Friday, December 19, 2014

லிங்கா பற்றி புரளி பரப்பினால் அபாயம்!!!

பணம் செலவழித்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறாங்க. அது லிங்காவிலிருந்து ஆரம்பம் ஆகிறது. நீங்க ஏதாவது படத்தைப் பற்றி விமர்சிக்க உங்களுக்கு உரிமை உண்டு. படம் நல்லாயிருக்கு இல்லைனா படம் நல்லாயில்லை என்று படத்தை விமர்சிக்கலாம். மற்றபடி, எதையும் மிகைப்படுத்தி எழுதினால் சட்டம் உங்க மேலே பாயலாம். அதுவும் ட்விட்டர், ஃபேஸ் புக்கில் ஆதாரமில்லாமல் தகவல் வெளியிட்டால் உங்க அக்கவுண்ட் முடக்கப் படலாம்.

நீங்க நினைப்பதைவிட இது ஒரு சீரியஸான மேட்டராக மாறிக்கொண்டு வருகிறது. என்னை நம்புங்கள்!

 நேற்று ஒரு யு ட்யூபில் தன்னை திருச்சி தஞ்சாவூர் லிங்கா விநியோகஸ்தர்கள் என்று சொல்லிக்கொண்டு இருவர், படத்துக்கு கூட்டமே இல்லை என்று பிரச்சாரம் செய்தார்கள். "இவர்கள் யார்? சில  உண்மைகளோடு பல பொய்களையும் கலந்து ஒரு தகவலை வெளியிடுகிறார்களோ?" என்கிற சந்தேகம்  அந்த யுட்யூப் பார்த்தவர்களுக்கு உருவாகும்! ஏன் என்றால் இவ்வளவு காசு கொடுத்து பட உரிமை வாங்கியவன் இப்படி ஒரு விளம்பரம் வெளியிட்டால் அவனுக்கு இன்னும் நஷ்டம்தான் வரும். ஒரு வியாபாரி அதை நிச்சயம் செய்ய மாட்டான்! எதிர்பார்த்ததுபோலவே  பிறகு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து  இந்த யு-ட்யூப் வெளியிட்ட இவர்கள் விநியோக உரிமை பெற்றவர்கள் அல்ல, பொய்யர்கள், லிங்கா பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.. அவர்களை போலீஸ் தேடுகிறது என்கிற செய்தியும் அடுத்த நாளே வருகிறது.

 https://pbs.twimg.com/media/B5PQ9tMCYAA7o41.jpg

ஆதாரம் இல்லாமல் திரு ஸ்ரிதர் பிள்ளை "லிங்கா லிம்ப்பிங்" என்று அவர் ட்விட்டரில் எழுதியதை பலரும் ட்விட்டரில் எதிர்க்கிறார்கள். "இது  ஆதாரமில்லாத செய்தி" என்கிறார்கள். அவருக்கும் லீகல் பிரச்சினை வர வாய்ப்பிருக்கு போல தோனுது.

லிங்கா படத்தை விமர்சியுங்கள்! படம் நல்லாயில்ல, படம் எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள். ஆனால் அதே சமயத்தில் அளவுக்கு அதிகமாக உங்க சொந்த வார்த்தையைப் போட்டு வாக்கியங்கள் அமைத்து உங்களையே அறியாமல் பொய்களை எழுதினால் உங்களுக்கும் உங்க தளத்திற்கும் சட்டப்படி பிரச்சினை வரலாம். கவனம்!!

18 comments:

Mythily kasthuri rengan said...

ஓஹோ!! மிரட்டலோ??

வருண் said...

வாங்க மைதிலி!! :))))

நெஜம்மாத்தாங்க சொல்லுறேன். நமக்கு பேசுரிமை உண்டு. எப்படி வேணா படத்தை விமர்சிக்கலாம்.

"அதே சமயத்தில் முதல் நாளே படத்துக்கு 10 பேர்தான் வந்திருந்தார்கள்" னு உண்மையில் நடக்காததை உண்மைபோல் சொன்னால் சொன்னவர்கள் மேல் சட்டம் பாயலாம். அந்த ஒரு சூழலில்தான் இப்போ இருக்கு! :)

Gurunathan said...

