Wednesday, July 18, 2018

சென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்!!

எனக்குப் புரியல. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருத்தனுக்கு வயது   அறுபதுனு சொல்றாங்க.  இன்னொருவனுக்கு 54 னு சொல்றாங்க. 

அந்தப் பொண்ணு  ஏழாவது படிக்கும் பச்சைக் குழந்தை. அதுவும் ஹியரிங் எய்ட் வைத்துள்ள ஒரு குழந்தை. அதை ஒருத்தன் இல்ல, 17 மிருகங்கள் பல நாட்களாக மிரட்டி, போதை மருந்து ஏற்றி..

இதுபோல் ஒரு குழந்தையை, அதைப் பெற்ற அவங்க அம்மா அப்பா இவ்வளவு நாள் எப்படி கவனிக்காமல் விட்டாங்க??!! காசு சம்பாரிக்கிறதுல பிஸியா இருந்து இருப்பாங்க போல? அதான் நம்ம ரொம்ப முன்னேறிட்டோம் இல்லையா?

கொஞ்ச நாள் முன்னால மேதை ஜோதிஜி தமிழ்நாடு முன்னேறுகிறதுனு பீத்தும்போது (செல் ஃபோன், இன்டெர்னெட், எல்லாமே ஈசியாக் கிடைக்கிதாம். என்ன இல்லை?)...கடுப்பாகி..

எது முன்னேற்றம் ? நம்ம நாசமாப் போயிக்கிட்டு இருக்கோம்  என்பதே உண்மை னு ஒரு பின்னூட்டம்  எழுதினேன். பதில் வரவில்லை.   இல்லைனா ஏதாவது கேள்வி கேட்டால் அவரிடமிருந்து  'நீங்க ஒரு ரஜினி ரசிகன்" னு ஏதாவது கேனத்தனமா "பதில்" வரும்.  இவர் பதிவில் போயி, "அருமையாக எழுதி இருக்கீங்க" ணு சும்மா பொத்தாம் பொதுவா பின்னூட்டமிடத் தெரியாதது நம்ம இயலாமை. இவரைச் சொல்லி என்ன செய்ய?

கொஞ்ச நாள் முன்னால கமலா ஹரிஹரன் அவர்கள் கூட்டுக் குடும்பம் பத்தி எழுதும்போது, "தனிக் குடித்தனம் போயி இதுபோல்தான், குழந்தைகள இவனுகளூம் கவனிக்காமல் பெரியவர்களிமிருந்தும் பிரித்து, அவர்கள சுத்தி ஆட்கள் இல்லாமல் தனிமைப் படுத்தப் பட்டு, கண்ட  மிருகங்ககளோடும் இன்ட்டராக்ட் செய்ய விட்டு நாசமாப் போவாங்கனு சொன்ன ஞாபகம்.

மிருகங்கள் புகைப் படத்தைப் பார்த்துக்கோங்க!!


https://files.nakkheeran.in/cdn/farfuture/Tf6bkHKtRzm2Hh-nvEHjfCV3l3GVsJ5gFVNOsOBSaT4/1531835675/sites/default/files/inline-images/rape_0.jpg
குற்றம் சாட்டப்பட்டவர்கள். நக்கீரனில் இருந்து வெட்டி எடுத்தது

எனக்கு அடிக்கடி தோனுவது இதுதான். ஏன் இவர்கள் மனநிலை இப்படி ஆகிறது?? குழந்தையை குழந்தையாக ஏன் பார்க்கத் தெரியவில்லை. இன்னொன்னு என்னனா இவனுக, கடவுள் நம்பிக்கை உள்ளவனுகளாக இருப்பானுக!  ஏன்? நல்ல தாய் தந்தையர் இல்லையா இவர்களூக்கு? இவர்கள் குடும்பத்தினரும் தரமில்லாதவர்களா??

என்ன? போதை மருந்தா??? பச்சைக் குழந்தைக்கா? என்னடா சொல்றீங்க? அப்போ போதை மருந்து மலிந்து கிடக்கா சென்னையில்?

17 மிருகங்கள் சரி, ஒரு நல்ல மனுஷன்கூட இதை பார்க்கவில்லையா? தவறு நடப்பதை உணரவில்லையா?? அச்சிறுமியை காப்பாத்த முயலவில்லையா? சென்னையில் இதுபோல் நல்ல மனிதர்களே இல்லையா?!!

