Thursday, March 10, 2016

மகளிர் தினம்! சாதனையாளர் டாக்டர் யமுனா கிருஷ்ணன்!

பொதுவாக பதிவுலகில் பல விசயங்களை பகிர யோசிப்பேன். பலமுறை எதையாவது பகிர்ந்துவிட்டு இதைப் பகிர "இது சரியான இடம் இல்லை" என்பதுபோல் உணர்ந்துள்ளேன்.

சமீபத்தில் ஒரு நண்பனுடன் பேசும்போது ப்ளஸ் 2 வில் கூட க்ளுக்கோஸின் மியுட்டா ரொட்டேஷன்  (mutarotation) பற்றி படிச்சு இருக்கோமே? என்று ஞாபகம் வந்து சொன்னேன். அதாவது mutarotation னை புரிந்துகொள்ளும் அளவுக்கு ப்ளஸ் 2 வில் ஒருவருக்கு ஆர்கானிக் கெமிஸ்ட்ரி அறிவு இருப்பதில்லை.

அப்போ அதை புரிந்துகொண்டு பதில் எழுதிய மாணவனையும், புரிந்துகொள்ள முடியாமல் தோல்வியடைந்த மாணவனையும் எடுத்துக்குவோம். இதில் இருவருக்குமே அதில் உண்மையில் நடக்கிற விசயம் புரியவில்லை என்பதே உண்மை.

எதையுமே ஆழத்தோண்டி புரிந்து கொள்ள முயலும் மாணவர்கள் தோல்வியடைவதும், மேலோட்டமாக எப்படி புரிந்துகொண்டால் மதிப்பெண்கள் பெறமுடியுமோ அந்தளவு புரிந்து கொள்ளும் மாணவர்கள் வெற்றியடைவதும்தான் உண்மை.

https://upload.wikimedia.org/wikipedia/commons/5/5a/Mutarotation_D-Glucose_V.1.png
முதல், ரெண்டாவது மூனாவது எல்லாமே க்ளுக்கோஸ் என்கிற மூலக்கூறு தான்இதெல்லாம் எதுக்கு வருண்?

இந்த சபையில் இதைப் பத்தி பேசணுமா?

நீங்க மேதாவினு காட்டுறீங்களா?

இப்படியெல்லாம் நீங்க என்னை விமர்சித்தால் அது நியாயமான விமர்சனம்தான்.

நான் சொல்ல வருவது என்னவென்றால் நாம் எதையுமே சரியாகப் புரிந்து கொள்வதில்லை. நுனிப்புல் மேய்ந்துகொண்டுதான் வாழ்கிறோம் சாகும்வரை.

அப்படி இருக்கும்போது, ஒரு சிலர் தான் பெரிய புடுங்கிபோல் பேசும்போது ஓங்கி அறையணும்போல இருக்கும்னு சொல்ல வந்தேன்.

உங்களுக்கு அப்படியெல்லாம் இருக்காதா? சரி அப்போ கீழே வாங்க!

************************
 வந்துட்டீங்களா?

ஒரு சிலர் எது நடந்தாலும் சிரிச்சுக்கிட்டே "கூல்"ஆக இருப்பார்கள். இவர்களைப்  பார்த்து இருக்கீங்களா?

அதாவது கந்து வட்டிக்கு வாங்கி வியாபாரம் செய்து அல்லது பொண்ணுக்கு பெரிய இடமாப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சு, அல்லது தன் மகனை/மகளை தகுதிக்கு  மீறி கடன்  வாங்கி, மெடிக்கல் அல்லது இஞ்னியரிங் சீட் வாங்கிப் படிக்க வச்சுட்டு, கடன் கன்னா பின்னானு ஆயி கடன்காரன் கழுத்தில் துண்டைப்போட்டு  இழுத்தாலும் சரி,  இல்லைனா பெண்டாட்டி இன்னொருவருடன் போனாலும் சரி, இல்லைனா எவன் துரோகியானாலும் சரி, எவன் நம்பிக்கைத் துரோகியாக ஆனாலும் சரி.
இவர்களிடம் ஒரே நிதானம்தான். அப்போவும் ஒரு தெய்வீகப் புன்னகை.

அடேங்கப்பா என்ன ஒரு டெம்பெரமெண்ட்!  மனுஷனுக்கு என்ன ஒரு நிதானம்! என்றெல்லாம் பாராட்டும் அளவுக்கு இருப்பாங்க.

சரி, இவர்களைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? இவர்களைப் பத்தி நினைக்கவே நேரமில்லையா?

ஆமா ஏன் இப்படி இருக்காங்க? எப்படி இப்படி இருக்காங்க? இந்த குவாலிட்டியை நாம்  பாராட்டணுமா?

ஆமா என்பது உங்க பதில் என்றால் இல்லை என்றுதான் நான் விதண்டாவாதம் செய்வேன்! ஏன் வருண்? அதுதான் என் சுபாவம்!

*****************************

தலைப்புக்கு வருகிறேன்.

 பெண்கள் தினம்! சாதனையாளர் டாக்டர் யமுனா கிருஷ்ணன்!