நல்ல விமர்சனம் எது, கெட்ட விமர்சனம் எது என்று எவ்வாறு வ்கைப்படுத்துவார்கள்?
நெகடிவ் விமர்சனங்களால் தங்கள் முதலுக்கு ஆபத்து வந்து விட்டதே என்ற பயம் சினிமா வியாபாரிகளுக்கு.

தூம் படத்தில் அமீர்கானை சரமாரியாக விமர்சித்தவர்கள்தான் இன்று படத்தைக் கொண்டாடுகிறார்கள். அதனை தமிழ் இயக்குனர்கள்/தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இணையதள கருத்து சுதந்திரம் தொடர்பாக இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைப் பாருங்கள்.

பொய்யான கருத்துக்களைப் பரப்பக் கூடாது என்கிற கருத்தில் உடன்படுகிறேன்.
மற்றபடி என் எழுத்துக்கள், எழுதும் பாணியை நான் தீர்மானிப்பேன்.
சினிமா வியாபாரிகள் அல்ல.

Mythily kasthuri rengan said...

ரஜினியை விட எனக்கு நட்பு முக்கியம்.LOOSING AN ARGUMENT IS BETTER THAN LOOSING A FRIEND:)) take care Varun :) see you in ur next post:)

Seshadri said...

we can punish them by forced to watch linga movie 10 times .

Seshan

வருண் said...

*** Gurunathan said...

நல்ல விமர்சனம் எது, கெட்ட விமர்சனம் எது என்று எவ்வாறு வ்கைப்படுத்துவார்கள்?
நெகடிவ் விமர்சனங்களால் தங்கள் முதலுக்கு ஆபத்து வந்து விட்டதே என்ற பயம் சினிமா வியாபாரிகளுக்கு.

தூம் படத்தில் அமீர்கானை சரமாரியாக விமர்சித்தவர்கள்தான் இன்று படத்தைக் கொண்டாடுகிறார்கள். அதனை தமிழ் இயக்குனர்கள்/தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இணையதள கருத்து சுதந்திரம் தொடர்பாக இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைப் பாருங்கள்.

பொய்யான கருத்துக்களைப் பரப்பக் கூடாது என்கிற கருத்தில் உடன்படுகிறேன்.
மற்றபடி என் எழுத்துக்கள், எழுதும் பாணியை நான் தீர்மானிப்பேன்.
சினிமா வியாபாரிகள் அல்ல.***

குருநாதன்: நீங்க கடுமையாக விமர்சிக்கலாம் அஞ்சுக்கு அரை ஸ்டார் கொடுக்கலாம். ஆனால், உண்மையில் நடக்காத ஒன்றை நடந்ததாக சொல்லி அவதூறு பரப்பினால்.. எங்கே நடந்தது? நானும் அந்த் தியேட்டர் ல அந்த ஷோ பார்த்தேன். என்ரு உங்கள் உண்மையின் லட்சணத்தை கேட்கலாம். மற்றபடி பேச்சுரிமை இருக்கு. நீங்க கடுமையாக விமர்சிக்கலாம். :)

வருண் said...

***Mythily kasthuri rengan said...

ரஜினியை விட எனக்கு நட்பு முக்கியம்.LOOSING AN ARGUMENT IS BETTER THAN LOOSING A FRIEND:)) take care Varun :) see you in ur next post:)

December 19, 2014 at 6:39 ***

Dont worry about that..You are not going to lose your friend VarN until he dies. He will die as your friend only, I promise. You can certainly criticize my weakness mythili! :)

வருண் said...

***Blogger Seshadri said...

we can punish them by forced to watch linga movie 10 times . ***

Dont do that. Instead get me those tickets, I will certainly watch 10 times and get myself "punished". When can you get me those tickets, sesh? :)

Iniya said...

ரஜினியை விட எனக்கு நட்பு முக்கியம்.LOOSING AN ARGUMENT IS BETTER THAN LOOSING A FRIEND:)) take care Varun :) see you in ur next post:)

December 19, 2014 at 6:39 ***

Dont worry about that..You are not going to lose your friend VarN until he dies. He will die as your friend only, I promise. You can certainly criticize my weakness mythili! :)

wow I like this conversation and the promise Varun. ha ha.... I am really proud of u guys.

