Tuesday, June 24, 2008

அமரிக்க எதிர்ப்பு : அரசியல்வாதிகளின் தந்திரம்?

சில வருடத்துக்கு முன் 'உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்' என்ற ஒரு படம் வந்தது. அரசியல் காமெடியர்களாகிவிட்ட கார்த்திக்கும், ரோஜாவும் நடித்திருப்பார்கள். அதில் ஒரு சீன்(ரொம்ப சரியாக நினைவில்லை, தவறிருந்தால் மன்னிக்கவும்). கார்த்திக்கும், ரமேஷ் கன்னாவும் ரோஜா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததால் ரோஜாவும் சில வாண்டுக்களும் அவர்களை ரூமூக்குள் பூட்டி வைத்து விடுவார்கள். அப்போது ஒரு குழந்தை இங்க் பாட்டிலை உடைத்துவிடும்.

ரோஜா: "இங்க் பாட்டிலை யார் உடைச்சது?"

சுட்டி:"அந்த திருடன் தான் அக்கா"

ரமேஷ் கன்னா : "நான் இங்கிருக்கேனே, எப்படி அங்கே இங்க் பாட்டிலை உடைக்கமுடியும்?"

சுட்டி: "இங்க் ஊத்தி தரேனு கூப்பிட்டு, பாட்டிலை தூக்கிப்போட்டு உடைச்சுட்டான்கா"

ரோஜா : "குழந்தை எங்கேயாவது பொய் சொல்லுமா?"

ர.க: "குழந்தை பொய் சொல்லாது, ஆனால் குட்டிச்சாத்தான் பொய் சொல்லும்."

இப்படித்தான் இருக்கிறது தற்போது அரசியல்வாதிகளின் "எல்லா பழியையும் தூக்கி அமரிக்கா மீது போடு" அரசியல். முக்கியமாக இங்கே விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் எம்.எல்.ஏவை குறிப்பிடவேண்டும். வாரம் தவறாது ஜூனியர் விகடனில் அமரிக்க எதிர்ப்பு கட்டுரைகள் எழுதி வருபவர். இந்த வார கட்டுரையை படித்ததும் மொத்தமாக பொறுமையிழந்துவிட்டேன். "ஓபாமா அமரிக்க ஜனாதிபதியாக வந்தால் ஏதாவது மாற்றம் இருக்குமா" என்பதை திறனாய்ந்து(!) எழுதி இருக்கிறார். அவரைப்பொறுத்தவரை இந்தியாவில் எது நடந்தாலும் அதற்கு அமரிக்காவும், அமரிக்க பாலிசிகளும் தான் காரணம். பெட்ரோல் உயர்வு அமரிக்காவின் தவறு, விலைவாசி கண்டபடி உயர்வதும் அமரிக்காவின் தவறு, ஏன் இந்தியாவில் யாராவது வழுக்கி விழுந்தால் கூட அதுவும் அமரிக்காவின் தவறு தான்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு அமரிக்கா மட்டும் தான் காரணம் என்பது அபத்தம். உலகமெல்லாம் பெட்ரோல் விலை உயர்கிறது, அமரிக்காவையும் சேர்த்து. இந்த முறை அமரிக்க தேர்தலில் ரிபப்ளிக்கன் கட்சி தோல்வியடையப்போவதின் முக்கியமான காரணம் இந்த பெட்ரோல் விலை உயர்வாக இருக்கும். தேர்தலுக்காக பெட்ரோல் விலையை குறைவாகவே வைத்திருந்த காங்கிரஸ் கட்சி, மற்றும் அதிக லாபத்துக்காக பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் போன்றவை தான் இந்தியாவில் பெட்ரோல் அநியாயமாக ஓவர்நைட்டில் உயர முக்கியமான காரணம். பாசுமதி அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தின மாதிரி ரிலையன்ஸின் பெட்ரோல் ஏற்றுமதியையும் ஏன் கட்டுப்படுத்த முடியாது? அல்லது மாற்று எரிபொருள் ஆராய்ச்சியில் ஏன் கவனம் செலுத்தக்கூடாது? ப்ரேசில் போன்ற நாடுகளில் மாற்று எரிபொருள் புரட்சி நடக்கவில்லையா? ஆனால் அதை எல்லாம் சுட்டிக்காட்டினால் பழி அரசியல்வாதிகள் மீதே திரும்பிவிடும் இல்லையா, அதை எப்படி இவர்களால் அனுமதிக்க முடியும்?

