Saturday, June 27, 2009
"ஆயிரத்தில் ஒருவன்" ஒரு க்ளாசிக்!
எம் ஜி ஆர் படங்களிலேயே சிறப்பான ஒரு படம்னா அது, பி ஆர் பந்துலு வின் ஆயிரத்தில் ஒருவன் தான் என்பேன் நான். 1965 ல் வந்த படம் இது. பாடல்கள் அனைத்துமே முத்தானவை. ஜெயலலிதா அறிமுகமான (வெண்ணிற ஆடை) அதே வருடத்தில் முதல் முதலாக எம் ஜி ஆர் வுடன் ஜோடியாக நடித்த படம் இதுதான். அதே வருடம் வந்த எங்க வீட்டுப் பிள்ளை யை விட இது நல்ல படம் ஆனால் ஆயிரத்தில் ஒருவன் எங்க வீட்டுப்பிள்ளை அளவுக்கு அன்று வெற்றியடையவில்லை என்கிறார்கள்!
நம்ம எம் ஜி ஆர், மணிமாறன், ஒரு நாட்டு வைத்தியர், பாம்புகடி விஷத்துக்கு மருந்து கண்டுபிடிப்பார். அவர் வாழும் நெய்தல் நாட்டில் ஒரு சர்வாதிகாரியின் கொடுமையால் புரட்சி வெடிக்கும். மணிமாறன் சில புரட்சியாளர்கள் உயிரைக் காப்பாற்றுவார். உடனே அங்கே உள்ள சர்வாதிகாரி மனோகர் அவரை குற்றம் சாட்டி அடிமையாக விற்க அவரை கன்னித்தீவுக்கு நாடுகடத்துவார். அடிமையோட அடிமையாக கன்னித்தீவுக்கு அனுப்பப்படுவார் அழகும், வீரமும் நிறைந்த மருத்துவர் மணிமாறன்.
கன்னித்தீவின் இளவரசி, பூங்கொடி (நம்ம அம்மையாருக்கு 16 வயது இருக்கும்).
* "பருவமெனது பாட"லில் அழகும் இளமையுமாக அறிமுகமாவார்!
* "ஏன் என்ற கேள்வி" கேட்கும் ஆயிரத்தில் ஒருவன், மணிமாறனின் அழகில் மயங்கி தன் இதயத்தைப் பறிகொடுப்பார்.
* "ஓடும் மேகங்களே" என்று பாடி, நாடாளும் வண்ண மயில் நீ, நாட்டிலுள்ள அடிமை நான்! உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று சொல்லி இளவரசியின் காதலை நிராகரித்துவிடுவார், மணிமாறன்.
* "உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்" என்று காதல் தோல்வியில் ஏங்குவார், பூங்கொடி!
காலச்சக்கரம் சுழலும், அடிமை மணிமாறன் கொள்ளைக்காரர் ஆவார் இல்லை ஆக்கப்படுவார். ஆனால் அவர் கொள்ளையரைத்தான் கொள்ளையடிப்பார்!! கொள்ளையர்போல் நடிக்கும் நல்லவர், பூங்கொடியின் இதயம் கவர்ந்த அடிமை, மணிமாறன், இன்று கொள்ளையராகி கொள்ளையர் கப்பல்போல் இருக்கும் உல்லாசக்கப்பலை- பூங்கொடியின் கப்பலையே- சூரையாடுவார்.
இளவரசி அடிமையாவார்! ஏலத்தில் விலைக்குப்போகும் (*ஆடாமல் ஆடுகிறேன்) அவர் இதயத்தைத் திருடிய “திருடன்” மற்றும் கொள்ளைக்காரன் மணிமாறன், தானே அவளை விலைக்கு வாங்கிக்கொள்வார்!
இருவருக்கும் இடையில் ஊடல், ஊடல் முடிந்து கூடலாகும்போது!
* நாணமோ இன்னும் நாணமோ பாடலில் ஜோடிப்பொருத்தம் நல்லாயிருக்கும்! ரொம்ப சிறப்பான டூயட் இது! மிகவும் ரசிக்கத்தக்க இருக்கும் இந்தப்பாடல்.
