Tuesday, September 9, 2008
21: என்னுடைய பார்வையில்
பாவங்களின் நகரமாக கருதப்படும் லாஸ் வேகஸை சுற்றிப்பார்க்க ஆசை இருப்பவர்கள் இந்த படத்தை பார்க்கலாம், லாஸ் வேகஸை இன்ச் இன்சாக கேமராவில் ரசித்திருக்கிறார்கள். எனக்கெல்லாம் 2 மணி நேரம் சென்றாலே போர் அடிக்கும் லாஸ் வேகஸில் இத்தனை விஷயம் இருக்கிறதா என்று வியப்படைய வைத்த படம் 21.
கதை ப்ளாட் ரொம்ப சிம்பிள், கதாநாயகன் பென் கேம்பெல்(ஜிம் ஸ்டர்கெஸ்) ஒரு ஜீனியஸ் எம்.ஐ.டி மாணவர். இவருக்கு ஹாவர்ட் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கிறது. இவருக்கும், ஹாவர்டுக்கும் இடையே தடையாக இருப்பது ஒன்றே ஒன்று தான்: பணம்! அறை, படிப்பு, சாப்பாடு எல்லாவற்றுக்கும் 300,000 டாலர்கள் தேவைப்படுகிறது. பென்னுக்கு அப்பா இல்லை, ஏழை அம்மா மட்டுமே. பணத்தை எப்படி தேடுவது என்ற கவலையில் இருக்கும் ஹீரோவுக்கு எம்.ஐ.டி பேராசிரியர் மிக்கி ரோசா மூலமாக ஒரு தீர்வு கிடைக்கிறது, ப்ளாக் ஜாக்!
ப்ளாக் ஜேக் என்பது உலகின் ரொம்ப பாப்புலரான சீட்டு விளையாட்டு, நினைவாற்றலை அடிப்படையாக வைத்து விளையாடப்படுகிறது. லாஸ் வேகஸில் அதிக சூதாட்டக்கிளப்புகளில் விளையாடப்படுவது. நான் ஒரு முறை கூட விளையாடியது இல்லை(நம்புங்க, நிஜமா தான்). ஆனால், "Winner! winner! chicken dinner" என்ற கோஷத்துடன் சிகரெட் புகைய நிறைய பேர் விளையாட பார்த்திருக்கிறேன். எனக்கு "Wheel of fortune" மற்றும் ஸ்லாட் மெஷின்கள் விளையாடத்தான் பிடிக்கும், அதுவும் கொஞ்ச நேரம்(உண்மையை சொல்லிட்டேன் பார்த்தீங்களா?). சரி நம்ம கதையை விட்டு சினிமா கதைக்கு வருவோம், ப்ளாக் ஜாக் விளையாடி நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற பேராசிரியரின் குறுக்கு வழி யோசனையை முதலில் மறுக்கும் பென், பிறகு தன்னுடைய நெடுநாள் 'க்ரஷ்' ஆன ஜில் டெயிலர்(கேட் போஸ்வொர்த்) வற்புறுத்தியதும் ஒப்புக்கொள்ளுகிறார்.
பிறகு லாஸ் வேகஸைப்பற்றிய அற்புதமான காட்சிகள் விரிகிறது. கேமராவை கதாநாயகன் பார்வையில் இருந்து எடுத்திருப்பதால் எங்கே பார்த்தாலும் அழகான பெண்கள்,பெண்கள், பெண்கள்! சலிப்பு(பொறாமை) தட்டுகிறது. ஆண்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும். கதாநாயகனுக்கு அந்த பெண்களை எல்லாம் விட்டு ஏன் சுமாராக இருக்கும் ஜில்லை பிடிக்கிறது என்ற லாஜிகல் கேள்வியை எல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது, அது அப்படித்தான். பிறகு என்ன ஆகிறது? கதாநாயகனுக்கு தேவையான பணம் கிடைக்கிறதா என்பதெல்லாம் மீதி கதை.