அவருடைய மற்றொரு அருமையான கருத்து, அதை நினைத்தாலே மெய்சிலிர்க்கிறது. அமரிக்க மக்கள் ஒபாமாவின் இமேஜைப்பற்றி கவலைப்படுவது மாதிரி ஒபாமாவின் கொள்கைகளைப்பற்றி கவலைப்படுவது இல்லையாம்! பாவம் அமரிக்க மக்கள் முட்டாள்கள் என்ன செய்வது? நம் இந்திய மக்கள் மாதிரி கொள்கைகளை ஆராய்ந்து ஓட்டுப்போடும் அறிவு அவர்களுக்கு இருப்பதில்லை. அரிசி, கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், சாராயம்,பிரியாணிக்கெல்லாம் ஓட்டுப்போட்டவர்கள் எத்தியோப்பியாவில் வசிக்கிறார்கள். செல்வி ஜெயலலிதாவின் cheap pre- election டெக்னிக்கான வெள்ள நிவாரண நிதி இரண்டாயிரம் ரூபாய்க்காக ஒருவரை ஒருவர் மிதித்தே கொன்ற மக்கள் அமேசான் பழங்குடியினர் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் இதை பற்றி எல்லாம் ரவிக்குமார் போன்ற அரசியல்வாதிகள் எழுதமாட்டார்கள், அவர்களுடைய கவலை எல்லாம் அமரிக்க மக்களைப்பற்றி தான். மக்கள் முட்டாள்களாகவே இருந்தால் தானே இவர்களைப்போன்ற அரசியல்வாதிகளின் பிழைப்பு ஓடும்?

அமரிக்காவின் பொருளாதாரம் சேதமடைவதைப்பற்றி ரொம்ப கவலைப்படுகிறார் திரு. ரவிக்குமார் எம்.எல்.ஏ, அமரிக்காவின் நிறவெறியைப்பற்றி கவலைப்படுகிறார். இந்தியாவின் பொருளாதாரம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது? சென்னை போன்ற சிட்டிகளில் நடுத்தர மக்கள் வாழ முடிகிறதா? நிலத்தில் இருந்து குடிநீர் வரையில் எல்லாவற்றிலுமே பற்றாக்குறை, பணவீக்கம் வருடத்துக்கு வருடம் உயர்கிறது ஏறக்குறைய "அறிவிக்கப்படாத, கண்டுக்கொள்ளப்படாத ரிசெஷன்" என்று தான் தற்போதைய இந்தியாவின் பொருளாதார நிலையைப்பற்றி வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். சரி பொருளாதாரத்தை விட்டு தள்ளுவோம், அது எப்போதுமே மோசமான நிலையில் தான் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்று ஆரம்பிக்கப்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் போன்றவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள்? சொல்லிக்கொள்வது மாதிரி ஏதுமே இல்லை என்பது தான் கசப்பான உண்மை. சீட்டுக்காக கட்சி விட்டு கட்சி தாவும் கேவலமான அரசியலையும், சினிமாவில் ஹீரோவாக நடிப்பதையும் தவிர பெரிதாக ஏதும் சாதிக்கவில்லை. தலித் பஞ்சாயத்து தலைவர்களுக்கு தங்கள் இருக்கையில் கூட அமர உரிமை இல்லை- உயர் ஜாதியினர் சொல்லும் இடத்தில் வெறும் கையெழுத்து போடுவது மட்டுமே அவர்கள் வேலை. இரட்டை டம்ளர் முறை இன்றளவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது -இதைப்பற்றி ஜூவி கூட விரிவான ரிப்போர்ட் எழுதி இருந்தது. பணி இடங்களில் சாதாரணமாக தலித் பணியாளர்கள் டிஸ்க்ரிமினேட் செய்யப்படுகிறார்கள், ஜாதி பெயரால் திட்டப்படுகிறார்கள். இந்த அவல நிலை எல்லாம் மாறிவிட்டதா? தலித்துகளிலும் மிகத்தாழ்ந்த நிலையில் உள்ள அருந்ததியினருக்கு 6% உள் ஒதுக்கீடு தர வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை அரசியல் காரணங்களுக்காக எதிர்த்த பெரிய மனிதர் இந்த ரவிக்குமார்.

அமரிக்கா இந்தியாவை ஒடுக்குகிறதா? நிச்சயமாக இல்லை. இந்தியாவை ஒடுக்குவது இந்திய அரசியல்வியாதிகள் தான். மக்களிடம் ஜாதி, மத, இன உணர்வுகளை தூண்டிவிட்டு ஒற்றுமையை குலைத்து, இந்தியாவை கற்காலத்துக்கு கொண்டு செல்லும் பெருமை அவர்களையே சாரும். அரசியல்தலைவர்கள் பண்ணிய சேதத்தை விட வேறெந்த நாடும் இந்தியாவை சேதப்படுத்தியதில்லை-பாகிஸ்தானையும் சேர்த்து. கோக், பெப்சி போன்ற அமரிக்க தயாரிப்புகளை இந்தியாவுக்குள் வளரவிட்டு அதன் மூலம் காளிமார்க் கூல்ட்ரிங்க்ஸ் போன்ற உள்நாட்டு தயாரிப்புகளை காணாமல் போக வைத்தவர்கள் இந்த அரசியல்வாதிகள். இதை யாராவது கேள்வி கேட்டால் அதற்கு ரவிக்குமார் போன்றவர்களிடம் இருக்கும் ரெடிமேடான பதில் "அமரிக்க சதி". தங்கள் குற்றங்களை திசை திருப்பும் முயற்சி தான் இந்த அமரிக்க வெறுப்பு வேடம்.

