Monday, May 23, 2016

அமெரிக்கா சொர்க்கபூமியா? இந்தியர்கள் கவனிக்கவும்!

சங்கீதா ரிச்சேர்ட்னு ஒரு மலையாளி, அமெரிக்கா வர எந்தவித படிப்பறிவோ, தகுதியோ இல்லாத இவர் வேலைக்கு வந்த இடத்தில்  தன்னை அழைத்து வந்த எஜமானி தேவயாணியை வில்லனாக்கி அமெரிக்க குடியிரிமை பெற்றுவிட்டார். ஜீசஸ்தான் பாவிகளை மன்னிச்சுடுவாரே? துரோகிகளும் ஒரு மாதிரியான பாவிகள்தான். ஒரு தர சர்ச்க்கு போயி பாவமன்னிப்பு கேட்டுவிட்டால்  ஜீசஸ் மன்னிசுட மாட்டாரா என்ன?

சமீபத்தில் இவரும் இவர் கணவர் ரிச்சேடும் டைவோர்ஸ் ஃபைல் பண்ணிவிட்டதாக ஒரு செய்தி.

சங்கீதா-ரிச்சேர்ட்



 இதுவும் உண்மையான டைவோர்ஸா?  இல்லைனா இன்னும் ரெண்டு பேரை இருவரும் ,மறுமணம் புரிந்து அவர்களையும் அமெரிக்க குடிமகள், குடிமகனாக்க இன்னொரு ஸ்ட்ரட்டஜியா என்னனு எனக்குத் தெரியவில்லை. அனேகமாக இது அந்தவகை டைவோர்ஸாக இருக்கலாம்னுதான் எனக்குத் தோனுது. ஜீசஸ்தான் இன்னொரு சர்ச் விசிட் செய்தால் மன்னித்து விடுவாரே?

------------------------------

இதுபோல் பலவிதமான மானிப்புலேசன் செய்து அமெரிக்கா வந்து வாழ ஆரம்பித்துவிட்டால். அப்படியென்ன அமெரிக்கா சொர்க்கமா? இவர்கள் இப்படி வந்து வாழ்வதால் அது சொர்க்கபூமி என்று ஆகிவீடுமா என்ன?

அதுதான் இல்லை.

அமெரிக்கவாழ் இந்திய குடிமக்கள் வாழ்க்கை எல்லாம் நாறிக்கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்க சட்டதிட்டங்கள் எந்தளவுக்கு சங்கீதா ரிச்சேர்டை வர வேற்றதோ அதேபோல் நாளைக்கு இன்னொரு முகத்தைக் காட்டலாம். அப்புறம் ஜீஸஸ் மன்னித்தாலும் அமெரிக்க சட்டம் மன்னிக்காது.

அப்படி என்ன நாசமாப்போயிட்டாங்க?

கீழே படத்தில் உள்ள ஐயா, அந்தம்மாவை சுட்டுக் கொன்னுட்டு, அவரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டாராம். அவருக்கு வயது 62. அந்தம்மாவுக்கு 58 னு சொல்றாங்க!

anil kharabanda
Anil Kharabanda, 62, and Neeta Kharabanda, 58



* தேன்மொழி ராஜேந்திரன் சிவகுமார்னு ஒரு தம்பதியினார் தன் குழந்தையை ஒரு குஜராத்தி பெண்ணிடம் பேபி சிட்டிங் சொல்லிப் பார்க்கச் சொல்ல,, அந்தப் பொண்ணுக்கு ஏதோ மனவியாதியாம். குழந்தையை என்ன செய்தது, எப்படி பார்த்துக்கொண்டதுனு தெரியவில்லை. குழந்தை இறந்துவிட்டது. அந்தப்பொண்ணைப் பிடிச்சு உள்ள போட்டுட்டாங்க. இந்த தம்பதியர் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதால் சட்டம் இவர்களையும் விடவில்லை!
சிவகுமார், தேன்மொழி ராஜேந்திரன், கிஞ்சால் பட்டேல் (பேபி சிட்டர்)


* பிரபலப் பாடகர் கே ஜே ஜேசுதாஸ் சகோதரி பையனாம் இவர். ஆனந்த் ஜான் என்பது பெயர். இந்தியாவில்பிறந்து அமெரிக்காவில் "ஃபேஷன் டிஷைனர்" ஆக பணியாற்றி பிரபலமானவர்.

ஆனந்த் ஜான்


ஆமா இப்போ என்ன பண்ணுகிறார்?

ஜெயில்ல ஆயுள் தண்டனை கைதி!

என்ன பிரச்சினை? கொஞ்ச வயது பெண்களை தவறான முறையில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு.

சங்கீதா ரிச்சேர்ட்க்கு அமெரிக்க சட்டம் சப்போர்ட் செய்தது.. அமெரிக்கக் குடியிரிமை வழங்கியது. இதென்ன சட்டம்? ணு தப்புக் கணக்குப் போட்டுடாதீங்க.

அமெரிக்க சட்டத்திற்கு இன்னொரு முகம் உண்டு.

