கீழே படியுங்கள்..
ஜானகிராமனின் எழுத்துதான்..
“ராமரத்னம் எனக்கு பரம சினேகிதன். ரொம்ப நெருங்கிப் பழகுறேன். அத்தனை சூட்சுமமான ஒரு ஆத்மாவை நான் பார்த்ததில்லை. பரம ரசிகன். நம்ம மனசிலே இருக்கிற கவலை, வியாதி எல்லாம் பறந்துபோயிடும்- என்னமோ பீச்சிலே போயி இல்லே விசாலமா ஒரு இயற்கை காட்சிக்கு முன்னாலே உட்கார்ந்திருக்கிறாப்பிலே அவன் தனக்கு இப்படி ஓர் அதிர்ச்சி ஏற்பட்டிருக்குனு வாயைத்திறந்து சொன்னதில்லை. அதைச்சொல்லி என்னை துன்புறுத்த வேணாம்னு நெனச்சானோ என்னவோ- நிச்சயமாக அப்படித்தான் நினைச்சிருப்பான். யார்கிட்டயும் சொன்னதில்லேனு நினைக்கிறேன்.”தி ஜானகிராமனின் “தேடல்” என்கிற சிறுகதை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்!
“ஒரு அத்தியாயத்தையே கிழிச்சு எறிஞ்சுட்டார்னு சொல்லுவேன். ரொம்ப பெரிய மனுஷனாகத்தான் இருக்கணும். பெண்டாட்டி விட்டுட்டுப்போறாளே -அந்த ஒரு சர்ட்டி·பிகேட்டே போரும்யா அவர் பெரிய மனுஷன்கிறதுக்கு!”
“என்னையா ஒரேயடியா அப்படிச் சொல்லிவிட்டீர்?”
மது காரை ஓரமாக நிறுத்திவிட்டு கண்ணை மூடிக்கொண்டே சொன்னான்: “பொம்மனாட்டிகளுக்கு என்னப்பா வேணும்? அடுத்தாத்துக்காரியைவிட தான் செளக்கியமா இருக்கணும். நல்ல புடவை. சொந்த வீடு. தான் ரொம்ப நல்லவ. பெரியமனசு உள்ளவ. ஊதாரி- அப்படி இப்படினு காமிச்சுக்கணும். ஆமடையான் தன்கிட்ட எல்லாத்தையும் கலந்து ஆலோசிக்கணும். பத்துபேருக்கு நடுவிலே தங்கிட்ட ரொம்பப் பிரியமா இருக்கிறதா அவன் காமிக்கணும். மற்றவர்களைவிட தன்கிட்ட விஷேசமா, பிரியமா இருக்கிறதா அவன் காமிக்கணும். உலகம் வேற, தன் குடும்பம் வேறனு ஆமடையான் உணர்ந்து பிரிச்சு வச்சுண்டு, முக்கால்வாசி நேரமும் சுவருக்கு இந்தப்பக்கமே பொழுதைப்போக்கணும். அந்தப்பக்கத்தைவிட இந்தப்பக்கம்தான் பெரிசென்று தான் நினைச்சுண்டு இருக்கதாக நிரூபிக்கணும். இப்படியெல்லாம் இருந்தா அவ இல்லத்தரசி, கற்புக்கரசின்னு ராஜ்யம் நடத்த முடியும். இந்தப்பேர் எல்லாம் அவளுக்கு வரதுக்கு ஆமடையான் ஓயாம ஒழியாம ஒத்தாசை பண்ணிண்டே இருக்கணும். நான் சரிதாண்டீம்மான்னு என் ஆமடையாள்ட்ட சப்ஜாடா ஒத்துக்கிண்டு நடத்திண்டு வரேன். உம்ம (சினேகிதன்) ராமரத்னம் அப்படியில்லே போலயிருக்கு. நான் நிம்மதியா இருக்கேன். அவரு இல்லே- அனாதைப் பள்ளிக்கூடம் விமர்சனம் எல்லாம் எனக்கும் ஜாம்ஜாம்னு நடத்தத்தெரியும். ஆனா நானும் ஷட்டகர் கிட்ட பறிகொடுத்துட்டு உக்கார்ந்து இருக்க முடியுமா நிம்மதியை? சரி... "கூலா" ஏதாவது சாப்பிடுவோம்” காரில் இருந்துகொண்டே கடைக்காரனைக் கூப்பிட்டார் “மது”.
ஆமாம், மீள்பதிவுதான்.. வேலை அதிகம்.. அதனாலதான்..