Tuesday, January 21, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க?

 "என்னடி! எப்படி இருக்க?

"என்ன என்ன, டீ யா? இதெல்லாம் "மீ டூ காலம்! மரியாதை மரியாதை!"

"என்னங்க காதலி  எப்படி இருக்கீங்க? னு கேட்டா நல்லாவா இருக்கு? கேவலமா இல்லை? ஏன்டி மீ டூ, மீ த்ரீனு சும்மா ஒளறிக்கிட்டு குடிச்சி கும்மாளம் போட்டுக்கிட்டு அலையிறீங்க? ஏன்டி இப்படி பெண் சுதந்திரம்னு சொல்லி சொல்லி முழு லூசாகிட்டீங்க? மீ டூ உங்க தாலினு. உன்னை வாடி போடினு கூப்பிட்டாத்தான் அழகா இருக்கு.. எனக்கு மூடு வருது. என்ன பண்ண சொல்ற?"

"கொஞ்சம் கூட மரியாதை தெரியாத உன்னைப் போயி காதலிச்சேன் பாரு?"

"இப்போ என்ன ஆயிடுச்சு? நீ இப்போவே யாராவது ஒரு அன்பரை நீ தேடிப் போகலாம். ஃப்ரீ வால்ட், டார்லிங். ஆனா அவனும் ஆம்பளைதான். என்ன கொஞ்ச நாளைக்கு உன்னிடம் நடிப்பான். அப்புறம் புத்தியை காட்டுவான். அப்புறம் அவனுக்கு நான் பரவாயில்லைனு நினைப்ப. உக்காந்து யோசி!"

"ஏன் உனக்கு வேற எவளாவது மாட்டிட்டாளா? உன்ன மாதிரி பொறுக்கிகளைத்தான் தேடி வர்ராளுக"

"நீ வந்த இல்ல? சரி அப்படித்தான்னு வச்சுக்கோவேன்..?"

"இந்த ஆம்பளைங்க பத்தி தெரியாதா?"

"எல்லா ஆம்பளைங்களும் அப்படி இல்லைனு சொல்றாளுக. ஒரு சில மீ டூ க்கள் என் கணவன் தான் உலகிலே உயர்ந்தவன், யோக்கியன்னு சொல்லிப் பீத்துறதை எல்லாம் பார்க்கலையா நீ?. அரைவேக்காடுகள் ட்வீட் எல்லாம் பார்க்கிறது இல்லையா?!"

"அவ ஆத்துக்காரன் சும்மா நடிக்கிறான்னு சொல்றியா?"

"எனக்கென்ன தெரியும்? கொஞ்ச நாள் வெயிட் பண்ணிப் பாரு. இதுபோல் எல்லாத்தையும் ட்வீட்ல கொட்டிடுறீங்க. அப்புறம் அவனும் ஆம்பளை புத்தியை காட்டினால் அப்புறம் அள்ள முடியாது பாரு"

"ஆக, நீயும் ஒழுங்கா இருக்க மாட்ட? எவனாவது ஒழுங்கா இருந்தாலும் இப்படி ஏதாவது சொல்லுவ..?"

"நான் ஒழுங்காத்தானே இருக்கேன்? அப்படி என்ன பண்ணீட்டேன்? உன்னை வாடி போடினு சொல்றது என்ன அத்தனை பெரிய தப்பா?"

"அப்போ நான் உன்னை வாடா போடானு சொல்லலாமா?"

"யாரு கூடாதுனு சொன்னா? ஒண்ணு பண்ணு, என்னை அடிமையா வச்சு ஒரு பத்து நாளைக்கு நாய் மாதிரி செயின்ல கட்டிப்போடு. என்ன வேணா சொல்லிக்கோ. 11 வது நாள் என்ன நடக்குதுனு பாரு"

"என்ன நடக்கும்?"

"எனக்கென்ன தெரியும்? செஞ்சு பாரு!"

"என்ன புதிர் போடுற?"

"புதிரெல்லாம் இல்ல. சும்மா ஒரு சேஞ்ச்க்கு. என்ன எப்படி வேணா ட்ரீட் பண்ணு. 10 நாளைக்குத்தான்"

"அதோட என் டார்ச்சர்  தாங்க முடியாமல் நீ ஓடிப்போயிட்டேனா?"

"நல்லதாப் போச்சு. எவனாவது 'வாங்க  போங்க"னு அன்பா பழகிற ஒரு வீணாப் போனவனை தேடி கண்டுபிடி.  டோண்ட் வொர்ரி, தேர் ஆர் செவெரல் மென் வில் கம் ஆஃப்டர் யுவர் ஆஸ்"

"ஹா ஹா ஹா"

"சீரியஸா சொல்லிக்கிட்டு இருக்கேன். எதுக்குடி சிரிக்கிற"

"இல்லை நீ ஒரு காம்ளெக்ஸ் பர்சனாலிட்டி. அதான் யோசிக்கிறேன்."

"இது பச்சைப் பொய். நான் உன்னைவிட ரொம்ப சிம்ப்பிள் பர்சனாலிட்டி. நீங்கதான் என்ன செய்றீங்க, என்ன பேசுறீங்க னு யோசிக்காமல் ஏதாவது உளற வேண்டியது. ஏதாவது தப்பு நடந்தால் உடனே  எங்களை ப்ளேம் பண்ண வேண்டியது. நெவெர் எவெர் ஹாவ் த " guts" to accept when you really fuck up!"

"இப்போத்தான் உண்மை எல்லாம் வெளிய வருது"

"சரி நான் வேலைக்குப் போகனும். யோசிச்சு வை"

"சரி, போயி தொலை!"

-தொடரும்





4 comments:

Avargal Unmaigal said...

மீ டு என்று பேசும் பெண்களின் கணவன் மட்டும் யோக்கியனாம் அப்ப அந்த கணவன் ரொம்ப ஸ்மார்ட்டா ஹேண்ட்ல் பண்ணுறான்னுதான் அர்த்தம்

வருண் said...

வாங்க, மதுரைத் தமிழன்! ஹாப்பி நியு இயர்!
----------------

அந்தளவுக்கெல்லாம் இவளுகளுக்கு யோசிக்கத் தெரியாது. "என் ஆத்துக்காரரெல்லாம் அப்படி கெடையாது!" னு நெனச்சுண்டே ஏதாவது ஒளறிண்டே திரிவாளுக!

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப நாளா ஆளைக் காணாம்...

இது தான் காரணமா...? ஹா... ஹா...

வருண் said...

வாங்க தனபாலன். ரொம்ப பிஸியா இருந்தேன். ப்ளாக் எழுதுவதைவிட உருப்படியான காரியம் செய்து கொண்டு இருந்தேன். :) உண்மையான காரணம் அதுதான்.

இப்போ சும்மா எழுதிப் பார்த்தேன். ஏதாவது எழுத வருதானு! :)