 டாஸ்மாக் மட்டுமல்ல எல்லாவகையிலும் தமிழ்நாடு மேலை நாடுகள விட படு கேவலமாக ஆகிக் கொண்டு போகிறது என்பது தெளிவாத் தெரியுது.

சில வருடங்கள் முன்னால ஒரு கதை எழுதுற போட்டி நடந்தது. அதில் ஒரு ஸ்டெப் ஃபாதர் ஒரு சிறூ குழந்தையை (தமிழ் கதைதான்) வன்புணர்வு செய்ய முயல்வது போன்ற கதையை நடுவர்கள் பரிசு கொடுக்கத் தகுதி பெற்றதாக தேர்ந்தெடுத்தபோது, எனக்கு கதை எழுதியவனைவிட நடுவர்கள் மேலேதான் கொலை வெறி வந்தது. இவனுகளால எப்படி இப்படி ஒரு கதையை ஜீரணீக்க முடியுது??!! இதுபோல் கதைகள குப்பையில் போடாமல் எதுக்கு மேலும் விளம்பரம்? இவனுகளத்தான் மொதல்ல வெட்டனும்னு தோனுச்சு.

இதுபோல் வியாதி எப்படி வருகிறது? அதுவும் ஒரு குற உள்ள 11 வயது குழந்தையை. ஓருத்தனுக்கு வியாதி வந்தால் பாஸீபிள். 17 பேருக்கும் அதே வியாதியா?  இங்கேதான் பிரச்சினை வருகிறது. இது வியாதியல்ல. இவர்கள் வாழும் வாழ்க்கையே அவலமானது.

எனிவே, இவனுக மேல் சாட்டப்பட்ட குற்றம்  ஊர்ஜிதமானால்  இவர்கள தூக்கில் போடுவது எல்லாருக்கும் நல்லது- இவனுகளுக்கும் சேர்த்துத்தான்.

இதுபோல் எத்தனை குழந்தைகள் எத்தனை மிருகங்களிடம் மாட்டிக்கொண்டு இருக்கின்றனவோ. இதுபோல் மிருகங்கள் பல இடங்களில் சென்னையில் அலையத்தான் செய்யும். இன்னும் அலைந்துகொண்டு இருக்கின்றன என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்வார்களா?

எந்த ஆம்பளயையும் "இது ஒரு மிருகம்" என்பதை நினைவில் வைங்க. குழந்தைகள அம்மிருகங்களீடம் இருந்து தள்ளி வைப்பது நல்லது.

*******************************

 Image result for mysskin


மனநிலை பாதிக்கப்பட்ட மிஷ்க்கின் என்னும் பெயர் சொல்லிக்கொண்டு அலையும் இன்னொரு "சீக்காளி" பத்திப் பார்ப்போம்.

 இவன் பெண்ணாக பிறந்து இருந்தால் மம்மூட்டி அழகைப் பார்த்து அவரை 'வன்புணர்வு" செய்து இருப்பானாம்??!! இதை ஜோக்கு நினைத்து இவன் பேசுறானாம்.

Are you kidding me??!!

He says "RAPE"??!!

He is really really SICK!!!

மொதல்ல இவனுக்கு பெண் உணர்வுகளே தெரியாது, ஏனென்றால் இவனிடம் ஆண்ட்ரோஜன்தான் இருக்கு, எஸ்ரோஜன்கள் இல்லை.

அதனால் பெண்ணாக இருந்தால் என்கிற பேச்சை குப்பையில் போடனூம். 

இவனையாவது  விட்டுவிடலாம். இவனுக்கு வக்காலத்து வாங்க வந்து இருக்கான் ஒரு நாதாரி.  

ரைட்டர் சி எஸ் கேனு ஒரு கூமுட்டை!

இவன் என்ன தியரி விடுறான்னா மனநிலை சரியில்லாத மிச்சுக்கின் மேலே எல்லாருக்கும் பொறாமையாம்!!

பொறாமை?!!!!

ஹி இஸ் சீரியஸ்!!

அதனால்தான் innocent  மிச்சுக்கினை அடாவடியா விமர்சிக்கிறோமாம்.

