Tuesday, July 28, 2015

வம்பு மடம்!

 வருணுக்குப் பதிவெழுதச் சரக்குத் தீர்ந்து போச்சா?? என்னனு தெரியலை.. ரொம்ப நாளா ஒருமண்ணாங்கட்டியையும் காணோம்? னு நீங்கள்லாம் குழம்புவது தெரியுது.

என்ன செய்றது..எதுவுமே எழுத "மூட்" வர மாட்டேன்கிறது.  பொதுவாக என்னுடைய பதிவுகள் எல்லாம் (காதல் கதைகள்கூட) இண்ஸ்டன்டேனியஸாக வரும் சிந்தனைகள்தான். நான் பதிவெழுதனு உக்காந்து யோசிச்சு எழுத்துப்பிழையில்லாமல், கருத்துப்பிழை இல்லாமல் எழுதுவதில்லை! பதிவெழுத ரொம்ப நேரமே எனக்கு எடுக்காது! அப்படியே ஒரு பதிவு ரொம்ப நேரம்  எடுத்தால் அது "ட்ராஃப்ட்"லயே வாழ்ந்து செத்துடும்! சரக்குத் தீர்ந்ததாலேயோ என்னவோ இப்போ  எல்லாம் அதுபோல் பதிவழுத முடியவில்லை. எதையாவது எழுதுவோமா?னு  கஷ்டப்பட்டு எழுத ஆரம்பித்தால்..

சமீபத்தில் பதிவுலகம்  எத்தனை அமைதியா இருக்கு. பதிவர்கள் அனைவரும் எவ்வளவு நிம்மதியா இருக்காங்க. நிம்மதியாக இருக்கும் பதிவுலகில் எதுக்குப் போயி கஷ்டப்பட்டு பதிவெழுதி எல்லாரையும் கஷ்டப்படுத்த? னு ஒரு ஞானோதயம் வருது..

இப்போ என்னாச்சு? நீ பதிவெழுதலைனு யாரு அழுதா? அப்படியே இருந்து இருக்க வேண்டியதுதானே?னுதானே சொல்றீங்க? :)

மன தைரியம் உள்ளவங்க மட்டும் இனிமேல் தொடரவும்! பலர் தலைகள் உருளும் இனிமேல்!

*****************

 அது யாரு ஜெஸிக்கானு ஒரு பொண்ணு! அதான்ப்பா இந்த  சூப்பர் சிங்கர்ல வந்த ஜெஸிக்கா என்கிற சிறுமிதான்.

சூப்பர் சிங்கரில் பாடிக் கிடைத்த  மரியாதை மதிப்பை எல்லாம் இந்த கனடா வில் நடக்கப்போகும் சூப்பர் சிங்கர்  கமர்சியலில் வந்து நாசமாக்கிட்டார்ப்பா இந்தச் சிறுமி!

  "நான் உங்க ஜெஸிக்கா பேசுறேன். நீங்கள் லெல்லாரும் மறக்காமல் இந்த் ஷோக்கு வந்து..உங்க ஆதரவு தருவீங்கணு நான் நம்றேன்..அது ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக இருக்கும். ஐ அம் வெர்ரி வெர்ரி எக்சைட்டெட் டு சி யு ஆல்"

உங்களுக்கெல்லாம் என்னதான் வேணும், ஜெஸிக்கா? Beats me!

 Image result for jessica super singer final

Seriously you are getting on in my nerve when I see you in that Vijay TV commercial for the forthcoming super singer event in Canada!


***************

"அண்ணே! எனக்கு ஒண்ணு புரியல.."

"ஒண்ணே ஒண்ணுதானா? எனக்கெல்லாம் புரிகிறதே ஒண்ணு ரெண்டுதான்"

"ஏன்ண்ணே நீங்க வேற?"