வல்லரசு நாடுகள் இருக்கத்தான் செய்யும், அமரிக்கா இல்லாவிட்டால் சீனா, அதுவும் இல்லாவிட்டால் ஏதாவது ஐரோப்பிய ஐக்கிய நாடு. இவர்களைப்பற்றி கவலைப்படுவது வேண்டாத வேலை. கவலைப்பட நிறைய இருக்கும் போது தேவை இல்லாமல் மற்ற நாடுகளின் மீது இந்தியர்களின் கவனத்தை திசை திருப்பி மக்களை முட்டாளாக்குகிறார்கள். இந்தியாவின் எந்த அரசியல்வாதிக்கும் அமரிக்க அரசியலையோ, வேறெந்த அரசியலையோ விமர்சிக்க தகுதி இல்லை. மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.

60 comments:

வருண் said...

ஆமாம், கயல், "ப்ளேம் இட் ஆண் அமெரிக்கா" ரொம்பச் சின்னத்தனமான அரசியல்தான்! :-(

Athisha said...

அதுக்காக திருடன் நல்லவன் ஆகிட முடியுமா
(நான் திருடனுக்காக பரிந்து பேசவில்லை)

புருனோ Bruno said...

//பெட்ரோல் விலை உயர்வுக்கு அமரிக்கா தான் காரணம் என்பது அபத்தம். //

டாலர் எண்ணை சுழற்சி (டாலர் ஆயில் சைக்கிள்) என்பது என்ன. அதுவும் அபத்தமா :) :) :)

கயல்விழி said...

//அதுக்காக திருடன் நல்லவன் ஆகிட முடியுமா
(நான் திருடனுக்காக பரிந்து பேசவில்லை)//

வணக்கம் அதிஷா. நானும் திருடனுக்காக பரிந்து எழுதவில்லை.
ஆகிவிடமுடியாது. திருடன் திருடனாக தான் இருப்பான், அது தெரிந்தகதை. நாம தான் வீட்டை பூட்டி வைக்கவேண்டும். திருடனை நாமே சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்றோம், இப்போது புலம்பி என்ன பயன்?

கயல்விழி said...

//டாலர் எண்ணை சுழற்சி (டாலர் ஆயில் சைக்கிள்) என்பது என்ன. அதுவும் அபத்தமா :) :) :)//

உங்கள் கருத்துக்கு நன்றி புரூனோ அவர்களே(என்னுடைய microprocessor பேராசிரியரின் பெயரும் ப்ரூனோ தான்).

அமரிக்கா பெட்ரோல் விலை உயர்வுக்கு ஒரு காரணமே தவிர, அது மட்டும் ஒரே காரணம் இல்லை. நம் மீடியாக்கள் அமரிக்கா மட்டுமே ஒரே காரணம் என்ற கருத்தை பரப்பி வருகின்றன.

இந்திய பொருளாதாரம் மொத்தமாக அமரிக்காவை நம்பி இருப்பது அமரிக்காவின் தவறாக இருக்க முடியாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

சின்னப் பையன் said...

//மக்களிடம் ஜாதி, மத, இன உணர்வுகளை தூண்டிவிட்டு ஒற்றுமையை குலைத்து, இந்தியாவை கற்காலத்துக்கு கொண்டு செல்லும் பெருமை அவர்களையே சாரும். அரசியல்தலைவர்கள் பண்ணிய சேதத்தை விட வேறெந்த நாடும் இந்தியாவை சேதப்படுத்தியதில்லை-பாகிஸ்தானையும் சேர்த்து.//

100% சரி...

கயல்விழி said...

நன்றி சின்னப்பையன்.

அதென்ன கூடுதலாக ஒரு "ச்"? :)

Selva Kumar said...

//அதிக லாபத்துக்காக பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் போன்றவை தான் இந்தியாவில் பெட்ரோல் அநியாயமாக ஓவர்நைட்டில் உயர முக்கியமான காரணம். //

Reliance is a Petroleum processing Industry. They don't care about the petrol prices. Even they have already closed the Petrol Retail outlets.

Reliance enjoys global leadership in its businesses, being the largest polyester yarn and fibre producer in the world and among the top five to ten producers in the world in major petrochemical products.

நாங்க எல்லாம் informed Investers இங்கோ..
எங்க company மேல தப்பா information பரப்பாதீங்கோ

Selva Kumar said...

// மாற்று எரிபொருள் ஆராய்ச்சியில் ஏன் கவனம் செலுத்தக்கூடாது? ப்ரேசில் போன்ற நாடுகளில் மாற்று எரிபொருள் புரட்சி நடக்கவில்லையா? //

In Brazil Majority of the Bio-Fuel comes from Ethanol. We can-not directly adopt the policy of Brazil. Even a 5 percent diversion of food sugarcane can leads to high sugarcane prices.

