Saturday, May 2, 2015

நான் உத்தம வில்லன் பார்த்த கதை!

எனக்கு உத்தமவில்லன் பட சம்மந்தமான ஸ்டில்களைப் பார்க்கும்போதே ஒரு மாதிரியான உணர்வு. எப்படிச் சொல்றது? கொஞ்சம் பீதி, கொஞ்சம் ஒரு மாதிரியான, எப்படினு தெளிவாகச் சொல்ல முடியாத உணர்வு.  நிச்சயம் அது ஒரு நல்லுணர்வு இல்லைனு மட்டும் தெரியும். மற்றபடி அதை விவரமாகச் சொல்லத் தெரியவில்லை.

 இல்ல, நான் கொஞ்சம் பயந்த சுபாவம் வேறயா? அதனாலேயா என்னனு தெரியலை, கீழே உள்ளதுபோல் வந்த ஸ்டிலகளைப் பார்த்தால் கொஞ்சம் இல்ல ரொம்பவே பயம்.


உங்களுக்கு பயமா இல்லையா?உங்களுக்கு ஒரு மாதிரியான உணர்வு ஏற்படலையா?

சரி, விடுங்க, என் பிரச்சினை எனக்கு.

ஆனால், கமலஹாசன் என்கிற ஒரு உன்னதக் கலைஞன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன்  என்று  சொல்வதே  எனக்கெல்லாம் பெருமை சேர்க்கும்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை! அப்படிப்பட்ட மாபெரும் ஒரு கலைஞனை நாம் பெரிதாக நினைக்கவில்லை என்றால், அவனுடைய தன்னலமில்லா ஆக்கங்களை மதித்து,  பாராட்டி, மெச்சவில்லை என்றால்..பாமரன் என் நிலைமை  என்ன ஆகும்னு யோசிச்சுப் பாருங்க. கலாரசனையே இல்லாத ஒரு ஜடம் இந்த வருண்ணு நம்ம விமர்சனம் எழுதுவதில் பிரபலங்கள் கேபுளு, அப்புறம் பிச்சைப்பாத்திரம் சுரேஷு, அப்புறம் பெயரைச் சொல்ல முடியாத பல கலாரசிகர்கள் எல்லாம் சொல்லிடுவாங்க. உலகம் மேதைகள் சொல்வதை நம்புமா இல்லைனா பாமரன் சொல்வதை நம்புமா? அதனால சரி, எப்படியாவது இந்த உன்னதக் கலைஞனுடைய தன்னலமில்லாத உழைப்பை, தமிழர்க்காகவும், கலைக்காகவும் செய்யும் சேவையை நாம்  "அக்னாட்ஜ்" செய்தே ஆகணும்னு, உத்தம வில்லன் படம் பார்க்க டிக்கட்டை வாங்கி விட்டேன். வெறும் பதிணைந்தே டாலர்கள் தான். ஆண்லைன்லயே வாங்கியாச்சு.

அமெரிக்காவில் படம் ரிலீஸ் ஆவதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. சரி நம்ம உன்னதக் கலைஞனின் அற்புதப் படைப்பைப் பார்த்துப் பரவசம் அடைவோம்னு தியேட்டர்ப் பக்கம் போனால் அங்கே இருக்க மக்கள் கூட்டத்தில் நம்மள மாதிரி சல்லவாரிப்பயளுக எவனும் இல்லை. கோட்டு சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு  நம்மைவிட பல மடங்கு நாகரீகத்திலும், அறிவிலும், அழகிலும் உயர்ந்தவர்களாக இருப்பவர்கள்போல எனக்குத் தோன்றினார்கள்.  உள்ளே சினிமா ஹாலில் நுழைவதற்காக லாபியில் நடக்கும்போது  ஒரே படபடப்பு. அந்த பீதி தரும் ஸ்டில் கள் என் கண் முன்னால் வந்து நின்னது. எனக்கு மறுபடியும் பயம் தொத்திக் கொண்டது. உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு.