"சரி, என்னனு சொல்லு! நெஜம்மாவே புரியலையா? இல்லைனா புரியலைனு சொல்லி என் வாயைப் புடுங்குறியா?"

"நெஜம்மாவே புரியலைண்ணே"

"சரி சொல்லு!"

"யாரென்பதெல்லாம் முக்கியம் இல்லை! இவர் ஒரு மரியாதைக்குரிய பெரிய மனிதர். இவருக்கு நம்ம ரசினிகாந்த்னா சுத்தமாகப் பிடிக்காது. முள்ளும் மலரும் காளி ரஜினி, 16 வயதினிலே பரட்டை ரஜினியைக்கூட இவரால பாராட்ட முடியாதுனு பார்த்துக்கோங்க! ரஜினி பொறந்தநாள், ரஜினி படம் ரிலீஸ்னு ஆச்சுனா புலம்ப ஆரம்பிசுடுவாரு! தூங்க மாட்டாரு.."

"இதெல்லாம் ஒரு மேட்டரா? ஒரு சிலருக்கு, இல்லை இல்லை பலருக்கு  ஒரு சில நடிகரைக் கண்டாலே பிடிக்காது. இவருக்கு ரஜினி பிடிக்காதுபோல! இதெல்லாம் பெரிய மேட்டர் இல்லை! இவர் என்ன கமல் சிவாஜி ரசிகரா?"

"தெரியலண்ணே! ஆனால்  இவர் ஒரு அந்தக்காலத்து எம் சி யாரு விசிறினு அவரே பெருமையா சொல்லிக்கிறாரு! அனேகமாக கமல் விசிறினுதான் நினைக்கிறேன்"

எம் சி ஆர் விசிறிகள் எல்லாம் உயர்தரமானவர்களாம்ப்பா!

ரஜினி விசிறி எல்லாம் தரக்குறைவான ஆட்கள்.. அப்படித்தானே?




"எம் ஜி ஆர்.. கமல்..இவங்க ரெண்டு பேருக்கும் என்ன ஒற்றுமை? ரெண்டு பேருக்கு வெள்ளைத்தோல்.. மூனு மனைவிகள்..இதுபோல்  ஒற்றுமையைத் தவிர வேறென்ன இருக்கு? நடிப்புனு வந்துவிட்டால் சம்மந்தா சம்மந்தம் இல்லாத ஆட்கள், எம் ஜி ஆரும், கமலும்!

ரஜினிக்காவது முள்ளும் மலரும், 16 வயதினிலே, புவனா ஒரு கேள்விக்குறி காயத்ரினு ரஜினி நல்ல நடிகனும்கூட னு சொல்லிக்க ஒரு நாலு படம் இருக்கும். எம் ஜி ஆர் அதுபோல் எந்தவித குணச்சித்திர வேடங்களில் நடிச்சதே இல்லை! எம் ஜி ஆர் எப்போதுமே ஒரு ஸ்டார்தான். "ஆக்டர்" கெடையாது! உடனே மதுரை வீரனில் ஒரு கையில்லமல ஒரு காலில்லாமல் "கடைசியில்" நடிச்சாரு சொல்லிடாதீங்கப்பா  எம் சி ஆர் விசிறிகள்!


முள்ளும் மலரும்

முள்ளும் மலரும் 2
முள்ளும் மலரும் 3


புவனா ஒரு கேள்விக்குறி

 எம் ஜி ஆர் விசிறிகளை, இதுபோல் அவர் நடித்த   நாலு படம் சொல்லச் சொல்லு பார்ப்போம்? அதென்னனு தெரியலை  ஒரு சில பெரிய மனிதர்கள் இப்படித்தான். இவங்க எம் சி யார் ரசிகரா இருந்தது இந்த நாட்டுக்கே பெருமை. இன்னைக்கு ஒருத்தன் ரஜினி ரசிகனாகவோ இல்லை விஜய் ரசிகனாகவோ இருந்தால், அது கேவலம் என்பதுபோல் அபத்தமான ஒரு நியாயம் பேசுறது.. தான் அன்றைக்கு இருந்தது போலதான்  இன்று இவர்கள் இருக்காங்கனு  சகிச்சுக்க முடியாத சிறுபிள்ளைத்தனம் இவர்களிடம் இருக்கும். எனக்கும்தான் இவங்க தர்க்கம்  புரியலை! "

"என்னண்ணே முடிவா சொல்றீங்க?.."

