Tuesday, September 23, 2008

காதல் கல்வெட்டு-12

கயல், ஃப்ரீவேயிலிருந்து கோவில் போகும் ரோடு வந்தவுடன் "எக்ஸிட்" எடுத்து, கோயிலில் உள்ள "பார்க்கிங் லாட்" டில் காரை நிறுத்தினாள்.

“சரி வருண், இந்தக்கதையை சொல்லி முடிங்க, பிறகு கோயிலுக்கு உள்ளே போகலாம். சரி, என்ன சொன்னாள் காயத்ரி, வருண் ?”

”காயத்ரி என்னை நோக்கி வந்ததும், என் இதயம் வேகமாக அடித்தது. என்னை நோக்கி ஒரு புன்னகை புரிந்தாள், ஒரே வினாடிதான் அவள் முகத்தில் அந்தப்புன்னகை இருந்தது, அடுத்தவினாடி அந்தப் புன்னகை அழுகையாக மாறியது, காயத்ரி கண்களில் கண்ணீராக ஓடியது. ஒண்ணுமே சொல்லாமல் அழ ஆரம்பித்து விட்டாள், கயல்”

நான் உடனே "நீங்கள் இப்படி அழுதால், யாராவது பார்த்தால் தப்பாக நினைத்துக்கொள்வார்கள். என்ன விசயம்னு சொல்லுங்கள், ப்ளீஸ்" என்றேன்.

அவள் அழுதுகொண்டே, "வருண்! அவள் உங்களோட பழகுவதால் எனக்கு ஒண்ணுமில்லை!"

"யாருங்க ஜெயந்தியா?" என்று கேட்டேன்.

"ஆமா, அவள் கொஞ்சம் வேற டைப், வருண். உங்களோட எல்லோருடைய முன்னிலையிலும் வலிய வந்து கூச்சமில்லாமல் பேசுகிறாள். என்னால் அப்படி உங்களோட வந்து பழக பேச முடியவில்லை, வருண். நீங்கள் அவளோட சந்தோஷமாக இருங்கள், வருண். அதனால் எனக்கு ஒண்ணுமில்லை" என்றாள் அழுகையுடன்.

"நீங்கள் நினைப்பதுபோல் ஒண்ணும் இல்லைங்க" என்றேன் நான் குற்ற உணர்வுடன்.

"இல்லை, வருண் யாரோடையுமே க்ளோஸா பழகக்கூடாது. இது எனக்கு ஒரு பாடம்" என்றாள் அழுகையுடன் மறுபடியும்.

எனக்கு பயங்கர குற்ற உணர்வு கயல். அவள் அழுகைக்கு நான்தான் காரணம் என்று அவள் சொல்லாமல் சொல்வதுபோல் இருந்தது. ஆனால் எல்லாமே என் கற்பனைதான், கயல். காயத்ரி அழுதுகொண்டே இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போது வெளியில் இருந்து வந்து ஒரு லைப்ரரி ஸ்டாஃப் எங்களை எட்டிப்பார்த்து விட்டுப் போனார். இவர் பார்த்துட்டுப்போயி ஏதாவது கதைகட்டப்போறாருனு எனக்கு பயம் வேற.

அத்துடன் "தேங்க்ஸ், வருண்" என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.

"ஏன் அழுதாள் வருண்?"

"எனக்குத்தெரியவில்லை, கயல். ஆனால் இதுதான் நடந்தது. ஜெயந்தி போய் நான் சொன்னதை அப்படியே அவளிடம் சொல்லி இருக்கிறாள்.இவள் வந்து அழுதுவிட்டுப்போனாள். எனக்கு ஜெயந்தி மேலேயும் என் மேலேயும் கோபம் வந்தது"

"இதையே அவள் சிரித்துக்கொண்டு கேசுவலாக கேட்டுவிட்டு போயிருக்கலாம் இல்லையா, வருண்?”