 அதாவது நீங்க அமெரிக்காவில் பி எச் டி வாங்கிவிட்டு இங்கே நல்ல பலகலைக்கழகங்களில் பேராசிரியராக ஆவது எளிது. அதே சமயத்தில் இந்தியாவில் உங்க படிப்பை முடித்து விட்டு அமெரிக்கா வந்து பெரிய பல்கலைக்கழகங்களில் பேராசிரியராவது கடினம்.
 அதுபோல் ஒருவரால் செய்ய முடிந்தால் அவர் நிச்சயமாக சாதனையாளர்தான்.

யமுனா கிருஷ்ணன்!


 

சென்னையில் பி எஸ் சி படித்த இவர், இந்திய அறிவியற்கூடம் பங்களூரில் இன்டெக்ரேட்டெட் பி எச் டி படித்து முடித்துவிட்டு, யு கே வில் போஸ்ட் டாக்டரல் ரிசேர்ச் ஐந்து வருடம் செய்துள்ளார்.

பிறகு பங்களூரில் டி ஐ எஃப் ஆரில் லெக்சரர், ரீடர் ஆகி பேராசிரியர் லெவெலுக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் "பட் நாகர்" அவார்ட் பெற்றுள்ளார்.

ஆயிரக்கணக்கான பேரு பி எச் டி முடித்துவிட்டு அமெரிக்கா வந்துள்ளார்கள். ஆனால் இவர் மட்டும் ஏன் ரொம்ப ஷ்பெஷல் என்றால்,

இவருடைய அறிவியல் பப்ளிகேஷன்களைப் பார்த்து இவருக்கு யுனிவேர்சிட்டி ஆஃப் சிகாகோவில் பேராசிரியர் ஆஃபர் கொடுத்துள்ளார்கள். 

இதுபோல் மிகச் சிறந்த்  பல்கலைக்கழகங்களில் இருந்து இதுபோல் பதவியை முன்வந்து தந்தால் அவர் நிச்சயம் உலகத்தரமான அறிவியல் ஆராச்சியாளராக இருக்க வேண்டும்.

இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எனக்குத் தெரியவில்லை. தமிழ் பேசுவார் என்றுதான் நினைக்கிறேன்.

பெண்கள் முன்னேறி விட்டார்கள்! 

ஆமா நல்லா குடிக்கிறாங்க!

செக்ஸ் பத்தி எல்லாம் அழகா, ஆழமா விமர்சிக்கிறாங்க! என்பதுபோல்தான் பெண்கள் சாதனைகளை பலர் முன் வைத்துப் பேசுகிறார்கள்,


 அவர்கள் மத்தியில் யமுனா கிருஷ்ணன் சாதனை உண்மையிலேயே நம்ம பெண்கள் மேலே வந்துகொண்டு சாதிக்கிறார்கள், ஆண்களுக்கு மேலும் சாதிக்கிறார் என்று நிதர்சனத்தைக் காட்டுகிறது.

எனக்கு இவரைத் தனிப்பட்ட முறையில் தெரியாது. இவரோட நான் பேசியதும் இல்லை. இவரைப் பற்றி மகளிர் தினத்தன்று எழுதலாமே? என்று தோன்றியது . ஆனால் கொஞ்சம் என்ன ரொம்பவே தாமதமாகிவிட்டது.

இவரைத் தெரிந்துகொள்ள சிலதொடுப்ப்புகள்!

  https://chemistry.uchicago.edu/faculty/faculty/person/member/yamuna-krishnan.html

 http://oneorganichemistoneday.blogspot.com/2015/05/yamuna-krishnan.html

 https://en.wikipedia.org/wiki/Yamuna_Krishnan
6 comments:

Avargal Unmaigal said...

பாராட்டப்பட வேண்டிய சாதனைதான்.......

ஆரூர் பாஸ்கர் said...

வருணிடமிருந்து இந்தமாதிரி ஓரு பதிவை எதிர்பார்க்கவில்லை.
நல்ல முயற்சி தொடருங்கள். உங்கள் நட்பு வட்டதில் தொடர்ந்து நல்ல விசயங்களை பகிருங்கள்.

நிஷா said...

அவர்கள் மத்தியில் யமுனா கிருஷ்ணன் சாதனை உண்மையிலேயே நம்ம பெண்கள் மேலே வந்துகொண்டு சாதிக்கிறார்கள், ஆண்களுக்கு மேலும் சாதிக்கிறார் என்று நிதர்சனத்தைக் காட்டுகிறது.

பாராட்டுகள் டாக்டர் யமுனா கிருஷ்ணன்!

பொதுவாகவே பெண்கள் ஆண்களுக்கு நிகராய் அல்லது அதற்கும் மேலாக சாதிக்கின்றார்கள் ஆனால் அவை வெளிப்படுத்தப்படுவதில்லைஎன்பது தான் சோகம்..

பரிவை சே.குமார் said...

பாராட்டப்பட வேண்டிய சாதனையாளர் யமுனா கிருஷ்ணனை வாழ்த்துவோம்...

மலரின் நினைவுகள் said...

வருண்-ட்ட இருந்து இப்படியொரு பதிவா?
Keep it up

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான பதிவு