அதுக்கப்புறம் கொள்ளையர்களை நல்லவராக்கி "அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்" பாடல் பாடிக்கொண்டே சொந்த நாடான “நெய்தல் நாட்டுக்கு" திரும்பி வந்து சர்வாதிகாரியிடம் போராடி அவரையும் திருத்தி, குடியாட்சி கொண்டு வருவார்!
எடிட்டிங் பிரமாதம், காமெடி (நாகேஷ்), வில்லன்கள் (நம்பியார், மனோகர்) எல்லாமே அபாரம்!
சண்டைக்காட்சிகள் சிற்ப்பாக இருக்கும். எம் ஜி ஆர், இளமையாகவும் மிகவும் அழகாகவும் இருப்பார்! ஜெயலலிதாவும் சிறப்பா நடித்து இருப்பார்.
மதிப்பெண்கள் 64/100!
Labels:
திரை விமர்சனம்,
திரைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
ஆயிரத்தில் ஒருவன் கண்டிப்பாக மாபெரும் வெற்றிப்படமாக இருந்திருக்கும். அந்தப் படம் ஓடிய திரையரங்குகள் வசூல் பற்றி எம்.ஜி.யார் புகழ் பரப்பும் வலைப்பூக்களில் இருக்கின்றன. அதன் தொடுப்புகளை பின்னர் தருகிறேன்.
முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் பாணியிலான படம். மக்களுக்காக சேவை செய்ய மக்களில் ஒருவராக எம்.ஜி.யார் வருகிறார்.
மக்களோடு மக்களாக அடிமைப் படுகிறார். மக்களின் உணர்வுகளைப் பங்கு போட்டுக் கொள்கிறார். இளவரசியின் காதலைநாட்டு மக்களின் விடுதலைக்காக மறுக்கிறார்.
பல துன்பங்கள் வந்தபோடும் கொள்ளைக் காரனாக மாற மறுக்கிறார். தோழர்களின் உயிரைக் காப்பாற்ற கொள்ளையனாக ஒத்துக் கொள்கிறார். அப்போது கூட கொள்ளையரிடம் தான் கொள்ளையடிக்கிறார்( எம்ஜியாரின் வெற்றி ரகசியம்)
பல அதிரடித்திருப்பங்கள், மக்களால் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய எளிமையான திட்டங்கள் மூலம் எம்.ஜி.ஆர் வியூகம் அமைத்திடுதல்.
கடைசியில் எதிரியை மன்னிப்பது. பின்னர் அந்த எதிரி எம்ஜியாரில் காலில் விழுந்து கதறுவது, பதவியை உதறிவிட்டு மக்களோடு மக்களாக வாழ்வது
என எம்ஜியாரின் ஒட்டுமொத்த ஃபார்முலா படம்
கண்டிப்பாக மாபெரும் வெற்றி பெற்றிருக்கும்
எம்ஜியாரைத் தெரியாத ஆட்களிடம் இந்தப் பட்த்தைப் போட்டுக்காட்டி புதிய படம் என்றால் அதை நம்பிவிடுவார்கள் அந்த அளவு தொழில்நுட்பம் மற்றும் காட்சிகள் அமைத்திருப்பார்கள்.
வாங்க சுரேஷ்!
1) நான் கேள்விப்பட்டது என்னவென்றால், எங்கவிட்டுப் பிள்ளை ஒரு வெள்ளி விழாப் படம். ஆ. ஒ ஒரு வெற்றிப்படம்.
நெறைய செலவழித்து எடுத்ததாலோ என்னவோ, வியாபார ரீதியாக பந்துலுவுக்கு பெரிய இலாபம் இல்லை என்கிறார்கள்.
உங்களுக்கு தெரிந்த லின்க்ஸ் கொடுங்க, நான் தெரிந்து கொள்கிறேன், சுரேஷ் :)
2) உங்க ரெண்டாவது பின்னூட்டத்தில் உள்ள விமர்சனத்தை நான் முழுமனதாக ஏற்றுக்கொள்கிறேன்.
The movie has an excellent plot, flawless, beautifully edited, with excellent photography. It is a great movie!
***எம்ஜியாரைத் தெரியாத ஆட்களிடம் இந்தப் பட்த்தைப் போட்டுக்காட்டி புதிய படம் என்றால் அதை நம்பிவிடுவார்கள் அந்த அளவு தொழில்நுட்பம் மற்றும் காட்சிகள் அமைத்திருப்பார்கள்.***
That is why I call this as CLASSIC, Suresh! :)
Thanks for sharing your thoughts about this movie :)))
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.