"ஆமாம், கயல், ஆனால், சில பெண்கள் எதற்கு எடுத்தாலும் அழுவார்கள்"

“சரி அப்புறம் சொல்லுங்க, வருண்”

நான் ஜெயந்தியை அடுத்த முறை சந்திக்கும்போது அவளிடம் கேட்டேன், "ஏன் இப்படி, காயத்ரியிடம் போய் நான் சொன்னதை சொன்னீங்க?" அவங்க வந்து ஒரே அழுகை. என்னால ஒழுங்கா அவங்ககிட்ட பதில் சொல்ல முடியவில்லை ஜெயந்தி"

"காயத்ரி உங்களிடம் வந்து இதைப்பற்றிக் கேட்டாளா?" என்றாள் ஜெயந்தி.

"உங்களுக்கு அவங்க வந்து கேட்டது தெரியவே தெரியாதா, ஜெயந்தி?!!"

"இல்லை வருண், அவள் வந்து கேட்டதும் தெரியாது. அதை என்னிடம் அவள் சொல்லவும் இல்லை" என்றாள்.

"ஜெயந்திக்கு ஒரே ஆச்சர்யம், கயல்"

“அப்புறம், ஜெயந்தியோட என்ன பண்ணுனீங்கனு சொல்லுங்க, வருண்?”

"கயல்! ஒண்ணு சொல்றேன் தெரிந்துகொள் ப்ளீஸ். அந்த சூழ்நிலையில் நான் பேச்சளர்ஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். எதிர்காலம் என்னவென்றே தெரியாது. என் காதலை அடுத்த ஃபேஸ்க்கு எடுத்துப்போகும் சூழ்நிலையில் நான் அப்போது இல்லை! அதனால் நான் எதுவும் ஏடாகூடமாக செய்யவில்லை. ஜெயந்தியும் நானும் பேசிக்கொள்வோம். ஒருசில நேரம் தனிமையில். ஆனால் அவள் விரல்களைக்கூட நான் தொட்டதில்லை. அவள் ரொம்ப அன்பா இருப்பாள்,கயல். அவளோட என்ன பேசினாலும் நல்லா இருக்கும். ஜெயந்தியிடம் ஐ லவ் யு கூட நான் சொன்னதில்லை"

"உங்களுக்கு பெண்கள் “ஐ லவ் யு” சொன்னால்தான் பிடிக்குமோ, வருண்?"

"அது உண்மையில்லை கயல். ஆனால் எனக்கு நெகட்டிவ் பதில் வந்தால் பிடிக்காது. அதனால் அப்படியெல்லாம் சொல்லி காம்ளிக்கேட் பண்ணு வதில்லை!"

வருண், இது “மை பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் வெட்டிங்” படத்தில் இருந்து, “if you love someone you say it, you say it right then, out loud. Otherwise the moment just... Passes you by...”

“நல்லாத்தான் இருக்கு, கயல். ஆனால் நான் அப்படி எதுவும் சொல்லவில்லை. சோஸியல் ப்ரேக் அப் முடிந்து, பரீட்சை எல்லாம் முடிந்து ஊருக்கு போயாச்சு. ஜெயந்தியை அதுக்கப்புறம் பார்க்க முடியவில்லை”

“அதோட அவ்வளவுதானா உங்க ஜெயந்தி?”

இல்லை, இதைக்கேளு, பரீட்சைஎல்லாம் முடிந்து ஒரு 2 வாரம் இருக்கும். ஊரில் வீட்டில் இருக்கும்போது, ஒரு நாள் மதியம், அம்மா வந்து உனக்கு ஒரு கடிதம்னு "ஸ்னைல்மெயில்" ஒண்ணு கொடுத்தாங்க என்னிடம், கயல்”

“லெட்டெர் யாரிடமிருந்து, வருண்?”

”அது ஜெயந்தியிடமிருந்து வந்து இருந்தது, கயல்!”

“என்ன எழுதி இருந்தாள், வருண்?”

-தொடரும்

11 comments:

குடுகுடுப்பை said...

ஒரு குத்துப்பாட்டு போடுங்க, வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கான்னு.

குட்ட பீடி said...
This comment has been removed by the author.
Sundar சுந்தர் said...

