கயல் வெளியில் போனவுடன், அமைதியாக கயல் அமர்ந்த இடத்தில் சோஃபாவில் அமர்ந்தான் வருண். அவள் உடலில் இருந்து வந்த மணம் இன்னும் அவன் நுகர்ந்தான். அவனுடைய நடவடிக்கைகள் அவனுக்கே அதிசயமாக இருந்தன. இதுவரை எத்தனையோ பெண்கள் அவன் அப்பார்ட்மெண்ட்க்கு வந்து இருக்கிறார்கள், தனிமையில் அவர்களுடன் இருந்து இருக்கிறான். ஆனால் ஒரு போதும் இப்படியெல்லாம் அளவுக்கு மீறி நடந்ததில்லை. ஒரு சில பெண்கள் இவனிடம் இண்டெரெஸ்ட் காட்டி இருந்து இருக்கார்கள். அதை எல்லாம் இவன் ஒதுக்கி ஒதுங்கி இருந்து இருக்கிறான். ஆனால் இன்று, அவள் கழுத்தில் உதட்டைப்பதித்துவிட்டான். கயல் எதுவுமே சொல்லவில்லை! எதிர்ப்பும் காட்டவில்லை, மாறாக, போகும்போது, தேங்க்ஸ் ஃபார் எவ்வரிதிங் என்று ஜாடையாக வேறு சொல்லிவிட்டுப்போனாள்! நல்லவேளை ஃபோன் கால் வந்தது. இல்லை என்றால் என்னவெல்லாம் நடந்து இருக்குமோ? கயல் மறைமுகமாக அவனுக்கு ஆதரவு தந்து ஒத்துழைத்தது அவனுக்கு அவள் போன பிறகு தான் புரிந்தது. எப்படி அவள் மேல் மட்டும் இப்படி ஒரு அன்பு உருவாகியது? கயலும் எப்படி இவனிடம் இவ்வளவு தாராளமாக நடந்து கொள்ள விட்டாள் என்று மனது குழம்பியது. சரி, இதைப்பற்றி பிறகு யோசிக்கலாம் என்று விட்டுவிட்டு, போய் ஷாப்பிங் பண்ணலாம் என்று பாத்ரூம் சென்று முகம் கழுவி புற்ப்பட்டான், வருண்.
வெளியில் சென்ற கயல் அவளின் அக்யூரா டீஎல் காரில் அமர்ந்தாள். தலையில் இருந்த மல்லிகச்சரத்தை எடுத்து பர்ஸில் வைத்துக்கொண்டாள். அவளுடைய தோழிகள் எப்படி மல்லிகை கிடைத்ததென்று கேட்டால் பதில் சொல்ல முடியாது. அது மட்டுமல்ல, அவர்களுக்கு கொடுக்க மல்லிகைச்சரம் இல்லாததால் அதை எடுத்து பர்ஸில் வைத்துக்கொண்டாள். ஒரு நிமிடம் வருண் கொடுத்த முத்தத்தை நினைத்துப்பார்த்தாள். இனிமையாக இருந்தது. சீட் பெல்ட்டை மாட்டிவிட்டு காலை ப்ரேக்கில் அழுத்தி காரை ஸ்டார்ட் பண்ணும்போது, அவளால் அவள் நிலைமையை உணரமுடிந்தது. ரூம் போனவுடன் பாத் ரூம் சென்று வேறு உடை மாற்றி விட்டு தான் வெளியே போகனும் என்று தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
காரில் போய்க்கொண்டு இருக்கும்போது வருணை முதன் முதலில் சந்தித்த காஃபி ஷாப்பை கடக்க நேரிட்டது. உடனே கயல் கடந்த காலநினைவுகளில் மூழ்கினாள். அங்கே தான் முதன் முதலில் வருணை சந்தித்தாள், சுமார் ஒரு வருடம் முன்பு. அன்று லைன் பெரியதாக இருந்தது. தனக்கு பின்னால் ஒரு வெள்ளைக்காரப்பெண்ணிடம் இன்னொரு ஆண் இந்தியன் ஆக்சண்டில் பேசிக்கொண்டு இருப்பதை கவனித்து அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை. கொஞ்சம் அவர்கள் பேசியதை கேட்க அவளுக்கு ஆர்வமாக இருந்தது, அதே சமயம் எரிச்சலாகவும் இருந்தது.
" I thought we are supposed to meet at 3 pm Jenny, it's almost 5 now!"
"Yeah, but I got stuck in the traffic Varun"
"I thought Americans are prompt, you seem to be an exception. Coming up with a lame excuse!"
She flipped her middle finger at Varun!
"What is this supposed to mean, Jenny?"
"You know what!"
"No I don't, tell me what it means"
"Ok, it means F*** you!"