படத்தில் நான் ரசித்த காட்சிகள் நிறைய இருக்கிறது, குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் கதாநாயகன் - நாயகி காதல் காட்சியின் போது பேக்கிரவுண்டில் துள்ளி குதிக்கும் பெலாஜியோ செயற்கை இசை நீரூற்று(லாஸ் வேகஸ் செல்பவர்கள் இந்த காட்சியை காணத்தவறாதீர்கள்) மற்றும் சூதாட்ட டேபிளில் கதாநாயகன் முதல் முறையாக லேசான தடுமாற்றத்துடன் ப்ளாக் ஜாக் விளையாட ஆரம்பிக்கும் காட்சி. கதாநாயகனுக்காகவே இந்த படம் பார்க்கலாம். டாம் க்ரூஸ் 10 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தாரோ, அப்படியே பார்க்க லட்சணமாக இருக்கிறார்.
படத்தில் நிறைய லாஜிகல் ஓட்டைகள் இருக்கிறது, இவ்வளவு படித்த, அறிவான கதாநாயகன், சம்பாதிக்கும் பணத்தை கூரையில்லா மறைத்துவைக்கவேண்டும்? வேறு இடமா கிடைக்கவில்லை? சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது! படத்தின் கடைசி 30 நிமிடம் சலிப்பு தட்டுகிறது. சினிமாத்தனமாக இருக்கவேண்டும், சராசரி ரசிகர்களையும் கவர வேண்டும் என்ற ஆதங்கத்தில் 'லீகலி ப்ளாண்ட்' போன்ற வெற்றிப்பட இயக்குனரான ராபர்ட் லுகேட்டிக் கதையை லாஜிக் இல்லாமல் அவசர அவசரமாக நகர்த்துகிறார். லீகலி ப்ளாண்டில் இருந்த நிதானம் காணாமல் போயிருக்கிறது! க்ளைமேக்ஸில் அதிக கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் வெற்றிப்படமாக அமைந்திருக்கும். மேலும் சாதாரண மக்களுக்கு உதவும் ப்ளாக் ஜாக் டிப்ஸ் ஏதும் இந்த படத்தில் கிடையாது, உபயோகிக்கப்படும் கை சிக்னல்களும் "இதோ பார், நான் ஏதோ திருட்டுத்தனம் பண்ணுகிறேன்" என்று காட்டிக்கொடுக்கும் விதமாக இருக்கிறது. மேலும் ப்ளாக் ஜாக் டீலர்களை படத்தில் ஏமாற்றுவது போல நிஜத்தில் ஏமாற்றுவது கடினம். டீலர்களே பொதுவாக நல்ல கவுண்டர்களாக இருப்பார்கள், கார்ட் எண்ணுபவர்களை சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள். அதையும் இயக்குனர் சற்று கவனித்திருக்கலாம்.
மொத்தத்தில் 21 படத்தை ஒரு முறையாவது பார்க்கலாம், கணித அல்லது பொறியியல் துறையை சேர்ந்த நம்மைப்போன்றவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். லாஸ் வேகஸில் பளபளப்பையும், அதனுடைய இருண்ட மறுப்பக்கத்தையும் பார்க்க விரும்புபவர்களும் இந்த படம் பார்க்கலாம்.
Labels:
விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
ரொம்ப நாளு ஆளையே காணோம், இப்ப ஒரு பட விமர்சனத்தோட வந்துருக்கீங்க. விமர்சனம் நல்லா இருந்துச்சு. வாழ்த்துக்கள்.
அது சரி வந்துட்டே இருக்காருங்க. அவர் விமர்சணம் பண்ணப்புறம் பார்ப்போம்
தமிழ்ல மொழி பெயர்த்து வருமா!
இல்லை அந்த அளவுக்கு சரக்கு இல்லையா
***அழகான பெண்கள்,பெண்கள், பெண்கள்! சலிப்பு(பொறாமை) தட்டுகிறது.
ஆண்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும். ***
LOL!
பொதுவாக ஆண்கள் என்றாலே இப்படி அலைபவர்கள் என்கிறாயா, கயல்? LOL!
வருண் said...
***அழகான பெண்கள்,பெண்கள், பெண்கள்! சலிப்பு(பொறாமை) தட்டுகிறது.
ஆண்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும். ***
LOL!
பொதுவாக ஆண்கள் என்றாலே இப்படி அலைபவர்கள் என்கிறாயா, கயல்? LOL!
