சனிக்கிழமை சரியாக 3:47க்கு கயலின் அக்யூரா டி எல், வருண் அப்பார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்றது. வருண், கயலுக்காக, அப்பார்ட்மெண்ட் வாசலிலேயே நின்றிருந்தான். காரை நிறுத்திவிட்டு காரிலிருந்து இறங்கி வெளியில் வந்தாள் கயல், ஒரு சல்வார் காமிஸ் பின்க் கலர்ல அணிந்து இருந்தாள். உதட்டில் சாயம் பூசி இருந்தாள். அந்த சல்வார் காமிஸ் அவள் அணிந்து இருந்ததால் அழகாக இருந்தது. இப்போதுதான் தலைகுளித்து வந்ததுபோல் அவள் அடர்ந்த கூந்தலை லூஸாக விட்டிருந்தாள். வருண், ஒரு டாக்கர்ஸ் பேண்ட்ஸும், ஒரு கேப் டி-ஷர்ட்டும் அணிந்து இருந்தான்.
“என்ன வருண், வீட்டுக்கு வெளியவே நிக்கிறீங்க? உள்ளே வந்துவிடுவேன் என்று பயமா?” என்றாள் சிரித்துக்கொண்டே.
“அது ஓரளவுக்கு உண்மைதான், கயல்”
“எது உண்மை?”
“வீடு ஒரு மெஸ்ஸா இருக்கு. மேலும் உன்னை உள்ளே அழைத்தால் பயம்தான்”
“என்ன பயம் என்னிடம்?”
“ஒரு மாதிரியான பயம். அதை எப்படி உன்னிடம் சொல்வதென்று தெரியலை. சரி, புறப்படுவோமா, கயல்? அவசரமாக உனக்கு பாத்ரூம் எதுவும் போகனும்னா மட்டும் கதவைத் திறக்கிறேன்”
“அதெல்லாம் இல்லை வருண், நாம போகலாம்”
வருண் காரில் அமர்ந்தவுடன், காரை ஸ்டார்ட் பண்ணி கோயிலை நோக்கி காரை ஓட்டிச்சென்றாள், கயல். அது ஒரு 20 நிமிட பயணம். அவளுக்கு பழக்கமான வழிதான்.
கார் ஃப்ரீ வேயில் நுழைந்தவுடன்
“சரி, என்னிடம் என்ன பயம்?”
“உன்னிடம் எல்லாம் பயமில்லை. என் மேல்தான் நம்பிக்கை இல்லை. நீ கனவில் வந்து ரொம்ப தொந்தரவு செய்ற கயல்”
“உங்க கனவில் வந்தேனா, வருண்!!?”
“ஆமாம். ஆக்ட்சுவல்லி, நீ ஒழுங்காத்தான் பிஹேவ் பண்ணின. நாந்தான் அளவுக்கு மீறி நடந்தேன், கனவில்”
“நீங்க கனவில்தான் இப்படியா? நிஜத்தில் பக்கா ஜெண்டில்மேனா?”
“ஆமா, நான் உன்னை என்ன பண்ணினதா நீ கனவு கண்டாய், கயல்?”
“இல்லை வருண், எனக்கு இப்போ எல்லாம் கெட்ட கனவுதான் வந்தது. வீட்டில் வரன் பார்க்கிறேன் என்று நிறைய ஃபோட்டோ அனுப்பி தொந்தரவு செய்றாங்க”
“நான் சொல்றதை கோவிச்சுக்காமல் கேக்குறியா, கயல்?”
“சொல்லுங்க”
“என்னைக்கேட்டால், "டேட்டிங்" பண்ணுவதற்கு "அரேஞ்ஜிட் மேரேஜ்" எவ்வளவோ பெட்டெர்”
“ஏன் அப்படி சொல்றீங்க?”
“ஜென்னி ஒருவனை டேட் பண்ணி, பாய்ஃப்ரெண்ட் ஆக்கி, ஃபியாண்சே ஆக்கினாள். ஒரு 3 வருடம் சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனா இப்போ பிரிஞ்சிட்டாங்க!”