"இந்தப் பெரிய மனிதர்கள் எப்படினா தனக்கென்று (எம் சி ஆர் விசிறி) ஒரு தராசு! மற்றவர்களுக்கு ( ரஜினி, விஜய் விசிறிகள்) ஒரு தராசுனு வச்சுக்குவாங்க. வயதுனு பார்த்தால் பெரிய மனிதர்கள்தான். அதனாலென்ன? அவர்கள் பேசும் நியாயம் எல்லாம் அநியாயமாகத்தான் நமக்குத் தெரியும். பாவம் பெரிய மனுஷன் போறான்னு சிறுவர்கள் நம்மதான் சகிச்சுட்டுப் போகணும்!"

அப்புறம் அந்தக்காலத்து எம் ஜி ஆர் விசிறிகள் இன்னைக்கு ரஜினியையும் ரஜினி விசிறிகளையும் மட்டமாகப் பார்க்கும் பெரிய மனுஷர்களா!!

இந்த நாதாரி வருண் என்னைத்தான் திட்டுறான்னு மண்டை காய்ந்து போயி இவனைப் "பழி" வாங்க நினைக்காமல் உக்காந்து ஒரு நிமிடம் யோசிச்சுப் பாருங்க! சாகிறதுக்குள்ளயாவது திருந்தப் பாருங்க! Your stand is unjustifiable! Better understand that!

****************

 அமெரிக்காவில் போன மாதம்  ஓரினச்சேரக்கையில் உள்ளவங்க எந்த மாநிலத்தை சேர்ந்தவங்களும்  திருமணம் செய்துக்கலாம்னு சுப்ரீம் கோர்ட் முடிவு செய்து தீர்ப்பளித்துவிட்டது. அதாவது ஃபெடடெரல் கவன்மண்ட்டே அறிவித்து விட்டது! இனிமேல் இதுபோல் திருமணங்கள் ஒரு சாதாரண விசயம் ஆகிவிடும்!

சரி  நம்ம நாட்டில் இதுபோல் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் "சாதாரணம்" ஆக இன்னும் எவ்ளோ நாட்கள் ஆகும்? ஒரு 50 வருடங்கள் ஆகலாம். 

நான் ஏற்கனவே சொன்னதுபோல் லிபெரல்க்கும், கன்சர்வேட்டிவ்க்கும் என்ன பெரிய வித்தியாசம்? 

இவன் (லிபெரல்)  இன்னைக்கு செய்றதை அவன் இன்னும் 50 வருடம் சென்று செய்வான். அவன்ந்தான் கன்சர்வேட்டிவ்!

 உடனே அமெரிக்கானா "க்ரேட்"னு நெனச்சுடாதீங்க..

ஒரு மாதத்துக்கு முன்னா அமெரிக்காவில் ஒரு 21 வயது வெள்ளைக்காரப் பையன் ஒரு கருப்பர்கள் வழிபடும் தேவாலத்தில் நுழைந்து சுட்டுத் தள்ளிவிட்டான். 10 பேருக்கும் மேலே படுகொலை செய்யப் பட்டார்கள்! 

இதுவும் அதே அமெரிக்காதான்! இந்த மாதிரி கேவலமான செயல்கள் நடப்பதும் இங்கேதான்!