What we need and What we can is BIO-DIESEL from Jatropha which can benefit both Rural Economy and Oil Economy. (Suggested by Kalam)

Politics is spoling development of BIO-DIESEL.

Selva Kumar said...

//இந்தியாவின் பொருளாதாரம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது? பணவீக்கம் வருடத்துக்கு வருடம் உயர்கிறது
//

கிடையாது !! It was less than 4% a year ago.. India's Inflation shot up only due to oil price
from 87 to 137 $ and poor agricultural harvest.



//ஏறக்குறைய "அறிவிக்கப்படாத, கண்டுக்கொள்ளப்படாத ரிசெஷன்"
//

India is not Under recession. Just a temporary High Inflation.


//என்று தான் தற்போதைய இந்தியாவின் பொருளாதார நிலையைப்பற்றி வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ///

யார் அந்த வல்லுனர்கள் ??
எங்கே போனார்கள் இன்று வரை ?
அமெரிக்கா Billion and Billions Invest செய்த பொது இவர்கள் எங்கே போனார்கள் ??

Selva Kumar said...

நம் அரசியல்வாதிகள் நல்லவர்கள் என்பதல்ல என் கருத்து !!!
நம் பொருளாதாரம் வலிமையானது, அதே சமயம், as our PM pointed out,
We are not as Decoupled from American Economy as we thought or We would like to beleive

கயல்விழி said...

//நாங்க எல்லாம் informed Investers இங்கோ..
எங்க company மேல தப்பா information பரப்பாதீங்கோ//

ரிலையன்ஸ் உங்க கம்பனினு சொல்லிட்டீங்க, நீங்க இப்படி தானே எழுத முடியும்? :)

Selva Kumar said...

//இந்தியாவின் எந்த அரசியல்வாதிக்கும் அமரிக்க அரசியலையோ, வேறெந்த அரசியலையோ விமர்சிக்க தகுதி இல்லை. மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.
//

என்னாலே ஒத்துக்க முடியாதுங்க!!
இந்த அரசியல் வாதிக்கு வேணும்னா எல்லாமே இருக்கலாம், நெறைய திறமைசாலிகள் இருகாங்க !!

உதாரணம்: Manmohan Singh, Chidambaram, Jaswant Singh, Arun Shourie..

கயல்விழி said...

//In Brazil Majority of the Bio-Fuel comes from Ethanol. We can-not directly adopt the policy of Brazil. Even a 5 percent diversion of food sugarcane can leads to high sugarcane prices.

What we need and What we can is BIO-DIESEL from Jatropha which can benefit both Rural Economy and Oil Economy. (Suggested by Kalam)

Politics is spoling development of BIO-DIESEL.//

ப்ரேசில் நாட்டை ஒரு உதாரணமாக தான் குறிப்பிட்டேனே தவிர, அதே வழியை பின்பற்ற வேண்டும் என்பது என் கருத்து அல்ல.

ஏன் சோலார் பவர் எஞ்சின்களை கூட கொஞ்சம் மெனெக்கெட்டு வடிவமைத்தால் மாற்று எரிபொருளுக்கு தீர்வாகலாம். தேவை இல்லாமல் இராணுவத்துக்கு வாரி இறைக்கும் பணத்தில் 10தில் ஒரு மடங்கு கூட அமரிக்கா போன்ற நாடுகள் மாற்று எரிபொருள் ஆராய்ச்சியில் செலவிடுவதில்லை.

Selva Kumar said...

loves உட்டுட்டு இருந்த நீங்க எப்போ இந்த மாதிரி பிரச்சனை பத்தி எல்லாம் யோசிசீங்க ??

That's Good. These are common Man's problem. We should have a understanding.

கயல்விழி said...

//கிடையாது !! It was less than 4% a year ago.. India's Inflation shot up only due to oil price
from 87 to 137 $ and poor agricultural harvest.//

இதை ஒப்புக்கொள்ள கடினமாக இருக்கிறது. பணவீக்கத்தின் சதவிகிதம் இங்கே குறிப்பிடப்பட்டதை விட நிச்சயமாக அதிகம். ஐடியில் இருப்பவர்களுக்கு ஒருவேளை அந்த பின்ச் தெரியாமல் இருக்கலாம். நடுத்தரவர்க மக்கள் படும் கஷ்டத்தை மக்கள் பேட்டியோடு அவள் விகடன் பிரசுரித்திருந்தது.

Selva Kumar said...

//ஏன் சோலார் பவர் எஞ்சின்களை கூட கொஞ்சம் மெனெக்கெட்டு வடிவமைத்தால் மாற்று எரிபொருளுக்கு தீர்வாகலாம்.//


சோலார் - Least efficient power generation. No way..

கயல்விழி said...

