Friday, March 8, 2013

என்னால் ஜீரணிக்கவே முடியாத இந்தியச் செய்திகள்!

* கேரளாவில் 3 வயது சிறுமியை கடத்திக்கொண்டு போய் வன்புணர்வு செய்ததாக செய்தி வருகிறது. அந்த அறியாச்சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்த டாக்டர்கள் சொல்லும் மெடிக்கல் ரிப்போர்ட் வாசிக்கவே முடியாத அளவுக்கு பயங்கரமாக இருக்கு! 3 வயது சிறுமி! குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுனு சினிமாப் பாடல் கேட்டதுண்டு! குழந்தை தெய்வத்துக்கு சமானம் என்பது தெரியாதா இந்த மிருகங்களுக்கு? ஏன்?

* கொஞ்ச நாள் முன்னால, நம்ம தமிழ் நாட்டில் ஒரு 13 வயது சிறுமியை 60, 50, 70 வயது ஆட்கள் பலவிதமாக பாலியல் பலவந்தப்படுத்தி அவளை சின்னா பின்னப்படுத்தியதாக செய்திகள் சாதாரணமாக வருகின்றன. இது தெரிந்தே செய்கிற தவறு. தெரிந்தே உன் மனசாட்சியை கொன்றுவிட்டு செய்யும் குற்றம். உணர்ச்சிவசப்பட்டு ஒருவனை குத்திக் கொல்வது போன்றவை வேறு விசயம். 50-70 வயது ஆண்கள்! ஒரு 13 வயது சிறுமியை!

* அதற்கு முந்திய மாதம் டெல்லியில் ஒரு 22 வயது பெண்ணை 5 மிருகங்கள் ஓடும் பேருந்தில் வைத்து வன்புணர்வு செய்து அவளைக் கொன்றே விட்டார்கள். உலகமே நம்மை காறித் துப்புது இந்த நிகழ்ச்சிக்கப்புறம். ஸ்லம்டாக் மில்லிய்னர் படத்தில் இந்தியர்களை மட்டமாக் காட்டிவிட்டார்கள்னு கொதித்தெழுந்தார்கள் ஒரு சிலர்! இந்த டெல்லி நிகழ்சியைப் பார்த்து அதே இவர்கள் என்ன செய்கிறார்கள்னு தெரியவில்லை!

* "காதல் தோல்வி, என்னை அவள் காதலிக்க வில்லை" னு கோபத்தில் அமிலத்தை பெண்கள் முகத்தில், உடம்பில் எறிகிறார்கள் அறியாமையில் வாழும் ஒரு சில மிருகங்கள்! முகம், உடல் எல்லாம் சின்னா பின்னப்பட்டு பரிதாபமாக இறக்கிறாள் அந்த "வினோதினி"!

இதை எல்லாம்  விமர்சிச்சு, இந்தப் பதிவு எழுதும்போதும் நல்ல உணர்வுகளே இல்லை! எதுக்கு இதைப் பத்தி எழுத ஆரம்பிச்சோம்? னுதான் தோணுது. இதனால் யாருக்கு என்ன இலாபம்ணுகூட தோணுது. :(

ஆமா, என்ன ஆச்சு நமக்கு?

என்ன ஆச்சு இந்த ஆண்களுக்கு?

இல்லை எப்போவுமே ஆண்கள் இப்படித்தானா?

காலங்காலமாக மனிதன் இப்படித்தானா?

முடியாதவர்களையும், உலகறியாச் சிறுமிகளையும் காலங்காலமா மனிதன் வன்புணர்வு செய்றானா? இது தப்புணு அவனுக்கு ஏன் விளங்கவில்லை?? கடவுள், மதம், மண்ணாங்கட்டி எல்லாம் இருந்தும் இவர்கள் இன்னும் திருந்தலையா? இல்லைனா இதுபோல் குற்றம் செய்பவர்கள் அனைவரும் நாத்திகர்களா??

"இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள்" னு சிறுவயதில் பள்ளியில் ஆசிரியர் சொல்வதை நான் திருப்பிச் சொன்ன ஞாபகம். இந்த மிருகங்களும் நம் உடன் பிறந்தவர்களா? அப்போ நம்மளும் இது போல் மிருகங்கள்தானா?

என்ன செய்யலாம் இந்த மிருகங்களை?

உலகறிய தூக்கில் போடலாமா?

அடிச்சே கொல்லலாமா?

இல்லை உலகறிய இவர்கள் தலையை துண்டிக்கணுமா?

இல்லைனா மனிதாபிமானத்துடன்  இவர்கள் குற்றங்களை, இவர்கள் மனநிலையைப் பகுத்தறிந்து இவர்களை திருத்தணுமா? இவர்களை மனிதாபமானத்துடன் அணுகணும்னு எழுதவே எனக்கு கஷ்டமா இருக்கு! எழுதும்போது எனக்கே இப்படி எழுதும் என்னை நினைத்து அருவருப்பா இருக்கு!

மிருகங்களிடம் எப்படி மனிதாபிமானம் கொள்ளலாம்?!

திருந்துங்களா இந்த மிருகங்கள்?

எப்படி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது? I mean I don't want to hear one more news like this in the future!

பொதுவாக நான் இதை அணுகும் விதம்..

என்னால இப்படி யாரையும் வன்புணர்வு செய்ய முடியாது! என்னால இதை நினைத்தே பார்க்க முடியவில்லை! சாதாரண கற்பனைக் கதைகளில் இதுபோல் சிறுமிகளை வன்புணர்வு செய்வதுபோல் எழுதியிருப்பதைப் படித்தாலே அதை எழுதிய ஆசிரியர்மேல் படுகோபம் வருகிறது. அதுபோல் கற்பனைக் கதைகளுக்கு அறிஞர்களும், நடுநிலையாளர்களும் பரிசளித்தால் அவர்கள் மேலே எரிச்சல் வருவதும் உண்டு. சாதாரண நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபோது, சிறுகுழந்தைகளை சற்றே அநாகரிகமாக விமர்சித்த பதிவர்களை கேவலமாக விமர்சிச்சதுகூட உண்டு. வேறென்ன செய்யணும்?

இதுபோல் பதிவெழுதுவதால் நாலு பேர் திருந்துவார்களா? இல்லை இதுபோல் ஒரு பதிவே தேவையற்றதா? இதுபோல் பதிவால் என்ன சாதிக்க முடியும்? சும்மா நானும் அந்த அபலைகளை, குழந்தைகளை நினைத்து ஒப்பாரி வைக்கிறேன்னு ஊர் உலகத்துக்கு என்னை மனிதன்னு காட்டிக்கொள்வதைத்தவிர வேறென்ன மாறுதல் உண்டாக்க முடியும் இதுபோல் பதிவெழுதுவதால்?

கடைசியில் குழப்பமும் அதிருப்தியும்தான் மிஞ்சுகிறது இதுபோல் ஒரு தலைப்பைப் பற்றி பேசுவது, விமர்சிப்பது எல்லாம். :(

9 comments:

Anonymous said...