********************************

ஒரு 8 வருடத்துக்கு  முன்னால ஒரு அமெரிக்கன் ஃபுட் பால் ப்ளேயர், நாய்களை சண்டை போடவிட்டு அது ஒண்ணை ஒண்ணு கொல்லுவதைப் பார்த்து ரசித்ததுக்காக, அவனைப் பிடிச்சு உள்ள போட்டுட்டாங்க. 

மைகேல் விக் என்னும் ப்ளேயர் அவர். அதிலிருந்து வெளிவந்தும் அவர் ஃபுட் பால் வாழ்க்கையில் மேலும் மிளிர முடியவில்லை.

உடனே விலங்குகளைக்கூட மதிப்பவர்கள் அமெரிக்கர்கள்னு தப்புக் கணக்குப் போட்டுறாதீங்க!

எங்க விட்டில் இப்போ நெறையா பறவைகள் வருது. அணில்களுக்கும் பறவைகளுக்கும் விருந்துபோடவே நேரம் சரியா இருக்கு. இதில் என்ன வசதினா, யாரைப்பத்தியும் பொறணி பேச வேண்டியதில்லை. இதுக்குப்பதிலா நம்ம மனித நண்பர்களை அழைத்து விருந்தளித்தால் அன்னைக்கு இன்னும் நாலு இந்தியர்கள் தலை உருளும். என்ன சொல்வார்கள்? "எல்லாரும் அயோக்கியன்! நான் மட்டும்  யோக்கியன்!" என்பதுபோல் கூசாமல் பேசுவார்கள்! எங்க வீட்டுக்கு வரும் பறவைகளில் முக்கியமான ஒண்ணு, இந்தப் புறா. இதைப்பத்தி தெரிஞ்சுக்கலாம்னு கொஞ்சம் கூகுல் பண்ணி எடுத்தேன்.

mourning dove



Image result for mourning dove
morning dove





Image result for mourning dove
புறாக் குஞ்சு


புறாக்களின் வாழ்க்கையில் என்ன ஷ்பெஷல்னா இவைகள் ஒருவனுக்கு ஒருத்தினு வாழ்பவைகள்!  

நாய் நேயம் பேசும் அமெரிக்கர்கள், மேலே உள்ள புறாக்களை  பல லட்சகணக்கில் வேட்டையாடி சுட்டுக் கொல்லுகிறார்கள். இதற்கு சட்டம் அனுமதியளிக்கிறது.

புறாக்களை சுட்டுக் கொல்றது இவளுக்குப் பொழுது போக்கு!


இது போதாதுனு எல்லா அராஜகமும் பண்ணிட்டு In God we trust னு வேற சொல்லிக்குவார்கள் வெட்கமே இல்லாமல்!!

*************************

23 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பதிவெழுத தோனலன்னு சொல்லிட்டு இவ்வளோ பெரிய பதிவா எழுதிட்டீங்களே.சுவாரசியமாவே இருக்கு.

Mahesh said...

வாங்க வருண் சார்!
கிட்டதட்ட 8வருடம் ஆகப்போகுதில்லையா நீங்க எழுத ஆரம்பிச்சு
so அதுதான் எழுத மூட் வரல போலும்.
starting ல இருக்கும் ஆர்வம் எழுத சரக்கு தேடிகிட்டே இருப்போம்.

திண்டுக்கல் தனபாலன் said...

// அணில்களுக்கும் பறவைகளுக்கும் விருந்துபோடவே நேரம் // நல்லது... பாராட்டுக்கள்...

காரிகன் said...

வருண்,

கருத்துக் கதம்பமாக தொடுத்து விட்டீர்கள். அதிலும் அந்த புறாக் கொல்லி படம் என்னை ஏகத்துக்கு கடுப்பேத்தியது. மனதில் கருணை, இரக்கம் போன்ற சில கோடுகள் இல்லாவிட்டால் புறாக்களைக் கொல்வது சுலபம்தான் போல.