“ஜென்னியை நீங்க இப்படி கைவிடலாமா வருண்?” என்று கயல் குறும்பாக கேட்டு சிரித்தாள்.
வருண் முறைக்க, "இது சும்மா ஜோக் வருண், முறைக்கக்கூடாது சிரிக்கனும். சரி ஏன் பிரிஞ்சாங்க?"
“ஜென்னி பாய்ப்ரெண்டுக்கு வேறொரு பெண் மேல் காதலாம்”
"இப்போ திரும்பவும் சந்தேகம் வருதே" கயல் மீண்டும் டீஸ் பண்ண, இந்த முறை வருணும் கூட சேர்ந்து சிரித்தான்.
“இப்போ எல்லாம் கொஞ்ச நாள்தான் காதல் எல்லாம்,அப்புறம் காணாமல் போயிடுது போல”
“நிறைய நேரம் இதெல்லாம் காதலே இல்லையென்று நினைக்கிறேன், சும்மா உடல்ப்பசிக்காக ஒரு துணை ”
“அரேஞ்ஜிட் மேரேஜ்லயும் அப்படித்தானே, வருண்?”
“ஆமாம், ஆனால், அங்கே இந்த காதல் ட்ராமா எல்லாம் இல்லையே?”
“நீங்க யாரையாவது காதலிச்சு இருக்கீங்களா, வருண்?”
“நிறையப்பேரை காதலிச்சு இருக்கேன், கயல்”
“நிஜம்மாவா?”
“ஆனால் அது காதலா இல்லைனா இன்ஃபேச்சுவேஷனா, இல்லை ஒரு தலைக்காதலானு தெரியல,”
“எனக்கு சொல்லுங்க, வருண். எதுவா இருந்தாலும் பரவாயில்லை”
“சரி சொல்லி உன்னை போர் அடிச்சு கொல்லுறேன்! செக்ஸ்லாம் என் காதல்ல இருக்காது. ரொம்ப புனிதமான காதல் என்னுடயைது ” என்று சிரித்தான் வருண்.
“அப்படியா? சொல்லுங்க உங்க புனிதக்காதலை, ப்ளீஸ்”
அப்போ நான் “கோ-எஜுக்கேஷனில்” பேச்சலர்ஸ் இந்தியாவில் பண்ணிக்கொண்டு இருந்தேன், என் வகுப்பில் ஒரு பெண் இருப்பாள். ரொம்ப புத்திசாலி, மா நிறம், க்ளாஸ் போட்டு இருப்பாள், அழகா, அதே சமயத்தில் செக்ஸியாவும் இருப்பாள். அவளை எனக்கு ரொம்பப்பிடிக்கும். சும்மா கண்களாலேயே பார்த்துக்குவோம். பாட சம்மந்தமாக எப்போவாவது ஒருசில வார்த்தைகள் பேசிக்கொள்வோம், ஆனால் அப்பப்போ என் பார்வை அவள் மேல் விழும். அவளுக்கும் இது நல்லாத்தெரியும். அவள் மேலே எனக்கு ஒரு மாதிரியான இண்ஃபேட்ச்சுவேஷன் இருந்தது. அவளுக்கும் என் பார்வை பிடிக்கும்னு எனக்கு தோணும்.
“அவள் மேலே உங்களுக்கு ஒரு இதுவா, வருண்? அவள் பேர் என்ன?”
“காயத்ரி”
“சரி அப்புறம்?”
“அவள் ரொம்ப கன்சர்வேட்டிவ், கயல். ஓரளவுக்கு நல்லா படிப்பாள். எனக்கும் அவளுக்கும்தான் படிப்பில் போட்டி. ஆனால் அவள் லாங்குவேஜ் மற்றும் ப்ரரோனன்ஷியேஷன் லாம் ஆங்கிலத்தில் நல்லா இருக்கும். ஒரு மாதிரி ரிச் ஃபேமிலியில் இருந்து வந்தவள். பெண்களிடம் கூட அளவாத்தான் பேசுவாள்”
“அதான் கண்கள் லயே பேசிக்குவீங்களா, வருண்?”