கயல் திரும்பி அவர்களை பார்த்து புன்னகைத்தாள்.
"Why are you embarrassing yourself Varun?
"ஜென்னியின் செல்பேசி அலறியது. ஜென்னி பேசிவிட்டு, தான் உடனே போக வேண்டும் என்று தெரிவித்தாள்.
கயல் காஃபி ஆர்டெர் பண்ணினாள். அவள் பெயரை கேட்டு எழுதிக்கொண்டாள் அந்த டெல்லர். வருணுக்கு அப்போது தான் அவள் பெயர் தெரியவந்தது. வருண் ஒரு கப்பச்சீனோ ஆர்டர் பண்ணிவிட்டு கயலை பின்தொடர்ந்தான்.
Are you from India?
Yes!
Which part?
South!
South where?
Chennai.
தமிழ் தெரியுமா, உங்களுக்கு?
எப்படி கண்டு பிடிச்சீங்க?
உங்க பேர் கயல்னு சொன்னீங்க. அது தமிழ்ப்பெயர் தானே?
Are you stalking me mister? Just kidding, உங்க கேர்ள் ஃப்ரெண்ட் எங்கே?
அவள் சும்மா ஃப்ரெண்டுதான்.
அப்படியா ரொம்ப நெருக்கமான தோழி மாதிரி தெரிந்ததே? என்றாள் "நெருக்கத்துக்கு" கொஞ்சம் அழுத்தம் கொடுத்து.
அவள் அப்படித்தான் பேசுவாள். சாரி அபவ்ட் தட், கயல்.
ஏன் சாரி?
கொஞ்சம் அநாகரீகமான கான்வர்சேஷனை நீங்க கேட்க நேர்ந்ததுக்கு தான் சாரி. நீங்க என்னை வருண் என்று கூப்பிடலாம்.
பரவாயில்லை, வருண்.
கயல், அவள் காஃபியைப்பெற்றுக்கொண்டு அவள் வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்தாள்.
வருண், காஃபியை வாங்கிக்கொண்டு வேறொரு மூலையில் போய் தனியாக அமர்ந்தான்.
கயலுக்கு ஏனோ கஷ்டமாக இருந்தது வருண் அப்படி செய்தது. அவனோடு இன்னும் பேசனும் போல இருந்தது. அவன் பேச்சு ரொம்ப பிடித்திருந்தது அவளுக்கு.
இப்படி யோசித்துக்கொண்டு வரும்போது வீடு வந்தது.
காரை பார்க் பண்ணிவிட்டு அப்பார்ட்மெண்ட் உள்ளே நுழைந்தாள். உடனே பாத்ரூம் சென்று 5 நிமிடத்தில் வேறு உடை மாற்றிக்கொண்டு, பிறகு டிவியை உயிர்பித்தாள். ஆனால் அவள் மனதெல்லாம் வருண் நினைவே ஓடியது.
9 comments:
உங்க இந்த பதிவை விட "தமிழர்" பதிவுக்கு தான் பின்னூட்டம் இருக்கு. தமிழ் மக்கள் கொலைவெறியோடு இருக்காங்க போல. :) :)
ஆமாம், கயல், தமிழர்கள்தான் உணர்ச்சிவசப்படுகிறவர்கள் ஆயிற்றே? :)
புரியாததை புரிந்த மாதிரி நடிக்காமல், யார்தான் சுத்தமான தமிழர்கள் என்று புரிந்துகொள்ள் ஒரு சின்ன முயற்சி! :)
யார் தமிழன் ?? கொஞ்சம் மொக்கை தானுங்கோ !!
கமல் படம் மாதிரி கொஞ்சம் யோசிக்க வேணும்..
"காதல் கல்வெட்டு 2" -- ரஜினி படம் மாதிரி
வாசிச்சாலே போதும் !! :-))
இங்கே ஒரு கமல் - ரஜினி ரசிகர்கள் சண்டையை ஆரம்பித்து வைப்பது நியாயமா, வழிப்போக்கன்? :(
எனிவே, உங்கள் விமர்சனத்திற்கு நன்றி! :)
வழிப்போக்கன் ரஜினி ரசிகர் போலும் :)
Dear friend!
This artcle made me to relish those days! Gone are the days! Thats why I used to quote John Keats' version "Heared melodies are sweet but those of unheard are sweeter"
//
This artcle made me to relish those days! Gone are the days! Thats why I used to quote John Keats' version "Heared melodies are sweet but those of unheard are sweeter"//
நன்றி ஆனந்த்.
காதல் கல்வெட்டு .....உங்களது 'மலரும் நினைவுகளா'???
//காதல் கல்வெட்டு .....உங்களது 'மலரும் நினைவுகளா'???//
:)
Post a Comment