அமெரிக்க டாலர் நோட்டில் உள்ள In God We Trust க்கு இன்னொரு அர்த்தம் இருக்கிறது. அவர்கள் சொல்லும் God அந்த கரன்சி நோட்டுதான். இப்போது இது முரணாகவே தெரியாது.

Amudhavan said...

மூட் வரலையென்பதற்காகப் பதிவுகள் எழுதாமல் இருந்தது நியாயம். அங்கங்கே உங்களின் பட்டவர்த்தனமான கமெண்டுகள் இருக்குமே அவற்றையும் காணவில்லையே. அல்லது கமெண்ட் எழுதும் அளவுக்கு ஒர்த்தான பதிவுகள் வருவது இப்போது குறைந்துபோய்விட்டதுவோ?

ஆரூர் பாஸ்கர் said...

நீங்கள் மிகவும் வெளிப்படையாக அமெரிக்கா பற்றி பேசுகிறீர்கள்.
-ஆரூர் பாஸ்கர்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//எம் ஜி ஆர் விசிறிகளை, இதுபோல் அவர் நடித்த நாலு படம் சொல்லச் சொல்லு பார்ப்போம்?// நாடோடிமன்னன், வேட்டைக்காரன் பாருங்கள். அழு மூஞ்சி படங்கள்தான் வேண்டுமென்றால் பாசம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, தங்கை பாருங்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மதுரை வீரன் கூட எம்ஜியார் நடிப்பில் மிளிர்ந்த படம்தான். அட நீயா..., என்ற ஒரு வசனம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்று காட்ட, அந்த சொற்களை உச்சரிக்கும் போது நாயகன் நாயகியின் உடல் மொழிகள் பல காதல் கதைகள் சொல்லும்.

பொம்மியின் காதலின் துவக்கத்தில் வீரனின் குழப்பம். நரசப்பனிடம் பேசும்போது முதலில் தாழ்வுமனப்பான்மை, அதன்பின்னர் ஒரு எகத்தாளம் என்று சிறப்பாகவே செய்திருப்பார்.

மகிழ்நிறை said...

**இப்போ என்னாச்சு? நீ பதிவெழுதலைனு யாரு அழுதா? அப்படியே இருந்து இருக்க வேண்டியதுதானே?னுதானே சொல்றீங்க? :)** ஹலோ! என்ன இப்படி கேட்டுடீங்க????!!!! இன்று உங்களுக்கு ரிப்ளை தட்டும்போது கண்டிப்பா கேட்கணும்னு நினைத்தேன் வருண்:)


***நெறைய மன தைரியம் உள்ளவங்க மட்டும் இனிமேல் தொடரவும்! பலர் தலைகள் உருளும் இனிமேல்! ** கொஞ்சம் திடப்படுத்திகிட்டே படித்த போதும், பதிவு முடியும் வரை பயமாவே இருந்தது:) but அப்புறம் தான் தெரிஞ்சது, இப்டி வருண் எதிர் பதிவு எழுதுற அளவு மைதிலி அப்படக்கரா என்ன!!


மறுபடி புறா பார்க்கத் தொடங்கி இருக்கீங்க. நல்ல விஷயம்! உளறல்கள் இப்போ வம்பு மடமாக தலைப்பு மாறி வந்திருக்கிறது என நினைக்கிறேன்:)

வருண் said...

***டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பதிவெழுத தோனலன்னு சொல்லிட்டு இவ்வளோ பெரிய பதிவா எழுதிட்டீங்களே.சுவாரசியமாவே இருக்கு.***

வாங்க, முரளி! :)

வருண் said...

***திருப்பதி மஹேஷ் said...

வாங்க வருண் சார்!
கிட்டதட்ட 8வருடம் ஆகப்போகுதில்லையா நீங்க எழுத ஆரம்பிச்சு
so அதுதான் எழுத மூட் வரல போலும்.
starting ல இருக்கும் ஆர்வம் எழுத சரக்கு தேடிகிட்டே இருப்போம்.***

உண்மைதான் மஹேஷ் வருடங்கள் ஆக ஆக பதிவெழுதும் ஆவல் குற்றைவதுதான் வலைதளங்களில் நார்மல் ட்ரெண்ட்! :)

வருண் said...