//யார் அந்த வல்லுனர்கள் ??
எங்கே போனார்கள் இன்று வரை ?
அமெரிக்கா Billion and Billions Invest செய்த பொது இவர்கள் எங்கே போனார்கள் ??//

அவர்கள் எல்லாம் எப்போதிலிருந்தோ கதறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அரசு இயந்திரத்தின் காதிலும், மக்கள் காதிலும் ரொம்ப லேட்டாக தான் விழுகிறது. அதனால் தான் இதை "பண வீக்கம்" என்று குறிப்பிடுகிறார்கள்.

Selva Kumar said...

//ரிலையன்ஸ் உங்க கம்பனினு சொல்லிட்டீங்க, நீங்க இப்படி தானே எழுத முடியும்? :)//

ஹி ஹி :-))

உண்மையதான் சொல்றோம்...
You can check our Website to understand what we do..
http://www.ril.com/html/aboutus/aboutus.html

Selva Kumar said...

ரிலாக்ஸ் ப்ளீஸ் !!!

Good Night !!

கயல்விழி said...

//ரிலாக்ஸ் ப்ளீஸ் !!!

Good Night !!//

வழிப்போக்கன் அவர்களே, நான் ரிலாக்ஸ்டாக தான் இருக்கிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. :)

இப்போது எனக்கு மதிய நேரம் தூங்கினால் வேலையில் பிரச்சினை வரும் :) எனவே உங்களுக்கு மட்டும் குட்நைட், எனக்கு போரிங் afternoon.

Selva Kumar said...

//இதை ஒப்புக்கொள்ள கடினமாக இருக்கிறது. பணவீக்கத்தின் சதவிகிதம் இங்கே குறிப்பிடப்பட்டதை விட நிச்சயமாக அதிகம். ஐடியில் இருப்பவர்களுக்கு ஒருவேளை அந்த பின்ச் தெரியாமல் இருக்கலாம். நடுத்தரவர்க மக்கள் படும் கஷ்டத்தை மக்கள் பேட்டியோடு அவள் விகடன் பிரசுரித்திருந்தது//

Inflation, Industrial Productivity, Reserve Bank Cash Reserve ratio, Repo Rate

These Parameters determines how a economy is performing.

every one point change in the Inflation rate would directly impact the Share Market. So, we do follow this regularly not because of our profession but personal interest ..


Please check this

http://www.indiaonestop.com/inflation.htm

Selva Kumar said...

அவள் விகடன், இவள் விகடன் எல்லாம் makkal sentiment a வெச்சு பொலப்பு நடத்தறவங்க.. I beleive only ET, Hindu, etc.

நீங்க நாணயம் விகடன் சொல்லி இருந்த கூட, I will accept.

கயல்விழி said...

//என்னாலே ஒத்துக்க முடியாதுங்க!!
இந்த அரசியல் வாதிக்கு வேணும்னா எல்லாமே இருக்கலாம், நெறைய திறமைசாலிகள் இருகாங்க !!

உதாரணம்: Manmohan Singh, Chidambaram, Jaswant Singh, Arun Shourie..//

திறமைசாலிகளாக மட்டும் இருந்தால் போதுமா? இவர்கள் ஓட்டுப்போட்ட மக்களுக்காக என்ன செய்தார்கள்? முதலில் இந்தியாவை உண்மையாகவே வல்லரசாக்கி காட்டட்டும், அப்புறம் பொறுமையாக அமரிக்காவை பற்றியும், ஆஸ்த்ரேலியாவைப்பற்றியும் கவலைப்படலாம் இல்லையா?

கயல்விழி said...

//loves உட்டுட்டு இருந்த நீங்க எப்போ இந்த மாதிரி பிரச்சனை பத்தி எல்லாம் யோசிசீங்க ??

That's Good. These are common Man's problem. We should have a understanding.//

லவ்ஸ் வாழ்க்கையில் ஒரு பார்ட், அதுவே வாழ்கையாகிவிடுமா என்ன? :)
Yes I agree, we should talk about these things even it doesn't affect us in anyway.

கயல்விழி said...

//சோலார் - Least efficient power generation. No way..//

least efficient engine design என்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஜீனியஸ் டிசைன் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

Selva Kumar said...

http://in.rediff.com/money/2007/may/12spec2.htm

கயல்விழி said...

//அவள் விகடன், இவள் விகடன் எல்லாம் makkal sentiment a வெச்சு பொலப்பு நடத்தறவங்க.. I beleive only ET, Hindu, etc.

நீங்க நாணயம் விகடன் சொல்லி இருந்த கூட, I will accept.//

நாண்யம் விகடன், ஜூனியர் விகடன் போன்றவற்றில் கூட இதை பற்றி எல்லாம் கட்டுரைகள் தொடர்ந்து வந்துக்கொண்டு தான் இருக்கின்றன. அவள் விகடனில் வெறும் கருத்துக்கள் மட்டும் இல்லாமல் மக்கள் பேட்டியும் வந்திருந்ததால் அதை குறிப்பிட்டேன்.

