Friday, February 5, 2016

செரீனாவாக தீபிகா படுகோன்! செய்திகள் வாசிப்பது வருண்-2

ஒண்ணு! 

புதுசா ஒரு வைரஸ்த் தொல்லை! இது கொசுக்கள் மூலம் பரவுதாம். கர்ப்பம் தரித்துள்ள  பெண்களை இந்த வைரஸைக் கொண்ட கொசுக்கள் கடித்தால், அவர்கள் வயிற்றில் வளர்ந்து வரும் குழந்தையைப் போய் இந்த வைரஸ் தாக்கி, பிறக்கும் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்குமாம்!

  Zika virus னு சொல்றாங்க!

Image result for zika virus
வைரஸை நம் உடலில் செலுத்தும் கொசு!
Zika EM CDC 280116.tiff
zika virusImage result for zika infected children
Zika வைரஸினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்!

கொசுக் கடிக்கும்போது அது நம்ம ரத்தத்தைத்தானே உறிஞ்சி எடுத்துக்குது ? எப்படி அது உடலில் உள்ள வைரஸ் நமக்கு வருது? புரியலையே?னு உங்களுக்கு சந்தேகம் எதுவும் இருக்கா?

என்ன சொல்றாங்கனா, கொசு கடிக்கும்போது நம் உடலில் உள்ள ரத்தத்தை உறிஞ்சி எடுக்குமுன்னே, அதனுடைய எச்சிலை கடிக்கும் இடத்தில் உள்ளே செலுத்துமாம். அப்போது அதன் மூலமாக நம் உடலில் அதன் எச்சிலில் உள்ள வைரஸும் உள்ளே போய்விடுமாம். அதன் பிறகுதான் ரத்தத்தை உறிஞ்சுமாம்! இப்படித்தான் நம் உடலில் கொசுக்கள் மூலம் வைரஸ் அல்லது வேறு நுன்னுயிரிகள் செலுத்தப்படுகிறதாம்.

இதில் என்ன வேடிக்கை என்றால் கொசுக்களுக்கு இந்த வைரஸை எப்படி தங்களை கொல்லாமல் தடுப்பதுனு தெரியும். அப்படினா?

ஃபேஜஸ் என்பார்கள்!

சரி, வைரஸ்களுக்கு உயிரில்லை என்பார்கள். உயிரில்லையா? அது ஏன் என்றால் வைரஸ்களால் மற்ற உயிரிகள் உடலில் நுழைந்து அவ்வுயிரிகளின் டி என் எ வில் தன் டி என் எ வை கோர்த்துவிட்டுத்தான் தான் இனவிருத்தி செய்ய முடியும். தானாக இனவிருத்தி செய்ய இயலாது இதனால் வைரஸ்களுக்கு உயிரில்லை என்பார்கள்.

 ஸோ, வைரஸ்கள் சில பாக்டீரியா மற்றும் விலங்குகள் பறவைகள் உடலில் சென்றுதான் "மல்ட்டிப்ளை" ஆகமுடியும். அப்படி பாக்டீரியா உடலில் சென்று இனவிருத்தி செய்யும் வைரஸ்களுக்கு பாக்டீரிய ஃபேஜஸ் என்பது பெயர்.

இந்த பாக்டீரியாக்கள் மனிதர்கள் விலங்குகளை விட "ஸ்மார்ட்". அதாவது  தன்னை அழிக்க வரும் இந்த வைரஸ்களை எப்படி அழிப்பதுனு அதற்கு தேவையான ஒரு "ஜெனட்டிக் கோட்" ரெடிமேட் ஆக பாக்ட்டீரியா வைத்திருக்கும். அந்த ஜெனட்டிக் கோட், இவ்வைரஸ்களை அழிக்கத் தேவையான எதிர்ப்பு சக்தி உருவாக்கி இவ்வைரஸ்களை அழிக்க முடியும்.

அதேபோல் இந்த "ஸீக்கோ" வைரஸையும் கொசுக்கள் எளிதாக அழித்துவிடும். ஆனால் கொசுக்களை அவைகளை கொல்வதற்கு சிறிது நேரம் எடுக்கும். அந்த நேரத்தில் வைரஸுடன் போராடிக்கொண்டிருக்கும் கொசு நம்மைக் கடித்தால், கொல்லப்படாத அந்த "ஸீக்கோ" வைரஸ் நம் உடலில் வந்துவிடும். வந்து கருவில் உள்ள குழந்தையை தாக்கி விடும்.

