Tuesday, June 28, 2016

பொதுமக்கள் கையில் கத்தி துப்பாக்கி தற்காப்புக்கு??

எம் சி ஆர் ஒரு காலத்தில் எல்லாரும் ஒரு கத்தி வைத்துக்கொள்ளுங்கள்னு சொன்னதை  பார்ப்பனர் சோ ராமசாமி முதல்கொண்டு தமிழ்நாடே கேலி பண்ணியதாகத் தான் வரலாறு சொல்லுகிறது. போயி பழைய துக்ளக் எடுத்து வாசிச்சுப் பாருங்க! ஆனால் இன்னைக்கு கருணாநிதி அதை விமர்சனம் பண்ணியதுதான் நம்ம அன்பர் காரிகனுக்கு ஞாபகம் வருது.  உலகமே கேலி பண்ணிய ஒரு விசயத்தை எதிர் கட்சி தலைவன் கேலி பண்ணியது பெருங்குற்றமாம்! அடேங்கப்பா நம்ம காரிகன்  எத்தனை பெரிய எம் சி ஆர் பக்தர்னு இப்போத்தான் தெரியுது!

-----------------------------

அமெரிக்காவில் இன்னைக்கு உள்ள பிரச்சினக்கெல்லாம் காரணம் ஆளாளுக்கு தற்காப்புக்குனு துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம் என்கிற ஒரு விசயம்தான்.

தற்காத்துக்கொண்டு எத்தனை பேர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள்?

அதை எத்தனை பேர் தவறாக பயன்படுத்தி பயங்கரவாதம், கொலைகள் எல்லாம் அதிகமாகி நாடு குட்டிச்சுவராகும்?

 என்பதை யோசித்துப் பார்த்தால், திருடர்களும், தீவீரவாதிகளும், கொலைகாரர்களும்தான் அமெரிக்காவில் "Right to bear arms" இதனால் பயனடைவது என்பதை கண்கூடாகப் பார்க்கலாம். "Right to bear arms" என்கிறது மிகப்பெரிய வம்பை விலைக்கு வாங்குவது என்பதை நமக்கு இன்றைய அமெரிக்கா எடுத்துரைக்கிது.

சட்டம் ஒழுங்கை அமல்ப்படுத்தணும்னா, அதிகமான காவல்த் துறை அலுவலகர்கள் வேணும். காவல்துறை அதிகாரிகாளை அதிகப் படுத்தணும். பொது இடங்களில் காவல்துறை அதிகாரிகள் அதிகமாக இருந்தால், சுவாதியை வெட்டும் முன்னால் அவனை அங்குள்ள காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்று இருக்கலாம். மற்றபடி பொது மக்கள் கத்தி வச்சுக்கணும், துப்பாக்கி வச்சுக்கணும்னு சொல்றதெல்லாம் பின் விளைவுகளை சரிவர யோசிக்காமல் சொல்வது.

6 comments:

காரிகன் said...

வருண்,

நான் சில நாட்களுக்கு முன் வவ்வாலைப் பற்றி ஒரு பதிவு எழுதியதால் என் மீது காண்டாக இருப்பீர்கள் என்று தோன்றுகிறது. இருந்தும் நீங்கள் அப்படியான சிறுபிள்ளைத்தனமாக செயல்பட மாட்டீர்கள் என்று நம்புவதால் இந்தப் பின்னூட்டம்.

எண்பதுகளில் எம் ஜி ஆர் பற்றி தி மு க வினர் பேசிய பல அவதூறுகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். உயிர் பிழைத்து அவர் வந்ததும் பேச முடியாத முதல்வர், ஊமை முதல்வர் என்று கருணாநிதி கட்சியினர் நாளுக்கு நாள் கேலி பேசிக்கொண்டிருந்த சமயத்தில் எம் ஜி ஆர் ஒரு மேடையில் எல்லோரையும் கத்தி வைத்திருக்க சொன்னதும் எம் ஜி ஆர் இப்படி வன்முறையாகப் பேசி விட்டார் என்று உடனே யூ டேர்ன் அடித்தார் கருணாநிதி. அதைத்தான் நான் குறிப்பிட்டேன். மற்றபடி எம் ஜி ஆர் பக்தனோ ரசிகனா இல்லை. அவர் படங்களை பார்ப்பதுகூட எம் எஸ் வி இசைக்காகத்தான்.