//
உங்கள மனசுல வச்சு சொன்னாங்களோ என்னவோ? :))))))))))))
***புதுகை.அப்துல்லா said...
உங்கள மனசுல வச்சு சொன்னாங்களோ என்னவோ? :)))))))))))) ***
இருந்தாலும் இருக்கும்!!! :) :) ;-?
இது உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட ஒரு மிக சராசரியான படம். லாஸ் வேகஸ் பற்றி இதை விட கம்மியாக எடுத்து இருக்க முடியாது. எங்கே இன்ச் இன்சாக காண்பித்தார்கள்?
// "Winner! winner! chicken dinner" என்ற கோஷத்துடன் சிகரெட் புகைய நிறைய பேர் விளையாட பார்த்திருக்கிறேன். //
நிஜமாகவா?! இதை யாராவது வேகசில் சொன்னால் அந்த மனிதனை புழு போல பார்ப்பார்கள். It is actually a term to insult a lucky win.
//பெலாஜியோ செயற்கை இசை நீறூற்று//
இது சரியான காமெடி. அப்படி ஒன்றும் அமர்களம் கிடையாது. இது ஓசி, அதனால் நம் கூட்டம் patel photo எடுக்க கால் கடுக்க நிற்கும்! லாஸ் வேகாசில் அடுத்த முறை செல்லும் போது cirque du soleil பார்க்கவும், லாஸ் வேகாசில் உள்ளதிலேயே அதுதான் best!
லாஸ் வேகெஸ் bore என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது.
//ரொம்ப நாளு ஆளையே காணோம், இப்ப ஒரு பட விமர்சனத்தோட வந்துருக்கீங்க. விமர்சனம் நல்லா இருந்துச்சு. வாழ்த்துக்கள்.
//
நன்றி ஜோசப். கொஞ்ச காலம் பிசியாக இருந்தேன், திரும்பவும் வந்தாச்சு. :)
//அது சரி வந்துட்டே இருக்காருங்க. அவர் விமர்சணம் பண்ணப்புறம் பார்ப்போம்//
வாங்க குடுகுடுப்பை. என்னுடைய எல்லா விமர்சனத்துக்கும் அது சரி பதில் விமர்சனம் எழுதுவாரா என்ன?
//தமிழ்ல மொழி பெயர்த்து வருமா!
இல்லை அந்த அளவுக்கு சரக்கு இல்லையா//
வாங்க வால்பையன்.
தமிழில் வர வாய்ப்பு குறைவு. இந்த படம் முக்கியமாக படித்த ரசிகர்களையே கவரும்.
//பொதுவாக ஆண்கள் என்றாலே இப்படி அலைபவர்கள் என்கிறாயா, கயல்? LOL!
//
அப்படி யார் சொன்னது? நாங்க அப்படி எல்லாம் உண்மையை போட்டு உடைக்கமாட்டோம் :)
//உங்கள மனசுல வச்சு சொன்னாங்களோ என்னவோ? :))))))))))))
//
பொது இடத்தில் இத்தனை நேர்மையா எழுதக்கூடாது அப்துல்லா :) :)
//இது உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட ஒரு மிக சராசரியான படம். லாஸ் வேகஸ் பற்றி இதை விட கம்மியாக எடுத்து இருக்க முடியாது. எங்கே இன்ச் இன்சாக காண்பித்தார்கள்?
//
என்னங்க இது? ப்ளேனில் வந்து இறங்கும் போதே பிரகாசமான லாஸ்வேகஸ் மொத்த வியூவையும் காட்டுகிறார்கள், பிறகு தொடர்ந்து பெரிய கஸினோக்களை காட்டிக்கொண்டே இருந்தார்களே??
//நிஜமாகவா?! இதை யாராவது வேகசில் சொன்னால் அந்த மனிதனை புழு போல பார்ப்பார்கள். It is actually a term to insult a lucky win.
//
நிவேடா லாஸ்வேகஸை பற்றி தானே எழுதுகிறீர்கள்? விளையாடுபவர்கள் பலர் இந்த வாசகத்தை உபயோகித்து நான் கேட்டிருக்கிறேன், நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்கலாம்.