நான்  யோசிச்சு யோசிச்சு ஒரு வழியா ஒரு நல்ல முடிவுக்கு வந்துவிட்டேன்.  எப்படியோ  இந்த மாபெரும் கலைஞனை நாம் பாராட்டும் வகையில் நம் பங்குக்கு ஒரு டிக்கட் வாங்கியாச்சு. அந்தக் கலைஞனுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நம்ம வைக்க வேண்டிய தட்சணையை  வச்சாச்சு. இனிமேல் படத்தைப் போயிப் பார்க்கணும் என்பது அவசியமா?? படம் பார்த்துட்டு.. சப்போஸ் அந்த படைப்பு நமக்குப் பிடிக்கலைனா? வாயைத் திறந்து அந்த உண்மையை யாரிடமும் சொல்ல முடியுமா? நிச்சயம் வாயைத் திறக்க முடியாது. ஆக உண்மையான விமர்சனம் என்று  நம்ம தளத்தில் எழுதவும் முடியாது. அப்படி எழுதினால் விளைவுகள் பயங்கரமா இருக்கும். நாதாரிப்பய! இவனுக்கு கமல்மேல எப்போவுமே காண்டு, னு சொல்லிடுவாளே!. கொஞ்சம் யோசிங்க! நம்ம கேபுளு , பிச்சைப் பாத்திரம் போன்ற சினிமாவைக் கறைத்துக் குடிச்ச மேதைகள் சொல்வதை ஊர் உலகம் நம்புமா? இல்லை இந்தக் கேணப்பய வருண் உளறுவதை உலகம் நம்புமா?

ஆக, படத்தைப் பார்த்து ஒரு வேளை படம் பிடிக்கலைனா.. வெளியில் கலைஞானியின் படைப்பு எனக்குப் பிடிக்கலைனு நிச்சயம் சொல்ல முடியாது என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை. அப்போ ஒண்ணு செய்வோமே? படத்தைப் பார்க்காமலே விட்டுடுவோமே? அப்படிச் செய்தால் இப்போ நமக்கும் பெரிய நஷ்டமில்லை! அந்த மாபெரும் கலைஞனுக்கும் நஷ்டமில்லை! காசு கொடுத்து டிக்கட்தான் வாங்கியாச்சு இல்லை? அதுதானே தமிழுக்கும், கலைக்கும், ஒரு உன்னதக் கலைஞனுக்கும் நான் செய்ய வேண்டிய நற்பணி? நம்முடைய கடமை முடிந்தது அல்லவா?  அப்படினு ஒருநல்ல முடிவுக்கு வந்து டிக்கட்டை கிழிச்சுக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

வீட்டுக்கு வந்து நம்ம மார்ட்டின் ஸ்கார்சேசி யுடைய the departed dvd   யை இன்னொரு முறை பார்த்தேன்.

 

இதுதான் நான் உத்தம வில்லன் பார்த்த கதை.28 comments:

chandrasekharan said...

A good example of "Ostrich mentality syndrome".

G.M Balasubramaniam said...

நான் உத்தம வில்லன் பார்க்காத கதை என்றுஇருந்திருக்க வேண்டுமோ?

காரிகன் said...

நல்ல முடிவு. பாராட்டுகிறேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எல்லாரும் பாராட்டியே எழுதிக்கிட்டிருந்தா போரடிக்கத் தான் செய்யும் உங்க கருத்தையும் ரசிக்கத் தான் செய்வாங்க எழுதுங்க வருண்

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த நற்பணியும் நல்லாத்தான் இருக்கு...!

மார்ட்டின் ஸ்கார்சேசிக்கும் இந்த வில்லனுக்கும் எதாவது சம்பந்தம் உண்டா...?

வருண் said...

***chandrasekharan said...

A good example of "Ostrich mentality syndrome".***

ஐயா! பாமரன் எனக்கு தாங்கள் சொல்வது புரியவில்லை. ஆனால் தாங்கள் சொலுவது அனைத்துமே சரியாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது. ஒருவர் என்ன சொல்றாங்கனு பார்க்கிறதைவிட, அதை யாரு சொல்றாங்கனு பார்த்து அவர்கள் தரத்திற்கேற்ப, அவர்கள் கருத்தை உட்கொள்வதுதான் என்னப்போல் பாமரனுக்கு அழகு! நன்றி.

வருண் said...

