Showing posts with label சட்டம். Show all posts
Showing posts with label சட்டம். Show all posts

Monday, May 11, 2015

நீதிபதி குன்ஹாவின் இன்றைய மனநிலை!!

பார்பனர்கள்போல் நான் சிந்திப்பதில்லை! எப்போதுமே என் சிந்தனைகள் ஓரளவுக்கு அர்த்தமுள்ளதாகவே இருக்கும். எனக்காக ஒரு கடவுளை உருவாக்கி என்னையே ஏமாற்றிக்கொள்பவனல்ல நான்! மனசாட்சியை ஓரமாக வைத்துவிட்டு நான் உருவாக்கிய  பகவானிடம் நான் வேண்டுவதில்லை! அதனால்தான் நான் சட்டம் படிக்கவில்லை! ஆனால் பாவம் நீதிபதி குன்ஹா. அவர் மனநிலை எப்படி இருக்கும்? சட்டம் படித்து நாசமாகப் போய்விட்டார். அவர் படித்த சட்டத்தை, நீதியை எல்லாம் நமது சமூகம் மற்றும் அரசியல் சூழல் கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டது. அவருக்காக நாம் ஒப்பாரி வைக்க வேண்டிய இச்சூழலில், நாமெல்லாம் அநீதி வென்றதைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். என்ன பரிதாபம்?! I really really feel sorry for Mr. Cunha today!

Friday, December 19, 2014

லிங்கா பற்றி புரளி பரப்பினால் அபாயம்!!!

பணம் செலவழித்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறாங்க. அது லிங்காவிலிருந்து ஆரம்பம் ஆகிறது. நீங்க ஏதாவது படத்தைப் பற்றி விமர்சிக்க உங்களுக்கு உரிமை உண்டு. படம் நல்லாயிருக்கு இல்லைனா படம் நல்லாயில்லை என்று படத்தை விமர்சிக்கலாம். மற்றபடி, எதையும் மிகைப்படுத்தி எழுதினால் சட்டம் உங்க மேலே பாயலாம். அதுவும் ட்விட்டர், ஃபேஸ் புக்கில் ஆதாரமில்லாமல் தகவல் வெளியிட்டால் உங்க அக்கவுண்ட் முடக்கப் படலாம்.

நீங்க நினைப்பதைவிட இது ஒரு சீரியஸான மேட்டராக மாறிக்கொண்டு வருகிறது. என்னை நம்புங்கள்!

 நேற்று ஒரு யு ட்யூபில் தன்னை திருச்சி தஞ்சாவூர் லிங்கா விநியோகஸ்தர்கள் என்று சொல்லிக்கொண்டு இருவர், படத்துக்கு கூட்டமே இல்லை என்று பிரச்சாரம் செய்தார்கள். "இவர்கள் யார்? சில  உண்மைகளோடு பல பொய்களையும் கலந்து ஒரு தகவலை வெளியிடுகிறார்களோ?" என்கிற சந்தேகம்  அந்த யுட்யூப் பார்த்தவர்களுக்கு உருவாகும்! ஏன் என்றால் இவ்வளவு காசு கொடுத்து பட உரிமை வாங்கியவன் இப்படி ஒரு விளம்பரம் வெளியிட்டால் அவனுக்கு இன்னும் நஷ்டம்தான் வரும். ஒரு வியாபாரி அதை நிச்சயம் செய்ய மாட்டான்! எதிர்பார்த்ததுபோலவே  பிறகு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து  இந்த யு-ட்யூப் வெளியிட்ட இவர்கள் விநியோக உரிமை பெற்றவர்கள் அல்ல, பொய்யர்கள், லிங்கா பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.. அவர்களை போலீஸ் தேடுகிறது என்கிற செய்தியும் அடுத்த நாளே வருகிறது.

 https://pbs.twimg.com/media/B5PQ9tMCYAA7o41.jpg

ஆதாரம் இல்லாமல் திரு ஸ்ரிதர் பிள்ளை "லிங்கா லிம்ப்பிங்" என்று அவர் ட்விட்டரில் எழுதியதை பலரும் ட்விட்டரில் எதிர்க்கிறார்கள். "இது  ஆதாரமில்லாத செய்தி" என்கிறார்கள். அவருக்கும் லீகல் பிரச்சினை வர வாய்ப்பிருக்கு போல தோனுது.

லிங்கா படத்தை விமர்சியுங்கள்! படம் நல்லாயில்ல, படம் எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள். ஆனால் அதே சமயத்தில் அளவுக்கு அதிகமாக உங்க சொந்த வார்த்தையைப் போட்டு வாக்கியங்கள் அமைத்து உங்களையே அறியாமல் பொய்களை எழுதினால் உங்களுக்கும் உங்க தளத்திற்கும் சட்டப்படி பிரச்சினை வரலாம். கவனம்!!

Sunday, July 14, 2013

மார்ட்டின் மரணம்! ஸிம்மர்மேன் நாட் கில்ட்டி!