நிச்சயமாக உங்களின் மன உணர்வே எனக்கும் ஏற்படுகின்றது, சமயங்களில் இச் செய்திகளை வாசிக்கும் போது அதீத மனக் குமுறல்களும், அழுத்தங்களுமே மிஞ்சுகின்றது. இன்று நடந்த செய்தி, கேரளாவில் ஒரு பெண்ணை கருக்கலைப்பு செய்ய அவளது பிறப்புறுப்பை சுட்டும், என்னவோ கொடுமை எல்லாம் செய்துள்ளனர் கணவனும், மாமியாரும்.. அப் பெண்ணின் வயதோ 21 மட்டுமே. பதிவு எழுதுவதோடு நமது கடமை முடிந்துவிடவில்லை என்ற எண்ணமமே எனக்குள் எழுகின்றது. தெரியாமல் ஒரு சிறு விலங்கைக் கொன்றுவிட்டாலே மனம் பதறும் போது எவ்வாறு இவ்வாறு வன்புணர்வு, கொடுமைகள், கொலைகள் எல்லாம் இவர்களால் செய்ய முடிகின்றது. அடிப்படை சிக்கல்கள் எங்கு தான் உள்ளது, அவற்றை எப்படித் தான் களைவது, வருத்தமே மிஞ்சுகின்றது. நாம் எழுதுவதால், பேசுவதால் யாராவது நாலு பேராவது சிந்திக்க மாட்டார்களா என்ற ஏக்கம் தான்,. ஆனால் சிந்திக்க வேண்டியவர்கள் பலருக்கும் நமது எழுத்தோ பேச்சோ போய் சேர்வதில்லை என்பதே உண்மை சகோ. என்ன செய்வதென்பதை அறியேன்..:(

திண்டுக்கல் தனபாலன் said...

யாரும் யாரையும் மாற்றுவது மிகவும் சிரமம்... ஒவ்வொருவரும் தனக்குள் மனிதத்தன்மைகளை வளர்த்துக் கொண்டாலொழிய, இவைகள் மாறப் போவதில்லை...

நாலடியார் 358

துளசி கோபால் said...

நடப்பது எல்லாம் பார்த்தால் மனசுக்கு பாரமா ஆகிருது. இதுதானா புண்ணிய பூமி? ச்சே.....

ஆனால் இந்த கொடியவர்களை ஒன்னும் செய்யக்கூடாது மனித உரிமை கொடிப்பிடிக்குது பாருங்க:(

போதுமடா சாமி.......

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஜீரணிக்கவே முடியாத செய்திகள் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் மட்டுமல்ல, இதுபோல மேலை நாட்டிலும் நடக்கத்தான் செய்கிறது.

//குழந்தை தெய்வத்துக்கு சமானம் என்பது தெரியாதா இந்த மிருகங்களுக்கு? ஏன்?//

அது நன்றாக தெரிந்ததால்தான்...
கண்ணுக்கு தெரியாத தெய்வத்தை அசிங்கமாக வன்புணர் வார்த்தைகள் கொண்டு திட்டி தீர்ப்பது போலவே, கண்ணுக்கு தெரிந்த குழந்தையை செயலால் வன்புணர்வு செய்து விடுகிறார்கள் போலும்.

முதலில் தெய்வம் என்றால் என்ன, அதன் சக்தி என்ன, நம்மீது வைக்கப்பட்டுள்ள சோதனை என்ன, மனிதர் யாரும் அறியாமல் தாம் செய்யும் ரகசிய பாவத்துக்கு இறுதி தண்டனை என்ன என்பதை எல்லாம்... ஆக்கொடுஞ்செயலை செய்ய முற்படும்போது... இறையச்சம் கொண்டு பயந்து உணராத வாழ்வியல் நெறியற்று, இறை நம்பிக்கையற்றவர்களாகி... இதுபோன்று, குழந்தை என்றால் என்ன என்று கூட புரியாமல் வக்கிர அக்கிரம செயலில் இறங்கும் ஈனர்களாகின்றனர்.

இவர்களுக்கு சட்டம் மரண தண்டனை அளிக்க வேண்டும். அது, இறை பயம் அற்றவர்களை அட்லீஸ்ட், மரண தண்டனை சட்டத்துக்காவது பயப்பட செய்யும். நாளடைவில் குற்றங்கள் குறையும்.

புரட்சி தமிழன் said...