You don't have to agree, you do the research yourself.

கயல்விழி said...

//Inflation, Industrial Productivity, Reserve Bank Cash Reserve ratio, Repo Rate

These Parameters determines how a economy is performing.

every one point change in the Inflation rate would directly impact the Share Market. So, we do follow this regularly not because of our profession but personal interest ..


Please check this

http://www.indiaonestop.com/inflation.htm//

போன வருடத்தை விட இந்த வருடம் பணவீக்கம் பரவாயில்லை என்கிறீர்களா? நான் படித்த சோர்ஸ்கள் அப்படி தெரிவிக்கவில்லை.

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

ஒரு வழிப்போக்கன் said...

***In Brazil Majority of the Bio-Fuel comes from Ethanol.***

What do you mean by "comes from ethanol" here?

Thanks! :-)

Selva Kumar said...

//அப்புறம் பொறுமையாக அமரிக்காவை பற்றியும், ஆஸ்த்ரேலியாவைப்பற்றியும் கவலைப்படலாம் இல்லையா?
//

முடியாதே!!!

Everything is interlinked today.

Selva Kumar said...

//தேவை இல்லாமல் இராணுவத்துக்கு வாரி இறைக்கும் பணத்தில் 10தில் ஒரு மடங்கு கூட அமரிக்கா போன்ற நாடுகள் மாற்று எரிபொருள் ஆராய்ச்சியில் செலவிடுவதில்லை.//

100 % சரி...

Selva Kumar said...

//போன வருடத்தை விட இந்த வருடம் பணவீக்கம் பரவாயில்லை என்கிறீர்களா? நான் படித்த சோர்ஸ்கள் அப்படி தெரிவிக்கவில்லை.

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்?
//

இல்ல...My Point is Inflation was well under control 4 % in 2007 and it moved to 11 % in 2008 (May be upto 15% in next few months) mainly due to following reasons
1) High Fuel Price - Fuel is traded in $ all over the world. Also, if you can see the fuel price it started shooting up only after Sub-Prime Crisis Surfaced..

2) Reduced Agricultural Exports from USA - Corn & Australia - Wheat. (USA diverted majority of Corn for Ethanol Production. Even in USA the corn price moved from 2$ in 2006 to 7.50 $ today). There are lot of SENATORS who are against this "Fuel instead of food" concept

3) Speculation

Selva Kumar said...

Ethanol ??

Kayal, Here we go

simply,

Ethanol = Bio Petrol
Jatropha = Bio diesel


There is no chemical processing of ethanol. It is directly(C2H5OH) used as
fuel.

Not just Sugarcane, Even Corn can be used to produce ethanol. Millions tonnes of Corn has been diverted by USA for Fuel instead of Food Export.

(check various US Senator's Websites)

Do you know why Petrol in US is called as GASOLINE instead of Petrol ?


It is actually mixture (Most of the companies) of Petrol(80-95%) +
ethanol(5 -20%). If your vehicle is tuned (Flexible Fuel Vehicle) for that you can actually use 100 % ethanol.

Both Petrol and Ethanol has similar properties, so you would never feel the
difference by looking at it or even smelling at it. (Unless it is more than
50 % ethanol)

கயல்விழி said...

தகவலுக்கு நன்றி வழிப்போக்கன், எத்தனால் பற்றி கேட்டது வருண், நான் இல்லை(கயல் என்று அட்ரெஸ் பண்ணி இருக்கிறீர்கள் :))

கயல்விழி said...

//
இல்ல...My Point is Inflation was well under control 4 % in 2007 and it moved to 11 % in 2008 (May be upto 15% in next few months) mainly due to following reasons
//

என்னுடைய கருத்து, நிகழ்கால பணவீக்க விகிதத்தை வைத்தே எழுதப்பட்டது. 2009 ஆண்டில் பணவீக்கம் இன்னும் அதிகமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பண வீக்கம் அதிகமானால், வேலையின்மையும் அதிகரிக்கும்.

கயல்விழி said...

//முடியாதே!!!

Everything is interlinked today.//

மற்ற நாடுகளைப்பற்றி சும்மா கவலைப்படுவதும், குற்றம் சாட்டுவதும் நல்ல pro-active strategy இல்லை. ஏனென்றால், நாம் என்ன நினைக்கிறோம் என்பதைப்பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அவர்கள் செய்வதை செய்துக்கொண்டே தான் இருப்பார்கள். மற்ற நாடுகளின் நடவடிக்கை நம் நாட்டை எப்படி பாதிக்கும் என்பதை ஆராய்ந்து தற்காப்பு நடவடிக்கை எடுப்பதே புத்திசாலிதனம்.

இங்கே நமக்கு அமரிக்க எதிர்ப்பு முகம் காட்டிவிட்டு, ரகசியமாக அமரிக்க தொழிலதிபர்களை இரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்றும் அரசியல் தான் எனக்கு பிடிக்கவில்லை.

வருண் said...

ஒரு வழிப்போக்கன் said...