அதைவிட காமடி என்னனா, பெண்கள் உணர்வுகள் எதுவுமே தெரியாமல் தெரிந்ததுபோல்,  பரத்தை கூற்று எழுதிய இவனுக்கு வன்புணர்வுனா என்னனே தெரியலை.

அதாவது ஒரு பெண் ஒரு ஆணை வன்புணர்வு செய்ய முடியாதாம்! அதையும் விளாவரியா விளக்குறேன்னு எதையோ ஒளறிக் கொட்டி இருக்கான்.

 இவனை மாதிரி முட்டாப் பயலுகள வச்சு என்ன பண்றது?

His defenses are "People are jealous of MISSKIN" and that "a woman can not sexually assault or molest a man". So, misskin hardly made any mistake!

Not only misskin this guy is also sick for sure!

Seems like we have got lots of sick people!  They dont realize what is right or wrong. Neither do they know they are sick.

14 comments:

'பசி'பரமசிவம் said...

//அதாவது ஒரு பெண் ஒரு ஆணை வன்புணர்வு செய்ய முடியாதாம்!//

முடியும். அதை விளக்கமாகச் சொல்வது நாகரிகமாக இருக்காது.

ஒரு மகளிர் விடுதிக்கு சலவைத் துணி கொண்டு சென்ற இளைஞனை நான்கைந்து பெண்கள் வன்புணர்வு செய்ததோடு, மாடியிலிருந்து தள்ளிவிட்டுக் கொலையும் செய்திருக்கிறார்கள். இது நடந்து பல வருடங்கள் ஆயிற்று.

பொறுப்பற்ற பெற்றோர்கள் காரணம் என்றாலும், இம்மாதிரி குற்றங்கள் நடப்பது தெரிந்தாலும் நமக்கென்ன என்று இருந்துவிடும் பொதுமக்களின் சுயநலப் போக்கு வளர்ந்துவிட்டதும் முக்கிய காரணம்.

பெற்றோர், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், பொதுமக்கள், நீதிபதிகள் என்று அனைத்துத் தரப்பினரும் தீவிரமாய்ச் சிந்தித்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. காலம் தாழ்த்துவது கூடவே கூடாது.

வருண் said...

***பொறுப்பற்ற பெற்றோர்கள் காரணம் என்றாலும், இம்மாதிரி குற்றங்கள் நடப்பது தெரிந்தாலும் நமக்கென்ன என்று இருந்துவிடும் பொதுமக்களின் சுயநலப் போக்கு வளர்ந்துவிட்டதும் முக்கிய காரணம்.***

ஒருத்தனுக்கு மனசாட்சி இல்லைனா பரவாயில்லை. 17 பேருக்குமா? நிச்சயம் கூட வேலை பார்க்கிறனுகள்ல ஒரு சிலருக்கு தெரிந்துதான் இருக்கும். நமக்கெதுக்கு வம்பு னு இருந்து இருக்கிறார்கள்.

பெண் குழந்தைகளூடன் தாய் மிகவும் க்ளோசாக இருக்கணூம் சார். என்ன பிரச்சினை என்றாலும் தாயிடம் சொல்லணூம்- தயங்காமல். தாயிடம் எந்த பயமும் இருக்கக் கூடாது. தாய்தான் முதல் தோழி. எதைப் பத்திப் பேசவும் பயமே இருக்கக் கூடாது. அதுபோல் தன் மகளீடம் ஒரு தாய் அன்பு காட்டணூம். அதுவும் பதின்ம வயது பெண்களூக்கு தாயின் நட்பு மிக அவசியம். அதுவும் இதுபோல் சிறூ குறயுள்ள குழந்தை தாயிடம் எல்லாவற்றயும் சொல்லனூம்.

I am blaming her mom because it had been happening for a long time. She should have figured this out long time ago.

I am not against Capital punishment. We need to hang these bastards!

வருண் said...

From nakkeeran!!

https://nakkheeran.in/24-by-7-news/india/17-year-old-boy-has-been-raped-house-more-2-weeks


17வயது சிறுவனை 2 வாரத்திற்கு மேலாக வீட்டில் மிரட்டி வைத்து பலாத்காரம் செய்த பெண்!