இன்னும் கொஞ்சம் குழப்பவா?

"CRISPR"னு ஒரு புது முறையில் இப்போ ஆராய்ச்சி ச்செய்து புது மாதிரியாக இவ்வைரஸ்களை, பாக்டீரியாக்களில் "ஜெனட்டிக் கோட்" டை கற்றுக்கொண்டு, அதை பயன்படுத்தி நாமும் பாக்டீரியாவைப் போலவே இவ்வைரஸ்களை அழிக்கலாம் என்று விஞஞானிகள் இப்போது ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இப்போதைக்கு அந்த ஆராய்ச்சி பாதியில்தான் இருக்கிறது.

CRISPR


அறிவியல் பத்தி பேச ஆரம்பித்தால் எங்கே முடிக்கிறது தெரியாமல் முழிக்க வேண்டிய சூழல் இது. இங்கேயே நிறுத்திக்கிறேன்.

இன்னொண்ணு ஒவ்வொரு முறையும் ஏதாவது படிக்க உக்காந்தால், எனக்கு தெரிந்ந்ததும் கைமண்ல ஒண்ணு ரெண்டு மண் அளவுதான்னு தோனுது! :( நல்லா நான் படிச்சு பாடையிலே போனேன் போங்க! :(


********************************
ரெண்டு!

"துக்ளக்! 

சோ ராமசாமி! 

இது துக்ளக்கிலிருந்து வெட்டி ஒட்டியது! 

சோ ராமசாமி சொல்லீட்டாரு! " னு

ஒரு ஆள் உளறிக்கிட்டே அலைகிறார்!

ஒரு சாமானியன் (நம்ம சாம் இல்லை): உங்க பெயர் என்னங்க? ஏன் எப்போப் பார்த்தாலும் துக்ளக், சோ ராமசாமி!  துக்ளக்" ல இப்படி எழுதியிருக்காரு, சோ ராம சாமி தூங்கினாரு, சோ ராமசாமி சிரிச்சாரு, சோ ராமசாமியை ஏன் எனக்குப் பிடிக்கும்னா.. னு எதையாவது இருபத்து நாலுமணி நேரமும்  புலம்பிக்கிட்டே அலையிறீங்க?

உளறுபவர்: அது வந்து என் பேரு காவி மைந்தன்! நான் ஒரு பக்காத் திராவிடன்! எனக்குப் பார்ப்பனர்களை வழிபடலைனா தூக்கம் வராது!

சாமானியன்: இதென்ன ஒரு மாதிரியான வியாதியா? ஆனால் பெயர்ப் பொருத்தம் பிரமாதம்!

 உளறுபவர்:

 துகளக் ல இப்படி ஒரு செய்தி! 

துக்ளக் படிங்கோ! 

சோ ராமசாமி உச்சாப் போனாரு!

*****************************

 மூனு!

பதிவுலகில் எனக்கு என்ன பெரிய குறைபாடுனா..அமெரிக்கன் ஃபுட் பால் பத்தி பேச மருந்துக்குக் கூட ஆளில்லை என்பது.

கடைசில அங்க சுத்தி இங்க சுத்தி ஒரு அமெரிக்கன் ஃபுட்பால் ரசிகக் குடும்பத்தையே சந்திச்சாச்சு!

அதான் நம்ம விவாசமும் அவரும் அவர் பொண்ணுங்களும் ஃபுட் பால் விரும்பிப் பார்ப்பார்களாம்.

விசுவுடைய ராசாத்திகள் இருவரும்  டாம் ப்ரேடி விசிறிகளாம்!

இனிமேல் நானும் டாம் ப்ரேடியையும். ச்சீட்ரியாட்ஸையும், பெல்லிச்சிக்கையும் மதிக்க ரசிக்கக் கத்துக்கணும்! :(

Anybody is willing to pick the winner of super bowl 50?!