****Do you know why Petrol in US is called as GASOLINE instead of Petrol ?***


So according to vzhippOkkan, petrol is called as Gasoline in U S because, Gasoline has been mixed with 5-20% ethanol?

In other words, if it is 100% Gasoline (just hydrocarbons), it will be called petrol?

Where did you learn that?!

Selva Kumar said...

வருண்!!

****Where did you learn that?!***

இது கொஞ்சம் ஓவர் !!

பட்டபடிப்பு!!! அப்புறம் project in Jatropha and renewable energy technologies..

FYI...

http://en.wikipedia.org/wiki/Gasoline

கொஞ்சம் google யூஸ் பண்ணுங்க சார் !! :-)))

(நீங்க கமல் ரசிகரா ???)

Divya said...

\\கவலைப்பட நிறைய இருக்கும் போது தேவை இல்லாமல் மற்ற நாடுகளின் மீது இந்தியர்களின் கவனத்தை திசை திருப்பி மக்களை முட்டாளாக்குகிறார்கள். \\

Well said Kayal:))

வருண் said...

It does not say, it is called gasolene because ethanol is added, sir!

It is just called as Gasolene in U S!
That has nothing to do with additives like ethanol!

However it is true, they do add ethanol in most of the gasolene as your quoted article says! :-)

வருண் said...

Am I a Kamal fan?

Why do you think that I am a Kh fans? LOL!

கயல்விழி said...

//Well said Kayal:))//

Thanks Divya.

Selva Kumar said...

\\Am I a Kamal fan?

Why do you think that I am a Kh fans? LOL!

//

ஒரே டெக்னிகலா கேட்கறீங்களே ??

வருண் said...

கமல் படம் பிடிக்கும்! பெரிய ஃபேன் எல்லாம் இல்லைங்க! :)

Anonymous said...

நல்ல பதிவு.

ராஜ நடராஜன் said...

ஒரு சீரியஸான பதிவுக்கு கனாக் காலம் சீரியல் பார்த்துட்டு வர்ரேன்னு பின்னூட்டம் போட வேண்டி இருக்கு.திரும்ப வருகிறேன்.

ராஜ நடராஜன் said...

//"குழந்தை பொய் சொல்லாது, ஆனால் குட்டிச்சாத்தான் பொய் சொல்லும்." //

ஒரு ஸ்மைலி போட்டுக்கிறேன்.கூடவே நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரு பதிவில் வருவதால் யார் எந்த சமயத்தில் பதிவிடுகிறீர்கள் என்பதில் குழப்பம்.ஆனாலும் வருண் காதல் கல்வெட்டு எழுதுகிற மாதிரி தெரிவதாலும் எனக்கு கதை படித்தால் தூக்கம் வரும் என்பதாலும் கல்வெட்டுக்களில் எனது பார்வை செல்வதில்லையென்று சொல்லிக் கொண்டு எனது கருத்தாட்டத்தை துவக்குகிறேன்:)

ராஜ நடராஜன் said...

//இப்படித்தான் இருக்கிறது தற்போது அரசியல்வாதிகளின் "எல்லா பழியையும் தூக்கி அமரிக்கா மீது போடு" அரசியல். முக்கியமாக இங்கே விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் எம்.எல்.ஏவை குறிப்பிடவேண்டும்.//

பெரிய மீன்கள் உங்கள் தூண்டிலில் விழவில்லை போலும்.சின்ன மீனைப் பிடித்துவிட்டு சந்தோசப்படுகிற மாதிரி தெரிகிறது:)

ராஜ நடராஜன் said...

//"ஓபாமா அமரிக்க ஜனாதிபதியாக வந்தால் ஏதாவது மாற்றம் இருக்குமா" என்பதை திறனாய்ந்து(!) எழுதி இருக்கிறார். //

ரவிக்குமார் மட்டுமில்லை.பெரும்பான்மையோரின் எதிர்பார்ப்பும் அதுவே.

ராஜ நடராஜன் said...

//பெட்ரோல் விலை உயர்வுக்கு அமரிக்கா மட்டும் தான் காரணம் என்பது அபத்தம். உலகமெல்லாம் பெட்ரோல் விலை உயர்கிறது, அமரிக்காவையும் சேர்த்து. இந்த முறை அமரிக்க தேர்தலில் ரிபப்ளிக்கன் கட்சி தோல்வியடையப்போவதின் முக்கியமான காரணம் இந்த பெட்ரோல் விலை உயர்வாக இருக்கும்.//

அமெரிக்காவும் காரணம் என்பதும்,ஆப்கானிஸ்தான்,ஈராக் யுத்தங்களும் காரணம்.கூடவே உலோகங்கள்,உணவுப்பொருட்கள் விலையேற்றமும் துணைக் காரணங்கள்.

ராஜ நடராஜன் said...