வருண் said...

**Iniya said...

ரஜினியை விட எனக்கு நட்பு முக்கியம்.LOOSING AN ARGUMENT IS BETTER THAN LOOSING A FRIEND:)) take care Varun :) see you in ur next post:)

December 19, 2014 at 6:39 ***

Dont worry about that..You are not going to lose your friend VarN until he dies. He will die as your friend only, I promise. You can certainly criticize my weakness mythili! :)

wow I like this conversation and the promise Varun. ha ha.... I am really proud of u guys. ***

Are you jealous, INIYA!!! :) Just kidding. Your friendship with her is MUCH STRONGER! I am just a friend of some sort, just like a facebook friend. That's all :)))

BTW good to see you iniya after a short break from my end. :)

Thulasidharan V Thillaiakathu said...

முதலில், நாங்களும் இந்தத் துறையில் இருப்பதால் என்னதான் படங்கள் மிகவும் மோசமாக வந்தாலும், விமர்சிக்க உரிமை இருந்தாலும் அதை மிகவும் கீழ்தரமாக விமர்சிக்காமல், கெட்டதை ஜஸ்ட் லைக் தட் டாகச் சொல்லிவிட்டு நல்லதை மட்டும் சொல்லலாமே என்ற கருத்துடையவர்கள். ஏனென்றால் ஒரு படம் என்பது அதை எடுப்பவரின் குழந்தை போன்றது. எப்படி நமக்கு விமர்சிக்க உரிமை உள்ளதோ அது போல தனது படத்தின் மூலம் கதையையோ, கருத்தையோ சொல்ல எல்லா உரிமையும் ஒரு படம் எடுப்பவருக்கு உண்டு....என்பது எங்கள் தாழ்மையான கருத்து.

இரண்டாவது நமது விமர்சனம் எதையும் மாற்றப் போவது இல்லை. மாஸ் என்பதுதான் இங்கு.

இப்படியும் பிரச்சினைகள் வரும் என்பதை ஊடங்களின் வாயிலாக அறிகின்றோம்...இதோ நீங்களும் சொல்லியாச்சு...

னீங்களும் மைதிலி சகோதரியும் பேசிக்கொண்டதை மிகவும் ரசிக்கின்றோம். ஆம் ஒரு நட்பு வீணான விவாதங்களால் முறியக்கூடாது என்பது போல் தங்களின் கருத்தையும் மிகவும் வரவேற்கின்றோம்... ஏனென்றால் நாங்களும் அதைத்தான் பின்பற்றி வருகின்ரோம்....விமர்சனம், கருத்து என்பது வேறு, நட்பு அன்பு என்பது வேறு. உண்மையான அன்பும் மரணம் வரை தொடரும்,எத்தனைக் கருத்து வேறுபாடுகள் வந்தாலும்....

ஹாட்ஸ் ஆஃப் டொ யு நண்பா.....ரு மைதிலி சகோதரிக்கும் சேர்த்து....

Mythily kasthuri rengan said...

** I am just a friend of some sort, just like a facebook friend. That's all :)))** is that so:(((
but my word is a word and commitment is a commitment. I don't think so:)if I call someone anna, then he is my anna and the same to a friend:)there is no categories for my friends in my dictionary :) I mean it. have a gr8 day friend:)

Mythily kasthuri rengan said...

**
ஹாட்ஸ் ஆஃப் டொ யு நண்பா.....ரு மைதிலி சகோதரிக்கும் சேர்த்து...**
thank you thillai sagaas:)

வருண் said...

***Thulasidharan V Thillaiakathu said...

முதலில், நாங்களும் இந்தத் துறையில் இருப்பதால் என்னதான் படங்கள் மிகவும் மோசமாக வந்தாலும், விமர்சிக்க உரிமை இருந்தாலும் அதை மிகவும் கீழ்தரமாக விமர்சிக்காமல், கெட்டதை ஜஸ்ட் லைக் தட் டாகச் சொல்லிவிட்டு நல்லதை மட்டும் சொல்லலாமே என்ற கருத்துடையவர்கள். ஏனென்றால் ஒரு படம் என்பது அதை எடுப்பவரின் குழந்தை போன்றது. எப்படி நமக்கு விமர்சிக்க உரிமை உள்ளதோ அது போல தனது படத்தின் மூலம் கதையையோ, கருத்தையோ சொல்ல எல்லா உரிமையும் ஒரு படம் எடுப்பவருக்கு உண்டு....என்பது எங்கள் தாழ்மையான கருத்து.