அடடா உங்களை போட்டு வாங்கிட்டாங்களா? பாவம் வருண்...நீங்க தெரிவு செய்யறதுக்கு முன்னாடி ஒரு போட்டியாளர் விலகிட்டாரே! அப்புறம் பார்த்தா இன்னொருத்தரும் பை பை யா?
அதெப்படி ரொம்ப அப்..பாவி வே வரிங்க. மேல சொல்லுங்க. (நல்லா எழுதி இருக்கீங்க!)

வருண் said...

***kudu said...
ஒரு குத்துப்பாட்டு போடுங்க, வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கான்னு.

23 September, 2008 7:39 PM***

LOL!

வாங்க, குடு! :)

வருண் said...

***Sundar said...
அடடா உங்களை போட்டு வாங்கிட்டாங்களா? பாவம் வருண்...***

என்ன செய்றது? நீங்க மட்டும் ரொம்ப நல்லவரா? ஏதோ இதற்கு முன் காதிலித்ததே இல்லைங்கிற மாதிரி, நடிக்கிறீங்களே? னு எல்லாரும் சொல்றாங்க! அதான் ... :)

***நீங்க தெரிவு செய்யறதுக்கு முன்னாடி ஒரு போட்டியாளர் விலகிட்டாரே! அப்புறம் பார்த்தா இன்னொருத்தரும் பை பை யா? ***

ஆமாம், "எங்கிருந்தாலும் வாழ்க" னு வாழ்த்தி அனுப்பிவிட்டேன்! :)

***அதெப்படி ரொம்ப அப்..பாவி வே வரிங்க. மேல சொல்லுங்க. (நல்லா எழுதி இருக்கீங்க!)

24 September, 2008 9:37 AM***

நானா? அப்பாவியாகவா தெரிகிறேன்?
உண்மையிலேயே நான் கொஞ்சம் அப்படித்தான் போல :)

உங்கள் காமெண்ட்ஸ் க்கு நன்றி, சுந்தர்! :)

ஜோசப் பால்ராஜ் said...

அய்யா, சிற்பி அய்யா, கல்லு பிரச்சனையா, இல்லை உளி பிரச்சனையா? ஏன் இப்டி இவ்ளோ இடைவெளி ? சீக்கிரம் எழுதுங்க சாமி.

வருண் said...

ஜோசப் பால்ராஜ்!

வாங்க! :)

நேரம் இல்லாமைதான் காரணம். இனிமேல் முடிந்தவரை சீக்கிரம் அடுத்த பகுதி எழுத முயற்சிக்கிறேன் :)

SK said...

அவசரம் அவசரமா எழுதி இருக்கற போல இருக்கு.. நீங்க பொறுமையாவே எழுதுங்க வருண். எங்களுக்காக உங்க எழுத்து வேகத்தை மாத்திக்க வேணாம்.

Sundar சுந்தர் said...

//ஆமாம், "எங்கிருந்தாலும் வாழ்க" னு வாழ்த்தி அனுப்பிவிட்டேன்! :)//

அதான் 'கிட்டாத பழம் புளிக்கும்' என்பதோட ஜென்டில்மேன் வெர்ஷன் போல :) உங்களுக்கு ஆனாலும் ரொம்ப நல்ல மனசு தான். ஒன்னு விட்டாதானே இன்னொன்னு கிடைக்கும்

குடுகுடுப்பை said...

me the 10th

வருண் said...

எஸ் கே:

இல்லை எஸ் கே, நான் ரொம்ப ஆறப்போடக்கூடாதுதான். இனிமேல் கொஞ்சம் வேகமாக எழுதுறேன்.

சுந்தர்:

காயத்ரி இமோஷன்ஸ்க்கு பல அர்த்தங்கள் உண்டு- உண்மையில் இல்லாவிட்டாலும் என் கற்பனையில்.

ஒண்ணுவிட்டால் ஒண்ணுகிடைக்கலாம் இல்லை ரெண்டுமே கிடைக்காமலும் போகலாம். LOL!

குடிகுடுப்பை: நான் 11 :)