அமெரிக்காவீல் வாழ்ந்திருந்தால் சல்மான் கான் எல்லாம் ஜெயில்லதான் இருப்பாரு..

இந்தியர்களைத்தான் அமெரிக்கா இப்படி செய்கிறது என்றெல்லாம் பொய் குற்றச்சாட்டுக்களை வைக்க வேண்டாம்.. அமெரிக்க சட்டம் "பில் காஸ்பி" யையும் விடாது.

Tuesday, May 17, 2016

தமிழ்நாடு எக்ஸிட் போல் என்ன சொல்லுதுனா..

உலகநாயகனுக்குத்தான் இங்கேயும் வெற்றி போல இருக்கு! அதாவது தமிழ்நாட்டில் எக்ஸிட் போல் என்ன சொல்லுதுனு ஹிந்து ல ரெண்டு மூனு டேட்டா வெளியிட்டு இருக்காங்க.

"அம்மாதான் அடுத்தும்"னு மனப்பால் குடித்தவர்களுக்கு பாதகமாக வந்திருக்கு!


Exit polls hint at anti-incumbency in T.N., Kerala


Tamil Nadu projections: 234 total seats
Parties Chanakya India Today-Axis C-voter
AIADMK 90 +/- 9 89-101 139
DMK+ 140 +/- 11 124-140 78
Others 4 +/- 2 4-8 17


காவேரி மகரும், இன்றும்  நீயும் சேர்ந்து ஒரேயடியா ஒப்பாரி வைக்காமல்  எக்ஸிட் போல் எல்லாம் தி மு க காரன் நடத்தியதுனு சொல்லி ரெண்டு நாளு தெம்பா இருங்க!

பகவான் என்னைக்குமே பார்ப்பனர் வழிபடும்  உங்க பக்கம்தான்! :)

எனக்கெல்லாம் யாரு ஆண்டாளும் ஒன்னும் ஆகப் போவதில்லை!


Thursday, May 12, 2016

யாருக்கு ஓட்டுப் போடுவார் உலகநாயகன்?

டிவிட்டரில் தன் எண்ணங்களை வெளியிடுவதில் நம்பர் ஒன் ராம் கோபால் வர்மா. நம்பர் ரெண்டு யாருனா? அது உலகநாயகன்.

அவருடைய  ட்வீட் என்ன சொல்கிறது?

May 10
ஃபிலிபைன்ஸில் மேடைவிவேகமில்லாத கட்டப் பஞ்சாயத்துக்காரரைத்தான் Presidentஆக்கியிருக்கின்றனர் அடுத்து USA.. தமிழகமும் உலகோடொத்துபோய்விடுமோ?

 Kamal Haasan

ஏதோ சொல்ல வர்ரார் ஆனால் என்ன சொல்றார்னு புரியலையா? சரி விடுங்க!

 

Wednesday, May 4, 2016

த வின்னர் இஸ் டொனால்ட் ட்ரம்ப் !

டெட் க்ரூஸ் மற்றும் ஜான் கேசிக் ட்ராப்பிங் அவ்ட்!  நம்ம ட்ரம்ப்தான் ரிபப்ளிகன் போட்டியாளர்! நவம்பரில் ஹில்லரி க்ளிண்டனை எதிர்த்துப் போட்டியிடப்போபவர்!


Image result for trump vs hillary
Trump vs Clinton

Sunday, May 1, 2016

ராம்கோபால் வர்மாவுக்காக கபாலி! அடேங்கப்பா!

சமீபத்தில் ராம்கோபால் வர்மா, ட்விட்டரில் ஏமி ஜாக்‌ஷன் ஷேர் பண்ணிய ரஜனி செல்ஃபி ஒண்ணைப் பார்த்து, இந்த மாதிரி ஒரு அழகில்லாத ஒரு சாதாரண ரஜனி எப்படி சூ ப் ப ர் ஸ்டாராக இருக்க முடிகிறது? என்கிற கேள்விக்கு உலகில் தலை சிறந்த சைக்கியார்ட்டிஸ்ட் என்ன கடவுளே விளக்க முடியாது!னு ஒரு ட்விட்டர் எழுதி..ரஜனி ஃபினாமினா என்பது புரியாத புதிர்னு சொல்லிப் புலம்பி இருக்கிறார்.

சமீபத்தில் இவருக்கு ரொம்ப நேரம் இருக்கிறது. பாவம் தான் நினைப்பதை எல்லாம் வெளியில் கொட்டி விடுகிறார். யாரா இருந்தாலும் ரொம்பப் பேசப் பேச உளறலாகத்தானே வரும்?

ராம் கோபால் வர்மா காரு!  ஆண் ஸ்க்ரீன் ரஜனி சூடுங்க காரு! கபாலி ட்ரைலெர்.. கண்டு மகிழவும்!








கபாலி ஸ்டில் கண்டு மகிழவும்!


http://media2.intoday.in/indiatoday/images/stories/kabali-story_647_043016041426.jpg
கபாலி

இப்போப் புரிகிறதா, காரு?! என்ன ஒரு மாஸ் அப்பீல்! அடேங்கப்பா!