//
இதுபோல் பதிவெழுதுவதால் நாலு பேர் திருந்துவார்களா? இல்லை இதுபோல் ஒரு பதிவே தேவையற்றதா? இதுபோல் பதிவால் என்ன சாதிக்க முடியும்? சும்மா நானும் அந்த அபலைகளை, குழந்தைகளை நினைத்து ஒப்பாரி வைக்கிறேன்னு ஊர் உலகத்துக்கு என்னை மனிதன்னு காட்டிக்கொள்வதைத்தவிர வேறென்ன மாறுதல் உண்டாக்க முடியும் இதுபோல் பதிவெழுதுவதால்?// இதுபோல் பதிவு எழுதுவதால் எந்த பயனும் இல்லை. குற்றம் செய்தவனை விசாரித்துப்பாருங்கள் தமிழில் வலைத்தளங்கள் உள்ளது அது பற்றி ஏதாவது தெறியுமா என்று கேளுங்கள் அப்போது உங்களுக்கான விடை தானக கிடைக்கும்.

Unknown said...

மனிதர்கள் மனதில் அதீதமான கற்பனையான செக்ஸ் எண்ணங்களை இப்போது உள்ள ஊடகங்கள் (இன்டர்நெட், சினிமா,அசிங்கமான புத்தகங்கள்,தொலைக்காட்சி.........) அளவுக்கு அதிகமாக ஏற்படுத்தி வருகின்றன. நிறைய விஷயங்கள் சும்ம ஜாலிக்கு என்று, நண்பர்கள் இடையே பகிர்ந்து கொள்ளபடுகிறது. அவை மனித மனங்களில் தெரியாமல்ஒழிந்து கொண்டு உள்ளது . அதிகாரம், சந்தர்ப்பம் கிடைத்த மனிதர்களும், சில கொடூர மனம் கொண்ட அயோக்கியர்களும் அதை செயல்படுத்தி விடுகிறார்கள். குறைந்தது 14 வயது வரையாவது ஒரு ஆணோ பெண்ணோ செக்ஸ் குறித்து தவறான எண்ணங்களை பெறமுடியாத ஒரு சூழ்நிலையை இந்த சமுதாயம் உருவாக்கவேண்டும். எல்லா ஊடகங்களும் கட்டுப்பாட்டோடு செயல்பட்டால் இது போன்ற குற்றங்கள் குறையும்.

Good citizen said...

யாரும் யாரையும் மாற்றுவது மிகவும் சிரமம்... ஒவ்வொருவரும் தனக்குள் மனிதத்தன்மைகளை வளர்த்துக் கொண்டாலொழிய, இவைகள் மாறப் போவதில்லை...well said Danabalan,,Delhi பெண் இறந்த போது துக்கம் தொண்டையை அடைத்தது பின் வினொதினியின் மரணத்தின் போது துக்கத்தின் தாக்கம் சற்று குறைந்தது,அதற்கு பின் வந்த செய்திகள் மீனவர்களின் படுகொலைகள் போல் பழகிவிட்டது,,அடா இந்தியான்னா இப்படித்தான்பா என்பது போல்( நான் என்னுள் எற்பட்ட அனுபவத்தை உண்மையாய் சொல்கிறேன்,, மற்றவர்களுக்கு எப்படியோ,,எப்போதுமே கொதித்து கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், கொதித்து கொண்டே இருக்க வேண்டியதுதான்

Unknown said...

என்ன பாஸ் பன்றது கடுமையான தண்டனைகள் மூலம் மட்டுமே இதை கட்டுபடுத்த முடியும்

வருண் said...

@ இக்பால் செல்வன்

@ திண்டுக்கல் தனபாலன்

@ டீச்சர்

@ முகமது ஆஸிக்

@புரட்சி தமிழன்

@ கண்ணை நம்பாதே

@ நல்ல குடிமகன்

@ சக்கர கட்டி


தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

இதைப்பத்தி மறுபடியும் நான் எதுவும் சொல்ல இல்லை. நான் என் எண்ணங்களை எழுதிவிட்டேன்.