28 வயது பெண் ஒருவர் 17 வயது சிறுவனை வீட்டில் வைத்து 2 வாரத்திற்கு மேல் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பீருமேடு அருகே உள்ள குமுளி பகுதியைச் சேர்ந்த விதவை பூஜா (28). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தினமும் பணிக்கு அலுவலக பேருந்தில் சென்று வருவார்.

இந்நிலையில் அந்த பேருந்தில் கிளீனராக பணி புரிந்து வந்த 17 வயது சிறுவனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனை பூஜா தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேலாக பூஜா வீட்டிலேயே சிறுவன் தங்கியிருந்துள்ளான். அப்பாது பூஜா சிறுவனை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இருவருக்கும் இடையே தகராறு எற்பட்டுள்ளது. இதையடுத்து பூஜா பீருமேடு போலீசில் சிறுவனுக்கு எதிராக புகார் அளித்தார். அதில் சிறுவன் தன்னை அவதூறாக பேசி தாக்கியதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து சிறுவனை போலீசார் அழைத்து விசாரித்தபோது குட்டு வெளிப்பட்டது.

கடந்த 2 வாரங்களுக்கு மேலாக, தான் பூஜா வீட்டில் தங்கியிருந்ததாகவும் தன்னை மிரட்டி தினமும் பூஜா பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் பூஜாவை போலீசார் கைது செய்து கோட்டயம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.


ஜோதிஜி திருப்பூர் said...

உங்க பெருந்தன்மைக்கு நன்றி. எனக்கெல்லாம் வாழும் போதே ஒருவர் பட்டம் தந்துள்ளார் என்பதே கண்ணு வேர்க்குது.

பாலியல் கொடுமை, பாலியல் வண்புணர்வு, இன்னும் எழுத முடியாத வார்த்தைகள் பல உண்டு. இவையெல்லாம் என்னமோ இன்று தான் அதிகமாக இருக்கின்றது என்று நம்பும் உங்களுக்கு என் வாழ்த்துகள். ஒவ்வொரு தொழில் நகரங்களில் நகரம் போல வாழும் பெண்களை கண்டு இருந்தால் இவையெல்லாம் எம்மாத்திரம் என்று தோன்றும். இன்று தான் 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் பணி புரியக்கூடாது என்று சட்டம் இருப்பதால் 12 முதல் 17 வயது வரைக்கும் உள்ள பெண் குழந்தைகள் பள்ளிக்கு அல்லது வீட்டில் இருந்து கொண்டே பணிபுரிகின்றார்கள். ஆனால் 90 முதல் 98 வரைக்கும் நான் பார்த்த சந்தித்த காட்சிகள், பயன்படுத்திக் கொண்ட மனிதர்கள் இன்னமும் பெரிய மனிதர்களாகத்தான் இங்கே உலாவுகின்றார்கள். இன்று ஊடகப் பசிக்கு ஒவ்வொன்றும் வெளியே வந்து கொண்டு இருக்கின்றது.

ஜோதிஜி திருப்பூர் said...

எது முன்னேற்றம் ? நம்ம நாசமாப் போயிக்கிட்டு இருக்கோம் என்பதே உண்மை னு ஒரு பின்னூட்டம் எழுதினேன். பதில் வரவில்லை. இல்லைனா ஏதாவது கேள்வி கேட்டால் அவரிடமிருந்து 'நீங்க ஒரு ரஜினி ரசிகன்" னு ஏதாவது கேனத்தனமா "பதில்" வரும். இவர் பதிவில் போயி, "அருமையாக எழுதி இருக்கீங்க" ணு சும்மா பொத்தாம் பொதுவா பின்னூட்டமிடத் தெரியாதது நம்ம இயலாமை. இவரைச் சொல்லி என்ன செய்ய?

உங்கள் கோபத்தை ரசித்தேன். உங்கள் கேள்விகளை என் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். கட்டிளம் காளைகளை நான் அடக்கத் தயார். அது எனக்குப் பிடித்ததும் கூட.

ஜோதிஜி திருப்பூர் said...

இவன் என்ன தியரி விடுறான்னா மனநிலை சரியில்லாத மிச்சுக்கின் மேலே எல்லாருக்கும் பொறாமையாம்!!