இரண்டாவது நமது விமர்சனம் எதையும் மாற்றப் போவது இல்லை. மாஸ் என்பதுதான் இங்கு.

இப்படியும் பிரச்சினைகள் வரும் என்பதை ஊடங்களின் வாயிலாக அறிகின்றோம்...இதோ நீங்களும் சொல்லியாச்சு...

னீங்களும் மைதிலி சகோதரியும் பேசிக்கொண்டதை மிகவும் ரசிக்கின்றோம். ஆம் ஒரு நட்பு வீணான விவாதங்களால் முறியக்கூடாது என்பது போல் தங்களின் கருத்தையும் மிகவும் வரவேற்கின்றோம்... ஏனென்றால் நாங்களும் அதைத்தான் பின்பற்றி வருகின்ரோம்....விமர்சனம், கருத்து என்பது வேறு, நட்பு அன்பு என்பது வேறு. உண்மையான அன்பும் மரணம் வரை தொடரும்,எத்தனைக் கருத்து வேறுபாடுகள் வந்தாலும்....

ஹாட்ஸ் ஆஃப் டொ யு நண்பா.....ரு மைதிலி சகோதரிக்கும் சேர்த்து...***

வாங்க முரளிதரன். :) உங்க ஆழ்ந்த கருத்துக்கு நன்றிங்க.

வருண் said...

***Mythily kasthuri rengan said...

** I am just a friend of some sort, just like a facebook friend. That's all :)))** is that so:(((
but my word is a word and commitment is a commitment. I don't think so:)if I call someone anna, then he is my anna and the same to a friend:)there is no categories for my friends in my dictionary :) I mean it. have a gr8 day friend:) ***

I was only teasing iniyaa, mythili. :) Take it easy. :)

-'பரிவை' சே.குமார் said...

எப்படியெல்லாம் மிரட்டுறாங்க பாருங்க....

ரவிக்குமார் படம் பாக்க வா, பலூன் சண்டை பிடிக்கலைன்னா படம் அதுக்கு முன்னால முடிஞ்சிருச்சின்னு நினைச்சு போன்னு சொல்லுறாரு... அவரு காசு கொடுத்து நாம பாக்குற மாதிரி...

இந்த மிஷ்மின் அவன் வருவான், அவன் பொண்டாட்டி வருவான்னு கெட்ட கெட்ட வார்த்தை போட்டு இணைய எழுத்தாள விமர்சகர்களை ஒரு பொது மேடையில் பேசுறார்...

படம் பாக்குறவன் நல்லாயிருக்கு நல்லாயில்லைன்னு சொல்ல உரிமை இல்லையா என்ன?

அதுபோக அப்ப எப்படி குப்பை என்றாலும் யாருக்கும் தெரியாது. இப்ப இணைய வளர்ச்சி காப்பி அடிப்பதைக் கூட எடுத்துக்காட்டோட சொல்ல வைக்கிது...

கோடிகளைக் கொட்டி எடுப்பவர்கள் தரமானதாக எடுக்கலாமே?

உங்கள் கட்டுரை உண்மையிலேயே எல்லோரும் குறிப்பாக சினிமா விமர்சகர்கள் அறிய வேண்டிய ஒன்று.

எதோ ஒரு படத்துக்கு எழுதப் போய் அவர்களின் தளம் முடக்கப்பட வேண்டுமா என்ன...

நன்றி வருண்.

Mathu S said...

சும்மா பூச்சாண்டி...
ஒரு நிருபரிடம் பேசியதில் விமர்சனம் கூட எழுதக் கூடாது விடுதல் செய்ய வேண்டிய படம் என்கிறார்கள் ...

வருண் said...

வாங்க மது! :)

பார்க்காமல் விடுதல் செய்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்பதென்னவோ உண்மைதான். :)