“அந்த வயதில் அந்த மாதிரி பேசிக்கொள்வது நல்லாயிருக்கும், கயல். சரி, கதையைக்கேளு! இப்படிப் போய்க்கொண்டு இருக்கும்போது, அவளோட க்ளோஸ் ஃப்ரெண்ட் ஒருத்தி இருப்பாள். எங்க பேட்ச்மேட், ஆனால் வேற க்ளாஸ். அவள் பெயர் ஜெயந்தி. கருப்பாத்தான் இருப்பாள். ஆனால் கவர்ச்சியா இருப்பாள், ரொம்ப அழகான கண்கள் அவளுக்கு. நல்லாவும் படிப்பாள். காயத்ரியும் ஜெயந்தியும் ரொம்ப ரொம்ப க்ளோஸ். தோழிகளின் நெருக்கம் பார்த்து, கூட படிப்பவர்களே பொறாமைப்படுவார்கள். திடீர்னு புதுப்பழக்கமாக ஜெயந்தி அடிக்கடி என்னோட வந்து ஏதாவது பேச ஆரம்பித்தாள். ஒரு மாதிரி உரிமையோட அன்பா பேசுவாள்.
“உரிமையோடனா?”
“ எப்படி சொல்றதுனு தெரியலை. ரொம்ப அன்பா பேசுவாள். ஒரு சம்பவம் சொல்றேன் கேளு. ஒரு நாள், என்னிடம் வந்து, “வருண், எனக்கு அவசரமாக ஒரு 500 ரூபாய் வேணும். தர்றீங்களா, ப்ளீஸ்?” என்றாள்.
“இப்போ என்னிடம் இல்லையே, ஜெயந்தி. ஈவெனிங் கொடுத்தால் போதுமா?” என்றேன்.
“வீட்டில் கேட்டு இருக்கிறேன், வருண். அடுத்த வாரம்தான் அனுப்புவாங்க. அடுத்தவாரம் கட்டாயம் திருப்பி தந்துவிடுவேன்” என்றாள்.
நான் லன்ச் ப்ரேக்ல போய் பணம் எடுத்து வந்து கொடுத்தேன். ஒரு வாரம் சென்று திருப்பிக்கொடுத்தாள்.
நான், "வேணாம், ஜெயந்தி" நு சொன்னேன். உடனே “இது உங்க பேரெண்ட்ஸ் சம்பாதித்த பணம், வருண். உங்க பணம்னா திருப்பி தரமாட்டேன். நிச்சயம் நீங்க சம்பாதித்ததென்றால், வாங்கிக்குவேன்” என்றாள்.
அதுக்கப்புறம் ரொம்ப உரிமையோடு பேசுவாள், பழகுவாள், எனக்கும் அவளை பிடிக்க ஆரம்பித்தது. ரொம்ப லவ்வபிளா இருப்பாள் கயல். ஜெய்ந்தி என்னோடு வலிய வந்துப் பழகப்பழக, காயத்ரிக்கும் ஜெயந்திக்கும் பயங்கர மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆனது. ரெண்டு பேரும் பேசிக்கொள்வதே குறைந்தது.
“ஜெலஸி? இல்லைனா தற்செயலா கூட இருக்கலாம் இல்லையா வருண்?”
“எனக்கு தெரியாது, கயல். ஒரு நாள் ஜெயந்தியிடம் கேட்டேன். “என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்?. நீங்களும் காயத்ரியும் பேசிக்கொள்வதில்லையா?” என்று.
“தெரியலை வருண். என்னனு தெரியலை, ரெண்டு பேருக்கும் பயங்கர மிஸ் அண்டர்ஸ்டேண்டிங். எங்களுக்கே காரணம் தெரியல” என்றாள் ஜெயந்தி.
நான் ஒரு தவறு செய்தேன் இங்கே. “நீங்க என்னோட பழகுவது ஒருவேளை காயத்ரிக்கு பிடிக்கலையா, ஜெயந்தி?” என்று கேட்டேன். எனக்கென்னவோ அப்படி தோன்றியது, கயல். ஆனால் நான் அப்படி கேட்டது தப்பு.
