* கேரளாவில் 3 வயது சிறுமியை கடத்திக்கொண்டு போய் வன்புணர்வு செய்ததாக செய்தி வருகிறது. அந்த அறியாச்சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்த டாக்டர்கள் சொல்லும் மெடிக்கல் ரிப்போர்ட் வாசிக்கவே முடியாத அளவுக்கு பயங்கரமாக இருக்கு! 3 வயது சிறுமி! குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுனு சினிமாப் பாடல் கேட்டதுண்டு! குழந்தை தெய்வத்துக்கு சமானம் என்பது தெரியாதா இந்த மிருகங்களுக்கு? ஏன்?
* கொஞ்ச நாள் முன்னால, நம்ம தமிழ் நாட்டில் ஒரு 13 வயது சிறுமியை 60, 50, 70 வயது ஆட்கள் பலவிதமாக பாலியல் பலவந்தப்படுத்தி அவளை சின்னா பின்னப்படுத்தியதாக செய்திகள் சாதாரணமாக வருகின்றன. இது தெரிந்தே செய்கிற தவறு. தெரிந்தே உன் மனசாட்சியை கொன்றுவிட்டு செய்யும் குற்றம். உணர்ச்சிவசப்பட்டு ஒருவனை குத்திக் கொல்வது போன்றவை வேறு விசயம். 50-70 வயது ஆண்கள்! ஒரு 13 வயது சிறுமியை!
* அதற்கு முந்திய மாதம் டெல்லியில் ஒரு 22 வயது பெண்ணை 5 மிருகங்கள் ஓடும் பேருந்தில் வைத்து வன்புணர்வு செய்து அவளைக் கொன்றே விட்டார்கள். உலகமே நம்மை காறித் துப்புது இந்த நிகழ்ச்சிக்கப்புறம். ஸ்லம்டாக் மில்லிய்னர் படத்தில் இந்தியர்களை மட்டமாக் காட்டிவிட்டார்கள்னு கொதித்தெழுந்தார்கள் ஒரு சிலர்! இந்த டெல்லி நிகழ்சியைப் பார்த்து அதே இவர்கள் என்ன செய்கிறார்கள்னு தெரியவில்லை!
* "காதல் தோல்வி, என்னை அவள் காதலிக்க வில்லை" னு கோபத்தில் அமிலத்தை பெண்கள் முகத்தில், உடம்பில் எறிகிறார்கள் அறியாமையில் வாழும் ஒரு சில மிருகங்கள்! முகம், உடல் எல்லாம் சின்னா பின்னப்பட்டு பரிதாபமாக இறக்கிறாள் அந்த "வினோதினி"!
இதை எல்லாம் விமர்சிச்சு, இந்தப் பதிவு எழுதும்போதும் நல்ல உணர்வுகளே இல்லை! எதுக்கு இதைப் பத்தி எழுத ஆரம்பிச்சோம்? னுதான் தோணுது. இதனால் யாருக்கு என்ன இலாபம்ணுகூட தோணுது. :(
ஆமா, என்ன ஆச்சு நமக்கு?
என்ன ஆச்சு இந்த ஆண்களுக்கு?
இல்லை எப்போவுமே ஆண்கள் இப்படித்தானா?
காலங்காலமாக மனிதன் இப்படித்தானா?
முடியாதவர்களையும், உலகறியாச் சிறுமிகளையும் காலங்காலமா மனிதன் வன்புணர்வு செய்றானா? இது தப்புணு அவனுக்கு ஏன் விளங்கவில்லை?? கடவுள், மதம், மண்ணாங்கட்டி எல்லாம் இருந்தும் இவர்கள் இன்னும் திருந்தலையா? இல்லைனா இதுபோல் குற்றம் செய்பவர்கள் அனைவரும் நாத்திகர்களா??
"இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள்" னு சிறுவயதில் பள்ளியில் ஆசிரியர் சொல்வதை நான் திருப்பிச் சொன்ன ஞாபகம். இந்த மிருகங்களும் நம் உடன் பிறந்தவர்களா? அப்போ நம்மளும் இது போல் மிருகங்கள்தானா?
என்ன செய்யலாம் இந்த மிருகங்களை?
உலகறிய தூக்கில் போடலாமா?
அடிச்சே கொல்லலாமா?
இல்லை உலகறிய இவர்கள் தலையை துண்டிக்கணுமா?
இல்லைனா மனிதாபிமானத்துடன் இவர்கள் குற்றங்களை, இவர்கள் மனநிலையைப் பகுத்தறிந்து இவர்களை திருத்தணுமா? இவர்களை மனிதாபமானத்துடன் அணுகணும்னு எழுதவே எனக்கு கஷ்டமா இருக்கு! எழுதும்போது எனக்கே இப்படி எழுதும் என்னை நினைத்து அருவருப்பா இருக்கு!
மிருகங்களிடம் எப்படி மனிதாபிமானம் கொள்ளலாம்?!
திருந்துங்களா இந்த மிருகங்கள்?
எப்படி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது? I mean I don't want to hear one more news like this in the future!
பொதுவாக நான் இதை அணுகும் விதம்..
என்னால இப்படி யாரையும் வன்புணர்வு செய்ய முடியாது! என்னால இதை நினைத்தே பார்க்க முடியவில்லை! சாதாரண கற்பனைக் கதைகளில் இதுபோல் சிறுமிகளை வன்புணர்வு செய்வதுபோல் எழுதியிருப்பதைப் படித்தாலே அதை எழுதிய ஆசிரியர்மேல் படுகோபம் வருகிறது. அதுபோல் கற்பனைக் கதைகளுக்கு அறிஞர்களும், நடுநிலையாளர்களும் பரிசளித்தால் அவர்கள் மேலே எரிச்சல் வருவதும் உண்டு. சாதாரண நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபோது, சிறுகுழந்தைகளை சற்றே அநாகரிகமாக விமர்சித்த பதிவர்களை கேவலமாக விமர்சிச்சதுகூட உண்டு. வேறென்ன செய்யணும்?
இதுபோல் பதிவெழுதுவதால் நாலு பேர் திருந்துவார்களா? இல்லை இதுபோல் ஒரு பதிவே தேவையற்றதா? இதுபோல் பதிவால் என்ன சாதிக்க முடியும்? சும்மா நானும் அந்த அபலைகளை, குழந்தைகளை நினைத்து ஒப்பாரி வைக்கிறேன்னு ஊர் உலகத்துக்கு என்னை மனிதன்னு காட்டிக்கொள்வதைத்தவிர வேறென்ன மாறுதல் உண்டாக்க முடியும் இதுபோல் பதிவெழுதுவதால்?
கடைசியில் குழப்பமும் அதிருப்தியும்தான் மிஞ்சுகிறது இதுபோல் ஒரு தலைப்பைப் பற்றி பேசுவது, விமர்சிப்பது எல்லாம். :(