இந்தக்கட்டுரைக்கு எப்படி இணைப்பு கொடுக்க மனசு வந்தது என்றே புரியவில்லை. ஒரு சுக்கும் இல்லை. அவர் மிஷ்கின் குறித்து மின்னூல் வேறு எழுதியுள்ளார். இது ஒரு விதமான மயக்கம் அல்லது தேவைப்படும் பரஸ்பரம் சமாச்சாரங்கள் அடங்கியது. இந்தப் பதிவுக்கு சம்மந்தம் இல்லாத ஒரு சமாச்சாரம். மிஷ்கின் எந்த ஊரில் பிறந்தார்? அவர் பின்புலம் என்ன? என்று கேட்டுப் பார்க்கச் சொல்லுங்க? தான் பிறந்த ஊரை தன் மக்களைக்கூட கண்டுகொள்ளாத சொல்ல விரும்பாத அளவுக்கு அவருக்குள் இருப்பது என்னவென்று தேடி ஒரு கட்டுரை எழுதவும். (நான் பிறந்த பகுதிக்கு அருகே பிறந்தவர்)

ஜோதிஜி திருப்பூர் said...

கடைசியாக சில வார்த்தைகள்........

முன்பு கடவுள் என்ற பெயரில் மக்களிடம் கொஞ்சமாவது அடிப்படையில் பயம் இருந்தது. இது இன்று முக்கால்வாசி குறைந்து விட்டது. எப்படியாவது பெற்று விட வேண்டும் என்ற முனைப்பு ஒவ்வொருவரையும் இங்கே உந்தித்தள்ளிக் கொண்டே இருக்கின்றது. இது தனக்குத் தேவையா? என்பதனை விட இருக்கட்டுமே? என்ற ஆசையே அவர்களை இழுத்துக் கொண்டே செல்கின்றது. இதனால் புனிதம் என்ற பெயர் அடிப்பட்டு அத்தனை அயோக்கியத்தனங்களுக்கு அவரவர் ஒவ்வொரு காரணங்கள் அவர்களுக்கு உகந்தபடி வைத்துக் கொள்கின்றார்கள். இது மேல் மட்டம் முதல்கீழ் மட்டம் வரைக்கும் இப்போது அதிக அளவு வியாபித்தி நாளுக்கு நாள் அதிகமாக பரவிக் கொண்டேயிருக்கின்றது. தான் என்ன செய்கின்றோம்? அதன் விளைவு என்ன? என்பதனைக்கூட யோசிக்க முடியாத அளவுக்கு ஒருவனை கீழ்த்தரமான அனைத்து விசயங்களையும் ஈடுபடச் செய்கின்றது? இப்போது தான் மத்திய அரசாங்கம் 12 வயதுக்கு கீழே உள்ள பெண்களை கற்பழித்தால் 20 ஆண்டுகள் அல்லது சாகும் வரைசிறைத் தண்டனை என்ற சட்டத்தை தற்போது அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்த சட்டமெல்லாம் எப்போதே வந்துருக்க வேண்டும். என்னவொன்று இவர்கள் சாகும் வரைக்கும் மூன்று வேளையும் சாப்பிட்டுக் கொண்டு தான் செய்த தவறுகளை தவறு என்று நினைக்காமலே வாழ்ந்து செத்துப் போய்விடுவார்கள்?

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படிப் பட்ட உயிர்கள் "தோன்றலின் தோன்றாமை நன்று"

// சாதாரண புழு, பாக்டீரியாக்கள் உலகுக்கு செய்யும் நன்மைகள் புகழ் பெற்ற மனிதன் செய்வதைவிட பலமடங்கு.மனிதனின் மதிப்பீட்டில் புழு, பாக்டீரியா என்பது அருவருக்கத்தக்க ஒரு இழிபிறவி. ஆனால் உண்மையில் அவைகள் வாழ்ந்து ஆற்றூம் பணீ தாவரங்கள் ஆற்றூம் நன்மைகளவிட பலமடங்கு. மனிதன் வாழும் சுயநலவாழ்வைவிட பலமடங்கு நன்மை பயக்கும் வாழ்வு அவைகள் வாழ்வது. //

மேலே உள்ளது உங்களின் கருத்துரை தான்... சமீபத்திய எனது பதிவிற்கு ஒரு தூண்டுகோலும் இந்த கருத்துரை தான்... உங்களின் முழு கருத்துரையையும் விவாதித்தாலோ, அங்கு மறுமொழி நான் சொல்லியிருந்தாலோ, அது வேறு மாதிரி சிந்தனைகள் செல்லும் என்பதால் தவிர்த்து விட்டேன்...