“அதெல்லாம் இருக்காது வருண். காயத்ரி அப்படி டைப் கிடையாது” என்று அடித்துச் சொன்னாள் ஜெயந்தி. நானும் என் தியரியை மூடி வைத்து விட்டேன்.
“அவ்வளவுதானா? அப்புறம் என்ன ஆச்சு?” கயல் கண்களில் ஆர்வம் மின்ன கார் ஓட்டுவதையும் மறந்து வருணைப்பார்த்து கேட்டாள். பக்கத்தில் ஒரு கார் ஹாங்க் பண்ணியது.
"பார்த்து ஓட்டு கயல், கதை கேட்க்கறதுனா உனக்கு ரொம்ப பிடிக்குமோ?" இப்போது வருணுக்கு கயலை டீஸ் பண்ண ஒரு காரணம் கிடைத்தது.
"அதெல்லாம் இருக்கட்டும், நீங்க முதல்ல கதையை சொல்லுங்க"
"ஜெயந்தியுடன் அந்த உரையாடலுக்குப்பிறகு அந்த நிகழ்ச்சியை மறந்துவிட்டேன். அன்று, சனிக்கிழமை, டிப்பார்ட்மெண்ட் லைப்ரரியில் இருந்தேன். வேறு யாரும் இல்லை. முதலில் காயத்ரி உள்ளே வந்தாள், ஏதோ புக் ரிட்டேர்ன் பண்ணிவிட்டு வெளியில் போனாள். மறுபடியும் உள்ளே வந்தாள், என்னை நோக்கி, இந்த முறை.
14 comments:
அட்ரா அட்ரா நாக்க முக்க.
*** குடுகுடுப்பை said...
அட்ரா அட்ரா நாக்க முக்க.***
இதுக்கு என்னங்க அர்த்தம், குடு குடுப்பை??? LOL!!!
// குடுகுடுப்பை said...
அட்ரா அட்ரா நாக்க முக்க.
//
ரிப்பீட்டு
//இதுக்கு என்னங்க அர்த்தம், குடு குடுப்பை??? LOL!!!
//
உடுக்கைய மார்டனா அடிக்கிறாருன்னு அர்த்தம் :))
****புதுகை.அப்துல்லா said...
உடுக்கைய மார்டனா அடிக்கிறாருன்னு அர்த்தம் :))***
வாங்க புதுக்கோட்டை அப்துல்லா! :)
உடுக்கை அடித்தால் நல்ல காலம் பொறக்கப்போகுதுனு அர்த்தமா?
எல்லாரும் இந்த மெகா சீரியல் பாத்து ரொம்ப கேட்டு போய்டீங்க. கடைசில முடிக்கும் போது ஒரு எதிர்பார்போட முடிச்சிட்டு, அடுத்த பகுதி கொடுக்க நாலு வாரம் .. அதுக்குள்ள எங்களுக்கு போன பகுதி மறந்து போய்டும். :(
வருண் தெய்வமே, அடுத்த பகுதி சீகரம் எழுதுங்க.
காயத்ரி அண்ட் ஜெயந்தி, இந்த பொண்ணுங்களே இப்படி தான். மலரும் நினைவுகள் என்ன சொல்லிக்கிட்டேன்.
வாங்க எஸ் கே!
:)
****SK said...
எல்லாரும் இந்த மெகா சீரியல் பாத்து ரொம்ப கேட்டு போய்டீங்க. கடைசில முடிக்கும் போது ஒரு எதிர்பார்போட முடிச்சிட்டு, அடுத்த பகுதி கொடுக்க நாலு வாரம் .. அதுக்குள்ள எங்களுக்கு போன பகுதி மறந்து போய்டும். :( ****
LOL!!
***வருண் தெய்வமே, அடுத்த பகுதி சீகரம் எழுதுங்க.
காயத்ரி அண்ட் ஜெயந்தி, இந்த பொண்ணுங்களே இப்படி தான். மலரும் நினைவுகள் என்ன சொல்லிக்கிட்டேன்.