Cam Newton vs Peyton manning super bowl 50
Image result for peyton manning vs cam newton
Cam Newton vs Peyton manning super bowl 50


**************************

 நாலு

அடுத்து  நம்ம தீபிகா ஹாலிவுட் படத்தில் நடிக்கிறாராம்! உங்களுக்கு எல்லாம் தெரியுமா என்னனு தெரியலை. எனக்குத் தெரியும்  தீபி எங்கேயே போகப்போதுனு! :)

https://pbs.twimg.com/media/Caa3HLsUAAAZ-ne.jpg

#XanderCageReturnshttps://pbs.twimg.com/media/Caa3RM3UkAAdclW.jpg

#XanderCageReturns

Next bond-girl?!! :)))

  ******************************
ஐந்து!

எனக்கு பயமே கிடையாது! நம்ம  "ஒலகம்" சொல்லியிருக்காரு!நான் கேள்விப்பட்ட வரைக்கும் கமல் கேன்ஸர் அவேர்னஸ், எச் ஐ வி அவேர்னெஸ்னு நல்ல நல்ல விசயங்கள் எல்லாம் செய்கிறார். ஆனால் இவர் ஏன் இப்படி எதையாவது இப்படி ஆணித்தனமாகச் சொல்றார்னு தெரியலை. இவர் பேசுறதெல்லாம் பலருக்கும் கோபம் வரும்படிதான் இருக்கு! :(

விகடனில் இவர் கொடுத்த பேட்டியில் நியூ யார்க் தண்ணீர் பத்தியும், தனக்கு பயமே இல்லை னு எதையையோ சொல்லப்போக, பலரும் இவரை விமர்சிக்க கிளம்பிட்டாங்க!


 Proud IndoCanadian
Total BS. Please do a google of Flint, Michigan and you'll see what is happening due to lead based pipes there. The Governor of Michigan had declared a state of emergency. I live 6 hours away from Newyork and we drink "Kirkland" brand bottled water from Costco. Just because he is a star he cannot take us for an intellectual ride.

AR  
KH is doing good things, good. But he should try to be more humble, rather than acting humble. His ego is  still inflated at 60.

 Murali  60 வயது ஆனபின்னரும் வயதுக்கேற்ற பக்குவம் வந்த மாதிரி தெரியவில்லையே
***********************


16 comments:

தவறு said...

வருண்...ஸீக்கோ வைரஸ் செய்தி அருமை...

நிஷா said...

Zika virus குறித்து சர்வதேச ரிதியில் கவலைபடும் நிலை தான் அலலவா? ஒன்று போனால் இன்னொன்றென ஏதோ ஒன்று உருவாகிக்கொண்டே இருக்கின்றது! நோய்களும் தொடர்கின்றதே தவிர அவைகளை தடுக்கும் வழி முறைகள் தான் காணோம்!சர்வதேச பேரிடர் அறிவிப்பு வரும் படியாய் நிலைமை போய் கொண்டிருப்பது!கவலை தரும் செய்தி!

கொசுக்களை ஒழித்து விட்டால் இந்த வைரஸ் பரவாது தானே?

வருண் said...

வாங்க தவறு!:)

வருண் said...

***நிஷா said...

Zika virus குறித்து சர்வதேச ரிதியில் கவலைபடும் நிலை தான் அலலவா? ஒன்று போனால் இன்னொன்றென ஏதோ ஒன்று உருவாகிக்கொண்டே இருக்கின்றது! நோய்களும் தொடர்கின்றதே தவிர அவைகளை தடுக்கும் வழி முறைகள் தான் காணோம்!சர்வதேச பேரிடர் அறிவிப்பு வரும் படியாய் நிலைமை போய் கொண்டிருப்பது!கவலை தரும் செய்தி!

கொசுக்களை ஒழித்து விட்டால் இந்த வைரஸ் பரவாது தானே?***

வாங்க நிஷா!

எந்த ஒரு உயிரியையும் (நமக்குத் தீமை தரும் உயிரியை) ஒரேயடியாக இந்த உலகை விட்டு ஒழிப்பதும் பல பிரச்சினைகளை உண்டாக்கலாம்னு சொல்றாங்க..

முடிந்தால் இந்த ஆர்ட்டிக்கிள் வாசிச்சுப் பாருங்க.

http://www.nature.com/news/2010/100721/full/466432a.html

Eradicating any organism would have serious consequences for ecosystems — wouldn't it? Not when it comes to mosquitoes, finds Janet Fang.

நிஷா said...

படித்தேன்! இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையில் அனைத்தும் அவசியம் என்பதில் கருத்து வேறுபாடில்லை தான்! அந்த வைரஸ்களை பரப்பும் கொசுக்களை இன்ம கண்டு அவைகள் பெருகாமல் தடுப்பதும் தவறில்லையல்லவா?

