இப்போ உள்ள சூழலில் அமெரிக்கா வந்த 80% சைனா பேராசிரியர்கள், பொறியாளர்கள் எல்லாம் சொந்த நாட்டில் நல்ல வேலை கிடைத்து சைனாவிற்கு திரும்பிப் போயிடுறாங்க. அமெரிக்காவில் இருந்த கம்பெணிகள் எல்லாம் இழுத்து மூடிவீட்டு சைனா, இந்தியாவில்தான் இப்போ பல ஃபார்மசியூட்டிகள் காம்பெணிகள் நிறுவி குப்பை கொட்டுறாங்க.
பொதுவாக சைனாவிலிருந்து இங்கு வந்த பெண்கள் அமெரிக்க வாழ்க்கை பிடித்து சைனாவில் நல்ல வேலை பெற்ற கணவருடன் திரும்பிப் போக மனமில்லாமல் அமெரிக்காவிலேயே இருக்கிறார்கள். நம்மாளு 45-55 வயதில் அங்கே போனவுடன் வாங்கும் சம்பளம் அமெரிக்காவில் சம்பாதித்த அளவுக்கு பெரிய தொகை என்கிறார்கள். இன்றைய சைனாவில் மேலை நாட்டுக்கு சென்றவர்களை அதற்கேற்ற ஊதியம் மற்றும் ஆராய்ச்சிக்கு தேவையான வசதி எல்லாவற்றையும் கொடுத்துத்தான் சைனா அரசாங்கம் இவர்களைத் திரும்ப வரவைக்கிறார்கள்.
இப்படி மனைவியை இங்கே விட்டுவிட்டு பிள்ளைகளை அமெரிக்க கல்லூரிகளில் படிக்க விட்டுவிட்டு திரும்பிப்போகும் "பிரம்மச்சாரி" பேராசிரியர்களைத் தேடி இளம் அழகான சைனீஸ் பெண்கள் கூடுகிறார்களாம். "உங்களிடம் பணம் இருக்கிறது, என்னிடம் இளமை இருக்கிறது" என்று எக்ஸ்ட்ரா மாரிட்டல் உறவு எளிதாக வெகு சாதாரணமாக உருவாகிவிடுகிறதாம். அங்கே ஒரு "காண்டோ" வாங்கி இளம்பெண்களை "வைத்துக்கொண்டு "வாழ்கிறார்கள் இவர்கள். நவநாகரீக சைனாவில் யாருக்கும் வெட்கமில்லை என்கிறார்கள். இது இன்றைய சைனாவில் சாதாரணமாக நடக்கிறது என்கிறார்கள்.
"இன்றைய சைனா இப்படித்தான். எனக்குத் தெரியவே ஒரு 4 பேரு இப்படி வாழ்கிறார்கள்" என்கிறார்கள் என் சைன நண்பர்கள்.
ஆக, கூட்டிக் கழித்துப்பார்த்தால் முன்னேற்றத்திற்கு விலை கலாச்சாரச் சீரழிவு என்பது தெளிவுபடுகிறது.
அந்தக் காலத்தில் நம்ம ஊரில் காசு பணம் சேர்ந்துவிட்டால், மிட் லைஃப் ல நம்ம ஊர் "பணம் படைத்த பெரிய மனிதர்கள்" வைப்பாட்டி வைத்துக் கொள்வார்கள் !. கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வைப்பாட்டி வைத்துக் கொள்வார்கள் என்பது நம் பழமொழி. இன்றைய சைனாவில் நடப்பது அதே எழவுதான்.
நான் இங்கே எழுதுவது கதை அல்ல! கட்டுரை! உண்மையில் இன்றைய சைனாவில் நடப்பது. என் சைனீஸ் கலீக்களிடம் பேசி அறிந்து கொண்டது.
சரி, அமெரிக்காவில் இருக்கும் அவர்கள் மனைவி மார்களுக்கு இதுபோல் "நம்ம அண்ணன்" சைனாவில் ஒரு சின்னப் பொண்ணை வச்சிருக்கது தெரியுமா? னு கேட்டால் மனைவிளுக்கும் "தெரியும்" என்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதில்லை என்கிறார்கள்
அதேபோல் இதுபோல் ரிலேஷன்ஷிப் வைத்துக்கொள்ளும் இளம் பெண்களின் பெற்றோர்களுக்கு, தன் மகள் ஒரு 50 வயதான திருமணம் ஆன ஒரு ஆளுடன் உறவு வைத்துள்ளது தெரியுமா? அவர்கள் அவளைக் கொன்றுவிடமாட்டார்களா? என்று கேட்டால், பெற்றோர்களுக்கும் தெரியும். அவர்கள் இதையெல்லாம் பார்த்து உணர்ச்சிவசப்படுவதில்லை என்கிறார்கள்.