//இது சரியான காமெடி. அப்படி ஒன்றும் அமர்களம் கிடையாது. இது ஓசி, அதனால் நம் கூட்டம் patel photo எடுக்க கால் கடுக்க நிற்கும்! //
எது காமெடி? பெலாஜியோ நீரூற்று எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு சலிக்காது, நான் ரசித்த காட்சியைத்தானே எழுத முடியும்? உங்களுக்கு காமெடியாக தெரிந்தால் மன்னிக்கவும்.
//cirque du soleil //
அற்புதமான ஷோ அது, ஆனால் அது போல பல அற்புதமான ஷோக்கள் இருக்கிறது, தேர்ந்தெடுத்து செல்ல வேண்டும். அடிக்கடி சென்று பார்த்ததால் எனக்கு சலித்துவிட்டது.
மொதல்ல, என்னங்க ரொம்ப நாளா பேட்ட பக்கம் ஆளையே காணோம்? ஹாலிடேவா இல்ல உடம்பு சரியில்லையா? ஒரு வேளை, நிஜமாவே வேலை பாக்க ஆரம்பிச்சிட்டீங்களா? :0)
21க்கு இப்ப விமர்சனமா? "பார்வதிய எரிச்சிட்டு சிவனா சிவாஜி போட்ற குத்தாட்டம் சூப்பர்" "எம்ஜியாரு கெணத்துக்குள்ள புலியோட சண்ட போட்ற எடம் தூள்" இப்பிடி திருவிளையாடலுக்கும், குலேப காவலிக்கும் அடுத்து விமர்சனம் போடப்போறீங்க, அப்புறம் அதுவே ஒரு ட்ரெண்ட் ஆகி, "எங்கள் வீட்டு பிள்ளை", "மந்திரி குமாரி", "வஞ்சிக்கோட்டை வாலிபன்" அப்பிடின்னு தொடர்ந்து வரப்போவுது. ஸ்ஸ்ஸ் யப்ப்பா.... நெனச்சாலே கண்ண கட்டுதே...
எல்லாப்பேரும் மறந்த பெறவு தான் விமர்சனம் போட்றதுன்னு பொதுக்குழுவ கூட்டி (வேற யாரு, நீங்களும், வருண் அண்ணனும் தான்) கொள்கை முடிவே எடுத்திட்டீங்க போல! நல்ல கொள்கை பிடிப்போட இருக்கீங்க, நல்லாருங்க :0)
//
எனக்கெல்லாம் 2 மணி நேரம் சென்றாலே போர் அடிக்கும் லாஸ் வேகஸில் இத்தனை விஷயம் இருக்கிறதா என்று வியப்படைய வைத்த படம் 21.
//
ரெண்டு மணி நேரம் இந்த படத்த உக்காந்து பாக்குறதே பெரிசு. இதுல அவய்ங்க லாஸ் வேகஸ காட்டுனா என்ன லாலாப்பேட்டைய காட்டுனா என்ன?
//
கதை ப்ளாட் ரொம்ப சிம்பிள்//
அது கதை ப்ளாட் இல்லீங்க. கதையே ரொம்ப ஃப்ளாட்.
//
ப்ளாக் ஜேக் என்பது உலகின் ரொம்ப பாப்புலரான சீட்டு விளையாட்டு, நினைவாற்றலை அடிப்படையாக வைத்து விளையாடப்படுகிறது. லாஸ் வேகஸில் அதிக சூதாட்டக்கிளப்புகளில் விளையாடப்படுவது. நான் ஒரு முறை கூட விளையாடியது இல்லை(நம்புங்க, நிஜமா தான்).
//
நம்பிட்டோம். அது தான் காரணத்த முந்தின வரியிலேய தெளிவா சொல்லிருக்கீங்களே!
//
கதாநாயகனுக்கு அந்த பெண்களை எல்லாம் விட்டு ஏன் சுமாராக இருக்கும் ஜில்லை பிடிக்கிறது என்ற லாஜிகல் கேள்வியை எல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது, அது அப்படித்தான்.
//
ஏதோ பொகையுதே..சீச்சீ, உங்கள சொல்லலீங்க. இங்க, சிகரெட்ட அணைக்காம விட்டுட்டேன்... அதான்.