இலங்கையில் மலேரியா தடுப்பு என குப்பைகளை அழுக்குகளை சேகரித்து உடனே எரியூட்ட வேண்டும் என சட்டம் கொண்டு வந்து கடுமையாக கண்காணிப்பதாகவும், எவரேனும் தங்கள் வீட்டு குப்பைகளை தெருவில் கொட்டினலஓம் தன் காணிக்குள் குழி தோண்டி குப்பைகளை கொட்டினாலோ அபராதம் என கடுமையாக கண்காணிப்பதால் மலேரியாவை பரப்பும் கொசுக்கள் வளர்ச்சி தடுக்கப்பட்டிருப்பதை நான் அங்கே சென்ற போது உணர்ந்திருக்கின்றேன்!அப்படியே இம்மாதிரி மனித இனத்துக்கு தீங்கு விளைவிப்பதை இனங்கண்டு தடுப்பதில் தவறே இல்லை!

வருண் said...

நிஷா!

இவ்வுலகம் மனிதனுக்குத்தான் சொந்தம் என்பதுபோல் நாம் நினைக்கிறோம். தான் வாழ மனிதன் எத்தனை உயிரிகளை இரக்கமே இல்லாமல், கொல்லுகிறான், ஏமாற்றுகிறான், தன் வசதிக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறான். மற்ற உயிரிகளும் தான் வாழ மனிதனைப் பதம் பார்க்கத்தான் செய்யும். அவைகளைப் பற்றிக்கவலைப்படாத மனிதனைப் பற்றி அவைகள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

நான் இப்போது ஒரு "கொசுவாக" இருந்து மனிதனிடம் விவாதிக்கிறேன். :)

நிஷா said...


கொட்டினாலும் என திருத்தி படிக்கவும்.


இலங்கையில் மலேரியா தடுப்பு என குப்பைகளை அழுக்குகளை சேகரித்து உடனே எரியூட்ட வேண்டும் என சட்டம் கொண்டு வந்து கடுமையாக கண்காணிப்பதாகவும், எவரேனும் தங்கள் வீட்டு குப்பைகளை தெருவில் கொட்டினாலும் தன் காணிக்குள் குழி தோண்டி குப்பைகளை கொட்டினாலோ அபராதம் என கடுமையாக கண்காணிப்பதால் மலேரியாவை பரப்பும் கொசுக்கள் வளர்ச்சி தடுக்கப்பட்டிருப்பதை நான் அங்கே சென்ற போது உணர்ந்திருக்கின்றேன்!அப்படியே இம்மாதிரி மனித இனத்துக்கு தீங்கு விளைவிப்பதை இனங்கண்டு தடுப்பதில் தவறே இல்லை!

நிஷா said...

ஆஹா! வருண்படிக்கும் காலத்தில் உண்வுச்சங்கிலி என படித்திருப்போம்!

மண்,மரம்,ஆடு,மனிதன்,புலி இந்த மாதிரி கணக்கில் பார்த்தால் ஒன்றையொன்று தாங்குகலும் தாக்குதலும் இயல்பானதே!

மிருகங்கள் தன்னை தாக்க வரும் மனிதனை எதிர் தாக்குதல் நடத்தாமல் சும்மா பார்த்துக்கொண்டா இருக்கும். தன்னை பாதுகாக்க தற்பாதுகாக்கும் உரிமை பூச்சிகளுக்கும், புழுவுக்கும் கூட இருக்கும் போது மனிதனுக்கு இருக்க கூடாதா? கொசு கடிப்பது அதன் இயல்பெனில் அதை அடிப்பது மனிதன் இயல்பு!

கொசு கொசுவாய் இருக்கும் வரை தான் அதை கண்டுகொள்ளாமல் விட முடியும், அது எப்பொழுது அடுத்தவரை தாக்கி வலி தருமொன்றாய் மாற முனைகின்றதோ அதன் பின் அதை அழிபப்தில் என்ன தவறு?

ஆக்கலும் அழித்தலும் இவ்வுலகில் முடிவு வரை நடந்து கொண்டு தான் இருக்கும்.

வருண் said...

**** நிஷா said...


கொட்டினாலும் என திருத்தி படிக்கவும்.