***G.M Balasubramaniam said...

நான் உத்தம வில்லன் பார்க்காத கதை என்றுஇருந்திருக்க வேண்டுமோ?**

ஆம சார். இல்லைனா "பார்க்கப் போன கதை"னு கூட போட்டிருந்தால் கொஞ்சம் சரியாக வந்திருக்கும்.

வருண் said...

***காரிகன் said...

நல்ல முடிவு. பாராட்டுகிறேன். ***

வாங்க, காரிகன். :) நாமும் நம் பங்குக்கு தமிழ்நாடு பெற்றிருக்கும் ஒரு உன்னதக் கலைஞனையும் சினிமாக் கலையையும் ஊக்குவிக்கணும்னு ஒரு சின்ன "காண்ட்ரிப்யூஷன்", காரிகன். :)

வருண் said...

*** டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எல்லாரும் பாராட்டியே எழுதிக்கிட்டிருந்தா போரடிக்கத் தான் செய்யும் உங்க கருத்தையும் ரசிக்கத் தான் செய்வாங்க எழுதுங்க வருண்***

கள்ளக்காதல் என்பது தவறான ஒன்று என்பதுதான் நாம் கற்றுக்கொண்ட "நீதி". ஆனால், டிப்பார்ட்டெட் படத்தில் வரும் "அண்டர்கவர் காப்" பில்லிக்கும், அவனுடைய மனநல மருத்துவர், "மாடலின்"க்கும் இடையில் உண்டாகும் "எக்ஸ்ட்ரா மாரிட்டல் அஃபையர்" அல்லது "காதல்", உண்மையானதாகவும் அதில் தவறேதும் இல்லவேயில்லை என்பதுபோல்தான் படம் பார்க்கும் நமக்குத் தோணும். :) The departed is one of the best movies and a "classic" like "The Godfather" or "Shawshank redumption", imho, Murali. :)

வருண் said...

*** திண்டுக்கல் தனபாலன் said...

இந்த நற்பணியும் நல்லாத்தான் இருக்கு...!

மார்ட்டின் ஸ்கார்சேசிக்கும் இந்த வில்லனுக்கும் எதாவது சம்பந்தம் உண்டா...?***

வாங்க தனபாலன். அதுபோல் எதுவும் நான் சொல்ல முயலவில்லை, தனபாலன். இரண்டும், இரண்டு வேறு வேறு மாதிரியான படங்கள்னு வேணா சொல்லலாம். :)

ரூபன் said...

வணக்கம்
இரசிக்கும்படி அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Arasu said...

வருண்:

பகுத்தறிவாளர்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு படம் இது என கருதுகிறேன். வெள்ளியன்று அமெரிக்கத் திரையரங்கில் படம் பார்த்தேன். வில்லுப்பாட்டு, கூத்து, இரணியன் கதை - என பொதுவாக தமிழ்த்திரைப்படங்களில் பார்க்க அரிதான பல நல்ல அம்சங்கள் உண்டு. படம் சற்று நீளமெனினும், ஹே ராம் போன்று அலுக்கவில்லை. Istanbul நகரில் உள்ள blue mosque முகப்பு ஒரு பாடல்காட்சியில் மிக அழகாக படமாக்கியிருக்கிறார்கள். நாசர், பாலச்சந்தர், ஊர்வசி நடிப்பு கமலுடன் போட்டிபோடுகிறது. இசை, ஒளிப்பதிவு, இயக்கம் அனைத்தும் அருமை. இரணியன் கதை மிகவும் நுணுக்கமாக அவதானிக்கவேண்டிய ஒன்று. அவசியம் திரையரங்கில் பார்க்கவேண்டிய படம் என்பது என் கருத்து. படத்தை பார்த்து ஒரு பதிவு இடுங்களேன். பொதுவாக கமல் படங்களில் பார்க்கப்படும் குறைகள் இப்படத்தில் இல்லை என கருதுகிறேன்.

வருண் said...

***ரூபன் said...

வணக்கம்
இரசிக்கும்படி அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-**

நன்றி, ரூபன். :)

வருண் said...