//பணி இடங்களில் சாதாரணமாக தலித் பணியாளர்கள் டிஸ்க்ரிமினேட் செய்யப்படுகிறார்கள், ஜாதி பெயரால் திட்டப்படுகிறார்கள். இந்த அவல நிலை எல்லாம் மாறிவிட்டதா? தலித்துகளிலும் மிகத்தாழ்ந்த நிலையில் உள்ள அருந்ததியினருக்கு 6% உள் ஒதுக்கீடு தர வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை அரசியல் காரணங்களுக்காக எதிர்த்த பெரிய மனிதர் இந்த ரவிக்குமார்.//

ரவிக்குமாரின் இந்த அரசியல் சாயம் வெளுத்ததில் உங்கள் எழுத்துக்களுடன் உடன்படுகிறேன்.

ராஜ நடராஜன் said...

//அமரிக்கா இந்தியாவை ஒடுக்குகிறதா? நிச்சயமாக இல்லை. இந்தியாவை ஒடுக்குவது இந்திய அரசியல்வியாதிகள் தான். மக்களிடம் ஜாதி, மத, இன உணர்வுகளை தூண்டிவிட்டு ஒற்றுமையை குலைத்து, இந்தியாவை கற்காலத்துக்கு கொண்டு செல்லும் பெருமை அவர்களையே சாரும். அரசியல்தலைவர்கள் பண்ணிய சேதத்தை விட வேறெந்த நாடும் இந்தியாவை சேதப்படுத்தியதில்லை-பாகிஸ்தானையும் சேர்த்து. கோக், பெப்சி போன்ற அமரிக்க தயாரிப்புகளை இந்தியாவுக்குள் வளரவிட்டு அதன் மூலம் காளிமார்க் கூல்ட்ரிங்க்ஸ் போன்ற உள்நாட்டு தயாரிப்புகளை காணாமல் போக வைத்தவர்கள் இந்த அரசியல்வாதிகள்.//

முன்பு கோக் கூட உள்ளே வரவிடாமல் முயற்சி செய்து வெற்றி பெற்ற மாதிரி நினைவு.இருந்தாலும் உலக வியாபாரத்தில் அமெரிக்கா மீண்டும் வெற்றி பெற்று விட்டதெனலாம்.சில வருடங்களுக்கு முன்னால் லேப் டெஸ்ட் ஆதாரத்துடன் இந்த பானங்கள் உடலுக்கு கேடு என்ற பிரச்சாரம் கூட ஓய வைத்து கடை நன்றாகவே திறந்துவிட்டார்கள்.ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு KFC தின்னும் போது மட்டும் பெப்சி வாடை எனக்குத் தெரியும்:)

ராஜ நடராஜன் said...

//வல்லரசு நாடுகள் இருக்கத்தான் செய்யும், அமரிக்கா இல்லாவிட்டால் சீனா, அதுவும் இல்லாவிட்டால் ஏதாவது ஐரோப்பிய ஐக்கிய நாடு. இவர்களைப்பற்றி கவலைப்படுவது வேண்டாத வேலை.//

அப்படியில்லைங்க மேடம்! அல்லது வருண்? மீண்டும் சந்தேகம்:)அமெரிக்காவின் பழைய ரெக்கார்டுகளே எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கவைக்கிறது.ஐரோப்பிய ஐக்கிய நாடுகளைப் பற்றி இப்போதைக்கு கவலைப்படத் தேவையில்லை.அவர்களுக்குள்ளேயே முறுக்கு நிலைகள் அதிகம்.கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டியது பக்கத்துல இருக்குற சீனாவுடன் பொருளாதாரம் மற்றும் வரப்பு தகராறு இரண்டு காரணத்துக்காக.அதற்காக வேண்டியே அமெரிக்க முதலீட்டை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது இந்தியாவின் கரத்தில் உள்ளது.திரும்பவும் பதிவின் தலைப்புக்கு வரவேண்டியிருக்குது அரசியல்வாதிகளை நினைத்தால்.

ராஜ நடராஜன் said...

****Do you know why Petrol in US is called as GASOLINE instead of Petrol ?***

பெட்ரோல் வித்துகிட்டு இத்தனை நாள் இந்த விசயம் தெரியாமலிருந்தேன்.வழிப்போக்கனுக்கு நன்றி.

I will not boast to anybody anymore " I am going to gas station to fill gasoline:)

Kanchana Radhakrishnan said...

அருமையான பதிவு...பாராட்டுகள் கயல்

கயல்விழி said...

நன்றி காஞ்சனா மேடம் :)

Anonymous said...

அரசியல்வாதிகளை குறை சொல்லும் நீங்கள் என்றாவது அரசியலுக்குள் வந்து அதை திருத்த வேண்டும் என்று எண்ணியதுண்டா?

கயல்விழி said...

ஜெகன்

உண்டு, சமூக சேவை பெரிய அளவில் செய்யும் திட்டங்கள் நிச்சயம் உண்டு. எனக்காக மட்டுமே கடைசி வரை வாழ்வதில் எனக்கு சம்மதமில்லை