***திண்டுக்கல் தனபாலன் said...

// அணில்களுக்கும் பறவைகளுக்கும் விருந்துபோடவே நேரம் // நல்லது... பாராட்டுக்கள்...***

எந்தக் கம்மிட்மெண்ட்ஸ் ம் இல்லாத உறவுகளால் தொந்தரவு கம்மி, தனபாலன்! :)

வருண் said...

***காரிகன் said...

வருண்,

கருத்துக் கதம்பமாக தொடுத்து விட்டீர்கள். அதிலும் அந்த புறாக் கொல்லி படம் என்னை ஏகத்துக்கு கடுப்பேத்தியது. மனதில் கருணை, இரக்கம் போன்ற சில கோடுகள் இல்லாவிட்டால் புறாக்களைக் கொல்வது சுலபம்தான் போல.

அமெரிக்க டாலர் நோட்டில் உள்ள In God We Trust க்கு இன்னொரு அர்த்தம் இருக்கிறது. அவர்கள் சொல்லும் God அந்த கரன்சி நோட்டுதான். இப்போது இது முரணாகவே தெரியாது.**

உண்மைதான் காரிகன். America is all about money and sex! Some of my American friends say that! :)

வருண் said...

***Amudhavan said...

மூட் வரலையென்பதற்காகப் பதிவுகள் எழுதாமல் இருந்தது நியாயம். அங்கங்கே உங்களின் பட்டவர்த்தனமான கமெண்டுகள் இருக்குமே அவற்றையும் காணவில்லையே. அல்லது கமெண்ட் எழுதும் அளவுக்கு ஒர்த்தான பதிவுகள் வருவது இப்போது குறைந்துபோய்விட்டதுவோ?***

வாங்க அமுதவன் சார். நேரமின்மை என்பதுதான் முக்கியக் காரணம் சார். "மூட் இல்லை" என்பதெல்லாம் சும்மா ஒரு "சாக்கு"னு நினைக்கிறேன். :)

Iniya said...

ஹா ஹா ஹா வந்தாச்சா ..அப்பா நூறு வயது வருண் உங்களுக்கு அதற்கு மேலும் என்றாலும் நல்லது ஆனால் அதிகம் ஆசைப் படக் கூடாது அல்லவா ..... ம்..ம் ரொம்ப நாளா காணலையே என்னாச்சு என்று யோசித்துக் கொண்டு இருந்தேன் யாரைக் கேட்பதுசரி இன்னிக்கு பதிவில விசாரிச்சா போச்சு என்று ஒப்பன் பண்ணினா தங்கள் பதிவு உடனும் நுழைந்து விட்டேன்.
நீங்கள் சொல்வது சரி தான் என்ன செய்வது ஜெசிக்கா பாவம் சொல்லச் சொன்னதை செய்கிறார் ஆனால் திரும்ப திரும்ப போட்டு அறுக்கிறார்கள். இதனால் போகவும் பிடிக்குது இல்லை எனக்கு ரொம்ப பக்கத்தில சில சமயம் போவேன்.

பதிவெழுத தோனலன்னு சொல்லிட்டு இவ்வளோ பெரிய பதிவா எழுதிட்டீங்களே.சுவாரசியமாவே இருக்கு.ம்..ம்
புரளி பேசாம இருக்க நல்ல வழி கண்டு பிடிசிருகீங்க நானும் இனி அதையே பொல்லோ பண்ணப் போகிறேன். அட தங்கள் அனுமதியுடன் தான். ஹா ஹா ... எனக்கு தைரியம் சுட்டுப் போட்டாலும் வராது...அதனால இப்பிடிப் பயப் படுத்தாதீர்கள் வருண் மற்ற படி நலம் தானே?