***Arasu said...

வருண்:

பகுத்தறிவாளர்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு படம் இது என கருதுகிறேன். வெள்ளியன்று அமெரிக்கத் திரையரங்கில் படம் பார்த்தேன். வில்லுப்பாட்டு, கூத்து, இரணியன் கதை - என பொதுவாக தமிழ்த்திரைப்படங்களில் பார்க்க அரிதான பல நல்ல அம்சங்கள் உண்டு. படம் சற்று நீளமெனினும், ஹே ராம் போன்று அலுக்கவில்லை. Istanbul நகரில் உள்ள blue mosque முகப்பு ஒரு பாடல்காட்சியில் மிக அழகாக படமாக்கியிருக்கிறார்கள். நாசர், பாலச்சந்தர், ஊர்வசி நடிப்பு கமலுடன் போட்டிபோடுகிறது. இசை, ஒளிப்பதிவு, இயக்கம் அனைத்தும் அருமை. இரணியன் கதை மிகவும் நுணுக்கமாக அவதானிக்கவேண்டிய ஒன்று. அவசியம் திரையரங்கில் பார்க்கவேண்டிய படம் என்பது என் கருத்து. படத்தை பார்த்து ஒரு பதிவு இடுங்களேன். பொதுவாக கமல் படங்களில் பார்க்கப்படும் குறைகள் இப்படத்தில் இல்லை என கருதுகிறேன்.***

வாங்க, அரசு!

நீங்க ஊகித்து இருக்கலாம்..இருந்தாலும் தெளிவு படுத்திவிடுகிறேன். நான் எழுதியது உண்மையில்லை. சும்மா ஒரு சீரியஸான மொக்கைப் பதிவு. :)

நீங்க நண்பர் சத்ய பிரியன் விமர்ச்னத்தை கட்டாயம் பாருங்க. உங்க சிந்தனைகளை ஒத்து இருக்கும்னு நினைக்கிறேன். I strongly believe his review is an honest review!

ஆனால், வலையுலகில் கமலை புகழ்ந்து தள்ளவே ஒரு சிலர் இருக்காங்க. I just wrote this one because there are some reviewers here who are so biased and writing boring reviews for every Kamal film. All they have is just praise for everything. I am just tired of them. :)

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. முடிந்தால் பார்க்கிறேன். :)

துளசி கோபால் said...

நெசமாவா!!!!!!

Arasu said...

வருண்:

நான் பால்டிமோர் அருகில் உள்ள திரையரங்கில்தான் இப்படம் பார்த்தேன்.இப்படம் விவாவத்திற்குரியதானது, படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது. விவாதங்கள் சில:

.https://www.youtube.com/watch?v=jENOQYs78jo

https://www.youtube.com/watch?v=2Ox3sR153lE

தேவையற்ற வன்முறை, குளறுபடியான editing என பல விமர்சனங்கள் கமல் படங்களில் பலவற்றில் எனக்குண்டு. இந்தப்படம், அவரைச்சூழ்ந்த பல திறமைசாலிகள் நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சத்யப்பிரியன் விமர்சனத்துடன் பெரிதும் உடன்படுகிறேன்.

தருமி said...

// நான் எழுதியது உண்மையில்லை. சும்மா ஒரு சீரியஸான மொக்கைப் பதிவு. :)//

ரொம்ப ஓவரு .........

SathyaPriyan said...

வருண் என்றைக்கும் இல்லாத திருநாளாக இந்த இரண்டு நாட்களில் பலர் எனது பதிவுக்கு வந்தார்கள். என்னடா அதிசயம் என்று பார்த்தால் தாங்கள் இங்கும், முத்து சிவாவின் பதிவிலும் என்னை குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதற்கு முதலில் நன்றி.

நீங்கள் ஸ்டேவென் கோவே அவர்களின் 7 Habits படித்திருப்பீர்கள். நாம் இறந்த பிறகு நமது இறுதி சடங்கில் நமது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் நம்மை பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோமோ அதன் படி வாழ்ந்தால் நமது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும் என்று அவர் குறிப்பிடுகிறார். இப்படம் அதன் அடிநாதத்தை தொட்டிருப்பதாக நான் கருதுகிறேன்.