//
படத்தில் நான் ரசித்த காட்சிகள் நிறைய இருக்கிறது, குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் கதாநாயகன் - நாயகி காதல் காட்சியின் போது பேக்கிரவுண்டில் துள்ளி குதிக்கும் பெலாஜியோ செயற்கை இசை நீரூற்று(லாஸ் வேகஸ் செல்பவர்கள் இந்த காட்சியை காணத்தவறாதீர்கள்)
//
படம் பாக்கிறதுக்கு முந்தியே நான் நிறைய "நீர் ஊற்றி" இருந்ததுனால, இந்த நீருற்ற நான் கவனிக்கல. அதுவில்லாம, காதல் காட்சில போயி நீருற்றையா கவனிப்பாங்க? நாங்கள்லாம் ஒரு முடிவோட தான் படம் பாக்கிறது!
//
கதாநாயகனுக்காகவே இந்த படம் பார்க்கலாம். டாம் க்ரூஸ் 10 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தாரோ, அப்படியே பார்க்க லட்சணமாக இருக்கிறார்
//
அப்பிடியா?? மொக்கையா, நம்ம மைதா மாவு அப்பாஸ் மாதிரி இருக்கான். இவனால தான் இந்த படமே டப்பா ஆச்சி. (அழுக்காறு, அவா வெகுளி... யோவ் யாருய்யா அது இங்க நின்னு திருக்குறள் சொல்றது அப்பிடி ஓரமா போயி சொல்லுய்யா...)
//
இவ்வளவு படித்த, அறிவான கதாநாயகன், சம்பாதிக்கும் பணத்தை கூரையில்லா மறைத்துவைக்கவேண்டும்? வேறு இடமா கிடைக்கவில்லை? சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது
//
வேற எங்க வெக்கிறதுன்னு சொன்னியள்னா புண்ணியமா போகும். இந்த அய்யாரெஸ்ஸு, அய்யாரெஸ்ஸுன்னு ஒண்ணு கேள்விபட்ருக்கியளா? இங்கிலிபீசு புரியாததுனால, நாங்கூட ரொம்ப நாளு அய்யனாரு மெஸ்ஸுன்னு நெனச்சிக்கிட்டிரு ந்தேன். அப்புறம் அவய்ங்க நமக்கே ஆப்படிச்சததும் தான் தெரிஞ்சிது!
//
'லீகலி ப்ளாண்ட்' போன்ற வெற்றிப்பட இயக்குனரான ராபர்ட் லுகேட்டிக் கதையை லாஜிக் இல்லாமல் அவசர அவசரமாக நகர்த்துகிறார்
//
இது எனக்கு தெரில. நமக்கு ப்ளாண்ட் அவ்வளவா பிடிக்காது. லீகலுக்கு நம்மள கொஞ்சங்கூட புடிக்காது. அதனால, நான் பாக்கல. Illegally Brunette அப்பிடின்னு யாருனா படம் எடுத்தா பாக்கலாம்...
//
கணித அல்லது பொறியியல் துறையை சேர்ந்த நம்மைப்போன்றவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.//
ஆஹா, இத முன்னாடியே சொல்லக்கூடாது? நமக்கு கணக்கும், பொறியலும் கொஞ்சம் கூட தெரியாதே. ஒரு எட்டு பவுண்ட மிச்சம் பண்ணிருக்கலாம். கெடுத்தீங்க!
//
லாஸ் வேகஸில் பளபளப்பையும், அதனுடைய இருண்ட மறுப்பக்கத்தையும் பார்க்க விரும்புபவர்களும் இந்த படம் பார்க்கலாம்.
//
அப்பிடியா சொல்றீங்க? நம்ப தல Robert De Niro , தளபதி Joe Pesci நடிச்ச Casino பாத்திட்டீங்களா?? இருண்ட பக்கம்னா என்னன்னு அதுல காட்டுவாய்ங்க. 21லாம் சும்மா ஜிகினா. அப்பிடின்னு எனக்கு தோணுது.