வருண் said...

***ஆரூர் பாஸ்கர் said...

நீங்கள் மிகவும் வெளிப்படையாக அமெரிக்கா பற்றி பேசுகிறீர்கள்.
-ஆரூர் பாஸ்கர்***

வாங்க பாஸ்கர்! அமெரிக்கா வந்தத்லிருந்து நான் ரொம்ப ஓப்பன் மைண்டெட் ஆயிட்டேன்னு நினைக்கிறேன். அமெரிக்கவையும் அமெரிக்கர்களையும் விமர்சிப்பதிலும்தான். :)

வருண் said...

***SUREஷ்(பழனியிலிருந்து) said...

//எம் ஜி ஆர் விசிறிகளை, இதுபோல் அவர் நடித்த நாலு படம் சொல்லச் சொல்லு பார்ப்போம்?// நாடோடிமன்னன், வேட்டைக்காரன் பாருங்கள். அழு மூஞ்சி படங்கள்தான் வேண்டுமென்றால் பாசம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, தங்கை பாருங்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மதுரை வீரன் கூட எம்ஜியார் நடிப்பில் மிளிர்ந்த படம்தான். அட நீயா..., என்ற ஒரு வசனம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்று காட்ட, அந்த சொற்களை உச்சரிக்கும் போது நாயகன் நாயகியின் உடல் மொழிகள் பல காதல் கதைகள் சொல்லும்.

பொம்மியின் காதலின் துவக்கத்தில் வீரனின் குழப்பம். நரசப்பனிடம் பேசும்போது முதலில் தாழ்வுமனப்பான்மை, அதன்பின்னர் ஒரு எகத்தாளம் என்று சிறப்பாகவே செய்திருப்பார்.***

வாங்க டாக்டர் சுரேஷ்! நல்லவேளை எம் ஜி ஆரை வ்விமர்சிச்சேன். இல்லைனா உங்களை இப்போக்கூட பார்த்து இருக்க முடியாது. உங்க பொறுப்பான "எம் ஜி ஆர் ரசிகர்" பதிலுக்கு நன்றி. :)

வருண் said...

***Mythily kasthuri rengan said...

**இப்போ என்னாச்சு? நீ பதிவெழுதலைனு யாரு அழுதா? அப்படியே இருந்து இருக்க வேண்டியதுதானே?னுதானே சொல்றீங்க? :)** ஹலோ! என்ன இப்படி கேட்டுடீங்க????!!!! இன்று உங்களுக்கு ரிப்ளை தட்டும்போது கண்டிப்பா கேட்கணும்னு நினைத்தேன் வருண்:)


***நெறைய மன தைரியம் உள்ளவங்க மட்டும் இனிமேல் தொடரவும்! பலர் தலைகள் உருளும் இனிமேல்! ** கொஞ்சம் திடப்படுத்திகிட்டே படித்த போதும், பதிவு முடியும் வரை பயமாவே இருந்தது:) but அப்புறம் தான் தெரிஞ்சது, இப்டி வருண் எதிர் பதிவு எழுதுற அளவு மைதிலி அப்படக்கரா என்ன!!


மறுபடி புறா பார்க்கத் தொடங்கி இருக்கீங்க. நல்ல விஷயம்! உளறல்கள் இப்போ வம்பு மடமாக தலைப்பு மாறி வந்திருக்கிறது என நினைக்கிறேன்:)***

வாங்க மைதிலி! உங்களுக்கு ரொம்ப தைரியம்தான்! தொடர்ந்து வாசிச்சு முடிச்சு, கருத்தும் சொல்லீட்டீங்களே!!:))

வருண் said...


