Thursday, July 5, 2018

காலா தோல்விப்படமாமே, குமாரு?

"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு" அது உண்மையா? 

அப்படியா? நல்லதாப் போச்சு,  இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து தமிழர்களை கொள்ளை அடிச்சுட்டானுகனு ஆளாளுக்கு மூக்கால அழுவார்கள். நல்லவேளை, இப்போ இவனுகளே படம் நல்லாப் போகலைனு சொல்வதால் இந்த மாதிரி எழவைக்கூட்டாமலாவது இருப்பானுக.

"சரி எத்தனை கோடி நஷ்டமாம் குமாரு?"

நஷ்டமா?? குறைந்த மதிப்பீட்டில் படம் 160 கோடிகள் (உலகளவில்) கலக்‌ஷன் என்கிறார்கள். சாட்டலைட் ரைட்ஸ் 70  கோடியாம். ஆக, 230 கோடி வசூல் பெற்றாலும் தலைவர்  படம் என்பதால் தோல்வினு சொல்லுவார்கள்.

"படத்துக்கு செலவு, குமாரு?"

தலைவர் சம்பளம் இல்லாமல், ஒரு 60 கோடி ஆயிருக்குமா?  வந்த 230 கோடியில், 100 கோடி (44 விழுக்காடுகள்) டாக்ஸ், கமிஷன் அது இதுனு போனாலும், 130 கோடி வருமானம். இதில் செலவு  60 கோடி போச்சுனா 70 கோடி. தலைவர் தனுஷுக்கு ஃப்ரியா நடிச்சுக் கொடுத்தால் 70 கோடி இலாபம். இல்லை தலைவர்  சம்பளம் 40 கோடி போச்சுனா தனுஷுக்கு 30 கோடி இலாபம். எப்படிப் பார்த்தாலும் தனுஷுக்கு இலாபம்தான்.

"ஆமா, படம் சரியாப் போகலைனா ஏன் எவனும் ஒப்பாரி வைக்கவில்லை, குமாரு? அதான் நான் லிங்காப் படத்தை இவ்ளோ பணம் போட்டு எடுத்தேன். தெருவில் நிக்கிறேன்னு வந்தானே,  சிங்காரவேலன்? அவன் மாதிரி?

இந்தப் படத்தை கமிஷன்-பேஸ்ட் ஆக ரிலீஸ் பண்ணி இருக்காங்க. படம் ஓடினாலும் ஓடாட்டாலும் தியேட்டர்காரன், டிஸ்ட்ரிப்யூட்டர் யாருக்கும் நஷ்டம் வராது.  ப்ரட்யூஷருக்குத்தான் நஷ்டம் வரும். அதனால் பாதிக்கப் படப்போவது தனுஷும்,தலைவரும் மட்டுமே.

ஏதோ தமிழர்கள்தான் இப்படத்தை புறக்கணித்துவிட்டார்கள். உங்க தலைவரின் ஆன்மீக அரசியல் பேச்சும், சினிமாவில் தாராவியில் வாழும் கேரக்டரும் ஒத்துப் போகலைனு சொல்றாங்க, குமாரு? தமிழர்கள்தான் காலாவை புறக்கணித்தார்களா, குமாரு??

அப்போ சினிமாவை சினிமாவாப் பார்க்க மாட்டானுக?!!

தலைவர் சொன்னது ஆன்மீக அரசியல். அதில் அடிதடிக்கு இடமில்லை. கல் எறிதலுக்கு இடமில்லை. போராட்டமே செய்தாலும் அதை அமைதியாக செய்யணும். அதனால் தூத்துக்குடி போய் வந்து தலைவர்  சொன்ன ஸ்டேட்மெண்ட்ல எந்தத் தவறும் இல்லை. அதுதான் தலைவரின்  அரசியல் நிலைப்பாடு. அது மக்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அதை தலைவர் தளர்த்தாமல் தொடரனும். அதுதான் தலைவருக்கு என்றுமே  நல்லது.

எவனாவது லூசுத்தனமா ஒளறுவான். அதையெல்லாம் சும்மா விடு, தல! உண்மை என்னனா இந்தப்படம் தமிழ்நாடு, கர்நாடகாவைவிட, கேரளா, ஆந்திராவில்தான் சரியாப் போகலை . ஆந்திராக்காரனுக்கும், கேரளாக்காரனுக்கும், போராட்டங்கள் தேவையில்லைனு சொன்னதால கோவமா என்ன? . அங்கேயும் கமிஷன் பேஸ்டாகத்தான் ரிலீஸ் பண்ணினார்கள். அதனால் அங்கேயிருந்தும் எதுவும் ஒப்பாரி வராது.

