Saturday, June 20, 2015

திரு பசி பரமசிவம் அவர்களுக்கு!

நீங்க நிறையக் கேள்விகள் கேட்கிறீர்கள். ஆனால் பதில் சொல்லப் பின்னூட்ட வசதி தருவதில்லை. அதனால் உங்க கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த பதிலைத் தரமுடிவதில்லை. தமிழ்மணம் பற்றி தொடர்ந்து ஒரு சில விமர்சனங்கள் வைக்கிறீர்கள்..எனக்குத் தெரிந்த விளக்கம் சொல்ல இப்பதிவு..

தமிழ்மணத் தலைப்பில் அல்லது முதல் 5 வரிகளில், கவர்ச்சி, கற்பழிப்பு போன்ற வார்த்தைகள் வந்தால், உள்ளே என்ன நல்ல விடயங்கள் இருந்தாலும் அப்பதிவுகள் சூடான இடுகைகளில் முகப்பில் தெரியாது. அதைப் பிரபலப்படுத்துவது தவிர்க்கப்படும். இதை தமிழ்மண நிர்வாகிகள் கவனித்து செய்யவில்லை. தானியங்கியாக இயங்கும் தமிழ்மணம் இப்படி வார்த்தைகள் தலைப்பில் வந்தால், அவற்றை "ஷ்பெஷலாக" கவனித்து மட்டுறுத்துவதுபோல் தமிழ்மணத் தளம் "டிஷைன்" செய்யப்பட்டுள்ளது. அதனால் உங்களுடைய ஒரு சில பதிவுகள் முகப்பில் தெரிவதில்லை என்பது என் கணிப்பு.

இதுபோல் எனக்கும் அனுபவம் உண்டு. பலவாறு குழம்பி பிறகு புரிந்து கொண்டேன். தலைப்பில் கவர்ச்சி போன்ற வார்த்தைகள் நீங்கள் தவிர்த்தால் முகப்பில் தெரியும்.

தமிழ்மணத்தை மாற்ற முயல்வதைவிட, நம் தலைப்பை கொஞ்சம் மாற்றி அவ்வார்த்தைகளை தவிர்த்து எழுதுவது எளிது. புரிதலுக்கு நன்றி சார்!

4 comments:

Kasthuri Rengan said...

ஆகா அருமையான தகவல் ..
நன்றிகள்
தம +

'பசி'பரமசிவம் said...

என் பொருட்டு ஒரு தனிப்பதிவு வெளியிட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி வருண்.

தமிழ்மணம் குறித்த தங்களின் விளக்கம் ஏற்புடையதே. தலைப்பிலும், பதிவின் முதல் ஐந்து வரிகளிலும் ‘கவர்ச்சிச் சொற்கள்’ இடம்பெறுவதைத் தவிர்க்க முயல்வேன்.

சில மாதங்களாகவே நான் பின்னூட்டங்கள் பெறுவதைத் தவிர்த்து வருகிறேன். பின்னூட்டம் இடும் அளவுக்குப் புதிதாகவோ அரிதாகவோ ஏதும் எழுதுவதில்லை என்ற எண்ணம்[தன்னடக்கமல்ல] முக்கிய காரணம். பிறர் மனதை நோகடிக்காமல் விவாதம் செய்யும் மனப் பக்குவம் எனக்கு இல்லாததும் ஒரு காரணம். ‘பொழுது போக ஏதோ எழுதுகிறோம். இது போதும்’ என்ற நினைப்பும் காரணமாக இருக்கலாம்.

பின்னூட்டங்களைத் தவிர்ப்பதால், நண்பர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் வழங்குவதையும் தவிர்த்து வருகிறேன்.

எனக்கே எனக்காகத் தனிப் பதிவிட்ட தங்களின் பெருந்தன்மை மறக்க இயலாதது. மீண்டும் என் மனம் நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி...நன்றி வருண்.

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த "டிஷைன்" செய்யப்பட்டது இன்று தான் தெரியும்...!

மகிழ்நிறை said...

வருண் !! எப்படி இருக்கிறீர்கள். தமிழ்மணம் பற்றி எனக்கும் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. நான் திரைபாடத்தை பற்றி எழுதி சினிமா என லேபல் கொடுத்தால் கூட திரைமணத்தில் வருவதில், ஆனால் சம்பந்தமே இல்லாமல் என் சில பதிவுகள் திரைமணத்தில் காட்டபடுகின்றன. அதற்கும் இதுபோல ஏதோ டிசைன் இருக்கும் போல!!!