இலங்கையில் மலேரியா தடுப்பு என குப்பைகளை அழுக்குகளை சேகரித்து உடனே எரியூட்ட வேண்டும் என சட்டம் கொண்டு வந்து கடுமையாக கண்காணிப்பதாகவும், எவரேனும் தங்கள் வீட்டு குப்பைகளை தெருவில் கொட்டினாலும் தன் காணிக்குள் குழி தோண்டி குப்பைகளை கொட்டினாலோ அபராதம் என கடுமையாக கண்காணிப்பதால் மலேரியாவை பரப்பும் கொசுக்கள் வளர்ச்சி தடுக்கப்பட்டிருப்பதை நான் அங்கே சென்ற போது உணர்ந்திருக்கின்றேன்!அப்படியே இம்மாதிரி மனித இனத்துக்கு தீங்கு விளைவிப்பதை இனங்கண்டு தடுப்பதில் தவறே இல்லை! ***

ஆக, கொசுக்கள் மனிதனை ஒரு வழியா திருத்தி, குப்பையை ஒழுங்காக டிஸ்போஸ் பண்ண வைத்துவிட்டனனு சொல்றீங்க? :)வருண் said...

****நிஷா said...

ஆஹா! வருண்படிக்கும் காலத்தில் உண்வுச்சங்கிலி என படித்திருப்போம்!

மண்,மரம்,ஆடு,மனிதன்,புலி இந்த மாதிரி கணக்கில் பார்த்தால் ஒன்றையொன்று தாங்குகலும் தாக்குதலும் இயல்பானதே!

மிருகங்கள் தன்னை தாக்க வரும் மனிதனை எதிர் தாக்குதல் நடத்தாமல் சும்மா பார்த்துக்கொண்டா இருக்கும். தன்னை பாதுகாக்க தற்பாதுகாக்கும் உரிமை பூச்சிகளுக்கும், புழுவுக்கும் கூட இருக்கும் போது மனிதனுக்கு இருக்க கூடாதா? கொசு கடிப்பது அதன் இயல்பெனில் அதை அடிப்பது மனிதன் இயல்பு!

கொசு கொசுவாய் இருக்கும் வரை தான் அதை கண்டுகொள்ளாமல் விட முடியும், அது எப்பொழுது அடுத்தவரை தாக்கி வலி தருமொன்றாய் மாற முனைகின்றதோ அதன் பின் அதை அழிபப்தில் என்ன தவறு?

ஆக்கலும் அழித்தலும் இவ்வுலகில் முடிவு வரை நடந்து கொண்டு தான் இருக்கும். ***

எது சரி, எது தவறு என்பதெல்லாமே நம் (மனித) சுயநலத்தை பொறுத்தே அமைகிறது. மனித இனம் இவ்வுலகில் பெருகிக்கொண்டே போகிறது. ஒரு நூராண்டுகள் முன்பு இத்தனை மனிதர்கள் இல்லை. இப்போ தடுக்கி விழுந்தால் ஒரு மனுஷந்தான் இவ்வுலகில் இருக்கான். சிங்கம் புலி எல்லாம் அழிந்து கொண்டு வருகிறது. இதுபோல் பல உயிரிகள் அழிந்து கொண்டே வருகின்றன.

உலகில் உள்ள காற்றையும், நதி நீரையும் மனிதன் கழிவுக் காற்றாகவும், கழிவு நீராகவும் மாற்றியுள்ளான். மனிதனால் இவ்வுலகம் நாசமாகப் போய்க்கொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட மனித இனைத்தை, வைரஸ்களும், பாக்ட்டீரியாக்களும், கொசுக்கள் உதவியால் கொல்வதில் எதுவும் பெரிய தப்பில்லை. ஆனால் அதஇ தப்பு என்று வரையறுப்ப்து "மனிதன்"தான். அது ஒரு வடிகட்டிய சுய நலம். அவ்வளவுதான். மனிதனால் இவ்வுலகிற்கு எந்த நன்மையும் இல்லை. புழுப் பூச்சிகளால் பல நன்மைகள் உண்டாகுகின்றன. இவ்வுலகம் அவைகளால் நன்றாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. இதுதான் உண்மை, நிஷா! :) மனிதனாக சிந்திக்காமல் கடவுள் ஸ்தானத்தில் உங்களை வைத்து இவ்வுலகைப் பாருங்க. மனிதந்தான் எல்லாவற்றையும் நாசமாக்குகிறான் என்பது உங்களுக்கு விளங்கும்! :))))

நிஷா said...

அடேங்கப்பா! தலைப்பில்தான் செரீனா?
கொசுவுக்காக இத்தனை அடி தடியா?