தற்போது கருணாநிதி நடக்க இயலாமல் இருக்கும் நிலைக்கு வந்துவிட்டதால் அவரை கேலி பேசினால் அது மிக மலிவான விமர்சனமாக இருக்கும். ஆனால் அவரோ எம் ஜி ஆர் குறித்து இதே மலிவான விமர்சனங்களைத்தான் பேசியிருக்கிறார்.

ஒருவேளை எனக்கு எம் ஜி ஆர் பிடித்தால் கூட அது எனது விருப்பம். உங்களுக்கு ரசினி என்ற பண வியாபாரி மீது இருக்கும் மோகம் பற்றி நான் விமர்சிக்க முடியுமா?

அதீதமாக உணர்ச்சி வசப்பட்டு இதற்கு பதில் எழுதவேண்டாம். கொஞ்சம் பொறுமையாகவே எழுதுங்கள்.

G.M Balasubramaniam said...

தற்காப்புக்குத் துப்பாக்கி என்றால் அதற்காக துப்பாக்கியை உபயோகித்துதானே ஆகவேண்டும் அப்போது மட்டும் கொலை நடக்காதா. தற்காப்புக்கு உபயோகிக்கும் ஆயுதம் உபயோகிக்காவிட்டால் பலனிழந்து விடும் ஆகவே தனிநபர் துப்பாக்கி வைத்துக் கொள்வது சரியல்ல என்றே எண்ணுகிறேன்

வருண் said...

Kaarigan:

***நான் சில நாட்களுக்கு முன் வவ்வாலைப் பற்றி ஒரு பதிவு எழுதியதால் என் மீது காண்டாக இருப்பீர்கள் என்று தோன்றுகிறது.***

I DID NOT READ the post you are mentioning! I can not prove this but somethings I know better than you especially things like what I read or did not read.

--------------------

In another blog, you brought up em jee aar's suggestion to public to carry a knife. It was not warranted at all. I strongly believe em jee aar was NOT HIMSELF when he said that. IMO, justifying that fingering at "MK as a bad guy" is unnecessary. That's my opinion.

Gun control is being a big deal in US today. Especially after a crazy guy killed 50 people in a gay night club recently. That's the main reason your response bothered me. You dont have to believe me though. :)

--------------------

It is funny you brought up Rajinikanth here. As if he suggested everyone to carry a "gun" or "knife"! :))

Yes, you are correct Rajinikanth is a businessman and an entertainer. So were Kama Haasan, Mani Rathnam and MS Viswanathan and IR! Rajinikanth entertains me on silver screen. However I am not going to justify any nonsense he says or believes. e.g I am not a believer but he is a strong believer. At the same time if he is attacked just because someone hates him, I would not let it go! I would share my thoughts. The whole world knows me and it is not a secret! :)

Other than that you could criticize me with my weaknesses. That's your right. I dont know about you but I am a human being with weaknesses of course! :)

PS: My "tamil fonts" have glitch and so I wrote in English! Take it easy!

வருண் said...

***G.M Balasubramaniam said...

தற்காப்புக்குத் துப்பாக்கி என்றால் அதற்காக துப்பாக்கியை உபயோகித்துதானே ஆகவேண்டும் அப்போது மட்டும் கொலை நடக்காதா. தற்காப்புக்கு உபயோகிக்கும் ஆயுதம் உபயோகிக்காவிட்டால் பலனிழந்து விடும் ஆகவே தனிநபர் துப்பாக்கி வைத்துக் கொள்வது சரியல்ல என்றே எண்ணுகிறேன்**

தங்கள் கருத்துக்கு நன்றி, ஜி எம் பி சார்! :)

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான பதிவு

கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

ஆரூர் பாஸ்கர் said...

வருண், பொறுப்பான பதிவு. சிறிய கட்டுரையாக இருந்தாலும் நச் . தொடர்க