அமெரிக்காவில் ஒரு கொலை வழக்கு! இங்கு நீதிவழங்குவது எல்லாம் நம்ம ஊர்போல நீதிபதிகள் அல்ல! ஆமாம், ஒருவரை குற்றவாளியா? இல்லையா?னு முடிவுசெய்வது சட்டம் படித்த, வயதில் முதிர்ந்த  நீதிபதிகள் அல்ல! சாதாரண பொதுமக்களில் சிலர்.

* 17 வயது மார்ட்டின் என்கிற கருப்புப் பையன் கொலை செய்யப்பட்டார்.

* கொலைசெய்த, (லட்டினோ மற்றும் வெள்ளையர்கள் கலப்பு)  ஸிம்மர்மேன் (30 வயது? ), தற்காப்புக்காகக் கொன்றேன் என்று தன்னிலை விளக்கம் கொடுக்கிறார்.

சட்ட நிர்வாகத்தால் ஆறு பெண்கள்தான் (பொதுமக்கள்) ஜூரியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இவர்கள், சாதாரண பொது மக்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள், இவர்கள் முன்னால் அரசாங்க வ்க்கீல்கள் குழு, ஸிம்மர்மேன் கில்ட்டி என்று வாதிட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஸிம்மர்மேன் வக்கீல்கள் அவர் தற்காப்புக்காக கொன்றார் என்று வாதிட்டார்கள்.

நடந்தது என்ன?

மார்ட்டின் என்கிற 17 வயதுப் பையன் இரவு 6-7 மணிப்போல ஸிம்மர்மேன் வாழும் அந்தப்பகுதியில் நடந்து போய்க்கொண்டு இருக்கிறான். அவன் எதையோ திருடப்போகிறான் என்று அவன் நடவடிக்கை மற்றும் அவன் மேல் சந்தேகப்பட்ட ஸிம்மர்மேன் (போலிஸ் இல்லை), அவனை காரில் இருந்துகொண்டே தொடர்ந்து இருக்கிறான்.

இந்த நிகழ்வு நடந்தபோது இந்த இருவரைத் தவிர பக்கத்தில் யாருமே இல்லை. சாட்சினு யாரும் கெடையாது!

நிகழ்வு நடக்கும் முன்பு, ஸிம்மர்மேன், போலிஸை 911ல் அழைத்து இதுபோல் சந்தேகப்படும்படி ஒருவன் நடக்கிறான். அவனை நான் ஃபாலோ பண்ணுகிறேன் என்று சொல்ல, போலிஸ் அவனிடம் காரைவிட்டு வெளியில் வராதே! அவனைத் தொடாதே! என்று சொல்லியுள்ளது.

அதன்பிறகு, போலிஸ் அங்கு வருமுன்னே, தொடரப்பட்ட மார்ட்டினுக்கும், தொடர்ந்த ஸிம்மர்மேனுக்கும் கைகலப்பு நடந்து இருக்கிறது. தன்னைத் தொடர்வதை உணர்ந்த மார்ட்டின் ஸிம்மெர்மேனை பயங்கரமாகத் தாக்கியதாக ஸிம்மர்மேன் சொல்கிறார். ஆதாரமாக ஸிம்மர்மேன் மூக்கு லேசா உடைக்கப்பட்டு ரத்தம் வந்துள்ளது, பின் தலையில் (பிடரியில்) இரண்டு இடத்தில் சுமாரான ரத்தக் காயம். தன்னைத் தாக்கிய மார்ட்டினை ஸிம்மெர்மேன் தன் துப்பாக்கியை வைத்து இதயத்தில் சுட்டு கொன்றுவிட்டார். காரணம்? தற்காப்புக்காக கொன்றேன் என்கிறார்.

17 வயதே ஆன மார்ட்டின், ஒரு நல்ல மாணவனாக பள்ளியில் இல்லை. சமீபத்தில் அவன் பையில் போதை மருந்து இருந்தற்காகப் பள்ளியில் இருந்து தற்காலியமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளான். இது மார்ட்டினிடம் உள்ள பெரிய கருப்புப் புள்ளி!

ஸிம்மர்மேன், ஒரு "வாலண்டீர், neighborhood watch" தலைவர் என்கிறார்கள். அதாவது அந்தப் பகுதியில் எதுவும் திருட்டு, கற்பழிப்பு நடப்பதைத் தடுக்க, அந்தத் தெருவில் வாழும் சிலர் ஒன்று சேர்ந்து காவல்துறை போல் இயங்குவது. இவர்கள் துப்பாக்கி லைசெசெண்ஸ் பெற்று துப்பாக்கியும் வைத்து இருக்கலாம்.

இந்தத் ட்ரயல் நடக்கும்போது என்னுடைய கணிப்பின்படி, ஸிம்மர்மேன் "guilty" என்றுதான் ஜூரி முடிவு செய்வார்கள் என்று எண்ணினேன். ஆனால், நடந்தது வேறு! They found him, "Not guilty!"