மனிதன் தான் அனைத்துக்கும் காரணம் என்பதனால் பூச்சிகளும், புழுக்களும் இராட்சதர்களாய் மாறி மனிதர்களை அழிக்க விட்டு விடலாமா?

ஒக்கே! உங்கள் வார்த்தைப்படி என்னை கடவுளாக வைத்தே பார்க்கின்றேன்.

ஏலேய் மனிதா உனக்காக தான் இந்த பூமியை படைச்சேன்! நீ ஆண்டு பல்கிப்பெருகி உன் பிள்ளை குட்டின்னு ஆயிரமாயிரம் வருஷம் வாழணும் என தானே பூச்சி,புழு,பூண்டெல்லாம் படைச்சேன். நீ என்னடான்னால் பூச்சியையும் புழுவையும் ஆளாமல் அவைகள் உன்னை ஆழும் படி விட்டு கொசுவுக்கு பயந்து ஓடி ஒளியிறியேப்பா!

வெட்கம்,வெட்கம், என்னை போல் படைச்சி என் அறிவையும் உனக்கு தந்தைதை நினைச்சி என் தலையில் நானே அடிச்சிக்கிறேன் பாவி! உன்னை படைச்ச நான் தான் பாவியப்பா பாவி@!

உனக்காக பார்த்துப்பார்த்து தேடித்தேடி ஒவ்வொன்றாக படைச்சி நீ பிடிச்சி விளையாட தந்தால் நீ எல்லாத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டாயேப்பா?

இப்படித்தான் கடவுள் தன் தலையில் தானே மண் அள்ளிபோட்ட கதை சொல்லி நொந்துக்குவார் வருண் சார்!

என் வீட்டுப்பக்கம் அந்த கொசு வரட்டும்,

நிஷா said...

கொசுக்கள் திருத்தல்லப்பா, கொசுவுக்கு பயந்து மனிதன் தான் தனனை திருத்திக்கொண்டான்,
மனிதனை யாருமே திருத்த முடியாது, அவனாக திருந்தினால் தான் உண்டு, என்னையும் உங்களையும் போல் பிடித்த முயலுக்கு மூன்று கால் என சொல்லும் ஜாதியாச்சே!

ஐயோ ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ.. நான் இப்ப மனிதனா? கடவுளா என தெரியவில்லையே! ச

வருண் said...நிஷா! ஆமா வரதட்சணை/சீர் சம்மந்தமாக நீங்க எழுதிய பதிவுக்கு நான் ஒரு வம்புப்பின்னூட்டம் எழுதி இருந்தேன் (நம்பர் 12). அதற்கு பொறுப்பாக பதில்பின்னூட்டம் தராமல், பேரழகி தீபிகாவையும் கண்டுக்காமல், நீங்க இப்படி கொசு பின்னாலேயே அலைவது நியாயமா?!! :)

நிஷா said...

ஆமால்ல!எனக்கு என் பக்கம் பதில் சொல்வதை விட இப்படி அடுத்தவர்கள் பக்கம் பின்னூட்டம் போடுவது தான் ஈசியாக தெரிகிறது, என் பக்கம் கடந்த நான்கைந்து பதிவுக்கு இன்னும் நன்றின்னு கூட பின்னூட்டம் தரவில்லை,

இதோ இப்போது உங்களுக்கு பின்னூட்டம் பொன்னூட்டமாய் தந்து விட்டு தான் அடுத்த வேலையே பார்ப்பதாய் முடிவெடுத்து விட்டேன்.

அப்படியே முடிந்தால் இன்று நான் இட்ட உங்களோடு ஒரு நிமிடம்.....!பார்த்து உங்கள் கருத்தினை கொடுங்கள்.

நிஷா said...

உங்கள் கேள்விக்கு ஒரு பதிவாய் பின்னூட்டம் இட்டாகி விட்டது பாருங்கள்,அதுவே இன்னொரு பதிவாயும் வரும்,

தீபிகாவையும் செரீனாவையும் நீங்கள் பார்த்து ரசியுங்கள், எனக்கு நேரமே இல்லை,

நிஷா said...

ஐய்ய்ய்யைய்யோ இந்த ஷீகா வைரஸ் சீனாவுக்கு வந்து விட்டதாம்! முதல் நோயாளி!ஸ்டெச்சரில்! இப்போது தான் பார்த்தேன்!வருண் சார் வீட்டுப்பக்கம் அனுப்ப சொல்லணுமே!