***Iniya said...

ஹா ஹா ஹா வந்தாச்சா ..அப்பா நூறு வயது வருண் உங்களுக்கு அதற்கு மேலும் என்றாலும் நல்லது ஆனால் அதிகம் ஆசைப் படக் கூடாது அல்லவா ..... ம்..ம் ரொம்ப நாளா காணலையே என்னாச்சு என்று யோசித்துக் கொண்டு இருந்தேன் யாரைக் கேட்பதுசரி இன்னிக்கு பதிவில விசாரிச்சா போச்சு என்று ஒப்பன் பண்ணினா தங்கள் பதிவு உடனும் நுழைந்து விட்டேன்.
நீங்கள் சொல்வது சரி தான் என்ன செய்வது ஜெசிக்கா பாவம் சொல்லச் சொன்னதை செய்கிறார் ஆனால் திரும்ப திரும்ப போட்டு அறுக்கிறார்கள். இதனால் போகவும் பிடிக்குது இல்லை எனக்கு ரொம்ப பக்கத்தில சில சமயம் போவேன்.

பதிவெழுத தோனலன்னு சொல்லிட்டு இவ்வளோ பெரிய பதிவா எழுதிட்டீங்களே.சுவாரசியமாவே இருக்கு.ம்..ம்
புரளி பேசாம இருக்க நல்ல வழி கண்டு பிடிசிருகீங்க நானும் இனி அதையே பொல்லோ பண்ணப் போகிறேன். அட தங்கள் அனுமதியுடன் தான். ஹா ஹா ... எனக்கு தைரியம் சுட்டுப் போட்டாலும் வராது...அதனால இப்பிடிப் பயப் படுத்தாதீர்கள் வருண் மற்ற படி நலம் தானே?***

வாங்க இனியா! :)

***அட தங்கள் அனுமதியுடன் தான். ஹா ஹா ... எனக்கு தைரியம் சுட்டுப் போட்டாலும் வராது...அதனால இப்பிடிப் பயப் படுத்தாதீர்கள் வருண் மற்ற படி நலம் தானே?***

எனக்கென்னவோ "எனக்கு பயம் சுட்டுப் போட்டாலும் வராது" நீங்க சொல்ற மாதிரித்தான் இருக்கு, இனியா! :)

Avargal Unmaigal said...

நாலஞ்சு பதிவா போடுறதை ஒரே பதிவா போட்டா எப்படி ? தனித்தனியா போட்டா ஒருவாரம் தேத்தலாம்

வருண் said...

***Avargal Unmaigal said...

நாலஞ்சு பதிவா போடுறதை ஒரே பதிவா போட்டா எப்படி ? தனித்தனியா போட்டா ஒருவாரம் தேத்தலாம்***

வாங்க வாங்க, மதுரைத்தமிழரே!

ஜெஸிக்கா அட்வர்டைஷ்மென்ட் பார்த்து நீங்களும் கடுப்பானதை கவனிச்சேன்.. :)

'பரிவை' சே.குமார் said...

என்னடா ஆளைக் காணாமேன்னு பார்த்தா... நாலஞ்சு பதிவை ஒண்ணா எழுதி கலக்கிட்டீங்களே...
தொடர்ந்து எழுதுங்க...

Thulasidharan V Thillaiakathu said...

என்னாது உங்களுக்குப் பதிவு எழுத மூட் இல்லையா!!! நாங்கதான் அப்படி சிலசமயம் புலம்புவோம்னு பார்த்தா உங்களுக்குமா....மற்ற தளங்களிலும் உங்களைக் காணவில்லையே! நாங்கதான் பெரிர்ர்ர்ர்ர்ர்ர்ர்சா போட்டு எல்லாரையும் பொறுமை இழக்க வைக்கிறோம்....நீங்கல்லாம் அப்படியில்லையே நண்பரே! சே இந்தப் பதிவையே நீங்க தனித்தனியா போட்டுருக்கலாமோ...தகவல்களும் சுவாரஸ்யமாத்தான் இருந்தது..