Saturday, May 9, 2015

ரசனை, கடந்தவார ஸ்டாக் மார்க்கட், அன்னையர் தினம்!

கீழே படத்தில் உள்ள ரெண்டு படங்களில் இவங்க ரெண்டு பேருமே செலிப்ரிட்டிகள்தான். பலரால் ரசிக்கப் படுகிறவர்கள்தான். ஆனால் எல்லாரையும் எல்லாராலும் ரசிக்க முடியாது. ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் வேறமாதிரித்தான் இருக்கு. மற்றவர்கள் ரசனை பத்தி எனக்குத் தெரியாது. என் ரசனை பத்தி, அதான் நான் ரசித்தது பத்தி  சொல்லுறேன்.

ஒருத்தரைப் பார்த்தால் பிடிக்கிது இன்னொருத்தரைப் பார்த்தால் கொலவெறி வருது.
சன் டிவி சண்டே கலாட்டா தேவதர்ஷினி! ரொம்பப்பிடிச்ச செலிப்ரிட்டி! அந்த அண்ணனை இப்போதைக்கு ஃப்ரியா விடுங்க!


விஜய் டிவில வரும் இவனைப் பார்த்தாலே எனக்கு கொலைவெறிதான் வரும்! இவன் வாயைத் திறந்தால் கேட்கவே வேணாம்.


உங்க முதல் தியரி..

அவ (தேவதர்ஷினி) ஒரு பொண்ணு,  நீ ஒரு ஆணு, அப்படி இப்படினு ஏதாவது தியரி விடாதீங்கப்பா. அதெல்லாம் ஓரளவுக்குத்தான் இன்ஃப்ளுவெண்ஸ் பண்ண முடியும். அதுவே முழுமையான காரணம் இல்லைனு நான் நம்புகிகிறேன். ஏன்னா டி வி ல செலிப்ரிட்டியா வர்ர அழகான எல்லாப் பொண்ணுங்களையும் நான் ரசிப்பதில்லை.

என்ன என்ன? தேவதர்ஷினி பொண்ணு இல்லை, ஆண்ட்டியா?? நான் இந்த விவாதத்துக்கு வரலை. :)))

உங்க அடுத்த தியரி என்ன?

 உனக்கு சன் டிவிதான் பிடிக்கும்போல.. விஜய் டி வி பிடிக்காதுபோல.. அதுவும் உண்மை இல்லை. நான் அதிகமாகப் பார்ப்பது விஜய் டி வி தான். சன் இல்லை.

என் ரசனை அப்படி, அவ்வளவுதான்.  This guy annoys me but Devadharshini can not annoy me even if she tries hard.

*******************

ஸ்டாக் மார்க்கட்:

போன வாரம் ட்விட்டர் (TWTR)  மேலே இருந்து ஒரு 22-26 % கீழே போயி பாதாளத்தில் விழுந்துவிட்டது. அதைத் தொடர்ந்து LNKD மற்றும் yelp போன்ற சமூக வலைதள ஸ்டாக் மார்க்கட்  பாதாளத்தில் விழுந்துவிட்டது. முகநூல் அந்தளவுக்கு பாதிக்கப் படவில்லை.

இந்த ஷேர்ஸ் வாங்கி வைத்திருந்தவர்கள் நிலைமை கஷ்டம்தான். YELP மட்டும் மேலே வந்துவிட்டது. ட்விட்டர், லின்க்ட் இரண்டும் இன்னும் பாதாளத்தில்தான் இருக்கு.

*************************

இன்று அன்னையர் தினம்:

மேலே உள்ள படம் நான் வரையவில்லை! திருடியது

6 comments:

Mathu S said...

ரிலாக்ஸ் ஆய்டோம் ..

G.M Balasubramaniam said...

ஸ்டாக் மார்க்கெட் பற்றிய அறிவு ஜீரோ. அதனால் நோ கமெண்ட்ஸ். பிடிப்பது பிடிக்காதது என் பாட்டி சொல்வாள் அவரவர் முக பாக்கியம் என்று.

திண்டுக்கல் தனபாலன் said...

விவாதமே இல்லை போங்க...

Mythily kasthuri rengan said...

வாவ்! அந்த படம் எங்க மகிகுட்டி வரைந்ததுபோல அவ்ளோ cute:) அவ்ளோ ஸ்வீட்:)
----------

ஸ்டாக் மார்க்கெட்" its not my cup of tea:)"
----------

அந்த விஜய் டி.வி ஆர்.ஜே. பேசிய ஏதோ ஒரு வார்த்தை எங்களை அறியாமலே உங்கள் ஈகோவை டிஸ்டர்ப் செய்திருக்கலாம்#( இப்போ உன்கிட்ட இதுபத்தி கருத்து கேட்டாங்களா மைதிலி?shut up:)

இதுக்கு நீங்க உளறல்னு பேர் வைகாததுகாக ஒரு போக்கே, take it வருண்:)

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்

Iniya said...

அன்னையர் தினவாழ்த்திற்கு நன்றி வருண். அட இப்படி திருடிட்டீங்களே படத்தை.ம்..ம்.ம் வருண் நீங்களே வரைந்திருந்தால் இன்னும் சந்தோஷப் பட்டிருப்போம் இல்ல. அன்னையர் தின வாழ்த்திற்கு உங்களுக்கு என் ஆசிகள். எல்லா நலன்களும் பெற்று என்றும் மகிழ்வோடு வாழ வாழ்த்துகிறேன்....!