இப்படத்தில் திரைவாழ்க்கையில் உத்தமனாக காட்சி அளிக்கும் கமல், உண்மையில் பலருக்கும் வில்லனாக இருக்கிறார். கமல் இறந்துவிடுவார் என்று தெரிந்த பிறகு கமலை அவர்கள் மன்னிக்கிறார்கள். அதேபோல அவருக்கு சிலர் வில்லனாக இருக்கிறார்கள். அவர்களை கமல் தனது நிலையை உணர்ந்து மன்னிக்கிறார்.

தான் தவறு செய்தவர்களிடம் மன்னிப்பு கேட்கவும், தவறுகளை திருத்திக் கொள்ளவும், தனக்கு தவறு செய்தவர்களை மன்னிக்கவும் மரணம் என்ற நிலை வரை காத்திராமல் முன்பே உணர்ந்து நமது வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்பதை வேறு தளத்தில் இருந்து சொல்லி இருக்கிறார்.

வருண் said...

***துளசி கோபால் said...

நெசமாவா!!!!!!***

டீச்சர்: இந்தப் பதிவில், மொக்கை, நகைச்சுவைனு இரண்டு லேபல்கள் தந்துள்ளேன். :)

வருண் said...

***Arasu said...

வருண்:

நான் பால்டிமோர் அருகில் உள்ள திரையரங்கில்தான் இப்படம் பார்த்தேன்.இப்படம் விவாவத்திற்குரியதானது, படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது. விவாதங்கள் சில:

.https://www.youtube.com/watch?v=jENOQYs78jo

https://www.youtube.com/watch?v=2Ox3sR153lE

தேவையற்ற வன்முறை, குளறுபடியான editing என பல விமர்சனங்கள் கமல் படங்களில் பலவற்றில் எனக்குண்டு. இந்தப்படம், அவரைச்சூழ்ந்த பல திறமைசாலிகள் நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சத்யப்பிரியன் விமர்சனத்துடன் பெரிதும் உடன்படுகிறேன்.***

அரசு: தங்கள் கருத்திற்கு மறுபடியும் நன்றி. உங்க பின்னூட்டத்தை ச்த்யபிரியன் தளத்திலும் பார்த்தேன். Glad you stopped by and shared your opinion in his post too! :)

வருண் said...

***தருமி said...

// நான் எழுதியது உண்மையில்லை. சும்மா ஒரு சீரியஸான மொக்கைப் பதிவு. :)//

ரொம்ப ஓவரு .........***

15 டாலரை கமலஹாசன் பேரைச் சொல்லி ஒரு ஏழைக் குழந்தைக்கு வேணா கொடுப்பேனே ஒழிய, இதுபோலெல்லாம் செய்ய மாட்டேன், தருமி சார்! :)

வருண் said...

*** SathyaPriyan said...

வருண் என்றைக்கும் இல்லாத திருநாளாக இந்த இரண்டு நாட்களில் பலர் எனது பதிவுக்கு வந்தார்கள். என்னடா அதிசயம் என்று பார்த்தால் தாங்கள் இங்கும், முத்து சிவாவின் பதிவிலும் என்னை குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதற்கு முதலில் நன்றி.

நீங்கள் ஸ்டேவென் கோவே அவர்களின் 7 Habits படித்திருப்பீர்கள். நாம் இறந்த பிறகு நமது இறுதி சடங்கில் நமது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் நம்மை பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோமோ அதன் படி வாழ்ந்தால் நமது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும் என்று அவர் குறிப்பிடுகிறார். இப்படம் அதன் அடிநாதத்தை தொட்டிருப்பதாக நான் கருதுகிறேன்.

இப்படத்தில் திரைவாழ்க்கையில் உத்தமனாக காட்சி அளிக்கும் கமல், உண்மையில் பலருக்கும் வில்லனாக இருக்கிறார். கமல் இறந்துவிடுவார் என்று தெரிந்த பிறகு கமலை அவர்கள் மன்னிக்கிறார்கள். அதேபோல அவருக்கு சிலர் வில்லனாக இருக்கிறார்கள். அவர்களை கமல் தனது நிலையை உணர்ந்து மன்னிக்கிறார்.