நேரம் கிடைப்பின் சமீபத்திய பதிவை வாசியுங்கள்... கண்டிப்பாக கருத்துரைகளை வாசிக்க மறந்து விடாதீர்கள்... தேடலின் மகத்துவத்தையாவது நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்... நன்றி... எனது வரும் எனது 2/3 பதிவுகளில் விளக்கத்தை சொல்கிறேன்... நன்றி...

வருண் said...

****இவையெல்லாம் என்னமோ இன்று தான் அதிகமாக இருக்கின்றது என்று நம்பும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.***

நம் நாட்டிலுள்ள நதிகள் போலதான். "அன்றூ" "இன்றூ" னு பார்த்தால் அந்தக்காலத்தைவிட இந்தக்காலத்தில்தான் அதிகம்.

போதை மருந்து கொடுத்து ஒரு 11 சிறூமியை இதுபோல் தொடர்ந்து கெடுப்பது. அதை அவள் தாயார் இத்தனை காலம் உணராமல் இருப்பது இதெல்லாம் இன்னைக்கு நடப்பதுதான்.

Entropy and "disorder" increasing as we go on. It is a fact!


வருண் said...


***இந்தக்கட்டுரைக்கு எப்படி இணைப்பு கொடுக்க மனசு வந்தது என்றே புரியவில்லை. ஒரு சுக்கும் இல்லை. அவர் மிஷ்கின் குறித்து மின்னூல் வேறு எழுதியுள்ளார். இது ஒரு விதமான மயக்கம் அல்லது தேவைப்படும் பரஸ்பரம் சமாச்சாரங்கள் அடங்கியது. இந்தப் பதிவுக்கு சம்மந்தம் இல்லாத ஒரு சமாச்சாரம். மிஷ்கின் எந்த ஊரில் பிறந்தார்? அவர் பின்புலம் என்ன? என்று கேட்டுப் பார்க்கச் சொல்லுங்க? தான் பிறந்த ஊரை தன் மக்களைக்கூட கண்டுகொள்ளாத சொல்ல விரும்பாத அளவுக்கு அவருக்குள் இருப்பது என்னவென்று தேடி ஒரு கட்டுரை எழுதவும். (நான் பிறந்த பகுதிக்கு அருகே பிறந்தவர்)****

சி எஸ் கே எழுதிய பரத்தை கூற்ற பார்த்து எரிச்சலடைந்து இந்தத் தளத்தில் விமர்சித்து இருக்கேன். அப்போதே ஆண் இனத்துக்கு பரத்தை மனம் தெரியாது. ஆண்கள் இதைப் பார்த்து பரிதாபப்படுவது ஏற்றூக்கொள்ள முடியாதுனு விமர்சித்து உள்ளேன். பலரும் இவருக்கு வக்காலத்து வாங்கினார்கள். ப கூ வை சிலாகித்துப் பேசினார்கள்.

இந்தக் கட்டுரை, நான் இவரை விமர்சித்தது சரி, இவருக்கு சரியான புரிதல் இல்லை என்பதை தெளீவு படுத்துகிறது.

மற்றபடி, இவர் மிஷ்கினை 'லவ் யு' சொன்னவர். அவர் ரசிகர் என்பதால் இவ்வளவு என்பது புரிந்தது.

யாரை விமர்சித்தாலும் 'இவனுக்கு பொறாமை" என்னும் விமர்சனம் கண்டிக்கத் தக்கது. இந்தப் பதிவில் இவர் பதிவுக்கு தொடுப்புக் கொடுத்ததுக்கு முக்கிய காரணம் அதுவே.

மற்றபடி என்னுடைய ப கூ விமர்சனத்துக்கு தொடுப்பு கடைசி பின்னூட்டத்தி; தருகிறேன்.

வருண் said...