எப்படியோ மகள் நல்லாயிருந்தால் சரி னு "நம்ம மோஹனா" அம்மா "வடிவா"ட்டம் சிந்தனை உள்ளவர்கள் அவர்கள் என்கிறார்.
ஆக, ஒரு நாடு முன்னேறுகிறது என்றால், அந்நாட்டுக் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கைத் தரம் எல்லாம் நாசமாகப் போகிறது என்றே அதற்கு அர்த்தம்.
9 comments:
இதுதான் உணமையில் சொர்க்கபுரி.
இதுவல்லவோ முன்னேற்றம்...! ஹா... ஹா....
ஒன்றைப்பெற இன்னொன்றை இழக்க வேண்டும் என இதைபோல் சம்பவங்களை பார்த்து தான் சொல்வார்கள் போலும். இப்போது எல்லா இடங்களிலும் கலாச்சார மீறுதல்கள் அதிகமாகிக்கொண்டே தான் இருக்கின்றது . நம்மைபோல் ஒரு சிலர் தான் கலாச்சாரம், பண்பாடு என பேசிக்கொண்டிருக்கின்றோம்.
இதில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள் ஏதும் அறிந்திலேன் நம் நாட்டு சங்கதிகளே சரியாகத் தெரியவில்லை
***ப.கந்தசாமி said...
இதுதான் உணமையில் சொர்க்கபுரி.**
வாங்க கந்தசாமி சார்! ஆக, சொர்க்கம்தான் நரகம் செல்ல முதல்ப்படினு சொல்றீங்க? :)
***திண்டுக்கல் தனபாலன் said...
இதுவல்லவோ முன்னேற்றம்...! ஹா... ஹா....***
நீங்க யோசித்துப் பார்த்தால் எந்தவிதமான முன்னேற்றமும் ஒரு வகையில் ப்பின்னோட்ட்டம்தான். இண்டஸ்ட்ரியல் ரெவொலுஷனாஇ எடுத்துக்கோங்க. நம் நதிகள், சுவாசிக்கும் காற்று எல்லாமே "பொல்லுட்" ஆனதுக்கு அம்முன்னேற்றமே காரணம். இண்டர்னெட் முன்ன்னேற்றத்தால் இன்று "போர்னோகிராஃபி" பித்துப் பிடிச்சு அலைகிறானுக.
* Every action has an equal and opposite reaction.
* The energy is always conserved. Any good thing will only be compensated by the "bad thing". Thats the first law of thermodynamics!
***நிஷா said...
ஒன்றைப்பெற இன்னொன்றை இழக்க வேண்டும் என இதைபோல் சம்பவங்களை பார்த்து தான் சொல்வார்கள் போலும். இப்போது எல்லா இடங்களிலும் கலாச்சார மீறுதல்கள் அதிகமாகிக்கொண்டே தான் இருக்கின்றது . நம்மைபோல் ஒரு சிலர் தான் கலாச்சாரம், பண்பாடு என பேசிக்கொண்டிருக்கின்றோம். ***
நம் மக்கள் எதைப்பற்றியுமே சிந்திப்பதில்லை நிஷா. தண்ணீர் பஞ்சம்னு அழுகிறார்கள். இன்றைய மக்கள்தொகைக்கு தேவையான தண்ணீர் அன்றைய மக்கள்த் தொகையின் தேவையைவிட பலமடங்கு. ஜனப்பெருக்க்கம்தான் இதற்கு காரணம் என்று.
***G.M Balasubramaniam said...
இதில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள் ஏதும் அறிந்திலேன் நம் நாட்டு சங்கதிகளே சரியாகத் தெரியவில்லை ***
மேலைநாட்டுத் தாக்க்கத்தால் இந்தியா, சைனா போன்ற நாடுகளில் வாழும் இன்றைய இளைய சமுதாயம் இப்படித்தான் வாழ்கிறார்கள் சார். நல்லவைகளை மட்டும் தெரிந்துகொண்டு, இதுபோல் நிகழ்வுகளை அறியாமலே வாழ்வது நல்லதுதான் சார்.
yes...
Post a Comment