இவ்ளோ சொன்னீங்க, கடைசில, "எங் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறியே கண்ணு" ரேஞ்சுல நடிச்ச Matrix மன்னன் Fishburne பத்தி ஒன்னுமே சொல்லாம இருட்டடிப்பு செஞ்சிட்டீங்களே. உங்க கிட்ட நீதி கேட்டு ஊர்வலம் நடத்தனும் போலிருக்கே!
கடைசியா நீ என்னதான்டே சொல்ல வர்றன்னு கேக்கிறீங்களா? ம்ம்ம், என்னத்த சொல்றது? அந்த போஸ்வொர்த் பொண்ணுக்காக இருவது நிமிசம், எங்க அண்ணம் மீன் எரிச்சவருக்காக (அதாங்க Fishburne) ஒரு பத்து நிமிசம், ஆலிவுட்டு ரகுவரன் Kevin Spacey க்காக ஒரு பத்து நிமிஷம் பாக்கலாம். தவிர, நாம நியூ யார்க, வாஷிங்டன் மட்டும் தான் வந்திருக்கிறதுனால, அவய்ங்க காட்றது லாஸ் வேகசான்னு ஒரு டவுட்டு
அப்ப மீதி?
பார்க்கலாம். பக்கத்துல பார் இருந்தா.
நான் அங்க தான் இருந்தேன்!
(பி.கு. ஏண்டா ஒனக்கெல்லாம் சுருக்கமா பின்னூட்டம் போடத் தெரியாதான்னு தான நெனக்கிறீங்க? கொஞ்சம் பொறுத்துக்கங்க. எங்க மங்களூர் சிவா அண்ணன் கல்யாணம் முடிஞ்சி வந்ததும் "சுருக்கமாக பின்னூட்டம் இடுதல் எப்படி"ன்னு கிளாஸ் எடுக்கிறேன்னு சொல்லீருக்காரு. அது வரை இப்பிடி தான்)
//
கயல்விழி said...
//அது சரி வந்துட்டே இருக்காருங்க. அவர் விமர்சணம் பண்ணப்புறம் பார்ப்போம்//
வாங்க குடுகுடுப்பை. என்னுடைய எல்லா விமர்சனத்துக்கும் அது சரி பதில் விமர்சனம் எழுதுவாரா என்ன?
//
நான் இதையும் படிச்சிட்டேன் :0) குடுகுடுப்பைக்காரரு ரொம்ப நல்லவரு. நம்ம லட்சணத்த்த பத்தி எல்லாருக்கும் சொல்லீட்டாரு!
//
வாங்க குடுகுடுப்பை. என்னுடைய எல்லா விமர்சனத்துக்கும் அது சரி பதில் விமர்சனம் எழுதுவாரா என்ன?
//
இப்பிடியெல்லாம் சொல்லிட்டா, நாங்க ரொம்ப "டீஜென்டா" விமர்சனம் எளுத மாட்டோம்னு நெனச்சீங்களா? நமக்கு "டீஜென்ட்"டு எல்லாம கெடையாதுங்க.
அதுல பாருங்க, உங்க ஊரு Dow Jones சும், Lehman Brothers சும் அடிச்ச கும்மில இங்க லண்டன்ல பாதிபேருக்கு டவுசர் கிளிஞ்சிருச்சி. அந்த கிளிஞ்ச டவுசர் கோஸ்டில நம்ப டவுசரும் ஒண்ணு. ஏற்கனவே Bear Stearns அப்பிடின்னு ஒரு கரடி பாதி டவுசரை கிளிச்சிருச்சி, இப்ப மீதி!
அடடா, டாஷ் டாஷ் டாஷ் ( நம்ம பேரு), இப்பிடி டவுசரு கிளிஞ்சி போனத எவனாவது பாத்துற போறாண்டா... அப்பிடின்னுட்டு சுத்தி பாத்தா, பல பேரு டவுசரே இல்லாம போய்கிட்டு இருக்காய்ங்க.
இப்பிடி, "அசந்தா அடிக்கிறது உங்க பாலிஸி, அசராம அடிக்கிறது இந்த பாபா பாலிஸி"ன்னு நீங்க அமெரிக்கா காராய்ங்கள்லாம் அசராம அடிச்சதுல நம்பள்ட்ட இருந்த நெறைய டவுசரு கிளிஞ்சி போச்சா, அத நைட்டு பகலா தைக்க வேண்டியதா போச்சி! அதான் பின்னூட்டம் இம்புட்டு லேட்டு!