அருமையான பாடல்கள்.இனிமையான இசை.இளமையான அம்மா. எதிர்பார்க்க முடியாத திருப்பங்கள்.
அற்புதமான வசனங்களில் ஒன்று,
நம்பியார் கோபமாக : மணிமாறா, மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா ?
சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்றுப் போகும் என தலைவர்
கூலாக கூறுவார்.
ஏன் என்ற கேள்வி பாடலின் நடுவில்,
இப்படியே எத்தனை நாள்தான் அடிமையாக இருப்பது என்று கேட்பவரிடம் ஒரு ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே என ஆரம்பித்து பாட்டிலே பதில் கூறுவார்.
இதுபோன்று ஒவ்வொரு பாடலையும், காட்சியையும் பற்றி எவ்வளவோ எழுதலாம்.
மிக நல்ல படம். காலத்தை வென்று நிற்கும் எம்.ஜி.ஆரின் பாடல்கள் வரிசையில் இப்படப் பாடல்களும்.
***துபாய் ராஜா said...
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.
அருமையான பாடல்கள்.இனிமையான இசை.இளமையான அம்மா. எதிர்பார்க்க முடியாத திருப்பங்கள்.
அற்புதமான வசனங்களில் ஒன்று,
நம்பியார் கோபமாக : மணிமாறா, மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா ?
சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்றுப் போகும் என தலைவர்
கூலாக கூறுவார்.
ஏன் என்ற கேள்வி பாடலின் நடுவில்,
இப்படியே எத்தனை நாள்தான் அடிமையாக இருப்பது என்று கேட்பவரிடம் ஒரு ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே என ஆரம்பித்து பாட்டிலே பதில் கூறுவார்.
இதுபோன்று ஒவ்வொரு பாடலையும், காட்சியையும் பற்றி எவ்வளவோ எழுதலாம்.***
உங்கள் கூற்று முற்றிலும் உண்மை! நானும் உங்களைப்போல் ஒருவன் :)
மதம் கொண்ட யானை வசனத்தின் தொடர்ச்சி,
நம்பியார்: தோல்வியே அறியாதவன் நான்!
எம் ஜி ஆர்: தோல்லியை பரிசளித்தே பழக்கப்பட்டவன நான்!
:)))
உங்கள் பகிர்தலுக்கு நன்றி, ராஜா :)
***ராமலக்ஷ்மி said...
மிக நல்ல படம். காலத்தை வென்று நிற்கும் எம்.ஜி.ஆரின் பாடல்கள் வரிசையில் இப்படப் பாடல்களும்.**
உண்மைதாங்க ராமலக்ஷ்மி. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை மழையில் அருமையான பாடல்கள் நிறைந்த காலத்தால் அழியாத ஒரு காவியம்தான், ஆயிரத்தில் ஒருவன் :)))
தங்கள் பகிர்தலுக்கு நன்றிங்க ராமலக்ஷ்மி :)
Please see the Malayalam film of same name> Kalabhavan Mani - Sibi Malayil. A beautiful movie.
Idont see anything impressive in any MGR film. MGR films those were made just to develop his vote bank.
நல்ல படம்
தலைவர் நடிப்புக்கு முன்னால் எதுவுமே கிடையாது
தலைவர் வந்தால் விசில் பறக்கும்
***azhagan said...
Please see the Malayalam film of same name> Kalabhavan Mani - Sibi Malayil. A beautiful movie.***
I will try watch that movie, azhagan :)
**Idont see anything impressive in any MGR film. MGR films those were made just to develop his vote bank.**
Thanks for sharing your thoughts. Take it easy :)
28 June, 2009 9:37 AM ***
***Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல படம்
தலைவர் நடிப்புக்கு முன்னால் எதுவுமே கிடையாது
தலைவர் வந்தால் விசில் பறக்கும்***
:-)))))))
தாங்கள் தங்கள் கருத்துக்களை இங்கே பகிந்ததற்கு நன்றி, ஸ்டார்ஜன் :)
looks like you have plenty of time ;)
வாங்க சுந்தர்! :-))))
Post a Comment