசி கோபால் said...

writers block என்று கௌரவமாச் சொல்லிக்கலாமா வருண்!

நான் ஒரு வாரம் லீவுன்னு கடைசிப் பதிவில் போட்டுருந்தேன். இப்ப லீவை நீட்டிக்கணும் :(

ஈரவிறகுன்னு காரணம் சொல்லலாம்:-)))