(இப்ப சீரியசா... நான் சும்மா ஜாலிக்காக தாங்க எழுதறேன். நெஜமாவே, உங்க பதிவுக்கு எதிர்பதிவு எழுதணும், இல்ல விமர்சனம் செய்யணும்னு வேணும்னே செய்யறது இல்ல. தப்பா எடுத்துக்காதீங்க. தப்புன்னா சொல்லுங்க, திருத்திக்கிறேன்).
//அடடா, டாஷ் டாஷ் டாஷ் ( நம்ம பேரு), இப்பிடி டவுசரு கிளிஞ்சி போனத எவனாவது பாத்துற போறாண்டா... அப்பிடின்னுட்டு சுத்தி பாத்தா, பல பேரு டவுசரே இல்லாம போய்கிட்டு இருக்காய்ங்க.//
அந்த கூட்டதுல நானும் ஒருத்தன்.உடுக்கை மட்டும் தான் மிச்சம் இருக்கு
அது சரி
உடுக்கையோட மட்டும் இருந்தாலும் இந்த விமர்சனம் பாத்து உடுக்கையும் கானா போற அளவுக்கு சிரிச்சேங்க
தப்பா எடுக்காதீங்க ...சும்மா குடு குடு ன்னு (குடுகுடுப்பை) சத்தம் கேட்டு வந்தேன்...
பதிவு நல்லா இருக்கிங்கோ... ..
பாராட்டுக்களுடன் ...
//ஒரு வேளை, நிஜமாவே வேலை பாக்க ஆரம்பிச்சிட்டீங்களா? :0)//
வாங்க அது சரி,
ஆமாம் அந்த கொடுமையை ஏன் கேக்கறீங்க? ஏதோ கிறுக்கிட்டு இருந்த என்னைப்புடிச்சு நீ அவங்களா இவங்களா, செல்லாவா, தமிழச்சியா என்று கேட்டு உயிரை வாங்கறாங்க. அது மட்டும் இல்லை, உங்க அபிமான நடிகரான கமலை விமர்சித்ததால் போலிகளின் தொந்தரவு வேறு. கூடவே எல்லா ப்ராஜெக்ட் ஒர்க்கும் ஒரு சேர ட்யூவா இருக்கு. அதுக்கு தான் ஒரு சின்ன கேப். இப்போ திரும்பி வந்துட்டோம்ல?
21 பட விமர்சனம் எழுதியதற்கு அநியாயமா அலி பாபாவை எல்லாம் வம்புக்கு இழுக்கறீங்க? ரொம்ப பேசினீங்கனா அடுத்து அலி பாபாவும் 40 திருடர்களும் பட விமர்சனம் எழுத வேண்டியதிருக்கும்.
// அப்பிடியா?? மொக்கையா, நம்ம மைதா மாவு அப்பாஸ் மாதிரி இருக்கான். இவனால தான் இந்த படமே டப்பா ஆச்சி.//
அவரா மைதா மாவு அப்பாஸு? கடைசியா கண் எப்போ செக் பண்ணீங்க?
// நாம நியூ யார்க, வாஷிங்டன் மட்டும் தான் வந்திருக்கிறதுனால, அவய்ங்க காட்றது லாஸ் வேகசான்னு ஒரு டவுட்டு
//
நிச்சயமா லாஸ் வேகஸ் தான். BTW, சான்ஸ் இருந்தால் லாஸ் வேகஸுக்கு போய் பாருங்க. பார் எல்லாம் பிடிக்கும் என்றால் லாஸ் வேகஸ் தான் சரியான இடம். ஒரு க்ளப்பில் ஷாம்பெயின் குளியல் கூட நடத்தலாம்(குளியல் தொட்டியில் தண்ணீருக்கு பதில் ஷாம்பெயின்)
//இப்ப சீரியசா... நான் சும்மா ஜாலிக்காக தாங்க எழுதறேன். நெஜமாவே, உங்க பதிவுக்கு எதிர்பதிவு எழுதணும், இல்ல விமர்சனம் செய்யணும்னு வேணும்னே செய்யறது இல்ல. தப்பா எடுத்துக்காதீங்க. தப்புன்னா சொல்லுங்க, திருத்திக்கிறேன்).