தான் தவறு செய்தவர்களிடம் மன்னிப்பு கேட்கவும், தவறுகளை திருத்திக் கொள்ளவும், தனக்கு தவறு செய்தவர்களை மன்னிக்கவும் மரணம் என்ற நிலை வரை காத்திராமல் முன்பே உணர்ந்து நமது வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்பதை வேறு தளத்தில் இருந்து சொல்லி இருக்கிறார்.**

Sathyapriyan: I am happy that few people visited your blog after reading my responses mentioning about your post. Like I said, I could see that your review was your honest opinion. Like-minded people should learn about that. That will make them feel good.

I also have read several other responses in other sites esp from Kamal fans, so many KH fans just loved this movie as much as you did.

Once a guy's days are numbered in the earth, I am sure he/she will look at the world differently from then on, I think. Obviously forgiving one is certainly easier thing to do than forgetting something someone did to us, especially when his/her days are running low, I think.

துளசி கோபால் said...

வருண்,

//. Obviously forgiving one is certainly easier thing to do than forgetting something someone did to us,...//

இது சத்தியமான உண்மை என்னைப் பொருத்தவரை.

செஞ்ச துரோகங்களை நினைச்சுப் பொருமி அழுது தீர்த்து, காலப்போக்கில் அவர்களை மன்னிச்சுவிட்டுட்டாலும், நேரில் பார்த்தவுடன் மறந்து போகணுமுனுன்னு நினைச்சுக்கிட்டு இருந்ததெல்லாம் அப்படியே மனசில் பொங்கி வரும் பாருங்க..... அது ஒரு வேதனை:(

யானை இல்லையோ... அப்படித்தான் இருக்கும்,இல்லே? என் பலமும் பலவீனமும் இந்த ஞாபகசக்திதான்:(

வருண் said...

*** துளசி கோபால் said...

வருண்,

//. Obviously forgiving one is certainly easier thing to do than forgetting something someone did to us,...//

இது சத்தியமான உண்மை என்னைப் பொருத்தவரை.

செஞ்ச துரோகங்களை நினைச்சுப் பொருமி அழுது தீர்த்து, காலப்போக்கில் அவர்களை மன்னிச்சுவிட்டுட்டாலும், நேரில் பார்த்தவுடன் மறந்து போகணுமுனுன்னு நினைச்சுக்கிட்டு இருந்ததெல்லாம் அப்படியே மனசில் பொங்கி வரும் பாருங்க..... அது ஒரு வேதனை:(

யானை இல்லையோ... அப்படித்தான் இருக்கும்,இல்லே? என் பலமும் பலவீனமும் இந்த ஞாபகசக்திதான்:( ***

நீங்கள் சொல்வது நன்றாகப் புரிகிறது டீச்சர். நானும் அதேபோல்தான் என் வாழ்விலும் உணர்ந்து இருக்கேன். அந்த அனுபவத்தால் இது என் உள்ளேயிருந்ந்து வந்த வாக்கியம்தான் னு நினைக்கிறேன்.
மறு வருகைக்கு நன்றி டீச்சர்.

Mythily kasthuri rengan said...

அட! ஆச்சரியமா இருக்கே !! வருண் ரஜினி fan ஆச்சே?? அவர் கமல் படத்துக்கு போய்ட்டு, அது பத்தி பதிவு வேற போட்ருக்காரானு எனக்கே ஒரு டௌட்டோ தான் வந்தேன். என்னை நீங்க ஏமாத்தலை:))))

Mythily kasthuri rengan said...

**
இல்ல, நான் கொஞ்சம் பயந்த சுபாவம் வேறயா? ** அப்டியா!!! நம்பிட்டேன்:)))

Mythily kasthuri rengan said...

சரி, நான் உண்மையான ரெவ்யூ வை சத்யப்ரியன் சார் blog ல போய் படிச்சுக்கிறேன். thanks வருண்:)

Amudhavan said...

படம் பார்க்கவும் உவப்பில்லை, எதுவும் எழுதாமல் இருக்கவும் மனமில்லை. இரண்டையும் சரிக்கட்டி ஒரு பதிவு எழுதிவிட்ட உங்கள் சாமர்த்தியத்தைப் பாராட்டுகிறேன்.