"ரஞ்சித் எதிர்காலம், குமாரு?"

ரஞ்சித் ஒரு நல்ல சம்பளம் வாங்கி இருப்பார். அவர் திருப்திக்கு தலைவரை வைத்து ஒரு நல்ல படம் கொடுத்துள்ளார். இந்தப் படம் அமோகமாக ஓடி இருந்தாலும் தலைவர் தொடர்ந்து ரஞ்சித் படத்தில் நடிக்கப் போவதில்லை. அதனால் ரஞ்சித்க்கு எந்த நஷ்டமும் இல்லை.

"உஙக் தலைவர்  மார்க்கட், குமாரு?"

ஹா ஹா ஹா ஹா!

67 வயதில், 50 கோடி சம்பளம்னு சொல்றாங்க. எம் ஜி ஆர் இந்த வயதில் நடிக்கவில்லை. சிவாஜிக்கெல்லாம் இந்த வயதில் இதுபோல் ஸ்டார் வால்யு இல்லை. படையப்பாவில் இதே வயதில் தலவைர்  அப்பாவாக சிவாஜி நடிச்சார். மேலும் கவுரவ வேடம் என்பதால் குறைந்த சம்பளத்தில்தான் நடித்தார். இன்னைக்கும் தலைவரை வைத்து படம் எடுக்க ஆயிரம்பேர் தயாரா இருக்கான். தலைவர் என்ன "உலக "இந்திய" குப்பையா" என்ன?

"2.0, குமாரு?"

350 கோடி செலவுனு சொல்றாங்க. இது தலைவர் படம் என்பதைவிட ஷங்கர் படம். படம் ப்ளாக் பஸ்டர் ஆனாலும், போட்ட காசை எப்படி எடுப்பார்கள்னு எனக்குத் தெரியலை. படம் ஹிட் ஆனாலும் ஒப்பாரிகளைப் பார்க்கலாம்னு நினைக்கிறேன்.

"ஏன் உங்க தலைவர் இந்த சூழலில் (ஒரே எழவா இருந்தது தமிழ்நாட்டில்)  இந்தப் படத்தை (காலாவை) வெளியிட்டார், குமாரு? கொஞ்சம் நிதானிச்சு இருக்கலாமோ?"

நீங்க வேற? செலவழிச்ச பணத்துக்கு ஒரு நாளைக்கு வட்டி எவ்ளோ? படத்தை வெளியிட்டதே நல்லது.  இல்லைனா விஸ்வரூபம், சபாஷ் நாயுடு மாதிரி படுத்தால் வட்டியே தயாரிப்பாளரை சாப்பிட்டுவிடும். படத்தை அப்பப்போ வெளியிடுவதே தயாரிப்பாளருக்கு நல்லது. 5 வருடம் கழிச்சு வெளியிடுவ தெல்லாம் விலை போகாத நடிகர்கள் படம்!


4 comments:

கிரி said...

செம :-)

Unknown said...

இந்தப்பதிவை தனுஷ் படித்தால் அவருக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கும் தெரியுமா ?

வருண் said...

***கிரி said...

செம :-)***

கிரி; இந்தப்படம் கமிஷன் அடிப்படையில்தான் ரிலீஸ் பண்ணீனாங்க. அதனால் கண்டவனும் பிரச்சினை கிளப்ப முடியாது.

தனுஷ், ட்விட்டரில் காலாவால் எனக்கு இலாபம்தான்னு சொல்லி இருக்கும்போது இவர்கள் என்ன சொல்வார்கள்? செம அற அது! :)

ரஜினியை வைத்து படம் எடுத்த எந்த ப்ரட்யூசரும் காசு விட்டதில்லை! :)

வருண் said...


***Blogger Balakumar Parajasingham said...

இந்தப்பதிவை தனுஷ் படித்தால் அவருக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கும் தெரியுமா ?***


Wunderbar Films
‏Verified account @wunderbarfilms
Jul 7

We would like to dispel rumours run in few articles on #Kaala. Contrary to it, #Kaala is a successful and profitable project for Wunderbar Films and we thank Superstar for the opportunity given to us. We also thank the audience for the positive response given to the film.

அவர் சந்தோசமாத்தான் இருக்காருங்க. ரஜினியை வைத்து படம் எடுத்த யாரும் காசு விட்டதில்லைங்க- இன்னைக்கு வரை.

இலாபம் கம்மியா வேணா இருக்கும். அவ்ளோதான்.