//
நோ ப்ராப்ளம், எவ்வளவு பெரிய பின்னூட்டம் எழுதினாலும் எனக்கு ஓகே :)
நன்றி விஷ்ணு, முதல் முறை வருகைக்கு நன்றி :)
//
ஆமாம் அந்த கொடுமையை ஏன் கேக்கறீங்க? ஏதோ கிறுக்கிட்டு இருந்த என்னைப்புடிச்சு நீ அவங்களா இவங்களா, செல்லாவா, தமிழச்சியா என்று கேட்டு உயிரை வாங்கறாங்க. அது மட்டும் இல்லை, உங்க அபிமான நடிகரான கமலை விமர்சித்ததால் போலிகளின் தொந்தரவு வேறு. கூடவே எல்லா ப்ராஜெக்ட் ஒர்க்கும் ஒரு சேர ட்யூவா இருக்கு. அதுக்கு தான் ஒரு சின்ன கேப். இப்போ திரும்பி வந்துட்டோம்ல?
//
எனக்கு தெரிஞ்சி தமிழச்சின்னு ஒரு பெண் கவிஞர் இருக்காங்க( நன்றி: சாரு நிவேதிதா). அவங்க கனிமொழிக்கு ரொம்ப ஃபிரண்ட். அவங்க அப்பா ஒரு பழைய டி.எம்.கே மினிஸ்டர். அவங்க பிரதர் இப்ப கவர்மெண்ட்ல கல்வி மந்திரி. ஆனா செல்லா யாருன்னு தெரியலை.
//
21 பட விமர்சனம் எழுதியதற்கு அநியாயமா அலி பாபாவை எல்லாம் வம்புக்கு இழுக்கறீங்க? ரொம்ப பேசினீங்கனா அடுத்து அலி பாபாவும் 40 திருடர்களும் பட விமர்சனம் எழுத வேண்டியதிருக்கும்.
//
நீங்க மட்டும் அனியாயமா மார்ச்ல வந்த ஒரு படத்துக்கு இப்ப செப்டம்பர்ல விமர்சனம் எழுதலாமா? நாங்கெல்லாம் பழி வாங்குற டைப்பு :0)
//
அவரா மைதா மாவு அப்பாஸு? கடைசியா கண் எப்போ செக் பண்ணீங்க?
//
கண்டு பிடிச்சிட்டீங்களா? நமக்கு கண்ணெல்லாம் சரியா தெரியாதுங்க. ஒரு குன்ஸா சொல்றது தான். சரி, ஒத்துக்கிறேன். அவரு மைதா மாவுல்ல, கோதுமை மாவு. போறுமா?
//
சான்ஸ் இருந்தால் லாஸ் வேகஸுக்கு போய் பாருங்க. பார் எல்லாம் பிடிக்கும் என்றால் லாஸ் வேகஸ் தான் சரியான இடம். ஒரு க்ளப்பில் ஷாம்பெயின் குளியல் கூட நடத்தலாம்(குளியல் தொட்டியில் தண்ணீருக்கு பதில் ஷாம்பெயின்)
//
லாஸ் வேகஸுக்கா? எதுக்கு? நான் இருக்கிற கொஞ்சம் சில்லறைய லாஸ் பண்றதுக்கா? உங்க ஊர்க்காரய்ங்க ரொம்ப தெளிவா தான் பேரு வச்சிருக்காங்க!
நான் ஷாம்பெய்ன்ல குளிக்கிறதெல்லாம் இல்ல. குடிக்கிறதோட சரி.(அதுவும் யாருனா வாங்கி கொடுத்தா :0)
நானும் ரொம்ப நாளா வேகஸ் பாக்கணும்னு டிரை பண்றேன், ஆனா, பழி வாங்குறதுக்குன்னே நமக்கு ஷெட்யூல் போடுறானுங்க. அடுத்த தடவை எவ்வளவு செலவானலும் (அவய்ங்களுக்கு) லாஸ் வேகஸ் பாத்துர்றது!
Post a Comment