19 September, 2008 1:15 AM***
உங்களுக்காக அடுத்த பகுதியை கொஞ்சம் சீக்கிரம் எழுதுறேன்! :-)
ஜென்னி பற்றி எப்போ கேட்டாலும் சிரிப்பும், முறைப்பும் வருதே தவிர நியூஸ் மட்டும் வருவதே இல்லை :) :)
கயல்:
அதென்ன "வைட்" பொண்ணுங்கனா மட்டும் ரொம்ப கவனமா இருக்க நீ?
ஜென்னி ரொம்ப நல்ல பொண்ணு, கயல். அதுக்காக அவள் எனக்கு தங்கை மாதிரி என்றெல்லாம் சொல்ல மாட்டேன். நல்ல தோழி :)
நீங்க ரொம்ப லக்கி பையன் வருண். நான் எல்லாம் co-ed ல படிச்சதே கிடையாது. பாருங்க பிற்காலத்துல பதிவு எழுத எவ்வளவு வசதியா இருக்கு !
***அவனும் அவளும் said...
நீங்க ரொம்ப லக்கி பையன் வருண். நான் எல்லாம் co-ed ல படிச்சதே கிடையாது. பாருங்க பிற்காலத்துல பதிவு எழுத எவ்வளவு வசதியா இருக்கு !***
நான் அதிர்ஷ்டசாலியா என்னனு தெரியலை, அவனும் அவளும். :-)
ஆனால் 6-12 தவிர எல்லாமே கோ-எடுக்கேஷந்தான்!
ஆமாம், அனுபவம் நிச்சயம் உதவும். ஆனால் உங்களுக்கு கிடைத்த அனுபவம் எனக்கு கிடைக்கவில்லை இல்லையா? அதனால், அனுபவம்னுகூட்டிக்கழித்துப் பார்த்தால் எல்லாம் ஒரே மாதிரிதான் வரும்.
உங்கள் காமெண்ட் க்கு நன்றி! :)
அடுத்த பகுதி எப்போது தலை ??
kayal said :
/// ஜென்னி பற்றி எப்போ கேட்டாலும் சிரிப்பும், முறைப்பும் வருதே தவிர நியூஸ் மட்டும் வருவதே இல்லை :) :) ///
:-) :-) :-) :-)
சாரி எஸ் கே,
ஏதாவது உடனே எழுதி இன்னும் 2 நாட்களுக்குள் பதிவு செய்றேன் :)
//அந்த சல்வார் காமிஸ் அவள் அணிந்து இருந்ததால் அழகாக இருந்தது. //
சரி தான்! இல்லேன்னா நீங்க அந்த சல்வாரை திரும்பி கூட பார்த்திருக்க மாட்டீர்கள்.
(#12 படித்த பிறகு தான் இந்த பார்ட் மிஸ் பண்ணது தெரிஞ்சது. நல்லா விவரிச்சிருக்கீங்க!
**** Sundar said...
//அந்த சல்வார் காமிஸ் அவள் அணிந்து இருந்ததால் அழகாக இருந்தது. //
சரி தான்! இல்லேன்னா நீங்க அந்த சல்வாரை திரும்பி கூட பார்த்திருக்க மாட்டீர்கள்.
(#12 படித்த பிறகு தான் இந்த பார்ட் மிஸ் பண்ணது தெரிஞ்சது. நல்லா விவரிச்சிருக்கீங்க!
24 September, 2008 9:28 AM ***
என் கதையைவிட உங்க விமர்சனம் நல்லா இருக்கு சுந்தர். இந்த மாதிரி விமர்சனம் எழுதினால், நான் அப்புறம் கதை எழுதுவதை நிறுத்தவே மாட்டேன். கவனம்! விளைவுகள் பயங்கரமாக இருக்கும்! LOL!
ரொம்ப அழகா "quote" பண்ணி, அர்த்தமாக பாராட்டுறீங்க, நீங்கள்!
நன்றி, சுந்தர் :)
Post a Comment