***முன்பு கடவுள் என்ற பெயரில் மக்களிடம் கொஞ்சமாவது அடிப்படையில் பயம் இருந்தது.***

சுய ஒழுக்கத்துக்கு கடவுள் தேவை இல்லைங்க. நான் பிறரைப் பத்தி பேசவில்லை. என்னை வச்சே சொல்றேன், எனக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமாகக் கிடையாது. தந்தை என்னை அப்படி ஆக்கிவிட்டுவிட்டார். அவருக்கு நன்றீ. என் தாயாருக்கு நம்பிக்கை உண்டு இருந்தாலும் எதற்கெடுத்தாலும் கடவுள கூப்பிட மாட்டார்.

நான் ப்ரிமாரிட்டல் செக்ஸ் வைத்தது இல்லை. வேசியிடம் போனதில்லை. இதுபோல் சிறூமியை வன்புணர்வு செய்வதை நினைத்தே பார்க்க முடியவில்லை. ஹானஸ்ட்லி இதைப் பத்தி பேசவே எனக்கு இஷ்டம் இல்லை. சுய ஒழுக்கத்துக்கு கடவுள் நம்பிக்கை அவசியம் இல்லை. நம்மை பாதிக்கப் படுபவர்கள் நிலையில் நிறூத்தி பார்க்கத் தெரிந்தால் போதும். Again, I AM NOT perfect. All I am saying is you dont need God for having decent morals. நல்ல அப்பா அம்மா தேவை. நல்ல வளர்ப்பு தேவை. பிறரையும் தன்னைப் போல் நினைக்கத் தெரியனும். தன்க்கு வலிப்பது பிறருக்கு வலிக்கும்னு உணரனும். If you are "lucky" it is quite possible to live a decent life (not a perfect life) and die.

I brought up myself, NOT TO BRAG and so dont mistake me, but the reason is, THE ONLY PERSON I KNOW most is MYSELF, nobody else. Thats why.

வருண் said...

http://www.writercsk.com/2010/10/blog-post_6938.html

மேலே இருக்கு தொடுப்பு. அவரே இதை அவர் தளத்தில் பிரசுரித்தார்.

வருண் said...

***திண்டுக்கல் தனபாலன் said...

இப்படிப் பட்ட உயிர்கள் "தோன்றலின் தோன்றாமை நன்று"

// சாதாரண புழு, பாக்டீரியாக்கள் உலகுக்கு செய்யும் நன்மைகள் புகழ் பெற்ற மனிதன் செய்வதைவிட பலமடங்கு.மனிதனின் மதிப்பீட்டில் புழு, பாக்டீரியா என்பது அருவருக்கத்தக்க ஒரு இழிபிறவி. ஆனால் உண்மையில் அவைகள் வாழ்ந்து ஆற்றூம் பணீ தாவரங்கள் ஆற்றூம் நன்மைகளவிட பலமடங்கு. மனிதன் வாழும் சுயநலவாழ்வைவிட பலமடங்கு நன்மை பயக்கும் வாழ்வு அவைகள் வாழ்வது. //

மேலே உள்ளது உங்களின் கருத்துரை தான்... சமீபத்திய எனது பதிவிற்கு ஒரு தூண்டுகோலும் இந்த கருத்துரை தான்... உங்களின் முழு கருத்துரையையும் விவாதித்தாலோ, அங்கு மறுமொழி நான் சொல்லியிருந்தாலோ, அது வேறு மாதிரி சிந்தனைகள் செல்லும் என்பதால் தவிர்த்து விட்டேன்...

நேரம் கிடைப்பின் சமீபத்திய பதிவை வாசியுங்கள்... கண்டிப்பாக கருத்துரைகளை வாசிக்க மறந்து விடாதீர்கள்... தேடலின் மகத்துவத்தையாவது நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்... நன்றி... எனது வரும் எனது 2/3 பதிவுகளில் விளக்கத்தை சொல்கிறேன்... நன்றி...***

நன்றீ தனபாலன். என்னனு வந்து பார்க்கிறேன்.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

நல்லெண்ணங்களை எவரும் விதைக்கலாம். நல்ல சூழலை எவரும் விதைக்கலாம். சிலரை நல்ல சூழலுக்குள் உட்படுத்தாமை தான் பாலியல் கொடுமை, பாலியல் வண்புணர்வு எனக் கெட்டவை நிகழக் காரணமாகின்றது.